சொர்க்கம் நரகம் இரண்டிலும் அன்று காலை உணவு வழங்கப்பட்டது.சொர்க்கம் நரகம் இரண்டுக்குமே ஒரே மாதிரியான பழ உணவு வகைகள்.சொர்க்கத்தில் உண்டவர்கள் யாவரும் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர். நரகத்தில் உண்டவர்கள் எல்லாம் மிகவும் களைப்புடன் உள்ளே சென்றது போலவே திரும்ப வந்தனர் மிகவும் களைப்புடனும் காணப்பட்டனர்.இதைக்கண்ட கடவுள் ஏன்? இவர்கள் இரு பிரிவினருக்கும் ஒரே மாதிரியான உணவுதானே வழங்கப்பட்டது சொர்க்கத்தில் இருப்பவர்கள் மிக மகிழ்ச்சியுடன் வருகின்றனர் நரகத்தில் இருந்து வருபவர்கள் மிக களைப்புடன் காணப்படுகின்றனரே என எண்ணியவாறு இன்று மதிய உணவு வேளையின் போது உணவுக்கூடத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தனக்குள் கூறியவாறு சென்றார்.
(குறிப்பு: சொர்க்கம், நரகம் இரண்டில் இருப்போரின் முழங்கை மடக்க முடியாதவாறு கட்டப்பட்டிருக்கும்)
மதிய உணவுக்கான நேரம் வந்தது இம்முறையும் சொர்க்கவாசிகள், நரகவாசிகள் இருவருக்கும் ஒரே மாதிரியான பழங்கள் உணவாக படைக்கப்பட்டது.கடவுள் முதலில் நரகவாசிகள் உணவுக்கூடத்திற்க்கு சென்றார் அங்கு ஒவ்வொருவரும் பழத்தை மேலேதூக்கிபோட்டு அன்னாந்து வாயில் பிடிக்கும் வித்தை செய்துகொண்டிருந்தனர் ஒருவராலும் பழங்களை சரியாக உண்ணமுடியவில்லை கைகள் கட்டப்பட்டுருப்பதால்.பழங்கள் அங்கொன்று இங்கொன்றாக சிதறி வீணாய் சென்று கொண்டிருந்தது.ஒஹோ இது தான் விசயமா என்று எண்ணியவாரே கடவுள் சரி சொர்க்கத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்ப்போம் என்று சொர்க்க உணவுக்கூடத்திற்க்கு சென்று பார்த்தார் ஆச்சர்யம் அங்குள்ள மக்கள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டுக்கொண்டு உணவுகளை மகிழ்ச்சியாக உண்டனர்.இதைக்கண்ட கடவுள் இவர்கள் சொர்க்கத்திற்க்கு வந்தது சரிதான்,அவர்கள் நரகத்திற்க்கு சென்றது சரிதான் என எண்ணிக்கொண்டார்.
இதிலிருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்வதினால் மிக மகிழ்ச்சியாய் இருக்க முடியும் என்று தெரிகிறது.

சின்ன புள்ளைல அம்மா சொல்லுவாங்க உன்னைய பெத்ததுக்கு அம்மிக்கல்ல பெத்துருக்கலாம் இல்லைன்னா தென்னம்பிள்ளைய பெத்துருக்கலாம் அதுங்க கூட உதவும் நீ உதவ மாட்டேன்றியேன்னு...முதல்ல அம்மா அப்பாவுக்கு உதவியா இருங்க அம்மாவுக்கு வீட்டு வேலைகளில்அப்பாவுக்கு தொழிலில் உதவியா இருங்க உதவியா இல்லாட்டினாலும் உபத்திரமா இருக்காதீங்க...
உதவி பண்ணுங்க....
1.துடுப்பு கூட உதவி பண்ணுகிறது ஓடம் செல்வதற்க்கு..எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
2.புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
3.ஏணியும் கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றிவிட.....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..
4.மரம் கூட நிழல் தந்து நமக்கு உதவுகிறது...எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்...
ரோட்டுல விபத்துல அடிபட்டிருப்பவரை பார்த்து உச்சு கொட்டுவதை நிறுத்துங்கள் முதலுதவி பண்ணுறவரை தடுக்காதீங்க அதுவே நீங்க அவருக்கு செய்யுற மிகப்பெரிய உதவி...
அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.
உதவி பண்ணிட்டு அதை ஊர்ல உள்ள அம்புட்டுபேருக்கும் போஸ்டர் அடிக்காத குறையாக தம்பட்டம் அடிக்காதீங்க ,அதுக்கு நீங்க உதவி பண்ணாமலே இருக்கலாம்.(உ.தா) நம்ம நடிகர்கள் பண்ணுற உதவிகள்.....
கோவில் போன்ற புனித ஸ்தலங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் நம் மக்கள் தங்கள் பெயரையே அந்த அன்பளிப்பு பொருள் மறையுற அளவுக்கு பொறிச்சுருப்பாங்க.....தேவையா இந்த விளம்பரம்......(உ.தா)டியூப்லைட் அன்பளிப்பு கருவேல்னாயக்கன்பட்டி க.மு.கே.கருப்பசாமி....கருப்பு கலர்ல இதுல எங்க வெளிச்சம் தெரியும்?
கல்யாணவீட்டுல நீங்க அளிக்கும் அன்பளிப்பு மணமக்களுக்கு நீங்கள் தரும் பரிசு அன்பு பரிசாய் இருக்கட்டும் வம்பு பரிசாய் வேண்டாம்(உ.தா) உங்க மகனுக்கு நான் ஆயிரம் மொய்யெழுதினேன் நீங்க ஐனூறுதான் எழுதிருக்கீங்கன்னு ஆரம்பிக்கிற சண்டை பெரிய கொலை கேசே ஆயிருக்கு தேவையா வம்பு......முடிந்ததை செய்யுங்கள்......
நீங்கள் செய்கிற உதவி ஒருவரால் மனதாரா வாழ்த்தட்டும் உதட்டால் அல்ல.....
எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி.....
ஒருவேளை உணவளித்தாலும் மனதளவால் அளியுங்கள் கையளாவால் அல்ல.....
தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....
தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...
கஷ்டத்திலும், நஷ்டத்திலும் துவண்டிருக்கும் ஒருவனுக்கு நீங்கள் கூறும் ஆறுதல் கூட உதவிதான்.......
இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்க்கு.........
49 comments:
//இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவதற்க்கு.........//
சின்னப் பையனுக்கு என் வாழ்த்துக்கள் -நான் எந்த உதவியும் உங்கிட்ட எதிர் பார்க்க இல்லையப்பா..
//அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.//
நல்ல உதாரணம்
கட்டபொம்மன்
http://kattapomman.blogspot.com/
நீங்க நல்லது சொல்லி எங்களுக்கு உதவி செஞ்சி இருக்கீங்க ...
//அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.//
அசத்திட்டிங்க....
மனச பிழிஞ்சு எடுத்துட்டீங்க. ஐயோ இப்போ நான் உடனே யாருக்காவது உதவி பண்ணணுமே.....யாருக்காவது கை மாத்தா பத்து ரூபா வேணுமா?
பதிவு சூப்பர். அந்த கதை சொன்ன விதமும் கதையின் கருவும் அருமை. வாழ்த்துக்கள்
post sooper....karuthu arumai....
ana antha kathai naan draft la vachirukarathu:-((((( pocheee...naan poda mudiyathee:-(((
சிறு வயதில் சிறுவர்மலரில் படித்த கதை
அருமை வசந்த்
தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....
தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...
தத்துவமழை பொழிகின்றீர்
கல்யாணவீட்டுல நீங்க அளிக்கும் அன்பளிப்பு மணமக்களுக்கு நீங்கள் தரும் பரிசு அன்பு பரிசாய் இருக்கட்டும் வம்பு பரிசாய் வேண்டாம்(உ.தா) உங்க மகனுக்கு நான் ஆயிரம் மொய்யெழுதினேன் நீங்க ஐனூறுதான் எழுதிருக்கீங்கன்னு ஆரம்பிக்கிற சண்டை பெரிய கொலை கேசே ஆயிருக்கு தேவையா வம்பு......முடிந்ததை செய்யுங்கள்.....
சரிங்க...
இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்க்கு.........
கண்டிப்பா சகோதரரே...
வசந்த் ரொம்ப சந்தோஷமாயிருக்கு..இப்ப நீங்க மிகச் சரியான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கீங்க..ஆம் இது தொடர்ந்தால் மனதளவில் இருக்கும் உங்கள் சிறந்த எண்ணங்களும் அதன் நோக்கங்களும் விரைவில் செயலாக்கமாகும்...தொடரட்டும் வாழ்த்துக்கள்...
கதை அருமையாகவுள்ளது..
சொல்லிய விதம் அதைவிட அருமையாகவுள்ளது...
ஒரே ஒரு சந்தேகம் ....
/இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்கு........./
அந்த சின்னப்பையன் யாரு?
நீங்க தானே?
நல்ல கருத்துக்கள் வசந்த், சில சமயத்தில் உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் செய்யாமல் அமைதியாக இருந்தால் அதுவும் ஒரு உதவித்தான். நல்லா சொலலி இருக்கீங்க.
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்..
ரொம்ப நல்ல விஷயம் தான் வசந்த். உதவி செய்யலேன்னாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாமல் இருக்குறது எவ்வளவோ சிறந்தது. நாம் செய்யும் உதவியை, உதவியாய் நினைக்காமல் கடமையாய் நினைத்து செய்துவிட்டு போய்கிட்டே இருக்கணும். அவ்ளோதான்
//இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்க்கு.........//
எவ்வ்ளோ பண்ணியிருக்கோம்...இதைப் பண்ணமாட்டோமா???
அருமையான கதை...ஏற்கெனவே படித்ததுதான்.....பூங்கொத்து!
அருமை வசந்த்.
அட பாருடா.. புள்ள
என்னமா ஃபீல் பண்ணி
எழுதுறத.. ம், வசந்த்
இந்த இடுகையை படிச்சிட்டு,
ச்சு.. ச்சு ன்னு
சொல்லிட்டு நான் என் வேலையை
பார்பேன், நீங்க உங்க வேலையை
பார்பிங்க.. ம்ம்! என்னத்த கருத்து
சொல்றது?
ஓட்டு போட்டாச்சு!!
அய்யா வஸந்த்
உதவி செய் என்ற பாட்டுதான் ஞாபகம் வருது
நீங்க சொன்ன கதையிலே கடவுளுக்கே டவுட் வந்துடுச்சா என்ன கொடும சரவணா இது
//நீங்க சொன்ன கதையிலே கடவுளுக்கே டவுட் வந்துடுச்சா என்ன கொடும சரவணா இது//
கதையை வசந்த் கொஞ்சம் மாற்றி சொல்லிவிட்டார்.
பல நல்ல காரியங்களை செய்துவிட்டு சொர்க்கத்திற்கு வந்த ஒருவர், நரகம் என்பது எப்படியிருக்கும் என்று பார்க்க ஆசைப்படுவார். அவர் சொர்க்கம், நரகம் சுற்றி பார்ப்பதே கதை.
நல்ல விசயத்தை எப்படி சொன்னா என்ன?
கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான்.
நச்
எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி...
அற்புதம் !!!!!!!
ஒரே பீலிங் போங்க ..
////புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..////
எடுத்துக் காட்டல்கள் அருமை.....
தொடருங்கள்....
hi R u alright?
What happend?
// ஜெஸ்வந்தி said...
//இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவதற்க்கு.........//
சின்னப் பையனுக்கு என் வாழ்த்துக்கள் -நான் எந்த உதவியும் உங்கிட்ட எதிர் பார்க்க இல்லையப்பா..//
நன்றி ஜெஸ்வந்தி
// கட்டபொம்மன் said...
//அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.//
நல்ல உதாரணம்
கட்டபொம்மன் //
வாங்க கட்டபொம்மன் தங்கள் முதல் வருகைக்கு நன்றி
//நட்புடன் ஜமால் said...
நீங்க நல்லது சொல்லி எங்களுக்கு உதவி செஞ்சி இருக்கீங்க ...//
அப்படியா?நன்றி ஜமால் அண்ணா
//சந்ரு said...
//அடுத்தவன கவுக்குறதுக்கு நீங்க கொடுக்குற ஐடியா உதவி கிடையாது.அடுத்தவன் அடுத்தடுத்த வெற்றி பெற நீங்க கொடுக்குற ஐடியா தான் உதவி.//
அசத்திட்டிங்க....//
நன்றி ச ந் ரு
// VISA said...
மனச பிழிஞ்சு எடுத்துட்டீங்க. ஐயோ இப்போ நான் உடனே யாருக்காவது உதவி பண்ணணுமே.....யாருக்காவது கை மாத்தா பத்து ரூபா வேணுமா?
பதிவு சூப்பர். அந்த கதை சொன்ன விதமும் கதையின் கருவும் அருமை. வாழ்த்துக்கள்//
எனக்கு பத்து ரியால் தான் வேணும்
கொடுக்க முடியுமா?
நன்றி விசா
//இயற்கை said...
post sooper....karuthu arumai....
ana antha kathai naan draft la vachirukarathu:-((((( pocheee...naan poda mudiyathee:-(((//
வட போச்சே......
யாரு சொன்னா என்னாங்க?
நன்றி இயற்க்கை
//sakthi said...
தேவைப்படும் பொழுது நீங்கள் உதவும் ஒரு ரூபாயும் ஒருகோடிக்கு சமம்.....
தேவையில்லாத பொழுது நீங்கள் அமிர்தமளித்தாலும் அது நஞ்சாக தெரியும்...
தத்துவமழை பொழிகின்றீர்//
நன்றிக்கா
//தமிழ் பிரியன் said...
;-)
//
வாங்க தமிழ்பிரியன் என்ன சிரிப்பு
//தமிழரசி said...
வசந்த் ரொம்ப சந்தோஷமாயிருக்கு..இப்ப நீங்க மிகச் சரியான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கீங்க..ஆம் இது தொடர்ந்தால் மனதளவில் இருக்கும் உங்கள் சிறந்த எண்ணங்களும் அதன் நோக்கங்களும் விரைவில் செயலாக்கமாகும்...தொடரட்டும் வாழ்த்துக்கள்...//
நீங்க கொளுத்திப்போட்டத்துதான இன்னும் ஜுவாலைய்யா எரியும்....
கருத்துக்களுக்கு நன்றி தமிழ்
//முனைவர்.இரா.குணசீலன் said...
கதை அருமையாகவுள்ளது..
சொல்லிய விதம் அதைவிட அருமையாகவுள்ளது...
ஒரே ஒரு சந்தேகம் ....
/இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்கு........./
அந்த சின்னப்பையன் யாரு?
நீங்க தானே?//
ஆமா சார் நன்றி புரஃபசர்
// ஷஃபிக்ஸ் said...
நல்ல கருத்துக்கள் வசந்த், சில சமயத்தில் உதவி செய்யாவிட்டாலும், உபத்திரம் செய்யாமல் அமைதியாக இருந்தால் அதுவும் ஒரு உதவித்தான். நல்லா சொலலி இருக்கீங்க.//
கருத்துக்களுக்கு மிக்க நன்றி ஷஃபி
//வினோத்கெளதம் said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.
வாழ்த்துக்கள்..//
நன்றி வினோத்
// S.A. நவாஸுதீன் said...
ரொம்ப நல்ல விஷயம் தான் வசந்த். உதவி செய்யலேன்னாலும் பரவாயில்லை, உபத்திரம் செய்யாமல் இருக்குறது எவ்வளவோ சிறந்தது. நாம் செய்யும் உதவியை, உதவியாய் நினைக்காமல் கடமையாய் நினைத்து செய்துவிட்டு போய்கிட்டே இருக்கணும். அவ்ளோதான்//
நீங்க வேறமாதிரிய்யா?
நன்றி நவாஸ்
//அன்புடன் அருணா said...
//இப்போ நீங்க இங்கு அளிக்கும் பின்னூட்டமும்,ஓட்டும் கூட உதவிதான் எழுத பழகிகொண்டிருக்கும் ஒரு சின்ன பையனின் எழுத்துக்கள் மென்மேலும் வெளிவருவருவதற்க்கு.........//
எவ்வ்ளோ பண்ணியிருக்கோம்...இதைப் பண்ணமாட்டோமா???
அருமையான கதை...ஏற்கெனவே படித்ததுதான்.....பூங்கொத்து!//
நன்றிகள் அருணா
// எவனோ ஒருவன் said...
அருமை வசந்த்.//
நன்றிகள் எவனோ ஒருவன்
// கலையரசன் said...
அட பாருடா.. புள்ள
என்னமா ஃபீல் பண்ணி
எழுதுறத.. ம், வசந்த்
இந்த இடுகையை படிச்சிட்டு,
ச்சு.. ச்சு ன்னு
சொல்லிட்டு நான் என் வேலையை
பார்பேன், நீங்க உங்க வேலையை
பார்பிங்க.. ம்ம்! என்னத்த கருத்து
சொல்றது?
ஓட்டு போட்டாச்சு!!//
நன்றி கலையரசன்
//அபுஅஃப்ஸர் said...
அய்யா வஸந்த்
உதவி செய் என்ற பாட்டுதான் ஞாபகம் வருது
நீங்க சொன்ன கதையிலே கடவுளுக்கே டவுட் வந்துடுச்சா என்ன கொடும சரவணா இது//
கடவுளுக்கு டவுட் வரக்கூடாதா?
//குடந்தை அன்புமணி said...
//நீங்க சொன்ன கதையிலே கடவுளுக்கே டவுட் வந்துடுச்சா என்ன கொடும சரவணா இது//
கதையை வசந்த் கொஞ்சம் மாற்றி சொல்லிவிட்டார்.
பல நல்ல காரியங்களை செய்துவிட்டு சொர்க்கத்திற்கு வந்த ஒருவர், நரகம் என்பது எப்படியிருக்கும் என்று பார்க்க ஆசைப்படுவார். அவர் சொர்க்கம், நரகம் சுற்றி பார்ப்பதே கதை.
நல்ல விசயத்தை எப்படி சொன்னா என்ன?
கோழி குருடா இருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதான்.//
சின்ன வயசுல கேட்ட கதைப்பா அதான் மாறிருக்கும் ஆனா கருத்து ஒண்ணுதான்...
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
நச்//
நன்றிதல
//செந்தழல் ரவி said...
எண்ணி தருவது உதவியல்ல .... நல்ல எண்ணத்தால் தருவதே உதவி...
அற்புதம் !!!!!!!//
வாங்க ரவி தங்கள் முதல் வருகைக்கு நன்றி
// சூரியன் said...
ஒரே பீலிங் போங்க ..//
அப்பிடியா?
நன்றி சூரியன்....
சப்ராஸ் அபூ பக்கர் said...
////புல்லாங்குழலும் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து....எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்..////
எடுத்துக் காட்டல்கள் அருமை.....
தொடருங்கள்....
வாங்க அபு
குறை ஒன்றும் இல்லை !!! said...
hi R u alright?
What happend?
ஏம்பா நான் எழுதுனது உங்களுக்கு பிடிக்கலியா?
No Vasanth.. Not like that..illa romba nondhu pona maathiri irundhathu athaan
அருமையான இடுகை.. வாழ்த்துகள் நண்பா
நல்ல கருத்து.
//குறை ஒன்றும் இல்லை !!! said...
No Vasanth.. Not like that..illa romba nondhu pona maathiri irundhathu athaan//
நோ பிராப்லம்
//கார்த்திகைப் பாண்டியன் said...
அருமையான இடுகை.. வாழ்த்துகள் நண்பா//
மிக்க நன்றி நண்பா
//அக்பர் said...
நல்ல கருத்து.//
நன்றி அக்பர்
அருமை
//திகழ்மிளிர் said...
அருமை//
நன்றி திகழ்மிளிராரே......
நல்லா இருக்கு அங்கிள். இந்த கதை எனக்கு முன்னாடியே தெரியுமே! உங்களை விட நாங்க சின்ன புள்ளைங்க! இங்க வந்து பாருங்க: http://sutties.blogspot.com/2009/09/blog-post_05.html
சூப்பர் வசந்த் குமார்...
அருமையா இருக்கு, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிட்டா வாழ்கையே சந்தோசம்தான்.
நன்றி பகிர்தமைக்கு,
சூப்பர் வசந்த் குமார்...
அருமையா இருக்கு, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிட்டா வாழ்கையே சந்தோசம்தான்.
நன்றி பகிர்தமைக்கு,
Post a Comment