July 9, 2010

என் மனைவிக்கொரு கடிதம்...!

என் ஆசை பொண்டாட்டியே நீ உன்னோட அப்பா வீட்டுக்கு போன இந்த நேரத்தில் நான் இங்க நான் உன்னோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷமும் திரும்பி நினைச்சுப்பார்த்து உனக்கே உனக்குன்னு எழுதும் கடுதாசி..

ஒரு நாள் அது நமக்கு திருமணமாகி ஒரு மூணு மாசமாயிருக்கும்ன்னு நினைக்கிறேன் ஆசையா புடவை வாங்கி கொடுங்கன்னு சொன்ன உன்னை என்னோட பல்சர்ல உட்கார வச்சு கடைக்கு கூட்டிட்டு போனேன் அப்போ கூட நீ எனக்கு பிடிச்ச வயலட் கலர் புடவை கட்டியிருந்த கடைக்கு போனதும் உனக்கு பிடிச்ச புடவை எடுத்துக்கோடின்னு சொன்னேன் நான், நீ அங்க இருந்ததுலயே ரொம்பவும் வெயிட்லெஸ் புடவை எடுத்த ஏண்டி நல்லா வெயிட்டா இருக்குற புடவை எடுக்க வேண்டியதுதானேன்னு கேட்ட என் கிட்ட நீ சொன்ன நீங்க கஷ்டப்படக்கூடாதுன்னுதாங்கன்னு , இத்தனைக்கும் அது ஒண்ணும் அவ்ளோ விலை குறைஞ்ச புடவையும் இல்ல , பின்ன ஏன் அப்படி சொன்னன்னு வீட்டுக்கு திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு புரியவே இல்லை கிட்டதட்ட ஒரு வாரம் கழிச்சு ஒரு ஞாயிற்றுகிழமை துணியெல்லாம் ஊற வச்சுருக்கேன் மறக்காம துவைச்சு போட்டுடுங்கன்னு சொல்லிட்டு மகளிர் சங்கத்துக்கு நீ கிளம்பி போனப்பத்தாண்டி எனக்கு புரிஞ்சுச்சு உன்னோட திட்டம்...

ஒரு நாள் நம்ம வீட்டுக்கு முன்னாடி பக்கத்துவீட்டு மாமியோட சேர்ந்து  பாத்திரம் விக்க வந்தவன்கிட்ட பாத்திரம் வாங்கிட்டு இருந்த அப்போ நான் காம்பவுண்ட் சுவத்துல கையவச்சு கன்னத்துக்கு முட்டுகுடுத்துட்டு நின்னுட்டு இருந்தேன் அப்போ பாத்திரக்காரன் ஒரு பெரிய சம்பாவை காட்டி இது எடுத்துக்கங்க மேடம் எதுவேணும்னாலும் கொட்டிவச்சுகிடலாம்ன்னு சொன்னான் அப்போ நீ சொன்ன அது ஏற்கனவே எங்க வீட்ல எதுவேணும்னாலும் கொட்டிக்கிற  ஒரு சம்பா இருக்கு நீ நான் கேட்ட ஃபரை பேன் இருக்கான்னு காட்டுன்னு சொல்லிட்டு பக்கத்து வீட்டு மாமியப்பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிச்ச நான் கூட உங்க அம்மா வீட்ல இருந்து கொண்டுவந்த சம்பாவைத்தான் சொல்றயாக்கும்ன்னு நினைச்சேன் கொஞ்ச நாள் கழிச்சு உன்கிட்ட கோவிச்சுகிட்டு பேசாம இருந்த ஒரு நாள்  ஆறிப்போன வத்தகொழம்பையும் சோத்தையும் வச்சுட்டு நம்ம பெட்ரூம் சுவத்தப்பார்த்து கொட்டிக்கங்கன்னு மூஞ்சிய சிலுப்பிட்டு நீ சொன்னப்பத்தான்டி புரிஞ்சுச்சு நீ அன்னிக்கு பாத்திரக்காரன்கிட்ட சொன்ன சம்பா எதுன்னு..

போன மாசம்ங்கூட உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ்க்காக வெளியூர் போயிருந்த நீ , போயிட்டு வந்ததும் நீ சொன்ன உங்க அப்பா அம்மா தங்கச்சி எல்லாம் மேரேஜ்க்கு போன இடத்துல பாத்தேன் எல்லாருக்கும் அவங்க சாப்பிடுறதுக்கு வேண்டியதை  வாங்கி கொடுத்து நல்லா கவனிச்சுகிட்டேன்னு சொன்ன எனக்கு ஆச்சரியமா போச்சு என்னடா இது அப்பாவையும் அம்மாவையும் கொஞ்சம் கூட கண்டுக்காத நம்ம பொண்டாட்டி இவ்ளோ நல்லவளா மாறிட்டாளேன்னு சந்தோஷப்பட்டு உன்னோட ஃப்ரண்ட் மேரேஜ் மதுரையிலா நடந்துச்சுன்னு கேட்ட எனக்கு நீ சொன்ன பதில் குற்றாலம் ஹும் ...


அப்புறம் ஒரு நாள் உன்னோட உயிர்த்தோழி போனவாரம் ஒரு படத்துக்கு போனோம் நல்லா இருக்குன்னு  நம்ம இரண்டு பேரும் அவங்க வீட்டுக்கு போனப்ப சொன்னாங்க நானும் சரி வாடி இந்த வார சண்டே அந்த படத்துக்கு போகலாம் அதான் உன் ஃப்ரண்ட் அந்த படம் நல்லாருக்குன்னு சொல்றாளேன்னு சொன்னேன் அதுக்கு நீ சொன்ன அவ சொல்றதெல்லாம் நான் கொஞ்ச நாளா நம்புறதே இல்லீங்க வர வர பொய்யா சொல்றான்னு சொன்ன , உன்னை பொண்ணு பாக்க வந்த என்னை ரொம்ப அழகா இருக்கேன்னு உன்கிட்ட சொன்னது அவங்கதான்னு ஒரு நாள் அவங்க என்கிட்ட சொன்னப்பத்தாண்டி  தெரிஞ்சுச்சு நீ அன்னிக்கு ஏன் அவங்க சொன்னதை நம்பமாட்டேன்னு சொன்னன்னு...


போன மாச டெலிபோன் பில் ஏண்டி என்கிட்ட காட்டலைன்னு கேட்டேன் கொஞ்ச நாளா ஞாபக மறதியா இருக்குங்கன்னு சொன்ன அப்புறம் ஒரு நாள் என்னோட பிறந்த நாளுன்னு வாழ்த்து சொன்ன நான் சொன்னேன் நாளைக்குத்தானே எனக்கு பிறந்த நாள் இன்னிக்கு ஏன் சொல்ற உனக்கு கிறுக்கா பிடிச்சுருக்குன்னு கேட்டேன் ஆமாங்கன்ன...பிறகொரு நாள் ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் சண்டைன்னு வந்தப்போ இவ்ளோ என் மேல கோபம் வச்சு என்கூட சண்டை போடற அப்புறம் ஏண்டி என்னை கட்டிகிட்டன்னு கேட்டேன் நீ சொன்ன நாந்தான் கிறுக்கியாச்சேன்னு சொல்லிட்டு கோவிச்சுகிட்டு உன் அம்மா வீட்டுக்கு போயிட்ட அதுதான் உன்கிட்ட நான் போட்ட கடைசி சண்டையும் கூட ...


இந்த சண்டையெல்லாம் நாம வாழ்ற வாழ்க்கையோட மறக்கமுடியாத ஞாபகமாத்தான் இருக்கே ஒழிய உன்மேல கொஞ்சங்கூட வெறுப்பு வரவே இல்லடி...உன்னை பிரிஞ்சு இந்த ஒரு மாசம் ரொம்ப கஷ்டமா இருக்குடி , ஆசையா நாம போட்டுகிட்ட சண்டை , ஒருத்தர் மேல ஒருத்தர் செல்லமா எடக்கு பேசிகிட்டது ,இது மட்டுமில்ல என்னதான் நீ சண்டை போட்டாலும் எனக்குன்னு பார்த்து பார்த்து செய்த சமையல் , இதுமட்டுமில்லாமல் எப்பவாது நான் உனக்காக எழுதுன கவிதையெல்லாம் எனக்கு தெரியாம எடுத்து படிச்சு அதுக்கு நீ எழுதுன பதில் கவிதையெல்லாம் உன்னோட பெர்சனல் லாக்கர்ல வச்சுருக்குறதை பார்த்த பிறகு,  உன்மேல இருக்குற அன்பு இன்னும் ஜாஸ்தியாகிடுச்சுடி இந்த லெட்டர் உன்கிட்ட சேருமா சேராதான்னு தெரியலை ஆனா என்னோட மனசு உனக்கு தெரிஞ்சு திரும்பி வருவன்னு நினைக்கிறேன் அட்லீஸ்ட் திரும்ப இந்த கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது போஸ்ட் பண்றேன்...


ப்ரியமுடன் வசந்த்
எழுதிய நாள் : 11-11-2012



77 comments:

Unknown said...

புனைவா , உண்மையா

நசரேயன் said...

// கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது
போஸ்ட் பண்றேன்//

பொழைக்க தெரியாத புள்ளை(?)

Anonymous said...

உங்கள்க்கு கல்யாணம் ஆயிடதான்னு எனக்கு தெரியலே ..எப்பிடியும் உங்கள்க்கு வர போற மனைவி ரொம்ப கொடுத்து வெச்சவங்க தான் ...

விதிய்சாமான பதிவு நல்லா இருக்கு ..

பின்னோக்கி said...

ஆண்கள் இப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள். படத்து ஆரம்பத்துல வில்லன் கெடுதல் செய்ய ஆரம்பிச்சு, கடைசி சீன்ல திருந்துற மாதிரி கடைசி பாரா மட்டும் ஃபீலிங்கா எழுதியிருக்கீங்க.

கல்யாணம் ஆகட்டும் :)

நல்ல புனைவு.

vanathy said...

வசந்த், எழுதிய தேதி பார்த்தால் கொஞ்சம் இடிக்குது. அடுத்த வருடம் வரப் போகும் மனைவிக்கு இப்பவே அட்வான்ஸ் கடிதமா???

VISA said...

ஆக சம்பா ஒண்ணு ரெடியாகுது

கனகாமரபூக்கள்....... said...

உங்கள் வரிகள் மிகவும் அற்புதம்.....

கனகாமரபூக்கள்....... said...

உங்கள் வரிகள் மிகவும் அற்புதம்.....

ராஜவம்சம் said...

அண்னா எப்டிங்னா.
முடியலிங்னா.
அதுவும் புடவை சமாச்சாரம் தூள்ங்னா.

கனகாமரபூக்கள்....... said...

உங்கள் வரிகள் மிகவும் அற்புதம்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// நீ அங்க இருந்ததுலயே ரொம்பவும் வெயிட்லெஸ் புடவை எடுத்த ஏண்டி நல்லா வெயிட்டா இருக்குற புடவை எடுக்க வேண்டியதுதானேன்னு கேட்ட என் கிட்ட நீ சொன்ன நீங்க கஷ்டப்படக்கூடாதுன்னுதாங்கன்னு///

மாப்பு நீதான் உன் மனைவி துணியை துவைக்கப் போறேன்னு இப்படியா பகிரங்கமா சொல்றது...

அகல்விளக்கு said...

baliyadu onnu thaana thalaiya kodukkuthu.....

Start music....

:-)

க ரா said...

நல்லாருக்கு வசந்த்.

யோ வொய்ஸ் (யோகா) said...

தலைவா நான் கல்யாணமே பண்ணப்போறதில்லை

சாந்தி மாரியப்பன் said...

அட்வான்ஸா இப்பவே கடிதம் எழுதி வெச்சுக்கிட்டீங்களா... எழுதியிருக்கிறதைப்பார்த்தா புனைவு மாதிரி தெரியலை :-)))) தேதியை பார்த்ததும் உஷாராயிட்டோம் :-)))

sakthi said...

சொல்லவேயில்லை உனக்கு திருமணம் நடந்த விஷயத்தை அவ்வ்வ்வ்வ்

sakthi said...

எத்தனை டி டி டி டி

sakthi said...

நசரேயன் said...
// கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது
போஸ்ட் பண்றேன்//

பொழைக்க தெரியாத புள்ளை(?)

அதே அதே அதே

sakthi said...

ஹே வசந்த் நல்ல இருந்துச்சுப்பா உன் கற்பனை

ரசித்தேன்

சிரித்தேன்

Unknown said...

கல்யாணத்துக்கு அப்புறம் வீட்டுக்குள்ளயே சண்டை போடணும். அப்பா வீட்டுக்கெல்லாம் அனுப்பக் கூடாது. Advance happy married life

பனித்துளி சங்கர் said...

அஹா ஒரு கணவனின் உணர்வுகளை எதார்த்தமாக இந்த கடிதத்தில் வெளிப்படுத்திய விதம் மிகவும் அருமை . ஆமா இது உண்மையா இல்லை . எல்லாம் கற்பனையே என்று பதில் சொல்லுவிங்களா ?

Ashok D said...

யூத்து levelல இல்லையே தம்பி :)))

செ.சரவணக்குமார் said...

அனுபவிச்சு எழுதுன மாதிரி இருக்கு வசந்த்.

ஆனா 2011 ல எழுதுனதுன்னு சொல்லிட்டீங்களே.

சிரித்து, ரசித்த அருமையான பதிவு வசந்த்.

அருண் பிரசாத் said...

இதை போல மேலும் பல அனுபவங்களை திருமணத்திற்கு பின் பெற வாழ்த்துக்கள்

தமிழன்-கோபி said...

2012ல எழுதுற கடிதமா ? ரொம்பவே Fast. ரொம்ப romantic சிந்தனை...
சீக்கிரம் திருமணம் அக வாழ்த்துக்கள்

Unknown said...

கல்யாணம் வேணுன்னா நேரா சொல்லணும்.. இப்படியெல்லாம் அழுவப்படாது மாப்ள ..

Anonymous said...

ஏதோ சொல்ல வருகிற‌ மாதிரி இருக்கு. என்னான்னு தான் புரியல. What is going on here ??!!??

a said...

லெட்டர பத்திரமா எடுத்து வைங்க. 2012ல கண்டிப்பா தேவப்படும்

ஸாதிகா said...

ஏங்க.. ஏன் இவ்ளோவ் நெகடிவ் தாட்ஸ்?

பா.ராஜாராம் said...

புடவை, கொட்டிக்கிற சம்பா, குற்றாலம்,

ஹா..ஹா..ஹா..

// கடிதத்துக்கு பதில் கடிதமாச்சும் எழுதுவன்ற நம்பிக்கையில் உனக்கு இது
போஸ்ட் பண்றேன்//

அடப் பைத்தாரா.. :-))

- இரவீ - said...

உலகம் அழிய முன்ன இப்படீல்லாம் யோசிக்கணும்னு தோணுதோ உங்களுக்கு ...

நல்லா வருவீங்க வசந்த்...

Mahi_Granny said...

அதென்ன கணக்கு 11 .11 . 2012 . இந்த கடிதத்தை அப்படியே அதே நாளில் உனக்கு அனுப்பி வைக்கிறேன். வரவங்களும் சேர்ந்து வாசிக்க.

நிலாமதி said...

ஹா ஹா இது புனை கதை மாதிரி தெரியலையே.............

கமலேஷ் said...

எல்லாம் சரி அதென்ன தேதி மட்டும் அட்வான்சா இருக்கு....அப்பா இனிமேதான் நடக்கணுமா மேல சொன்னது எல்லாம்..

கமலேஷ் said...

எல்லாம் சரி அதென்ன தேதி மட்டும் அட்வான்சா இருக்கு....அப்பா இனிமேதான் நடக்கணுமா மேல சொன்னது எல்லாம்..

கமலேஷ் said...
This comment has been removed by the author.
சுசி said...

இதுக்கு கூடவா ஒத்திகை பாப்பீக??

சூப்பரப்பு.. நெல்லாத்தான் போடரிக சண்டை..

Anonymous said...

அதெல்லாம் சரி. இந்த இண்டர்நெட் யுகத்துல இப்படி லெட்டர் போட்டு அது எப்ப அவங்க கைக்கு போய் சேந்து ம்ஹூம்.

Anonymous said...

இப்ப எல்லாம் இப்படித்தான் எழுதுவீங்க. கல்யாணம் ஆகட்டும். அக்னி நட்சத்திரம் ஜனகராஜ் மாதிரி எம்பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா தான் எல்லாரும் :)

சீமான்கனி said...

உன் மனைவி அருக்காணி யோட பிரண்டு முனியம்மா அன்னைக்கே ஒன்னையபாத்து வசந்த் நீங்க ரெம்ப கொடுத்து வச்சவருனு சொல்லுச்சு நான் அப்பவே சொன்னேனே மாப்பிளே...நீகேக்கலையே....

சரி சரி பிப்ரவரி 30ஆம் தேதி வர்றேன்னு சொல்லிருக்கு கவலைபடாதே மாப்பிளே இன்னும் ரெண்டு கடிதம் இதே போல எழுது...ஓகே...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

சம்பா படிக்கறப்போ வாய் விட்டு சிரிச்சுட்டேன் :)) நல்ல கற்பனை..

கண்டிப்பா, 9/11/2012 அன்னைக்கு, மனைவியோட சண்ட போட்ருங்க.. அப்பத்தான் இது பொருத்தமா இருக்கும்.. :))

Gayathri said...

நான் சத்யமா கடைசில தேதிய பக்கலனா இது advanced a எழுதிய கடிதம்னு தெரிஜுருக்காது..
அழகா இருக்கு..ம்ம் கர்பனைல கூட கனவன் மனைவி சன்டைவேண்டாமே.

நாடோடி said...

இவ்வ‌ள‌வு அட்வான்சா இருக்கீங்க‌....ஹி..ஹி..

KUTTI said...

கடிதம் பட்டாசு தல...

வாழ்த்துக்கள்.

மனோ

பெசொவி said...

ஆடு ஒன்னு மாட்டிக்கிட்டு இருக்கு. மஞ்சத் தண்ணி ரெடி பண்ணி வைங்கப்பா.....!

pinkyrose said...

eppa enna oru karpanai nijaththa mulungara alavu...

Unknown said...

சூப்பர் நண்பா .. ரொம்ப நல்லா இருக்கு :)

ராமலக்ஷ்மி said...

சீக்கிரமா பத்திரிகை வையுங்க:)!

Kala said...

உன்மேல இருக்குற அன்பு இன்னும்
ஜாஸ்தியாகிடுச்சுடி இந்த லெட்டர்
உன்கிட்ட சேருமா சேராதான்னு
தெரியலை ஆனா என்னோட
மனசு உனக்கு தெரிஞ்சு திரும்பி
வருவன்னு நினைக்கிறேன் .\\\\\\

அப்பாடா ...இதற்குத்தான் “அவக”
காத்திருக்காறார்கள் ம்ம்ம்ம்.....
சேரட்டும்,சேரட்டும்மனசு
உங்க மனச தெரியாதோ நேக்கு
தங்க மனசு. யாருக்கம்பி வரும்??

இதோ..இதோ பாருங்க..
வசந்தும்+.......... சேர்ந்து
பாடுகிறார்கள் பாட்டு...

காதல் சிறகைக் காற்றினில்
விரித்து
வானவீதியில் பறக்க வா....
இத்தனை காலம் பிரிந்ததையெண்ணி....


மக்களே! உங்களுக்கும்
கேட்குமென நினைக்கிறேன்.....

panasai said...

ரொம்ப ரொம்ப அழகா இருக்கு வசந்த்..

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு.

Thenammai Lakshmanan said...

ரொம்ப அட்வான்ஸ்டா போய்க்கிட்டு இருக்கு ... ஹலோ வசந்த் வீட்டுல யாராவது படிக்கிறீங்களா இல்லையா.. அடுத்து குழந்தை இடுகை வரப் போகுது.. சுதாரிச்சுக்குங்க மக்களே..:))

http://rkguru.blogspot.com/ said...

அருமையான கடித பதிவு.........வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

என்னமோ இருக்கு விஷயம்....

இவன் சிவன் said...

பாஸ்..மன்னிச்சிகோங்க...எனக்கென்னமோ இது நம்ம வெளியூர்காரன் எழுதின 'சைந்தவி புருஷன்' பதிவோட உல்டா மாறி இருக்கு.... மற்றபடி தங்களின் பதிவுகள் அனைத்தையும் விரும்பி அடிக்கடி படித்துவரும் பின்னூட்டம் இடா பாமரன் நான்...உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள்!!!!!

ப்ரியமுடன் வசந்த் said...

//இவன் சிவன் said...
பாஸ்..மன்னிச்சிகோங்க...எனக்கென்னமோ இது நம்ம வெளியூர்காரன் எழுதின 'சைந்தவி புருஷன்' பதிவோட உல்டா மாறி இருக்கு.... மற்றபடி தங்களின் பதிவுகள் அனைத்தையும் விரும்பி அடிக்கடி படித்துவரும் பின்னூட்டம் இடா பாமரன் நான்...உங்கள் எழுத்து தொடர வாழ்த்துக்கள்!!!!!//

சாரி பாஸ் அது என்னோட மாப்ள உருகி உருகி எழுதுனது உங்களுக்கு தெரியாதுன்னு நினைக்கிறேன் என்னோட மெயில் குரூப்ல இருக்குற என்னோட ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் அந்த போஸ்ட்டோட லிங் கொடுத்து படிக்க வச்ச பெருமை எனக்கிருக்கு சரியா அப்புறம் அவனோட அந்த போஸ்ட்ல இருக்குற ஃபாண்ட்ஸ் எனக்கு ரொம்ப பிடிச்சுபோனதால அவன்கிட்டயே கேட்காம அதுக்கப்புறம் நிறைய போஸ்ட்க்கு அந்த ஃபாண்ட் யூஸ் பண்ணியிருக்கேன் இந்த போஸ்ட்ல இருக்கும் ஃபாண்ட் கூட அதேதான் மற்றபடியா அடுத்தவங்க போஸ்ட் மாதிரி எழுதறளவுக்கு கிரியேட்டிவிட்டி எனக்கு குறைஞ்சுடுச்சுன்னா அன்னிக்கு நான் ப்ளாக்குக்கு புல்ஸ்டாப் வச்சுடுவேன்...

இந்த லெட்டர் வேற ரூட்ல போறது

அந்த லெட்டர் வேற ரூட்ல போறது

இதுக்கு முன்னாடி கூட ஒரு கடுதாசி எழுதியிருக்கேன் படிச்சுப்பாருங்க...
http://priyamudanvasanth.blogspot.com/2009/08/blog-post_8841.html

இந்த மாதிரி லெட்டர்ஸ்,இன்னும் நிறைய கல்யாணப்பரிசுன்ற லேபிள்ல எழுதி என்னோட வருங்கால மனைவிக்கு பரிசா கொடுக்குறதுக்காக எழுதுறது இதைப்போயி காப்பின்னுட்டீங்களே பாஸ்?


வேலைக்கு போயிட்டு வந்து உங்க கமெண்ட் பார்த்ததும் நான் இப்போ டோட்டலி அப்செட்...

மீண்டும் வெளியூர் மாப்ளையோட சைந்தவி புருஷன் வாசிக்க வச்சதுக்கு நன்றி பாஸ்...

http://veliyoorkaran.blogspot.com/2010/03/blog-post_81.html

திரும்ப நீங்களும் படிங்க...

ஹேமா said...

வசந்து...உங்க எதிர்கால மனைவிக்கான எதிர்காலக் கடிதமும் பின்னூட்டங்களும் களை கட்டி அருமையாயிருக்கு.
கிறுக்கன் ப்ரியமானவன்.

Jey said...

விரிச்ச வலையில விழுந்தாச்சி, இனி ஒன்னியும் பன்னமுடுயாது.இனி வாழ்க்கை முச்சூடும் புலம்ப வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஆண்டாள் மகன் புனைவுதான் எதிர்காலமும்..நன்றி பாஸ்

நசர் ஆமாங்ண்ணா அப்ப்டித்தான் ஆகிடுவேன் போல நன்றிங்ண்ணா...

சந்த்யா ஐ ஆம் ஃப்ர்ரீ பர்ட் கொடுத்து வச்சவங்களா ஏன் சொல்ல மாட்டீங்க நான் படப்போற அவஸ்தை நினைச்சாலே கண்ணக்கட்டுது....மிக்க நன்றி மேடம்

பின்னோக்கி சார் மனைவிகிட்ட ஜகா வாங்குறதுல தப்பே இல்லைன்னு பல பேரோட வாழ்க்கை சாஸ்திரம் சொல்லுதே சார் நன்றி சார்...

வானதி கொடுத்திருந்த ஒரு க்ளூவையும் கண்டுபிடிச்சு போட்டுகுடுத்துட்டீங்களே பாஸ் நன்றிங்க...

விசா சார் கரீக்ட்டு... நன்றி சார்

கனகாமரபூக்கள் பெயரே அழகா இருக்கு பாஸ் பதிவெல்லாம் படிச்சேன் பெயரைப்போலவே அழகாவே எழுதுறீங்க வாழ்த்துக்கள்...

ராஜவம்சம் மிக்க நன்றிங்ண்ணா...

ரமேஷ் நான் என்ன புதுசாவா துணி துவைக்கபோறேன் முன்னோர்களான நீங்க செய்துகிட்டு இருக்குறதுதானே நன்றி மாம்ஸ்

அகல்விளக்கு ம்ம் ஆமாங்ண்ணா..

ப்ரியமுடன் வசந்த் said...

இராமசாமிகண்ணன் நன்றி தல...

யோ அது முடியாதுடியோவ் கண்டிப்பா மாட்டிகிட்டுத்தான் ஆவணும்...நன்றி மச்சி...

சாரல் மேடம் ம்ம் தெளிவா இருக்கீங்க உஷார்பேர்வழிதான் நீங்க நன்றி மேடம்...

சக்திக்கா அய்யய்யோ அப்டில்லாம் இல்லீங்க்கா சும்மா கடுதாசி எழுதி பார்த்தேன் ... ரசித்து சிரித்ததற்க்கு நன்றிகள் அக்கா

கலாநேசன் சே சே அப்டியெல்லாம் செய்யமாட்டோம் அண்ணா அறிவுரைக்கு நன்றிண்ணா

சங்கர் மிக்க நன்றிப்பா

அஷோக் அண்ணா என்னா செய்றது இந்த மூத்த பதிவர்களோட பதிவெல்லாம் படிச்சதோட வினை மிக்க நன்றிண்ணா...

சரவணக்குமார் அண்ணா நல்லா தண்டனைகள் அனுபவிக்கப்போறேடான்னு சொல்றீங்க அப்டித்தானே மிக்க நன்றிண்ணா

அருண் மச்சி ஆசையப்பாரு ஆசைய அம்புட்டு சந்தோஷமா மச்சி உங்களுக்கு மிக்க நன்றி அருண்...

தமிழன் கோபி மிக்க சந்தோஷம் நண்பா வாழ்த்துகளுக்கு நன்றிகள் பல...

ப்ரியமுடன் வசந்த் said...

செந்தில் மாம்ஸ் ஹும் நான் அழுவுறேனா? நன்றி மாம்ஸ்...

அனாமிகா அடுத்த போஸ்ட்ல தெளிவாகுறீங்களான்னு பார்ப்போம் வெயிட்டு... நன்றி பாஸ்...

வழிப்போக்கனின் கிறுக்கல்கள் செய்துடறேன் அதுக்காகவே எழுதியதுதானே பாஸ்...நன்றி பாஸ்

ஸாதிகா எப்பவுமே பாஸிட்டிவ் தாட்ஸ் எதிர்பார்த்தால் நெகடிவ் விஷயங்கள் நடக்குறப்போ பெருத்த ஏமாற்றமா இருக்கும் அதை தவிர்க்கும் பொருட்டு எழுதியதே இது நன்றிக்கா...’

பாரா அண்ணா அப்பாடி பைத்தாரான்ற ஒற்றை வார்த்தையில என்னோட குடும்பமே ஞாபகம் வந்து போகுதுண்ணா...

இரவீ சார் அதேதான் சார் நச்சுன்னு கண்டுபிடுச்சுட்டீங்க.. மிக்க நன்றி சார் தங்கள் வாழ்த்துக்கு..

ப்ரியமுடன் வசந்த் said...

மஹி பெரியவங்க நீங்க கொடுக்குறதுக்கு முன்னாடி நானே அவளுக்கு கொடுத்து ஜகா வாங்கிடுவேனே வவ்வவ்வவ்வே..மிக்க நன்றிங்க...

கமலேஷ் அதுதானே இந்த போஸ்ட்டோட உயிர்நாடி நன்றி கமலேஷ்

சுசி ஆமா ஆமா இனி அடுத்தடுத்து வரப்போற மிஸஸ் வசந்தோட போஸ்ட்டும் படிக்கத்தானே போறீங்க அப்புறம் சொல்லுங்க...நன்றி சுசி

அகிலா மேடம் வெயிட்டு வெயிட்டு ஃபார் நெக்ஸ்ட் போஸ்ட்... அப்படித்தான்னு வச்சுக்கங்களேன்
மிஸஸ்டர்.அகிலா போல :)))
மிக்க நன்றி மேடம்

சீமான்கனி உனக்கிருக்குடி மாப்ள ஊருக்கு வாடி வச்சுக்கிறேன் உன் தங்கச்சி கையாலே உனக்கு சோறு போட்டு உன்னை கொல்றேன் இரு... மிக்க நன்றி மாப்பி தொடர் வருகைக்கும் கருத்துகளுக்கும்...

சந்தனா தப்பு 11-10-2012 அன்னிக்குத்தான் சண்ட போட்டுக்குவோமே...ரீபிட் ரீட் ப்ளீஸ்..நன்றி சந்தனா...

காயத்ரி அடடடா சண்ட இல்லீங்க இது ஒரு தொடர் கதை ஊடல் இல்லாத வாழ்க்கை இனிக்காதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே மிக்க நன்றி காயத்ரி..

ப்ரியமுடன் வசந்த் said...

உலகமே அட்வான்ஸாபோயிட்டு இருக்கு அதான் நானும் மிக்க நன்றி ஸ்டீபன்..

மனோ மிக்க நன்றி தல...

பெ.சொ.வி.வெங்கடேஷ் அவ் ஆவ் ஆவ்.. பயமாகீதே... மிக்க நன்றி பாஸ்...

பிங்கிரோஸ் ம்ம் நன்றிங்க...

ஆறுமுகம் முருகேசன் மிக்க நன்றி நண்பரே...

ராமலக்ஷ்மி மேடம் ம்ம் இன்னும் நாளிருக்கு மேடம் மிக்க நன்றிமேடம்

கலா லொல்லு ஜாஸ்தி உங்களுக்கு
ஆனா அந்தபாட்டு ரொம்ப சூப்பரா இருக்கும் ...நன்றி கலா மேடம்...

panasai பாஸ் நீங்க வந்தது ரொம்ப சந்தோஷம் மிக்க நன்றி தல...

ஜீவன் பென்னி நன்றிங்க

தேனம்மை லக்‌ஷ்மணன் தப்புங்க சில பல கவிஞர்கள் பச்சையா எழுதுற மாதிரி படிக்க கூசுற அளவுக்கு,எங்க வீட்டு ஆள்ங்க படிக்க தயங்கற அளவுக்கு இதுல தப்பா எந்த வார்த்தையும் நான் உபயோகப்படுத்தலையே

குரு நன்றி நண்பா...

ஸ்ரீராம் ம் நன்றிப்பா

இவன் சிவன் இன்னொன்னும் சொல்றேன் பாஸ் என்னோட மாப்ளை மாதிரி எழுதியிருக்கேன்னு நீங்க சொன்னதே பெருமையா கூட இருக்கு எனக்கு... தொடர்ச்சியாக படிக்கிறதுக்கு நன்றிகள்...

ஹேமா நன்றி பாஸ்.. :)

ஜெயக்குமார் வாழ்த்துகளுக்கு நன்றிகள் தலைவா..

ப்ரியமுடன் வசந்த் said...

நிலாமதியக்கா மிஸ்ஸாயிடுச்சுக்கா புனைவேதான் நன்றிக்கா...

kavisiva said...

எழுதியிருக்கறதைப் பார்த்தா புனைவு மாதிரி தெரியலியே :)

எது எப்படியோ உங்கள் வருங்கால மனைவி கொடுத்து வைத்தவர்தான். பின்னே அவங்க புடவையெல்லாம் துவைச்சு போடுவேன்னு வாக்குமூலம் கொடுத்திருக்கீங்களே :)

இவன் சிவன் said...

//இந்த போஸ்ட்ல இருக்கும் ஃபாண்ட் கூட அதேதான் மற்றபடியா அடுத்தவங்க போஸ்ட் மாதிரி எழுதறளவுக்கு கிரியேட்டிவிட்டி எனக்கு குறைஞ்சுடுச்சுன்னா அன்னிக்கு நான் ப்ளாக்குக்கு புல்ஸ்டாப் வச்சுடுவேன்...//

வசந்த்...மன்னிக்கவும்.. அதன் பாதிப்பு இதில் இருந்ததாகவே எனக்குபட்டது. மற்றபடி உங்களின் அநேக பதிவுகளின் விசிறி நான். சமீபத்திய புதுக்குறள்களை அலுவலகத்தில் பலரிடம் வாசித்து காண்பித்து அரட்டை அடித்தோம். மற்றபடி அந்த பின்னூட்டம் அதிக பிரசங்கித்தனமாக தெரிந்தால் மன்னிக்கவும்!!!

அன்புடன் நான் said...

நல்ல பிள்ளைக்கு அழகு.... இப்பவே தயாராவதுதான்.... நீங்க பிழைச்சுக்குவிங்க... எனக்கு நம்பிக்கையிருக்கு வசந்த்.

தமிழ் மதுரம் said...

i miss u bro:))
நான் உங்கடை பதிவைச் சொன்னேன். அருமையான பதிவு வசந். இப்போதுதான் உங்களின் இப் பதிவினை படித்தேன். கலக்கிட்டீங்க பாஸ்.

ப்ரியமுடன் வசந்த் said...

கவி சிவா பாருங்க நான் துணி தோச்சு போடறேன்னு சொன்னதுக்காக கொடுத்துவச்சவங்களா அவங்க அய்யய்யோ... நன்றி கவி சிவா

இவன் சிவன் மன்னிப்பெல்லாம் எதுக்கு பாஸ்? சியர்ஸ்... நன்றி நன்றி

கருணாகரசு சார் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்

கமல் நண்பா லேட்டா வந்தாலும் நீங்க படிச்சு பாராட்டினதுக்கு மிக்க நன்றி ..

வல்லிசிம்ஹன் said...

ippadiyellaam yosikkarathukku ungalai vittaal AAL kidaiyaathu. SEEKKIRAM KALYAANAM AAKATTUM:)

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எனக்கு புரிஞ்சுச்சு உன்னோட திட்டம்...//
ஹா ஹா ஹா.... சூப்பர்... இப்படி ஒரு விசயம் இருக்கா...சூப்பர் சூப்பர் ...ஹா ஹா ஹா

//நீ அன்னிக்கு பாத்திரக்காரன்கிட்ட சொன்ன சம்பா எதுன்னு..//
ஹையோ ஹையோ... இது தான் சொந்த செலவுல சூனியம் வெச்சுகறதா... சூப்பர் சூப்பர் ...ஹா ஹா ஹா

//நீ அன்னிக்கு பாத்திரக்காரன்கிட்ட சொன்ன சம்பா எதுன்னு..//
ஒரு அப்பாவி பொண்ணை இப்படி ஏமாத்தினது ஞாயமா ஞாயமா...ஹா ஹா ஹா

//அதுதான் உன்கிட்ட நான் போட்ட கடைசி சண்டையும் கூட...//
அப்படின்னா இப்போ அம்மா வீட்டுக்கு சண்டை போட்டுட்டு போகலையா... ஒகே ஒகே...

சூப்பர் லெட்டர் தான்... இருங்க reply ஏதோ இருக்கு போல... படிச்சுட்டு வந்துடறேன்... ஹா ஹா ஹா

ப்ரியமுடன் வசந்த் said...

@ வல்லிம்மா தங்கள் ஆசிக்கும் வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்

@ அப்பாவி தங்கமணி ஹா ஹா ஹா எல்லாத்துக்கும் சிரிக்கிற தாங்கள் வரம் வாங்கி வந்திருப்பீர்கள் போல எப்பவும் இதே போலயே சிரிச்சுட்டே இருங்க நன்றி மேடம்...

Jaleela Kamal said...

ப்ரியமுடன் வசந்த்
எழுதிய நாள் : 11-11-2012

??அப்பறமா கொடுக்கட்துக்க்கா

Allinone said...

அருமையான ஒரு கடிதம், சீக்கிரம் வந்திருவாங்க கவலைபடாதீங்க நண்பரே...

ப்ரியமுடன் வசந்த் said...

Jaleela Kamal said...
ப்ரியமுடன் வசந்த்
எழுதிய நாள் : 11-11-2012

??அப்பறமா கொடுக்கட்துக்க்கா//

yes thanks sago...

ப்ரியமுடன் வசந்த் said...

Princess Macaw said...
அருமையான ஒரு கடிதம், சீக்கிரம் வந்திருவாங்க கவலைபடாதீங்க நண்பரே...//

ஹ ஹ ஹா

டேட் பாக்கலியா நீங்க ப்ரின்ஸ்?

பரவாயில்ல அவங்க லெட்டரையும் படிச்சுட்டு சொல்லுங்க... :)))

Unknown said...

முதல்முறையாக உங்க பிளாக்கைப் படிக்கறேங்க வசந்த்.. பின்னியிருக்கீங்க..