வைத்தியம்1
படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே ஏன்?
அதுதான் `மசாலா` படமாச்சே...
வைத்தியம்2
முட்டையிட்டு குஞ்சு பொரிக்காத இனம் எது?
கணக்கு வாத்தியார் இனம்
வைத்தியம்3
ஒருவர் : அந்த டாக்டர் ராசியில்லாதவர்ன்னு சொன்னீங்க
மற்றவர்: ஆமா
ஒருவர் : நான் விசாரிச்சுட்டேன் அவருக்கு கடக ராசியாம்
மற்றவர்:??????????????
வைத்தியம்3
ஆபரேசன் தியேட்டர்ல டெலிபோன் வைக்காதீங்கன்னு சொன்னேனே டாக்டர்
கேட்டீங்களா?
ஏன் என்னாச்சு?
அதுவும் டெட் ஆயிடுச்சு......
வைத்தியம்4
ஒருவர் :ஒரு பத்து ரூபா கடனா குடுப்பா?
மற்றவர்: எங்கிட்ட சுத்தமா பணம் இல்லீங்க..
ஒருவர் : அழுக்கா இருந்தாலும் பரவாயில்லீங்க.....
வைத்தியம்5
ஆசிரியர்:ஒரு மணி நேரமா கரடியா கத்துறேன் புரியலேங்கிறியே
மாணவன் : கரடி பாஷை எல்லாம் எனக்கு தெரியாது......
வைத்தியம்6
ஹீரோயின்னுக்கு எதிர்ப்பதம் என்ன?
ஹீரோ
இல்ல ஹீரோ அவுட்
வைத்தியம்7
ஒருத்தி ; ஏண்டி உன் கணவர் அடிக்கடி சுகர் டப்பாவ திறந்து பாக்குறார்?
மற்றொருத்தி : டாக்டர் தான் அவர அடிக்கடி சுகர் இருக்கான்னு செக் பண்ண சொல்லி இருக்கார்
வைத்தியம்8
வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது?
லைட் ஹவுஸ்
வைத்தியம்9
அந்த பாம்புக்கு என்ன நோயாம்?
வேறென்ன புற்று நோயாம்
வைத்தியம்10
ஒருத்தர்:உன் பேரு சீனி வாசன் தானே ஏன் வாசன்னு மாத்திட்டே
மற்றவர்:டாக்டர் தான் என்ன சீனியே சேர்க்க கூடாதுன்னு சொல்லிருக்கார்
2 comments:
\\வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது?
லைட் ஹவுஸ்\\
இதுதான் டாப்பு வஸந்த்..
நன்றி தலைவா,,,,,,,
Post a Comment