July 11, 2010

FROM Mrs.வசந்த்

ப்ரியமுள்ள அப்பாவி புருஷனுக்கு...


மாமா நீங்க போட்ட கடுதாசி வந்துச்சுங் மாமா ,உங்களுக்கு அறிவிருக்கான்னு கேட்குறேன்னு தப்பா நினைச்சுகிடாதீங் மாமா ஏனுங் மாமா பக்கத்துல 25 கிலோ மீட்டர் தூரத்துல இந்தாருக்குற எங்கப்பாரு ஊருக்கு கடுதாசி எழுதியிருக்கீங்களே உங்களுக்கு நெசமாவே அறிவிருக்குதுங்ளா மாமா?அதுவும் இஸ்டாம்பு கூட ஒட்டாம மொட்டையா உங்க தலையப்போலயே ...மானங்கெட்ட மாமா...








என்னமோ நான் பெரிசா உங்களுக்கு தொரோகம் செஞ்சுபோட்டாதா நினைச்சு எழுதிப்போட்டீகளே மாமா? ஏனுங் மாமா அன்னிக்கு ஒரே நாள்தான் உங்கள துணி தோச்சு போட சொன்னேன் அதுக்கே இந்த அலப்பரைய குடுக்குறீக?  நீங்க துணி தோச்ச லட்சணத்தை ஊருக்கு சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு என்னைய ஆளாக்கி போட்டிகளே மக்கு மாமா...


இந்தாருங்க அன்னிக்கு இந்த பாழாப்போன மனுஷன் வாங்கி கொடுத்த வாஷிங் மெசினு ரிப்பேர் ஆயிப்போச்சுங்க இந்தாளு மாறியே... சரி எனக்கும் மகளிர் சங்கத்துல ''கணவன்களை தட்டி  வைப்பது எப்படி''ன்ற தலைப்புல ஒரு பட்டி மன்ற கூட்டத்துல பேச வேண்டியிருந்ததால இவரை துணி தோச்சு போட்டுடுங்க மாமான்னு சொல்லிப்போட்டு போயிட்டேனுங்க . கூட்டம் முடிஞ்சு திரும்பி வந்து பார்த்தா புதுப்பொடவை நஞ்சு நாறாயி கெடக்குது என்னான்னு கேட்டா பேந்த பேந்த முழிக்குறாரு... அப்புறம் சொல்றாரு எது செஞ்சாலும் வித்யாசாம செய்றோம்ன்னு அன்னிக்கு துணிய கல்லுல கும்மி போடாம கல்ல எடுத்து துணியுல கும்மி போட்டாறாம்ங்க கேட்டா ''மாத்தியோசிக்கிறாராமா''..தூ துப்புக்கெட்ட புருஷா...


பொறவு என்னா சொன்னீக சம்பான்னு உங்களச்சொன்னேன்னு ஹும் பின்ன என்னவாம் போன மாசம் ஹார்லிக்ஸ் பாட்டில்ல கொட்டி வச்சுருந்த கடலை மாவ ஹார்லிக்ஸ்ன்னு எடுத்து வாய்ல போட்டுகிட்டீங்க, பொறகு ஒரு நாள் தேன் பாட்டில்ல இருந்தது தேனுன்னு நினைச்சு வெளக்கெண்ணெய குடிச்சுபோட்டீக,உங்க ஃப்ரண்ட் கூட சொன்னாரு ஏதோ ஃபங்க்சனுக்கு போனப்ப பீர் வாங்கித்தர்றோம்ன்னு உங்களுக்கு பீர்ல ஓமத்துரய கலந்து  கொடுத்து ஏமாத்தி போட்டாகளாமே நீங்களும் அத குடிச்சுப்போட்டு ரெண்டு மூணு நாளா இஞ்சி தின்ன கொரங்காட்டம் கெடந்தீகளே ஞாபகமிருக்கா? இப்போ சொல்லுங்க உங்க வயிறு எதை வேணும்னாலும் கொட்டிகிற சம்பாவா? இல்லியா?


இம்புட்டு வக்கனைய எழுதுற என் வெளக்கெண்ண புருஷா... நானொன்னு சொல்றேன் இம்புட்டு நாளா உங்கள கட்டிகிட்டு நான் படுற பாடு எனக்கில்ல தெரியும் , ஒழுங்கா சுடு தண்ணி கூட வைக்கத்தெரியாத நீங்க எப்டிங் மாமா அம்புட்டு நாளு வெளி நாட்டுல சமைச்சு சாப்பிட்டேன்னு சொன்னீங்க? எதும் செட்டப் கிட்டப்பு இருந்துச்சா என்ன?  அப்டிகிப்டி ஏதாவது இருந்துச்சுன்னு வச்சுக்கோங் மாமா முன்னாடியே சொல்லிப்போடுங் இல்லிங் எங்கூர் ஆடுறிக்கிறதுல பேமசுன்னு உங்களுக்கு தெரியும் பீ கேர்புல் ...


நான் இந்தாருக்குற எங்கப்பா வூட்டுக்கு ஒரு மாசம் ரெஸ்ட் எடுத்துபோட்டு போகலாம்ன்னு வந்தா என்னமோ நான் கோவுச்சுட்டு வந்த மாறில்ல லெட்டர் எழுதியிருக்குறீரு... நான் உங்களை உங்கப்பா வீட்டுக்கு தொரத்திவிடலைன்னு நினைச்சு சந்தோஷப்படுவீகளா வருத்தப்படுறீங்களே மாமா...நான் எழுதுன கவிதயெல்லாம் படிச்சு உருகிபோயிட்டதா சொன்னீக உண்மையிலே அதெல்லாம் படிச்சீகளா மாமா ஏன் கேட்குறேன்னா நான் உங்களைப்பத்தி எழுதுனது இப்பிடித்தானே இருந்துருக்கும் 


நானும் என் மாமனும்
போட்ட சண்ட
எனக்கவன் போட்ட கொண்ட
போலவே கோணல்


எம்மாமனுக்கொரு
அழகான மீசை
அவஞ்சுடும் தோசை
போலவே கருகலா...


இந்தக்கவிதைக்குப்போயி உருகுறீகளே மாமா... இந்தாருங்க மாமா இது நீங்க வாங்கி கொடுத்த லேப்புடாப்புல இருந்து மெயில் அனுப்புறேன் நீங்களும் அட்டுலீஸ்ட் உங்க ஓட்ட லேப்புடாப்புல இருந்து மெயிலனுப்பியிருக்கலாம் .. கடுதாசி கிடுதாசி இன்னொரு முறை வந்துச்சு ஊருக்கு வந்து ரணகளமாயிடும் ஆமா.. அம்புட்டு கஷ்டமா கெடக்கு உங்க கையெழுத்து வாசிக்க சரியா? இன்னும் நான் வாறதுக்கு ஒரு பத்து பதினஞ்சு நாளாகும் அதுவரைக்கும் இப்பிடி கிறுக்குத்தனமா எதுவும் கிறுக்காமயும், பக்கத்து வீட்டுக்காரி எதிர்த்த வீட்டுக்காரிககிட்ட எல்லாம் ஜொள்ளு விடாமயும் ஒழுக்கமா இருக்கோணும் இல்லிங்காட்டி நீங்க தோச்ச சேலை போலவே உங்க உடம்பும் டார் டாராயிடும் ஆமா சொல்லிப்போட்டேன்...வாறேனுங் மாமா...


ப்ரியமுடன்... மிஸஸ்.வசந்த்...
நாள் : 15-11-2012

78 comments:

Prathap Kumar S. said...

யோவ் என்னய்யா இது... இந்த கிழி கிழிக்குது... எதுக்கும் இந்த கல்யாணம் பத்தி யோசிக்கிற விசயத்தை கொஞ்சம் தள்ளியே வை....

Prathap Kumar S. said...

யோவ் 2012 உலகம் அழியப்போகுதாம், அதுக்குள்ள ஏதாச்சும் பண்ணு...

அத்திரி said...

பயபுள்ளக்கு சீக்கிரமா ஏதாவது கால கட்டு போடுங்கப்பா........

Gayathri said...

ROFL..super. rombhave enjoy panni padichen..Thanks

kavisiva said...

இப்பல்ல உண்மையெல்லாம் வெளிய வருது. இது தெரியாம உங்க மனைவி ரொம்ப கொடுத்து வச்சவங்கன்னு சொல்லிட்டேனே. அய்யோ பாவம் மிசஸ்.வசந்த்

soundr said...

:)



http://vaarththai.wordpress.com

Starjan (ஸ்டார்ஜன்) said...

அடி ஆத்தி.. எம்பூட்டு விவரமா இருக்காக.. பொழச்சிக்கிருவாக போங்க.. இந்த வாங்குவாங்கிட்டு போறாக..

- இரவீ - said...

வசந்த் இருக்கிற இடத்துல இருந்து 25 இல்ல 50 கிலோமீட்டர் தூரத்துல உள்ள எல்லா புள்ளைகளும் உடனே சுதாரிச்சுக்குங்க ... இல்லைனா கடவுளே வந்தாலும் உங்களை காப்பாத்த முடியாது.

ஜெயந்த் கிருஷ்ணா said...

:)

மாதேவி said...

"எங்கூர் ஆடுறிக்கிறதுல பேமசுன்னு உங்களுக்கு தெரியும் பீ கேர்புல்" :)

பார்த்து கவனம் :)))))

- இரவீ - said...

உங்க அம்னி நல்லா எழுதின கீழே உள்ள கவிதையை போடாததுக்கு எனது கண்டனம்.
௧)
ஆடு ஒன்னு நேந்து விட்டேன் கோவிலுக்கு
காலு ஒன்னு நேந்து விட்டேன் என் மாமனுக்கு

௨)
சிணுக்கி வருவது வெக்கம்
மாமன் இருப்பது என் கக்கம்.

௩)
என் மாமன் பேரு வசந்து ,
நான் அடிக்கும் போது அவர் ஓடுற இடம் ஊர்சந்து.

ப்ரியமுடன் வசந்த் said...

இரவீ சார் சிரிச்சு மாளலை ... செம்ம...
உடனே சொல்லணும்ன்னு தோணுச்சு...

- இரவீ - said...

எல்லாம் உங்க பதிவால வந்த சிரிப்பு தான் ... இன்னும் சிரிச்சுகிட்டு தான் :) நன்றி வசந்த் .

Ramesh said...

அடேய் இது ரொம்ப ஓவர்
பிரிச்சு மேய்ஞ்சிருக்க .........

அன்புடன் நான் said...

வசந்த்துக்கு எனது ஆழ்ந்த வருத்தம் கலந்த வாழ்த்துக்கள்!
எப்படியாவது பிழைச்சுக்கங்க!

பரிசல்காரன் said...

கிழிஞ்சது.. 2012ல உலகம் அழியும் இங்க்லீஷ்காரன் படம் எடுத்தது சரிதான் போல...

:-)

ரொம்ப ரசனையான கடிதம் வசந்த்!

ராஜவம்சம் said...

உடம்புல இம்புட்டு ரணத்தை வச்சிக்கிட்டு எப்டிங்ண்னா உங்களாள சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க.

எல்லாம் பலகிடுச்சிங்ளாணா.

Menaga Sathia said...

அடடா உங்க மனைவி உங்களை இந்த கிழிகிழிச்சிருக்காங்க...ம்ம்ம்...ஆனா எனக்கு மட்டும் புரிஞ்சிடுச்சு..அது என்னன்னு சொல்லமாட்டேன்..ஹா ஹா...

Unknown said...

பயபுள்ளக்கு சீக்கிரமா ஏதாவது கால கட்டு போடுங்கப்பா......

அத்திரியின் கருத்தை ஆமோதிக்கிறேன் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/அன்னிக்கு துணிய கல்லுல கும்மி போடாம கல்ல எடுத்து துணியுல கும்மி போட்டாறாம்ங்க கேட்டா ''மாத்தியோசிக்கிறாராமா''..தூ துப்புக்கெட்ட புருஷா...
//

ஹிஹி

இன்டர்நெட் காலத்துல லெட்டர் போட்ட உன்னை என்ன பண்றது மாப்பு...........

நாடோடி said...

இது என்ன‌ க‌டித‌ங்க‌ள் வார‌மா?... ரெம்ப‌ ர‌சிச்சி சிரிச்சேன்...

தமிழன்-கோபி said...

//நானும் என் மாமனும்
போட்ட சண்ட
எனக்கவன் போட்ட கொண்ட
போலவே கோணல்//



கவிதை கவிதை .....


பட்டிகாட்டு அம்மணியா இருக்குமோ... ?
எதுவா இருந்தாலும்.... எவ்ளோ பாசமா கவிதை ....

செ.சரவணக்குமார் said...

சிரிச்சு முடியலை வசந்த்.

நீங்க எழுதுன லெட்டர விட, அவங்க எழுதுனதுதான் டாப்பு.

சும்மா பிரிச்சு மேய்ஞ்சுட்டாங்க.

கலக்கல்.

SShathiesh-சதீஷ். said...

மாமா நீ நடத்து மாமா....அப்புறம் ஏழரை சனியன் பிடிக்கும் மாமா கடைசியாய் சிரிப்பாய் மாமா நீ நடத்து மாமா

Unknown said...

நல்ல பதிலடி கடிதம்

சீமான்கனி said...

மாப்ளே நீ ரெம்ப குடுத்துவச்சவன் மாப்பிளே...முனியம்மா சொன்னது தப்பு இல்ல...அடுத்த ௧௫ நாள் ம்ம்ம்ம்....என்ஜாய்...மாப்பிளே நீ பொண்ணு எடுத்த ஊரு பேரு மட்டும் ரகசியாம மெயில் பண்ணு...

சீமான்கனி said...

மாப்ளே நீ ரெம்ப குடுத்துவச்சவன் மாப்பிளே...முனியம்மா சொன்னது தப்பு இல்ல...அடுத்த 15 நாள் ம்ம்ம்ம்....என்ஜாய்...மாப்பிளே நீ பொண்ணு எடுத்த ஊரு பேரு மட்டும் ரகசியாம மெயில் பண்ணு...

Subankan said...

:))

நிலாமதி said...

ரொம்பவும் நல்லாய் இருக்குங்க.

Admin said...

ஹா... ஹா... ஹா... தாங்க முடியல...

நீச்சல்காரன் said...

அடுத்த முறை புடவைய இன்சுரன்ஸ் பண்ணச் சொல்லிருங்க
:)

a said...

ஹா ஹா அம்மணி ரொம்ப சூடா இருக்காங்க போல....

சிநேகிதன் அக்பர் said...

@ நாஞ்சிலு

//யோவ் என்னய்யா இது... இந்த கிழி கிழிக்குது... எதுக்கும் இந்த கல்யாணம் பத்தி யோசிக்கிற விசயத்தை கொஞ்சம் தள்ளியே வை.... //

இப்படியும் சொல்லிட்டு.

//யோவ் 2012 உலகம் அழியப்போகுதாம், அதுக்குள்ள ஏதாச்சும் பண்ணு... //

இப்படி சொன்னா என்னைய்யா அர்த்தம்?

கல்யாணமாகாத நாஞ்சிலு சொல்றத கேட்காதிங்க வசந்த். அதோட கஷ்டம் சாரி சந்தோசம் முடிந்தவுங்களுக்குத்தான் தெரியும் :)

அருண் பிரசாத் said...

இந்த அவமானம் உனக்கு தேவையா?

நல்லா யோசிச்சி முடிவெடுங்க, கல்யாணம் பண்ணுறதா, வேண்டாமானு

vanathy said...

வசந்த், செம காமடி போங்க. என்னை அறியாமலே கோவை சரளா ஸ்டைலில் படித்தேன். நல்லா இருக்கு. அதுக்காக உங்களை வடிவேல் என்று கற்பனை எல்லாம் செய்ய வேண்டாம்.

Anonymous said...

அட அட அட. இது தேவையா வசந்த் சார். என்ன தான் சொல்லுங்க. இது தான் பெஸ்ட் கடிதம். இவ்வளவு அடிச்சாலும் தாங்குகிறீர்களே. அவ்வளவு நல்லவனா

Gayathri said...

உங்களுக்கு கல்யாணம் ஆனா வீடு களைகட்டிடும் போங்க! உங்க கர்பனை மனைவி சுப்பர்..

ஹேமா said...

அட..அவங்களும் பதில் போட்டுட்டங்களா.இப்பத்தானே பாத்தேன் !

எவ்ளோ அன்பா இருக்காங்க !

//எம்மாமனுக்கொரு
அழகான மீசை
அவஞ்சுடும் தோசை
போலவே கருகலா...//

பாருங்க...நீங்க சுடுற தோசையைக் குறை சொன்னாலும் மீசையை எப்பிடி ரசிச்சிருக்காங்க!

ரசிகன்! said...

Ever.... never i ve read such an interesting post in blogs........

:)

நானும் என் மாமனும்
போட்ட சண்ட
எனக்கவன் போட்ட கொண்ட
போலவே கோணல்///

adadaa!

:)

Kousalya Raj said...

superrrr....:)))

சாந்தி மாரியப்பன் said...

அட.. அட.. அட.. ஜாடிக்கேத்த மூடிதான் போங்க :-)))))))))))))

//போன மாசம் ஹார்லிக்ஸ் பாட்டில்ல கொட்டி வச்சுருந்த கடலை மாவ ஹார்லிக்ஸ்ன்னு எடுத்து வாய்ல போட்டுகிட்டீங்க, பொறகு ஒரு நாள் தேன் பாட்டில்ல இருந்தது தேனுன்னு நினைச்சு வெளக்கெண்ணெய குடிச்சுபோட்டீக//

:-))))))))))))))))))))

Mahi_Granny said...

reply is superb

KUTTI said...

சூப்பர் வசந்த், ரசித்து படித்தேன்.

மனோ

தமிழ் உதயம் said...

இரண்டு கடிதங்களும் அழகு.

ஜீவன்பென்னி said...

நல்லாத்தான் இருக்கு.... ரொம்ப அழகாவும் இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

ஸ்ஸ்ஸ்ஸ்.காரம்.வரத்துக்கு முன்னால இந்தப் போடு போடறாங்களே அம்மணி.:)
நீங்க ரூம் போட்டு யோசித்தால் அவங்க பங்களாவே வாடகைக்கு எடுப்பாங்க போல.
தாங்கலை சாமி:))))

priyamudanprabu said...

கூட்டம் முடிஞ்சு திரும்பி வந்து பார்த்தா புதுப்பொடவை நஞ்சு நாறாயி கெடக்குது என்னான்னு கேட்டா பேந்த பேந்த முழிக்குறாரு...
/////////

சே சே துணி கூட துவைக்க தெரியல நிரெல்லாம் எதுக்கையா கலியாணம் செய்திரு ?

VELU.G said...

எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க அப்புறம் ஐயோன்னா வருமா அம்மான்னா வருமா

எங்க ஊட்ல கூட இவ்வளவு கோவம் இருந்ததில்லைங்க.

உங்க நன்மைக்குதான் சொல்ற அப்புறம் உங்க இஷ்டம்

ஜெயந்தி said...

பரவாயில்ல கல்யாணத்துக்கு முன்னாலயே தெளிவாத்தான் இருக்கீங்க.

Unknown said...

ஹா ஹா நண்பா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.. :)))

Anonymous said...

உங்க கடிதத்தை விட தங்கமணி கடிதம்தான் சூப்பரு

Anonymous said...

என்ன வசந்த் என்னாச்சு ஏன் ஏன் இந்த வெறி ?

நல்ல ஜோக் ஆ எழுதிடிங்க ...வர போற மனைவி நிஜமா இந்த மாதிரி language யூஸ் பண்ணினா நல்லாவா இருக்கும் ? என் நண்பனே இப்பிடி எல்லாம் பேச கூடாதுன்னு நான் அவங்களக்கு மெயில் போடுவேன் சரியா

Kala said...

என்னைக் கட்டிகிறாயா?கன்னானம்
கட்டிகிறாயா?என்று அன்று ஒத்தக் காலில்
நின்ற.....


ஜய்யய்யோ... இந்த மக்கு,மண்டு

மாமாவையா நீ கட்டிகிட்டி அவஸ்தைப்படுகின்றா?
உன் கல்யாணத்தில் என்னைப் பார்த்து அது
வழியுபோதே......
நினைத்தேன் இது சரியான மண்டென்று!!
உனக்காக அன்று மன்னித்துவிட்டேன்
இல்லாவிட்டால் அன்று உன்
திருமணம் தடைப்டும் அளவுக்கு
வந்திருக்கும், அவர் செய்த பாவம்,
நீ செய்த புண்ணியம் அவர் கழுத்தில்
நீ தாலி கட்டிவிட்டாய்.

என்ன செய்வது!கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
பார்த்து தட்டிக், குட்டி,போட்டு,கொடுத்து
அதட்டி,மிரட்டி காயம் வராதமாதிரி
சமாளிச்சுக்கோ

உன் கடிதம் கண்டு என் கண்கள்
அன்று அவர் விட்ட{என்னிடம்}
லொள்ளை நினைக்கப் பணிக்கிறது

நன்றியடி தோழி உன் மடலுக்கு,
இப்படிக்கு
மிஸ்ஸிஸ் வசந்தின்....
தோழி.

sakthi said...

:)))))))

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//பயபுள்ளக்கு சீக்கிரமா ஏதாவது கால கட்டு போடுங்கப்பா......//

அத்திரியின் கருத்தை ஆமோதிக்கிறேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இந்த பாழாப்போன மனுஷன் வாங்கி கொடுத்த வாஷிங் மெசினு ரிப்பேர் ஆயிப்போச்சுங்க இந்தாளு மாறியே... //
ஹா ஹா ஹா... ROFTL ... சிரிச்சு சிரிச்சு முடியலைங்க...ஹா ஹா ஹா

//இப்போ சொல்லுங்க உங்க வயிறு எதை வேணும்னாலும் கொட்டிகிற சம்பாவா? இல்லியா?//
ஹையோ ஹையோ....சூப்பர் Mrs . வசந்த்

//எங்கூர் ஆடுறிக்கிறதுல பேமசுன்னு உங்களுக்கு தெரியும் பீ கேர்புல் ...//
ஏனுங்ண்ணா .... அம்மணி கோயம்புத்தூர்ஆ? சும்மா கேட்டனுங்க.... ஹா ஹா ஹா

//நான் உங்களை உங்கப்பா வீட்டுக்கு தொரத்திவிடலைன்னு நினைச்சு சந்தோஷப்படுவீகளா வருத்தப்படுறீங்களே மாமா//
இதான் டாப்பு... ஹா ஹா ஹா

கவிதை hilarious .... ஹா ஹா ஹா
மிஸ்டர் வசந்த் - நிஜமா நீங்க இன்னும் மாட்டிகிட்டீங்களா என்னனு தெரியல... இல்லைனா சீக்ரம் மாட்டிக்க வாழ்த்துக்கள்... ஹா ஹா ஹா

vijayakumar said...

"Fun"tastic boss ...
But .... இதெல்லாம் நெசமா தல ...பயமா கீது பா .....கான்னாலம் கட்ரதுக்கு.....

யோ வொய்ஸ் (யோகா) said...

கன்பர்மா கல்யாணம் பண்ணுற ஐடியாவ கைவிட்டுட்டேன் மாமோய்.

வசந்த் வாழ்க்கை என்னை போன்ற பிரம்மச்சாரிகளுக்கு ஒரு பாடம்

Nathanjagk said...

அம்மிணி நல்லா சூதானாமாத்தான் இருக்கும் போல :))
ப்யூச்சர் அம்மிணிக்கிட்ட இப்பவே இப்படி ஈடு வாங்கறீங்களே??
--
இந்த மாதிரியெல்லாம் கடுதாசி போடறேன்னுட்டு ரவுசு பண்ணிக்கிட்டு இருந்நீங்கன்னா..
ஊர்பக்கம் ஒரு பய பொண்ணு கொடுக்கமாட்டாங்ணோ..
அட அன்னந்தண்ணி கூட பொழங்கமாட்டாங்க :))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல உஷாரான புள்ளையாத் தான் இருக்குதுங் வசந்த்.. கண்டிப்பா உங்க கூட (உங்க மேல இல்லீங்)சக்ஸஸ்ஃபுல்லா குப்பையக் கொட்டீருமுங்..

அருமையாக் கவுஜ எழுதியிருக்க அம்ணி.. புருஷன கண் கலங்காம பாத்துக்கோ.. என்ன?

Jey said...

ஏம்ப்பா , இதயெல்லாம் பப்ளிகுக்கு லீக் பண்ணலாமா?., ம்ஹூம், திட்டோட நின்னுபோனதால, பப்லிஷ் பண்ணி அனுதாபத்தை தேடிட்டீங்க.., நாங்க வாங்கிட்டிருக்குற பூரிக்கட்டை அடிய பப்ளிக்கா சொல்ல கூச்சமா இருக்குயா...,

Anonymous said...

vasanth eppadiyum idhu thaan nadaka poguthunu therinji ippavey manasa thethikka.....vazhthukkal ippadiye nadakka.....

pinkyrose said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா........

வால்பையன் said...

இப்பவே ஆரம்பிச்சாச்சா!

அமுதா கிருஷ்ணா said...

சூப்பர்...

ராமலக்ஷ்மி said...

ரொம்ப டெரரா இருக்கே:)!

ரசித்து ரசித்து எழுதியதே அப்பாவி வசந்துதான் என்பதால் ரசனைக்கேற்ற துணை அமைய வாழ்த்துக்கள்:))!

ப்ரியமுடன் வசந்த் said...

@ நாஞ்சிலு ஹேய் ஹெ ஹேய் சிக்கித்தான ஆவணும் வேற வழியே இல்லை நன்றி பிரதாப்...

@ அத்திரியண்ணா கற்பனையா கூட பொண்டாட்டி பத்தி எழுதவிட மாட்டீன்றங்களே நன்றிண்ணா...

@ காயத்ரி நன்றிங்க

@ கவி அதேதான் வேற வழியில்ல அவங்களுக்கு நன்றி கவிசிவா

@ சிதம்பரம் சவுந்தர பாண்டியன் நன்றிங்க..

@ ஸ்டார்ஜன் மிக்க நன்றிப்பா

@ இரவீ சார் சத்தியமா 25 கிலோமீட்டர் 50 கிலோமீட்டர்ல இருந்து யாரும் வரப்போறதே இல்ல நம்ம அரும பெரும அப்பிடி.. நன்றி சார் உங்க கவிதை செம்ம..

@ வெறும்பய மிக்க நன்றி பாஸ்

@ மாதேவி மேடம் சரிங் மேடம்..நன்றிங் மேடம்..

@ அடேய் றமேஷ் மிக்க நன்றிடா மச்சான்

@ கருணாகரசு சார் வாயுல்ல பிள்ளை பொழைச்சுக்கிடும்ன்னு சொல்லியிருக்காங்களே சார்..
நன்றி சார்..

@ பரிசல் அண்ணா நானும் அந்தப்படம் பாத்துதான் அட்லீஸ்ட் கடிதமாச்சும் எழுதிப்பாத்துடலாமுன்னு நன்றிண்ணா

@ ராஜ வம்சம் ஆமாங்ண்ணா பழகிப்போச்சு நன்றிண்ணா..

kathir said...

அடடா இப்படியும் ஒரு பாசக்கார புள்ள .... கொடுத்து வச்சவணப்ப நீ ! பாத்து இருந்துக்கோ பாவி மக பாதி ராத்ரியில குழிய தோண்டிடப்போரா...

ப்ரியமுடன் வசந்த் said...

@ மேனகா மேடம் ஆவ்வ் புரிஞ்சுடுச்சுஆஆஆஆஆஆ..... அய்யய்ய்யோ...அப்டில்லாம் இல்லீங்க் சகோ இது ஒரு கற்பனைதான்...நன்றி

@ செந்தில் மாம்ஸ் நன்றி

@ ரமேஷ் மாம்ஸ் ஹிஹிஹி அதான் வறுத்தெடுத்துடுச்சுல்ல அப்புறம் என்ன? நன்றி மாம்ஸ்

@ ஸ்டீபன் மிக்க நன்றி

@ தமிழன் கோபி பட்டிக்காடுன்னா சொன்னீங்க இருங்க இருங்க அவங்க கிட்ட போட்டுகுடுக்கிறேன் நன்றி கோபி

@ சரவணக்குமார் அண்ணா எல்லாரும் அவளுக்கே சப்போட் பண்றீங்க போச்சுடா .. ம்ம் நன்றிண்ணா

@ சதீஷ் நன்றி மாமே

@ கலாநேசன் மிக்க நன்றிங்க

@ சீமான்கனி மாப்ள ஆச தோச நன்றி மாப்பி..

@ சுபா நன்றி மச்சி

@ நிலாமதி மிக்க நன்றிக்கா

@ சந்ரு மிக்க நன்றி நண்பா

ப்ரியமுடன் வசந்த் said...

@ நீச்சல்காரன் சொல்லிடுவோம் மிக்க நன்றிப்பா

@ வழிப்போக்கனின் கிறுக்கல்கள் ஆமாங் மிக்க நன்றி

@ அக்பர் அதானே நல்லா கேளுங்கண்ணா.. நன்றிண்ணா

@ அருண்பிரசாத் ம்ம் யோசிக்கிறேன் நன்றிப்பா..

@ வானதி லொல்லோ லொல் நாங்கல்லாம் ரவுடின்னு தெரியாதா உங்களுக்கு..நன்றி வானதி

@ அனாமிகா ஆமாங் நானு நல்லவந்தானுங்க இல்லைன்னா இம்புட்டு அடீசும் வலிக்காம சிரிக்கிறேனே நன்றி

@ காயத்ரி திரும்பவுமா ம்ம் அப்படித்தான் கனா கண்டுகினு இருக்கேன்..

@ ஹேமா ஆமாங் அவங்க நல்லவங்கதாங்க நன்றிங்

@ ரசிகன் மிக்க நன்றி நண்பா

@ கவுசல்யா மிக்க நன்றி

@ சாரல் மேடம் ம்ம் மிக்க நன்றி..

@ மஹி மிக்க நன்றிங்க

@ மனோ மிக்க நன்றிப்பா

@ ரமேஷ் சார் நன்றி சார்

@ ஜீவன் பென்னி நன்றிப்பா

ப்ரியமுடன் வசந்த் said...

@ வல்லிம்மா ஆமாங் அதான் பயமா இருக்கு எனக்கு நன்றிம்மா...

@ பிரபு ஸ்ஸப்பா அவதான் வறுத்தெடுக்குறான்னா நீங்களுமா? நன்றி பிரபு

@ வேலு ம்ம் ஜாக்கிரதையாவே இருக்கேனுங் ஆனா நீங்கல்லாம் இப்டி முழிக்கிறீங்க பாவம்தான் நன்றி வேலு

@ ஜெயந்தி மேடம் பின்ன இல்லைன்னா மிளகாய் அரைச்சுடுவாங்களே நன்றி மேடம்

@ ஆறுமுகம் முருகேசன் மிக்க நன்றி..

@ அகிலா மேடம் சப்போட்ட் நிறைய இருக்கு போல நன்றி மேடம்..

@ கலா மேடம் நீங்கதானா அது சொல்லவேயில்ல அப்போ நான் ஏமாந்துட்டேனா அய்யய்யோ அதுக்காக ரொம்பவே கற்பனை பண்ணி ரொம்பவும் டேமேஜ் ஆக்கிட்டீங்க நன்றி மேடம்

ப்ரியமுடன் வசந்த் said...

@ சந்த்யா மிக்க நன்றிப்பா ஆதரவுக்கு

@ சக்திக்கா நன்றி

@ ஜெஸ்ஸம்மா மிக்க நன்றி :))

@ அப்பாவி தங்கமணி இம்புட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க பாவம்ங்க உங்க தங்கமணி என்னா பாடு படுறாரோ மிக்க நன்றிங் அம்மணி

@ விஜயகுமார் ஹா ஹா ஹா ம் ஒரு அஞ்சு பெர்சண்டேஜ்க்கே இப்பிடியா நன்றிங்க

@ யோகா ஓடு மச்சி ஓடு உன்னை விடாது துரத்தப்போகுது திருமணம் மிக்க நன்றி யோகா

@ ஜெகநாதன் ஹைய்யோ ஹைய்யோ நம்மளுக்கு அந்த கவலையெல்லாம் இல்லீங்ண்ணா.. நன்றிங்ண்ணா

@ சந்தனா என்னங் ஏனுங் இம்புட்டு சப்போட்டு பண்றிங் பின்ன நாளை பின்ன வீட்டுக்கு வந்தா சாப்பாடு போட மாட்டேனுங் அம்மணி நன்ரிங் அம்மணி

@ ஜே நன்றி மச்சி ஹிஹிஹி பூரிக்கட்டையாலே அடி வாங்கிய மச்சான் ஜெயக்குமார் வாழ்க வாழ்க

@ தமிழரசி மேடம் அதானே நீங்கல்லாம் எனக்கெங்க சப்போட் பண்ணாப்போறிங்க..நன்றிங் மேடம்

@ பிங்கி ரோஸ் மிக்க நன்றிங்

@ வால் ஆமாங் தல நன்றி

@ அமுதாகிருஷ்ணன் மிக்க நன்றி மேடம்

@ ராமலக்ஷ்மி மேடம் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மேடம்

@ கதிர் ம்ம் செய்தாலும் செய்வாங்க ஜாக்கிரதையாவே இருகேனுங்ண்ணா நன்றிங்ண்ணா..

anamika said...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்கை
பண்பும் பயனும் அது ........
இந்த திருக்குறலுக்கு தகுந்த தம்பதியர் நீங்க தங்கோ.....
பிள்ளைய அதிகமா வேலை செய்ய விடதேங்க சார்.....
அடுத்த maila இத விட கொடுரம திட்டு வாங்கணும்....
i wish a very happy married life

எல் கே said...

anne seeekiram kalyanam pannikonga

yaan pettra kastam peruga ivvayagam

ப்ரியமுடன் வசந்த் said...

அனாமிகா நன்றி தங்கள் வாழ்த்துக்கு கிகிகிகி சரிங்க மேடம்...

கார்த்திக் ஹிஹிஹி நன்றிங்க...

திவ்யாஹரி said...

எது செஞ்சாலும் வித்யாசாம செய்றோம்ன்னு அன்னிக்கு துணிய கல்லுல கும்மி போடாம கல்ல எடுத்து துணியுல கும்மி போட்டாறாம்ங்க கேட்டா ''மாத்தியோசிக்கிறாராமா''..தூ துப்புக்கெட்ட புருஷா...

ஹா.. ஹா.. ஹா..

ப்ரியமுடன் வசந்த் said...

@ திவ்யா நன்றி :)))))))))

simariba said...

அய்யோ வசந்த்! சும்மா ரொம்ப நாளாச்சே ப்ளாக் படிச்சுன்னு வந்தா... சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குது....ஹா ஹா ... வாழ்த்துக்கள், சுத்தமா எல்லாத்தையும் மறந்து சிரிக்க வைக்குது உங்க எழுத்து! வாழ்த்துக்கள்!