January 27, 2010

என் கேள்விக்கென்ன பதில்?

என்னோட மனசுல தோணுற கேள்விகள் இவை இவற்றிற்க்கான விடைகள் உங்களிடம் இருக்கிறதா?

1. கடலுக்காக தண்ணீரா தண்ணீருக்காக கடலா?

2. நேரத்திற்க்காக கடிகாரமா கடிகாரத்திற்க்காக நேரமா?

3. தலைக்காக முடியா முடிக்காக தலையா?

4. மனிதனை படைத்த கடவுள் சிற்பியா கடவுளை படைத்த மனிதன் சிற்பியா?

5.ஆண்களுக்காக பெண்களா பெண்களுக்காக ஆண்களா அல்லது கணவனுக்காக மனைவியா இல்லை மனைவிக்காக கணவனா ?

6.நாம் பசிக்கு சாப்பிடணும்னா இதில் என்ன வேண்டும்?

அ) வாய்

ஆ) வயிறு

இ) சாப்பாடு

ஈ) பணம்

7.கற்புன்றது எதனோடு தொடர்புடையது?

அ) உடுத்தும் உடையில்

ஆ) மனதளவில்

இ) உடலளவில்

8.நீ,வா,போ,வாடா,போடா, இதற்க்கும் நீங்கள் வாருங்கள் போங்கள் என்பதற்க்கும் வார்த்தைகள் மட்டுமே வித்தியாசம் என்றால் மரியாதை என்பதை வார்த்தை அளவில் கொடுத்தால் போதுமா?மரியாதை என்பது வயது சம்பந்தபட்டதா? அல்லது வசதி அந்தஸ்து பொருத்து கொடுக்கப்படுவது மரியாதை என்றால் வசதியில்லாத ஒரு வயதான பெரியவரை வாடா போடான்னும் வசதியா இருக்குற சின்ன பையனை வாங்க போங்கன்னும் சொல்வீர்களா?

9. இலக்கணத்துக்கும் , மனுசனுக்கும் இருக்குற சின்ன மேட்டரோட குழப்பம் எனக்கு பல நேரம் தோணுது...நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன்? நடக்கும் நிகழ்காலம் மட்டுமே இரண்டிலும் சரியா இருக்கு இது எப்பிடி எனக்கு புரியலை?ஒரு வேளை இதை புரிஞ்சுகிடுற அளவுக்கு மனப்பக்குவம் எனக்கு வரலியா இல்லை நான் லூஸான்னு தெரில?

10.இன்னிக்கு குளிச்சுட்டு இருக்கும்போது உன்னைப்பத்தி நீ தெரிஞ்சிகிடணும்ன்னா உன்னோட எதிரில் இருக்கும் பொருளிடம் உன்னைப்பற்றி நீயே கேட்டுப்பார்ன்னு யாரோ சொன்னது ஞாபகம் வந்துச்சு இந்த சோப் கிட்ட நம்மளப்பத்தி கேட்டுபார்த்தா என்னன்னு யோசிக்கும்போது சோப் என்கிட்ட கேட்ட கேள்வியெல்லாம் ரொம்ப அபத்தமா இருந்துச்சு...உங்களை பற்றி தெரிஞ்சுகிடணும்ன்னு நினைக்கிறவங்க உங்க சோப்கிட்ட நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கங்க...

11.காற்று வீசியது புயல் அடித்தது, வெயில் அடிக்குதுன்னு சொல்றாங்களே காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா?

12.ஊனமுற்றவங்களை அதாவது மாற்றுதிறன் இருப்பவர்களை நொண்டி,குருடன்,மூடன்னு சொல்றோமே அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து எல்லாமே நல்லா இருக்குற நம்மளை நல்ல கையன்,நல்ல காலன் , நல்ல கண்னன்னு சொல்லுவாங்களோ?

13.முதியோர் இல்லம் இருக்குறமாதிரி ஊர்சுற்றி இல்லம்ன்னு வெட்டியா ஊர்சுத்துறவங்களுக்கும் ஒரு இல்லம் இருந்திருந்தா பெத்தவங்க வேலையில்லாத புள்ளைய அங்க போய் சேர்த்துருப்பாங்களோ?

யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா......

80 comments:

நசரேயன் said...

//யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா....//

கல்லு இல்லை இனிமேல அனுகுண்டுதான்

Anonymous said...

வேற ஒண்ணும் இல்ல. உங்களுக்கு நேரம் நிறைய இருக்கு. அதான் இப்படியெல்லாம் தோணுது. :)

ஹேமா said...

வசந்து....நானும் ஒரு மணித்தியாலமா உங்க பதிவிலயே கண்ணை வச்சுப் பாத்து வாசிச்சு வாசிச்சுப் பாத்திட்டேன்.உண்மையா பதில் சொல்ல வேணுமான்னு சொல்லுங்க.சொல்ல்லிப் பாக்கிறேன்.

சில இயல்புகள் இப்படித்தான்னு இருக்கு.மாறமுடியாத மாற்றங்கள்.அவைகள்தான் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள்.

கிறுக்கன்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கு !

Chitra said...

யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா......
............... நாங்க மட்டும் பாவம் இல்லையா? இந்த மொக்கை கேள்விகள் அனைத்தும் படிச்சோமே?

ஆ.ஞானசேகரன் said...

இடுகைக்காக கேள்வியா? கேள்விக்காக இடுகையா? வசந்த்>>>>>>>?

நட்புடன் ஜமால் said...

7) ஆ.

மற்றவை

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஜெட்லி... said...

கேள்வி கேக்குறது ஈசி மாமே.....
ஆனா பதில் சொல்றது???
ஆனா கேள்விகள் அனைத்தும் சிந்தனை
செய்யும் விதமாக இருந்தது.....

Unknown said...

me the first...

Unknown said...

9 வது கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரியும்...

நீங்க லூஸு.. :)))))

சில கேள்வியெல்லாம் கடியா இருக்கு சில கேள்விகள் சிந்திக்க வைக்குது.. கலக்கறீங்க வசந்த்..

ஆமா இதெல்லாம் தண்ணியடிச்சப்பறம் தோணினதா இல்ல சும்மா இருக்கும்போதா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

இடுகைக்காக இக் கேள்விகளா..அல்லது கேள்விகளுக்காக இடுகையா

அத்திரி said...

12வது கேள்வி நச்............ ஆனாலும் படிக்கும் பொதே கேள்வி என்றல் அலர்ஜி...... இப்படி மொத்தமா கேள்வி கேட்டா எப்ப்டி??................ இந்த அநியாயத்தை கேக்க யாரும் இல்லையா

பித்தனின் வாக்கு said...

// இலக்கணத்துக்கும் , மனுசனுக்கும் இருக்குற சின்ன மேட்டரோட குழப்பம் எனக்கு பல நேரம் தோணுது...நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன்? நடக்கும் நிகழ்காலம் மட்டுமே இரண்டிலும் சரியா இருக்கு இது எப்பிடி எனக்கு புரியலை?ஒரு வேளை இதை புரிஞ்சுகிடுற அளவுக்கு மனப்பக்குவம் எனக்கு வரலியா இல்லை நான் லூஸான்னு தெரில? //
இறந்த காலம் என்பது கடந்த காலம்,அதாவது நாம் கடந்த காலங்கள். இறக்கப் போகும் காலம் அல்ல எதிர்காலம், அது நாம் கடக்க அல்லது கழிக்கப் போகும் காலம். இது நாம் கடக்க வேண்டிய காலம் அல்லது எதிர் வரும் காலம் என்பதால் அது எதிர்காலம்.
நிகழ்காலம் எனக் கடக்கும் காலத்தைச் சொல்வார்கள் உண்மையில் நிகழ்காலம் என்பது ஒரு வினாடி மட்டுமே. ஒரு வினாடியின் முன் வினாடி எதிர்காலமாகவும், பின்னால் கடந்தகாலமாகவும் இருக்கும்.
இறந்த காலம் - கடந்த காலம்.
எதிர்காலம் - கடக்கப் போகும் காலம்.
நிகழ்காலம் - கடக்கும் காலம் எனவும் பொருள் கொண்டால் புரியும். இப்படி எல்லாம் குழப்பிக் கொள்ளாமல் கடந்த காலத்தின் தவறுகளின் படிப்பினைகளில் இருந்து நிகழ்காலத்திலும், வருங்காலம் அல்லது எதிர்காலத்திலும் எச்சரிக்கையாக இருந்தால் வாழ்வில் வெற்றியடையலாம். நன்றி வசந்த்.
மற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடுவது அறியாமை.

Paleo God said...

இன்னும் முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையான்னே தெரியல..இது வேறயா.. ??

Vidhoosh said...

////பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு ////
simply superb.

ராமலக்ஷ்மி said...

விடையாய் வரும் விஷய்ங்களை மேலும் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன சில கேள்விகள்! ஆனா
//காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா?//ன்னு கேட்டா:)))? பின் குறிப்பு காப்பாற்றும்:)!

ரோஸ்விக் said...

சீக்கிரம் பொண்ண பார்த்து வசந்துக்கு கல்யாணத்தைப் பண்ணி வைங்கப்பா.. நம்ம தப்புச்சுக்கலாம் இது மாதிரி கேள்விகள்ல இருந்து... :-))

Ashok D said...

//சீக்கிரம் பொண்ண பார்த்து வசந்துக்கு கல்யாணத்தைப் பண்ணி வைங்கப்பா.. நம்ம தப்புச்சுக்கலாம் இது மாதிரி கேள்விகள்ல இருந்து... :-))//
எனக்கென்னமோ இதுசரியா தான் படுது

கல்யாணத்துக்கு பிறகு வேற மாதிரி புலம்பல் வருமே தம்பிக்கிட்ட இருந்து... அச்சசோ அதுக்கு நாம என்ன பன்றது.. மனச திடப்படுத்திக்கவேண்டியதுதான் :)

தமிழ் உதயம் said...

கேள்விக்காக பதிலா? பதிலுக்காக கேள்வியா?

KULIR NILA said...

1. Thanneerukkagathan Kadal. Kadal illama kooda thanni irukkalam. AAna thanni illama Kadalaa irukka mudiyathu.

2. Nerathirkkaagathan kadigaaram. Neram Illamal Kadigaaram illai. Aanal Kadigaram illamal Nerathai therinthu kollalam.

3.Thalaiku than Mudi. Mudikkaga Thalai illai.

4. Ethai Vendumaanalum Uruvaakupavan Kadavul avan Padaipaali. Kadavulai silayai padaitha Manithan than Sirpi.

5. Ithu Iruvarukkum Iruvar. Aanilum Pen 50%, Pennilum Aan 50%. No Individuality. Kanavan Manaivi endra Peyare Iruvarum Sertha pinthan Ithilum Iruvaraium Sarthathu thaan.

6. Naam Pasikku Sapidanumna Vendiyathu Unavu Mattume . Vai vayiru illatha manithan kedayathu Vendumanal Panam Illatha manithan undu So Thevai Unavu Mattume.

7. Manathalavil thaan.

Uduthum Udayal allathu Udalavil endru Karpai Parpathu Manathu Mattume So Manathalavil Than.

8. Vayathu Enbathayum Thaandi Saga Manithan Meethu Mariyathai irundaal Neengal Vaarungal Pongal endra Vaarthaikal antha Nalla Manitha Iyalpai Unarthum. Manitha Iyalpu Illathavargal Upayogapaduthuvathu thaan Nee Vaada Pooda ellam (Except Lovers Konjikkarathu)

9. Ilakkanamum Manusanum Kulappamillamal thaan irukku. Pirappai Pirandha kaalam enalam. Kadanthu vitta kaalam enpathu Ilakkanathil Irandha kaalam. Kaalam than Iranthirukku Manithan Irakkavillai. Irakkapogum Kaalam Inimel thaan Enumpothu athu Ethirkaalam. Irandha endrum Irakkapogum endrum neengale sollittu Kolampina epdi.

10. Intha sinthaniye romba abathama irukkum pothu soap abathama kelvi ketka koodatha?

11. Veesarathu Kai mattum illa innum neraya irukku neenga ellame kaiaala mattum than seiveenga pola

12. Eppavume Paathikkapattathu mattume kaannukkum arivukkum theriyum. Manasukku Mattum thaan Nalla Manusan enbathu therium. Ungalauku udal nalla irundaalum avanga apdi solla porathilla Manasu nalla illathavarai.

13. Oor suthravangalukku edukku illam. Avanga tha oru idathula illama oooraaa suthravangalaacha.

Mudinja itha tamil paduthi solledunga Aamma

12.

S.A. நவாஸுதீன் said...

வசந்த்,

ரொம்ப தூரத்தில இருக்கிறதால தப்பிச்சீங்க, ஆமா சொல்லிபுட்டேன்.

8, 9, - குட். உங்க அப்ரோச் நல்லா இருக்கு.

நேற்றைய உன்னை இன்று வெற்றி கொள், அதேபோல் நாளைய உன்னிடம் தோற்கப்போவதும் தெரிந்திருக்கனும். இது போதும் அதெல்லாம் நமக்கெதுக்கு.

சீமான்கனி said...

// நான் லூஸான்னு தெரில?//
இந்த சந்தேகம் உனக்கு வந்துருக்கவே கூடாது மாப்பி...

நானும் சோப்பு கிட்ட நீ சொன்ன கேளிவிய கேட்டேன் அது கண்ட எடத்துல கடிச்சு வைக்குது மாப்பி...சோப்பு கடிச்சா எத்தன ஊசி போடுவாங்க...???

அப்படி ஒரு இல்லம் இருந்தா நாம இப்டி வந்து இருப்போமா மாப்பி...

Kala said...

பாவம் என் பேராண்டி.. இன்னும்
சரியாக மூளை வளர்ச்சி இல்லாமல்
திண்டாடுகின்றான்,நான் என்னால்
முடிந்த உதவியைச் செய்கின்றேன்.

கடலுக்காக தண்ணீரா
தண்ணீருக்காக கடலா?
தண்ணீர் என்றால் நன்னீரைக் குறிக்கும்
அதனால் உங்கள் கேள்வி????
கடல்நீர் உப்புத் தன்மை உடையது
கடலுக்காக..உப்பா?உப்புக்காகக் கடலா?

2. நேரத்தை நம் முன்னோர் சூரியன்,சந்திரன்
நட்சத்திரம் ,பறவைகளின் இவைகளால்தான்
கண்டறிந்தான் {என் காலத்தில்}
{உங்கள் காலத்தில்} கண்டுபிடித்த்துதான்
இந்தக் கடிகாரம்

நேரத்துக்குத்தான் கடிகாரம்

3.முடி இல்லாமலும் {வழுக்கை}இருப்பதால்...
முடி இல்லாமல் இருக்கலாம்!தலையில்லாமல்
முடியுமா!!??
தலைக்காகத்தான் முடி

4.மனிதனை படைத்த கடவுள் சிற்பி
எவ்வளவு வினோதமாய் நம் பிறப்புகள்
நடைபெறுகின்றன அதை அங்கங்கு,அவ்வப்போது
செதுக்கி செப்பனிடுவது கடவுள் தான்!!

5.ஆண்களுக்காக பெண்களா பெண்களுக்காக
ஆண்களா?? ஆணுக்காகப் பெண்ணும்,
பெண்ணுக்காக ஆணும்!! நியதி.

கணவனுக்காக மனைவியா
இல்லை மனைவிக்காக கணவனா ?
கணவர் என்ற ஒரு பெயர் இருந்தால் மனைவி
என்றொருவர் இருப்பார்{பிரிந்திருந்தாலும்,
இறந்திருந்தாலும்}இருவரும் தராசு

Kala said...

6.நாம் பசிக்கு சாப்பிடணும்னா!!
வாய்,வயிறு,சாப்பாடு,பணம்

இவையிருந்தும் தேவையானது
கை
முதலில் அள்ளி வாயில் வைப்பது
கைதான்
ஓஓ நீங்கள் அந்த ரகமா??
அதுதான் பூனை.,நாய்

7.கற்பென்றது எதனோடு தொடர்புடையது?

மனதளவில்..

நான் கற்பானவளா? என்பது எனக்கு
மட்டும்தான் தெரியும்!!
நீங்கள் கற்பானவரா?என்பது
உங்களுக்கு மட்டும் தான் தெரியும்!!

இதற்கு மனம்தான் சாட்சி!!

8.மரியாதை வயது சம்பந்தப்பட்டது

நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும்
இறக்கப்போகும் காலத்தை
எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது
ஏன்?
நீங்கள் உலகத்தில் பிறந்து விட்டீர்கள்
இது நடந்து முடிந்த விடயம்
இனிமேல் நடக்காது அதனால்
இறந்தகாலம்

நானோ,நீங்களோ எப்போது இறப்போம்
எனத் தெரியாது எதிர்பார்த்து இருக்கின்றோம்
{எப்போதாவது கட்டாயம் நடக்கும்}
அந்தக் காலத்தை எதிர் பார்ப்பது!!

நிகழ்காலம்.. வசந்த் இப்போது வெளிஊரில்
உழைத்துக் கொண்டிருக்கிறார் ,கணணியில்
பதிவிடுகிறார்...இதெல்லாம் இப்போதுதான்
நடந்துகொண்டிருக்கிறது,நிகழ்ந்துகொண்டிருக்கிறது

நீங்கள் பிறந்தது,படித்தது எல்லாம் உங்கள் காலத்தில்தான்!!
ஆனால் அவை முடிந்து விட்டன.{இறந்தகாலம்}

இப்போது நடப்பதுதான் நிகழ்காலம்.

பின்னோக்கி said...

ஆரம்பத்துல இப்படித்தான் நிறைய கேள்வி தோணும்.. குழப்பமா இருக்கும். தலை வலிக்கும். தூங்க முடியாது. பசி எடுக்காது. போகப் போக சரியாகிடும். என்ன ? மத்தவங்க தான் ஒரு மாதிரி பார்ப்பாங்க. பார்த்துட்டு போகட்டுமே. அதுக்காக எல்லாம் கவலைப் பட்டு நீங்க கேள்வி கேட்குறத நிறுத்திடாதீங்க. உங்களை மாதிரி ஆளுங்க இந்த நாட்டுக்கு தேவை. :)

Kala said...

10.இன்னிக்கு குளிச்சுட்டு இருக்கும்போத
உன்னைப்பத்தி நீ தெரிஞ்சிகிடணும்ன்னா
உன்னோட எதிரில் இருக்கும்
பொருளிடம் உன்னைப்பற்றி
நீயே கேட்டுப்பார்ன்னு யாரோ
சொன்னது ஞாபகம் \\

சோப்பு இல்லடா கண்ணா ..
முகம்பார்க்கும் கண்ணாடியில்...
உன் பிம்பத்திடம் பேசிப் பார்

யாருக்குச் சோப்புப் போட்டு.,யாருகிட்ட
வாங்கிக் கட்டிக்கிட்டதென்று யாருக்குத்
தெரியும்!!??

11.காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும்
கை இருக்கா?
காற்று,புயல் வீசினால்..செடி,கொடி,மரம்,மனை
எல்லாம் நிலத்தில் சாய்கிறதல்லவா!
அடித்தால் தான் சாயலாம்
வீழ்த்திவிட்டுப் போவது
ஒரு பேச்சுவாக்கு!!

உங்களைச் சிலர் பலமாய் அடித்தால்{கம்பால்,தடியால்}
நிலைகுலைந்து
சரிந்து விழக்கூடும் அடிப்பதால்தான்!!

யாராவது வந்து என்ன நடந்து என்று கேட்டால்
யாரோ அடித்துவிட்டார்கள் என்பார்களே தவிர...
எதனால் ,எவற்றால் என்றெல்லாம் அப்போது
கேள்வி வராது!!

வெயில்... நீங்கள் போகுமிடமெல்லாம் உங்கள்
மேல் சூரியொளி படுகின்றது உங்கள் உடம்பில்
அதன் பார்வை உங்களில் அடிபடுகிறது
அதனால்.......

Kala said...

12.இறைவன் படைப்பில்..
அங்கவீனர்கள் உண்டு
பார்வை இல்லாவிட்டால்...
பார்வையிழந்தவரென்போம்

அதற்காக எல்லாம் இருப்பவரை
உங்கள் கூற்றில் அழைக்க முடியாது!!

உ=ம் ஒரு தாயிடம் குழந்தை தினமும் நன்றாகப்
பால் குடிக்கின்றது ..இதை அவர் பெரிதுபடுத்திப்
பார்க்க மாட்டார் ஏன் என்றால் வழமையான
ஒரு நிகழ்வு அவருக்குப் புரியும்.
அதுபோல் எல்லா அங்கங்களும் சரியாய்
அமைந்தால் எதுவும் சொல்லி அழைக்கத்
தேவையில்லை,இருக்காது.

ஒருநாள் முற்றாக குழந்தை பால் குடிக்கவில்லை
அப்போது அவர் அதை{காரணம்} அறிய முற்படுகிறார்
ஒரு அங்கம் குறைவால்... சுட்டிச் சொல்லும் போது
காரணப்பெயர் சேர்கிறது.

13.இந்தக் கேள்விக்கு என் பொண்ணு கல்யாணமாகி
ஊரில்{இந்தியாவில்}இருக்காறார் அவரிடம் நான் தொடர்பு
கொண்டு பேசினேன் ...
புள்ள.. என்பேரன் எப்படி இருக்கிறான்??
என்ன செய்கிறான்?? என்றேன்

என் பொண்ணு ஒரே அழுகை ஏன்டா என்றேன்!!

உங்க பேரன் சரியான வாலு, கிறுக்குவேற,
தினம் ஒரு பொண்ணை சையிட் அடிக்கிறான்
யாரையோ லவ் கூடப் பண்ணிறானாம் ஊர்
சுற்றுகிறான் எங்களுடன் இப்போது இல்லை
இவனை என்ன செய்யலாம் என்றாள் என்
மகராசி..

ஊர்சுற்றி திரியும் வாலுகளுக்கு எங்கள் ஊரில்
ஒரு இல்லம் திறந்திருக்கிறார்கள் அதில்
சேர்த்துவிடலாம் கவலைப்படாதே என்றேன்
அவளுக்கு ரொம்ப மகிழ்சி..
டிங்டிங்ங்ங......ஓஓஓஎனது கைத் தொலைபேசி
ஆஆஆ சொல்லம்மாஅதுதான் என் மவ...
வசந்த்தேட தாய்...அப்புறம் தொடர்கிறேன்...

Prathap Kumar S. said...

ஒண்ணு மட்டும் தெரியுது. உமக்கு உடனே ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனை முக்கியம்னு...

மாப்பி இதைமட்டும் இப்படியே கண்டினியு பண்ணீரு அப்புறம் கல்லு இல்ல அழுகுன முட்டைத்தான் வரும்...

அப்புறம் ப்ரியமுடம் வசந்த்... அசிங்கமுடன் வசந்த் ஆயிடுவீரு... பி கேர் புல் :-)

திவ்யாஹரி said...

நீங்க கிறுக்கனா. உங்கள follow பண்றதால இப்போ நாங்களும்.... (சும்மா)

1 . கடலுக்காக தண்ணீர் இல்லைங்க வசந்த்.. தண்ணிக்காக தான் கடல். இல்லேன்னா நம்ம ஆளுங்க இடத்தை பிளாட் போட்டு வித்துருப்பங்க.. (கடல்ன்னு நீங்க இடத்தை தானே சொல்றிங்க?)

2 .நேரத்துக்காக தான் கடிகாரம்.. நேரம் காட்டாத கடிகாரத்தை நாங்க (நீங்களும் தான்னு நெனக்கிறேன்) use பண்ண மாட்டோம்..

3 .தலைக்காக தான் முடி.. கீழ விழுந்தா அடி படாம இருக்கன்னு நெனக்கிறேன்..

4 .கடவுளை படைத்த மனிதன் தான் சிற்பி.. எனக்கு தெரிஞ்சி சிற்பம் பேசாது.. பேசுற நாம சிற்பம் கிடையாது.. அதனால நம்மள படைத்த கடவுள் சிற்பி கிடையாது.

5 .இருவருமே ஒருத்தருக்காக இன்னொருத்தர் வாழறதா நான் நெனக்கிறேன்.. இங்கு இப்படி. அங்கு எப்படியோ?

6 . பசிக்கு சாப்பிட சாப்பாடு தான் வேணும். ருசிக்கு சாப்பிட தான் பணம் வேணும்.

7 .மனதளவில் தாங்க வசந்த்.

8 .வ, போ, வாடா, போடா, வாங்க போங்க.. வார்த்தை மட்டும் இல்லைங்க அர்த்தமும் தான்.. நாகரிகம் கருதி மரியாதையா பேசுறோம்னு நான் நெனக்கிறேன்..

9 ."நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன்?" இது உண்மையாவே சூப்பர் thought வசந்த். எனக்கு தெரியாது. பித்தன் அண்ணா விளக்கம் கொடுத்து இருக்காங்க..

10 . இதுக்கு answer கடைசியா சொல்றேங்க..

11 .உங்க பதிவுல எனக்கு ஒரு சந்தேகம்ங்க..
"யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா". ன்னு சொல்லி இருக்கீங்களே..
அடிக்க கல் எடுத்தா என்ன தப்பு? கல்லுக்கு கை இருக்கா என்ன? (நாங்களும் கேள்வி கேட்போம்ல..)

12 .இது உண்மையாவே யோசிக்க வேண்டிய விஷயம்ங்க..

13 .அந்த ஊர் சுற்றி இல்லம் இருந்திருந்தா, நாங்க ஏன் இவ்ளோ கஷ்டப்படப் போறோம்.. உங்களை தான் அங்க சேர்த்து இருப்பாங்களே.. அப்புறம் அங்க இருந்து நீங்க எப்படி கேள்வி கேட்குறது..?

இப்போ 10 வது கேள்விக்கு பதில்..

10 .சரி நாமளும் கேட்போமேனு கம்ப்யூட்டர்கிட்ட கேட்க நெனச்சி கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்ததும் உங்க கேள்வி தான் கண்ணுல பண்ணுச்சி.. மறுபடியும் மயக்கம்.. என்ன ஒரு கொலை வெறி.. இவ்வளவு தான் யோசிச்சிங்களா? நாங்க எல்லாம் சேர்ந்து வேலை இல்லா உங்களுக்காக ஊர் சுற்றி இல்லம் கட்ட போறோம்.. வெட்டியா இருக்குறதால தான் இப்படி எல்லாம் யோசிக்க தோணுது ன்னு நெனக்கிறேன்.. சொல்லணும்ன்னு தோணுச்சி சொன்னேன்.. கிண்டல் தாங்க.. சீரியஸ் இல்லை. இதை publish பண்ண வேண்டாம்.. உங்க reply மட்டும் எழுதுங்க..பதில் எல்லாம் போதுமான்னு..

வெற்றி said...

அய்யோ ராமா! என்னை ஏன் இந்த மாதிரி பதிவை எல்லாம் படிக்க வைக்கிற ?

BTW பதிவுக்காக பின்னூட்டமா இல்லை பின்னூட்டதுக்காக பதிவா ?

ஏதோ நம்மால முடிஞ்சது :))

priyamudanprabu said...

வேற ஒண்ணும் இல்ல. உங்களுக்கு நேரம் நிறைய இருக்கு. அதான் இப்படியெல்லாம் தோணுது. :)

சுசி said...

ஐயோ ஐயோ ஐயோ..

இந்த பயலுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி வைங்கன்னா கேக்கறாங்களா..

இப்போ பாருங்க எங்களையும் புலம்ப வைக்குது..

என்ன கொடுமை சாமி இது..

சிநேகிதன் அக்பர் said...

இவருக்கிட்ட என்னோமோ இருக்குது பாரேன்.

கேள்வியை படிச்சு முடிக்கவே டைம் வேணும் பாஸ்.

balavasakan said...

காற்று வீசியது புயல் அடித்தது, வெயில் அடிக்குதுன்னு சொல்றாங்களே காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா

வசந்து முடியல உங்க பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் பாவம்பபா...

jothi said...

சும்மா முயற்சி செய்தேன்,..

//. கடலுக்காக தண்ணீரா தண்ணீருக்காக கடலா?//

தண்ணீருக்காகதான் கடல். தண்ணீர் இல்லையென்றால் கடல் இல்லை. குட்டை,..

//2. நேரத்திற்க்காக கடிகாரமா கடிகாரத்திற்க்காக நேரமா?//

நேரம் இல்லையென்றால் கடிகாரம் இல்லை. நம் முன்னோர்கள் கடிகாரம் இல்லாமலேயே நேரம் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். அதனால் நேரத்திற்க்காக கடிகாரம்.

//3. தலைக்காக முடியா முடிக்காக தலையா?//

தலைக்காக முடி. வெயிலில் இருந்து நம்மை பாதுக்காக்க இயற்கையாக அமைந்தது என்பது என் அனுமானம்.(முடியில்லாத தலையையும் பார்க்கலாம், தலையில்லாத முடியையும் பார்க்கலாம்)

//4. மனிதனை படைத்த கடவுள் சிற்பியா கடவுளை படைத்த மனிதன் சிற்பியா?//
கடவுளை இதுவரை நான் பார்க்கலை. அதனால் இரண்டாவதுதான் பதில்,.

//5.ஆண்களுக்காக பெண்களா பெண்களுக்காக ஆண்களா அல்லது கணவனுக்காக மனைவியா இல்லை மனைவிக்காக கணவனா ?//
made for each other,..ரெண்டுமே சரி (ஹிஹி தெர்லனு சொல்ல தெர்ல)

//6.நாம் பசிக்கு சாப்பிடணும்னா இதில் என்ன வேண்டும்?//

வயிறு வேணும். வயிறு இருந்தால்தானே முதலில் பசி வரும். வயிறே இல்லைன்னா எப்படி பசி வரும்? அதற்கு அப்புறம்தான் பணம் சப்பாடு வாய் எல்லாம்

//7.கற்புன்றது எதனோடு தொடர்புடையது?//

மூன்றும் கிடையாது.(Why are you showing the finger on opponent?) அது உங்களுடன் தொடர்பு உடையது. ஆம்,கற்பை நீங்கள் எப்படி வரையரை செய்கிறீர்களோ அதைப் பொறுத்து அனைத்தும் அமையும். ராமனை கற்புக்கரசன் என சொல்கிறார்கள். அவன் அவன் மனைவியை சோதிக்கும்போது அவன் கற்பு அழிந்துவிட்டது என நான் சொல்கிறேன். எது சரி?

//8.நீ,வா,போ,வாடா,போடா, இதற்க்கும் நீங்கள் வாருங்கள் போங்கள் என்பதற்க்கும் வார்த்தைகள் மட்டுமே வித்தியாசம் என்றால் மரியாதை என்பதை வார்த்தை அளவில் கொடுத்தால் போதுமா?மரியாதை என்பது வயது சம்பந்தபட்டதா? அல்லது வசதி அந்தஸ்து பொருத்து கொடுக்கப்படுவது மரியாதை என்றால் வசதியில்லாத ஒரு வயதான பெரியவரை வாடா போடான்னும் வசதியா இருக்குற சின்ன பையனை வாங்க போங்கன்னும் சொல்வீர்களா?//

சொல்லமாட்டேன்,..(கேட்டக்கேள்விக்கு பதில் வந்திருச்சுல கம்முனு விட்டுரணும்)

jothi said...

//நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன்?//

இறப்பு என்பது என்பது மீட்கமுடியாதது. இதற்கு முன் நிகழ்ந்து முடிந்துவிட்ட காலத்தை மீட்க முடியாததால் அதை இறந்தகாலம் என சொல்கிறார்கள்,..(ம்மா,.. முடியல)

//..உங்களை பற்றி தெரிஞ்சுகிடணும்ன்னு நினைக்கிறவங்க உங்க சோப்கிட்ட நீங்களே கேட்டு தெரிஞ்சுக்கங்க...//

இது கேள்வி கிடையாது. only information. Noted.

//11.காற்று வீசியது புயல் அடித்தது, வெயில் அடிக்குதுன்னு சொல்றாங்களே காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா?//
அடிமேல அடிவைத்து வடபழனி நூறுஅடி ரோட்டை கடக்கும்போது, இரண்டடி எழுதிய திருவள்ளுவர் பேருந்து எனக்கு பேரடி கொடுத்தது. அதை காலடி தூரத்தில் பார்த்த என் நண்பனுக்கு காய்ச்சல் அடித்தது. காய்ச்சலுக்கு கை இருக்கா (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ், முடியல)

//12.ஊனமுற்றவங்களை அதாவது மாற்றுதிறன் இருப்பவர்களை நொண்டி,குருடன்,மூடன்னு சொல்றோமே அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து எல்லாமே நல்லா இருக்குற நம்மளை நல்ல கையன்,நல்ல காலன் , நல்ல கண்னன்னு சொல்லுவாங்களோ?//

சொல்லமாட்டாங்க,.. கண் நமக்கு இயற்கையாக அமைந்தது. கண் இல்லாமல் நடப்பது அவர்களின் திறன்.திறமை. கையை வைத்துக் கொண்டு திருடினால் நல்ல கையன் என்று யார் சொல்வார்?

//13.முதியோர் இல்லம் இருக்குறமாதிரி ஊர்சுற்றி இல்லம்ன்னு வெட்டியா ஊர்சுத்துறவங்களுக்கும் ஒரு இல்லம் இருந்திருந்தா பெத்தவங்க வேலையில்லாத புள்ளைய அங்க போய் சேர்த்துருப்பாங்களோ? //

அதுக்கும் பெத்தவுங்கதான் வரனுமா? நீங்களா போய் சேர்ந்துக்கமாட்டீங்களா?(ஏன் கேள்விக்கு பதில்தான் வரணுமா? கேள்விக்கு கேள்வியே வரக்கூடாதா???)

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

என்னப்பா வசந்த் இது? எங்கேயாவது ஒழிந்திருக்கிறாயா?
கவனமாய் இரு.

இளமுருகன் said...

நல்லா தான் யோசிச்சு இருக்கீங்க!!!
அப்படியே இதையும் கொஞ்சம் படிங்க
http://ahilanelamurugan.blogspot.com/2010/01/blog-post_1522.html

RAMYA said...

//
என்னோட மனசுல தோணுற கேள்விகள் இவை இவற்றிற்க்கான விடைகள் உங்களிடம் இருக்கிறதா?
//

அட வினோதமா தோணுதே:-) இல்லே ஆனா இருக்கு!

//
1. கடலுக்காக தண்ணீரா தண்ணீருக்காக கடலா?
//

அட போங்க வசந்த் ரெண்டுக்காகவும் ரெண்டும் :)

//
2. நேரத்திற்க்காக கடிகாரமா கடிகாரத்திற்க்காக நேரமா?
//

நேரத்திர்காகதான் கடிகாரம்

//
3. தலைக்காக முடியா முடிக்காக தலையா?
//

தலைக்காத்தான் முடி. மொட்டையா விட்டா நல்லா இருக்காது இல்லே அதுனாலதான்

//
4. மனிதனை படைத்த கடவுள் சிற்பியா கடவுளை படைத்த மனிதன் சிற்பியா?
//

கடவுள்தான் சிற்பி. மனிதனும் சிற்பிதான் :)

//
5.ஆண்களுக்காக பெண்களா பெண்களுக்காக ஆண்களா அல்லது கணவனுக்காக மனைவியா இல்லை மனைவிக்காக கணவனா ?
//

கணவனுக்காக மனைவி, மனைவிக்காக கணவன்,

//
6.நாம் பசிக்கு சாப்பிடணும்னா இதில் என்ன வேண்டும்?

அ) வாய்
ஆ) வயிறு
இ) சாப்பாடு
ஈ) பணம்
//

சாப்பாடு வேண்டும் தம்பி சாப்பாடு :)

//
7.கற்புன்றது எதனோடு தொடர்புடையது?

அ) உடுத்தும் உடையில்
ஆ) மனதளவில்
இ) உடலளவில்
//

கற்பு அருமையான கேள்வி. இது மனது சம்பந்தப்பட்டது

டிஸ்கி
======
கல்லு நிச்சயம்ன்னு முடிவாயிடுச்சு போல:)

VISA said...

//கடலுக்காக தண்ணீரா தண்ணீருக்காக கடலா?//

அழகான பொண்ணோட பீச்சுல குந்திகின்னு இருக்க சொல்ல இதெல்லாம் எனக்கு தோண்றதில்லயே நைனா....உனக்கு மட்டும் எப்படி?.நீ தனியா போனியோ...ஒரு தபா உன் லவ்வரோட போ....கடல் தண்ணி எல்லா கேள்விக்கும் பீச்சுலையே பதில் கெட்ச்சுடும் ஆமா....

மாதேவி said...

படித்துவிட்டேன். எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

திவ்யாஹரி said...

வசந்த், நீங்க கேட்ட கேள்விக்கு எவ்வளவு பேர் அன்போட (கையில கல்லோட) பதில் சொல்லி இருக்காங்க.. எந்த பதில் சரின்னு சொன்னா தானே எங்களுக்கும் ஆறுதலா இருக்கும்.. வாங்க onlineக்கு..

அமிர்தவர்ஷினி அம்மா said...

2.ஊனமுற்றவங்களை அதாவது மாற்றுதிறன் இருப்பவர்களை நொண்டி,குருடன்,மூடன்னு சொல்றோமே அப்போ அவங்க எல்லாம் சேர்ந்து எல்லாமே நல்லா இருக்குற நம்மளை நல்ல கையன்,நல்ல காலன் , நல்ல கண்னன்னு சொல்லுவாங்களோ?

கொஞ்சம் யோசிக்க வைத்த கேள்வி

ப்ரியமுடன் வசந்த் said...

நசரேயன் said...
//யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா....//

கல்லு இல்லை இனிமேல அனுகுண்டுதான்//

எந்த நாட்டுல செஞ்ச அணுகுண்டுன்னு சொன்னா அதுக்கேத்தமாதிரி தயாரா இருப்போம்ல....நன்றி நசர்

ப்ரியமுடன் வசந்த் said...

சின்ன அம்மிணி said...
வேற ஒண்ணும் இல்ல. உங்களுக்கு நேரம் நிறைய இருக்கு. அதான் இப்படியெல்லாம் தோணுது. :)//

ம்க்கும் அட நீங்க வேற நேரமில்லைன்னு புலம்பி தவிச்சுட்டு இருக்கேன் நீங்க வேற...அதான் உங்க சாலையோர தொடர் கூட எழுதமுடில இந்த போஸ்ட் எல்லாம் ட்ராஃப்ட்ல இருந்ததுங்க.... நன்றி அகிலாங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

// ஹேமா said...
வசந்து....நானும் ஒரு மணித்தியாலமா உங்க பதிவிலயே கண்ணை வச்சுப் பாத்து வாசிச்சு வாசிச்சுப் பாத்திட்டேன்.உண்மையா பதில் சொல்ல வேணுமான்னு சொல்லுங்க.சொல்ல்லிப் பாக்கிறேன்.

சில இயல்புகள் இப்படித்தான்னு இருக்கு.மாறமுடியாத மாற்றங்கள்.அவைகள்தான் நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள்.

கிறுக்கன்னு சரியாத்தான் பேர் வச்சிருக்கு !//

அதுக்காக கேட்ட கேள்விக்கு ஒண்ணுக்கு கூட பதில் சொல்லாம போனா எப்பிடி? கலா பாட்டிகிட்ட கேட்டுட்டு கூட சொல்லிருக்கலாம் அவங்க எப்பிடி பதில் சொல்லியிருக்காங்கன்னு பாருங்க உங்களுக்கு எங்க தூங்குறதுக்கே டைம் சரியா இருக்கும் இதில பதில் எங்க சொல்ல போறீங்க?

ப்ரியமுடன் வசந்த் said...

//Chitra said...
யாரும் என்னைய அடிக்க கல்லெடுக்காதீங்க நான் பாவம் ஆமா......
............... நாங்க மட்டும் பாவம் இல்லையா? இந்த மொக்கை கேள்விகள் அனைத்தும் படிச்சோமே?//

ஆகா ஒரு கேள்வி கூடவா உருப்படியா கேக்கல சே...நன்றிம்மா......

ப்ரியமுடன் வசந்த் said...

//ஆ.ஞானசேகரன் said...
இடுகைக்காக கேள்வியா? கேள்விக்காக இடுகையா? வசந்த்>>>>>>>?/

எனக்கே பிட்டா அவ்வ் கேள்விக்காகத்தான் இடுகை சேகர் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

முகிலன் said...
9 வது கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரியும்...

நீங்க லூஸு.. :)))))

சில கேள்வியெல்லாம் கடியா இருக்கு சில கேள்விகள் சிந்திக்க வைக்குது.. கலக்கறீங்க வசந்த்..

ஆமா இதெல்லாம் தண்ணியடிச்சப்பறம் தோணினதா இல்ல சும்மா இருக்கும்போதா?
//

தண்ணி எப்பிடி அடிக்கும்ன்னு சொன்னா இதுக்கு பதில் சொல்றேன் முகிலன் :)))))))))))))))))

ப்ரியமுடன் வசந்த் said...

நட்புடன் ஜமால் said...
7) ஆ.

மற்றவை

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
//

நல்லமனசுக்காரர் எங்கண்ணா...

ப்ரியமுடன் வசந்த் said...

T.V.Radhakrishnan.. said...
இடுகைக்காக இக் கேள்விகளா..அல்லது கேள்விகளுக்காக இடுகையா//

கேள்விக்காகவே இடுகை நன்றி டி.வி.ஆர் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

அத்திரி said...
12வது கேள்வி நச்............ ஆனாலும் படிக்கும் பொதே கேள்வி என்றல் அலர்ஜி...... இப்படி மொத்தமா கேள்வி கேட்டா எப்ப்டி??................ இந்த அநியாயத்தை கேக்க யாரும் இல்லையா
//

சரி மொத்தமா கேக்கலை சில்லறையா கேக்கவா அத்திரி :)))))

ப்ரியமுடன் வசந்த் said...

பித்தனின் வாக்கு said...
// இலக்கணத்துக்கும் , மனுசனுக்கும் இருக்குற சின்ன மேட்டரோட குழப்பம் எனக்கு பல நேரம் தோணுது...நம்ம பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு இலக்கணம் சொல்வது ஏன்? நடக்கும் நிகழ்காலம் மட்டுமே இரண்டிலும் சரியா இருக்கு இது எப்பிடி எனக்கு புரியலை?ஒரு வேளை இதை புரிஞ்சுகிடுற அளவுக்கு மனப்பக்குவம் எனக்கு வரலியா இல்லை நான் லூஸான்னு தெரில? //
இறந்த காலம் என்பது கடந்த காலம்,அதாவது நாம் கடந்த காலங்கள். இறக்கப் போகும் காலம் அல்ல எதிர்காலம், அது நாம் கடக்க அல்லது கழிக்கப் போகும் காலம். இது நாம் கடக்க வேண்டிய காலம் அல்லது எதிர் வரும் காலம் என்பதால் அது எதிர்காலம்.
நிகழ்காலம் எனக் கடக்கும் காலத்தைச் சொல்வார்கள் உண்மையில் நிகழ்காலம் என்பது ஒரு வினாடி மட்டுமே. ஒரு வினாடியின் முன் வினாடி எதிர்காலமாகவும், பின்னால் கடந்தகாலமாகவும் இருக்கும்.
இறந்த காலம் - கடந்த காலம்.
எதிர்காலம் - கடக்கப் போகும் காலம்.
நிகழ்காலம் - கடக்கும் காலம் எனவும் பொருள் கொண்டால் புரியும். இப்படி எல்லாம் குழப்பிக் கொள்ளாமல் கடந்த காலத்தின் தவறுகளின் படிப்பினைகளில் இருந்து நிகழ்காலத்திலும், வருங்காலம் அல்லது எதிர்காலத்திலும் எச்சரிக்கையாக இருந்தால் வாழ்வில் வெற்றியடையலாம். நன்றி வசந்த்.
மற்ற கேள்விகளுக்கு எல்லாம் பதில் தேடுவது அறியாமை.
//

அப்போஇறக்க போகும் காலத்தை எதிர்காலம்ன்னுதான் சொல்லுவீங்க இல்ல சரியான விளக்கம் சுதாகர் இப்போ என்னோட அறிவுக்கு கொஞ்சம் விளங்கிடுச்சு

ப்ரியமுடன் வசந்த் said...

பலா பட்டறை said...
இன்னும் முட்டையிலிருந்து கோழியா, கோழியிலிருந்து முட்டையான்னே தெரியல..இது வேறயா.. ??
//

நன்றி ஷங்கர்

ப்ரியமுடன் வசந்த் said...

Vidhoosh said...
////பிறப்பை இறந்தகாலம்ன்னும் இறக்கப்போகும் காலத்தை எதிர்காலம்ன்னு ////
simply superb.//

நன்றி வித்யா

ப்ரியமுடன் வசந்த் said...

ஜெட்லி said...
கேள்வி கேக்குறது ஈசி மாமே.....
ஆனா பதில் சொல்றது???
ஆனா கேள்விகள் அனைத்தும் சிந்தனை
செய்யும் விதமாக இருந்தது.....
//

நன்றி ஜெட்லி சரண்

ப்ரியமுடன் வசந்த் said...

ராமலக்ஷ்மி said...
விடையாய் வரும் விஷய்ங்களை மேலும் ஆழமாக சிந்திக்க வைக்கின்றன சில கேள்விகள்! ஆனா
//காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா?//ன்னு கேட்டா:)))? பின் குறிப்பு காப்பாற்றும்:)!
//

ஹா ஹா ஹா மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ரோஸ்விக் said...
சீக்கிரம் பொண்ண பார்த்து வசந்துக்கு கல்யாணத்தைப் பண்ணி வைங்கப்பா.. நம்ம தப்புச்சுக்கலாம் இது மாதிரி கேள்விகள்ல இருந்து... :-))
//

அப்படின்னா இன்னும் கேள்விகள் ஜாஸ்தியாயிடுமே...பரவாயில்லியா பங்கு.....

ப்ரியமுடன் வசந்த் said...

D.R.Ashok said...
//சீக்கிரம் பொண்ண பார்த்து வசந்துக்கு கல்யாணத்தைப் பண்ணி வைங்கப்பா.. நம்ம தப்புச்சுக்கலாம் இது மாதிரி கேள்விகள்ல இருந்து... :-))//
எனக்கென்னமோ இதுசரியா தான் படுது

கல்யாணத்துக்கு பிறகு வேற மாதிரி புலம்பல் வருமே தம்பிக்கிட்ட இருந்து... அச்சசோ அதுக்கு நாம என்ன பன்றது.. மனச திடப்படுத்திக்கவேண்டியதுதான் :)
//

சரியா சொன்னீங்க அஷோக் அண்ணா அனுபவம் பேசுது....

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழ் உதயம் said...
கேள்விக்காக பதிலா? பதிலுக்காக கேள்வியா?
//

கேள்விக்காகவே பதில்...

ப்ரியமுடன் வசந்த் said...

KULIR NILA said...
1. Thanneerukkagathan Kadal. Kadal illama kooda thanni irukkalam. AAna thanni illama Kadalaa irukka mudiyathu.

அக்செப்டெட்...

2. Nerathirkkaagathan kadigaaram. Neram Illamal Kadigaaram illai. Aanal Kadigaram illamal Nerathai therinthu kollalam.

எப்பிடி தெரிஞ்சுக்குவீங்க காலை பகல் மாலை இரவு அவ்வளவுதானே முடியும்?

3.Thalaiku than Mudi. Mudikkaga Thalai illai.

அப்போ அதேபோலதான் தாய் மகன் உறவும் தாய்க்காகத்தான் மகன் மகனுக்காக தாயில்லை இப்பிடியும் எடுத்துகிடலாமா?

4. Ethai Vendumaanalum Uruvaakupavan Kadavul avan Padaipaali. Kadavulai silayai padaitha Manithan than Sirpi.

படைப்பாளிக்கும் சிற்பிக்கும் என்ன வித்தியாசம்?

5. Ithu Iruvarukkum Iruvar. Aanilum Pen 50%, Pennilum Aan 50%. No Individuality. Kanavan Manaivi endra Peyare Iruvarum Sertha pinthan Ithilum Iruvaraium Sarthathu thaan.

ம்ஹ்ஹும் நான் ஒற்றுக்கொள்ளமாட்டேன் எத்தினிபேர் இதேபோல சரிபாதியா வாழ்றாங்கன்னு சொல்லுங்க? பெரும்பாலான வீட்ல கணவனுக்காகத்தான் மனைவி இருக்காங்க வெளியில வேணும்ன்னா 50-50 சொல்லிகிடுவாங்களே ஒழிய பெரும்பாலான சமயங்கள் கணவனுக்கு பிடித்தமானதை செய்றது மட்டுமே மனைவிகள் செய்றாங்க மனைவிக்கு பிடித்தமானதை செய்ற கணவன்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.....

6. Naam Pasikku Sapidanumna Vendiyathu Unavu Mattume . Vai vayiru illatha manithan kedayathu Vendumanal Panam Illatha manithan undu So Thevai Unavu Mattume.

உணவுக்கு பணம் வேண்டுமே?

7. Manathalavil thaan.

Uduthum Udayal allathu Udalavil endru Karpai Parpathu Manathu Mattume So Manathalavil Than.

இது மிகச்சரி

8. Vayathu Enbathayum Thaandi Saga Manithan Meethu Mariyathai irundaal Neengal Vaarungal Pongal endra Vaarthaikal antha Nalla Manitha Iyalpai Unarthum. Manitha Iyalpu Illathavargal Upayogapaduthuvathu thaan Nee Vaada Pooda ellam (Except Lovers Konjikkarathu)

அதென்ன காதலர்கள் மட்டும் வானத்தில இருந்தா குதிச்சு வந்தாங்க அன்பு அதிகமாயிடுச்சுன்னா கூட சிலரை வாடா வாடி போடின்னு சொல்லாலாம் இல்லியாடா(டி)

9. Ilakkanamum Manusanum Kulappamillamal thaan irukku. Pirappai Pirandha kaalam enalam. Kadanthu vitta kaalam enpathu Ilakkanathil Irandha kaalam. Kaalam than Iranthirukku Manithan Irakkavillai. Irakkapogum Kaalam Inimel thaan Enumpothu athu Ethirkaalam. Irandha endrum Irakkapogum endrum neengale sollittu Kolampina epdi.

கொஞ்சம்நஞ்சம் இருந்ததும் கொழம்பிபோயிடுச்சு...

10. Intha sinthaniye romba abathama irukkum pothu soap abathama kelvi ketka koodatha?

நீங்க என்னுடைய வலைப்பதிவு புதுசா படிக்கிறீங்கன்னு நினைக்கிறேன் இதுக்கு முன்னே எழுதிய பல போஸ்ட்ம் இப்பிடி அபத்தமா யோசிச்சதால வந்ததுதாங்க...

11. Veesarathu Kai mattum illa innum neraya irukku neenga ellame kaiaala mattum than seiveenga pola

டபுள்மீனிங்ல எல்லாம் திட்டக்கூடாது ஆமா சொல்லிபுட்டேன்....

12. Eppavume Paathikkapattathu mattume kaannukkum arivukkum theriyum. Manasukku Mattum thaan Nalla Manusan enbathu therium. Ungalauku udal nalla irundaalum avanga apdi solla porathilla Manasu nalla illathavarai.

சூப்பரு....

13. Oor suthravangalukku edukku illam. Avanga tha oru idathula illama oooraaa suthravangalaacha.

Mudinja itha tamil paduthi solledunga Aamma

ஆத்தாடி இம்புட்டு கேள்விக்கும் பொறுமையா உக்காந்து டைப் பண்ணினதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க பதில் சொன்ன எனக்கே இவ்ளோ கை வலிக்குதே அப்போ உங்களுக்கு... அடிக்கடி வந்து போங்க குளிர் நிலா தினமும் வந்தால்தானே நிலா?....

ப்ரியமுடன் வசந்த் said...

S.A. நவாஸுதீன் said...
வசந்த்,

ரொம்ப தூரத்தில இருக்கிறதால தப்பிச்சீங்க, ஆமா சொல்லிபுட்டேன்.

8, 9, - குட். உங்க அப்ரோச் நல்லா இருக்கு.

நேற்றைய உன்னை இன்று வெற்றி கொள், அதேபோல் நாளைய உன்னிடம் தோற்கப்போவதும் தெரிந்திருக்கனும். இது போதும் அதெல்லாம் நமக்கெதுக்கு.
//

நவாஸ் ரொம்ப தூரமில்ல மே பி 200 கிலோமீட்டர்ன்னுதான் நினைக்கிறேன்...

கரெக்ட்டா சொன்னீங்க நானும்முயற்சிக்கிறேன்....!

ப்ரியமுடன் வசந்த் said...

seemangani said...
// நான் லூஸான்னு தெரில?//
இந்த சந்தேகம் உனக்கு வந்துருக்கவே கூடாது மாப்பி...

நானும் சோப்பு கிட்ட நீ சொன்ன கேளிவிய கேட்டேன் அது கண்ட எடத்துல கடிச்சு வைக்குது மாப்பி...சோப்பு கடிச்சா எத்தன ஊசி போடுவாங்க...???

அப்படி ஒரு இல்லம் இருந்தா நாம இப்டி வந்து இருப்போமா மாப்பி...
//

நீயும் நானும் சரியா இருப்போம் ஆனா இப்போ நிறைய முதியோர் இல்லங்கள் பெருகிடுச்சே மாப்ள இதுக்கு யார் காரணம் நம்மல மாதிரியிருக்குற இளைஞர்கள்தானே....

ப்ரியமுடன் வசந்த் said...

பாட்ட்ட்டிடீய்ய்ய்ய்ய்ய்ய்ய்......

1.கேட்ட கேள்விய விட்டுட்டு இன்னொரு கேள்வியா?

2.சரி

3.சூப்பரு..

4.அப்போ அழகிய சிற்பங்கள் படைக்கிற மைதன் சிற்பியில்லியா?

5.தராசு எப்போவும் சரியா இருப்பதிலியே?

6 ஹா ஹா ஹா சிரிச்சு முடில பாட்டி

7.கரெக்ட்டான ஆன்சர்

8.இதுவும் கிட்டதட்ட சரி

9. குழப்பிட்டீங்க

10. அதுகூட நிறைய தடவை பேசியாச்சே...ஒண்ணும் பிரயோசனமில்ல

11.இதைத்தான் எதிர்பார்த்தேன்...

12.நான் சொல்லவந்தது ஏன் அப்படி அவர்களை அழைக்கவேண்டுமென்பதுதான்...

13.ம்ம் அவங்க பேர் கற்பகம் தானே... ஆனா தினம் ஒரு பொண்ணை சைட் அடிக்கிற அளவுக்கு அழகில்லை என்கிட்ட..

கலா பாட்டி மெனக்கெட்டு எனக்கு பதில் சொல்லியிருக்கிங்க ரொம்ப சந்தோசமா இருக்கு இந்த உங்க பேத்தியப்பாருங்களேன் எப்பப்பார்த்தாலும் தூங்கிட்டு எதாவது சாக்கு போக்கு சொல்லிட்டே இருக்கா..

ப்ரியமுடன் வசந்த் said...

பிரதாப்பு...

அழுகுன முட்டை அழுகாதமுட்டை எப்பிடி பிரிச்சு பாக்குறது மாப்பி?

ப்ரியமுடன் வசந்த் said...

திவ்யா

பாவம் ஹரி எம்புட்டு கேள்விக்கு கேள்வி பதில் சொல்லியே அவர அடக்கி வச்சிருப்பீங்க போல...

1.கரெக்ட்டான ஆன்சரோட சமூக கிண்டல்...

2.நான் யூஸ் பண்ணுவேனே

3.ஹா ஹா கீழ விழுந்தா முடி காப்பாதும்னா உடம்பெல்லாம் முடியா இருக்குற ஒரு விக் வாங்கி வச்சுகிடலாமோ ?

4.அப்போ உங்களையும் என்னையும் இத்தனை கைவிரல்கள் கைரேகை முதற்கொண்டு அணு அணுவா ரசிச்சு படைச்ச கடவுள் சிற்பியில்லியா? மனிதனை மட்டுமில்லாம செடி விலங்கு பூமி ஆகாயம் வானம் நிலா சூரியன் இன்னும் நிறைய படைத்த கடவுள் சிற்பியில்லியா?

5.அப்பிடின்னா சொல்றீங்க நல்ல மனசுக்காரி நீங்க..

6.அப்போ சாப்பிட வாயும்,வயிறும் வேணாமா?

7.கரெக்ட்

8.நாகரீகத்துக்காக மரியாதையா பேசுனா அப்போ மனசார மரியாதையா பேச மாட்டீங்களா? இங்க நாகரீகம்

9.ம்ம்

10.அப்பிடியெல்லாம் இல்லீங்க பொதுவா மனுசர்கள்கிட்ட பேசும்போது முகஸ்துதிக்காகவோ இல்லை வெறுப்பேத்துறதுக்காகவோ பேசுறாங்க அதான் இப்பிடி உயிரில்லாத அஃறிணை பொருட்களுக்கு உயிர் கொடுத்து பேசி பழகிட்டு இருக்கேன் வெட்டி ஆபிசர் எல்லாம் கிடையாதுங்க வேலை பின்னி பெடல கழட்டுறாய்ங்க இன்னிக்கி இங்க வெள்ளி வார விடுமுறை அதான் உங்களுக்கு பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்கேன் இல்லாட்டினா வெறும் நன்றி போட்டு முடிச்சுருப்பேன் வெளி நாட்டுல இருக்குறதால கொடி நெஞ்சுல குத்திக்க முடில அதான் உங்க போஸ்ட்க்கும் ஒட்டு போடலை... :(

11.ஹா ஹா ஹா

12.ம்ம் யோசிங்க

13.அப்பிடியா சொல்றீங்க..

ரொம்ப சந்தோஷம் திவ்யா பொறுமையாவும் கிண்டலாவும் இவ்ளோ எழுதியிருக்கீங்க மிக்க சந்தோசமும் நன்றியும்..தொடர்க உங்கள் நட்பு...

ப்ரியமுடன் வசந்த் said...

வெற்றி :))))))

நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

பிரவு நன்றி...!

ப்ரியமுடன் வசந்த் said...

சுசி said...
ஐயோ ஐயோ ஐயோ..

இந்த பயலுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி வைங்கன்னா கேக்கறாங்களா..

இப்போ பாருங்க எங்களையும் புலம்ப வைக்குது..

என்ன கொடுமை சாமி இது..
//

உங்க பேச்சு கா....

ப்ரியமுடன் வசந்த் said...

//அக்பர் said...
இவருக்கிட்ட என்னோமோ இருக்குது பாரேன்.

கேள்வியை படிச்சு முடிக்கவே டைம் வேணும் பாஸ்.
//

நன்றி அக்பர் அப்போ பதில் சொல்ல நேரமில்லையா?

ப்ரியமுடன் வசந்த் said...

Balavasakan said...
காற்று வீசியது புயல் அடித்தது, வெயில் அடிக்குதுன்னு சொல்றாங்களே காற்றுக்கும் புயலுக்கும் வெயிலுக்கும் கை இருக்கா

வசந்து முடியல உங்க பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் பாவம்பபா...
//

என்ன வாசு நெம்ப பிஸியா போஸ்ட் ஒண்ணும் காணோம்.....

ப்ரியமுடன் வசந்த் said...

ஜோதி

1. இந்த கேள்விக்கு பின்னாடியிருக்குற பின்நவீனம் உங்களுக்குமா புரியலை?

2.சரி அக்செப்ட்

3.முடில ஆத்தாடி..

4.அம்மா

5.ஏன் இன்னும் மேரேஜ் ஆவலியா?

6.ஜூப்பரு

7.ராமர் பண்ணுனது ஒரு முட்டாள்தனமான விஷயம் கேள்வி கேட்டவன அந்த இடத்திலயே பொசுக்கியிருந்தால் நான் ராமரை கடவுள்ன்னு ஏற்றிருப்பென் அதனாலோ என்னவோ ராமர்ன்ற பேரே எnஅக்கு பிடிக்கிறதில்லை..

8.ம்ம்

9.குழப்பியாச்சா?

10.ம்ம் ட்ரை பண்ணி பாருங்க

11. எப்பிடியெல்லாம் யோசிக்கறாய்ங்கய்யா அப்பாடி...

12.அவங்க நல்லவங்க பாஸ்

13.அதுசரி.. அப்போ முதியோர் இல்லத்திக்குமட்டும் அவங்கள கொண்டுப்போய் சேர்த்துவிடுறது எந்த விதத்துல நியாயம்?

ரொம்ப ரொம்ப நன்றி ஜோதி...சந்தோசம்...

ப்ரியமுடன் வசந்த் said...

ஜெஸ்ஸம்மா கவனமாவே இருக்கேன் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

இளமுருகன் நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

ரம்யாக்கா கமெடி ரவுசு பண்ணிட்டீங்க போங்க சிரிச்சு வயிறு வலிச்சதுதாம் மிச்சம் எப்டியெல்லாம் சிரிக்க வைக்கிறாங்கய்யா...நன்றிக்கா

ப்ரியமுடன் வசந்த் said...

விசா சார் காதல் எப்பிடியிருக்கும்?
:)))))))

ப்ரியமுடன் வசந்த் said...

மாதேவி மிக்க நன்றிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

அமித்தம்மா நன்றி சகோ...

யோ வொய்ஸ் (யோகா) said...

உட்கார்ந்ததற்கு யோசித்தீங்களா? இல்ல யோசிப்பதற்காக உட்கார்ந்தீர்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மூக்கு புடைப்பா இருந்தா இப்படிதான் யோசிக்க தோணும்