பெளர்ணமி கிறுக்கன்
நான் கண்ட பவுர்ணமிகள்
என் வாழ்வில் மொத்தம் இரண்டு
வானத்து நிலவாய் போய்விட்டவளின்
பூப்பெய்திய நாளில் அவளுடன்
சேர்ந்து குச்சிகட்டியநாளொன்று...
வாகனம் அடித்துப்போட்ட
அனாதை பிணமாய்
வானம் பார்த்து
சாலையிலொருநாள்...
ஓவியன்
அழகான மலைகளுக்கு நடுவே
பறக்கும் பறவை பறக்காத மேகம்
விழுதுகளுடைய அகண்ட மரம்
அதன் கிளைகளும் , இலைகளும்
அதனோடு இணைந்த புற்களுமாய்
ஒரு மரத்தின் இயற்கை வனப்பை
வரையத்தெரிந்த எனக்கு
அதனருகே ஓடும் நதியின்
மூலமும் முடிவும்
வரையத்தெரிந்திருக்கவில்லை...
ஈயடிச்சான் காப்பி...
நான்
சொல்வதெல்லாம் இந்த
பொம்மை கேட்கமாட்டேன்னுது
என்று சொல்லி கடை வீதியில்
வாங்கித்தந்த பொம்மையின்
கன்னத்தில் பளாரென்று
அறைந்த மகனைச்
சொல்லியும் குற்றமில்லை...
ஊடலிரவு...
இருள் வண்ணமாகிய
என்னுடன் இருளின்
போர்வை போர்த்தி
தூங்கியவளின் முகத்தில்
அதிகாலையில்
பட்ட பகல் சூரியன்
போர்வை போர்த்தியது...
காரணி...
மெத்தையின் கீழ் ஒரு வாள்,
பிடிப்பான் கழட்டிவிடப்பட்டு
என் தலைக்கு மேல் சுற்றும் மின்விசிறி,
நடக்கும் பொழுது வழுக்கி விழுந்து
பின் மண்டை பிடறித்தெறிக்கும்
வண்ணம் தரையிலூற்றிய எண்ணெய்,
கடுக்காத கடுங்காப்பியில்
ஊற்றிய பூச்சி மருந்து
இவையெதுவும் பயனளிக்காத
நிலையில் கடைசியாய்
உன் முத்தம்...
கனவுகள் சுமந்த நிஜம்..
ஆயிரம் கனவுகள் சுமந்து
உன் வீட்டிற்க்கு
மனைவியாய் வரும்
என் கனவுகள் கலைந்தாலும்
நிஜமொன்று கனவாகாத
நாட்களில்
கனவுகள் நிஜமாவது
எவ்வாறு சாத்தியமென்று கேட்கும்
உனக்கு நான் கணவனாய்
கனவுகள் சுமந்த நிஜமொன்று
தருகிறேன் வா...
45 comments:
காரணி என்னை மிகவும் கவர்ந்தது...
காரணி... அருமை
அருமை சூப்பர் நு சொல்ல ஆசைதான். ஆனா எனக்கு புரியல மாப்பு
வசந்த், மிகவும் அருமை..
வசந்த் அருமை. ஈயடிச்சான் காப்பி மிகவும் பிடித்தது. வாழ்த்துக்கள்
எல்லாம் நல்லா இருக்கு வசந்த். :)
கவிதை அத்தனையும் சூப்பர் :-))
அனைத்துக் கவிதைகளும் அருமை . அனைத்திலும் ஓவியன் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது . பகிர்வுக்கு நன்றி
எல்லாவற்றிலும் முதலானது காரணி.
எங்காவது படித்ததா (மாயாவி என்று போட்டிருக்கிறீர்களே..) நீங்களே எழுதியதா? பௌர்ணமிக் கவிதை சோகத்துக்கு பதில் குரூரம் சொல்கிறது. எல்லோரும் சொல்லியிருப்பது போல காரணி அருமை. கனவுகளின் நிஜம் வார்த்தை விளையாட்டு.
manathai kannaka seyyum varigal sago!!!!!
எப்படி வசந்த இப்படி நிஜமாவே சூப்பர்
மாயாவின் கவிதைகள்???
எல்லாமே எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு மாப்பி பகிர்வுக்கு நன்றி...
தலைப்பு என்ன வித்தியாசமா இருக்கு?... கவிதைகள் நல்லா இருக்கு..
கவிதைகள் எல்லாமே நல்லாயிருக்கு.
வசந்த் சூப்பர் கவிதை பா எல்லாமே அதும் ஈயடிச்சான் காப்பி..ரொம்ப அருமை ...நீங்க ஒரு ஆல் ரௌண்டர் என்று சொல்லவே இல்லை ஹூம் ...
anaithum arumaiii
ஓவியன். அடுத்து ஈ.கா:)!
மாப்ள நீ கவிஞன்னு ஒத்துகிறேன்... காரணி அசத்தல்..
மற்றவையும் பிடிச்சிருக்கு..
எனக்கும்!!! புரியுரமாதிரியான கவிதகள்... நல்லாருக்கு:)
எல்லாக் கவிதைகளுமே நன்றாக இருந்தன!
அருமை வசந்த். அனைத்தும் பிடிச்சிருக்கு.
கனவுகள் சுமந்த நிஜம்..
அருமையான வரிகள்..
காரணியில் கடைசி வார்த்தைகள் புன்னகையைத் தருகின்றன.
ஒவ்வொரு கவிதையிலும் ஒரு தனித்துவம் வெளிப்படுகிறது.
வாழ்த்துக்கள் வசந்த்.
காரணி - கலக்கலோ கலக்கல்....
//பெளர்ணமி கிறுக்கன்// - ஏன் மச்சான் இந்த சோகம்..???
எல்லாம் நல்லா இருக்கு வசந்த்.
காரணியில் கடைசி வார்த்தைகள் புன்னகையைத் தருகின்றன.
Really super, Vasanth!
ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்ல அழாகா இருக்கு நண்பா :)
மாயாவியின் கவிதைகள்..??
வசந்தின் கவிதைப் பக்கத்தை இன்று தெரிய முடிந்தது. . அதென்ன மாயாவி கவிதைகள் என்று தலைப்பு.
அருமையாக உள்ளது
ரொம்ப சூப்பர்...
கவிகள் அருமை சகோ..
Oviyan ...Superb migavum rasitthen/
நல்ல கவிதைகள்
ஈயடிச்சான் காப்பி, ஓவியன் பிடிச்சிருக்கு.. ஓவியன் ரொம்பவே..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு மனநிலையில் எழுதப்பட்டதா வசந்த்?
கடைசி கவிதையில மனைவி சொல்லுவது மாதிரி ஆரம்பிச்சு கணவன் சொல்லுவது மாதிரி முடிச்சிருக்கீங்க?
@ நன்றி கலாநேசன்
@ வழிப்போக்கன் மிக்க நன்றி பாஸ்
@ ரமேஷ் மாம்ஸ் இன்னும் நீங்க வளரணும் மாம்ஸ்..நன்றி
@ ஜான் கார்த்திக் மிக்க நன்றி பாஸ்
@ மதுரை சரவணன் நன்றி தல
@ இராமசாமி கண்ணன் நன்றிங்க
@ ஆனந்தி நன்றிப்பா
@ சங்கர் நன்றி அண்ணாத்த..
@ ஹேமா நன்றிப்பா..
@ ஏன் ஸ்ரீராம் நான் கவிதை எழுதிப்பார்த்ததே இல்லையா நீங்க அது சரி :(
@ சக்தி நன்றி
@ விசா சார் ஆமா சார் எப்பவாச்சும் மாயாவி ரூபத்தில எழுதறது நன்றி சார்..
@ சீமான்கனி அடிங்..பகிர்வா ஏண்டா டேய் மண்டை காய்ஞ்சு போயி ஒருதடவை கவிதை எழுதுனா உங்களுக்கு பகிர்வா தெர்தா பிச்சுப்போடுவேன் பிச்சு ராஸ்கல் :))))) நன்றிடா மாப்பி...
@ ஸ்டீபன் மிக்க நன்றி நண்பா
@ ஜெயந்தி மேடம் நன்றி
@ சந்த்யா கிகிகிகி இப்போ தெரிஞ்சுகிட்டீங்களா நன்றி..
@ கார்த்திக் நன்றிப்பா
@ ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி
@ செந்தில் மாம்ஸ் எப்பிடி கேப்புல வெடி வெடிக்கிறிங்க இப்டி நன்றி மாம்ஸ்..
@ ஜெயக்குமார் மிக்க நன்றிங்க..
@ மோகன் நன்றிப்பா
@ அக்பர் நன்றி சகோதரா
@ இந்திரா மிக்க மகிழ்ச்சிங்க நன்றி
@ சிவன் திலீப் ? நன்றி மச்சான்
@ சே குமார் நன்றி தல
@ வானதி மிக்க நன்றிங்க...
@ ஆறுமுகம் முருகேசன் நன்றி தலைவா..
@ மகி எப்பவாச்சும் இது போல கவிதை மாதிரி எழுதுவேன் மேடம் நன்றி...
@ சிவதரிசன் நன்றி மச்சி
@ ஆர்கே குரு நன்றி தல..
@ மலிக்கா நன்றி சகோ..
@ சாந்தினி மேடம் டாங்க்ஸ் மேடம்..
@ ராசராச சோழன் நன்றிங்க...
@ சந்தனா ஈயடிச்சான் காப்பி பிடிச்சு எழுதினது சந்தனா அப்டில்லாம் இல்லை ஒரே நாளில் எழுதினதுதான் கடைசி கவிதை போன வாரம் எழுதுனது அவ்வளவுதான் , கடைசிக்கவிதை தனக்கு வரப்போற மனைவியோட எதிர்கால கனவுகள் புகுந்த வீட்டுல நனவாக போய்விடுகிறது அப்போ கணவன்கிட்ட சொல்றா கனவு நிஜமாகத பொழுது திரும்ப நிஜம் ஒன்றை கனவு காண்பது சாத்தியமான்னு , அப்போ கணவன் சொல்றார் உன்னுடைய கனவெல்லாம் நம் பிள்ளையின் மூலமாக நிறைவேறட்டும்ன்னு...ம்ம்
ஏன் ஸ்ரீராம் நான் கவிதை எழுதிப்பார்த்ததே இல்லையா நீங்க அது சரி //
அபபடி இல்லை வசந்த்... மாயாவி என்ற பெயரில் ஒரு பிரபல எழுத்தாளர் உண்டு... அதனால் கேட்டேன்.
padika vanthen ezhutha thundugiradhu...
@ ஸ்ரீராம் ம்ம்
@ தமிழரசி எழுதுங்க ஏன் எழுதுறதில்லை?
Post a Comment