நீண்ட நாட்களாக பிரேமாவை பார்க்கவில்லையென்பதால் அவளைப்பற்றிய நினைவுகளை ஒரு கடிதத்தில் எழுதி அவள் படிக்கும் கல்லூரி முகவரிக்கு அனுப்பிவைத்து அவளின் பதில் கடிதத்திற்கு காத்திருந்த நேரம் தொலைபேசி அழைப்பு , அவள்தான் எடுத்ததும் ''என்னை பிடிச்ச பிசாசே கடுதாசி எழுதுறீங்களாக்கும் கடுதாசி , அதென்ன கடுதாசி முழுவதும் தமிழ்ல எழுதிட்டு ஆரம்பிக்கறப்போ மட்டும் Dear Prema அப்படின்னு எழுதாம a வரவேண்டிய இடத்துல e போட்டு Deer Prema அப்படின்னு இங்க்லீஷ்ல ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட எழுதியிருக்க , ஃப்ரண்ட்ஸ் எல்லாம் படிச்சுட்டு செம கிண்டல் பண்ணிட்டாங்க எப்பவும் போலவே 'ப்ரிய பிரேமா'ன்னு எழுதியிருக்கலாம்தானேடான்னு'' கொஞ்சலாக கேட்டவளிடம் ''அவங்களுக்குத்தான் அது ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா தெரியுதுன்னா உனக்குமா புரியலை ? யென்றதும், 'ம்ஹ்ஹும் அப்படியென்ன இருக்கு அந்த ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல' என்று கேட்டவளிடம், ''துள்ளி ஓடுற மானுக்கு இங்க்லீஷ்ல Deerன்னு அர்த்தம்'' என்றேன் புரிந்து கொண்டவளின் 'இச்'சை அப்படியே எனக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தது தொலைபேசி..!
'டேய் வர்ற நவம்பர்09 செமஸ்டர்முடிஞ்சு ஊருக்கு வர்றேன்'னு அவள் சொன்னதிலிருந்து மனது வானத்துக்கும் பூமிக்கும் ராட்டினம் ஆடிக்கொண்டிருந்தது, நவம்பர் 10 என் வீட்டிற்கு வந்தவள் என் அம்மாவிடம் ''அத்தை நான் ஊருக்கு வர்றேன்னு சொல்லியிருந்தும் உங்க புள்ளை என்னை கூட்டிட்டு வர்றதுக்கு பஸ் ஸ்டாண்ட் பக்கம் கூட வரலை என்னாச்சு உங்க புள்ளைக்கு ? என்னை நான் ஒருத்தி இருக்கிறதை மறந்துட்டாரா?''அப்படின்னதும் 'அவன்கிட்டயே கேளும்மா'ன்னு அம்மா சொன்னங்க,முகம் சிவந்த கோவத்துடன் என் பக்கம் திரும்பியவளிடம், ஹும் உன்னை கூப்பிடத்தான் பஸ் ஸ்டாண்ட் வந்தேன் அங்க இருக்குற டைம் கீப்பர்கிட்ட நீ வரும் பஸ் பேர் சொல்லி எப்போ வரும்ன்னு கேட்டேன் அப்படி ஒரு பஸ்ஸே இல்லைன்னுட்டான்னு அப்பாவியாக சொன்னேன் , அப்படி என்ன பஸ் பேர் சொன்ன அவன்கிட்டன்னு கேட்டவளிடம் அதுவா ''ரதி ட்ரான்ஸ் போர்ட் எப்போ வரும்ன்னுதான்'' கேட்டேன் , அதுக்குத்தான் அவன் அப்படி ஒரு பஸ்ஸே இல்லைன்னு பதில் சொன்னான் கோவத்துல வீட்டுக்கு வந்துட்டேன்ன்னேன், நீயே சொல்லு ''நீ வரும் பஸ் ரதி ட்ரான்ஸ்போர்ட்டா மட்டும்தானே இருக்கும்''ன்னதும் சுத்தி முத்தி பார்த்துட்டு அம்மா சமையலைறைக்கு போயிட்டாங்கன்னதும் கன்னத்துல செல்ல முத்தம் கொடுத்துவிட்டு ஓடியே போய்விட்டாள்...
திருமணத்திற்க்கு பின்பு நானும் பிரேமாவும் குடியிருப்பதற்க்காக எங்கள் தெருவில் புதியதாக கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்டில் ஒரு மனை முன்பதிவு செய்திருந்தேன் , ஒரு நாள் அந்த அபார்ட்மெண்ட் பில்டர்ஸ் பிரேமாவிடம் , 'நாங்க கட்டிக்கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட்டில் மொத்தம் ஐந்து மனைகள் ப்ளான் பண்ணி கட்டிக்கொண்டிருக்கிறோம் நீங்கள் முன்பதிவு செய்த மனை தவிர மீதமிருக்கும் நான்கு மனைகளுக்கும் குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல்ன்னு பெயர் வைத்துவிட்டோம் நீங்கள் வாங்கிய மனைக்கு எதாவது பெயர் சஜ்ஜெக்சன் கொடுங்களேன்; என்று கேட்டிருப்பார்கள் போல என்னிடம் பிரேமா சொன்னதும் , ''மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி'' , ''காடும் காடு சார்ந்ததும் முல்லை'' , ''வயலும் வயல் சார்ந்த இடமும் மருதம்'' , ''கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல்'' அப்படியென்றால் ''நீயும் நீ சார்ந்த இடமும் தேன்கூடாய்த்தான் இருக்கமுடியும்'' அதனால் ''தேன்கூடு'' அப்படின்ற பெயர்வைக்கச்சொல்லி அவங்ககிட்ட சொல்லிடு பிரேமான்னதும் வாயடைத்துப் போய்விட்(டோம்)டாள்...! தேனும் கிடைத்தது ...!
பிரேமா ஒருநாள் காலை நேரம் அந்த புதிய வீட்டின் மொட்டை மாடியில் துணிகளை துவைத்து காயவைத்துக்கொண்டிருந்தாள் நான் மாடியில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்படியே பிரேமாவை பார்த்து அங்க பார் பிரேமா எப்பவும் நாந்தான் உன்னை சில்மிஷம் செய்வேன் ஆனா இங்க பார் ,''உன் புடவை என் சட்டையை சில்மிஷம் செய்து கொண்டிருக்கிறது'', என்றதும் நமுட்டு சிரிப்பு சிரித்தவளிடம் அவளைப்பற்றி எழுதிய சில கவிதைகளை காண்பித்தேன் படிப்பதற்க்கு முன்பு ''காலையில எல்லாரும் காலைக்கடன் வரும்ன்னா உங்களுக்கு கவிதைக்கடன் வருதாக்கும்'' என்று நக்கல் பண்ணியவள் படிக்க ஆரம்பித்தாள்...
தன் இறகுகளை
தானே துவைத்து
உலரவைக்கும்
அதிசய மயிலாக நீ''
பறவைகள் சரணாலயம்
நீ
அழகுகள் சரணாலயம்''
''அமாவாசையன்று
உன்னருகிலிருக்கும்
தன் குழந்தைக்கு
நிலாச்சோறு
ஊட்டுகிறாள்
அடுத்தவீட்டுப்பெண்''
''உன்னை
சந்திக்கும்பொழுதெல்லாம்
அழகை அதன் குகையிலே
சென்று சந்திப்பது
போன்றுதானிருக்கிறது''
''பள்ளிக்கூடம் போனால்
ஒரே படிப்பு படிப்பு
உன்கூடம் வந்தால்
ஒரே இனிப்பு இனிப்பு''
''காமத்தை
போஸ்டலிலும்
முத்தத்தை
கூரியரிலும்
அனுப்பும்
சமயோசிதக்காரி நீ''
நன்றி வணக்கம்.
.
18 comments:
nice...
'துணி உலர்த்துகையில்,
தன் இறகுகளை
தானே துவைத்து
உலரவைக்கும்
அதிசய மயிலாக நீ''
அழகான அபூர்வமான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஆகா என்னமா எழுதி இருக்கீங்க எப்புடித்தான் யோசிப்பீங்களோ.
'உன்னை
சந்திக்கும்பொழுதெல்லாம்
அழகை அதன் குகையிலே
சென்று சந்திப்பது
போன்றுதானிருக்கிறது''
அருமையா இருக்கு நண்பா..
நீண்ட நாளுக்குப் பின்னர் தங்களை இணைப்பரப்பில் காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது..
அற்புதமான கற்பனை..
பாராட்டுகள்..
நிஜமோ..நிழலோ...ரசித்தேன்...தொடருங்கள்...தொடருகிறேன்....
இப்படிலாம் காதலா யோசிச்சு பதிவைப் போட, சாப்பாட்டுக்கு பதில் காதலையே மூணு வேளையும் சாப்பிடுறியா தம்பி?!
எல்லாக்கவிதையுமே அழகுதான் என்றால் இது பேரழகு...
'துணி உலர்த்துகையில்,
தன் இறகுகளை
தானே துவைத்து
உலரவைக்கும்
அதிசய மயிலாக நீ
அருமை நண்பா...
If possible correct the typo as 'written' instead of 'writtened'
****Needless to publish this comment****
Very Nice!
kalakkal pongkall,...vaalththukkal
//''அமாவாசையன்று
உன்னருகிலிருக்கும்
தன் குழந்தைக்கு
நிலாச்சோறு
ஊட்டுகிறாள்
அடுத்தவீட்டுப்பெண்''//
செம!!
ரதி வீதி உலா நல்லாருக்கு :))
ம்ம்ம்ம்... இன்னொரு சைந்தவி சீரிஸா... நல்லா இருக்கு...
பதிவும் கவிதைகளும் அருமை வசந்த்.டீன் ஏஜ் காதல் போல தித்திக்கிறது.
கலக்கல் மாப்ள!
கவிதையும், கதையும் அருமை....காதலும் காதல் சார்ந்த கவிதைகளும், உங்கள் கற்பனையில் அழகாய் வெளிவருகிறது வாழ்த்துக்கள் வசந்த்...
அதிகம் ரசித்த கவிதை
துணி உலர்த்துகையில்,
தன் இறகுகளை
தானே துவைத்து
உலரவைக்கும்
அதிசய மயிலாக நீ'
செமயா இருக்கு மாப்ஸ்.....
மாப்ஸ் சூப்பர் காதல் க(வி)தை ...
Post a Comment