அறையெங்கும் சந்தனமணத்தை பரப்பிக்கொண்டிருந்தது அந்த சாண்டல் அகர்பத்தி சந்தன வாசத்தை நுகர்ந்தவாறே மெத்தையில் உட்கார்ந்திருந்த என்னிடம் ''சுளுக்கெடுத்துவிடறேன் கொஞ்சம் காலை நீட்டுங்க'' என்று சொல்லியவாறு என்னுடைய காலை எடுத்து அவளின் மடியில் வைத்து ஒவ்வொரு விரலையும் முன்னும் பின்னும் இழுத்து இழுத்து பார்த்து சுளுக்கு எதுவும் இல்லையென்றதும் , ''என்னங்க சுளுக்கே விழ மாட்டேன்னுது'' என்றவளிடம் ''நீதான் நேற்றே சுளுக்கெடுத்துவிட்டாயே இன்றைக்கு எப்படி இருக்கும்'' என்றேன் நமுட்டு சிரிப்புடன் , அதற்கு அவள் களுக்கென்று சிரித்துக்கொண்டே தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள், வெட்கமாம்.
தலையணையில் முகம் புதைத்தவளிடம் அட ரொம்பத்தான் வெட்கப்படுகிறாய் நீ, சென்ற மாதம் நீ ஊருக்கு போயிருந்த நேரத்தில் உன் தலையணை என்னிடம் நிறைய முத்தங்களை வாங்கி வைத்திருக்கிறது இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தால் அந்த முத்தத்தையெல்லாம் உனக்கு மாற்றிவிடும் பரவாயில்லையா என்றதும் ச்சீய் தலையணைக்கு போய் யாராவது முத்தம் கொடுப்பார்களா என்று கண்களை அகலவிரித்து தலையணையை நோக்கி உன்னை பிறகு கவனித்துக்கொள்கிறேன் என்கிற மாதிரி ஓரக்கண்ணில் பார்த்துவிட்டு என்னை நோக்கி வந்தவள் முத்தமழை பொழிந்துவிட்டாள், கேட்டால் கட்டணமில்லா முத்த ட்ரான்ஸ்ஃபர் செய்துவிட்டது தலையணை என்கிறாள். ஆஹா தலையணை மந்திரம் வேலை செய்கிறதே என்று நினைத்துக்கொண்டேன் மனதிற்குள்.
ஆமாங்க இந்த தலையணை மந்திரம் தலையணை மந்திரம் என்று சொல்கிறார்களே அது என்ன மந்திரம் என்று குப்புற படுத்திருந்த என் முதுகில் முட்டை முட்டையாக கை விரல்களால் கோலமிட்டுக் கொண்டே வினவியளை ஆச்சரியமுடன் பார்த்தேன் நாம் மனதிற்குள் நினைத்தது இவளுக்கு கேட்டுவிட்டதோ என்று நினைத்துக்கொண்டே அதுவா செல்லம் அதற்கு நீ என்னிடம் என்ன செய்கிறாயோ அதற்கு எதிர்பதமாக நான் உன்னிடம் செய்வேன் அதுதான் என்றதும் . என்னவோ புரிந்திருக்க வேண்டும் சட்டென்று விரல்களால் கோலமிடுவதை நிறுத்தி கோவத்துடன் என் இரண்டு கன்னங்களிலும் தன் ஐந்து கைவிரல்களும் பதியுமாறு ஓங்கி பளாரென்று அடித்துவிட்டு ஆளும் மூஞ்சியும் பாரு என்றவளின் கன்னங்களில் பதிலுக்கு முத்தமிட ஆரம்பித்தேன்.இப்பொழுது அவளுக்கு புரிந்துவிட்டிருந்தது முதலில் சொன்னது போலி தலையணை மந்திரமென்று.
அப்படியே தூங்கிவிட்டேன் போலிருக்கிறது காலையில் நான் படுத்திருந்த பொசிசனை பார்த்தவள் சிரித்துக்கொண்டே ''கால் நீட்டி தூங்கும் காண்டா மிருகம் அடடடே ஆச்சரியக்குறி'' என்று நக்கலடித்த படியே காபி சாப்பிடுங்க ஆறிடப்போவுது என்று காபியை கொண்டுவந்து டீஃபாய் மீது வைத்துச்சென்றாள். நான்தான் நக்கல் பிடித்தவன் என்றால் இவள் நக்கலை குத்தகைக்கே எடுத்திருப்பாள் போல இன்னைக்கு இரவு இருக்கிறதடி உனக்கு என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே அவள் குடுத்த காபியை குடித்துவிட்டு வழக்கம்போலே அன்றைய இரவு டின்னருக்கான மெனுவை ஸ்டிக்லேபிளில் எழுதி டீ கப்பின் அடியில் ஒட்டிவிட்டேன்.
அன்றைக்கு அலுவலகத்தில் அதிகப்படியான வேலையால் சோர்ந்து போய் வீடு திரும்பினேன். வீடு திறந்துதான் இருந்தது கவி , கவி என்றழைத்தபடியே வீடு முழுவதும் தேடினேன் ஆளையே காணோம் என்னை வெறுப்பேற்றுவதற்காக எங்கேயாவது ஒளிந்திருந்து விளையாட்டு காட்டுவாளாக்கும் என்று நினைத்தபடிஉடை மாற்றிவிட்டு பெட்ரூமிற்குள் நுழைந்ததும், நான் நினைத்தபடியே உள்ளே ஒளிந்திருந்த அவள் சட்டென்று கதவை சாத்திவிட்டு என்னை கட்டிப்பிடித்து முகம் நிறைய முத்தம் கொடுத்தாள். முத்தம் கொடுக்க வெட்கப்படுபவள் இப்படி முத்தமழை பொழிவது ஆச்சரியமாய் இருந்தது. இன்னைக்கு உனக்கு என்ன ஆச்சு என்றேன்? நீங்க இன்னிக்கு டின்னர்க்கு என்ன எழுதியிருந்தீங்க என்று கேட்டதும்தான் காலையில் அவளுக்கு விளையாட்டாய் மெனுவில் ''முத்த தோசை'' என்று எழுதிக்கொடுத்தது ஞாபகத்தில் வந்தது , அலுவலகத்தில் நடந்த அதிகப்படியான வேலை அழுத்தத்தில் காலையில் அவளுக்கு எழுதிக்கொடுத்திருந்த மெனுவையும் மறந்திருந்தேன் நான். அவள் கொடுத்த டின்னரான முத்த தோசை முகத்தையும் மனத்தையும் நிறைத்தது.பதிலுக்கு காம டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்திருந்தேன் நான்.
24 comments:
முதல் காதல்
>>நீங்க இன்னிக்கு டின்னர்க்கு என்ன எழுதியிருந்தீங்க என்று கேட்டதும்தான் காலையில் அவளுக்கு விளையாட்டாய் மெனுவில் ''முத்த தோசை'' என்று எழுதிக்கொடுத்தது
நோட் பண்ணிக்கிட்டேன் ஹி ஹி
மச்சி, காதலையும் காமத்தையும் திகட்டத் திகட்ட கொடுத்துட்டு தலைப்பு மட்டும் கொஞ்சம் கொஞ்சம்னு வச்சிருக்க?! :)
கதையா கவிதையா.. ?
இரண்டுமா ?
//முத்த தோசை//
இனி நிறைய பயன்படும் இந்த முத்த தோசை....
// முத்த தோசை //
புது recipe சொல்லிருக்கீங்க இனி followers க்கு ஜாலிதான்.
இந்த ஆசை தோசை அப்பளம் வடை எல்லாம் அப்புறமா....?
காதல் பொங்கி வழியுது..
:)))))
யே வீட்டு ஆளுகளே சீக்கிரம் இந்த வசந்துக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைங்கப்பு.. பண்ற அலப்பரை தாங்கலை..
@ நன்றி சிபி :)
@ பாலாஜி ஆஹா மச்சி நாலே நாலு பாராதானடா எழுதிருக்கேன் கொஞ்சம்தானே !! நன்றி மச்சி :)
@ மாதவன் சார் இரண்டுமே தான் நன்றி சார் :)
@ சங்கவி :))
@ சுல்தான் மாம்ஸ் ஆவ்வ்வ்வ்வ் ஃபாலோவர்ஸ்கள் பாவம் :)) நன்றி மாம்ஸ்
@ ஸ்ரீராம் ஹிஹிஹி ஆமா :)) நன்றி ஸ்ரீராம்
@ சுசி நன்றி :)
@ தேனு கொலவெறி :(
@ ஃபுட் ம்ம் :)
மாப்பி உனக்கும் அதே கனவுதான????சீக்கிரம் நிஜமாக வாழ்த்துகள்....
காதல் பொங்கும் பதிவு...
முத்தமும் தான்.
வாழ்த்துக்கள் வசந்த்.
வர வர ரொம்ப தேறிட்ட வசந்த் நீ. உன் பிளாக்க படிச்சா நூறு காதல் சப்ஜக்ட் படம் எடுக்கலாம் போல. அவ்வளவு ஏக்க கனவு உனக்கு. அந்த ஏக்க கனவு கைவந்து இதுப்போல பலமடங்கு காதலை அனுபவிக்க எனது ஆசிகள்.
இளைய காதல் மன்னன் வச்ந்த் வாழ்க வாழ்க.
@ சீமான்கனி மாப்ள உனக்குமா? ஆவ்வ்வ்
@ இந்திரா ஹிஹிஹி மிக்க நன்றிப்பா :))
@ ராஜிக்கா ஆஹா அப்டிலாம் இல்லக்கா சும்மா எழுதிப்பார்த்தேன் # ஸ்ஸப்பா சமாளிக்க முடியலையே எப்டினாலும் கண்டுபிடிச்சுடுறாங்களே மக்கள்
நன்றிக்கா வாழ்த்துகளுக்கு பலிக்கட்டும் :))
@ ராஜிக்கா காஞ்சிப்பட்டா பனாராஸ் பட்டா சொல்லிடுங்க எது வேணும் ஆர்டர் பண்ணிடறேன் :-))
Nallarukku Boss..
Thank you டக்கால்டி பாஸ் :))
ப்ரியமுடன் வசந்த் said...
@ ராஜிக்கா காஞ்சிப்பட்டா பனாராஸ் பட்டா சொல்லிடுங்க எது வேணும் ஆர்டர் பண்ணிடறேன் :-))
நீ கேட்டதே போதும் வசந்த், சகோதர அன்புக்கு ஈடு இணயேது இவ்வுலகில், என் தம்பிகளெல்லாம் நல்லா இருந்தா அதுவே என் சந்தோஷம்.(உன்சாயலில் ஒரு பதிவிட்டுள்ளேன். மறக்கமல் வந்துவிடு சகோ)
http://rajiyinkanavugal.blogspot.com/2011/04/blog-post_29.html
வருகைக்கும், ஆறுதலுக்கும் நன்றி சகோ
இன்னும் கல்யாணம் ஆகவில்லையா? கல்யாணம் ஆனவுடன் முத்த தோசை முட்டை தோசையாக மாறிவிடும்! ரியாலிட்டி!
hello vasnth sir unga pudhu rasikay naan unga kavidhai super
hello sir unga kavidhai super
ஆடுகளம் ஆயிடுச்சி ஹஹ்ஹஹா
Post a Comment