February 3, 2010

ஒரு வேப்பமரத்தின் நிழலில்...!


ஒரு பதினைந்து குடும்பங்கள் வாழும் ஒரு சின்ன ஊரில் நாட்டாமையாக வீற்றிருக்கும் ஒரு வேப்ப மரத்தின் நிழலில் அவ்வப்பொழுது தங்களின் ஆற்றாமை, மனச்சோர்வு, வெறுப்பு, இன்னும் பல பல எடுத்து சொல்லும்மனிதர்கள் பற்றிய ஒரு பார்வை...

எஞ்சாமி ஏன் என்னைய இப்பிடி பொலம்பவிடுற? நானும் என் வீட்டுக்காரரும் நல்லாத்தானே வாழ்ந்துட்டு இருந்தோம் அந்தாளு எம்புட்டு குடிச்சுட்டு வந்தாளும் சத்தம்போட்டு பேசாது போடுற சோத்த தின்னுட்டு தூங்கிடும், கோழி கூவுனதும் அரக்க பரக்க எந்திரிச்சு அது வயக்காட்டுக்கு போற வேகம் ரத்திரியில எங்கிட்ட காட்டுற வேகத்தை காட்டிலும் அதிகம்,யார் வீட்டு சண்ட சச்சரவுக்கும் போகாது வேலைக்கு போனோமா வந்தோமான்னு அதுபாட்டுல சுத்திவிட்ட பம்பரமா சுத்திட்டு இருந்துச்சு..

போன செவ்வாகிழமை எப்பயும்போல வெரசா எந்திரிச்சு வயலுக்கு போச்சு சாமி சாமி அது வயலுக்கு போற தினுசே அம்புட்டு அழகா இருக்கும் சுருமாட்ட தலைக்கு கட்டிட்டு சுருக்கமா இருந்தாலும் அது போட்டதும் வெரச்சு நிக்கிற சட்டைய போட்டுகிட்டு நாலுமுழம் வேஷ்டிய பட்டா டவுசரு தெரிய ஏத்தி கட்டிட்டு உதட்டோரம் வழியிற மீசைய முறுக்கிவிட்டுஇரட்டை அவுனு மம்பட்டிய தோள்ல போட்டு அது வயலுக்கு போற அழக பாக்கறதுக்கே கண்நூறு வேணுஞ்சாமி...

வாடி வெரசான்னு என்னையும் சேத்து இழுத்துட்டு ரெண்டுபேரும் வயலுக்கு போனோம்...நானும் முடிஞ்ச கொண்டையோட மத்தியான கஞ்சிய தூக்குவாளில போட்டுட்டு அதுபின்னாடியே போனேன் நடைன்ன நடை அம்புட்டு வெரசா நடக்கும் அந்தமனுசன் அது பின்னாடி போறதும் ஒன்னுதான் ரயிலுவண்டி பின்னாடி போறதும் ஒன்னுதான் அம்புட்டு வெரசா நடக்கும் கால்ல ஒண்ணும் செருப்புகிருப்பு போட்டுகிடாது வயக்காடுப்பக்கம் வெந்துபோன ரோட்டுல நடந்து நடந்து அதுகாலு காய்ச்சுப்போய் கிடக்கும் முள்ளு குத்தினாலும் தெரியாது மரத்துப்போன கால் எனக்குத்தான் முடியாது நான் சந்தயில சோடி பத்து ரூவான்னு வாங்குன ரப்பரு செருப்பு போட்டுட்டுத்தான் நடக்குறது அந்த செருப்பு கூட வாரு பிஞ்சுபோச்சு அதையும் அந்த மனுசந்தான் தச்சு குடுத்துச்சு...

வயலுக்கு போயி வரப்புகளை வெட்டி கரும்புக்கெல்லாம் நல்லா தண்ணிய பாய்ச்சிட்டு கிடந்துச்சு நான் இந்தப்பக்கம் கரும்புமோட்டு பெரக்கிகிட்டு இருந்தேன் திடீர்ன்னு அய்யோன்னு சத்தங்கேட்டு கிழக்கால என்னன்னு ஓடிப்போயி பாத்தா எஞ்சாமி அய்யோ அய்யோ மவராசா மார்ல கைய வச்சமானிக்கே கீழ விழுந்து கிடக்கு என்னாச்சு சாமின்னு கேட்க கேட்க கண்ணுமுழி ரெண்டும் இடவலமா போயிட்டு வந்துச்சு மூச்சு திணறி திணறி விட்டுச்சு யாராச்சும் தூக்குங்களேன் டவுனாஸ்பத்திரிக்கு தூக்கிட்டி போகலாம்ன்னு சத்தம் போட்டுட்டு இருக்கும் போது தெக்குத்தெரு துரப்பாண்டி வந்து சேர்ந்தான் என்னாச்சு தாயின்னு கேட்டுட்டே அவன் வந்து சேந்த நேரம் அந்த மனுசன் உசுருபோயிடுச்சு....

கடைசி வரைக்கும் நமக்கு ஒரு புள்ள பொறக்கலியேன்ற ஏக்கம் அதுக்கு.. அதுக்காக என்னைய ஒரு வஞ்சொல்லு சொன்னதில்ல அவங்காத்தாக்காரி ஒரு நாளு புழு பூச்சிகூட வைக்காத இவகூட என்னடா வாழ்க்கை அத்துவிட்டுட்டு வாடா உம்மாமன் பொண்ண ரெண்டாந்தாரமா முடிச்சு வைக்கிறேன்னு சொன்னதுக்கே அந்த ஆத்தாக்காரிய வீட்டவிட்டே துரத்திவிட்டுடுச்சு அம்புட்டு பாசம் எம்மேல

அது கத சொல்ற அழகே அழகு நல்லதங்கா கதைய அம்புட்டு சுவரஸ்யமா சொல்லும் நல்லண்ணன் நல்லதங்காள் ரெண்டும் உடன்பொறப்புக நெம்ப சீமானா வாழ்ந்தவன் நல்லண்ணன் தங்கச்சிக்காரி நல்லதங்காள வேற ஊருக்கார பயலுக்கு கட்டி கொடுத்தான் அந்த பய வாழத்தெரியாம வாழ்ந்து வாழ்ந்து இருக்குற காசப்பூர கரியாக்கிட்டான் ஏழு புள்ளைக அதுகள வச்சுகிட்டு படாத பாடு பட்டா நல்லதங்கா தின்ன சோறு இல்ல நெம்ப வறுமை அப்பிடியிருக்கச்ச நல்லதங்கா தங்கச்சிக்காரி அண்ணன்காரன் வீட்டுக்கு குழந்த குட்டிகளோடபோறா போன நேரம் அண்ணங்காரன் வேட்டைக்கு போயிட்டான் வீட்டுல அண்ணி மட்டுந்தேன் இருந்துருக்கா அவ நல்லதங்காளையும் அது புள்ளைகளையும் நெம்ப கொடுமைபண்ணிருக்கா அந்த கொடுமை தாங்காம நல்லதங்க ஏழுபுள்ளைகளையும் காட்டுப்பக்கப் போயி கிணத்துல தூக்கிபோட்டு அவளும் குதிச்சு செத்துபோயிட்டாளாம் இது தெரிஞ்ச நல்லண்ணன் அண்ணிக்காரிய தண்டிச்சு அந்தாளும் செத்து போயிட்டாராம் அவ புருசனும் செத்துபோனான்ன்னு அது சொல்லி முடிக்கும்பொதே இப்பிடியெல்லாம் மனுசருக இருந்துருக்காகன்னு தோணும்...

இன்னும் இன்னும் ஊருல நடக்குற அக்குரமங்களையும்,விஷயங்களையும் அது எங்கிட்ட வந்து சொல்லி பொலம்பும் இனி எங்கிட்ட பொலம்ப யாரு சாமி இருக்கா நான் யார்கிட்ட போயி பொலம்புவேன் என்னையும் உங்கூடயே கூட்டிட்டு போயிடு சாமி உனக்கு புண்ணியமா போகும்....

இப்படி இன்னும் நிறைய பொலம்பல்கள் எப்பாவாச்சும் தொடரும்...

50 comments:

S.A. நவாஸுதீன் said...

செம டச்சிங்கா இருக்கு வசந்த். இதுமாதிரியும் தொடர்ந்து எழுதுங்க.

சங்கர் said...

வந்துட்டேன்,
போயிட்டு அப்புறமா வந்து பீல் பண்ணுறேன் :)

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வசந்த்!

க.பாலாசி said...

பேச்சுத்தமிழில் நல்ல இடுகை...நண்பரே....தொடருங்கள்...

சிங்கக்குட்டி said...

வசந்த் செம டச்சிங் ...ரொம்ப நல்லா இருக்கு :-)

சிவாஜி சங்கர் said...

கலக்குறீங்க.. ம்ம்ம்.. ரெம்ம்ப நல்லாருக்கு..

Ashok D said...

//ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வசந்த்!// அதான் சித்தப்பே சொல்லிட்டாரில்லே.. :)

திவ்யாஹரி said...

எப்படிங்க.. கிராமத்துல பேசுறா மாதிரியே எழுதிருக்கீங்க? ரொம்ப நல்லா இருக்கு.. தொடருங்கள் வசந்த்..

குடந்தை அன்புமணி said...

வசந்த்... சும்மாச் சொல்லக்கூடாது... கலக்கிட்டீங்க...பேச்சு நடையிலே அருமையா இருக்கு. வாழ்த்துகள்.

சத்ரியன் said...

வசந்த்,

உள்ளுக்குள்ள நெறய கதை இருக்கும் போல இருக்கே...அப்பப்ப எடுத்து வுடு.

தமிழ் உதயம் said...

ஆசாபாசங்கள், அன்னியோன்யம் நிறைந்த ஒரு தம்பதியினரின் கதை, நன்றாக இருந்தது.

அன்புடன் அருணா said...

கதை நல்லா வருதே!

Subankan said...

கலக்கல் வசந்த், தொடருங்கள்!

கட்டபொம்மன் said...

கட்டபொம்மன் ஆட்சியில் இன்னும் நாட்டாமையா ...

யாரங்கே .. அவனை இழுத்து வாங்க ..

:-)))

கட்டபொம்மன் said...

எமது தேசத்துக்கு வாங்க

இது கட்டபொம்மனின் ஆணை .

:-)))

Unknown said...

ரொம்ப அழகாக கிராமிய நடையில் எழுதியிருக்கிங்க..

திவ்யாஹரி said...

பழைய போட்டோவே வைங்க வசந்த் இது வேணாம்..

ஸாதிகா said...

புலம்பல்..இமையை நனைத்துவிட்டது.

தேவன் மாயம் said...

திறமையையெல்லாம் ஒளித்து வைக்கக்கூடாது.....எழுதுக..

சிநேகிதன் அக்பர் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு வசந்த்.

Menaga Sathia said...

பலம்பல் ரொம்ப நல்லாயிருக்கு வசந்த்!!

செ.சரவணக்குமார் said...

//இப்படி இன்னும் நிறைய பொலம்பல்கள் எப்பாவாச்சும் தொடரும்...//

தொடருங்கள் வசந்த்.

மாதேவி said...

பேச்சுத் தமிழ் நன்றாய் மெருகேற்றுகிறது.

balavasakan said...

பீலிங்க்ஸ்..ஆ.ரொம்ப ரொம்ப..

ஸ்ரீராம். said...

தொடர்ந்து புலம்பவும்...

துபாய் ராஜா said...

நல்ல நேட்டிவிட்டியான எழுத்துநடை அருமை. வாழ்த்துக்கள் வசந்த்.

VISA said...

ஏய் வசந்த் இப்படி ஒரு எழுத்த வச்சுகிட்டு எங்கய்யா போயிருந்Tஹ இம்புட்டு நாளு.
ரொம்ப நல்ல எழுதியிருக்க வாழ்த்துக்கள்.

Radhakrishnan said...

கிராமத்து வாசனை மிகவும் ரம்மியமாக இருக்கிறது.

Unknown said...

நல்ல எழுத்து.. கிராமத்து வாசனையோட..

நல்லாருக்கு உ.பி.

எப்பவாச்சும் தான் தொடருவீங்களா??

கவி அழகன் said...

நல்லா இருக்கு.. தொடருங்கள் வசந்த்

சீமான்கனி said...

தேனீகே..போய்..மரத்தடில உக்கார்ந்து கதை கேட்ட அனுபவம் மாப்பி..அழகான எழுத்து நடை....ஊரு நியாபகம் வருது மாப்பி...:(

சீமான்கனி said...

மணசு கனக்குது...தொடர்ந்து எழுது...நல்லா வரும்...ஆவலாய்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க வசந்த்

Anonymous said...

கேக்க நாங்கெல்லாம் இருக்கோம்.
புலம்புங்க :)

நசரேயன் said...

நல்லா இருக்கு வசந்த்

ஹேமா said...

வசந்து...இது உங்க ஊர் மொழிவழக்கா ?ரொம்ப அழகா இருக்கு.கிராமத்தில் வாழும் நாடகத்தனமில்லாத அப்பட்டமான் பாசம் பிரியம் கதை முழுதும் நிரவிக் கிடக்கு.இன்னும் சொல்லுங்க இப்பிடி.

இது வசந்தின் இன்னொரு பக்கத்தின் வளர்ச்சியோ !வாழ்த்துக்கள்.

Chitra said...

இன்னும் இன்னும் ஊருல நடக்குற அக்குரமங்களையும்,விஷயங்களையும் அது எங்கிட்ட வந்து சொல்லி பொலம்பும் இனி எங்கிட்ட பொலம்ப யாரு சாமி இருக்கா நான் யார்கிட்ட போயி பொலம்புவேன் என்னையும் உங்கூடயே கூட்டிட்டு போயிடு சாமி உனக்கு புண்ணியமா போகும்....
.............எழுத்து நடை, கதை, வழக்கு மொழி - எல்லாம் அருமை. தொடருங்கள்!

Kala said...

நானும் வேப்பமரத்தடி,மாமரத்தடி
ஆலமரத்தடி என்னு உக்காந்து,
உக்காந்து பொலம்கிட்டிருக்கன் சத்த
ஒரு நட வாய்யா இங்கிட்டும்.....

என் மவராசன் அதுதாய்யா....{திருப்பிக்
கேக்கப்படாது எனக்கு வெக்கம்} எ வூட்டுக்கார
ஏரூபிளேனில {என் பேராண்டிய பாக்கபோக}
என் பின்னால வா சாமி என்னுகிட்டு
நான் போக..
ய்யயாஆ அங்கிட்டு இங்கிட்டு வயசுபுள்ளயளப்
பாத்துகிட்டுவுழுத்திராம பாத்து வை கால
என்னு சொல்ல...
திரும்பி பாத்தா என் மவராசனக் காணல்ல...
அம்புட்தென் தெரியும்...என் ஒப்பாரி சத்ததில
ஏரீபிளேன் போயிடிச்சி.....
என் ராசாவ தொலச்சிபுட்டன்
கேக்க நாதி இல்லாம பொலபிகிட்டு திரிகிறன்
ஐய்யா ..வசந்து அப்பு, ராசா என் வூட்டுகாரர
கண்டு புடிச்சு எங்கிட்ட ஒப்படச்சுரு உனக்கு
ஒரு நல்ல பொண்ணு கண்ணாணம் கட்டிக்க
கிடைப்பா!!

Thenammai Lakshmanan said...

பேச்சு வழக்குல நெம்ப அருமையான கதை வசந்த்

Anonymous said...

வார்த்தை நடையில் புலம்பல்கள் எதார்த்தம்...சில வலியை உணரச் செய்கிறது.. நல்லாயிருக்கு வசந்த்...

Unknown said...

நல்லா இருக்குங்க...

tt said...

எப்படி இந்தக் கிராமத்து நடை??... நல்லாயிருக்கு வசந்த் !

பித்தனின் வாக்கு said...

அழகான நடையில் சொல்லியுள்ளீர்கள். மிக்க அருமை. நன்றி.

ஜெயா said...

அழகான கிராமத்துக் கதை... கணவன் மீது பாசம் கொண்டபெண் அவனது இழப்பினை தாங்க முடியாமல் புலம்புவதை அழகாக எடுத்து சொல்லியுள்ளீர்கள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

பேச்சுத் தமிழ் அழகா இருக்கு நண்பா

தாராபுரத்தான் said...

நல்லா வேப்ப மர நிழல் போல எலுத்து நடை குளு குளூ ன்னு.

Unknown said...

பேச்சு வழக்கு அருமையா இருக்குதுங்க வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

சரிங்க நவாஸ் நன்றி

சங்கர் ம்ம் நன்றி

பாரா சந்தோஷம்ண்ணா நன்றி

பாலாசி நன்றி

சிங்ககுட்டி நன்றி

அசோக் அண்ணா நன்றி

திவ்யா நன்றிங்க (இன்னும் கொஞ்ச நாளைக்கு அந்த போட்டோ இருக்கட்டும் ப்ளீஸ் எனக்கே ஒரே போட்டோ பாத்து பாத்து போரடிச்சுடுச்சு ஆமா)

அன்புமணி ரொம்ப மகிழ்ச்சிங்க

சத்ரியன் அண்ணா அப்டியா சரி

தமிழுதயம் நன்றிங்க

அருணாமேடம் நன்றி

சுபா நன்றி

கட்டபொம்மன் நன்றிங்க சார்

ஃபாயிசா நன்றிங்க

ஸாதிகா நன்றி

தேவாசார் சரிங்கசார்

அக்பர் நன்றிங்க

மேனகா மேடம் நன்றிங்க

சரவணகுமார் நன்றி தல

மாதேவி நன்றிங்க

வாசு நன்றிப்பா

ஸ்ரீராம் நன்றி

துபாய் ராஜா நன்றி

விசா சார் அப்டியெல்லாம் இல்லை சார் பயம் மட்டுமே காரணம்...

ராதாகிருஷ்ணன் நன்றி சார்

சுசிக்கா எழுதுறேன் அடிக்கடி

யாதவன் நன்றிங்க

மாப்ள சீமான் அப்டியா? நன்றிடா

அகிலா சரிங்க

நசர் நன்றிங்க

ஹேமா ஆமா எங்கூர் பாஷைதான் வாழ்த்துக்கு நன்றி

சித்ரா நன்றிங்க

கலா பாட்டீய் ஜூப்பரா பேசுறீங்க எப்பிடி?

தேனம்மா நன்றி

தமிழு நன்றி

பேநாமூடி நன்றிங்க

தமிழ் ஏனுங்க மேடம் அவ் நான் கிராமத்தானுங்க அதேன் இப்பிடி எழுதுனேனுங்க...

சுதாகர் நன்றி

ஜெயாமேடம் மிக்க சந்தோஷம்

கார்த்தி நன்றிப்பா

தாராபுரத்தான் நன்றிங்க

கணேஷ் நன்றிடா...

ராமலக்ஷ்மி said...

வட்டார வழக்கில் மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வசந்த். வாழ்த்துக்கள்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கண்ணு கலங்கிடுச்சு.. நல்லதங்கா கதையோட ரொம்ப உருக்கமான கதை..