July 6, 2010

புதுக்குறள் - 10

பணமிலார் எல்லாம் தமக்குரியர் பணம்உடையார்
என்பு(று)ம் உரியர் பிறர்க்கு...



அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...



முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...



மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...



கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...



குடிக்க போதை தலைக்கேற ஏறியபின்
நிற்க அதற்குத் தக...



மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...



சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...



தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...



காதல் இனிது கவிதை இனிது என்னும் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...



யூத்ஃபுல் விகடன் குட் பிளாக்ஸில்



61 comments:

Subankan said...

//காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்.//


ரைட்டு

Subankan said...

//காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்.//


ரைட்டு

Praveenkumar said...

புதுமையான முயற்சி. அனைத்தும் ரசிக்கும்படியாகவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது.

தமிழ் அமுதன் said...

வசந்த் உங்க பதிவுகளை பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை..!

மிகவும் அனுபவித்து ரசிக்கின்றோம் உங்கள் பதிவுகளை...!

இந்த பதிவில் எந்த குறளை மேற்கோள் காட்டுவது என புரியவில்லை ..!

வீட்டுல திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க ...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

super Thalaivaa...

அன்புடன் நான் said...

சரிங்க.... வசந்த்

அன்புடன் நான் said...

அகர முதல கருத்துரைக்க... வந்தேன்
ஆதி பகவனாக நானே.

Anonymous said...

அருமையா இருக்கு வசந்த் ...எப்பிடி தான் யோசிகறான்களோ இப்பிடி எல்லாம் எழுத ..வாழுத்துக்கள்

அன்புடன் நான் said...

அகர முதல கருத்துரைக்க... வந்தேன்
ஆதி பதிவனாக நானே.

இதுதான் சரி.

நட்புடன் ஜமால் said...

அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...]]

இந்த குறளால்
உங்க குரல் சீக்கிரம் காலி :)

[[மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...]]

நிதர்சணம் ...

[[
மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...]]

வேதனை

[[
சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...]]

ஹா ஹா ஹா ஜூப்பரு ...

Unknown said...

போடுக தண்ணி போட்டவை போட்டபின்

ஆடுக அதற்குத் தக

அன்புடன் நான் said...

அகர முதல கருத்துரைக்க...வந்தேன்
ஆதி பதிவன் நானே.

சுசி said...

//அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...//

இருக்குடி உங்களுக்கு..

//முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...//

ஹஹாஹா..

//மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...//

கிர்ர்ர்ர்ர்ர்..

க ரா said...

அனைத்தும் அருமை.

Prathap Kumar S. said...

செல்லாது செல்லாது எல்லாமே படிக்கும்போது புரியுது. புரியாத மாதிரி எழுதி அதுக்கு விளக்க வுரை கொடுத்ததான் ஒத்துக்குவோம்

சுசி said...

//சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...//

எப்போ எங்க வீட்டுக்கு வரிங்க??

//
தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...//

இது சூப்பர்.

//காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...//

கரீட்டா சொன்னிங்கப்பா.. ஆவ்வ்வ்..

சுசி said...

இதுக்கு முன்னாடி நான் போட்ட கமண்ட் காணம்..

சுசி said...

அதனால மீள் கமண்ட்..

//அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...
//

கொஞ்ச நாள்ல தெரிஞ்சிடும்..

//முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...//

ஹஹாஹா..

//மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...//

கிர்ர்ர்ர்ர்ர்ர்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...//
கெடைக்கும் கெடைக்கும் பூசை - வீட்டுக்கு
போங்க இன்னிக்கி அமாவாச

//மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...//
ஓ.... நீங்களே போட்டுடீங்களா... குட் குட்... self -reliasation

//காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...//
confirmed ... இன்னிக்கி வீட்டுக்கு போற எண்ணம் இல்லீங்களா சார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது

நாய்க்கும் ஈயப்படும்...//

உங்க மாமியாருக்கு இது தெரியுமா மாப்பு..

//
தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...//

இது நச். இப்ப வள்ளுவர் இருந்திருந்தா இதைதான் எழுதி இருப்பார்.

Prasanna said...

.
.
.
.
.

டிவி இனிது விளையாட்டினிது என்பார்
பதிவுலகம் வரா தார்..


.
.
.
.
.

sakthi said...

சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...

enakaga eluthinatha???

Menaga Sathia said...

////அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...// ஆஹா உங்க வருங்கால மனைவி இந்த குறளை படிக்கனும்னு ஆசை...

Unknown said...

ரைட்டு:)

நாடோடி said...

புதுக்குற‌ள் ப‌த்தும் ந‌ல்லா இருக்கு... நல்லா சிரித்தேன்..

அருண் பிரசாத் said...

சிக்ஸரடித்து வாழ்வாரே வாழ்வர் இல்லையேல்
சிங்கிளேடுத்து ஓடியே சாவர்

- எப்புடி நம்ம குறலூ

- இரவீ - said...

//நட்புடன் ஜமால் said... அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...]]

இந்த குறளால்
உங்க குரல் சீக்கிரம் காலி :)

[[மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...]]

நிதர்சணம் ...

[[
மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...]]

வேதனை

[[
சாப்பிடுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சாப்பிடும் வண்ணம் சமைத்தல்...]]

ஹா ஹா ஹா ஜூப்பரு ...//

உங்க அட்டகாசம் தாங்கல ....

அது சரி மத்த குறள்களுக்கும் என்ன அதிகாரம்னு சொல்லிட்டு போங்க ...

அருமை வசந்த்.

சிநேகிதன் அக்பர் said...

குறள் சீசன் போல இருக்கு :)

நல்லாயிருக்கு வசந்த்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே அருமை வசந்த்.

Anonymous said...

வாவ்.முதல் தடவையாக உங்கள் பக்கம் வருகிறேன். அருமையானவை. அப்படியே ஒரு 1330 குரள் எழுதிடுங்க. உங்களுக்கு வசந்த் கோட்டம் நானே கட்டறேன்.

////அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...////
வீட்ல பூசை நடந்துச்சா இல்லையா?

Chitra said...

அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...


.....உங்கள் வீட்டில் "வாசுகி" வந்தவுடன், தெரியும் சங்கதி......

Mahi_Granny said...

தோசைக் கரண்டியால் வாங்கப் போற.அப்போ தான் தெரியும் எந்த தோசை ருசி என்று. சிக்கிரம் வரும் அந்த நாள் .

ஹேமா said...

எப்பவும்போலவே குறளின் மாற்றுச் சிந்தனை....சிந்தனைச் சிற்பிதான் வசந்த் நீங்க !

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லா இருக்கு.. எல்லாக் குறள்களுமே..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

உங்க பேருக்கு கீழ இருக்கற குறளுக்கு என்ன அர்த்தம் வசந்த்?

சாந்தி மாரியப்பன் said...

//அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...//

வசந்தி வந்தப்புறமும் இதையே சொல்லமுடியுமா உங்களால் :-))))

//முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...//

சூப்பர் punch :-)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

/குடிக்க போதை தலைக்கேற ஏறியபின்
நிற்க அதற்குத் தக... ///

எல்லாம் சூப்பர்.. வசந்த்
ஒன்னே ஒன்னு நா வேற மாதிரி இல்ல கேட்ருக்கேன்..

போடுக தண்ணி போடுக போட்டபின்
ஆடுக அதற்க்கு தக.. :)

Rajeswari said...

:))

nice.

ராமலக்ஷ்மி said...

புதுக்குறள்கள் புதுமையான முயற்சி.

’தோன்றலின்’ நன்று. ஆனால் தோன்றும்போது அப்படித்தான் தோன்றுகிறோம். மனிதர் நாமே இறக்கி வைக்க மனமின்றி சுமந்து திரிகிறோம் சாதியை என எண்ணுகிறேன்.

செ.சரவணக்குமார் said...

நேத்தே படிச்சிட்டேன் வசந்த். ரொம்பப் பிடிச்சிருந்தது. ரூம்ல நானும் சங்கரும் சத்தம் போட்டு சிரிச்சிட்டிருந்தோம்.

பிளாக்கர் பிரச்சனையினால உடனே பின்னூட்டமிட இயலவில்லை.

பகிர்வுக்கு நன்றி வசந்த்.

Anonymous said...

really nice vasanth.....

பின்னோக்கி said...

சிரிக்குறள்

கண்ணா.. said...

//அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...//

ரைட்டு ஒத்துக்கறேன் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைங்கறதை.....

இவ்ளோ தைரியம் கல்யாணத்துக்கு பின்னாடி ப்ளாக்கர் கமெண்டையெல்லாம் காக்கா தூக்கிட்டு போன மாதிரி காணாம போயிருமே....:))

VISA said...

43 comments
43 votes
!!!!

Anonymous said...

புதுக்குறள்கள் அத்தனையும் கலக்கல்ஸ்

karthickeyan said...

இரசனையான பதிவு.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க, ரூம் போட்டு யோசிப்பாங்களோ!!???..

திவ்யாஹரி said...

//அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-ருசிக்காதே
மனைவி சுட்ட தோசை...//

கொடுத்து வைத்த அம்மா..
பாவப் பட்ட மனைவி..

முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

ஹா.. ஹா.. ஹா..

//மனைவிக்கின்னா முற்பகல் செய்யின் கணவனுக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்...//

உடனே சரண்டரா?

//மாமியாருக்கு உணவில்லாத பொழுது சிறிது
நாய்க்கும் ஈயப்படும்...//

ஏன்ப்பா இந்த கொலவெறி..

தோன்றின் சாதிமதமின்றி தோன்றுக - அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று...

இது ரொம்ப அருமை வசந்த்..

காதல் இனிது கவிதை இனிது என்பதம் மக்கள்
காதலித்து பார்க்கா தோர்...

சொல்குற்றமும் இங்கே.. என்பர்தம்.. nice..

முதல் வரியில் 4 வார்த்தைகளும், இரண்டாம் வரியில் 3 வார்த்தைகளும் ஆக மொத்தம் 7 வார்த்தைகளால் ஆனதே வள்ளுவர் எழுதிய குறள்.. உங்கள் குறளில் சுவை இருப்பினும் சில குறளில் குற்றம் குற்றமே.. ஹா.. ஹா.. ஹா.. ரொம்ப நல்லா இருக்கு வசந்த்..

Admin said...

நல்ல குறள்கள் வசந்த்... எப்படித்தான் இது உங்களால மட்டும் முடியிது..

Kala said...

என்னத்தச் சொல்ல...
உங்கள் எண்ணத்தை!!

Thenammai Lakshmanan said...

கடைசிக் குறள்தான் ஞாபகத்துல இருக்குது..வசந்த்..:))

Thenammai Lakshmanan said...

கடைசிக் குறள்தான் ஞாபகத்துல இருக்குது..வசந்த்..:))

Thenammai Lakshmanan said...

கடைசிக் குறள்தான் ஞாபகத்துல இருக்குது..வசந்த்..:))

elamthenral said...

மிக மிக அருமை.. samma superb.. vasanth sir,

கமலேஷ் said...

என்ன நடக்குது இங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

சுபா என்ன மச்சி டாவுலவ் எப்டி போய்கினு கீது? நன்றி மச்சி

பிரவீன் குமார் நன்றிங்க பாஸ் புதுசா இருக்கீங்க... வாழ்த்துக்கள்...

ஜீவன் அண்ணா ஆமாவா ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா இதுபோன்ற வார்த்தைகள் மீண்டும் கேட்கவேவெனும் மீண்டும் 1330 குறள்கள் படிப்பதில் தப்பே இல்லை மிக்க நன்றிண்ணா...

வெறும்பய மிக்க நன்றி பாஸ்...

கருணாகரசு சார் பின்னூட்ட பிரச்சினை உங்களையும் குழப்பிவிட்டது போல நன்றி சார்

சந்த்யா உங்களைவிடவா? மிக்க நன்றிங் மேடம்...

ஜமால் அண்ணா ரவீ அவர்கள் கூறியதுபோல அனைத்து குறள்களுக்கும் அதிகாரமென்னன்னு சொன்னா நல்லாருக்கும்ண்ணா நன்றிங்ண்ணா...

கலா நேசன் நன்றிங்க பாஸ்...

ப்ரியமுடன் வசந்த் said...

சுசி ம்க்கும் நாங்க சமாளிப்போம்ல

என்னாது சாப்பிடவாஅ ஏன் விஜய்ன்ற ஒருத்தர நல்லா கவனிச்சு அனுப்புனது பத்தலியா?

பின்னூட்ட பிரச்சினை உங்கள இன்னும் விடாம துரத்துது....நன்றி சுசி...

இராமசாமி கண்ணன் மிக்க நன்றி பாஸ்

பிரதாப்பு ஆமா நான் தமிழ்ல்ல ஓரளவு எழுதுறேன் அதையும் கெடுத்துகிட சொல்றியா மாப்பு? நன்றி நன்றி

அப்பாவி தங்கமணி ஸ்ஸப்பா முடில அதுல பாருங்க இந்த பேச்சலரா இருக்குறது ரொம்ப சவுர்யம் தங்கமணிகளை பத்தி நல்லாவே நையாண்டி எழுதலாம்...
நன்றிங் புவனா...

ரமேஷ் மாப்பின்னு கூப்பிடறதால என்னையும் உங்களோட சேர்த்துட்டீக பார்த்தீகளா? ஐ ஆம் எ ஃப்ர்ரீ பர்ட் மேன் இனி மாம்ஸ்தான் நீங்க நன்றி மாம்ஸ்

பிரசன்னா கலக்கல் நல்லாருந்துச்சு மிக்க நன்றி தல...

சக்திக்கா அவ்ளோ மோசமாவா சமைப்பீங்க பாவம் மாம்ஸ்...நன்றிக்கா...

மேனகா மேடம் அவ்ளோதானே இந்த குறளை மேரேஜ் அன்னிக்கு வாசிச்சு காட்டிடுவோம் மிக்க நன்றி சகோ...

கே ஆர் பி செந்தில் நன்றி மாம்ஸ் முதல்ல இந்த ரைட்டுன்ற வார்த்தைய பின்னூட்ட உலகத்துல இருந்து தூக்கணும் மாம்ஸ்..

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்டீபன் நல்லா சிரிச்சீங்களா அதுதான் வேணும் மிக்க நன்றி ஸ்டீபன்...

அருண் பிரசாத் ஐ இதுவும் நல்லா இருக்கே .. மிக்க நன்றி பாஸ்..

இரவீ சார் ஜமால் அண்ணாகிட்ட சொல்லிருக்கேன் சீக்கிரம் எழுதுவார்ன்னு நினைக்கிறேன் மிக்க நன்றி சார்..

அக்பர் மிக்க நன்றி நண்பரே..

ஸ்டார்ஜன் மிக்க நன்றி தலைவா

அனாமிகா ம்ம் ஆமாங் பத்துகுறளையும் எழுதி முடிக்குறதுக்கே தாவு தீர்ந்துடுச்சு அந்த மனுசன் எப்டித்தான் 1330 குறள் எழுதினாரோ? மிக்க நன்றி அனாமிகா முதல் வருகைக்கு...

சித்ராம்மா வரப்போற மருமகபேர்கூட சொல்றீங்க மிக்க நன்றிம்மா...

மஹி ஆமாவா ஆவ் ஆவ் தோசைக்கரண்டி மாவாட்டுறது எல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகுதே அய்யய்யோ என் இறைவா கல்யாணமே பண்ணாம இப்பிடியே சந்தோசமா இந்த லோகத்துல வாழுற சக்தி கொடுங்க.. மிக்க நன்றி மஹி...

ஹேமா மிக்க நன்றிங்க..

சந்தனா நன்றிங்க அந்த குறளா? 530வது குறள்ங்க அது

ஒருத்தன் தான் எண்ணியதை மறக்காமல் எண்ணிகொண்டே இருந்தால் அவன் எண்ணியது போலவே அதை அடைதல் எளிதாகும்..

http://agaram-thirukkural.blogspot.com

ப்ரியமுடன் வசந்த் said...

சாரல் மேடம் நீங்க வேற இப்பவே இப்டில்லாம் சொல்லி சந்தோஷப்பட்டுக்கிறேனே மிக்க நன்றி மேடம்...

ஆனந்தி மிக்க நன்றி சகோதரி..

ராஜி அடடடா வாங்க சகோ மிக்க நன்றி..

ராமலக்ஷ்மி மேடம் அதேதான் ஆனா பாருங்க இறந்த பிறகுகூட கூடவே வர்றதுதான் மிக கொடுமையா இருக்கு மிக்க நன்றி மேடம்...

சரவணக்குமார் அண்ணா சிரிச்சீங்களா ம்ம் அதுக்குத்தானே 1330 குறளையும் ஒரு ரவுண்ட் வந்து எந்த குறளுக்கு எது செட்டாகும்ன்னு செலக்ட் பண்ணி எழுதுனேன் மிக்க நன்றிண்ணா... சங்கர் ஆரது?

தமிழரசி மேடம் காணக்கிடைக்கா வரமே எங்கே காணவில்லை சில நாட்களாக?

பின்னோக்கி சார் மிக்க நன்றி சார்

கண்ணா நீங்க ரொம்ப அவதிப்பட்டுகிட்டு இருக்கீங்கன்னு சொல்லாம சொல்றீங்க ம்ம் பார்க்கத்தானே போறோம்...நன்றிங்ண்ணா...

விசா சார் ஆச்சரியமா இருக்கா ஏன்?

அகிலா மேடம் மிக்க நன்றி நன்றி நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

கார்த்திக்கேயன் மிக்க நன்றி தல...

வானதி மேடம் மிக்க நன்றி...

திவ்யா இதுக்குத்தான் உங்கள இவ்ளோ நாளா தேடிட்டு இருந்தேன் சொல்குற்றம் அப்புறம்தான் எனக்கே விளங்குச்சு சரிபடுத்திடறேன் ஆனா 4 வார்த்தையும் மூணு வார்த்தையும் சரியா எழுதுறது கஷ்டந்தாயி வேணும்னா நீங்க ட்ரை பண்ணுங்களேன் திவ்யா.. மிக்க நன்றி..சீக்கிரம் கலக்கல் கவிதைகள் எழுதுங்க...

சந்ரு மிக்க நன்றி நண்பா..

கலா ஹும் இம்புட்டுத்தானா சே...
நன்றி கலா மேடம்..

யுக கோபிகா சிரிக்கமட்டும் தெரிஞ்சவக போல நீங்க :)

தேனம்மை லக்‌ஷ்மணன் மிக்க நன்றிங்க...

புஷ்பா நோ சார் நானும் ஓரு மனிதன் பதிவன் அவ்வளவே நோ சார் டீல் ஓகே மிக்க நன்றிங்க பாஸ்...

கமலேஷ் நடக்கற அளவுக்கு பின்னூட்டங்களுக்கு காலில்லையே பாஸ்? நன்றி நன்றி...

பிரேமி said...

ப்ரியமுடன் எழுதிய குறள்கள் மாறாதே
வசந்த்தினால் வாசமாய் வழங்கப்பட்டதே :-))

ப்ரியமுடன் வசந்த் said...

சந்தோஷி டீச்சர் நீங்க கூட அழகா குறள் எழுதுறீங்க பின்ன டீச்சராச்சே.. நன்றி டீச்சர் தொடர்ச்சியான வருகைக்கும் கருத்துக்கும்...