ஒரு நாள் வானவில்லை வரைந்து காட்டுகிறேன் வா என்று ஓவிய அறைக்கு கூட்டிப்போனான் அங்குள்ள சுவரில் வானவில்லை அழகாய் வரைந்தான் ஆனால் அவன் வரைந்ததில் ஆறு வண்ணங்கள்தான் இருந்தன என்னடா வானவில் வண்ணங்கள் ஏழுதானே நீ ஆறல்லவா வரைந்திருக்கிறாய் மஞ்சள் நிறம் எங்கே என்று கேட்டேன் அதுவா இப்படி கிட்ட வா என்று சொல்லியபடி மஞ்சள் நிற இடத்தில் என்னை நிரப்பி இப்பொழுது பார் ஏழு வண்ணமும் இருக்கிறதா இல்லையா என்றவனை கன்னாபின்னாவென்று கட்டிக்கொண்டேன். இவன் இப்பொழுது மட்டுமல்ல நிறைய முறை இப்படித்தான் "அழகிய நட்சத்திரங்களுடன் கூடிய வானத்தை வரைந்துவிட்டு நிலவை வரையாமல் அதற்கு பதில் என்னை நிறுத்தி வைப்பான், வெறும் இலை , தண்டுடன் கூடிய செடியை வரைந்துவிட்டு மலருக்கு பதில் அங்கே என்னை நிரப்புவான் " இப்படி இவனுடைய லூசுத்தனமான அழகான செயல்களாலயே எனக்கு இவனை நிறைய பிடித்துப்போகிறது.
அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அருகில் ஆற்றையொட்டி இருக்கும் சிவன் கோவிலுக்கு இருவரும் சென்றோம் . நான் பச்சைக்கலரில் பட்டுச்சேலை அணிந்திருந்தேன் அவனும் பட்டு வேஷ்டி பட்டுச்சட்டையுடன் கம்பீரமாகவே என்னுடன் வந்தான். கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஆற்றில் கை கால்களை அலம்ப வேண்டும் என்ற சாஸ்திரப்படி ஆற்றில் நான் இறங்கியதுதான் தாமதம் அருகிலிருந்த அவன் "பச்சைப்பட்டு உடுத்தி அழகி ஆற்றில் இறங்கிவிட்டாள்" என்று கத்தி கூப்பாடு போட்டதில் சுற்றியிருப்பவர்கள் ஒரு மாதிரியாக பார்க்க எனக்கோ வெட்கம் தாங்க முடியாமல் அப்படியே அவனை ஆற்றில் தள்ளிவிட்டுவிட்டேன் தொப்பல் தொப்பலாக நனைந்து போனான். நானும்தான் அவனுடைய அதீத அன்பில் தொப்பல் தொப்பலாக நனைந்து போயிருக்கிறேன்.
இவன் முகத்தில் ஓவியம் வரையும் கலை கற்றிருக்கிறான் என்பது எனக்கு வெகு நாட்களுக்கு பின்பு தெரிய வந்த பொழுது எங்கே என் முகத்தில் ஓவியம் வரையேன் என்றேன் . உன்னுடைய முகம் கொஞ்சம் தட்டையாக இருப்பதால் உலக வரைபடத்தை வரைகிறேன் என்று அட்லஸை என் முகத்தில் வரைய ஆரம்பித்தான் . வரைந்து முடித்ததும் என்ன்னை நிலைக்கண்ணாடி முன்னாடி முன் கூட்டிச்சென்று காட்டினான் . சும்மா சொல்லக்கூடாது அழகாக சின்ன சின்ன தீவுகள் முதற்கொண்டு எதுவும் விடாமல் எல்லாவற்றையும் மூக்கிலிருந்து மேற்புற பகுதிகளிலேயே வரைந்து முடிந்திருந்தான். ஒரே ஒரு தப்பு செய்திருந்தான் அண்டார்டிகா கண்டத்தை வரையாமல் அந்த இடத்தில் சின்ன சின்ன பென்குவின்களை வரைந்திருந்தான் . எங்கடா அண்டார்டிகா கண்டம் காணோம் ஒரே பென்குவினா இருக்கு என்றேன் மெல்ல சிரித்துக்கொண்டே "உன் உதடும் அதற்கு கீழும் எல்லாமே குளிர் பிரதேசம்தானே" அதான் அப்படியே விட்டு விட்டேன் என்றவனை என்ன செய்யலாம் என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுதே என் முகத்திலிருந்த ஒரு பென்குவின் அவன் முகத்திற்கு இடம் மாறியிருந்தது.
எங்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து இவனுடைய என் வீட்டிற்கு வந்ததும் வீட்டில் சிற்சில மாற்றங்கள் செய்ய ஆரம்பித்திருந்தான். அதில் முதலாவதாக வீட்டின் முகப்பில் அவன் பெயர்போட்டு இல்லம் என்று இருந்த பலகையை எடுத்துவிட்டு ரதிவீடு என்று மாற்றியிருந்தான். வரவேற்பறையில் தேவதை உலாவும் இடம் என்று எழுதியிருந்தான். " ரகு பதி என்ற அவன் பெயரை ரதிபதி என்று சட்டப்படி பெயர் மாற்றுவதற்குரிய விண்ணப்பங்களை வாங்கி வந்திருந்தான்" . ஏண்டா இப்படி லூசுத்தனமா எதுனாலும் செய்துட்டு இருக்க என்றேன் எல்லாம் என் தலையெழுத்து என்று நெற்றியை பிடித்தவனின் கைகளை தட்டி விட்டேன் நெற்றியில் என் பெயரை எழுதி வைத்திருக்கிறான். இப்போ சொல்லுங்கள் இவனுக்காக என் உயிரை தரலாமா இல்லையா அதுதான் இவனுக்கு ஒரு குழந்தை பரிசாக தரலாமென்று முடிவெடுத்துவிட்டு அதை அவனிடம் சொன்னால் "ரோஜா பதியன் மாதிரி ரதி பதியன் போடலாமென்கிறாய் சரி வா என்று குதூகலப்படுகிறான்".
இவன் ஓவியன் மட்டுமல்ல சிலநேரங்களில் அழகான கவிதைகளும் எழுதுவான் ஒரு நாள் இவனுடைய லூசுத்தனமான செயல்களை என் கழுத்திலிருந்த தங்க சங்கிலியை வாயில் வைத்து கடித்தபடி ரசித்துக்கொண்டிருந்தேன் அப்பொழுது அவன் எழுதிய கவிதை
"கழுத்தில் போட்டிருந்த
தங்க சங்கிலியை
வாயில் வைத்து
கடித்துக்கொண்டிருக்கிறாள்
இனம் இனத்தோடுதான்
சேரும்"
இப்படி என்னை மட்டுமே ரசிக்கும் என்னை மட்டுமே தன் உலகமாய் எண்ணி வாழும் இவன் எனக்கு கிடைக்க நான் கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் ஏண்டா இப்படி இருக்க என்று செல்லமாய் கேட்டு அவன் நெற்றியில் மென் முத்தம் பதித்தேன்..!
33 comments:
அன்பின் கவித்துவமான ஓவியங்களாக சில காட்சிகள்..
அருமை வசந்த்.
நீ்ஙகள் திரைத்துறைக்குப் பாடல் பாடச் செல்லலாம் வசந்த்.
அதற்கான எல்லாத் தகுதிகளும் தங்களுக்கு வந்துவிட்டன.
@ குணா ஆவ்வ்வ்வ் ஏன் இந்த கொல வெறி நண்பா தமிழும் தமிழ் நாட்டு மக்களும் பாவம் விட்டுடலாம் ஹ ஹ ஹா
மிக்க நன்றி குணா :))))
very super. ithu madhiri oru life oru silarukuthan kitaikum. awal very luck, awanumthan.
super.... super... super... :)
அடடடடா.. காதல் துள்ளி விளையாடுது.. கவிஞனுக்கு காதல் வந்தா கேக்கவும் வேணுமா?? செம உ பி :)
கவிதை காதலியா இருப்பாங்க போலயே.. கவிதையா புலம்பி இருக்காங்க.. :))
very nice. :-)
அடுத்த தபூ சங்கரே தான் டவுட்டே இல்லை ::)))
கலக்கறே வசந்த்
கவிதை, கதை இரண்டும் கலந்து ஒன்றா அருமை, அருமை..... ♥♥♥
ரதிபதியன் அருமையான கவிதைக் காதலன்....ஒட்டுமொத்த காதலையும் உங்கள் கதையோடு கலந்த கவிதையில் காண்கின்றேன்..ஒவ்வரு வரியும் ரசிக்கும் படியாக இருந்தது .வாழ்த்துக்கள்...
நல்ல ரசிகன் நீங்கள். ரசிகன்தான் வாழ்வை ருசிக்க முடியும். வாழ்த்துக்கள்
அன்பென்ற நதியிலே நனைந்த ரதிபதி - வாழ்த்துக்கள்!
Kalakkals of Kaadhal...ha ha...:)
பிரியமுடன் வசந்த் வாழ்வது நிறைந்த பிரியத்தோடு.....
......வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் சிந்தனையில் பூத்த கதையும் கவிதையும் அருமை நண்பரே….
உன் உதடும் அதற்கு கீழும் எல்லாமே குளிர் பிரதேசம்தானே// nice
http://zenguna.blogspot.com
@ நவனீதம் மேடம் அப்படியா சொல்றீங்க சரி சரி மிக்க நன்றி மேடம் :)
// மாணவன் said...
super.... super... super... :)//
நன்றி நன்றி நன்றி
கிகிகி
//சுசி said...
அடடடடா.. காதல் துள்ளி விளையாடுது.. கவிஞனுக்கு காதல் வந்தா கேக்கவும் வேணுமா?? செம உ பி :)//
:)) நன்றிக்கா
//கவிதை காதலியா இருப்பாங்க போலயே.. கவிதையா புலம்பி இருக்காங்க.. :))//
கவிஞனின் காதலி கவிஞியாகத்தானே இருந்தாக வேண்டும் :)))))))
//Chitra said...
very nice. :-)//
நன்றி சித்ரா மேடம்
//sakthi said...
அடுத்த தபூ சங்கரே தான் டவுட்டே இல்லை ::)))
கலக்கறே வசந்த்//
வாய் முகூர்த்தம் சீக்கிரம் பலிக்கட்டும் நன்றி சக்திக்கா:))
// பலே பிரபு said...
கவிதை, கதை இரண்டும் கலந்து ஒன்றா அருமை, அருமை..... ♥♥♥//
நன்றி பிரபு ம்ம் இரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது :))))))))
//ரேவா said...
ரதிபதியன் அருமையான கவிதைக் காதலன்....ஒட்டுமொத்த காதலையும் உங்கள் கதையோடு கலந்த கவிதையில் காண்கின்றேன்..ஒவ்வரு வரியும் ரசிக்கும் படியாக இருந்தது .வாழ்த்துக்கள்...//
ரதிபதியன் வேறு ரதிபதிவேறு தலைவி ஹிஹிஹி
நன்றி ரேவதி ;)
//வேல்முருகன் அருணாசலம் said...
நல்ல ரசிகன் நீங்கள். ரசிகன்தான் வாழ்வை ருசிக்க முடியும். வாழ்த்துக்கள்//
மிகச்சரியாக சொன்னீர்கள் வேல்முருகன் ரசனைக்கு அப்பாற்பட்டவர்களால் வாழ்க்கை நடத்தமுடியும் வாழமுடியுமா என்பது சந்தேகம்தான்
மிக்க நன்றி
//middleclassmadhavi said...
அன்பென்ற நதியிலே நனைந்த ரதிபதி - வாழ்த்துக்கள்!//
நன்றி மாதவி மேடம் :))
//அப்பாவி தங்கமணி said...
Kalakkals of Kaadhal...ha ha...:)//
நன்றி புவி மேடம் :)))
// நிலாமதி said...
பிரியமுடன் வசந்த் வாழ்வது நிறைந்த பிரியத்தோடு.....
......வெற்றிக்கு வாழ்த்துக்கள்.//
அதே ப்ரியமுடன் நன்றியும் :))
//FOOD said...
ஓவியக் காதல்.ஓவிய கவிதை. சூப்பர்.//
மிக்க நன்றி பாஸ் :))
// வெங்கட் நாகராஜ் said...
உங்கள் சிந்தனையில் பூத்த கதையும் கவிதையும் அருமை நண்பரே….//
நன்றி வெங்கட் :))
//குணசேகரன்... said...
உன் உதடும் அதற்கு கீழும் எல்லாமே குளிர் பிரதேசம்தானே// nice
http://zenguna.blogspot.com
//
நன்றி குணா :))
அருமை
உங்களின் இந்த தமிழ் நடை அழகாக இருக்கிறது
//திகழ் said...
அருமை
உங்களின் இந்த தமிழ் நடை அழகாக இருக்கிறது
//
மிக்க நன்றி திகழ் அடிக்கடி காணாமல் போய்விடுகிறீர்கள் அவ்வப்போது தலை காட்டிச்செல்லுங்கள் :)
so cute and impressive vasanth...கற்பனை மெருகேறி மிளிர்கிறது..எழுத்துக்களுக்கு அழகு சேர்க்கிறது வடிவம்...
Post a Comment