Showing posts with label கடிதம். Show all posts

December 17, 2010
எனக்கு வந்த லவ் லெட்டர்!
இந்த கடிதம் வர்றதுக்கு முதல் நாள் தோழி ஒருவரிடம் ப்லாக் எழுதுறதை நிப்பாட்டிடலாம்ன்னு சொல்லிகிட்டு இருந்தேன் . ஆனா இது மாதிரி லெட்டர் எழுதி அந்த ஆசையில மண்ணள்ளிப்போட்டுட்டான் இந்த படுபாவி பய...
(ரொம்பவே அழகான கையெழுத்துல்ல) இது மாதிரி ஹேண்ட் ரைட்டிங்லயே பதிவு போடணும்ன்னு நினைச்சுகிட்டு இருக்கேன் முடிய மாட்டேன்னுது... சீக்கிரமா அதுக்கு அடுத்த மாசம் பென் மவுஸ்ன்ற சாஃப்ட்வேர் வாங்கிடுவேன் எதிர் பாருங்க என்னுடைய ஹேண்ட் ரைட்டிங் கவிதைகளையும், ஓவியங்களையும்...
இந்த லெட்டருக்கு எதிர் லெட்டர் எழுத ரொம்பவே பிரியப்பட்டு ரமேஷ் ( ரொம்ப நல்லவன் சத்தியமா) அவர்களைவேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன் ஏன்னா என்னைய யாராச்சும் கிண்டல் பண்ணா சிரிச்சு ரசிக்கிற சுய எள்ளல் மிகுந்தவன் நான். அதனால இவர் மட்டுமில்ல இன்னும் இதுக்கு பாட்டியோ பேரனோ லார்டோ லபக்கோ பேர் வச்சு பஸ்லயும் லாரியிலயும் கிண்டல் பண்றவங்களும் தயவு செய்து அந்த லிங்கை இங்கே தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . நம்ம ஆட்கள்தான் யாரையாச்சும் கிண்டல் பண்ணா கூடி சேர்ந்து கும்மியடிக்கிறவங்களாச்சே அதான் அந்த சந்தோஷத்தை இங்கயும் பகிர்ந்துக்கங்க...
நன்றி இது வரைக்கும் நம்ம பேரை கும்மியடிச்சவங்களுக்கும் கும்மியடிக்கப்போற்வங்களுக்கும்.....
July 11, 2010
FROM Mrs.வசந்த்
ப்ரியமுள்ள அப்பாவி புருஷனுக்கு...
மாமா நீங்க போட்ட கடுதாசி வந்துச்சுங் மாமா ,உங்களுக்கு அறிவிருக்கான்னு கேட்குறேன்னு தப்பா நினைச்சுகிடாதீங் மாமா ஏனுங் மாமா பக்கத்துல 25 கிலோ மீட்டர் தூரத்துல இந்தாருக்குற எங்கப்பாரு ஊருக்கு கடுதாசி எழுதியிருக்கீங்களே உங்களுக்கு நெசமாவே அறிவிருக்குதுங்ளா மாமா?அதுவும் இஸ்டாம்பு கூட ஒட்டாம மொட்டையா உங்க தலையப்போலயே ...மானங்கெட்ட மாமா...
என்னமோ நான் பெரிசா உங்களுக்கு தொரோகம் செஞ்சுபோட்டாதா நினைச்சு எழுதிப்போட்டீகளே மாமா? ஏனுங் மாமா அன்னிக்கு ஒரே நாள்தான் உங்கள துணி தோச்சு போட சொன்னேன் அதுக்கே இந்த அலப்பரைய குடுக்குறீக? நீங்க துணி தோச்ச லட்சணத்தை ஊருக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு என்னைய ஆளாக்கி போட்டிகளே மக்கு மாமா...
இந்தாருங்க அன்னிக்கு இந்த பாழாப்போன மனுஷன் வாங்கி கொடுத்த வாஷிங் மெசினு ரிப்பேர் ஆயிப்போச்சுங்க இந்தாளு மாறியே... சரி எனக்கும் மகளிர் சங்கத்துல ''கணவன்களை தட்டி வைப்பது எப்படி''ன்ற தலைப்புல ஒரு பட்டி மன்ற கூட்டத்துல பேச வேண்டியிருந்ததால இவரை துணி தோச்சு போட்டுடுங்க மாமான்னு சொல்லிப்போட்டு போயிட்டேனுங்க . கூட்டம் முடிஞ்சு திரும்பி வந்து பார்த்தா புதுப்பொடவை நஞ்சு நாறாயி கெடக்குது என்னான்னு கேட்டா பேந்த பேந்த முழிக்குறாரு... அப்புறம் சொல்றாரு எது செஞ்சாலும் வித்யாசாம செய்றோம்ன்னு அன்னிக்கு துணிய கல்லுல கும்மி போடாம கல்ல எடுத்து துணியுல கும்மி போட்டாறாம்ங்க கேட்டா ''மாத்தியோசிக்கிறாராமா''..தூ துப்புக்கெட்ட புருஷா...
பொறவு என்னா சொன்னீக சம்பான்னு உங்களச்சொன்னேன்னு ஹும் பின்ன என்னவாம் போன மாசம் ஹார்லிக்ஸ் பாட்டில்ல கொட்டி வச்சுருந்த கடலை மாவ ஹார்லிக்ஸ்ன்னு எடுத்து வாய்ல போட்டுகிட்டீங்க, பொறகு ஒரு நாள் தேன் பாட்டில்ல இருந்தது தேனுன்னு நினைச்சு வெளக்கெண்ணெய குடிச்சுபோட்டீக,உங்க ஃப்ரண்ட் கூட சொன்னாரு ஏதோ ஃபங்க்சனுக்கு போனப்ப பீர் வாங்கித்தர்றோம்ன்னு உங்களுக்கு பீர்ல ஓமத்துரய கலந்து கொடுத்து ஏமாத்தி போட்டாகளாமே நீங்களும் அத குடிச்சுப்போட்டு ரெண்டு மூணு நாளா இஞ்சி தின்ன கொரங்காட்டம் கெடந்தீகளே ஞாபகமிருக்கா? இப்போ சொல்லுங்க உங்க வயிறு எதை வேணும்னாலும் கொட்டிகிற சம்பாவா? இல்லியா?
இம்புட்டு வக்கனைய எழுதுற என் வெளக்கெண்ண புருஷா... நானொன்னு சொல்றேன் இம்புட்டு நாளா உங்கள கட்டிகிட்டு நான் படுற பாடு எனக்கில்ல தெரியும் , ஒழுங்கா சுடு தண்ணி கூட வைக்கத்தெரியாத நீங்க எப்டிங் மாமா அம்புட்டு நாளு வெளி நாட்டுல சமைச்சு சாப்பிட்டேன்னு சொன்னீங்க? எதும் செட்டப் கிட்டப்பு இருந்துச்சா என்ன? அப்டிகிப்டி ஏதாவது இருந்துச்சுன்னு வச்சுக்கோங் மாமா முன்னாடியே சொல்லிப்போடுங் இல்லிங் எங்கூர் ஆடுறிக்கிறதுல பேமசுன்னு உங்களுக்கு தெரியும் பீ கேர்புல் ...
நான் இந்தாருக்குற எங்கப்பா வூட்டுக்கு ஒரு மாசம் ரெஸ்ட் எடுத்துபோட்டு போகலாம்ன்னு வந்தா என்னமோ நான் கோவுச்சுட்டு வந்த மாறில்ல லெட்டர் எழுதியிருக்குறீரு... நான் உங்களை உங்கப்பா வீட்டுக்கு தொரத்திவிடலைன்னு நினைச்சு சந்தோஷப்படுவீகளா வருத்தப்படுறீங்களே மாமா...நான் எழுதுன கவிதயெல்லாம் படிச்சு உருகிபோயிட்டதா சொன்னீக உண்மையிலே அதெல்லாம் படிச்சீகளா மாமா ஏன் கேட்குறேன்னா நான் உங்களைப்பத்தி எழுதுனது இப்பிடித்தானே இருந்துருக்கும்
நானும் என் மாமனும்
போட்ட சண்ட
எனக்கவன் போட்ட கொண்ட
போலவே கோணல்
எம்மாமனுக்கொரு
அழகான மீசை
அவஞ்சுடும் தோசை
போலவே கருகலா...
இந்தக்கவிதைக்குப்போயி உருகுறீகளே மாமா... இந்தாருங்க மாமா இது நீங்க வாங்கி கொடுத்த லேப்புடாப்புல இருந்து மெயில் அனுப்புறேன் நீங்களும் அட்டுலீஸ்ட் உங்க ஓட்ட லேப்புடாப்புல இருந்து மெயிலனுப்பியிருக்கலாம் .. கடுதாசி கிடுதாசி இன்னொரு முறை வந்துச்சு ஊருக்கு வந்து ரணகளமாயிடும் ஆமா.. அம்புட்டு கஷ்டமா கெடக்கு உங்க கையெழுத்து வாசிக்க சரியா? இன்னும் நான் வாறதுக்கு ஒரு பத்து பதினஞ்சு நாளாகும் அதுவரைக்கும் இப்பிடி கிறுக்குத்தனமா எதுவும் கிறுக்காமயும், பக்கத்து வீட்டுக்காரி எதிர்த்த வீட்டுக்காரிககிட்ட எல்லாம் ஜொள்ளு விடாமயும் ஒழுக்கமா இருக்கோணும் இல்லிங்காட்டி நீங்க தோச்ச சேலை போலவே உங்க உடம்பும் டார் டாராயிடும் ஆமா சொல்லிப்போட்டேன்...வாறேனுங் மாமா...
ப்ரியமுடன்... மிஸஸ்.வசந்த்...
நாள் : 15-11-2012

July 9, 2010
என் மனைவிக்கொரு கடிதம்...!
என் ஆசை பொண்டாட்டியே நீ உன்னோட அப்பா வீட்டுக்கு போன இந்த நேரத்தில் நான் இங்க நான் உன்னோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் திரும்பி நினைச்சுப்பார்த்து உனக்கே உனக்குன்னு எழுதும் கடுதாசி..
ஒரு நாள் அது நமக்கு திருமணமாகி ஒரு மூணு மாசமாயிருக்கும்ன்னு நினைக்கிறேன் ஆசையா புடவை வாங்கி கொடுங்கன்னு சொன்ன உன்னை என்னோட பல்சர்ல உட்கார வச்சு கடைக்கு கூட்டிட்டு போனேன் அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச வயலட் கலர் புடவை கட்டியிருந்த கடைக்கு போனதும் உனக்கு பிடிச்ச புடவை எடுத்துக்கோடின்னு சொன்னேன் நான், நீ அங்க இருந்ததுலயே ரொம்பவும் வெயிட்லெஸ் புடவை எடுத்த ஏண்டி நல்லா வெயிட்டா இருக்குற புடவை எடுக்க வேண்டியதுதானேன்னு கேட்ட என் கிட்ட நீ சொன்ன நீங்க கஷ்டப்படக்கூடாதுன்னுதாங்கன்னு , இத்தனைக்கும் அது ஒண்ணும் அவ்ளோ விலை குறைஞ்ச புடவையும் இல்ல , பின்ன ஏன் அப்படி சொன்னன்னு வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு புரியவே இல்லை கிட்டதட்ட ஒரு வாரம் கழிச்சு ஒரு ஞாயிற்றுகிழமை துணியெல்லாம் ஊற வச்சுருக்கேன் மறக்காம துவைச்சு போட்டுடுங்கன்னு சொல்லிட்டு மகளிர் சங்கத்துக்கு நீ கிளம்பி போனப்பத்தாண்டி எனக்கு புரிஞ்சுச்சு உன்னோட திட்டம்...
ஒரு நாள் நம்ம வீட்டுக்கு முன்னாடி பக்கத்துவீட்டு மாமியோட சேர்ந்து பாத்திரம் விக்க வந்தவன்கிட்ட பாத்திரம் வாங்கிட்டு இருந்த அப்போ நான் காம்பவுண்ட் சுவத்துல கையவச்சு கன்னத்துக்கு முட்டுகுடுத்துட்டு நின்னுட்டு இருந்தேன் அப்போ பாத்திரக்காரன் ஒரு பெரிய சம்பாவை காட்டி இது எடுத்துக்கங்க மேடம் எதுவேணும்னாலும் கொட்டிவச்சுகிடலாம்ன்னு சொன்னான் அப்போ நீ சொன்ன அது ஏற்கனவே எங்க வீட்ல எதுவேணும்னாலும் கொட்டிக்கிற ஒரு சம்பா இருக்கு நீ நான் கேட்ட ஃபரை பேன் இருக்கான்னு காட்டுன்னு சொல்லிட்டு பக்கத்து வீட்டு மாமியப்பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்ச நான் கூட உங்க அம்மா வீட்ல இருந்து கொண்டுவந்த சம்பாவைத்தான் சொல்றயாக்கும்ன்னு நினைச்சேன் கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்ட கோவிச்சுகிட்டு பேசாம இருந்த ஒரு நாள் ஆறிப்போன வத்தகொழம்பையும் சோத்தையும் வச்சுட்டு நம்ம பெட்ரூம் சுவத்தப்பார்த்து கொட்டிக்கங்கன்னு மூஞ்சிய சிலுப்பிட்டு நீ சொன்னப்பத்தான்டி புரிஞ்சுச்சு நீ அன்னிக்கு பாத்திரக்காரன்கிட்ட சொன்ன சம்பா எதுன்னு..
போன மாசம்ங்கூட உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ்க்காக வெளியூர் போயிருந்த நீ , போயிட்டு வந்ததும் நீ சொன்ன உங்க அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் மேரேஜ்க்கு போன இடத்துல பாத்தேன் எல்லாருக்கும் அவங்க சாப்பிடுறதுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து நல்லா கவனிச்சுகிட்டேன்னு சொன்ன எனக்கு ஆச்சரியமா போச்சு என்னடா இது அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சம் கூட கண்டுக்காத நம்ம பொண்டாட்டி இவ்ளோ நல்லவளா மாறிட்டாளேன்னு சந்தோஷப்பட்டு உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ் மதுரையிலா நடந்துச்சுன்னு கேட்ட எனக்கு நீ சொன்ன பதில் குற்றாலம் ஹும் ...
அப்புறம் ஒரு நாள் உன்னோட உயிர்த்தோழி போனவாரம் ஒரு படத்துக்கு போனோம் நல்லா இருக்குன்னு நம்ம இரண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போனப்ப சொன்னாங்க நானும் சரி வாடி இந்த வார சண்டே அந்த படத்துக்கு போகலாம் அதான் உன் ஃப்ரண்ட் அந்த படம் நல்லாருக்குன்னு சொல்றாளேன்னு சொன்னேன் அதுக்கு நீ சொன்ன அவ சொல்றதெல்லாம் நான் கொஞ்ச நாளா நம்புறதே இல்லீங்க வர வர பொய்யா சொல்றான்னு சொன்ன , உன்னை பொண்ணு பாக்க வந்த என்னை ரொம்ப அழகா இருக்கேன்னு உன்கிட்ட சொன்னது அவங்கதான்னு ஒரு நாள் அவங்க என்கிட்ட சொன்னப்பத்தாண்டி தெரிஞ்சுச்சு நீ அன்னிக்கு ஏன் அவங்க சொன்னதை நம்பமாட்டேன்னு சொன்னன்னு...
போன மாச டெலிபோன் பில் ஏண்டி என்கிட்ட காட்டலைன்னு கேட்டேன் கொஞ்ச நாளா ஞாபக மறதியா இருக்குங்கன்னு சொன்ன அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாளுன்னு வாழ்த்து சொன்ன நான் சொன்னேன் நாளைக்குத்தானே எனக்கு பிறந்த நாள் இன்னிக்கு ஏன் சொல்ற உனக்கு கிறுக்கா பிடிச்சுருக்குன்னு கேட்டேன் ஆமாங்கன்ன...பிறகொரு நாள் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் சண்டைன்னு வந்தப்போ இவ்ளோ என் மேல கோபம் வச்சு என்கூட சண்டை போடற அப்புறம் ஏண்டி என்னை கட்டிகிட்டன்னு கேட்டேன் நீ சொன்ன நாந்தான் கிறுக்கியாச்சேன்னு சொல்லிட்டு கோவிச்சுகிட்டு உன் அம்மா வீட்டுக்கு போயிட்ட அதுதான் உன்கிட்ட நான் போட்ட கடைசி சண்டையும் கூட ...
இந்த சண்டையெல்லாம் நாம வாழ்ற வாழ்க்கையோட மறக்கமுடியாத ஞாபகமாத்தான் இருக்கே ஒழிய உன்மேல கொஞ்சங்கூட வெறுப்பு வரவே இல்லடி...உன்னை பிரிஞ்சு இந்த ஒரு மாசம் ரொம்ப கஷ்டமா இருக்குடி , ஆசையா நாம போட்டுகிட்ட சண்டை , ஒருத்தர் மேல ஒருத்தர் செல்லமா எடக்கு பேசிகிட்டது ,இது மட்டுமில்ல என்னதான் நீ சண்டை போட்டாலும் எனக்குன்னு பார்த்து பார்த்து செய்த சமையல் , இதுமட்டுமில்லாமல் எப்பவாது நான் உனக்காக எழுதுன கவிதையெல்லாம் எனக்கு தெரியாம எடுத்து படிச்சு அதுக்கு நீ எழுதுன பதில் கவிதையெல்லாம் உன்னோட பெர்சனல் லாக்கர்ல வச்சுருக்குறதை பார்த்த பிறகு, உன்மேல இருக்குற அன்பு இன்னும் ஜாஸ்தியாகிடுச்சுடி இந்த லெட்டர் உன்கிட்ட சேருமா சேராதான்னு தெரியலை ஆனா என்னோட மனசு உனக்கு தெரிஞ்சு திரும்பி வருவன்னு நினைக்கிறேன் அட்லீஸ்ட் திரும்ப இந்த கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது போஸ்ட் பண்றேன்...
ப்ரியமுடன் வசந்த்
எழுதிய நாள் : 11-11-2012

Subscribe to:
Posts (Atom)