April 6, 2010

உஷா சாந்தாராம் - ஓவியர்




உஷா சாந்தாராம் கர்நாடகா பெங்களூரூவை சேர்ந்த ஃபைன் ஆர்டிஸ்ட் தற்செயலாக இவரின் ஓவியங்களை பார்க்க நேரிட்டது நான் என்னோட கிராமத்திற்க்கு போய்வந்த ஒரு உணர்வு அவ்வளவு அற்புதமாக ஓவியங்கள் வரைந்திருக்கின்றார்...

நான் ரசித்த அவரின் சில ஓவியங்கள் உங்களின் பார்வைக்கு...

இது மாதிரி பொண்ணு கிடைக்கணுங்க எவ்ளோ அழகான சிரிப்போட இருக்கும் ஒரு இளம்பெண்ணின் ஓவியம்...



டபரா செட் காபி குடிக்கும் அப்பத்தா ...




கையில் முறம் வைத்து அரிசி கல் பொறுக்கும் அம்மா...



அடிகுழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைக்கும் அம்மாயி...


இளநீர் வெட்டிகொடுக்கும் குப்புசாமி..


மாவரைக்கும் ஆட்டுரல்...


கிராமத்தில் இருக்கும் தோட்டத்தில் வெட்டிப்போட்ட தென்னை மரத்தில் உட்கார்ந்திருக்கும் பாட்டையா...


தண்ணீர் எடுக்க ஊரில் இருக்கும் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் பிடிக்க காலி பித்தளை குடத்துடன் நிற்கும் தங்கை...


மக் , டம்ளர் கூட இவ்ளோ அழகா?


ஹம்பி பில்லர்...


அமைதியான அழகு பதுமை...



சேலை முந்தானையை ஏற்றி சொருகி துணி துவைக்கும் ஆச்சி...



கிரிக்கெட் வீரர்...



பள்ளியில் சைக்கிளுடன் நிற்கும் மாணவன் ....



மனைவியோடு இருசக்கர வாகனத்தில் செல்லும் பக்கத்துவீட்டு அண்ணா



சைக்கிளில் வைத்து இளநீர் விற்கும் ராமசாமி

இன்னும் இவரின் பல ஓவியங்கள் இந்த தளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன

இவரின் தளம் http://usha-shantharam.blogspot.com/
திருமதி உஷா சாந்தாராம்..

**********************************************************************************

ப்ரியமுடன் தொலைக்காட்சியின் அறிவிப்பு


நாளை முதல்(வியாழன்) இரண்டுமாத விடுமுறைக்கு இந்தியா செல்ல இருப்பதால் பதிவுலகத்திற்க்கு இரண்டுமாத விடுப்பு . நிறைய பேருக்கு சந்தோஷமா இருக்குமே அப்பாடா இவன் தொல்லை விட்டதுடா என்று இருக்கட்டும் இருக்கட்டும் இரண்டு மாதங்கள் மட்டும்தான் அப்புறம் மீண்டும் தொல்லை கொடுக்க வந்துவிடுவேன் இதுவரையிலும் என்னை பின் தொடரும் 307 பின்தொடர்பவர்களுக்கும் பின்னூட்டங்கள், சாட்களில் நட்பு கரம் நீட்டிய அனைவருக்கும் நன்றிகள் போய் வருகிறேன் டாட்டா பை பை...

**********