April 6, 2010

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே...


முக்கிய குறிப்பு : இங்கு நான் எந்த மதத்தையோ அல்லது இனத்தையோ கொச்சைபடுத்த முயற்சிக்கவில்லை ...


புரோகிதர்களுக்கு மட்டும் எழுதிக்கொள்வது (அவர்கள் சார்ந்த சமுதாயத்திற்க்கு அல்ல)

காலம் காலமாக திருமணத்திற்க்கு புரோகிதர்களை வைத்து திருமணம் செய்வது நமது தமிழ் கலாச்சாரத்தில் ஊறிப்போய் இருக்கிறது.திருமணம் மட்டுமின்றி ஏனைய சடங்குகள் அனைத்திற்க்கும் புரோகிதர்களை வைத்து மந்திரம் ஓதி சடங்குகள் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது...

எத்தனை பேர் அந்த மந்திரங்களை அர்த்தம் புரிந்து சொல்லியிருக்கிறோம் என்று தெரியவில்லை.ஒருவேளை அந்த மந்திரங்கள் புரிந்தவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்களாக இருக்கலாம்...ஆனால் சமஸ்கிருதமே என்னவென்று தெரியாத பாமர மக்கள் வீட்டு சடங்குகளிலும் இன்னும் இந்த சமஸ்கிருத மந்திரங்கள் சொல்வது ஏன்?

தமிழ் நாட்டில் தமிழர்கள் ஆளும் தமிழர்கள் வாழும் ஊரில் இன்னமும் சமஸ்கிருதத்திலயே மந்திரங்கள் ஓதப்படுவது ஏன் ஓய்?

இது மாற்றாததற்க்கு காரணம் இன்னும் தானே உசத்தியென்றும் தாங்கள் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்ற ஆணவமா? இல்லை மரபாக வந்ததை மாற்ற இயலாது என்று சாக்கு போக்கா? என்ன என்னவோ கண்டுபிடிச்சாச்சு இந்த விஞ்ஞான உலகத்தில் இந்த சமஸ்கிருதத்திற்க்கு தமிழ் அர்த்தம் கண்டு பிடிக்காமலா இருந்திருப்பார்கள்?

கண்டுபிடிச்சுருக்கான்யா தமிழன் நான் படிச்சதை சொல்றேன் கேளுங்க...



சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ

இந்த மந்திரத்தை திருமணம் நடத்திவைக்கிற புரோகிதர் மணப்பெண்ணை நோக்கி சொல்றார்.இதுக்கு அர்த்தம் சொன்னா இந்த மந்திரங்கள் சொல்லி திருமணம் முடிந்த மணப்பெண்களுக்கு வருத்தமாய்த்தான் இருக்கும் சொல்லித்தான் ஆகவேண்டியிருக்கிறது இந்த மணப்பெண் முதலில் சந்திரன் எனும் சோமனுக்கு மனைவியாய் இருந்தாள் இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாய் இருந்தாள் மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாய் இருந்தாள் நான்காவதாக இந்த பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணமகனுக்கு மனைவியாகப்போகிறாய்...

கேட்டீங்களாப்பா என்னதான் அவங்க எல்லாரும் கடவுள்களாக இருந்தாலும் மூன்றுபேருக்கு மனைவியாய் இருந்த ஒருவளை எப்படி ஒரு தன்மானம் உடைய மணமகன் திருமணம் முடிப்பது ? பிறந்ததிலருந்து பொத்தி பொத்தி பாதுகாத்து வளர்த்து எந்த களங்கமும் இல்லாத தன்னோட பொண்ணை ஒருத்தனுக்கு திருமணம் நடத்திவைக்கும் பெற்றோர்களுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் கொதித்து போய்விடமாட்டார்களா ஓய்? இதைவிட இவ்வளவு வருடங்கழித்து எந்த ஆடவரின் இச்சைக்கும் அடிபணியாத முதல் முதலாக ஒரு ஆடவனுக்கு மனைவியாகப்போகிறவளுக்கு இதன் அர்த்தம் தெரிந்தால் அவ்வளவுதான் எரிந்து கொண்டிருக்கும் அதே அக்னியில் அந்த புரோகிதனை பொசுக்கிவிடமாட்டாளா?


இதுக்கு பதிலாக

இன்னார் மகளாய் பிறந்த இன்ன பெயருடைய நீ இன்னாருக்கு பிறந்த இன்ன பெயருடைய ஒருத்தருக்கு மனைவியாகப்போகிறாய் என்று கூறினால் போதாதா ஓய்?

நோக்கு எப்டி தெரியுன்றவாளுக்கு சொல்றேன் கேளுங்க...

விளக்க?உரை பெயர் : விவாஹ மந்த்ராத்த போதினி

எழுதியவர் : கீழாத்தூர் ஸ்ரீநிவாச ஆச்சாரியார் (பெயருக்கு பின்னால் சாதி பெயர் போடுறவங்களுக்கு முதலில் கருட புராண தண்டணை கொடுக்கணும் ஓய்)

பக்கம் : 22....

இதைவிட கொடுமை

தாய் தகப்பனுக்கு திவசம் கொடுக்கப்படும்பொழுது சொல்லப்படும் மந்திரம்...

தகப்பனுக்குதிவசம் கொடுக்கும்பொழுது சொல்ற மந்திரம்

யன்மே மாதா பிரலுலோப சரதி அனனு விருதா
தன்மே ரேதஹ பிதா விருங்க்தா ஆபுரண் யோப
பத்யதாம் ரங்கராஜ சர்மணே ஸ்வாஹா
ரங்கராஜ சர்மணே அஸ்மது பித்ரே இதம் நமம
கிருஸ்ண கிருஸ்ண கிருஸ்ண…

இதுக்கு அர்த்தம்

என்னோட அம்மா பத்தினியா இல்லாமல் வேறொருத்தருக்கு என்னை பெற்றிருந்தால் இந்த திவசத்திற்க்கு உரிமை கோரி உண்மையான என்னுடைய தகப்பன் வருவார் அப்படியில்லையென்றால் என்னுடைய அம்மாவின் கணவர் இந்த திவசத்தை பெற்றுக்கொள்ளட்டும்.. என்ன கரும மந்திரம்டா இது அப்பன் பேர் தெரியாதவன்னு அசிங்கப்படுத்துற மாதிரியில்ல இருக்கு...

இதுக்கு பதிலா அப்பா நான் இதுவரைக்கும் உன்னை இகழ்ந்து பேசியிருந்தாலோ இல்லை உனக்கு அவமானம் தரக்கூடிய வகையில் நடந்திருந்தாலோ அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாகன்னு சொன்னா போதுமே ஓய்...


அம்மாவுக்கு கொடுக்கிற திவசத்தில் சொல்ற மந்திரம் இது

என்மே மாதா ப்ரவது லோபசரதி
அன்னவ் வ்ரதோ தன்மே ரேதஹ
பிதா வ்ருந்த்ததாம் ஆபுரண்யஹா
அவபத்ய நாம….

என்னுடைய அம்மா என்னை யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை ஒரு நம்பிக்கையில் தான் அவளை என்னுடைய தகப்பனின் மனைவியாக கருதுகிறேன் அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும் மானங்கெட்ட மந்திரம்டா இது சொல்றதுக்கே வாய் கூசுது...

இதுக்கு பதிலா அம்மா என்னை பத்து மாசம் சுமந்து பெற்றதற்க்கு ஈடு இணையாக நான் எதுவும் செய்யவில்லை அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாக இப்படி சொன்னால் போதாதா ஓய்...

நானும் இந்துமதத்தை சேர்ந்தவன்தான் இல்லையென்று சொல்லவில்லை அதற்க்காக இப்படி அபத்தமான மந்திரங்களை சொல்ல தன்மானம் இடங்கொடுக்கவில்லை முற்றிலும் சமஸ்கிருத மந்திரம் ஓதுவதை தவிருங்கள் ஓய்..இல்லை இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வைத்திருப்பீர்களானால் அதையே தமிழ் படுத்தி கூறுவதில் என்ன நஷ்டம் வந்துவிடப்ப்போகிறது உங்களுக்கு? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த சமஸ்கிருதத்தையே பிடிச்சு தொங்கிண்டு இருப்பேள் ஓய் ஒழுக்கமாக மரியாதையாக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை போலவே சடங்குகள் சம்பிரதாயத்திற்க்கும் தமிழில் மந்திரம் ஓதவும்... இல்லையேல் தமிழ் நாட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலை வெகு தூரம் இல்லை...நீங்கள் இல்லாமலே திருமணங்கள் நடக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் ஓய்....உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்க்காக மற்றவர்கள் மீதும் அதை திணிக்காதீர்கள்...

மாறுங்கள் இல்லை மாற்றப்படுவீர்கள் புரோகிதர்களே...



64 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு...நான்தான் பஸ்ட்டு...

சொல்லச் சொல்ல said...

இதோ! இதோ! வந்துட்டோம் அடுத்த வேட்டு ப்ரோகிதர்களுக்குத்தான்.

தேவாரம், திருவாசகம் பாடியே நடைபெற்ற திருமணத்திற்கு அண்மையில் சென்றிருந்தோம். அங்குதான் சமஸ்க்ரிதத்தின் அர்த்தங்களை கேள்விப்பட்டோம். இப்படி இருக்கிறதே என்ற பழி மட்டும் இல்லாமல் அதன் மாற்று கருத்துக்கள் ஒவ்வொன்றுக்கும் கூறியிருக்கும் உங்கள் திறம் பாராட்டுக்குரியது.

சீமான்கனி said...

//ஓய் ஒழுக்கமாக மரியாதையாக கோவிலில் தமிழில் அர்ச்சனை செய்வதை போலவே சடங்குகள் சம்பிரதாயத்திற்க்கும் தமிழில் மந்திரம் ஓதவும்... இல்லையேல் தமிழ் நாட்டை விட்டே ஒதுக்கி வைக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலை வெகு தூரம் இல்லை...நீங்கள் இல்லாமலே திருமணங்கள் நடக்கும் சூழ்நிலைகள் உருவாகலாம் ஓய்....//

வழிமொழிகிறேன்....
ஸ்வாகா...ஸ்வாகா...ஸ்வாகா...ஸ்வாகா...

சைவகொத்துப்பரோட்டா said...

ஆத்தாடி!!! இப்படியான அர்த்தங்கள்
இருக்குமானால், தயவு செய்து இந்த
மாதிரியான மந்திரங்களை(??)
சொல்லாதீங்க ஐயா.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹி.., ஹி..,

Unknown said...

நாந்தான் பஸ்ட்டா

ttpian said...

saavilkuuta kaasu paarkkum kapothikal

subra said...

எங்கே அய்யா இந்த ஜென்மங்கள் திருந்துது ,தந்தை
பெரியார் சொல்லதவைகளா,இன்னும் மாற மாட்டேன்
என்று அடம் பிடிக்கிறார்களே அய்யா

Philosophy Prabhakaran said...

மாற வேண்டியது அவங்க இல்லை... அவுங்க வந்து புரோகிதம் பண்ணாதான் திருமணம் செழிக்கும்னு நினைக்கிறாங்களே அந்த அறியாமைக்கூட்டம் தான்...

பனித்துளி சங்கர் said...

//////////இதுக்கு பதிலா அப்பா நான் இதுவரைக்கும் உன்னை இகழ்ந்து பேசியிருந்தாலோ இல்லை உனக்கு அவமானம் தரக்கூடிய வகையில் நடந்திருந்தாலோ அதற்க்காக என்னை மன்னித்து இந்த திவசத்தை ஏற்றுக்கொள்வாயாகன்னு சொன்னா போதுமே ஓய்.../////////


சரியா சொன்னீங்க போங்க .

Prathap Kumar S. said...

என்ன ஓய்... அபச்சாரம் அபச்சாரம்... இப்படியெல்லாம் பேசப்படாதாக்கும்....
உனக்கு கல்யாணம் ஆகாமல் போக ப்ராப்தி ரஸ்து...

S Maharajan said...

philosophy prabhakaran//மாற வேண்டியது அவங்க இல்லை... அவுங்க வந்து புரோகிதம் பண்ணாதான் திருமணம் செழிக்கும்னு நினைக்கிறாங்களே அந்த அறியாமைக்கூட்டம் தான்//

இதே தான் என் கருத்தும்

Anonymous said...

தெரியாத மந்திரத்திற்கு புரிந்தது இன்று பொருள்.... நல்ல பதிவு வசந்த்.....

Anonymous said...

வசந்த்,

செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லையே. என் திருமணமும் என் சகோதரன் திருமணமும் திருமுறைகள் தமிழில் ஓதித்தான் நடந்தது. புரோகிதரை அழைக்கவே இல்லை.

நாம்தான் வேண்டும் என்று தேடிப் போகிறோம். அவர்களைத் திட்டுவதை விட்டுவிட்டு நாம் திருந்தலாமே.

Unknown said...

என்ன கருமம் ஐய்யா இந்த மந்திரங்கள்.
எல்லோரையும் அவாளை போல நெனச்சுட்டா போலும்.

குடுகுடுப்பை said...

நல்ல கேள்விகள், இவைகள் தவறு என்று பகிரங்கமாக ஒத்துக்கொண்டு மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

வால்பையன் said...

சமஸ்கிருதம் என்ற மொழியை சொல்லி குத்தமில்லை, அது அவ்வாறு பயன்படுத்தும் பார்பானுங்களை சொல்லனும்! எவ்வளவு பட்டாலும் நம்ம ஆளுங்களுக்கும் புத்தி வராதே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

சரியா சொன்னீங்க

ஜீவன்பென்னி said...

அவங்க மாற மாட்டாங்க.
அத நம்புறவங்க மாறினா, அவங்களும் மாறித்தான் ஆகனும்.

puduvaisiva said...

பெரியவாள்: அப்பு வலைபதிவுள நம்ப புரோகிதர்களை பத்தி தப்பு தப்ப வசந்த் எழுதி இருக்கா ஓய் உடனே சுமோவை எடு. ஈயத்தை காச்சி அவர் காதுலு உத்தனும் அப்பதான் இந்த மனுதர்மம் வாழும் வா போகலம்.

அப்பு: சாமி கையில இருக்கிர குச்சியை வச்சுட்டுவாங்க வண்டியில போகும் போது கஷ்டமாஇருக்கும்.

பெரியவாள்: அடே அபிஸ்ட்டு இதான் இந்து மதத்தை தூக்கி நிறுத்தும் நெம்பு குச்சி.

Deepan Mahendran said...

நச்-ன்னு ஒரு பதிவு மச்சான்...!!!

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அற்புதம். பாப்பான்கள் இந்த விசயத்தில் மட்டுமல்ல ஏகப்பட்ட விசயத்தில் மாற வேண்டியிருக்கிறது.

கடவுளுக்கும் மேலே தாங்கள் என நம்பிக்கொண்டிருக்கும் அவர்களுக்கு நாம் சொல்வது கேட்கப்போவதில்லை.

வர்ணம் குறும்படத்தை யூ டியூபில் பாருங்கள். லிங்கிற்கு http://sagotharan.wordpress.com/.

விக்னேஷ்வரி said...

நல்லதொரு விஷயம் சொல்லிருக்கீங்க வசந்த்.

Anonymous said...

அர்த்தம் புரியாம இந்தக்கூத்தெல்லாம் நடக்குது. நாமும் கண்ணை மூடிட்டு பண்றோம்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

சூடு, சொரணை, மானம், வெட்கம்,..... ம்ஹூம் .....
தேவையானப் பதிவு வசந்த். வாழ்த்துக்கள்!

Ashok D said...

Well said Vasanth :)


no tamil fonts

DREAMER said...

இன்னிக்கி தேதிக்கு சாமியைக் கும்பிடும்போது, கண்ணைமூடிக்கிட்டு கும்பிட முடியல..! அந்த Gapல கருவறைக்குள்ள என்னென்னமோ(!?) பண்ணிடுறாங்க..! இனியாவது கண்மூடித்தனமா இல்லாம இருப்போம். நல்லதொரு 'நச்' பதிவு நண்பரே..!

-
DREAMER

தமிழ் நாடன் said...

மிகச்சரியான கருத்துக்கள்! அவர்கள் மாறுவதை விட நாம்தான் முதலில் மாற வேண்டும்.

ராஜரத்தினம் said...

இந்த மந்திரத்தில் என்ன தவறு இருக்கிறது. நான் பாப்பானல்ல. எதிர்மறையான விஷயத்தை முதலில் சொல்லி அப்படி இல்லையென்றால் இது நடக்கும்னு சொல்றது எந்த தப்பும் இல்லையே. இந்த உலகத்தில் எந்த பெண்ணும் பிறப்பில் இருந்து இறக்கும் வரை தகப்பனும், கணவனும் தவிர சும்மாவாச்சும் மற்ற யாரும் தொடாத, கை படாதவர்கள் யாரும் இல்லை.

Anonymous said...

உங்கள் பதிவை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.அதற்கான முழு விளக்கத்தையும் ஒரு பதிவிடுகிறேன்.என் வலைப்பதில் பாருங்கள் அல்லது உங்கள் மெயில் ஐடி தந்தால் உங்களுக்கு மெயில் செய்கிறேன்.நிற்க.
ttpin என்ற பெயரைதாங்கியவர் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார் "சாவிற்கு கூட காசு வாங்கும் கபோதிகள்" என்று.நான் கேட்கிறேன் அவனை"டேய் கபோதி சாவிற்கு புரோகிதர் மட்டும் தான் காசு வாங்குகிறானா?
"ஒருவருக்கு விபத்து ன்னு தனியார் ஆஸ்பிடல் போனா அங்க ஓசுல வைத்தியம் பாப்பானா?சொல்றா கபோதி.அவன் செத்துபோனா ப்ரேத பரிசோதன பன்னி சர்டிபிகேட் கொடுக்கரவன் காசுவாங்க மாட்டானா?சொல்றா கபோதி.அந்த சடலத்தை எடுத்துவரும் வாகனம் காசு வாங்க மாட்டானா?டேய் கபோதி பதில் சொல்.அங்கு சாவு மேளம் அடிப்பவன் காசு வாங்கமாட்டானா?படிக்கிறியா கபோதி.பிணத்தை அடக்கம் செய்பவன் காசு வாங்கமாட்டானா?சென்னை போன்ற பிண எறியூட்டும் இடங்களில் காசு வாங்கமாட்டானா? இறந்தவனுக்கு இன்ஷூரன்ஸ் க்ளைம் செய்ய டெத் சர்டிபிகேட் கேட்டால் அதை கொடுப்பவன் காசு வாங்கமாட்டானா? இப்படி எல்லோரும் காசு வாங்கலாம்.ஆனால் புரோகிதன் செய்த தொழிலுக்கு காசு வாங்கினால் கபோதியா?பாம்பின்கால் பாம்பறியும் அப்ப புரோகிதன் கபோதி என்றால் நீயும் கபோதி தான்

ப்ரியமுடன் வசந்த் said...

திருவாளர் சிவம் அவர்களே அப்படி இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தம் இருப்பின் நீங்கள் இங்கு பின்னூட்டத்திலே தெரிவியுங்கள்...

தனி நபர் தாக்குதல் தேவையில்லாதது புரோகித பெருமானே....

எதிர்பார்க்கிறேன் உங்கள் விளக்கத்தை அதையும் பார்ப்போமே...

ப்ரியமுடன் வசந்த் said...

//ராஜரத்தினம் said...
இந்த மந்திரத்தில் என்ன தவறு இருக்கிறது. நான் பாப்பானல்ல. எதிர்மறையான விஷயத்தை முதலில் சொல்லி அப்படி இல்லையென்றால் இது நடக்கும்னு சொல்றது எந்த தப்பும் இல்லையே. இந்த உலகத்தில் எந்த பெண்ணும் பிறப்பில் இருந்து இறக்கும் வரை தகப்பனும், கணவனும் தவிர சும்மாவாச்சும் மற்ற யாரும் தொடாத, கை படாதவர்கள் யாரும் இல்லை//

அண்ணா அம்மா அக்கா தங்கை எல்லாரும் உங்களுக்கு இருக்காங்களான்னா இல்லை வானத்தில இருந்து குதிச்சு வந்தவரா நீங்க போய் அம்மாகிட்டயும் அக்கா கிட்டயும் இதை சொல்லுங்க விருந்து வச்சு உபசரிப்பாங்க...

எல் கே said...

ப்ரியமுடன் வசந்திற்கு

மந்திரத்துக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். அதற்கென்று இவ்வாறான தவறான அர்த்தங்களை பிரசுரிக்காதீர்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

திருவாளர் எல் கே அவர்களே என்னுடைய ஆதங்கம் இந்த மந்திரங்களுக்கு வேறு அர்த்தங்கள் வைத்திருப்பீர்களானால் அதையே தமிழ் படுத்தி கூறுவதில் என்ன நஷ்டம் வந்துவிடப்ப்போகிறது உங்களுக்கு? இதுதான் உங்களுக்கு அர்த்தம் தெரிந்தால் இங்கு தெரிவிப்பதோடு நின்றுவிடாமல் தமிழில் மந்திரம் ஓதுவதற்க்கு முயற்சி எடுங்கள் .....

ப்ரியமுடன் வசந்த் said...

//வடகரை வேலன் said...
வசந்த்,

செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லையே. என் திருமணமும் என் சகோதரன் திருமணமும் திருமுறைகள் தமிழில் ஓதித்தான் நடந்தது. புரோகிதரை அழைக்கவே இல்லை.

நாம்தான் வேண்டும் என்று தேடிப் போகிறோம். அவர்களைத் திட்டுவதை விட்டுவிட்டு நாம் திருந்தலாமே.//

கண்டிப்பா நாம்தான் சார் திருந்தனும் உங்களுடைய திருமணம் தமிழ் முறைப்படி நடந்ததில் மிக்க மகிழ்ச்சி இது போன்று தமிழ் முறைப்படி திருமணம் நடத்துவதைப்பற்றி எனக்கு தெரிந்திருக்கவில்லை தங்களால் முடிந்தால் எனக்கு அதுபற்றி தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் வேலன்சார்....

ப்ரியமுடன் வசந்த் said...

திரு எல் கே அவர்களே

தங்களால் முடிந்தால் விளக்கம் கூறுங்கள் இல்லையேல் என் ப்லாக் ஐ க்ளோஸ் பண்ணிண்டு போய்ண்டே இருக்கலாம் வீண் விதண்ட வாதங்களோ சாதி பிரச்சனைகள் உருவாக்கவோ நான் இதை எழுத வில்லை தமிழர்கள் திருமணம் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன்..அவ்வளவுதான்....
சமஸ்கிருத முறைப்படி அல்ல....

Anonymous said...

நண்பரே,நான் புரோகிதர் அல்ல.நான் ஆகமம் பயின்றுவிட்டு கோயில் சிறப்பு நிகழ்ச்சியில் மட்டும் பங்கெடுப்பவன்.உங்கள் கேள்விக்கு பதில் ஓரிரு வரியில் கூரமுடியாது.நீண்ட விளக்கம் அளிக்கவேண்டும் அதுவும் பல நூல்களை REFER செய்து.அதற்கு கால அவகாசம் தேவை.நிச்சயமாக பதில் அளிப்பேன்.ஒரு சொல்லுக்கு ஒரு அர்த்தம் மட்டும் இல்லை.ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு உதாரணமாக தமிழில் வேழம் என்றால் யானை என்றும் கரும்பு என்றும் பொருள் ,அதேபோல் சைந்தவம் என்றால் உப்பு என்றும் மீன் என்றும் பொருள் உண்டு.மேலும் சமஸ்கிருத மொழியில் ஒரு பாடலை மந்திரத்தை நேரிடையாக பொருள் கொண்டால் ஒரு அர்த்தம் வரும் சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால் அதற்கு உரிய பொருள் வரும்.எனவே நீங்கள் மேற்கோள் காட்டிய நூலின் நூலாசிரியர் தாம் கருத்து மொழிபெயர்ப்பில் தவறு செய்திருக்கக்கூடும்.ஆனால் அதை நீங்கள் உதாரணமாக்கி ஒரு தொழிலை கொச்சைப்படுத்தாதீர்கள்.தனி மனித தாக்கம் கூடாது என்று ந்யாயம் பேசும் நீங்கள் ஒரு புரோகித சமுதாயத்தை கபோதி என்று சொன்னவரை ஏன் கேட்கவில்லை.இது அவர் பதிலை நீங்கள் ஆதரிப்பதாகவே தோன்றுகிறது.மேலும் ஒரு பாஸ்போர்ட் என்கொயரி என்றால் அதற்கு 500,டெத் சர்டிபிகேட் என்றால் இவ்வளவு என்று AMOUNT FIX செய்து லஞ்சம் வாங்கும் அதிகாரியை விட புரோகிதர் கபோதிகளா?

Menaga Sathia said...

நல்ல கருத்துள்ள பதிவு வசந்த்.நானும் இதன் அர்த்தங்களை இன்றுதான் தெரிந்துக்கொண்டேன்.நாம்தான் மாறவேண்டும்....

கல்வெட்டு said...

.


//பாஸ்போர்ட் என்கொயரி என்றால் அதற்கு 500,டெத் சர்டிபிகேட் என்றால் இவ்வளவு என்று AMOUNT FIX செய்து லஞ்சம் வாங்கும் அதிகாரியை விட புரோகிதர் கபோதிகளா?//

யார் வேண்டுமானலும் அதிகாரியாய் வரலாம். அதுபோல் அதிகாரி சீட்டில் யார் இருந்தாலும் உங்களுக்கு பாஸ்போர்ட் தேவை என்றாலும், எனக்குத் தேவை என்றாலும் இருவரும் அந்த அதிகாரியைப் பார்ப்போம். ஒரே பாஸ்போர்ட் வழங்கள் பிரிவிற்குல் வசிக்கும் பட்சத்தில்.

ஆனால், உங்கள் வீட்டு விசேசத்திற்கு சமீபத்தில் அர்ச்சகர் கல்வி முடித்த வர்ணாசிரமத்தால் தலித் என்று அடையாளம் காட்டப்படும் முனியாண்டியை அழைத்து திருமணம் நடத்துவீர்களா? அல்லது திருப்பதிக்கு அர்ச்சகர் முனியாண்டியை நியமிக்க போராட்டம் செய்வீர்களா?

நான் செய்வேன். உங்களால் முடியுமா?

அரசு வேலையில் வர்ணம் இல்லை. நீங்கள் வர்ணம் சார்ந்த தொழிலை வர்ணம் சாராத தொழிலுடன் ஒப்பிடாதீர்கள்.

வர்ணம் என்ற கோட்பாட்டிற்குள் போற்றிப்பாதுகாக்கப்பட்ட சமஸ்கிரகம் அடுத்தவர் பார்வைக்கு வரும்போது அதன் உண்மை தெரிகிறது.

சமஸ்கிரகத்தி விட்டு விட்டு, வர்ண வேறுபாடுகளை விட்டு விட்டு, நீங்கள் , உங்கள் வீட்டு விசேசத்திற்கு எங்கள் ஊர் முனியாண்டி கோவில் பூசாரியை அழைத்து " கடவுளே இந்தப் பிள்ளைகளைப் பாத்துக்கப்பா" என்று அவர் சொல்லும் எளிய மந்திரத்தை அங்கீகரித்து அவரை உங்களின் குடும்ப ஆஸ்தான புரோகிதராக ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தால் நீங்களும் மனிதர்கள்.

**

Unknown said...

//venkatesa sivam & sivaramamurthy sivam said...//

//சமஸ்கிருத மொழியில் ஒரு பாடலை மந்திரத்தை நேரிடையாக பொருள் கொண்டால் ஒரு அர்த்தம் வரும் சற்று நுணுக்கமாக ஆராய்ந்தால் அதற்கு உரிய பொருள் வரும்.//

என்ன உண்மையான அர்த்தம் என்று நீர் தான் சொல்ல வேணும்.
இப்படி சொல்லியேதான் ஊரை எவ்வளவு காலம் ஏமாற்றப் போகிறீர்.

இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலிலும் இதே அர்த்தம்தான் போட்டுள்ளது. அதை எழுதினவாளும் உம்மவாதானே. வேதத்தையும் சமஸ்கிருதத்தையும் கரைச்சு குடிச்சவாதானே...

அன்புடன் அருணா said...

அச்சோ...இது எனக்குத் தகவல்!நன்றி!

Vijayaraghavan TV a.k.a Vijay TV said...

Apologies for not writing my comment in Tamiz.

This article looks to be targetted more towards a community for uttering in Sanskrit. And, when you refer to the 'acharyar' caste title, why don't you question other community as well (than restricting to purohit community alone) ? It is a pity that people who have left their comment chose to attack the specific community as though they got a chance to write something.

Why Sanskrit and why not in Tamiz? - Because many of the mantras used in the functions trace their origin from the Vedas and Upanishads which are in Sanskrit. The mantras used may not be directly translated into Tamil and there are other nuances in uttering mantras e.g. pitch. So, a direct word to word translation and recitation will not work

If your marriage was performed with Tamiz recitation of mantras, I admire your strong devotion to Tamiz, but have to laugh at the needless publicity stunt.

It would be better if you read books such as 'Enge Brahmanan' (for understanding the brahmin poonul or upanayanam mantras) and 'Hindhu Mahasamudram' by Cho Ramaswamy to understand the significance of mantras, how they originated before writing such sensitive article.

Anonymous said...

கல்வெட்டு :அவர்கள் அதிகாரி லஞ்சம் வாங்குவதை தவறு என்று கூறவில்லை.காரணம் அந்த அதிகாரி எந்த ஜாதியாக வேண்டுமானாலும் இருப்பதால் SO ப்ராமணர் அல்லாத ஒருவர் எது செய்தாலும் அது சரியா? அடுத்து திருப்பதியில் முனியாண்டியை அர்ச்சகராக்க போராடுவீர்களா?என்கிறார்.சார் சில நிதர்சனங்களை யாரும் புரிந்துகொள்ளமாட்டிங்கரிங்க,வேறு ஜாதியை சேர்ந்த அர்ச்சகர் பயிற்ச்சி பெற்றவர்கள் பணிபுரிய நீங்கள் கேட்கும் கோயில் மதுரை,காஞ்சிபுரம்,திருவண்ணாமலை,திருப்பதி,சிதம்பரம்,பழனி, ...இப்படி முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களையே காரணம் அங்குதான் வருமானம்,சம்பளம் இவை ஒழுங்காக வரும் என்று.ஒவ்வொரு வருடமும் முறையாக ஆகமம் பயின்ற பிராமண மாணவர்கள் சுமார் 100பேர் வெளியேவருகின்றனர்.அவர்கள் அனைவரும் இப்படித்தான் முக்கிய ஆலயங்களில் வேலை வேண்டும் என கேட்கின்றனர்களா?அப்படி கேட்டால் என்ன ஆகும்! பின் நீங்கள் மட்டும் ஏன் அவ்வாறு அடம்பிடிக்கின்றீர்கள்?உங்களுக்கு உண்மையாகவே இறைவனுக்கு பூஜை செய்யவேண்டும் என்ற நோக்கம் மட்டும் இருந்தால் இன்று தமிழகத்திலே பல கிராமங்களில் பல ஆண்டுகள் சம்பளமே இல்லாமல் பல அர்ச்சகர்கள் எந்த வசதியும் இல்லாத பல கோயில்களை பூஜை செய்கின்றனர்.அவர்களும் பார்பணர்களே.நீங்கள் அப்படி ப்பட்ட கிராம கோயில்களில் பூஜை செய்ய தயங்குவது ஏன்?இது உங்கள் சுய நலத்தையே காட்டுகிறது.ஜாதி வெறியையே காட்டுகிறது.

ப்ரியமுடன் வசந்த் said...

திரு சிவம்,விஜயராகவன் அவர்களுக்கு...

நானறிந்த வரையில் பல மடங்கள் சார்பில் ஆதரவில் நடத்தப்படும் வேத பாடசாலைகளில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள்.பிற ஜாதியினர் கற்றால் வேதங்களின் 'தூய்மை ' கெட்டுவிடுமா ?.இது குறித்து அப்துல் கலாம் முதல் அரவிந்தன் நீலகண்டன் வரையில் சம்ஸ்கிருதத்தின் உயர்வு குறித்து பேசுபவர்கள் என்ன கருதுகிறார்கள் ?. சமஸ்கிருதம் ஒரு கலாச்சார மேலாண்மையினை நியாயப்படுத்தவே பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய இந்திய சிந்தனை என்றால் வேதங்கள்,உபநிடதங்களிலிருந்து மட்டும் மேற்கோள்கள் காட்டுவதை தமிழர்கள் தவிர்க்க வேண்டும்.மாறாக தமிழிலிருந்தும், அவைதிக மரபுகளிலிருந்தும் மேற்கோள்கள் காட்ட வேண்டும்.

இதுவே என் கருத்து சாதி பிரச்சினை அல்ல அல்ல அல்ல...

thiruchchikkaaran said...

Dear Mr. Vasanth,
Dear Mr. Vasanth,

Hinduism says that the life of human beings are under the Control of Various Girahams like Sani, Kuru.. etc. Many Devas, it says, help the growth of man and women.

I read this manthara before, I remember that proper interpreataion of this Manthra shall be,

சோமஹ ப்ரதமோ - First You were under the care of Soma

விவிதே கந்தர்வோ- Then you were under the care of Kandharvas



விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே- Then you were under the care of Fire (Agni)

பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ- Now you reached you pathi (Husband) .

It never mentioned that- சோமஹ ப்ரதமோ பதி

It never mentioned that - விவிதே கந்தர்வோ பதி

In my opinion its wrong interpretation to consider that these manthras mention that Devas were the Husbands of the Girs.


The Hinduism says that a persons fate, fortune, life ..every thing are decided by planets and other devas. In this context, considering a girl is groomed by many Devas at various stages can be understanadable. That does not to be considered as they were the husbands of that Girl.


So in my opinion , no neeed for the Prohithaas to change the Manthras.

Mr. Vasanth, I appreciate your questioning attitude, you have all liberties.

But you need not be so haste to pass judgement like Naataamai Kattai panchaayath.

Regards

Jawahar said...

அர்த்தமெல்லாம் நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. சமஸ்கிரித மொழிக்கு அர்த்தத்தை மீறின சிறப்புக்கள் உண்டு.

முதலாவது அது ஒரு தெரபி மாதிரி.

வாய்ஸ் கார்ட், மூச்சுக் குழாய் எல்லாத்தயும் நல்ல கண்டிஷன்ல வைக்கும்.

வயதானவர்கள் அடிக்கடி ஹரே ராம் என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம். அப்படிச் சொல்லும் போது தொண்டையில் இருக்கும் சளி கிளியர் ஆகும். இது மாதிரி நிறைய உண்டு.

இன்னொன்று.

அந்த ஒலி அலைகள் அறையில் பரவும் போது ஒரு நல்ல ரிதமும் ஹார்மனியும் பரவும். இதை விளக்க முடியாது.

ஹவுசுக்கும், ஹோமுக்கும் என்ன வித்யாசம் என்று தெரிந்தால் இது புரியும்.

வித்யாசமான கருத்துக்குப் பாராட்டுக்கள்.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நீங்கள் சொல்லியுள்ள மந்திரங்களுக்கு அர்த்தம் தெரியாததால் அதைப் பற்றி ஏதும் சொல்ல விரும்பவில்லை..

ஆனால் - எந்த மொழியில் வாழ்த்தினாலும் வாழ்த்து வாழ்த்து தான் என்பது தான் என் கருத்தும்.. புரிந்தவர்களுக்குப் பிரச்சனையில்லை.. மற்றவர்களுக்கு, புரியாத மொழியில் சொல்லுவதை திருப்பிச் சொல்லுவதை விட, புரியும் மொழியே மேல்.. எங்கள் ஊரில், ஊர் முறைப்படி நடக்கும் திருமணங்களில், தமிழில் தான் வாழ்த்துப் படிப்பார்கள்! ப்ரோகிதர்கள் அழைக்கப்படுவதில்லை! ஆனால் இப்போது எல்லோரும் மாறி வருகிறார்கள் :)))

thiruchchikkaaran said...

இந்து மதம் வட மொழி என்று கூறப் படும் சமஸ்கிருதத்தையோ, அல்லது வேறு எந்த மொழியையோ நம்பி இல்லை. இந்து மதம் உண்மையைத் தன் அடித்தளமாகக் கொண்டுள்ளது.

“உண்மையே வெல்லும்” என்ற உண்மையின் அடிப்படையிலேயே உண்மையைத் தேடும் வழியே இந்து மதம்.

உண்மையை உயிருக்கு புரிய வைப்பதன் மூலம், அந்த உயிரை இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு அழைத்து சென்று, உயிரை அடிமை நிலையில் இருந்து விடுதலை நிலைக்கு உயர்த்துவதே இந்து மதத்தின் நோக்கம்.

தமிழில் இந்து மதத்தின் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன. இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய வகையில் இந்து மதத்தின் உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு!

இந்தியாவைப் பொருத்த அளவில் ஆன்மீகம் என்பது, மனிதனின் அறிவை உயர்த்தி, அவன் உயிரை விடுதலை அடையச் செய்வது என்பதுதான்!
உண்மை - அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்!

“உலகம் உருண்டையானாது” என்று சொன்னாலும், “EARTH IS ROUND” என்று
சொன்னாலும், பொருள் ஒன்றுதான்!

மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர்,

” கதாஸூன், அகதாஸூன், ந அனுசோசந்தி பண்டிதா” -என்று கூறியுள்ளார்.
“சான்றோர் இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ எண்ணிக் கலங்குவதில்லை” என்று பொருள்!

அதையே பட்டினத்தார்
” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்!

“காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக் கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே”.

மேலும் கிருட்டிணர்,

“நத்வே வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்றும்,

“வாசாம்சி ஜீர்ணானி யதா விஹாய

நவானி க்ருஹ்ணாதி நரோபராணி

ததா சரீராணி விஹாய ஜீர்ணான்

யன்யானி ஸ‌ம்யாதி நவாணி தேஹீ ” என்றும்,

கூறியுள்ளதையே பட்டினத்தார்,

“அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?

அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?

பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?

பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?

முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?

மூடனாயடி யேனும றிந்திலேன்,

இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?

என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ”

என்று பாடியுள்ளார்!

எனவே எந்த மொழியில் சொன்னாலும், உண்மை ஒன்றுதான்.

எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே- பின்ன என்னதுக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும் என்று கேட்கலாம். சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளன!

உதாரணமாக, “எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மின்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்யவரான் நிபோதித” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. “ஜாக்கிரத” என்ற வார்த்தையால் உணரப்படும் ஜாக்கிரதை, “விழிமின்” “என்ற வார்த்தையால் உணரப்படுமா- என்பது சந்தேகம்!”ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து நிற்கின்றனர்!

எனவே பிற மொழியில் சிறிது புலமை பெறுவது தவறு இல்லை.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்”

இதை மூல மொழியான தமிழ் மொழியில் பயிலும் போது கிடைக்கும் “திண்ணியம்” மொழி பெயர்ப்பில் கிடைக்காது என்பது அறிந்ததே.

ஆனால் யாரையும் வட மொழி பயிலச் சொல்லி கட்டாயப் படுத்தவில்லை. கட்டாயப் படுத்துவது என்பது இந்து மதத்தில் இல்லை. வடமொழி அறியாமலேயே இந்து மதத்தைப் நன்கு புரிந்து கொள்ளவும், சிறப்பாக பின்பற்றவும் முடியும்

K.MURALI said...

///கல்வெட்டு said...


அரசு வேலையில் வர்ணம் இல்லை. நீங்கள் வர்ணம் சார்ந்த தொழிலை வர்ணம் சாராத தொழிலுடன் ஒப்பிடாதீர்கள்.////

அப்படியா!
அப்படி என்றால் இட ஒதிக்கீடு???

உண்மையிலேய ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் பொருளாதார அடிப்படையில் இட ஒதிக்கீடு செய்ய வேண்டும்.

Unknown said...

வசந்த், இந்த மந்திரங்களின் அர்த்தங்களை எத்தனையோ பேர் சொல்லியும் இன்னமும் மக்கள் மாறவில்லை. தமிழ் மந்திரம் சொல்லி திருமணம் நடத்தி வைக்க இப்பொழுது நிறைய பேர் இருக்கிறார்கள். உங்கள் பகுதியில் விசாரித்தால் தெரியவரும். என் திருமணம் பெரியவர்கள் ஆசிர்வாதத்தோடு மட்டும் தான் நடந்தது. எந்த மந்திரமும் ஓதவில்லை (தமிழ் மந்திரம் உட்பட). திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிவிட்டன, மகிழ்ச்சியாக இருப்பதாகவே நம்புகிறோம் :-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நல்ல கருத்துக்கள்

தமிழ் மலர் said...

நாத்திகனாக இரு அல்லது கடவுளை முழுவதும் நம்பு.
இரண்டுக்கும் இடையில் இருக்காதே.
இரண்டு கெட்டனாய் உலகம் என்ன என்று கூறும் உனக்கும் தெரியும்.
இரண்டில் ஒரு முடிவு கடவுள் இருக்கிறார் அல்லது கடவுள் இல்லை .

கடவள் இல்லை என்று முடிவு எடுத்தவர்கள் வாழ்க அவர்கள் அப்படியே இருக்கட்டும்.நம் உலகில் வாழும் பெரும்பாலும் மக்கள் இரண்டும் கெட்டனாய் வாழ்வதை விட நாத்திகனாக வாழ்வது மேல்.

கடவுள் இருக்கிறார் என்று முடிவு எடுத்தவர்கள் .
கடவுள் எப்படி இருப்பார் எப்படி இருதால் அவர் கடவுள் .
கடவுள் ஜாதி படைத்தது இருப்பானா ?
கடவுள் ஒரு சிலரை கோயில் உள்ள வர கூடாது என்று கூறுவானா ?
கடவுள் எனக்கு அது பண்ணு இது பண்ணு என்று கூறுவானா
மெழுகுவர்த்தி வைப்பது தேர் இழுப்பது நேர்த்தி கடன் உடலை வருத்துவது உண்ணாமல் இருப்பது இதை எல்லாம் கடவுள் விரும்புவாரா.
இது எல்லாம் சிலர் தங்கள் நன்மைக்காகக் கடவுள் பெயரை கூறி ஏமாற்றுகின்றனர்.
கடவுள் சொல்லாததை சிலர் தங்கள் பிழைப்புக்காக சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.
கடவுள் பெயரை கூறி ஏமாற்றுவார்கள் மிக கொடூரமானவர்கள்.
அவர்கள் கடவுளை கேவல படுதுகிரறாக்கள்,
அவர்களை வணக்கி பூஜித்து நீ நரகத்திற்கு செல்ல போகிறாயா உன் குழந்தை இதை பழக்கி
நரகத்திற்கு அழைத்து செல்ல போகிறாயா.
(tamilmalar1977.blogspot.com)

தமிழ் மலர் said...

கடவுளுக்கு பணம் கொடுக்கும் அளவுக்கு நீ என்ன கடுவுளை விட பெரிய பணக்காரனா?
கடவுள் என்ன உன்னிடம் வேலை செய்கிறாரா?
நீ வேலை பார்க்கும் நிறுவனம் முதாலாளிகே நீ ஒரு பத்து ரூபா இனமா கொடுத்த அது மாதிரி தான் கடவுள் கொடுப்பது
நீ கொடுக்கும் கையுட்டம் (லச்சம் )வாங்க அவர் என்ன கேவலமானவரா?
கடவுளுக்கு நம்மால் ஒன்றும் கொடுக்க முடியாது .
கடவுள் தேவை என்றால் எதை எபோழுது வேண்டும் என்றாலும் எடுத்து கொள்வார் தேவை பட்டாள் உயிர் கூட எடுத்து விடுவார்.
நீ என்னத்தை கொடுத்து கடுவுள் திருப்தி படுத்துவாய்.
கோடிகணக்கான சூரியனையும் கோள்களையும் விண்மீனையும் கோடி கோடி தங்கம் மற்றும் இன்னும் பல அவர் இடம் உண்டு .
நீ கொடுப்பது எதுவும் கடுவுள் மகிழ்ச்சி தராது .
நீ நீதியாய் வாழ்த்து நீதிக்கு போராடுவது தான் கடவுளை சிறு மகிழ்ச்சியை ஆக்க முடியும்.

ஒன்றை மனதில் வைத்து கொள் கொடுப்பது உனக்கு மகிழ்ச்சி என்றால் கொடு .உன்னை மகிழ்விக்க தான் கொடுக்க படுகிறது கடவுளை மகிழ்விக்க அல்ல என்பதை நினைத்து கோவிலுக்கு பணம் கொடு.
நம்மை மகிழ்விக்க சில வேலை செய்வதால்
பஜனை பாடுவது, அமைதியாக உட்கார இடம் கொடுப்பது, சில நிகழ்ச்சி நடத்துவது , நம்மை மகிழ்விக்க சில அலங்காரம் செய்வது, கோவில் கட்ட, பராமரிப்பு பனி ,விழா எடுப்பது, குடை விழா ,ஆரதனை நடத்த ,
இரதவர்களை புதைக்க இடம் வாங்க. இந்த மாதிரி நம் தேவைக்காக பணம் கொடுக்கலாம். உன்னிடம் இருதால்.
இது கொடுப்பது கடவுளுக்கு கொடுப்பது அல்ல என்பதை மனதில் வைக்கவும் .ரசிது வாங்கவும்.எப்படி செலவு பண்ண படுகிறது என்பதை கண்காணிக்கவும் .
கிடா வெட்டுவது உனக்கு மகிழ்ச்சி என்றால் பண்ணு.
உனக்கு பணம் கஷ்டம் என்றால் பண்ண தேவை இல்லை.
இது எல்லாம் கடவுளுக்கு மகிழ்விக்க பண்ணுவது இல்லை உன் மகிழ்ச்சி தான் பண்ணுவதால் கடன் பட்டு உன் மகிழ்ச்சி கெடுகிறது என்றால் பண்ணாதே
(tamilmalar1977.blogspot.com)

தமிழ் மலர் said...

கடவுள் அவதாரம் என்று குருபவரை நம்பாதே
நீ என்ன கடவுள் அவதாரம் இல்லையா உன் அப்பா அம்மா அவளவு கேவலமானவர்களா .
அனைவரும் சமம் .
உன் தாய் இடம் நீ நேராக பேச தாய் விருபுவலா அல்லது சில தரகர் மூலம் பேசுவதை விரும்புவாளா .உனுக்கு எந்த மொழி தாய் மொழி அது தான் உன் தாய்கும் தாய் மொழி.
கடவுளடன் பேச தரகர் எதற்கு? உன் தாய் மொழி கடவுளடன் பேசு .அவர் மகா சத்தி உடயவர். குறிபிட்ட இடத்தில மட்டும் இல்லை எங்கு இருக்கிறார் அவர் படைத்தது தான் எல்லாம் .யார இடம் பொய் அர்ச்சனை பண்ணுவது மந்திரிப்பது ஜெபம் பனுவது தேவை யற்றது உன் தேவை நீயே கடவுளடன் கேள்
நட்சத்தரம் சூரியன் சந்திரன் கடல் காற்று அண்டவெளி மனிதனின் கற்பனைக்கு எட்டாத அண்டவெளி.
உலகிதில் உள்ள அதிசயம் எல்லாம் ஒரு மணி நேரம் கண்ணை முடி விட்டு சிந்தி அனைத்தையும் படைத்த கடவுள் சில மனிதனை கேவலமாக படைத்தது இருப்பானா கடவுள் அவ்வளவு கொடியவனா . எல்லா மனிதனும் சமம் அப்படி தான் கடவுள் படைதான் .யாரையும் உயர்வாய் படைக்க வில்லை.

நாள்களை படைத்தது யார் ?
கடவுள் அவரே நாள்களை படித்து விட்டு அதை கெடுத்து கெட்ட நாள் எமகண்டம் ராகு குளிகை என்று ஆக்குவார .எந்த அறிவு உள்ள மனிதன் குட இப்படி செய்ய மாட்டன்.கிறுக்கன் தான் அப்படி பனுவான் .கடவுள் நாளை கெடுத்து இருபாரா .கடவுள் படைத்த நாளை கெடுக்க கடுவுள் மெல் சதி உள்ளவன் யார் .
கடவுளை கேவல படுத்த கெட்ட நாள் ராகு என்று கூறுகின்றனர் .
கடவுளுக்கு விரோதமானவன் தான் ராகு எமகனடம் கெட்ட நாள் என்று கூறுவான் .அந்த கடவுள் விரோதி கூறுவதை நம்பாதே .
நீயாம் மாக வாழ்வது தான் கடவுள் விரும்புவது .நியமாய் நேர்மை அநிதி எதுர்த்து சிரத்த மக்களாய் வாழ்வோம் .
நன்றி வணக்கம்.
சாமியை நம்பு அல்லது நாத்திகனை இரு சாமியறை நம்பாதே .

(tamilmalar1977.blogspot.com)

Prasanna said...

உங்கள் கருத்து முழுமையாக ஏற்புடையது தான்..
நன்றி வசந்த்!

Unknown said...

மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தின் பொருளையும் போடுங்கள் வசந்த்..

ஆமாம் இந்த புரோகிதர்கள் இந்த மந்திரத்தை பிராமணரல்லாதோருக்கு மட்டும்தான் ஓதுகின்றனரா? இல்லை சமஸ்கிருதம் தெரிந்த பிராமணர்களும் இதன் அர்த்தம் தெரிந்தே வெட்கம் கெட்டு இந்த மந்திரங்களை ஓதுகின்றனரா?

Rajan said...

அடங்கொக்கா மக்கா ! இத நான் எப்பிடி மிஸ் பண்ணினேன் ! ரொம்ப லேட்டா வந்துட்டேன் ....

Rajan said...

//இந்த மணப்பெண் முதலில் சந்திரன் எனும் சோமனுக்கு மனைவியாய் இருந்தாள் இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாய் இருந்தாள் மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாய் இருந்தாள் நான்காவதாக இந்த பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் மணமகனுக்கு மனைவியாகப்போகிறாய்...//


வேலக் காரனோட முடிச்சுக்கலாம்னு தோட்டத்துபக்கமா ஒதுங்குனா தோட்டக் காரனும் பாத்துட்டான் ! கண்டமனூர் காரரு கண்டம் பண்ணின கதையா இருக்கு

Rajan said...

//என்னுடைய அம்மா என்னை யாருக்கு பெற்றாளோ தெரியவில்லை ஒரு நம்பிக்கையில் தான் அவளை என்னுடைய தகப்பனின் மனைவியாக கருதுகிறேன் அந்த அம்மாவிற்க்கு இந்த திவசம் போய் சேரட்டும்//


பின் நவீனத்துவ மந்திரங்களா இருக்குமோ !

Rajan said...

//திவசத்திற்க்கு உரிமை கோரி உண்மையான என்னுடைய தகப்பன் வருவார் அப்படியில்லையென்றால் என்னுடைய அம்மாவின் கணவர் இந்த திவசத்தை பெற்றுக்கொள்ளட்டும்..//


அந்த எச்சிக்கல நாய்கதான் எல்லா காய்கறியையும் தவசம் முடிஞ்சா ஒடனே தூக்கிட்டு போயிடுதுங்களே

பின்னோக்கி said...

முதல் மந்திரத்தின் விளக்கம் பயமாகவே இருக்கிறது. நல்லவேளை சமஸ்கிரதமாகவே இருக்கட்டுமே :)

TGP said...

விஜயராகவன், திருச்சி போன்றோருக்கு நன்றி.

மொழியில் பற்று இருக்கலாம் ஆனால் வெறி இருக்கக் கூடாது. பிற மொழிகளை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை மொழி வெறியினால்தான் வருகிறது. எழுச்சி என்ற பெயரில் எழுத்துத் திறமையுடன் நீங்கள் எழுதும் பதிவுகள் சிறப்பான போக்கில் இருந்தாலும் எதையும் எழுதமுன் ஆய்ந்து எழுதல் நன்று.அதிலும் எதையும் குறை கூற முதல் அது குறித்து போதிய அறிவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.

சமஸ்கிருதத்தில் உள்ள காயத்திரி மந்திரத்தை எப்போதாவது நீங்கள் உணர்வுபூர்வமாகச் சொல்லிப் பார்த்ததுண்டா? அதையே தமிழ் மொழிபெயர்ப்பிலும் ஓதியிருக்கிறீர்களா? அப்படிச் செய்திருந்தால் உங்களுக்கு வித்தியாசம் தெரிந்திருக்கும். சமஸ்கிருதத்தில் சொல்லும்போது (பொருள் தெரியாதவருக்குக் கூட) அந்த சக்தி கிடைப்பதை நான் உணர்ந்திருக்கிறேன். (பொருள் தெரிந்தவருக்கு மேலும் சிறப்பாய் அமையும்.)

It'll be useful if you could write articles on positive aspects of our culture because nowadays the south Indian medias target on humiliating our ancient religion and its aspects.

Thank you.

Em Kay said...

I am on Linux so don't know how to write in Tamil font.

To ப்ரியமுடன்...வசந்த்,

You have chosen a very interesting subject, I appreciate your devotion towards Tamizh, I have also sometimes felt the same way that it would make more sense if you utter the mantras better if you can understand their meaning properly, however you cannot literally translate it from Sanskrit to Tamizh, the way you have done it.

So don't make statements such as the community will be expelled from Tamizh Nadu etc., at-least 30% of the people in spread all over Tamizh Nadu dont have Tamizh as their mother tongue but progithars mother-tongue is Tamizh.

Sanskrit is a dead language, which is only during these occasions.

Somebody mentioned about Periyar etc., first know the history about these people who have been projected as Tamizh greats by politicians and movies are not Tamizh people, for eg., Periyar, Kattabomman etc are Telugu origin people including Vijayakanth and Vaiko. But the community you have targeting in this blog are true Tamizhs who has Tamizh as their mother-tongue (not Sanskrit) and have that true feeling and celebrate Pongal, Tamizh new year etc., not Ugadi secretly with their families.

On another note, to be fair would you start a blog for scrapping the community based reservation system that exists for education and jobs as every body are equal and only distinction should be based on income levels that exists in civilised nations such as Europe and US. This should give some advantage to not so well paid progithar families.

I am very certain that you will not object the reservation system as this provides tremendous advantage for certain communities even though there are very poor families in other OC communities.

rangarajan said...

manthiram othi thirumanam seyya ishtam illai endraal seyyathirgal. ungalukku muzhu urimai irukkirathu. En neengal azhuthukonde kooda manam purialam pahutharivu potRRI!