January 20, 2010

பப்புவோடு ஒரு நாள்



ஹாய் மாம்ஸ் எப்படியிருக்க? சுகமா என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம் நான் கேட்ட இந்த கேள்விக்கெல்லாம் பதில் தெரியாம சுத்திட்டு இருக்க போல அப்பிடின்னு என்னை கிண்டல் பண்ணிட்டேவும்

மாம்ஸ் கண்ணடிச்சா காதல் வரும்ன்னு சொல்றாங்களே அப்பிடின்னா என்ன மாம்ஸ் எங்க சொல்லு பார்க்கலாம்ன்னான் டேய் பப்பு மனிதனோட ஒரு கண்ணு +,ஒரு கண்ணு -, இப்போ அங்கிட்டு அதாவது காதலனோட பாஸிட்டிவ் கண்ணு மூடுது இங்கிட்டு காதலியோட நெகடிவ் கண்ணு மூடுது அப்போ மீதியிருக்கிற ஒரு பாஸிட்டிவ் கண்ணும் ஒரு நெகட்டிவ் கண்ணும் சேர்ந்து அங்க காதல்ன்ற பல்பு எரியுது மாப்ஸ்ன்னதும் இது செம்ம மொக்க நீ எலக்ட்ரிகல் படிச்சிருக்கன்றதுக்காக இப்பிடியான்னு கேட்டுட்டு எம்மேல சுடுதண்ணிய ஊத்திட்டான்....


பிறகு நம்ம பதிவுலக ராணி ஆஸி தூயா எங்கிட்ட ஒரு கவிதை சொல்லி இது என்னான்னு கேட்டாங்கடா பப்பு எனக்கு எதுவும் புரியல உனக்கு தெரிஞ்சா சொல்லேண்டா டேய் பப்பு ப்ளீஸ் சொல்லுடா இல்லைன்னா என்னை ஜெயில்ல போட்ருவாங்கடா அந்த ஆஸி போலீஸ்ன்னு இவன்கிட்ட சொன்னேன் அதுக்கு அவன் நீதான் கவிதையெல்லாம் எழுதுறியே உனக்கு தெரியாதான்னு கேட்டான் டேய் பப்பு சாதரண கவிதையே எனக்கு புரியாது இது எனக்கு சுத்தமா புரியலடா உனக்குதெரியுமான்னதும், எங்க கவிதைய சொல்லு பார்க்கலாம்ன்னு கேட்டான் நானும் சொன்னேன்

தொலைதூர நெடும்பயணம்
வழியில் தவழும் சிறு குழந்தை
அள்ளி அணைத்துகொள்கிறேன்
தோளில் மறைந்து மிரள்கிறது
துரத்தும் வழிகள்
நானும் மிரள்கிறேன்
காரணம் வலிக்கிறது

-தூயா பாபா



ம்க்கும் இதுமாதிரி கவிதைக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சா நானெல்லாம் எதுக்கு உங்கூட பழக்கம் வச்சிருக்கேன்ன்னு செவுட்டுல அறைஞ்சிட்டான் உங்களுக்கு எதுனாலும் புரிஞ்சதான்னு சொல்லுங்க ஃப்ரண்ட்ஸ் புரிஞ்சிருந்தா இந்த கவிதைய நீங்க எப்படி புரிஞ்சிட்டீங்கன்னு அர்த்தம் சொல்லவும்....

நன்றி...



40 comments:

நசரேயன் said...

//இதுக்கு மினிமம் அஞ்சு மைனஸ் ஓட்டு எதிர்பார்க்கிறேன்...
//
அதிலே ஒண்ணு ௬ட நான் இல்லை

பா.ராஜாராம் said...

ரொம்ப பிடிச்சிருக்கு வசந்த்.

நட்புடன் ஜமால் said...

வழமை போல கலக்ஸ்

--------------

ம்க்கும் இந்த மாதிரி கவிதைக்கு அர்த்தம் தெரிஞ்சா - நானும் எழுத மாட்டனாக்கும்.

(அம்பூட்டு பி.நவீயா இது ...)

நட்புடன் ஜமால் said...

வழமை போல கலக்ஸ்

--------------

ம்க்கும் இந்த மாதிரி கவிதைக்கு அர்த்தம் தெரிஞ்சா - நானும் எழுத மாட்டனாக்கும்.

(அம்பூட்டு பி.நவீயா இது ...)

ஹேமா said...

வசந்து.....என்னமோ மிஸ்ஸிங்.

இருக்குடி...!நசர் சொன்ன மாதிரி மைனஸ் ஓட்டு.நானும் இல்லப்பா.

ஸ்ரீராம். said...

நல்லா இருக்கு வசந்த்..

balavasakan said...

கொத்தனார் வீடு ஓட்டை, தச்சன் வீட்டு கதவு பாழ், எழுத்தாளன் எழுத்தும் அப்படித்தான்

##என்ன ஒரு தத்துவம் வசந்து எங்கேயோ போய்ட்டீங்க பாஸ்..

Anonymous said...

அது என்ன மைனஸ் ஓட்டு மேல அவ்வளோ ஆசையா? நான் மைனஸ் ஓட்டு எல்லாம் போடறதில்லை.

Anonymous said...

வசந்த் நீ என்ன சொல்ல வரன்னு எனக்கு புரியலை ஆனால் படிச்சிட்டேன்......

cheena (சீனா) said...

ஆகா ஆகா பப்புவப் பாக்கணுமே - புத்திசாலியா இருககானே - நல்லாருக்கு வசந்து - கவிதை - நோ கமெண்ட்ஸ் - 90 பர்செண்ட் புரியுது

நல்வாழ்த்துகள் வசந்த்

Unknown said...

அது ஒண்ணும் இல்ல வசந்து, ஆயிரத்தில் ஒருவன் படக் கதைய சுருக்கமா 7 வரில எழுதியிருக்காங்க..

Rajeswari said...

very nice

ஈரோடு கதிர் said...

மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள் வசந்த்...

ஆச்சரியமா இருக்கு ... நீங்க எதிர்பார்த்த மாதிரி மைனஸ் வரலையே..

நான் 7/7 போட்டேன்

நன்றி

தொடருங்கள்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கவிதை நல்லா இருக்கு வசந்த்.. பப்பு யாரு உங்க மனசாட்சியா?

சந்தனமுல்லை said...

:-)))))


ஒரு நிமிஷம் எங்க பப்புவோன்னு நினைச்சுட்டேன்...தலைப்பைப் பார்த்துட்டு! :-)

பின்னோக்கி said...

சுத்தியல்..சுக்கு மேட்டர்லய தல சுத்திடுச்சு...

Thenammai Lakshmanan said...

கொம்பு வாலு எல்லாம் முடிஞ்சு புது அத்யாயமா கலக்குங்க வசந்த்

ஜெட்லி... said...

//மீதியிருக்கிற ஒரு பாஸிட்டிவ் கண்ணும் ஒரு நெகட்டிவ் கண்ணும் சேர்ந்து அங்க காதல்ன்ற பல்பு எரியுது மாப்ஸ்ன்னதும் இது செம்ம மொக்க நீ எலக்ட்ரிகல் படிச்சிருக்கன்றதுக்காக இப்பிடியான்னு //


எங்கையோ போய்ட்ட வஸந்த்...

சீமான்கனி said...

//மனிதனோட ஒரு கண்ணு +,ஒரு கண்ணு -, இப்போ அங்கிட்டு அதாவது காதலனோட பாஸிட்டிவ் கண்ணு மூடுது இங்கிட்டு காதலியோட நெகடிவ் கண்ணு மூடுது அப்போ மீதியிருக்கிற ஒரு பாஸிட்டிவ் கண்ணும் ஒரு நெகட்டிவ் கண்ணும் சேர்ந்து அங்க காதல்ன்ற பல்பு எரியுது//
அடடே அருமை...எப்படி மாப்ஸ்....பல்பு ஓகே மணி எப்படி அடிக்குது மாப்ஸ்...

S.A. நவாஸுதீன் said...

வசந்த்,

பப்பு உங்களைவிட படு ஸ்மார்ட். (நீங்களும்) நிறைய கத்துக்கலாம் நண்பா. அப்பப்ப எங்களையும் இந்தமாதிரி வந்து மீட் பண்ண சொல்லுங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நல்லாருக்கு வசந்த்

VISA said...

Nice :)

Raghu said...

//மீதியிருக்கிற ஒரு பாஸிட்டிவ் கண்ணும் ஒரு நெகட்டிவ் கண்ணும் சேர்ந்து அங்க காதல்ன்ற பல்பு எரியுது//

சுஜாதா இருந்திருந்தா, இந்த‌ க‌ண்டுபிடிப்புக்காக‌வே நீங்க‌தான் 'வச‌ந்த்'துக்கு இன்ஸ்பிரேஷ‌ன்னு சொல்லியிருப்பார்:)))

Ashok D said...

:)

தமிழ் உதயம் said...

மைனஸ் ஓட்டுனா என்னங்க.

சாந்தி மாரியப்பன் said...

எதுவும் புரியல்லை. ஆனா, கிராபிக்ஸ் படங்களை அருமையா பயன்படுத்தியிருக்கீங்க.

கலக்குங்க.

சாந்தி மாரியப்பன் said...

எதுவும் புரியல்லை. ஆனா, கிராபிக்ஸ் படங்களை அருமையா பயன்படுத்தியிருக்கீங்க.

கலக்குங்க.

சுசி said...

பப்புவ பாத்து ரொம்ப நாளாச்சே..
ரொம்ப நல்ல விளக்கம்.. விளங்கும்..

உ.பி.. சமத்தில்ல.. நீங்களே அடுத்த பதிவில சொல்லிடுங்க.. நான் சமத்தா படிச்சு புரிஞ்சுக்கிறேன் :)))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

வித்யாசமாய் இருந்தது!!!

அன்புடன் அருணா said...

No comments!

Jerry Eshananda said...

எனக்கு புரியுது, சொல்லிருவேன்,அப்புறம் தனியா உட்காந்து "கெக்க புக்கனு சிரிக்க கூடாது,"டீலா?நோ டீலா?

Ramesh said...

மிகவும் பிடிச்சிருக்கு

கவிதை எண்டா.... ம்ம்
இதை பாருங்க
http://sidaralkal.blogspot.com/2010/01/blog-post_12.html

Menaga Sathia said...

வசந்த் நலமா?இந்தியாவிலிருந்து வந்து ஒரே சோகமா இருக்கு.பதிவு நல்ல வித்தியாசமா கலக்கலா இருக்கு...

கயல் said...

ரொம்ப‌ ந‌ல்லாயிருக்கு வ‌ச‌ந்த்! ப‌ப்பு சாரு ரொம்ப‌ கோவ‌க்காரா?இப்படி அறிவாளித்தனமான கேள்வி கேக்கும் போது சூதனமா இருக்க வேணாம்?
:-)))தூயா க‌விதை அருமை!!!

goma said...

நானும் இது மாதிரி எழுதப் பார்க்கிறேன்...முடியவில்லையே....

Chitra said...

பப்பு .... அசத்துறாங்க.....!

Paleo God said...

வசந்து எனக்கு ஒண்ணு புரியுது..! ரெண்டு போட்டோ இருந்திச்சி இப்ப காணோம், கவித படிச்சா எங்கனையோ ஓடிப்போய்ட்ட மாதிரி.. ஒரு பீலிங்..

நிறைய ஆட்டோ வந்திச்சா..:)

சத்ரியன் said...

ஐய்யோ....ஐய்யோ...!

ப்ரியமுடன் வசந்த் said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள்

Anonymous said...

அட நல்லாதான் இருக்கு