March 30, 2010

About Me...

மனித வலைப்பதிவர்களின் அபவுட்மீ நீங்க பாத்ததுதான் கொஞ்சம் சேஞ்சுக்கு நம்ம சே என்னுடைய சொந்தபந்தங்களின் அபவுட் மீ விளக்கங்கள் இதோ உங்களுக்காக...

1.முதலாவதாக www.adalarasi.com என்ற வலைத்தள சொந்தக்காரி செல்வி.ஆடலரசியின் அபவுட் மீ விளக்கம்....




2.அடுத்து வருபவர் www.chicken65.com என்ற வலைத்தள சொந்தக்காரி குருவம்மாவின் அபவுட் மீ விளக்கம்...



3.அடுத்ததாக வருபவர் www.lollol.com தளத்தின் சொந்தக்காரர் திரு.பல்லுக்காரன்...



4.அடுத்தவர் www.deer.com என்ற தளத்தின் சொந்தக்காரர் திரு குணா அவர்களின் அபவுட் மீ விளக்கம்....





5.அடுத்தவர் நமக்கு மிகவும் பரிட்சையமானவர் www.kakka.com என்ற தளத்தின் சொந்தக்காரர் திருமதி.கருப்பாயி அவர்கலின் அபவுட் மீ விளக்கம்...



6.அடுத்தவர் www.chainchellaayi.com என்ற தளத்தின் உரிமையாளரும் பிரபல ரவுடியுமான திருமதி chain செல்லாயியின் அபவுட் மீ விளக்கம்...




7.அடுத்து வருபவர் www.vettaikkaaran.com என்ற தளத்தின் உரிமையாளர் திரு . ஆதவன் ஆப்ரிக்கா பற்றிய அபவுட் மீ விளக்கம்...




8.அடுத்து வருபவர் www.kaathupaiyan.com என்ற தள உரிமையாளர் திரு,காதுப்பையனி அபவுட் மீ விளக்கம்...




9.அடுத்தவர் குற்றால நாயகன் www.sirangkudansinrasu.com தள உரிமையாளர் திரு. சின்ராசுவின் அபவுட் மீ விளக்கம்...





March 29, 2010

யஹி ஹேய் ரைட் சாய்ஸ் பேபி ஆஹா...


ஒரு மனிதனுக்கு தனக்கு குழந்தை பிறந்த பிறகு வீட்டிற்க்கு நல்ல நாள் பார்த்து எந்த நாளில் அழைத்து வருவது என சாய்ஸ் இருக்கு...

வீட்டிற்க்கு வந்த பிறகு அந்த குழந்தைக்கு அப்பா பெயர்வைப்பதா குலசாமி பெயர் வைப்பதா இல்லை மனைவி சொன்ன பெயர் வைப்பதா தன்னுடைய முன்னாள் காதலி காதலன் பெயர் வைப்பதா என்று சாய்ஸ் இருக்கு...

குழந்தையை ஆங்கில வழிக்கல்வி கற்க வைக்கலாமா இல்லை தமிழ் வழி கற்க வைக்கலாமா என்ற சாய்ஸ்ம் இருக்கு...ஸ்கூலுக்கு போய் படிச்சதும் இறுதியில் வைக்கும் தேர்வில் எந்த விடையை தேர்ந்தெடுக்க என்ற சாய்ஸ் இருக்கு...

பையன் பத்தாவது படித்து முடித்தது அடுத்து ப்ளஸ் ஒன் போகலாமா பாலிடெக்னிக் போகலாமா ஐடிஐ போகலாமா என்று சாய்ஸ் ப்ளஸ் டூ முடித்ததும் இன்ஞினியரிங் காலெஜ் போகலாமா இல்லை மருத்துவக்கல்லூரி இல்லை ஆர்ட்ஸ் காலேஜ் இப்படி மேல்நிலைக்கல்வியில் எதை தேர்ந்தெடுக்கலாம் என ஆயிரம் சாய்ஸ் இருக்கு...

படிப்பு முடிஞ்சதும் எந்த கம்பெனிக்கு அப்ளிகேசன் போடலாம் என சாய்ஸ் இருக்கு..ரெண்டு மூணு கம்பெனியில் இருந்து இண்டெர்வியூ வந்தாலும் எந்த கம்பெனிக்கு போவது என்று சாய்ஸ் இருக்கு..இண்டெர்வியூல நம்மல மாதிரியே நிறைய பேரிலிருந்து ஒருத்தரை தேர்வு செய்ய கம்பெனிக்கு சாய்ஸ் இருக்கு...

வேலை கிடைச்சதும் வர்ற சம்பளத்தை வைப்பு நிதியில் போடலாமா இல்லை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமான்னு சாய்ஸ் இருக்கு...

பணம் நிறைய சேர்ந்ததும் அதை வைத்து ரெடிமேடாக அனைத்து வசதியும் இருக்கும் அபார்ட்மெண்டில் ஃப்ளாட் வாங்கலாமா இல்லை காலிமனை வாங்கி வீடு கட்டலாமா என்று சாய்ஸ் இருக்கு...


வீட்டுக்கும் ஆபீஸுக்கும் போய் வர கார் வாங்கலாமா இல்லை பைக் வாங்கலாமா பைக் வாங்கினால் எந்த மாடல் வாங்கலாம் என நிறைய சாய்ஸ் இருக்கு...

திருமணத்துக்கு பெண் பார்க்கும் வகையில் அழகா இருக்கற பெண்கள் , அதிக வரதட்சணை கொடுக்குற பெண்கள், படிச்ச பொண்ணா பெரிய குடும்பமா என பார்க்க பொருத்தமான ஜாதகம் பார்த்து திருமணத்துக்கு பொண்ணு தேட நிறைய சாய்ஸ் இருக்கு...

திருமணம் நிச்சயமானதும் அதை ஏதாவது ஒரு மாதத்தில் வரும் நல்ல நாட்கள் நாளில் எதில் வைக்கலாம் என்று சாய்ஸ் இருக்கிறது...திருமணத்தை மண்டபத்தில் வைக்கலாமா இல்லை கோவிலில் வைக்கலாமா என்ற சாய்ஸ் திருமணத்துக்கு விருந்து சாப்பாடு போடலாமா இல்லை டிபனோட முடிச்சுடலாமா என்று சாய்ஸ் நிறைய இருக்கு....


திருமணத்துக்கு உடுத்துற உடையில் ஆயிரம் சாய்ஸ் இருக்கு...ஃபேண்ட் சர்ட் போடலாமா இல்லை வேட்டி சட்டை போட்டுக்கிடலாமா புடவை கடைக்கு போனா எந்த புடவை என்ன கலர் எடுக்கலாம் என்று சாய்ஸ் இருக்கு....

திருமணம் முடிந்து வரும் நாட்களில் மனைவி காலையில் கணவனுக்கு காபி தருவதா இல்லை டீ தருவதா என்று சாய்ஸ் இருக்கு...

அதற்கு பிறகு வீட்டில் தினமும் இட்லி வைக்கலாமா தோசை ஊத்தலாமா சாப்பாடு செய்யலாமா தோசைக்கு தேங்காய்சட்னியா இல்லை தக்காளி சட்னியா என்ற சாய்ஸ் சிக்கன் வாங்கினால் வறுக்கிறதா இல்லை குழம்பு வைக்கறதா முட்டை ஆம்லேட் போடறதா ஆஃப்பாயில் போடறதான்ற சாய்ஸ் இருக்கு...

வீட்டிலிருக்கும்பொழுது விஜய் டிவி பார்க்கிறதா இல்லை சன்னா கலைஞரா என சாய்ஸ் இருக்கு...

ஞாயிற்றுகிழமை விஜய் படத்துக்கு போகலாமா அஜீத் படத்துக்கு போகலாமா இல்லை பீச்சுக்கு போகலாமான்னு சாய்ஸ் இருக்கு...

மொபைல் நோகியா வாங்கலாமா இல்லை சோனிஎரிக்சன் வாங்கலாமா வாங்கிய பிறகு ஏர்டெல்லா,ஏர்செல்லா,ஹட்ச்சா இப்படி நிறைய சாய்ஸ் இருக்கு...

பத்திரிக்கை வகையில் தினமலர்,தினத்தந்தி,தினகரன், குமுதம், ஆனந்தவிகடன், குங்குமம், சாரு, ஜெமோ, சுஜாதா இப்படி நிறைய சாய்ஸ்...

இவ்வளவு ஏங்க ஆயிரம் வலைப்பூ இருக்குற பதிவுலகத்தில் இவங்களை மட்டும் படிச்சா போதும்ன்னு குறிப்பிட்ட பதிவர்களை மட்டும் செலக்ட் பண்ணி படிக்க கூட சாய்ஸ் இருக்கு...

இப்படி வாழ்க்கையில் எந்த பக்கம் திரும்பினாலும் சாய்ஸ் இருக்கிற மனிதனுடைய வாழ்க்கையில் நமக்கு அம்மா அப்பாவாக இவர்தான் இருக்க வேண்டும் என்ற சாய்ஸ் இல்லை,ஏனென்று சிந்தனைகள் பறக்கவிட்டால் அவர்களுக்கும் நாம்தான் பிறக்க வேண்டும் என்ற சாய்ஸ் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை..

இறக்கும்பொழுது என்றைக்கு இறக்கப்போகிறோம்? வலிக்க வலிக்க இறக்கபோகிறோமா? இல்லை வலியில்லாமல் தூக்கத்திலே இறந்துவிடுவோமா? என்று சாய்ஸ் இல்லை(தற்கொலை செய்பவனை தவிர்த்து) ஆனால் செத்தபிறகு புதைக்கிறதா எரிக்கிறதா என்ற அதிமுக்கியமான சாய்ஸ் இருக்கிறது...இப்பொழுதுதான் தெரிகிறது தன்னுடைய சாவை தீர்மானித்து கொள்ளும் தற்கொலை செய்து கொள்ளும் கோழை எவ்வளவு அதிர்ஷ்டசாலியென்று...

வாழும்போதே வரிசையாக ஆள்களை நிற்கவைத்து அதிலிருந்து நண்பர்களை தேர்ந்தெடுக்கும் வசதியும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...நட்புங்கூட எப்பொழுது வருகிறது எப்பொழுது பிரிகிறதென்று தெரியாமல் தானாகவே வந்து தானாகவே பிரிந்துவிடுகிறது...

பிறப்பு கூட நாம ஆணாக பிறக்கணும் இல்லை பெண்ணாக பிறக்க வேண்டும் இந்த மதத்தில் இந்த சாதியில் பிறக்க வேண்டும் என்ற சாய்ஸ் இருந்திருந்தால் நிறைய பெண் சிசு கருக்கலைப்புகள்,சாதி மத சண்டைகள் இருந்திருக்காது..

காதல் கூட ஜாதி சமயம் பணம் அழகு இதெல்லாம் பார்த்து வருவதாய் இருந்திருந்தால் இப்போ இருக்குற காதலி காதலர்களுக்கு எவ்வளவு வசதியாய் இருந்திருக்கும்? ஹும்...

(ஒரு குழப்பவாதியின் ஆதங்கம்)

March 25, 2010

விமர்சனம் இப்படியிருக்கணும்....

தஞ்சாவூர்ல பொறந்த ஹீரோவும் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில பொறந்த ஹீரோயினும் காதலிக்கிறாங்க இவங்களோட காதல் கதை எப்படி முடியுதுன்றதுதாங்க கதை....

தஞ்சாவூர்லயே பொறந்து உருண்டு தவழ்ந்த நம்ம ஹீரோ சென்னைக்கு போகணும்ன்னு ஆசைபடுறாருங்க அவரு ஆசைப்பட்டது மாதிரியே அவர பெத்தவங்க அவர சென்னைக்கு போற ஒரு லாரியில ஏத்தி அனுப்பிவைக்குறாங்க...

இதே கால நேரத்துல காட்டுமன்னார்குடியில பொறந்த ஹீரோயின் ம்ம் இவ ரொம்ப அடக்கமான குடும்பத்தில பொறந்தவ முகத்தை கூட வெளியில காட்டாத உடுப்பு அதாங்க பர்தா போட்ட கவுரவமான குடும்பத்தில பொறந்தவ அவளும் படிப்புக்காக சென்னைக்கு பஸ்ல போறா.சென்னையில அவளுக்கு தெரிஞ்சவங்க வீட்ல இருந்து தங்கிப்படிக்குறா சரியா...

ஹீரோவும் அதே வீட்ல ஒரு மூலையில இருக்குற ரூம்ல வாடகைக்கு தங்கியிருந்து வெட்டியா வேலை தேடிட்டு இருக்காரு..ஹீரோவும் ஹீரோயினும் ஒருத்தர் ஒருத்தர் பார்க்காத வரைக்கும் ரெண்டுபேரு வாழ்க்கையும் நல்லாத்தாங்க போயிட்டு இருந்துச்சு.ஒரு நாள் ஏதேச்சையா நம்ம ஹீரோவை ஹீரோயின் பார்க்குற சந்தர்ப்பம் கிடைக்க ஹீரோவும் இவளைப்பாக்குறார் என்னதான் ஹீரோயின் பர்தா போட்ருந்தாலும் அவளோட கண்ணு ஹீரோவை பதம் பார்த்திடுது.காதலுக்கு கண்ணுதானுங்க முக்கியம்...

இப்பிடியே ஹீரோ ஹீரோயினை பார்க்க ஹீரோயின் ஹீரோவைப்பார்க்கன்னு போயிட்டு இருந்துச்சு ஒரு நாளு ஹீரோயினோட முகத்தை எப்படியாச்சும் பார்த்துடணும்ன்ற வெறியில ஹீரோயின் குளிக்கிற பாத்ரூம்ல போய் ஹீரோ எட்டிப்பார்க்க போக அந்த டைம் பார்த்து ஹீரோவையும் ஹீரோயினையும் அந்த வீட்டு ஓனரு கையும் களவுமா பிடிச்சுட்டாங்க..

இவங்க ரெண்டுபேருக்கும் தண்டனை குடுக்கணும்ன்னு நினைச்ச வீட்டு ஓனரு ரெண்டு பேரு வீட்டுக்கும் போன் பேசுறார் அவங்க அவங்க வீட்டுல ரெண்டுபேரையும் சுட்டுப்பொசுக்கிட சொல்றாங்க அதனால வீட்டு ஓனரு கொஞ்சம் சைக்கோன்றதால ஹீரோவையும் ஹீரோயினையும் தனித்தனியா மாடியில இருக்குற தண்ணி தொட்டியில கட்டிப்போடுறார் அந்த ரெண்டு தொட்டியையும் ஃபுல்லா தண்ணிய ஊத்தி ரெண்டு பேரையும் தண்ணிக்குள்ளாறயே ஒரு ஃபுல் நைட் வச்சுருக்கார் காலையில ரெண்டு பேரையும் தண்ணித்தொட்டியில இருந்து ரிலீஸ் பண்ணி அந்த வீட்டுல இருக்குற ஒரு ரூம்ல ஒண்ணா சேர்த்து தள்ளிவிட்டுறார்...

ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரே குஷி ரெண்டு பேரையும் ஒண்ணா ஒரே ரூம்ல அடைச்சுட்டாங்கன்னு அப்போ தட தடன்னு உலகமே கிறுகிறுன்னு சுத்துறமாதிரி ரெண்டுபேருக்கும் ஒரு ஃபீல் ஒருமணி நேரங்கழிச்சுபார்த்தா ரெண்டுபேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிடுறாங்க பிரிக்கவே முடியாத அளவுக்கு இவங்களோட இந்த நிலைய பார்த்த வீட்டு ஓனரு பரிதாபப்பட்டு போனா போயிட்டு போகுது ஒரு நைட் இப்பிடியே இருக்கட்டும்ன்னு விட்டுடறார்...

காலையில ஹீரோவும் ஹீரோயினும் என்ன செய்றாங்கன்னு பார்க்கப்போன வீட்டு ஓனருக்கு அதிர்ச்சி ரெண்டுபேரும் செத்துபோயிடுறாங்க அதுக்கு சாட்சியா ஒரு ஸ்மெல் வேற அடிச்சதா அதுக்கு மேலயும் ரெண்டுபேரையும் வச்சுருக்கமுடியாதுன்னு இவங்களை என்ன செய்யலாமுன்னு பார்த்த ஓனரு ஹீரோ ஹீரோயின் வீட்ல சொன்ன மாதிரியே ரெண்டு பேரையும் அவரு ஆசைப்பட்டமாதிரியே நெய் ஊத்தி தோசையா சுட்டு சாப்ட்றாருங்க...ஒரு ஹீரோ ஹீரோயினோட காதல் கதை இப்படியாக சோகமா முடிஞ்சுடுதுங்க....காதல்னாலே சோகம்தான்றது மனுசருக்கு மட்டுமா அரிசிக்கும் உளுந்துக்கும் கூட அப்டித்தான் போல....இது தோசைக்கு எழுதுன உணவு விமர்சனம்ங்க....

மீண்டும் வேறொரு உணவு விமர்சனத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெற்றுகொள்கிறேன்...



March 21, 2010

வேண்டும் தமிழ் பெயர் பகுதி 2

வேண்டும் தமிழ் பெயர் பகுதி 1 இதை தொடர்ந்து

வேண்டும் தமிழ் பெயர் பகுதி 2



************************************************************************************
*************************************************************************************
*************************************************************************************
**************************************************************************************


தமிழ் சேவைகள் தொடரும்...


March 20, 2010

பரிசல்காரனுடன் ஒரு நேர்காணல்

பதிவுலக பிரபல பதிவரும் எழுத்தாளருமான பரிசல்காரன் என்ற கே.பி.கிருஷ்ணகுமாரிடம் ப்ரியமுடன் தொலைக்காட்சிக்காக ஒரு ஈ மெயில் நேர் காணல்













1.பதிவுலகத்திற்க்கு வராமல் இருந்திருந்தால் ஓய்வு நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?

பரிசல் :ஃபோட்டோகிராஃபியில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்திருப்பேன். எழுத்து என்பதை இணையத்தில் இல்லாமல் வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பியிருக்க மாட்டேன்.

2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

பரிசல் :இதற்கு பதில் சொல்லும் அளவுக்கு தற்போதைய வலையுலகை கூர்ந்து கவனிக்க வில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.

3.தங்களின் பதிவுக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?

பரிசல் :நிச்சயமாக இல்லை. தொடர்ந்து பின்னூட்டம் போடும் சில நண்பர்கள் பின்னூட்டங்கள் சடாரென நிற்கும் போது அப்படி நினைப்பதுண்டு. அதுவும் கடந்து போகும்.


4.ஒவ்வொரு பதிவுக்குமான கரு தங்களுக்கு எப்பொழுது தோன்றும்?

பரிசல் :அதிகாலை நான்கிலிருந்து நாலேமுக்காலுக்குள் என்று சொல்ல ஆசைதான்! ஆனால் அப்படியெந்த நேரமுமே இல்லை. பிராயணங்களின் போதும், மனதுக்கொத்த நண்பர்களுடன் இருக்கும்போதும் சற்று அதிகமான உற்சாகமாய் எழுத்து மனதிற்குள் ஓடும். ஸ்ரீரங்கம் பற்றிய கட்டுரையை திருச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு, கேரளா செல்லும்போது இரயிலில் அப்பர்பெர்த்தில் அமர்ந்தபடியே எழுதினேன்.

5.ஒரு சென்சிட்டிவான பதிவெழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?
பரிசல் :மூன்றுமே நிகழ்ந்திருக்கிறது வசந்த். அதிகப்படியாய் காம்ப்ரமைஸ் செய்து கொள்வேன். அதற்கடுத்ததாய் கண்டு கொள்ளாத தருணங்கள். கோவம் வந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டேன். ஒரு சில நண்பர்களின் அழைப்பில் அது அழிந்துவிடும்.

6.பதிவெழுத பிடிக்குமா? பதிவுகளை வாசிக்க பிடிக்குமா?

பரிசல் :நேர்மையாகச் சொல்வதானால் எழுதத்தான் பிடிக்கும். படிப்பதென்றால் புத்தக வடிவில்தான். பெங்களூரில் ஆடிட்டராகப் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது ‘எல்லாரும் சிஸ்டத்துலயே டிக் அடிச்சு அக்கவுண்ட்ஸ் சரி பார்க்கறாங்க. எனக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்து டேபிள்ல வெச்சு பேனால டிக் அடிச்சுப் பார்க்கறதுதான் பிடிக்குது’ என்றார். நான் அவர் ஜாதி. யாராவது இணையத்தில் வந்த ஒரு குறிப்பிட்ட பதிவை/படைப்பைச் சுட்டி கொடுத்துப் படிக்கச் சொன்னால் மேக்ஸிமம் ப்ரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் அமைதியாகப் படித்து ரசிப்பேன். யாராவது அவர்கள் படைப்பைப் படித்துக் கருத்துக் கேட்டாலும் அதே.

7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?

பரிசல் :நானே அடிக்கடி காணாமல் போய்விடுகிறேனே... என்னைக் கேட்டால்? பதிவுலகின் ஆரம்ப போதை கடந்து, தொடர்ந்து நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுத தீராத வெறி இருக்க வேண்டும். இல்லாமல் போவதே காரணம் என்று நினைக்கிறேன்.

8.தங்கள் சம கால பதிவர்கள் தவிர்த்து தற்பொழுது இருக்கும் பதிவுலகில் நிறைய புதியவர்கள் எழுதுகின்றனர் அவர்களில் தாங்கள் வியந்த பதிவர்கள் யார்? (எல்லோரும் என்று கூறி தப்பித்து கொள்ளகூடாது) ஏன் பிடிக்கும் அவர்களை?

பரிசல் :முந்தைய பதில்கல்ளை ஒருமுறை படித்துப் பார்த்தேன். அநியாயத்திற்கு தலைக்கனத்தின் உச்சியில் இருப்பவன் சொல்லும் பதில்களாகவே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இந்தக் கேள்விக்கு அப்படி யாரையும் சட்டெனச் சொல்ல முடியாத என்னை எதால் அடிக்கலாம்? பதிவுலகம் என்று வரும்போது புதியவர்கள் என்று யாருடைய பதிவையும் ரெகுலராக நான் படிக்காததே இதற்குக் காரணம். எப்போதாவது வலை மேயும் போது சிலவற்றைப் படிப்பதும், நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் சிலவற்றைப் படிப்பதுமாகவே கழிகிறது.

9.ஏண்டா பதிவுலகம் வந்தோம் என்று என்றாவது எண்ணியதுண்டா?

பரிசல் :உண்டு. வீண் சர்ர்சைகளில் வேண்டுமென்றே தாக்குறும்போது. ஆனால் அந்த நினைப்பின் ஆயுள் மிகக் மிகக் கம்மி.

10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?
பரிசல் :ஆரம்பத்தில். போகப் போக சரியாக விடும். தவிரவும் போதை என்பது தவறு என்ற பொதுப்புத்தியை நான் மறுக்கிறேன்.

11.கவிதை,நகைச்சுவை,கதை,சமூகம்,விளையாட்டு என்று சுவாரஸ்யமாக பதிவெழுதி வரும் தங்களுக்கு பதிவுலகத்திலே இதுவரை யாரும் எழுதாத ஒரு புது விஷயம் எழுத வேண்டும் என்ற ஆசையுண்டா?அப்படியாயின் அதைப்பற்றி சில வார்த்தைகள்
பரிசல் :இதுவரை எழுதாத புது விஷயம் என்ற ஒன்று இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. எழுதப் படாத கோணம் என்று வேண்டுமானால் இருக்கலாம். அப்படிச் சொல்வதானால் கனவில் வரும் ஒரு ’எனக்கும்’, எனக்குமான உரையாடல் ஒன்று நெடு நாட்களாக நடந்து கொண்டே இருக்கிறது. அதிகாலை நேரத்தில் அது நிகழ்கிறது. குறிப்பெடுக்க முடியாமல் தவிக்கிறேன். விடிந்ததும் கலைந்து விடுகிறது.

12.பொதுவாக தங்களின் நண்பர்களின் பதிவுக்கு மட்டும் சென்று பின்னூட்டமிடுகிறீர்கள் புதிய பதிவர்களின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை என்ற தங்களின் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்க்கு நேரமில்லை என்பதை தவிர்த்து தங்களின் பதில் என்ன?
பரிசல் :நேர்மையாக நான் சொல்ல விரும்பும் ஒரு பதிலை சொல்லாதே என்று தடுப்பது வன்முறையல்லவா வசந்த்?

13.தாங்கள் எழுதிய பதிவு போலவே அதாவது தங்கள் ஸ்டைலில் வேறொருவரும் அதே போன்ற பதிவு எழுதியிருப்பதாக எண்ணியதுண்டா?அப்படியிருந்தால் அந்த பதிவு பற்றி கூறவும்...

பரிசல் :எனக்கு என்று ஒரு ஸ்டைல் இருப்பதாக நம்பும் உங்கள் வெகுளித் தனத்துக்கு என் புன்னகையைப் பரிசாக அளிக்கிறேன்.

14.பதிவுலகம் வந்தபிறகு தங்களுக்கு நடந்த நன்மை தீமைகள் பற்றி சிறு குறிப்பு...

பரிசல் :தீமைகள் ஒன்றும் பெரிய அளவில் இல்லை. நன்மைகளைச் சொன்னால் நேரமும் இடமும் போதாது என்ற க்ளிஷே பதில்தான்.

15.ஃபாலோவர் விட்ஜெட்டும் ஹிட் கவுண்டரும் இல்லாமல் உங்களால் தொடர்ந்து பதிவெழுத முடியுமா? முடியாதென்றால் ஏன் என்று விளக்கவும்...

பரிசல் :முடியும். ஒரு கட்டத்துக்கு மேல் அவை தேவையிருப்பதில்லை.

16.தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

பரிசல் :ஆம். தவிரவும் இது மாதிரியான ஒப்புமைகள் தேவையற்றது என்றே நினைக்கிறேன். நான் எழுத வந்த காலகட்டத்தில் (நானெல்லாம் இப்படிப் பேசற அளவுக்கு ஆய்டுச்சு! ஹூம்!) என்னையும், என்னுடம் எழுதும் சில நண்பர்களையும் குறிப்பிட்டு ‘நீங்க வந்தப்பறம்தான் ப்ளாக் சண்டை சச்சரவெல்லாம் இல்லாம செமயா போய்ட்டிருக்கு’ என்று சிலர் குறிப்பிட்டதுண்டு.

17.தாங்கள் எழுதிய முதல் புத்தகத்தின் அச்சில் தங்கள் பெயரை முதல் முதல் பார்த்த பொழுது தங்கள் மனநிலை எப்படியிருந்தது?

பரிசல் :பெரிதாக எந்த உணர்ச்சியும் இருக்க வில்லை. எனது முதல் சிறுகதை ஒரு மாத நாவலில் வெளியான போது பேருந்து நிலையத்தின் நடுவில் ஒரு கடையில் அதைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சி இன்று வரை திரும்பக் கிடைக்கவில்லை. அதற்காக இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்று எண்ண வேண்டாம். என்னவோ... அது அப்படித்தான்.

18.தொடர்ந்து எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் முற்றிலும் பதிவர்களுக்காகவே இயங்கும் தமிழ்மணத்தினை பற்றி சில வார்த்தைகளும் தமிழ்மணத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்று ஒரு இணைய பத்திரிக்கை போல் செயல் படுத்தலாம் என்ற கருத்துக்கு தங்களின் பதில்...

பரிசல் :நல்ல விஷயம். செய்யலாம். தமிழ்மணம் என்ற திரட்டி இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் எல்லாரிடமும் சென்று சேர்வது வெகு நாட்களெடுக்கும் என்பதை மறுக்கவியலாது.


19.வாரிசு அரசியல் , வாரிசு சினிமா போன்றே தங்களுக்கு அடுத்து தங்கள் வாரிசுகளை பதிவுலகத்தில் நுழைக்கும் எண்ணம் இருக்கிறதா?

பரிசல் :நுழைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. எழுத்தில் அவர்களுக்காக ஆர்வமிருந்தால் வர உதவுவேன். மற்றபடி விளம்பரத் துறையில் என் வாரிசுகள் ஜொலிக்க வேண்டும் என்பது என் உள்மன அவா. அதையும் திணிக்கும் எண்ணமில்லை.

20.ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று நினைத்து இன்று வரை எழுதாமலே இருக்கும் பதிவு என்று ஒன்று இருக்கிறதா?

பரிசல் :ம்ம்ம்ம்.. அப்படி ஏதும் இல்லை.

21.தங்களுக்கு போட்டி பதிவர் யாரென்று காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் பதிலளிக்கவும்

பரிசல் :சாரு நிவேதிதா.


22.பரிசல்காரன் என்ற பெயர் பதிவுலகில் மட்டுமா இல்லை நடைமுறையிலும் அந்த பெயரே நீடிக்கிறதா?

பரிசல் :பதிவுலக நண்பர்கள் அழைக்கும்போது பரிசல் என்றே அழைக்கின்றனர்.

இவரோட பெயர் காரணம் இதுதான் இவருடைய திருமண நாளுக்கு நான் கிரியேட் செய்தது பெயர் காரணம் சரியா? மேகா ,மீரா என்ற குழந்தைகள் உமா என்ற மனைவியுடன் எவ்வளவுஅழகாக வாழ்க்கையை நடத்தி செல்கிறார்...



23.கணினியில் எழுதப்பழகியபின் காகிதத்தில் எழுதுவது குறைந்துவிட்டதா?

பரிசல் :ஆம். அதுமட்டுமில்லாமல் காகிதத்தில் எழுதும்போது என்னாலேயே படிக்க முடியாத அளவு எழுத்து மோசமானதாக மாறிவிட்டிருக்கிறது..


24.இன்னும் சில ஆண்டுகள் கழித்து பதிவுலகம் எப்படியிருக்கும்?

பரிசல் :‘அப்போதெல்லாம் கணினியைத் திறந்து யோசித்து யோசித்து எழுதி அதைத் திரையில் பார்த்து மகிழ்ந்து அனுப்பி பிரசுரித்து.. இப்போது நான் நினைப்பது நினைத்து முடிக்குமுன் எழுத்தில் வருகிறது. அதிலிருந்த உணர்வு இதிலில்லை’ என்று. மாற்றங்களால் ஆனது உலகு.இன்னும் எத்தனை காலத்திற்குதான் அம்மியில் அரைத்த சுகம் மிக்ஸியில் இல்லை, ஆக்கிப்போடும் சாப்பாட்டுச் சுவை OVEN சமையலில் இல்லை என்றெல்லாம் புலம்பப் போகிறாய்? அவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இனி நீ அவற்றைத் தவிர்க்கவியலாதென்பதும்.அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். வேறு விமானங்கள். அதே பாதை. வேறு வேறு வாகனங்கள். எல்லாவற்றையும் எப்போதும் எல்லாரும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பா..எல்லாவற்றையும் ஏற்கத்துவங்கு. புன்னகை தானாய் வரும். எல்லாம் மாறும்.இதே போல்தான் பதிவுலகமும் மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாம் மாறும்....

25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

பரிசல் :புதியவர்கள் என்னுடைய இந்த பதிவை படிக்கவும்


இதுவரையிலும் நெருக்கடியான நேரமின்மையிலும் பொறுமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதில்கள் அளித்த பரிசல்காரன் அவர்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொண்டு அடுத்ததாக அய்யனார் கம்மா ஹீரோவிடம் பேட்டி எடுக்க பிரியமுடன் குழுவினர் செல்ல இருப்பதால் பொறுமையாக பேட்டியினை ரசித்த அனைவருக்கும் நன்றியினை கூறி விடை பெற்று கொள்வது உங்கள் வசந்த்




March 19, 2010

ஒரு சூப்பர்வைஸரின் நிராசைகளும்,தற்கொலை ஆசையும்...

ஒரு சூப்பர்வைசரின் நிராசைகள்

1. நிறைய சாப்பிடும் உணவுப்பொருள்ல இருந்து உயிர் காக்குற மருந்து பொருள் வரைக்கும் கலப்படம் செய்ற தொழிற்சாலை விற்பனை கூடத்தில் வேலை பார்த்து மக்களை கலப்படத்துல இருந்து காப்பத்தலாம்ன்னு ஆசையா இருந்துச்சுப்பா என்னோட ஆசையெல்லாம் நிராசையாயிடுச்சே....

2.ஒவ்வொரு அரசாங்க அலுவலகத்திலயும் அலுவலர்கள் எல்லாம் எப்பிடி தூங்குறாங்கன்னும் பார்க்க ஆசையா இருந்துச்சு அதுவும் நிறைவேறலை...

3.தேர்தல்ல எல்லாரும் நல்ல ஓட்டுத்தான் போடறாங்களான்னும் பாக்க ஆசையா இருக்கும் தெரியுமா அது கூட பார்க்க முடியலை...

4.அரசியல்வாதியாகி எம் எல் ஏ ஆகி எம்பி ஆகி வேலைப்பாக்குற எல்லாரும் சரியாத்தான் லஞ்சம் வாங்காம வேலை பாக்குறாங்களான்னும் தெரிஞ்சுகிட ஆசையா இருந்துச்சு ப்ச் அதுவும் நடக்கலை...

5.கவர்ன் மெண்ட் சர்வண்ட் ஆகி அரசு மருத்துவமனையில சேர்ந்து டாக்டரு நர்ஸ் சரியாத்தான் வேலை செய்றாங்களா எந்த மாதிரி மக்களுக்கு உபயோகமா இருக்காங்களான்னும் பார்க்க ஆசையா இருந்துச்சு...அதுவும் நிறைவேறலை..

6.ஊர்ல நடக்குற கவர்ன்மெண்ட் அலுவலக கட்டிடம் , ரோடு போடற வேலை இதெல்லாம் ஒழுங்கா நடக்குதான்னும் பார்க்க ஆசையா இருந்துச்சு அதுவும் நடக்கலை...

7.தலைமைச்செயலகத்தில சேர்ந்து அங்க இருக்குற வரிப்பணம் சரியா செலவழிக்கிறாங்களா இல்லையான்னும் பார்க்கணும்ன்னு ஆசையா இருந்துச்சு அதுவும் நடக்கலை...

8. ஊர்ல இருக்குற ஸ்கூலுக்கு எல்லாம் போய் பசங்களுக்கு வாத்தியார்க சரியா பாடம் சொல்லித்தர்றாங்களா இல்லை கொடுமை பண்றாங்களான்னும் பார்க்க ஆசை இருந்துச்சு அதுவும் நடக்கலை...

9.ஒரு மலர் பூங்கால கூட வேலைக்கு சேர்ந்து பூ எப்டி பூக்குதுன்னு கூட வாட்ச் பண்ணனும்ன்னு நினைச்சேன் அதுங்கூட நடக்கலை...

இவ்ளோ நல்ல வேலையெல்லாம் விட்டுட்டு கடைசியா இப்போ எனக்கு போயும் போயும் சே வெளில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு இதைப்போய் சூப்பர்வைசிங் பண்ற வேலை கிடைச்சுருக்கு நான் என்ன செய்வேன் எங்க போய் சொல்லுவேன் ...

அப்பிடி என்ன வேலை செய்தேன்னு பார்க்கணுமா இங்க கிளிக்குக...இதுவும் திருட்டு கண்டுபிடிக்கிறதும்தாங்க இப்போ எனக்கு முக்கிய வேலையா இருக்கு... :)

இப்போ சொல்லுங்க நான் செய்றதெல்லாம் ஒரு வேலையா இதுக்கு தற்கொலை பண்ணிக்கிடலாம் போல இருக்கு... என்னைய படைச்ச இவ்ளோ நல்ல வேலையெல்லாம் விட்டுட்டு கடைசியா இப்போ எனக்கு போயும் போயும் சே வெளில சொல்றதுக்கே வெட்கமா இருக்கு இதைப்போய் சூப்பர்வைசிங் பண்ற வேலை கிடைச்சுருக்கு நான் என்ன செய்வேன் எங்க போய் சொல்லுவேன் ...


Johann Zahn(இவருதாங்க வீடியோ கேமரா கண்டுபிடிச்சவர்ன்னு நினைக்கிறேன்)

இந்த ராஸ்கலையும் தேடிட்டு இருக்கேன்...பாவம் அந்த மனுஷன் எதுக்கு என்னைய படைச்சான்னு தெரில ஆனா நான் இப்போ பாக்குற வேலை தெரிஞ்சது உசிர விட்ருவான்....சத்தியம்....

நான் யார்ன்னு இன்னும் தெரியலையா நாந்தாங்க வீடியோ கேமரா...

March 18, 2010

சவால் புதிர் - 1





ஒண்ணுக்கும் போலாம்
ரெண்டுக்கும் போலாம்
மூனுக்கு கூட போகலாம்
சுழியத்துக்கும் மதிப்பிருக்கு
சத்தமா பேச சொன்னாலும்

சத்தமா பேசுவாரு
சன்னமா பேச சொன்னாலும்
சன்னமா பேசுவாரு
சத்தம் போடாதேன்னா
கப்சிப்...


************************************************************************************
வேஷ்டிய


இழுத்து கட்டியிருந்தாலும்
எப்பவுமே மானம்
காத்துல பறக்குறது
ராத்திரி பகல்ன்ற
வித்யாசமே இல்லாம
இத்தனைக்கும்
இருக்குறது
வெளிச்சம் கூட வராத
அறைதான்...



************************************************************************************

அப்பன் தட்டுனாலும்

மகன் தட்டுனாலும்
ஒரே சத்தம்...
ஒரே நேரத்தில
பத்துபேர் அடிச்சாலும்
தாங்கிக்குவார்
ஆனா அழுவார்
பதிலுக்கு ஒரு அடிகூட
திருப்பியடிக்கத்தெரியாம
இவர் அழுற சத்தம்
ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...

************************************************************************************

மூச்சுக்கு

இதமா இருக்கும்
மூச்சுவிடாதவருக்கு
கூட துணைக்கு போற தில்
இவருக்கு இருக்கு
மூச்சுக்கு மூச்சா
மாறப்போறவங்களுக்கு
மூச்சு சத்தம் மட்டுமே
கேட்குற நேரத்திலயும்
விடற மூச்சுக்கு சாட்சி...

************************************************************************************

முன்னாடி

பின்னாடி
ஓடுவார்
திடீர்ன்னு நிப்பார்
நிக்காம
சில நேரம்
சாவடிப்பார்
சத்தம் இல்லாம
வந்து சத்தமா சாகடிக்குறதும்
உண்டு
ஊர் ஊரா போவார்
சொந்த ஊர் கிடையாது
இவர் போகாத ஊர்
கிடையாது
டீக்கடைக்கும் போவார்
சாப்பாட்டுக்கடைக்கும் போவார்
காசிருக்கும்
சாப்பிடமாட்டார்
கூட வர்றவங்கள
நட்ட நடுக்காட்டுல விட்டுட்டு
போற வட்டக்கால்
கட்டண சத்திரக்காரர்.....

*************************************************************************************
டிஸ்கி : படத்துக்கும் புதிருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன?