January 29, 2010

இக் லீப திக் கவிதைகள்





தொட்டதும்
எரிந்து
அணையும்
குண்டுபல்பை
போலவே
என் இளமையும்

************************************************************************************



நேர் நேர் தேமா
நேருக்கு நேர் பார்த்தும்
தேறவில்லை ஆமா...

************************************************************************************




இரு வாய்
நிறைய
குடித்தும்
அடங்கவில்லை
தாகம்
மாறாக அடங்கியது
சத்தம்

*************************************************************************************

பூக்காரி தலையில்
வெறும் கொண்டை
பூத்த பூவுக்காக
தினம் சண்டை

***********************************************************************************




புளித்த ஏப்பம்
புசித்தது தப்பானது
புளித்த வாந்தி
தப்பானது புசிக்காமலே...

**************************************************************************************

சட்டென்று
நொடியில் தோன்றி
பூமியில் புதையும்
மின்னலைப்போலவே
காதலும் பல நேரம்...

***********************************************************************************


கண்ணாடி காதலி
கண்ணடிச்சாளாம்
பிம்பத்தோடு
சேர்த்து
மனசும்
உடைஞ்சுபோச்சாம்...

**************************************************************************************



சட்டைப்பை
புகைப்படம்
சத்தமில்லாமல்
சிரிக்கிறது
சத்தம்போடும்
இதயத்தோடு...


34 comments:

அண்ணாமலையான் said...

கலக்குங்க

Unknown said...

//சட்டென்று
நொடியில் தோன்றி
பூமியில் புதையும்
மின்னலைப்போலவே
காதலும் பல நேரம்...// ஆமாங்க..

எல்லா வரிகளும் அழகு... வசந்த்

Menaga Sathia said...

நன்றாகயிருக்கு...

Paleo God said...

அதகளம்..அனைத்தும் அருமை வசந்த்.:)) வாழ்த்துக்கள்.

Ashok D said...

அண்ணா ஏதோ நடத்துங்கங்ணா... very good இப்படியே கியர போட்டு போயிட்டேயிருங்க..வசந்த் :)

ராமலக்ஷ்மி said...

நேர் நேர் தேமா
ரசித்தேன் ஆமா:))!

balavasakan said...

வழமை போல கலக்கியிருக்கிறீங்க வசந்.!!!!

sathishsangkavi.blogspot.com said...

படமும் கவிதையும் அழகு....

ஸ்ரீராம். said...

கவிதை எழுதி விட்டு படம் தேடுவீங்களா? படத்தைப் பார்த்ததும் கவிதை எழுதி நிரப்புகிறீர்களா... இக் லீப திக் என்றால்?

திவ்யாஹரி said...

//இக் லீப திக் கவிதைகள்// ithuku artham enna vasanth?

kavidhaigal nalla iruku.. unga style la.

Prathap Kumar S. said...

வர வர நீரு ஒரு மாதிரியாத்தான் போய்கிட்டிருக்கீரு தல... நல்லதுக்கில்ல.. காலாங்காலத்துல என்னைமாதிரி கால்கட்டு போடலைன்னா இப்படித்தான்....
என்னைமாதிரி கன்ட்ரோலா இருக்கு பழகு மாப்பி....

Unknown said...

இது வரைக்கும் கமெண்ட் எழுதுனவங்க மேல கோவங்கோவமா வருது.. அம்புட்டையும் நீங்களே எழுதிப்புட்டிங்கன்னா? நாங்க என்ன எழுதுறது?

அதுனால, அத்தனைக்கும் ரிப்பீட்டு.

ஹேமா said...

வசந்து...குட்டிக் குட்டிக் கட்டிக் காதல் அத்தனையும் அழகு.

அதுசரி....இக் லீப திக் என்னாதிது ?உங்க வீட்டு பாஷையா ?

கயல் said...

அடடா! எப்படியெல்லாம் யோசிகிறாய்ங்கப்பா? கலக்க்கிட்டீங்க ! போங்க!

Anonymous said...

தொட்டதும்
எரிந்து
அணையும்
குண்டுபல்பை
போலவே
என் இளமையும்

சட்டுன்னு கல்யாணத்தை முடிங்கன்னா கேக்கறாங்களா? சரி சரி நான் அம்மாவுக்கு போன் பணறேன்..



நேர் நேர் தேமா
நேருக்கு நேர் பார்த்தும்
தேறவில்லை ஆமா...

இதோடா......



இரு வாய்
நிறைய
குடித்தும்
அடங்கவில்லை
தாகம்
மாறாக அடங்கியது
சத்தம்

யுத்தம் தொடங்கவா?

பூக்காரி தலையில்
வெறும் கொண்டை
பூத்த பூவுக்காக
தினம் சண்டை

நிஜம்...



புளித்த ஏப்பம்
புசித்தது தப்பானது
புளித்த வாந்தி
தப்பானது புசிக்காமலே...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நல்லாத்தான் யோசிக்கிற அப்பு...

சட்டென்று
நொடியில் தோன்றி
பூமியில் புதையும்
மின்னலைப்போலவே
காதலும் பல நேரம்...

அனுபவமா ராசா?

கண்ணாடி காதலி
கண்ணடிச்சாளாம்
பிம்பத்தோடு
சேர்த்து
மனசும்
உடைஞ்சுபோச்சாம்...

எப்படியோ உடைஞ்சா சரி..

சட்டைப்பை
புகைப்படம்
சத்தமில்லாமல்
சிரிக்கிறது
சத்தம்போடும்
இதயத்தோடு...


ஆஹா..லாஜிக் இல்லா மேஜிக் சம்திங்,,,,,,,,

Subankan said...

கலக்கல் வசந்த்

சீமான்கனி said...

படங்களும் கவிதையும் பாக்கும் போதே புரிது மாப்பி....இன்னும் ரெண்டு மாசம்தேண்டி அதுவரைக்கும் ...பண்ணுடி..பண்ணு....:)

நேர் நேர்....சுபெர்ர்ர்...

விக்னேஷ்வரி said...

எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு...

S.A. நவாஸுதீன் said...

எல்லாமே புரிஞ்சுது, பிடிச்சிருக்கு. தலைப்பு மட்டும் புரியலை சாமி.

SUFFIX said...

'நச்'ன்னு இருக்குப்பா வசந்த்!

Raghu said...

ஹிஹி..அந்த‌ போட்டோ ந‌ல்லாருந்த‌து (க‌விதையும்தான்)......அட‌ நான் "புளித்த‌ ஏப்பம்" க‌விதைய‌ சொன்னேன், ஏன் எல்லாரும் இப்ப‌டி இருக்கீங்க‌???

Anonymous said...

ரொம்ப கிரியேட்டிவ் நீங்க!

அதென்ன இக் லீப திக்?

பின்னோக்கி said...

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சிநேகிதன் அக்பர் said...

சூப்பர் வசந்த்

ஆ.ஞானசேகரன் said...

கலக்கல்....

கலக்குங்கோ நண்பரே

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி அண்ணாமலையான்

நன்றி ஃபாயிசா மேடம்

நன்றி மேனகா மேடம்

நன்றி ஷங்கர்

நன்றி அஷோக் அண்ணா

நன்றி ராமலக்ஷ்மி மேடம்

நன்றி வாசு

நன்றி சங்கவி

நன்றி ஸ்ரீராம் சொல்றேன்....

நன்றி திவ்யா எப்பிடி உங்ககிட்ட சொல்றது இருங்க ich leabe dich கூகுள்ள இந்த வார்த்தை அடிச்சு செக் பண்ணுங்க....

நன்றி பிரதாபு...இருடி மாப்புள்ள தங்கச்சிகிட்ட போட்டுகுடுக்குறேன் உனக்கு இருக்கு ஒரு நாளைக்கு...

நன்றி முகிலன்

நன்றி ஹேமா சொல்லியாச்சு சொல்லியாச்சு

நன்றி கயலு

நன்றி தமிழரசி மேடம் அட்ரெஸ் எப்ப்டி தெரிஞ்சுச்சு மறந்துட்டீங்களோன்னு நினைச்சுட்டேனுங் மேடம்...பரவாயில்ல ஞாபகம் வச்சுருக்கீங்க

நன்றி சுபா

நன்றி சீமான்கனி டேய் உண்மையெல்லாம் பொதுவில சொல்லக்கூடாது ஆமா

நன்றி விக்கி

நன்றி நவாஸ் நான் விருப்பம் நிறைய இதுதான் அர்த்தம் நவாஸ்

சஃபி மிக்க நன்றி

குறும்பன் :)))))))) நன்றி

நாஸியா ஆமாவா? நன்றி சகோ

பின்னோக்கி சார் நன்றி சார்

அக்பர் நன்றிங்க

சேகர் நன்றிப்பா...

தமிழ் said...

/நேர் நேர் தேமா
நேருக்கு நேர் பார்த்தும்
தேறவில்லை ஆமா.../

கலக்கல்

மாதேவி said...

"நேர் நேர் தேமா.."
"சட்டைப்பை
புகைப்படம்..." நன்றாய் ரசித்தேன்.

Anonymous said...

நன்றி தமிழரசி மேடம் அட்ரெஸ் எப்ப்டி தெரிஞ்சுச்சு மறந்துட்டீங்களோன்னு நினைச்சுட்டேனுங் மேடம்...பரவாயில்ல ஞாபகம் வச்சுருக்கீங்க

ஊரில் இல்லை மண்டு...இப்ப வந்தாச்சு..

DREAMER said...

கவிதைகளும் அதற்கு தகுந்த புகைப்படங்களும் அருமை...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்

சிங்கக்குட்டி said...

கவிதை அருமை, முதல் படம் கலக்கல்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

ரசித்தேன்.

நட்புடன் ஜமால் said...

மின்னல் - வெளிச்சமாய்.

நேர் நேர் - ஆஹா! செம செம

சட்டை பை - இதுல இன்னும் யோசிக்க இருக்குறாப்ல இருக்கே.

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி திகழ்

நன்றி மாதேவி

தமிழு பொய்தானே...

நன்றி ஹரீஷ்

நன்றி சிங்க குட்டி

நன்றி ஜெஸ்ஸம்மா

நன்றி ஜமாலண்ணா :)))