April 22, 2009

தாவணி அணிவதை தமிழ் பெண்கள் மறந்துவிட்டனரா?

நம்ம தமிழ் நாட்டு பொண்ணுங்க தாவணி எனும் உடை அணிவதை மறந்துவிட்டனரா?
ஏன் இந்த மேற்க்த்திய கலாச்சார ஜீன்ஸ்களும் ஸ்கர்ட் மிடிகள் மீது ஆர்வம் கொண்டு அலைகின்றனர்....

அணியட்டும் வேண்டாம் என்று கூறுவது நமது கட்டளை அல்ல ... அப்படிப்பட்ட உடல் தெரியும் உடைகள் அணிவதனால் சில ஆண்களுக்கு பிடித்திருந்தாலும் பல ஆண்களுக்கு பொது இடங்களில் இப்படிப்பட்ட உடை அணிவது ஒருகாலும் தர்மமாகாது....

ஒரு சில சவுகரியங்களுக்கு அவை சரிவந்தாலும் எந்த தமிழ் பண்பாட்டுக்கும் ஒத்துப்போகாத மரபுகள் நம் தமிழ் பெண்கள் விரும்புவது ஏன்?





என்னுடய ஆர்குட் கம்யூனிட்டி ஒன்றில் நான் கேட்ட தமிழ் பெண்கள் எந்த உடையில் அழகாக இருக்கின்றனர் என்ற ஓட்டெடுப்பில் 45 சதவிகித ஆண்கள் தமிழ் பெண்கள் தாவணி அணிவதையே விரும்புகின்றனர்......இதற்க்கு அடுத்த படியாக சேலை அணிவதை 32 சதவிகித ஆண்கள் விரும்புகின்றனர் ......இவ்வாறு இருக்க இனியும் இந்த ஜீன்ஸ் மோகம் குறையுமா என்பது அந்த பேராண்மை கொண்ட பெண்களுக்கே வெளிச்சம்.......

தாவணியும் கவர்ச்சியானது தான் எல்லை மீறாத கவர்ச்சி..போதுமானது...










அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு.....








4 comments:

? said...

ஒரு சில சவுகரியங்களுக்கு அவை சரிவந்தாலும் எந்த தமிழ் பண்பாட்டுக்கும் ஒத்துப்போகாத மரபுகள் நம் தமிழ் பெண்கள் விரும்புவது ஏன்?//


தமிழ் பண்பாட்டுக்கும் ஒத்துப்போகாத மரபுகள் நம் தமிழ் ஆண்கள் விரும்புவதால்தான்! ஆண்கள் தமிழ் பண்பாட்டுப்படி வேஷ்டி, கோவணம் அணிந்தால் பெண்களும் தமிழ் பண்பாட்டுப்படி அணிவார்கள்.(எத்தனை பெரியார் வந்தாலும் நம்மை திருத்த முடியாது போல!)

தீப்பெட்டி said...

அணியும் ஆடையில் என்ன இருக்கிறது. மற்றவர்களை சங்கடபடுத்தாத எந்த உடையும் நல்ல ஆடைதான்

வான்முகிலன் said...

தயவுசெய்து அசினுக்கு அடுத்துள்ள யுவதி யார் என்று சொல்ல முடியமா?
நன்றி,
வான்முகிலன்.

Unknown said...

///தமிழ் பண்பாட்டுக்கும் ஒத்துப்போகாத மரபுகள் நம் தமிழ் ஆண்கள் விரும்புவதால்தான்! ஆண்கள் தமிழ் பண்பாட்டுப்படி வேஷ்டி, கோவணம் அணிந்தால் பெண்களும் தமிழ் பண்பாட்டுப்படி அணிவார்கள்.(எத்தனை பெரியார் வந்தாலும் நம்மை திருத்த முடியாது போல!)///

ரிப்பீட்டோய்ய்ய்ய்ய்ய்ய்ய்... நீங்க மட்டும் உங்க சௌகரியத்துக்கு திறந்து விட்டுட்டு திரியலாம். பொண்ணுங்க பண்ணினா மட்டும் தப்பா???