ஆக்சுவலா என்னோட பெயர்புராணம் சொல்லணுமா என்ன? எதுவும் சொல்லாமயே உங்களுக்கெல்லாம் விளங்கியிருக்கும் ஆனாலும் சொல்லியே ஆகணும்ன்னு என் உடன்பிறப்பு சுசி சொன்னதால இப்போ சொல்றேனுங்கோ..!
வசந்தகுமார் என்று எங்கப்பாதான் எனக்கு பெயர் வைத்தார்.வசந்தகாலத்தை குறிக்கும்படியாக இருக்கட்டுமே என்று அவர் நினைத்திருகலாம். ஆனால் என் வாழ்க்கையில் இன்னும் வசந்தகாலம் வந்தபாடில்லை . இந்த கோடீஸ்வரன் என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் ஒன்று பிச்சைக்காரர்களாக இருப்பார்கள் இல்லையென்றால் மிகவும் ஏழ்மையாக இருப்பார்கள் இருப்பார்கள், அதேபோல குபேரன் என்று பெயர் வைத்தவர்கள் வீட்டில் பணப்பிரச்சனையாக இருக்கும் , சாந்தி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் அடாவடியாக இருப்பார்கள் , அழகேசன் என்று பெயர் வைத்தவர்களின் முகம் அஷ்டகோணலாக இருக்கும், வீரலட்சுமி என்று பெயர் வைத்தவர்கள் கோழையாக இருப்பார்கள், ஆண்டியப்பன் என்று பெயர்வைத்தவர்கள் பணம்படைத்தவர்களாக இருப்பார்கள் அதுமாதிரி நமக்கு என்ன பெயர் வைக்கிறார்களோ அதற்கு எதிர்மறையாகத்தான் நடக்கும் என்பது எழுதப்படாத விதி...அதேபோலவே எனக்கும் .
பெயரில் இருக்கும் பொருள் ஒரு சிலருக்கு மிகச்சரியாக நடப்பதும் உண்டு முருகன் என்று பெயர் வைத்தவர்களுக்கு இரு தாரம் அமைவது, விக்னேஷ்வரன் என்று பெயர் வைத்தவர்களுக்கு தொப்பை இருப்பது, ( இது இரண்டுமே நான் நிஜத்தில் பார்த்தது ) , ஆனா அதுமாதிரி எல்லாருக்கும் நடந்துவிடுவதில்லையே என்ன செய்ய ?...!
உண்மைப்பெயர்களுக்கடுத்தபடியாக நமக்கு நம் சுற்றம், நட்புகளால் வைக்கப்படும் பட்டப்பெயர்கள் நம்முடைய சுயரூபத்தை குறிப்பதாக இருக்கும். எங்கள் ஊரில் பெரும்பாலானோருக்கு அவர்களின் உண்மைப்பெயரே மறந்துவிடும் அளவிற்க்கு பட்டப்பெயர்கள் நிலைத்துவிடும். உதாரணத்திற்கு ஊரில் பிரபல சம்சாரி ஒருவரின் பெயர் ''முட்டைபிடுங்கி'' சிரிப்பு வருகிறதா, ஆம் அவரின் அப்பாவோ தாத்தாவோ கோழி முட்டையிடுவதற்கு முன்பே அந்த முட்டையை பிடுங்குவது போன்ற அவசரக்குடுக்கைகளாக இருந்திருக்கின்றனர் ஆதலால் அந்தப்பெயர் நிலைத்துவிட்டது. கொடுமை அந்தப்பெயர் தற்பொழுது இருக்கும் மூன்றாம் தலைமுறை வரையிலும் நீடிப்பதே...! இன்னும் அத்திமான் ராமசாமி, சித்தமான் ராமசாமி, கோமாளி ராஜாராம், பொட்டு வெங்கடேஷன், தாத்தி சீனிவாசன், சிங்கம் சீனிவாசன், இப்படி பல பட்டப்பெயர்கள் உண்டு அது எல்லாவற்றையும் எழுத இடம் போதாது.
அதுமாதிரியே எனக்கும் சின்ன வயதிலிருந்து நிறைய பட்டப்பெயர்கள் இருந்து வருகிறது. சுகுமாரை சுக்குகாப்பி, அழகேசனை அழுகினதக்காளி, அமுதக்குமாரை அமுல்டப்பா, என்று அவர்களின் பெயர் ஆரம்ப எழுத்தை வைத்து பட்டப்பெயர்கள் வைப்பது ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வழக்கம் . அதுபோலவே என்னுடைய பெயரில் இருக்கும் முதல் எழுத்தான வ வில் ஆரம்பமாகும் வத்தல், வத்தலக்குண்டு என்று இரண்டு பட்டப்பெயர்கள் மிகப்பிரபலமாக இருந்தது. பள்ளியில் என்னுடைய பெயரை வைத்து அழைப்பவர்களைவிட பட்டப்பெயரை வைத்து அழைப்பதையே வழக்கமாக்கிவிட்டனர். இன்னும் ஊர்ப்பக்கம் ஆரம்ப கால நண்பர்கள் பார்த்தால் செல்லமாக வத்தல் என்று அழைத்துவிட்டு நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள்.
இப்பொழுது தெரிகிறதா நான் ஏன் மிகவும் காரமாக இருக்கிறேனென்று ஹிஹிஹி...!
பிறகு என் அப்பத்தா எனக்கு ஒரு பட்டப்பெயர் வைத்தார் கிட்டத்தட்ட என் குடும்பத்தில் இருக்கும் சித்தப்பாக்கள் குடும்பம், அத்தைமார்கள் கூட்டம் அத்தனை பேரும் அழைக்கும் பெயர் குருவித்தலையன் ஹிஹிஹி . இந்த குருவித்தலையன் என்ற பெயர் பிறந்த கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது. சிறுவயதில் முடிவெட்டிக்கொள்ளும்பொழுது முடி திருத்தினர் அவசரகதியில் பின் பக்கம் கழுத்தில் மட்டம் போட மறந்துவிடுவார் அது கீழேயிருக்கும்படி இருக்கும்..
படத்தில் வட்டமிட்டு காட்டியிருக்கும் இடத்தில் குருவியின் வாய் நுனியைப்போன்று ஊசியாக நிறைய பேருக்கு இருக்கும் . எனக்கும் அதுபோலவே இருந்தது ஆனால் என் குடும்பத்தார்கள்தான் கிரியேட்டிவிட்டியானவர்களாச்சே என் அப்பத்தாவிற்கு தோன்றியிருக்கிறது பாருங்கள் குருவித்தலையன் என்று...
இன்னொரு பெயர் இன்னும் மிகப்பிரபலம் தேங்கா மண்டையன் என்ற பெயர் . எதிரிகளின் மண்டையை மண்டையை வைத்தே உடைப்பதால் சிறைச்சாலை படத்தில் தபு மோகன்லாலிடம் நெற்றியை டம்மென்று இடிப்பாரே அதுபோலவே எனக்கும் மற்றவர்களின் மண்டையை பதம் பார்ப்பதில் அலாதி விருப்பம் சிறுவயதில் . டம்மென்று முட்டினால் எதிரியின் கண்களில் கண்ணீர் வருமென்றால் எனக்கு சிரிப்பு வரும் . அவ்வளவு கனமான மண்டை என்னுடையது சிலருக்கு மண்டையினுள் மண் இருக்கும் என்றால் எனக்கு தேங்காய் இருக்கும் போல..!
சிரிக்கப்படாது...! ச்சூ ச்சூ பார்டா திரும்ப திரும்ப சிரிக்கிறீங்க...!
....
பிறகு இப்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்தின் சி இ ஓ வின் பெயரும் வசந்த குமார் என்பதால் சக ஊழியர்கள் ஜூனியர் சி இ ஓ என்று அழைப்பார்கள்.என்றைக்கு இது சி இ ஓவிற்கு தெரிந்து வேலைக்கு வேட்டு வைக்கப்போகிறாரோ தெரியாது.. இந்த பட்டப்பெயர்கள் பற்றியெல்லாம் எனக்கு சிறிதும் கவலையில்லை.இன்னும் என் சரிபாதி வந்து எனக்கு எத்தனை பட்டப்பெயர்கள் வைக்கப்போறாங்களோ? அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது ஆவ்வ்வ்...!
இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும் இந்த வசந்து என்று எல்லாருக்கும் வராது வசந்த்ன்னு ஸ்டைலாத்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க ப்ரியமான நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே வசந்து என்று அழைப்பதுண்டு.
பிறகு இப்பொழுது வேலை பார்க்கும் நிறுவனத்தின் சி இ ஓ வின் பெயரும் வசந்த குமார் என்பதால் சக ஊழியர்கள் ஜூனியர் சி இ ஓ என்று அழைப்பார்கள்.என்றைக்கு இது சி இ ஓவிற்கு தெரிந்து வேலைக்கு வேட்டு வைக்கப்போகிறாரோ தெரியாது.. இந்த பட்டப்பெயர்கள் பற்றியெல்லாம் எனக்கு சிறிதும் கவலையில்லை.இன்னும் என் சரிபாதி வந்து எனக்கு எத்தனை பட்டப்பெயர்கள் வைக்கப்போறாங்களோ? அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது ஆவ்வ்வ்...!
இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும் இந்த வசந்து என்று எல்லாருக்கும் வராது வசந்த்ன்னு ஸ்டைலாத்தான் எல்லாரும் கூப்பிடுவாங்க ப்ரியமான நண்பர்கள் உறவினர்கள் மட்டுமே வசந்து என்று அழைப்பதுண்டு.
64 comments:
படங்களும் விவரங்களும் பிரமாதம்!
அவ்ளோதானா...இன்னும் எதிர்பார்த்தேன்
நான்கு பெயர்களும் நல்லாத்தான் இருக்கு எனக்கு என்னமோ கடைசியா சொன்ன
ஜூனியர் சி இ ஓ உங்களுக்கு சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன். பதிவு superண்ணா..
நல்ல பகிர்வு! தேங்காய் மண்டையன், குருவித்தலையன்…. – ஏதோ கவுண்டமணி-செந்தில் காமெடி பார்ப்பது போல இருந்தது! நகைச்சுவையாக இருந்தது.
//இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும் //
அதுதான் அம்மா....................மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
//என் சரிபாதி வந்து எனக்கு எத்தனை பட்டப்பெயர்கள் வைக்கப்போறாங்களோ? அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது//
பேச்சுலர் வாழ்க்கையில நாலு டிகிரிதானே வாங்கியிருக்கீங்க.. வசந்தா வந்து எக்கச்சக்க டிகிரி கொடுக்கட்டும் :-))
raittu. என் அறிவு கண்ண திறந்துடீங்க. ஒரு பெரியவரின், தியாகியின் வரலாறு படிக்க சான்ஸ் கிடைச்சது..
'வத்தலு'க்கு ஏத்த ஒரு வத்தலக்குண்டு பொண்ணோ, 'குருவித்தலையனுக்கு' ஏத்த ஒரு மைனாவோ அல்லது 'தேங்காய் மண்டைய' தாங்கற அளவுக்கு ஒரு மாங்கா மடச்சியாவோ அமைய வாழ்த்துக்கள்!
நோ..நோ...அழப்படாது...அழப்படாது வசந்து...இதுக்கே ஃபீல் பண்ணினா எப்படி? இன்னும் எவ்வளவு டிகிரி வாங்க வேண்டியதிருக்கு...
சிறப்பான கட்டுரை..
சிரிக்கவும் முடிந்தது..
'வசந்த்' என்பது மிகவும் இனிமையான பெயர்..
விரைவில் 'வசந்த காலம்' உங்க வாழ்வில் வரட்டும் / தொடரட்டும்.. .
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
Romba Thankzzzzzzz
பெயர் - சொந்தப் பெயர், வந்த பெயர் - காரணங்கள் அழகாகச் சொல்லியிருக்கீங்க!
//சிரிக்கப்படாது...! ச்சூ ச்சூ பார்டா திரும்ப திரும்ப சிரிக்கிறீங்க...!// இதைப் படிச்சுட்டு எப்புடி சிரிக்காம இருக்கிறது!! ;))))
sirikka mudiyalai ponga pattap peyarellam solli....
நல்லாத்தான் எழுதீருக்கே. ஆனா நீ ஊருக்கு வரும்போது இருக்கிடி ஆப்பு. அந்த முட்டைபிடிங்கியப் பத்தி பதிவுல நாறடிச்சதை அவங்ககிட்ட சொல்றேன்:).
சிரிப்புக்கும் தடாவா வசந்து.
சிரிக்கிறதே எப்பாச்சும்தான் !
நல்லா சொல்லி இருக்கீங்க பெயர் காரணத்தை...
எங்க வீட்டில என் கடைசி தம்பியை குட்டினு கூப்பிடுவாங்க்!:-)
காலேஜ்ல என்ன்னை little boyனு கூப்பிடுவாங்க!
"இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும்"
பைனல் டச் சூப்பருங்கண்ணோவ்.
//DrPKandaswamyPhD said...
படங்களும் விவரங்களும் பிரமாதம்!//
மிக்க நன்றிங்கய்யா...!
//கலாநேசன் said...
அவ்ளோதானா...இன்னும் எதிர்பார்த்தேன்//
கலாநேசன் விட்டா நான் முன்னூறு பக்கத்துக்கு எழுதுவேன் படிக்கிறவங்க பாவம் இல்லையா அதான்..
நன்றி கலாநேசன்..!
//sulthanonline said...
நான்கு பெயர்களும் நல்லாத்தான் இருக்கு எனக்கு என்னமோ கடைசியா சொன்ன
ஜூனியர் சி இ ஓ உங்களுக்கு சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன். பதிவு superண்ணா..//
அது நானும் பலமுறை சொல்லிப்பார்த்திட்டேன் கேட்கவே மாட்டேன்னுறாங்க பாஸ் என்ன பண்றது?
நன்றி பாஸ்..!
//வெங்கட் நாகராஜ் said...
நல்ல பகிர்வு! தேங்காய் மண்டையன், குருவித்தலையன்…. – ஏதோ கவுண்டமணி-செந்தில் காமெடி பார்ப்பது போல இருந்தது! நகைச்சுவையாக இருந்தது.//
அக்காங்... ஒரு வேளை அவர் பீக்ல இருக்குறப்போ வைத்த பெயர்களாக இருக்குமோ? மிக்க நன்றி வெங்கட் நாகராஜ்..!
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
//இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும் //
அதுதான் அம்மா....................மிக யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
//
ஆமாங்க சார் மிக்க நன்றி பெயர்.சொ.விருப்பமில்லை சார்..!
//அமைதிச்சாரல் said...
//என் சரிபாதி வந்து எனக்கு எத்தனை பட்டப்பெயர்கள் வைக்கப்போறாங்களோ? அதை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது//
பேச்சுலர் வாழ்க்கையில நாலு டிகிரிதானே வாங்கியிருக்கீங்க.. வசந்தா வந்து எக்கச்சக்க டிகிரி கொடுக்கட்டும் :-))//
ஆவ்..சாபமா மேடம் ஏன் நான் என்ன பாவம் செய்தேன் பூவுலகில் ஆணாய் பிறந்ததை தவிர ம்ம் காபியத்தான சொன்னீங்க ?
நன்றி சாரல் மேடம்!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
raittu. என் அறிவு கண்ண திறந்துடீங்க. ஒரு பெரியவரின், தியாகியின் வரலாறு படிக்க சான்ஸ் கிடைச்சது..//
எல்லாம் வருங்கால சந்ததியினர் படிச்சு பார்த்து நாலு நல்ல விஷயங்கள் தெரிஞ்சுகிடட்டும்ன்னுதான் மாப்பு
நன்றி மாப்ஸ்..!
//Sriakila said...
'வத்தலு'க்கு ஏத்த ஒரு வத்தலக்குண்டு பொண்ணோ, 'குருவித்தலையனுக்கு' ஏத்த ஒரு மைனாவோ அல்லது 'தேங்காய் மண்டைய' தாங்கற அளவுக்கு ஒரு மாங்கா மடச்சியாவோ அமைய வாழ்த்துக்கள்!
நோ..நோ...அழப்படாது...அழப்படாது வசந்து...இதுக்கே ஃபீல் பண்ணினா எப்படி? இன்னும் எவ்வளவு டிகிரி வாங்க வேண்டியதிருக்கு...//
ம்ம் இத்தனை பேரு வைக்கிறீங்கன்னா நீங்க பெரிய ரவுடியாத்தான் இருந்திருக்கணும் , இந்த தொடர் விளையாட்டு நீங்க ஆர்ம்பிச்சதுதானே எப்டி கண்டுபிடிச்சேன் பாருங்க
நன்றி எக் எய் அகிலா மேடம்..!
//Madhavan Srinivasagopalan said...
சிறப்பான கட்டுரை..
சிரிக்கவும் முடிந்தது..
'வசந்த்' என்பது மிகவும் இனிமையான பெயர்..
விரைவில் 'வசந்த காலம்' உங்க வாழ்வில் வரட்டும் / தொடரட்டும்.. .//
கண்டிப்பா நானும் அதைத்தான் எதிர்பார்த்திட்டு இருக்கேன் மாதவன் சார் மிக்க நன்றி தங்கள் வாழ்த்திற்கு..!
//♔ℜockzs ℜajesℌ♔™ said...
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
Romba Thankzzzzzzz
//
நன்றி மீண்டும் வருக..! :)))
//middleclassmadhavi said...
பெயர் - சொந்தப் பெயர், வந்த பெயர் - காரணங்கள் அழகாகச் சொல்லியிருக்கீங்க!//
நன்றி மாதவி மேடம்..!
//இமா said...
//சிரிக்கப்படாது...! ச்சூ ச்சூ பார்டா திரும்ப திரும்ப சிரிக்கிறீங்க...!// இதைப் படிச்சுட்டு எப்புடி சிரிக்காம இருக்கிறது!! ;))))//
ஆக்லாண்ட் ராணி சிரிக்கவைத்த பெருமை எனக்கே எனக்கே இல்லியா றீச்சர்...?!உங்கள் பேச்சுவழக்கு :)
//சே.குமார் said...
sirikka mudiyalai ponga pattap peyarellam solli....//
மிக்க நன்றி குமார்..!
//Jey said...
நல்லாத்தான் எழுதீருக்கே. ஆனா நீ ஊருக்கு வரும்போது இருக்கிடி ஆப்பு. அந்த முட்டைபிடிங்கியப் பத்தி பதிவுல நாறடிச்சதை அவங்ககிட்ட சொல்றேன்:).//
யோவ் பங்காளி ஏன்யா உனக்கு இந்த கொலவெறி இதான் ஊர்க்காரபசங்க சகவாசம் வச்சிகிறதே இல்ல அசந்தா போட்டுத்தள்ளிடுவாய்ங்க போல..
நன்றி பங்காளி..!
//ஹேமா said...
சிரிப்புக்கும் தடாவா வசந்து.
சிரிக்கிறதே எப்பாச்சும்தான் !//
நம்பிட்டேனுங்க மேடம்..!
நன்றி !
//இரவு வானம் said...
நல்லா சொல்லி இருக்கீங்க பெயர் காரணத்தை...//
ம்ம் மிக்க நன்றி இரவு வானம்..!
//சுசி said...
:)))))))//
சுசி இப்போ நெம்ப பிசி போல ம்ம் இருக்கட்டு இருக்கட்டு..!
//எஸ்.கே said...
எங்க வீட்டில என் கடைசி தம்பியை குட்டினு கூப்பிடுவாங்க்!:-)
காலேஜ்ல என்ன்னை little boyனு கூப்பிடுவாங்க!//
ரெண்டுத்துக்கும் என்ன டிபரெண்ட் எஸ்.கே?
ஹிஹிஹி
நன்றி எஸ்.கே.
//Bairave said...
"இவ்வளவு இருந்தாலும் அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும்"
பைனல் டச் சூப்பருங்கண்ணோவ்.
//
மிக்க நன்றி பைரவி..!
nallap paeyar thaan vaiththullaarkal... anaal peyar kaaranam mattum punaivaaka thierikirathu.. pakirvukku vaalththukkal
நல்ல பேரு.. அதைய விட நல்ல படம் :)) வாழ்க மொளகா வத்தல்..
ஃபீலிங்ஸ்சோட ஆரம்பிச்சி காமெடியா முடிச்சி இருக்க மாம்ஸ்...
good
இது தான் படம் போட்டு பாகம் குறிப்பதா ...?
http://erodethangadurai.blogspot.com/
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
ஹி ஹி . . .
ஹி ஹி . . .
ஹி ஹி . . .
இதுக்காக ஒரு பதிவே போடா வேண்டியதா போச்சு
http://rockzsrajesh.blogspot.com/2011/03/why-comment-moderation.html
ஹாஹாஹா... மத்தவங்களைத் தான் கலாய்க்கறதுன்னு இல்லாம, தன்னையே கலாய்ச்சுக்கற உங்க மனசு.. ச்சே, சூப்பர் வசந்து.
சூப்பர் டிகிரி வசந்து :)
அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும்..
அம்மா அம்மா தான்...தேங்கா மண்டையன், குருவித்தலையன் வத்தல், வத்தலக்குண்டு, ஹி ஹி ஜூனியர் சி இ ஓ இது நல்ல காமெடி அஹ இருக்கே...வசந்த் சார் வழக்கம் போல வித்யாசங்கள் உங்கள் பதிவில் அதுவும் உங்கள் பெயர் புராணம் வடிவில்...
நான்கு டிகிரிகள்...! சூப்பர் வசந்து
மாப்பு, பெயர்க்காரணம் சொல்லச் சொன்னா ஹிஸ்டரி, ஜியாக்கரபின்னு போட்டுத்தாக்கி இருக்கே? இதுல செமையா ஒரு உள்குத்து இருக்கே? அய்யய்யோ அத நான் சொல்லலை...
இதுல செமையா ஒரு உள்குத்து இருக்கே? அய்யய்யோ அத நான் சொல்லலை...
இருந்தாலும் சூப்பர் ஃபினிஷிங் டச்...... அங்கதான் நம்மாளு நிக்கிறாரு.......
அப்போ அந்த தேங்காதான் இவ்வளவுக்கும் காரணமா?நாங்களும் ஒரு தேங்கா வாங்குவோம்ல.....
//மதுரை சரவணன் said...
nallap paeyar thaan vaiththullaarkal... anaal peyar kaaranam mattum punaivaaka thierikirathu.. pakirvukku vaalththukkal//
ஹிஹிஹி புனைவு எழுதுற அளவுக்கு நான் இன்னும் வளரலீங் சரவணன்..
நன்றி :)
//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
நல்ல பேரு.. அதைய விட நல்ல படம் :)) வாழ்க மொளகா வத்தல்..//
//அதைய// கோயமுத்தூர்...குசும்பு
// வாழ்க மொளகா வத்தல்//
கிர்ர்ர்ர்ர்ர்
நன்றி சந்தனா..
:)
//அருண் பிரசாத் said...
ஃபீலிங்ஸ்சோட ஆரம்பிச்சி காமெடியா முடிச்சி இருக்க மாம்ஸ்...
good
//
மிக்க நன்றி மாம்ஸ் அதுதானே நம்ம வழக்கம் அழறவங்களையும் சிரிக்க வச்சுப்பாக்கறது.. :)
//ஈரோடு தங்கதுரை said...
இது தான் படம் போட்டு பாகம் குறிப்பதா ...?
http://erodethangadurai.blogspot.com/
//
அதுதான் கைவந்த கலையாச்சே அதான் போல..
நன்றி தங்கதுரை.
//♔ℜockzs ℜajesℌ♔™ said...
Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
ஹி ஹி . . .
ஹி ஹி . . .
ஹி ஹி . . .
இதுக்காக ஒரு பதிவே போடா வேண்டியதா போச்சு
http://rockzsrajesh.blogspot.com/2011/03/why-comment-moderation.html//
பாஸ்..
எதுக்கு கமெண்ட் மாடரேசன் வைக்கிறாங்க அப்படின்றதை அவங்க இடத்துல இருந்து யோசிச்சு பார்த்தீங்கன்னா தெரியும் . நம்ம மக்கள் சிலர் வயித்தெரிச்சல் பிடிச்சவங்க இருக்காங்க சம்மந்தம் சம்மந்தம் இல்லாம தரக்குறைவான பின்னூட்டங்கள் இடுவதுன்னு அது எனக்கு &%$&%$#க்கு சமம்தான். பலர் படிக்க வர்ற இடத்துல அது ஒரு கரும்புள்ளியா முகத்தை சுளிக்க வைக்குமே அதை தவிர்க்கத்தான் கமெண்ட் மாடரேசன்.(Its all happened, happening to me ) ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் கண்டிப்பா புரிஞ்சுப்பீங்க..! மற்றபடி கமெண்ட் மாடரேசன் இருக்குற இடத்துல பின்னூட்டம் போட மாட்டேன்றது உங்க விருப்பம் அதை யாரும் ஒண்ணும் சொல்லப்போறதில்லை.
நன்றி வணக்கம்..!
//விக்னேஷ்வரி said...
ஹாஹாஹா... மத்தவங்களைத் தான் கலாய்க்கறதுன்னு இல்லாம, தன்னையே கலாய்ச்சுக்கற உங்க மனசு.. ச்சே, சூப்பர் வசந்து.//
அதொண்ணுமில்லீங் எனக்கு எந்த அளவுக்கு சுய எள்ளல் இருக்குன்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன் விக்கினேசு
நன்றி..!
// சிநேகிதன் அக்பர் said...
சூப்பர் டிகிரி வசந்து :)//
ம்ம் நன்றி அக்பர் அண்ணா!
//ரேவா said...
அம்மா வசந்து... என்று அழைக்கும்போது நிறைய அழகா இருக்கும்..
அம்மா அம்மா தான்...தேங்கா மண்டையன், குருவித்தலையன் வத்தல், வத்தலக்குண்டு, ஹி ஹி ஜூனியர் சி இ ஓ இது நல்ல காமெடி அஹ இருக்கே...வசந்த் சார் வழக்கம் போல வித்யாசங்கள் உங்கள் பதிவில் அதுவும் உங்கள் பெயர் புராணம் வடிவில்...
நான்கு டிகிரிகள்...! சூப்பர் வசந்து
//
ஆமாவாங் மேடம்?
இந்த சாக்குல என் பட்டப்பெயரெல்லாம் சொன்னதுக்காக வசந்தபுராணத் தண்டனை கொடுக்கப்போறேன் கிகிகி
மிக்க நன்றி ரேவதி..!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மாப்பு, பெயர்க்காரணம் சொல்லச் சொன்னா ஹிஸ்டரி, ஜியாக்கரபின்னு போட்டுத்தாக்கி இருக்கே? இதுல செமையா ஒரு உள்குத்து இருக்கே? அய்யய்யோ அத நான் சொல்லலை...//
ஆவ்வ் ஏன்யா போற போக்குல வெடிய கொளுத்திப்போட்டுப்போறீங்க ஆவ்வ்வ்
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
இருந்தாலும் சூப்பர் ஃபினிஷிங் டச்...... அங்கதான் நம்மாளு நிக்கிறாரு.......//
ஆமா மாம்ஸ் அது நின்னுகிட்டே யோசிச்சது அதான் அப்டி .. கிகிகி
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
அப்போ அந்த தேங்காதான் இவ்வளவுக்கும் காரணமா?நாங்களும் ஒரு தேங்கா வாங்குவோம்ல.....//
சும்மா கொடுத்திடுவோமா அந்த தேங்காயோட விலை மதிப்பு எவ்ளோ தெரியுமா 1கோடியே 70லட்சத்து கோடி ரூபாய்
நன்றி மாம்ஸ்..!
www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com
பெயர்க்காரணம் விளக்கங்கள் சூப்பரா சொல்லியிருக்கீங்க அண்ணே, விரைவில் உங்கள் வாழ்வில் வசந்தம் வீச வாழ்த்துக்கள் :)
வாங்கிய டிகிரிகள் எல்லாம் நல்லாக இருக்கிறது :))
sir unga appa amma nalla irupaga.100 years. unga appa amma life yanaku romba pititthu iruku. yanaku yaikamaga iruku sir. satthiyama aluthu vittain ( என் அப்பா தொலைபேசியில் என்னய்யா கண்ணு என்று அழைக்க ஆரம்பிக்கும்பொழுது கண்களில் கண்ணீர் வந்துவிடுகிறது.)
Post a Comment