January 23, 2012

மூடு பனி [U/A]



இருவரும் ஒருமுறை பக்கதிலிருக்கும் மலைப்பிரதேசம்  மூணார் சென்றிருந்தோம் குளிரானது காற்றுடன் கைகோர்த்திருந்த வேளை நாங்களும் கைகோர்த்தபடி பனிமூட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தோம். ''இவ்வளவு அருகில் நான் மூடுபனியை பார்த்ததில்லை'', என்றவளிடம் ''நான் கிட்டதட்ட மூடு பனியோடதான் வாழ்க்கையே நடத்திக்கொண்டிருக்கிறேன்'', என்றேன் அவளுக்கு விளங்கவில்லை என்னது என்றாள் . ''நீ என்கிட்ட இருக்கிறப்போ எனக்கு உன்னைத்தவிர வேறு எதுவுமே தெரிவதில்லை அதான் மூடுபனின்னு சொன்னேன்'', என்றதும் என் கன்னத்தில் மென் முத்தமிட்டாள். இன்னொரு அர்த்தமும் இருக்கிறது சொல்லவா என்றேன் ம் என்றவளிடம் ''நீ எப்பவும் குளிர்ச்சியா இருக்க, ஆனா இப்போகூட அந்த அந்த ஹிப் தெரியாம சேலை கட்டி எப்பவும் இழுத்துப்போர்த்திட்டு இருக்க இல்ல அதான் நீயொரு மூடுபனின்னு சொன்னேன்'', என்றதும் ச்சீய்ய் என்ற சின்ன சிணுங்கலுடன் ''மூடுடா பன்னி'' என்று நக்கலாய் கண்ணடித்து சிரிக்கிறாள் .

மற்றொரு நாள் அலுவலகத்தில் லஞ்ச் டைமில் தலைவியின் மொபைலுக்கு அழைத்து ''இன்றைக்கு நீ கொடுத்தனுப்பிய லஞ்ச் சூப்பர்டி என்று சொல்லிவிட்டு என்ன பண்ணிட்டு இருக்க?'' ,என்றேன். பதிலுக்கு,''சும்மாதாங்க கார்ட்டூன் பார்த்திட்டு இருக்கேன்'' என்றவளிடம், என்னடி இது ஒரு குழந்தைக்கு தாயாக போற இன்னும் கார்ட்டூன் பார்த்திட்டு இருக்க உனக்கு கொஞ்சம் கூட ஷையா இல்லியா?, என்றேன். இல்லியே என்றவள், ''நீங்க இந்த Pooh கார்ட்டூன் பார்த்தா அப்படி சொல்ல மாட்டீங்க  என்றாள். ஓஹ் அப்படியென்ன இருக்கிறது அந்த Pooh கார்ட்டூனிடம்?, என்றதும், அது அப்படியே உங்களைப்போலவே செம்ம க்யூட்ங்க அதானென்று இழுத்தாள்.... அடிப்பாவி என்னை ஒரு நிமிஷத்துல கார்ட்டூன் ஆக்கிட்டியேடி இரு இப்போவே பார்க்கிறேன் என்று இணையத்தில் Pooh கார்ட்டூன் தேடி கண்டுபிடித்து வீடியோவை ஓடவிட்டேன் வீடியோ ஓடிய சில நிமிடங்களில் நான் சிரித்த சிரிப்பில் அலுவலகமே அதிர்ச்சியடைந்ததென்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மாலை அலுவலகம் முடிந்ததும் ரெடிமேட் ஷோரூம் சென்று Pooh கார்ட்டூன் அணிந்திருந்த அதே கலரில் சட்டை இல்லையில்லை பிளவுஸ் பீஸ் வாங்கி சென்று அதே போல அணிந்து அவள் முன் நின்று இப்போ சொல் ஷையா இருக்கா இல்லியா என்றதும்தான் தாமதம் என்னை பார்த்ததும் குபீரென்று சிரித்துக்கொண்டே வெட்கத்தை வீடெங்கும் சிதறவிட்டுக்கொண்டிருந்தாள் நான் அதை சேகரித்துக்கொண்டிருந்தேன்.


இன்னொரு நாள் மாலை நேரம் வீட்டில் இருந்த சமயம் குளித்துமுடித்து மல்லிப்பூவும் வாசமுமாய் வீட்டை அதகளப்படுத்திக்கொண்டிருந்தாள் நான் ''மல்லிகமொட்டு மனசத்தொட்டு இழுக்குதடி மானே'' என்ற பாடலை பாட ஆரம்பித்திருந்தேன் அய்யடா ஆரம்பிச்சுட்டார்யா பாட்டு வாத்தியார் என்று நக்கலடித்தவளை இன்றைக்கு ஒரு வழி பண்ணிவிடுவது என்றபடி மேலும் பாட ஆரம்பித்திருந்தேன் இடையில் வரும் பாடி வச்சு பாடி வச்சு பதுக்கிவச்சதெல்லாம் காதலிக்க காதலிக்க வெளஞ்சு வந்ததென்னவென்று பாடியபடியே அவளைப்பார்த்து கண்ணடித்தேன் ச்சீய் என்றவள் இந்த கவிஞர்கள் சுத்த மோசம் எப்படிலாம் டபுள்மீன் பண்றாங்க என்றாள் எல்லாம் நம்மளைப்போன்றவர்களுக்காகத்தான் என்றதும் ம்க்கும் உங்களைப்போன்றவர்களுக்கென்று சொல்லுங்கள் என்றாள் அப்படியும் வைத்துக்கொள்ளலாம் என்றபடி பூவரசம் பூவுக்குள்ள இருப்பதென்ன சொல்லு பூப்பறிக்கும் மாப்பிள்ளைக்கு பசிக்குதம்மா நில்லு மேற்கொண்டு பாடலை பாட ஆரம்பிக்கவும், அதற்க்குமேல் அங்கு நின்றால் ஒரு வழி பண்ணிவிடுவேனென்று நினைத்திருப்பாள் போலும் ஒரே ஓட்டமாய் உள் அறைப்பக்கம் ஓடியவளை விரட்டிப்பிடித்தேன் அறையெங்கும் வளையல் மெட்டுச்சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது...

இன்னொரு சமயம் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் . வாக்குவாதம் முற்றி பிறந்தவீட்டுக்கு பெட்டியும் கையுமாக கிளம்ப ஆரம்பித்திருந்தாள்  . நிலைமையை சமாளிக்க இறுதியில் ''நீ சரியான கல்நெஞ்சக்காரி அதான் என்னை விட்டு போற இல்ல'', என்றேன். என் முகத்துக்கு நேரே வந்தவள் ''உங்க நெஞ்சைத்தொட்டு சொல்லுங்க நான் கல்நெஞ்சக்காரியா?'' என்றபடி கண்களில் கண்ணீர் மிதக்க கேட்டவளை நான் ஏன் என் நெஞ்சை தொட்டு சொல்லணும் ''நீயே தொட்டுப்பார்த்துக்கோ நீ கல் நெஞ்சுக்காரியா இல்லையாவென்று சிரிப்பை அடக்க முயன்று தோற்று சிரித்துவிட்டேன்''. புரிந்துகொண்டவள் ஆவேசத்துடன் உங்களை உங்களையெல்லாம் என்று சொல்லியபடி கையிலிருந்த பெட்டியை என் காலில் டொப்பென்று போட்டுவிட்டு இப்போ சொல்றேன்  ஆமா நான் கல் நெஞ்சக்காரிதான் என்றவளின் கோபம் பறந்து தாபமாகியிருந்தது.

நேற்று ஹேய் செல்லம் தலைவர் படம் பார்த்துட்டேன்டி சூப்பரா இருக்கு நாளைக்கு சண்டேதானே ரெண்டுபேரும் மேட்னி ஷோ போகலாம் ரெடியா இருடி என்றேன் தேவியிடம் பதிலுக்கு அவள் அடடா நீங்களாச்சு உங்க தலைவராச்சு உங்க தலைவர் படத்தை மனுஷி பார்ப்பாளா? அடுத்த மாசம் எங்க தலைவர் படம் ரிலீஸ் அப்போ போகலாம் சரியா என்றபடி எப்படி என் நோஸ் கட்? என்றாள், என்ன இப்படி டபக்கென்று தலைவரப்பற்றி தப்பாக சொல்லிவிட்டாள் என்று அவளின் நோஸ்கட்டை வைத்தே அவளுக்கு நோஸ்கட் கொடுக்கலாமென்று அவளிடம், இங்க பாரு தலைவர் படத்துல ஒரு அறிவு பூர்வமான கொஸ்டின் ஒன்னு இருக்கு அதுக்கு பதில் சொல்லிட்டா உன் தலைவர் படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ போகலாம் சரியா? என்றேன் சரி என்றவள் என்ன கொஸ்டின்? என்றாள் அது வந்து ஒன்னும் இல்ல கிஸ் அடிக்கும்போது மூக்கும் மூக்கும் இடிச்சுக்குமான்ற ஒரு சின்ன கேள்விதான் ஓஹ் என்று மோவாயில் கை வைத்து யோசித்தவள் நிறைய கமல் படத்துல கூட பார்த்திருக்கேன் ஆனா சரியா தெரியலியே என்றாள் நான் சொல்லவா என்றேன் ம்ம் கிட்ட வாயேன்டி என்றபடி ஒரு ஃப்ரெஞ்ச் கிஸ்ஸடித்ததும் ''இட்ச்சிக்கும்'' என்று ஈனஸ்வரத்தில் சொல்லினாள்... தலைவா யூ ஆர் கிரேட்..




நன்றி..

10 comments:

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு வசந்த் :)

சமுத்ரா said...

Romantic..

Marc said...

அருமை நண்பரே வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

Chill....

vinu said...

he he he he same pintch matchi

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி கல்பனா

நன்றி சமுத்ரா

நன்றி தனசேகர்

நன்றி ஸ்ரீராம்

நன்றி வினு

ஹேமா said...

மூடுபனி...ம் நல்லதொரு கற்பனை.காதலிச்சா இப்பிடியெல்லாம் கற்பனை வருமோ !

Unknown said...

cast away ஹி ஹி... மூடுபனி குளிர் ஜாஸ்த்தி.. சும்மா சன் டிவி டாப் டென் மாதிரி சொல்லிப்பாத்தேன் வசந்த்... :)

rempradeep said...

மதிப்பிற்குரிய வசந்த் அவர்களே வாழ்க்கையை அனுபவிக்க சந்தோஷ்துக்கு ஒரு நல்ல லைப் பட்நேர் கிடைச்சால் காதல் இன்பமும் , காமம் இன்பமும் ரசிக்க முடியும் உங்கலே போலே....

Prem S said...

அன்பரே கலக்கல் கதை கண் முன்னே காட்சிகளாய் விரிகின்றன அதன் உங்கள் வெற்றி வாழ்த்துகள்