January 17, 2010

நீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மாலதியாக இருந்திருந்தால் உங்கள் மன நிலை என்ன?

கவிதாவும் பாஸ்கரும் உடன் பிறப்புக்கள் பாஸ்கரோட நண்பன் சரவணன் , சரவணன் அடிக்கடி பாஸ்கர் வீட்டுக்கு வந்து போயிட்டு இருக்கான், சரவணனோட கலகல ரவுசு பிடிச்சுப்போய் கவிதா சரவணன காதலிக்கிறாள் ஒருதலையாக...ஒரு நாள் சரவணன் கவிதாவோட வீட்டுக்கு வரும்பொழுது பாஸ்கர் எங்கன்னு கவிதாவிடம் சரவணன் கேட்க வெளியில போயிருக்கான்னு சொல்லிட்டே அவன இருக்கி அணைச்சு உதடோடு உதடா முத்தம் குடுக்கிறாள்.....


ராஜா வயது 29 திருமணவயது , நல்லவன் நல்லவனாக காட்டிக்கொள்ளவும் விரும்புவன் ஒரு நல்ல நாளில் பெண்பார்க்க அம்மாவோட போகிறான், போகும் வழியெல்லாம் கட்டிக்கப்போறவள் இப்படி இருக்கணும் ,அழகா இருக்கணும்,கொஞ்சும் குரல்ல பேசணும் , நல்ல குடும்ப பெண்ணா இருக்கணும் இப்படி பல எதிர் பார்ப்போடு போய்ட்டு இருக்கான், அடிக்கடி சிரிச்சிக்கிறான் அவங்கம்மாவும் அக்காவும் தம்பியும் கிண்டல் பண்ணிட்டே வர்றாங்க திடீர்ன்னு அவங்க போயிட்டு இருக்குற கார் மரத்தில மோதி ராஜாவைத்தவிர யாரோட உயிருமே மிஞ்சலை....


தங்கப்பாண்டியும் ராம்குமாரும் சிறு வயசுல இருந்தே இணைபிரியா நண்பர்கள் ராம்குமார் நல்ல வசதியானவன்,தங்கப்பாண்டி ஒருநாள் தன்னோட தொழில் விருத்திக்காக ராம்குமார்கிட்ட 10லட்சம் கடனா வாங்குறான் எந்த ஒரு பிணையும் இல்லாம தங்கப்பாண்டிமேல இருக்கிற அதீத நம்பிக்கையில ராம்குமார் அந்தப்பணத்தை கொடுக்கிறான்.ஒரு வருசம் போனபிறகு ராம்குமரோட பிஸினெஸ் படுத்திடுச்சு தங்கப்பாண்டி ஓஹோன்னு வந்திட்டான் இப்போ ராம்குமார் தங்கப்பாண்டிகிட்ட உதவி கேட்க்கப்போறான் அவன் உதவி செய்வானோ செய்ய மாட்டானோன்ற குழப்பத்திலயே போய் அவன்கிட்ட உதவி கேட்கிறான் அப்போ தங்கப்பாண்டி அவனோட சொத்தெல்லாம் ராம்குமாருக்கு எழுதிகுடுத்திடுறான்....


பாமா பத்தாவது படிக்கிறாள், மாதத்தேர்வு,காலாண்டு,அரையாண்டு,எந்த தேர்விலயும் முழுசா பாசானதே இல்லை , எல்லாமே அவுட் இது தெரிஞ்சு அவங்கப்பா ஸ்பெசல் கிளாஸ் அது இதுன்னு ஏற்பாடு பண்ணி நல்லா கோச்சிங்க் குடுக்கிறாங்க முழுஆண்டு தேர்வுக்காக , முழுஆண்டு தேர்வும் வந்திடுச்சு தமிழ். ஆங்கிலம், கணிதம் தேர்வெல்லாம் முடிஞ்சது அறிவியல் பரிட்ச்சை அன்னிக்கு அதிகாலை பாமாவோட அப்பா செத்துப்போயிட்டார்....


மாலதிக்கும்,நிரஞ்சனுக்கும் திருமணமாகி ஐந்து வருடமாச்சு குழந்தைப்பேறே இல்லை , இதுக்காக அவங்க வேண்டாத கடவுள், சுத்தாத கோவில் இல்லை ஒரு நல்ல நாளில் மாலதி கருவுருகிறாள் குழந்தை வயிற்றிலிருக்கும் ஒவ்வொரு நாளும் நிரஞ்சன் மாலதியை ராணியாக கொண்டாடுறான் பிறக்கப்போகிற குழந்தைக்கு பெயர் வைக்கிறாங்க, துணி, பொம்மையெல்லாம் வீடு நிறைய வாங்கி வைக்கிறாங்க பிரசவத்துக்காக ஆஸ்பத்திரி போறாங்க பிரசவமும் நல்லபடியா ஆச்சு ஆனா குழந்தை இறந்து பிறந்திருச்சு..அதே நாள் நிரஞ்சன் ஒரு விபத்தில கால் இழந்திட்டார்....


இப்படி வாழ்வில் எதிர்பாராத அன் எக்ஸ்பெக்ட்டட் விஷயங்கள் நடக்கும்போது நீங்கள் சரவணனாக, ராஜாவாக, ராம்குமாராக, பாமாவாக, மாலதியாக இருந்திருந்தால் உங்கள் மன நிலை என்ன? அப்போ வாழ்க்கையில நாம் நினைக்கிற விஷயங்கள் மட்டுமே நடக்கணும்ன்னு நினைக்கிறது எந்தவிதத்தில் சரி? இதைப்போன்ற எதிர்மறை விஷயங்களும் நடக்கலாம் அதுக்கேற்றவாறு நடந்து கொள்வது எப்படின்னு தயார் படுத்திக்கிடுறது நல்லதா? கெட்டதா?



31 comments:

பெசொவி said...

இது பற்றி ஒரு பதிவே எழுதலாம், வசந்த்!
குறிப்பாக ஒன்று : மாற்றம் ஒன்றே மாற்றமில்லாதது. இதை உணர்ந்தால், திடீர் திடீர் என்று வரும் மாற்றங்களையும் ஏமாற்றங்களையும் சமாளித்துவிட முடியும். (எனக்கு பதிவு எழுத ஒரு கரு கிடைத்தது, நன்றி!)

Paleo God said...

அடுத்தவரின் அனுபவங்களில் வாழ்வு புரிந்து கொள்பவன் ஞானி..:)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-)))

கலையரசன் said...

கதை நன்று! வளைச்சு வளைச்சு வண்டி ஓட்டுற..
எதிர் பாராத திருப்பங்கள் நிறைந்திருக்கு வசந்த்!!
வாழ்த்துக்கள்.. இதே போல் தொடருங்கள்..


இப்படிக்கு,
கடமைக்கு பின்னூட்டுவோர் சங்கம்!!

Chitra said...

Expecting the unexpected concept. நல்ல கேள்விகள்.

சீமான்கனி said...

முதலில் இந்த பதிவுக்கு நன்றி மாப்ஸ்...தயார் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை, மூளையை அதற்க்கு அடிமையாக்கி விடுவதுதான் ...நம்மை மேலும் பலவீனமாக்கும்....

கமலேஷ் said...

நாளுக்கு நாள் உங்களின் தேடலும், பார்வையும் விரிந்து கொண்டே போகிறது நண்பா...மிக நல்ல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்ரீர்கள் நன்றி...

கமலேஷ் said...

நாளுக்கு நாள் உங்களின் தேடலும், பார்வையும் விரிந்து கொண்டே போகிறது நண்பா...மிக நல்ல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்ரீர்கள் நன்றி...

கமலேஷ் said...

நாளுக்கு நாள் உங்களின் தேடலும், பார்வையும் விரிந்து கொண்டே போகிறது நண்பா...மிக நல்ல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்ரீர்கள் நன்றி...

கமலேஷ் said...

நாளுக்கு நாள் உங்களின் தேடலும், பார்வையும் விரிந்து கொண்டே போகிறது நண்பா...மிக நல்ல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்ரீர்கள் நன்றி...

S.A. நவாஸுதீன் said...

வசந்த்,

Accept the reality - இதுக்கு விளக்கம் தான் நீங்க இங்க சொல்லி இருக்கீங்க.

சில விஷயங்களுக்கு உங்களிடம் தீர்வோ அல்லது தடுக்கும் சக்தியோ இல்லாதிருக்கும் பட்சத்தில் அதை நினைத்து வருத்தப்பட்டுகிட்டு இருப்பதால் பயனேதும் இல்லைன்னு தெளிவா தெரிஞ்சு முடிவெடுக்கும் சூழ்நிலைகள் தான் இவை. ஆனாலும் இந்த சூழ்நிலையில் சாதாரண மனிதனுக்கு கையாளுவது கடினம். அதற்கு அசாதரணத்தனமை, இன்னும் சொல்லப்போனால் கல்நெஞ்சக்காரனாக மாறினால்தான் உண்டு. அதுதான் அந்த சூழ்நிலைக்கு தக்க மருந்து.

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு வசந்த், ஓட்டு போட்டாச்சு :-).

நான் என்றும் நானாகவே இருக்க விரும்புகிறேன்!.

Ashok D said...

வசந்த்... சைட்டு அடிக்கற பொன்னு ஏதாவது சொல்லிடுச்சா?

நட்புடன் ஜமால் said...

கெட்டதுக்கும் தயாராக இருப்பது நல்லதே

rajamelaiyur said...

ஏன் இந்த கொலைவெறி ..
நல்லதும் நடக்கலாம் ..
But
"இதுவும் கடந்து போகும்" என வாழ்வதே சிறப்பு

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

எதிர்பாராமல் எதிர்பாராத நிகழ்வுக்ள் நடக்கும் பொழுது - தன்னைத்தானே தேற்றிக்கொண்டு அடுத்த நிகழ்வினிற்குத் தயாராக வேண்டும் - ஆனால் முடியுமா ???

நம்மை நாமே தான் தயார் செய்ய வேண்டும்

நல்வாழ்த்துகள் வசந்த்

malar said...

நீங்கள் எழுதீயிருபது படிக்கவே எப்படியொ இருக்கு.

ஹேமா said...

வசந்து....வாழ்வில் எதுவும் நிலையானதல்ல.எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம்.தளராத மனதோடு பக்குவப்பட்ட நிலையில் இருந்தொமேயானால் எதுவும் எம்மைப் பாதிக்காது.பாதிக்கும்போதும் எம்மை நாம் உணர்ந்துகொள்வோம்.

ஸ்ரீராம். said...

பக்குவப் பட்ட மனதை பொறுத்தது. இதற்கெல்லாம் இயற்கையாகவே மனம் தயாராகவே இருக்கும்.

வினோத் கெளதம் said...

முதல் பத்தியில வர சரவணன் நானா இருந்தா என் மனநிலை சுமா 'ஜிவ்வு'ன்னு இருக்கும்..

இப்படிக்கு
'உள்ளொன்று வைத்து வெளியொன்று பேசதெரியாதவர்கள்' சங்கத்தை சேர்ந்த ஒருவன்..:)

ANU said...

உங்க முதல் கதைப்படி கவிதா முத்தம் கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.காதலை வெளிப்படுத்தாமல்
எந்த பொண்ணும் அப்படி பண்ண மாட்டாள்.இல்லை என்றால் அது காதலாக இருக்க முடியாது.

நான் சரவணாக இருந்திருந்தால்
பளார்னு கவிதாக்கு கன்னத்தில் அடித்திருப்பேன்

ANU said...

ராஜாவின் இடத்தில் இருந்தால்

மனம் நொறுங்கியிருப்பேன்

jothi said...

good questions,..

கயல் said...

ம்ம்! நல்ல பதிவு! சிந்திக்க வைக்குது!

நல்லது நடக்கனும்னு ஆசைப்படற மனசுக்கு கெட்டத தாங்கிகிற/எதிர்பார்க்குற மனசும் இருந்தா நாமெல்லாம் சாதாரண மானிடப்பிறவி இல்ல! அசாதாரணம். விரும்பியபடி செல்ல முடிவெடுத்து அதுபடி நடப்பது மனித இயல்பு! புறக்காரணிகள் வேறு வழி திருப்பினும் உறுதியிருந்தால் திரும்பி நாம் விரும்பின பாதைக்கே வந்துடலாம்! ஆனா திரும்பின பக்கம் மரணத்தை தவிர மத்த எந்த விரயமுன்னாலும் இது சாத்தியமுன்னு நெனைக்கிறேன்!
பக்குவப்பட்ட மனசு தோல்விகள் தரும் வரம்! கிடைக்கிற தோல்விகள விடாதே புடி!அதுபோலவே படின்னு சொல்லிக் கொடுக்கனும் மனசுக்கு!

அது சரி!

அதிக‌மா கேள்வி கேக்குறவன் ஒன்னு அதிபுத்திசாலியாக போறான்னு அர்த்தம்! இல்ல அரைப்பைத்தியமாகப் போறான்னு அர்த்தம்!
நீங்க‌ எப்படி?

பா.ராஜாராம் said...

நட்புடன் ஜமால் said...

//கெட்டதுக்கும் தயாராக இருப்பது நல்லதே//

ஜமால் மக்கா சொல்வதுதான் தம்பு.

சுசி said...

பிள்ளையாரப்பா மக்கள காப்பாத்துங்க..

சுசி said...

//அப்போ வாழ்க்கையில நாம் நினைக்கிற விஷயங்கள் மட்டுமே நடக்கணும்ன்னு நினைக்கிறது எந்தவிதத்தில் சரி?//

கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் சந்தோஷமா வாழனும்ல.. அப்போ அந்த விதத்தில சரி.

சுசி said...

//இதைப்போன்ற எதிர்மறை விஷயங்களும் நடக்கலாம் அதுக்கேற்றவாறு நடந்து கொள்வது எப்படின்னு தயார் படுத்திக்கிடுறது நல்லதா? கெட்டதா?//

ரொம்ப நல்லதுதான் உ.பி.
ஆனா எப்டின்னுதான் தெரீலப்பா..

Anonymous said...

என்னதான் மனசை பக்குவப்படுத்தி இருந்தாலும் அவங்கவங்களுக்குன்னு வரும்போது பேஜாராப்போயிடும்.

ப்ரியமுடன் வசந்த் said...

மிக்க நன்றி பெயர்சொல்லவிரும்பவில்லை சார் எழுதுங்க...

மிக்கநன்றி ஷங்கர் அப்போ நீங்க ஞானி :)

பட்டாபட்டி சூப்பர் ஸ்டில்

கலை மாப்பி கரெக்ட்டா புரிஞ்சிட்டு இருக்க...! இதுதான் எதிர்பார்த்தேன் உன்னோட பின்னூட்டம் பின் நவீனத்துவ பின்னூட்டம் :)

சித்ராமேடம் நன்றிங்க

சீமான் கனி மாப்பி ரொம்ப டாங்ஸ்ப்பா

மிக்க நன்றி கமலேஷ்

மிக்க நன்றி நவாஸ் சூப்பரா சொன்னீங்க கொஞ்சம் அரைகுறையா மனசுல இருந்துச்சு இப்போ கொஞ்சம் தெளிவாயிட்டேன் மிக்க நன்றி பாஸ்

நன்றி சிங்ககுட்டி

நன்றி அஷோக் அண்ணா

நன்றி ஜமால் அண்ணா கரீக்க்ட்டு..

நன்றி ராஜா

நன்றி சீனா ஐயா முடியும்ன்னு நினைச்சா எல்லாமே முடியும் தானுங்களே ஐயா மனசுதான் காரணம்

மலர் பீ கூல்...டாங்ஸ்

ஹேமா ம்க்கும் நன்றிங்க

ஸ்ரீராம் சரியா சொன்னீங்க ஸ்ரீராம் மனச பக்குவப்படுத்திகிடணும்

வினோத் ஹா ஹ ஹா நீ ரொம்ப நல்லவண்டா மச்சி நன்றி வினு

அனு முதல்ல முதன் முறையா வந்ததுக்கு நன்றி
இல்லீங்க நீங்க சொல்றது சரிதான் இப்பிடியும் நடக்குது கண்ணார பாத்திருக்கேன்...அதுக்காக எல்லா பொண்ணுகளும் அப்பிடின்னு சொல்லல ஒரு சிலர்..

ஜோதி நன்றிப்பா

கயலு உங்களுக்கும் முதல் முறையா என்னுடைய வலைத்தளம் வந்ததுக்கு நன்றி

என்னோட் அபவுட் மீல போட்ருக்கேனே கிறுக்கன்னு பாக்கலியா நீங்க :)

நன்றி பாரா

நன்றி சுசிக்கா பிள்ளையார் அவர காப்பாத்த நம்ம போகணும் அவரு நம்மள காப்பாத்துறாரா?

சந்தோசமா வாழ்றதுக்குத்தான் எல்லா விஷயங்களையும் ஏத்துகிடுற கல் நெஞ்சு வேணும்ன்னு சொல்றேனுங்கக்கா...

அகிலா அதுவும் சரி :)

சுந்தரா said...

யோசிக்க வைத்த பதிவு...

//இதைப்போன்ற எதிர்மறை விஷயங்களும் நடக்கலாம் அதுக்கேற்றவாறு நடந்து கொள்வது எப்படின்னு தயார் படுத்திக்கிடுறது நல்லதா? கெட்டதா?//

நிச்சயமா அதுதான் நல்லது. ரெண்டு பக்கமும் யோசிச்சுவச்சுக்கிட்டா எது நடந்தாலும் பாதிப்பு அதிகமாக இருக்காதில்ல...