February 22, 2010

இருவார்த்தை கதைகள் -2



இருவார்த்தை கதைகள்


தலைப்பு : ஆணாதிக்கம் புரியும் ஆண்களை மனதார வெறுக்கிறோம் - மகளிர் மன்றத்தினர்..

கதை : உடம்புக்கு ஆகாது...

************************************************************

தலைப்பு : வெளிப்படையாக இருக்க பழகுங்கள் எழுத்தாளர்களே

கதை : எழுத்திலா? நிஜத்திலா?

************************************************************

தலைப்பு : மீ த 101

கதை : பதிவரின் மொய்

************************************************************

தலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்

கதை : அசல் நாயகன்

************************************************************

தலைப்பு : ஒரு ஜாதியை சேர்ந்தவங்க என்னை அடிச்சுட்டாங்கன்னு சொன்னியே எந்த ஜாதி அவங்க?

கதை : பெண் ஜாதி

************************************************************

தலைப்பு : உடலில் இருந்து வெள்ளி உருவாகும் அதிசயம்

கதை : என்னவளின் வியர்வை

************************************************************

தலைப்பு : உயிர்கொல்லிகள் ஒன்று என்னை வாங்கியது ஒன்று நான் வாங்கியது

கதை : சிகரெட்டும் பெண்ணும்

************************************************************

தலைப்பு : விவசாயியின் நெற்றியில் வடியும் வியர்வை

கதை : அசையும் சொத்து

************************************************************

தலைப்பு : இவ்வுலகில் உள்ள ஒவ்வொருத்தனும் பைத்தியக்காரன்

கதை : தன்னை அறியாதவன்

***********************************************************

தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு

கதை : உங்களுக்கு மட்டும்

***********************************************************



53 comments:

யாசவி said...

நச்!!!

சைவகொத்துப்பரோட்டா said...

//தலைப்பு : உடலில் இருந்து வெள்ளி உருவாகும் அதிசயம்


கதை : என்னவளின் வியர்வை//


இது மட்டும் (அழகிய) கவிதை!!, எல்லாமே நல்லா இருக்கு.

Anonymous said...

கலக்கல்ஸ் ஆப் இந்தியா

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்கு.

Menaga Sathia said...

சூப்பர்!!

அண்ணாமலையான் said...

இரு வார்த்தை கமெண்ட்:
தலைப்பு: மிக அருமையா இருக்கு எல்லாமே!
எழுதியவர்: பிரியமுடன் வசந்த்..

pudugaithendral said...

ரசிச்சேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

திவ்யாஹரி said...

ஒவ்வொன்னும் நச்சுனு இருக்கு வசந்த்.. எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க..

Unknown said...

வசந்த்,

நீங்க இதையெல்லாம் பாலிஷ் பண்ணி இன்னும் கூட மெருகு ஏத்தி ஷார்ப் ஆக்கலாம்.இரு கதைகள் ஒரளவுக்கு கதையாகிறது.

கொஞ்சம் மெருகு ஏத்தினால்:

தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு

கதை : ஓ...! அப்படியா?


தலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்

கதை : அசல் தல

நன்றி .என் பதிவில் லேபிளில்
இரண்டு வார்த்தைக் கதைகள் (3)
பாருங்கள்.

Ashok D said...

மிகவும் நன்று

ராமலக்ஷ்மி said...

அசையும் சொத்து அருமை.

இரண்டே வார்த்தை..

அடுத்த பாகம்?

ஹேமா said...

அட....வசந்து ....உங்க சிந்தனைகளும் அசல்.
ம்ம்ம்..அதுக்காக அஜித் ன்னு நினைச்சுக்கவேணாம் தல.

நட்புடன் ஜமால் said...

அசல்

ஸ்பெஷல்

சாந்தி மாரியப்பன் said...

தலைப்பு: டாப் டக்கர்.

கதை : வசந்தின் எழுத்து.

தமிழ் உதயம் said...

உங்க கற்பனை யாருக்கு வரும்...

வரதராஜலு .பூ said...

நல்லா இருக்கு.

வசந்த்,
நீங்கதானே, சுஜாதா கதைல வர்ர (கணேஷ்)-வசந்த்

வரதராஜலு .பூ said...

//தலைப்பு: டாப் டக்கர்.

கதை : வசந்தின் எழுத்து.//

செம நச்

க.பாலாசி said...

எல்லாமே நல்லாருக்குங்க...

Paleo God said...

Leave your comment

present SIR..:))

Rekha raghavan said...

அடேங்கப்பா!

ரேகா ராகவன்.

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

நல்லா இருக்கு வசந்த்.

Subankan said...

இருவார்த்தைப் பின்னூட்டம்

எல்லாமே கலக்கல்!

SUFFIX said...

இப்பவெல்லாம் ரொம்ப சிந்திக்கிறீங்க, சிந்திக்கவும் வைக்கிறீங்க வசந்த். அருமையன தொகுப்பு.

Unknown said...

நல்லா இருக்கு.. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க.....?????

சிநேகிதன் அக்பர் said...

அருமை வசந்த்.

கலக்குறீங்க.

சுசி said...

சூப்பர் உ.பி..

பதிவரின் மொய் செம..

உங்க அவங்களின் வியர்வை ரொமாண்டிக்கா இருக்கு..

ஆமா.. அசல் நாயகன் சொன்னது நிஜமா??

Unknown said...

//தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு


கதை : உங்களுக்கு மட்டும்//

இதைத் தவிர மத்ததெல்லாம் நல்லா இருக்கு... :)

அன்புடன் அருணா said...

சூப்பர்! சூப்பர்!

அன்புடன் நான் said...

நல்லாயிருக்கு... மிக அருமைன்னு சொல்ல முடியல!
( உங்க தரத்துக்கு இது குறைவுதான்)

மாதேவி said...

நல்ல ரசனை.

அகநாழிகை said...

வித்தியாசம்தான்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அடடே, நல்லாவே இருக்கே!

தேவன் மாயம் said...

வசந்துன்னாலே புதுசுதான்!!

Jerry Eshananda said...

எழுதி பழகியது மாதி தெரியலையே..

Jerry Eshananda said...

அந்த கடைசி கதை ரொம்ப புடிச்சிருக்கே,[ரெண்டு பெரும் துட்டு போட்டு படமெடுப்பமா?]

கார்த்திகைப் பாண்டியன் said...

//தலைப்பு : மன்னிப்பு கேட்கமாட்டேன் வேண்டுமானால் நடிப்பதை விட்டுவிடுகிறேன் - அஜீத்

கதை : அசல் நாயகன்//

thanks thala..:-))))))

நீச்சல்காரன் said...

என்னவளின் வியர்வை
அசையும் சொத்து
இவைகள் கவிதையின் தாக்கமுள்ளது
மற்றவை தலைப்புக்கு ஒன்றியுள்ளது என்பது எனது தாழ்மையானக் கருத்து

சீமான்கனி said...

//தலைப்பு : உயிர்கொல்லிகள் ஒன்று என்னை வாங்கியது ஒன்று நான் வாங்கியது


கதை : சிகரெட்டும் பெண்ணும்//



//தலைப்பு : விவசாயியின் நெற்றியில் வடியும் வியர்வை


கதை : அசையும் சொத்து//

தூள்!!!! மாப்பி ரெம்ப பிடிச்சிருக்கு...

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு..ஆணாதிக்கம்தான் இடிக்கிறது..

Nathanjagk said...

வாவ்..!
சுருக் வார்த்தைகள்! நறுக் சிந்தனைகள்!!
மீ த 41.
வசந்துக்கு ஒரு சின்ன​மொய்.

டக்கால்டி said...

சுஜாதாவின் தாக்கம் உங்கள் எழுத்தில் தெரிகிறது...
அனைத்துமே நச்..

அன்புடன் மலிக்கா said...

சகோ சூப்பர்..

Kala said...

தலைப்பு : உயிர்கொல்லிகள்
ஒன்று என்னை வாங்கியது
ஒன்று நான் வாங்கியது

கதை : சிகரெட்டும் பெண்ணும்\\\\\\


உயிர் கொள்ளி{க்} காலன் : சிகரெட்
{கொல்லும் :உயிர்+மெய்{யை}

உயிர் கொள்ளும் கலம் {சீகரெட்}: பெண்
{கொள்ளும்:உயிர்+மெய்+தாய்மை}

தலைப்பு:வசந்தின் தாக்கம்

கதை: பெண் பாதிப்பு

ஸ்ரீராம். said...

தலைப்பு : ரொம்ப நல்லா இருக்கு.

கதை : இரு வார்த்தைக் கதைகள்.

Matangi Mawley said...

liked them all but one: தலைப்பு : நடிகையின் முதலிரவில் நடிகையிடம் கணவன் இது நமக்கு முதலிரவு

கதை : உங்களுக்கு மட்டும்...

it s good.. bt felt too generalized!

Prabu M said...

புதுமை... அருமை!!

Anonymous said...

நல்லாயிருக்கு வசந்த்....

ப்ரியமுடன் வசந்த் said...

யாசவி நன்றி

சைவகொத்துபரோட்டா நன்றி நண்பா சரிதான்...

அகிலா மேடம் டாங்ஸ்

ராகவன் அண்ணா நன்றிண்ணா

மேனகா மேடம் நன்றி

அண்ணாமலை நன்றி நண்பா :)

புதுகை தென்றல் நன்றிங்க...

டி.வி.ஆர் சார் நன்றிங்க

திவ்யா எப்டிங்க இப்டி? :)

ப்ரியமுடன் வசந்த் said...

ரவி ஜி நன்றி நன்றி குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே...

அஷோக் அண்ணா நன்றிண்ணா

ராமலக்ஷ்மி மேடம் நன்றி ம்ம் இன்னும் இருக்கு மேடம்...

ஹேமா நன்றி

ஜமால் அண்ணா நன்றி

அமைதிச்சாரல் மேடம் நன்றி

தமிழ் உதயம் நன்றிங்க :))

வரதராஜலு இல்லீங்க் நன்றிங்...

பாலாசி நன்றிப்பா

ஷங்கர் குசும்பு

கல்யாணராமன் ராகவன் நன்றிங்க சார்

ஜெஸ்ஸம்மா நன்றி

சுபா நன்றி

சஃபி நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

சிநேகிதி நன்றி சகோதரி

அக்பர் நன்றி

சுசிக்கா உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கேன் எப்பிடி அடைக்கப்போறேன்னு தெரியலைக்கா..

முகிலன் ஏன் அதுமட்டும் என்னவாம் அதுவும் நடக்கிற நிஜம்தான் நடிகைன்னு மட்டும் சொல்வதற்கில்லை

அருணா மேடம் நன்றிங்க

கருணாகரசு சார் நான் அவ்ளோ நல்லா எழுதறவன் எல்லாம் இல்லைங்க சார்

மாதேவி மேடம் நன்றி

அகநாழிகை சார் நன்றி சார்

நிஜாமுதீன் நன்றிங்க

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி தேவா சார்

நன்றி ஜெர்ரி சார் நம்பித்தான் ஆகணும்

நன்றி கார்த்தி :)

கயல் நன்றிங்க

நீச்சல்காரன் அது ரெண்டுமே என்னோட பழைய கவிதைகளின் மறு பதிப்பு நீங்க கண்டு பிடிச்சுட்டீங்க...

சீமான் நன்றிடா மாப்பி..

புலிகேசி நன்றி

ஜெகா நன்றிப்பா

டக்கால்டி நன்றிங்க

மலிக்கா நன்றி சகோ

கலா ம்ம் அனுபவிச்சாத்தான் தெரியும்

ஸ்ரீராம் நன்றி

மாதங்கி நன்றி

பிரபு நன்றி

தமிழரசி நன்றிங்க

cheena (சீனா) said...

எல்லாக் கதயும் நல்லாத்தான் இருக்கு வசந்த்