August 3, 2010

பப்பரப்பா....ன்னு...!

மேலோகத்திற்க்கு வர்ற மக்கள் நிறைய பாவம் செய்தவங்களா மட்டுமே வருவதால் கடவுள் அவர்களுக்கு நரகத்தில் என்ன தண்டனை கொடுக்கலாம் என்பதில் குழம்பி போய் கடைசியில் பூலோகம் சென்று அவர்கள் செய்யும் பாவத்திற்கேற்ற தண்டனை கொடுக்கலாம் என்று எண்ணி பூலோகம் வர்றார்...வந்து கீழே இருக்கும் நபர்களின் நடவடிக்கைகளை கவனித்து குறிப்பெடுத்துகிடறார் அவர் எடுத்த குறிப்புகள்....

மொதவெட்டு ப.மு.க (பண முன்னேற்ற கழகம்) தலைவர் திரு.பணநாதன் மாதிரியான அரசியல் வாதிகளுக்கு  

1.இவங்களுக்கு சாப்பிட சாப்பாட்டுக்கு பதில் பணத்தை கரைச்சு கொடுக்கணும்.

2.பேச வாய்திறந்தா பாம்பு,பல்லி,கரப்பான் பூச்சி மட்டும் வாய்ல இருந்து வரணும் சத்தம் வரக்கூடாது.

3. இவங்ககிட்ட இருந்து காலையில கண்ணு முழிக்கிறது,யூரின் போறதுல ஆரம்பிச்சு தூங்கற வரைக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒவ்வொரு ஸ்பூன் ரத்தம் லஞ்சமா வாங்கணும்.

4.நரகத்தில புதுசா கட்டியிருக்குற ஒரு கோடி கழிவறைக்கும் இவரை வச்சு திறப்புவிழா நடத்தணும்.(மு.குறிப்பு)திறப்பு விழாவுக்கு தொண்டர்னு எவனாவது லாரி ஏறி வந்தால் அந்தந்த கழிவறைக்கு டிஷ்யூ பேப்பர்களாக தொங்க விடப்படுவார்கள் தொண்டர்கள்.

5.முக்கியமா இவங்களுக்கு திருமணம் செய்ய தடை மீறி செய்தால் கருத்தடை செய்யப்படும்..

6. புதிதாக நரகத்திற்க்கு வரும் ஒவ்வொருத்தரையும் வரவேற்று வாழ்த்து போஸ்டர் அடித்து நரகம் முழுவதும் அவரே ஒட்டி மறு நாள் அவரே கிழித்துவிட வேண்டும்..

ரெண்டாவது வெட்டு புத்தியானந்தா மாதிரியான சாமியார்களின் நடவடிக்கை கவனித்த கடவுள் எடுத்த தண்டனை குறிப்பு

1.நரகத்தில இருக்குற எல்லார் வீட்டு கதவையும் தினமும் காலையில இவர்தான் திறந்துவிடணும்,கதவை திறக்கும்போது எட்டிப்பார்த்தால் கண்கள் பிடுங்கப்படும்..

2.சிரித்தால் முக்கியமாக நரகத்தில் இருக்கும் பெண்களை பார்த்து சிரித்தால்   நரகத்திலிருக்கும் அத்தனை சாக்கடைகளிலிருந்தும் லிங்க் இவர் வாய்க்கு விடப்படும்.

3.முக்கியமா இவர் பேச தடை விதிக்கப்படுகிறது, மீறி வாய் திறந்தால் வாயில் வைத்திருக்கும் அணு குண்டு வெடித்து வாய் பீஸ் பீஸாக சிதறிவிடும்.

மூணாவது வெட்டு பஞ்ச் வசனம் பேசும் நடிகர்களுக்கு...

1.வேளை வேளைக்கு சாப்பிட பஞ்சு மட்டுமே தரப்படும்.

2.நரகத்தில் பறக்கும் பறவைகளுக்கு பறந்து பறந்து உணவு கொடுக்க வேண்டும்.

3.நரகத்தில் யார் வீட்டில் எழவு விழுந்தாலும் அங்கு இவர் சென்று சாவாட்டம் ஆடவேண்டும்.


நாலாவது வெட்டு சீரியல் டைரக்டருக்கு...

1.நரகத்தின் சமையல் கூடத்தில் நாள் முழுவதும் வெங்காயம் மட்டுமே உரிக்கும்,வெட்டும் வேலை ,வெங்காயத்தின் தேவையில்லாத பொழுதும் கூட, அதுமட்டுமில்லை வெங்காயத்தில் எத்தனை பார்ட் இருக்கிறது என்றும் கண்டு பிடித்து சொல்ல வேண்டும்,

அஞ்சாவது வெட்டு போலீஸ்க்கு

1,இவருக்கு நிறைய சாப்பாடு கொடுக்கப்படும் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டு தூங்க வேண்டும் பட் ஒரு கண்டிஷன் குப்புற படுத்து தூங்க வேண்டும்.

இவ்வளவு பேசற இத எழுதுன பிளாக்கருக்கும் வெட்டு

1. ஒரே தண்டனைதான் இவரோட கைகள் இரண்டும் வெட்டப்படும் :)))

தலைப்பு விளக்கம் : அப்பிடித்தான் யோசிச்சது