அலாரம் இல்லாத ஞாயிறில் நீண்ட தூக்கம் நாயகனது பழக்கம் , ஆனால் திருமணத்திற்கு பிறகு மிருதுளாவோடான ஞாயிறுகள் சுவாரஸ்யம் மிகுந்தவைகளாக இருப்பதினால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உற்சாகத்தோடு எழும்பிவிடுகிறான் , ஒரு ஞாயிறு நாயகனுக்கும் மிருதுளாவுக்கும் நடக்கும் சுவாரஸ்யங்களின் கற்பனைகள் இதோ.. கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கும் ரசிகர்களே டேக் கேர் ..!!!!
*******************************************************
காலை 7 மணி
ஹேய் மிர்து இங்க வாயேன் என்றேன் என்ன என்று கொஞ்சலாக வினவியவளிடம், இல்ல இன்னிக்கு சண்டே தெரியும்ல என்றேன் கண் சிமிட்டியபடி , தெரியும் தெரியும் அதான் பயமா இருக்கு என்றபடி ''வெட்கத்தை முக முழுக்காட்சியாக ரிலீஸ் செய்கிறாள்''. ம்ம் பின்ன ஆக வேண்டியதை பார்ப்போமே என்றேன் ஸ்ஸ்ஸப்பா இன்னிக்கு உன்னோட சமையலை சாப்பிடணும்ன்னு விதி வேற வழி ஆரம்பிடா ஆரம்பி இன்று உன்னுடைய மெனுவில் காலை டிஃபன் என்ன என்று வினவியவளிடம் ''எனக்கு டிஃபன் நீதான்'', உனக்கு சூடா நெய் தோசையும் , தக்காளி சட்னியும் , தேங்காய் சட்னியும் , தால் பவுடரும் வித் காஃபி ஒகேவா மிர்து? என்றதும் '' என் டிஃபன் ஒகே ஆனா உனக்கு சொன்ன டிஃபன் கிடைக்காது கிடைக்காது முதுகுல டின்னுதான் கிடைக்கும்'', ஆமா ஆளப்பார் ஆள, ''சரி விடு லஞ்சா இருந்துட்டுப்போ'' என்றேன், 'அட ராமா' என்று தலையில் கைவத்தவளிடம் ம்ஹ்ஹும் 'அட காமா' ன்னு சொல்லிப்பார் அட்டகாசமா இருக்கும் என்றதும் ரைட்டு இன்னிக்கு மதியம் டிவிடில 'வாரணம் ஆயிரம்' படம் பார்க்கலாம்ன்னு இருந்தேன் நீ 'தோரணம் ஆயிரம் 'அப்படின்ற நடக்கட்டும் நடக்கட்டும் மகனே உன் சமர்த்து என்று வெட்கசிரிப்பு சிரிக்கிறாள்.
காலை 10 மணி
நான் சோஃபாவின் ஹேண்டில் பக்கம் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்தேன் , அருகில் வந்து அமர்ந்த மிருதுளா ''தோசையில என்னடா கலந்த ஒரே கிறக்கமா இருக்கு'', என்றபடி என் மடியில் தலைவைத்து கால் நீட்டி சொகுசாக டிவி பார்த்தவளிடம் ஒன்னும் இல்ல ''கொஞ்சம் அன்பு அதிகமா கலந்திட்டேன் போல'' அதான் என்றேன். டிவியில் சாமி திரைப்படத்தில் விக்ரம் த்ரிஷா நடித்த இவன்தானா என்ற பாடல் ஓடிக்கொண்டிருந்தது விக்ரம் திரிஷா தக்காளிபழம் சீன் வந்ததும் 'அய்யய்யோ' என்றேன் , ஏண்டா என்னாச்சு என்று கேட்டவளிடம் , ''இன்னிக்கு தக்காளி சட்னி வைக்கிறப்போ இந்த சீனை மிஸ் பண்ணிட்டேனே மிருதுளா மிஸ் பண்ணிட்டேனே'', என்றதும் 'ச்சீய்ய் எப்போ பாரு இதே நினைப்புத்தானா உனக்கு' சரி சரி இன்னிக்கு லஞ்ச் டின்னர் எதுலயுமே தக்காளி வாசமே இருக்கக்கூடாது புரிஞ்சதா? ரைட்டு தக்காளி இல்லைனா என்ன ட்ரம்ஸ்டிக் சேர்த்திடறேன் என்றதும்தான் தாமதம் என்ன நினைத்தாளோ தெரியவில்லை ஓடிச்சென்று ஃப்ரிட்ஜில் இருக்கும் ட்ரம்ஸ்டிக் அத்தனையையும் டஸ்ட் பின்னில் போட்டுவிட்டு ''இப்போ என்ன பண்ணுவ இப்போ என்ன பண்ணுவ'' என்று வக்கனை காட்டுகிறாள்..!
பிற்பகல் 1 மணி
'மிருதுளா லஞ்ச் ரெடி சாப்பிடலாமா'' என்றேன் ம்ம் ஒரு மணி நேரத்துல குளிச்சிட்டு வந்திடறேன் என்றாள் ஏண்டி குளிக்கிறதுக்கு ஒரு மணி நேரம் அப்படின்றது உனக்கே ஓவரா இல்லையா? என்றேன், என்னையென்ன உன்னை மாதிரி நினைச்சியா ''தேவதையாக்கும் நான்'' ஒரு மணி நேரம் வெயிட் பண்ண முடிஞ்சா வெயிட் பண்ணு இல்லைனா துன்னுட்டு குப்புறபடுத்து தூங்கிடு ஐ டோண்ட் கேர்ன்னு சாதாரணமா சொன்னவளின் தந்திரம் வெகுவாகவே புரிந்தது , என்னை இந்த பகலில் தூங்க வைத்திட வேண்டுமென்ற அவளின் ஆசையை தகர்க்கவும் எனக்கும் தெரியுமென்பது அவளுக்கெப்படி தெரியும், இன்று இவள் என்னதான் செய்கிறாள் என்று பார்ப்போமே என்று நினைத்தபடி தூங்குவது போல் பாசாங்கு செய்தேன், உடை மாற்றிவிட்டு வந்தவள் என்னை நோக்கி வரும் சத்தம் கேட்கிறது கொரட்டை சத்தத்தை அதிகப்படுத்தினேன் கிட்ட வந்தவள் என் தலையை கோதியபடி 'சமர்த்து தூங்கிட்டான்' என்று குதூகளித்தவளை, அப்படிலாம் நினைச்சுடாத என்றபடி எழுந்து வா சாப்பிடலாம் என்று அழைத்து சென்று திகட்ட திகட்ட அத்தனை உணவுகளை பரிமாறினேன். 'நீ சாப்பிட்டயா? என்று கேட்டவளிடம், இல்லை ''நீ சாப்பிடாம நான் எப்படி சாப்பிடறதாம்'' என்றதும் நான் எதிர்பார்த்தபடியே 'லஞ்சாக ப்ரஞ்சு முத்தம் கிடைத்தது'.
மாலை 6 மணி
வா வெளில ஷாப்பிங் போகலாம் என்று அவளை பைக்கில் அழைத்து சென்றேன் அவள் நிறத்துக்கேற்ற இளஞ்சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள் என் ட்ரெஸ் எப்படிடா இருக்கு என்றவளிடம் , 'இப்போ நீ தேவதை', 'இந்த பைக் தேர்' , 'நான் தேரோட்டுபவன் ', ''தேவதையுலா வருகிறாள் வழிவிடுங்கள் என்றபடிதான் ஹாரன் ஒலிக்கிறது'', ''சாலைகளின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் உன்னிடம் அழகுபிச்சையேந்தி கையேந்தி நிற்கின்றன'' , ''செல்லும் வழியெங்குமிருக்கும் பாதைகளின் பெயர்களெல்லாம் தேவதைவீதி 1, தேவதை வீதி 2, தேவதை வீதி 3 என்றபடி பெயர் மாறுகின்றன'' , ''துணிக்கடை பொம்மைகள் சந்தோஷப்பட்டுக்கொள்கின்றன தனக்கு பதில் இன்னொருத்தி வந்துவிட்டாளென்று'' , உன் வாசம் கலந்த காற்று ஊரெங்கும் உன் அழகை பரப்பி ''உன் அழகுபரப்பு செயலாளர் தான் தான் என்று நிரூபிக்கிறது'' , இப்படி சொல்லி அவளின் அத்தனை வெட்கத்தையும் ஒரே நாளில் அனுபவித்தேன். வீட்டிற்கு வா உனக்கு இருக்கு மவனே என்றவளிடம் அதான் எனக்கு தெரியுமே தெரியுமே என்றதும் ''எமகாதகன்டா நீ'', என்றவளிடம் இல்லை ''காமகாதகன்'' என்றதும் தொடையில் நறுக்கென்று கிள்ளிவிட்டாள் ..!
இரவு 9 மணி
''மணி 9 ஆச்சு சரி வா டின்னர் சாப்பிடலாம்'', என்றேன். டின்னர்தான் வெளியில சாப்பிட்டோமே இன்னும் என்ன டின்னர் ? ஹும் அது என்ன டின்னர் அதுல ''நிறமில்ல சுவையில்ல, திடமும் இல்ல'', இப்போ நான் கொடுக்கிற டின்னர்ல '' நிறம் நீ இருக்க , சுவையாய் முத்தம் இருக்க, திடமாய் நான் இருக்க'', 'இனிக்க இனிக்க பசியாறலாம் வா', என்றேன் . 'எப்படிடா இப்படி எல்லாத்தையும் கவிதையாவே பேசற எனக்கு உன்னைப்பார்க்க பார்க்க பொறாமையா இருக்கு உனக்காக நான் ஒன்னுமே செய்யலை சொல்லலைன்றதும் வருத்தமா இருக்கு, என்றவளின் தலை கோதி அட லூசு ''திருமண வாழ்க்கையில் யாராவது கணவன் மனைவி இரண்டு பேரில் யாராவது ஒருத்தர்தான் ரசிகனாக இருக்க முடியும்'', இப்போ இங்க நமக்குள்ள நடக்குற திருமண வாழ்க்கையில ''நான் உன்னோட ரசிகன் எப்பவும் உன்னை மட்டுமே ரசிக்கும் ரசிகன்'', என்று விளக்கமளித்ததுதான் தாமதம் கையைப்பிடித்து விறு விறுவென்று இழுத்துச்சென்று 'டின்னர் பரிமாறினாள்' ..
திரும்பவும் வாசிக்கணும்னா இதோ இந்த பாடலை கேட்டபடியே வாசியுங்கள் Enjoy The Holiday..!
18 comments:
neeee thieyvam annaatheyyyyyyyyyyy
Super Sir.
செம்மயா இருக்குண்ணே, சூப்பர்ப் :)
மாப்ஸ்.... கண் முன்னாடி காட்சிகள் விரியுது ....சபாஷ் மாப்ஸ்
//லஞ்சாக ப்ரஞ்சு முத்தம் கிடைத்தது//
நல்லா இருக்கு :)
மச்சி வெறுமனமே நல்லாயிருக்குன்னு டெம்பிளேட் கமெண்ட் போட விருப்பமில்ல....
நினைவலைகளா? எப்படியாயினும் அருமை...
வாரத்துக்கு வாரம் வித்தியாசமா?
க்...கும்...(கனைப்பு...!) செம மூட் போல...!
செம......!!!
சிறந்த பதிவு.. பாராட்டுக்கள் பல...
// 'இப்போ நீ தேவதை', 'இந்த பைக் தேர்' , 'நான் தேரோட்டுபவன் ', ''தேவதையுலா வருகிறாள் வழிவிடுங்கள் என்றபடிதான் ஹாரன் ஒலிக்கிறது'', ''சாலைகளின் ஓரத்தில் இருக்கும் ஒவ்வொரு பூக்களும் உன்னிடம் அழகுபிச்சையேந்தி கையேந்தி நிற்கின்றன'' , ''செல்லும் வழியெங்குமிருக்கும் பாதைகளின் பெயர்களெல்லாம் தேவதைவீதி 1, தேவதை வீதி 2, தேவதை வீதி 3 என்றபடி பெயர் மாறுகின்றன'' , ''துணிக்கடை பொம்மைகள் சந்தோஷப்பட்டுக்கொள்கின்றன தனக்கு பதில் இன்னொருத்தி வந்துவிட்டாளென்று'' , உன் வாசம் கலந்த காற்று ஊரெங்கும் உன் அழகை பரப்பி ''உன் அழகுபரப்பு செயலாளர் தான் தான் என்று நிரூபிக்கிறது'' , இப்படி சொல்லி அவளின் அத்தனை வெட்கத்தையும் ஒரே நாளில் அனுபவித்தேன்//
Classic!
சுவாரஸியம்;)வெகு ரசனையா இருக்கு!
super sir, oru life vaalendha madhiri iruku.yenavarudan thanks, ok sir athu yena 1717?
சபாஷ்... இரு மனங்களின் காதலை அருமையா பரிமாறியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாரே ஸ்பெஷல் தானே..
சிறந்த பதிவு.. பாராட்டுக்கள்
மன்னிக்கவும்.
உங்கள் பதிவுகளுக்கான வலைச்சரத்தின் சரியான முகவரி..
http://blogintamil.blogspot.com/2011/08/3_17.html
இடைவெளி விட்டு வந்தாலும் செம கலக்கலான் பதிவுடன் வந்திருக்கே தம்பி. வாழ்த்துக்கள்
சண்டேன்னா "ரெண்டு" ஓக்கே. இதென்ன ஐந்து? ஐந்து மட்டும்தானா? இல்ல கணக்கில் வராததும் உண்டா?
Post a Comment