February 5, 2010

சுஜாதா...!



இருவார்த்தை கதைகள்


நம்ம சுஜாதா சார் மாதிரி வரலை இருந்தாலும் ட்ரை பண்ணியிருக்கேன் ஏதோ மொக்கையா இருந்தாலும் கொஞ்சம் சுவாரஸ்யமா இருக்கும்ன்னு நினைக்கிறேன்...எல்லாம் ஒரு முயற்சிஅம்புட்டுத்தேன்...


தலைப்பு : போயிட்டு வர்றேன்ப்பா

கதை : வாசலில் அவசரஊர்தி

************************************************************

தலைப்பு : போஸ்டர் ஓட்டுபவன் கடைசிஆசை

கதை : நிஜக்கண்ணீர் அஞ்சலி

************************************************************

தலைப்பு : ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக

கதை : தொலைக்காட்சி விளம்பரம்

************************************************************

தலைப்பு : ஃபுல் மீள்ஸ் கிடைக்கும்

கதை : அதான் எவ்வளவு?

************************************************************

தலைப்பு : செக்ஸாலஜி டாக்டரின் முதலிரவு

கதை : கவுன்சிலிங் ஃப்ரீ

************************************************************

தலைப்பு : முதன்முறையாக இரட்டைவேடத்தில்

கதை : சினிமாவில் மட்டும்

************************************************************

தலைப்பு : போட்டோகிராஃபர் திருமணம்

கதை : ஸ்மைல் ப்ளீஸ்

************************************************************

தலைப்பு : அடுத்தவாரம் கிரிக்கெட்மேட்ச் இருக்குடா

கதை : பெட் எவ்வளவு?

************************************************************

தலைப்பு : கனவில் ஒரு நிஜம்

கதை : நைட் வாட்ச்மேன்

***********************************************************

தலைப்பு : சலூன்காரரிடம் டெய்லர்

கதை : அளவா வெட்டுப்பா

***********************************************************



72 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வசந்த் ரொம்ப சூப்பர் , நல்லாருக்கு வாழ்த்துக்கள்

சிநேகிதன் அக்பர் said...

கடின முயற்சி செய்து புதுமை செய்யும் இளைஞன் எதிர்ப்பார்க்கும் இரண்டு வார்த்தை.

நல்லாயிருக்கு வசந்த்.

Thenammai Lakshmanan said...

கவுன்ஸிலிங் ஃப்ரீதான் செம காமெடி

மற்ற எல்லாமே சூப்பர் வசந்த்

Anonymous said...

வித்யாசமான முயற்சி வசந்த்.
நல்லா இருக்கு.

ஹேமா said...

நல்லாருக்கு வசந்து...இப்பிடி ஒண்ணு நான் இப்பத்தான் முதன் முறையா பாக்கிறேன்.

இராகவன் நைஜிரியா said...

// அடுத்தவாரம் கிரிக்கெட்மேட்ச் இருக்குடா

கதை : பெட் எவ்வளவு? //

இது .... சூப்பர் கதை

சுசி said...

அட.. இது ரொம்ப புதுசா இருக்கு உ.பி.

நல்ல முயற்சி.

எல்லாமே நல்லாருக்கு.

Kala said...

\\\ஹேமா said...
நல்லாருக்கு வசந்து...இப்பிடி ஒண்ணு
நான் இப்பத்தான் முதன்
முறையா பாக்கிறேன்\\\

இப்படியும் ஓன்றை முதல்
முறையா பார்க்கிறீர்கள்!!

sathishsangkavi.blogspot.com said...

வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கிறது....

கலக்கிட்டிங்க நண்பரே...

balavasakan said...

சலூன்காரன் , டாகடர் செமகாமடி

செந்தில் நாதன் Senthil Nathan said...

வித்தியாசமான முயற்சி...நல்லா இருக்கு...பாராட்டுக்கள்

Chitra said...

தலைப்பு : சலூன்காரரிடம் டெய்லர்

கதை : அளவா வெட்டுப்பா

............. very good!

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அருமையான குறுங்கதைகள்

நல்வாழ்த்துகள் வசந்த்

Unknown said...

தலைப்பு: வசந்த்தின் இடுகை
கதை: வழக்கம்போல அருமை..

Jawahar said...

பிரமாதம்

http://kgjawarlal.wordpress.com

நட்புடன் ஜமால் said...

தலைப்பு : போட்டோகிராஃபர் திருமணம்

கதை : ஸ்மைல் ப்ளீஸ்]]

என்னை கவர்ந்தது ...

---------


நல்ல முயற்சி வசந்த்

இன்னும் இது போல எதிர்ப்பார்க்கிறேன்

Anonymous said...

ஹைய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ............. நீ கிடைச்சால் கொன்னுடுவேன் கிடைக்கமாட்டேன்கிறயே............................................

தமிழ் உதயம் said...

மாறுபட்ட சிந்தனைகள்.
வித்தியாசமான யாருக்கும் தோன்றாத சிந்தனைகள். நன்றாக இருந்தது வசந்த்.

நிலாரசிகன் said...

// அடுத்தவாரம் கிரிக்கெட்மேட்ச் இருக்குடா

கதை : பெட் எவ்வளவு? //

அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்

மேவி... said...

nalla irukkunne

(sujatha eppudi try pannirukkaraaa???)

Kala said...

நீங்க சுஜாதா ஐய்யாவைப் பின் தொடருங்கள்...
நான் ! நானேதான்!


இதற்காக நான் இவ்வளவு சிரமப்பட்டிருக்கிறேன்
யாருக்கும் தெரியாது!!


கேள்வி ; பாலிருக்கும் பழமிருக்கும் என்ன இருக்காது?

பதில் ; பசியிருக்காது


கேள்வி : பஞ்சணையில் காற்று வரும் என்ன வராது?
பதில் ; தூக்கம் வராது







ஆக்கம்...
சிந்தனை....
எழுத்து...
அனுப்புதல்...
இதை இயற்றியது...
அனைத்தும் இந்தக் கலாவே!கலாதான்
உண்மையாக நம்புங்கள்.

வசந்த் எப்படி நம்ம திறமை???

Paleo God said...

வசந்த் ...

ரைட்டு..
--------------------------------

எல்லா புது முயற்சிகளுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்..:))

S.A. நவாஸுதீன் said...

ஹா ஹா ஹா. நல்லாத்தான் இருக்கு வசந்த்.

ராமலக்ஷ்மி said...

இரண்டு மூன்று வார்த்தைகளில் தலைப்பும்..
இரண்டே வார்த்தைகளில் கதையும்..

ஆழம் வலி நகைச்சுவை என மொத்தத்தில் அருமை வசந்த்! சிந்தனைக்கு என் பாராட்டுக்கள்!

அண்ணாமலையான் said...

நல்ல முயற்சி.. வெற்றியும் வந்துவிட்டது.. வாழ்த்துக்கள்..

சைவகொத்துப்பரோட்டா said...

திருக்குறள் மாதிரி ரெண்டே வரிகளில் நல்லா இருக்கு கதை.

க.பாலாசி said...

உண்மையில்....தாக்கம் அருமை...

ஜெட்லி... said...

சூப்பர் நண்பா....மீல்ஸ் மேட்டர் செம நக்கல்...

சந்தனமுல்லை said...

somehow liked this very much /தலைப்பு : சலூன்காரரிடம் டெய்லர்

கதை : அளவா வெட்டுப்பா/

:-)))

பா.ராஜாராம் said...

:-)))

பழூர் கார்த்தி said...

சுஜாதா என்கிற தலைப்பை பார்த்து ஆவலாய் வந்தால்.... அடப் போங்கப்பா :-)) ஓரிரு கதைகள் பரவாயில்லை.. :-)

priyan said...

நீங்க ரொம்ப அரீஈஈஈஈஈவாஆஆஆஆஆஆஆஆலி

ஜெயா said...

நல்லா இருக்கு...

ஜெயா said...

கலா உங்க கேள்வி பதிலும் நல்லா இருக்கு....

Unknown said...

வசந்த் உங்கள் திறமையே தனி தான்.. ரொம்ப விதியாசமாக நல்லா இருக்கு..

ஸ்ரீராம். said...

மிக நல்லா முயற்சி..குறு குறுங்கதைகள்...

திவ்யாஹரி said...

தலைப்பு: ப்ரியமுடன் வசந்த்..
கதை: வித்தியாசமான பதிவுகள்..

நல்ல முயற்சி வசந்த்.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்..

தேவன் மாயம் said...

வசந்த்!! நான் என்ன சொல்ல!!!!!!!வித்தியாசத்திலும் புதுமை வசந்த்!

Menaga Sathia said...

சூப்பர் வசந்த்!!

Menaga Sathia said...

சூப்பர் வசந்த்!!

KANNAPIRAN said...

தலைப்பு : ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக


கதை : தொலைக்காட்சி விளம்பரம்

ethai type pannumbothu
unmayai sollunga vettaikaranaithana ninachinga

rajamelaiyur said...

really nice..

அன்புடன் அருணா said...

ரைட்டு!

கார்த்திகைப் பாண்டியன் said...

ரொம்பவே யோசிச்சு பதிவே எழுதுற மா.. ஹாட்ஸ் ஆப்..

//தலைப்பு : ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக
கதை : தொலைக்காட்சி விளம்பரம்

ethai type pannumbothu
unmayai sollunga vettaikaranaithana ninachinga//

தான் ஆடாவிட்டாலும்..:-))))

பத்மநாபன் said...

நம்ம வாத்தியாரு பேரு தலைப்பிலே இருக்கேன்னு தலை தெறிக்க ஓடிவந்தேன் ......
ஏமாற்றவில்லை ..... வாத்தியார் பேரை காப்பாற்றி விட்டீர்கள் .
பரவலான பதிவுகளில் , இது வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது .
தொடருங்கள் ....

அன்பேசிவம் said...

தலைப்பு : முதன்முறையாக இரட்டைவேடத்தில்
கதை : சினிமாவில் மட்டும்//

இதுதான் வசந்த், எனக்கு நிறிஅய கதை சொல்லுது. அருமையா இருக்கு

சிங்கக்குட்டி said...

நல்லா இருக்கு வசந்த்!.

VISA said...

//தலைப்பு : போட்டோகிராஃபர் திருமணம்

கதை : ஸ்மைல் ப்ளீஸ்//

தலைப்பையும் கதையையும் உல்டாவா போட்டிருந்தா நன்றாக இருந்திருக்குமோ?எல்லாமே அருமை

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம்ம்..

நல்லாதான் யோசிக்கின்றீர்கள்

சாந்தி மாரியப்பன் said...

வித்தியாசமான முயற்சி,

வித்தியாசமான சிந்தனை,

தூள்.!!!!

anujanya said...

பிரமாதம் வசந்த். சுஜாதா ஆளு தான் நீங்க! தூள்.

அனுஜன்யா

SUFFIX said...

நல்லதொரு புது முயற்சி வசந்த!!

Prathap Kumar S. said...

நல்லா இருக்குதுப்பா... எங்க உக்காந்து யோயிச்சதுனு மட்டும் சொல்லு நானும யோசிச்சுப்பார்க்குறேன்...

தமிழ் அமுதன் said...

எல்லாமே சூப்பர் வசந்த்..!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஷேக்...

நன்றி அக்பர் கண்டிப்பா....

நன்றி தேனம்மா :))

நன்றி அகிலா :)

நன்றி ஹேமா இதுபோல் சுஜாதா சார் நிறைய எழுதியிருக்கிறார்

நன்றி ராகவன் அண்ணா

நன்றி சுசிக்கா :(

நன்றி கலாபாட்டி நெம்பலொள்

நன்றி சங்க கவி

நன்றி வாசு

நன்றி செந்தில் நாதன்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி சித்ராமேடம்

நன்றி சீனா ஐயா

நன்றி முகிலன் :))

நன்றி ஜவஹர்சார்

நன்றி ஜமால் அண்ணா கண்டிப்பா(போன போஸ்ட் எப்பிடின்னு ஜொள்ளவேயில்லியேண்ணா :(

நன்றி தமிழ் ஏன் இப்பிடி?

நன்றி தமிழுதயம்

நன்றி நிலாரசிகன்

நன்றி டி.வி.ஆர் சார்

நன்றி மேவீ ஆமாங்ணா எழுதியிருக்கார்...

கலா இது நெம்ப நெம்ப ஜூப்பரு...எப்டியெல்லாம் யோசிக்கிறாங்கய்யா எங்க பாட்டி அவ்வ்வ்வ்வ்வ்......

ப்ரியமுடன் வசந்த் said...

ஷங்கர் ரொம்ப நன்றி ஆமா எப்பிடிதெரியும்?

நவாஸ் நன்றி :)

பாராட்டுகளுக்கு நன்றி ராமலக்ஷ்மி மேடம் :)

அண்ணாமலையான் ம்ம் நன்றிப்பா

சைவகொத்துபரோட்டா நன்றிங்க

பாலாசி நன்றிப்பா...

ஜெட்லி நன்றி

முல்லைமேடம் நன்றிங்க...

அஷோக்,பாரா அண்ணாக்களா ஒரு வாரம் யோசிச்சு யோசிச்சு எழுதுனதுக்கு வெறும் ஸ்மைலிதானா சே இன்னும் நல்லா எழுத ட்ரை பண்றேன்...

பழூர் கார்த்தி ஆமாங்க இன்னும் சரியா எழுதணும்..நன்றிங்க தல

மேடி :)))))))))))

ஜெயா மேடம் நன்றிங்க நீங்களும் கலா பாட்டிக்கு சப்போர்ட்டா?

ஃபாயிசா ம்ம் நன்றி இன்னும் இன்னும் நிறைய எழுத தோணுது...

ஸ்ரீராம் நன்றி

திவ்யா ஜூப்பர் நான் இந்த கமெண்ட் எதிர் பார்த்தேன் யாராச்சும் போடுவாங்கன்னு...

ப்ரியமுடன் வசந்த் said...

தேவா சார் நன்றி சார்...

மேனகா மேடம் நன்றிங்க

கண்ணபிரான் சத்தியம்...

ராஜா நன்றி..

அருணா பிரின்ஸ் :)))

கார்த்திகேய பாண்டியன் ரைட்டு தல :))))))))))))

பத்மநாபன் ஓஹ்.. ரொம்ப நன்றிங்க

முரளி ஆமாங்க மத்ததுலயுமே நிறைய கதைகள் அடங்கியிருக்கு நன்றி...


சிங்ககுட்டி நன்றிப்பா

விசா சார் அட ஆமால்ல மாத்தி யோசிக்கணும்ன்றது இதுவா தல ?
நன்றி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

சேகர் நன்றி :)

அமைதிச்சாரல் :))))))

அனுஜன்யா சார் ரொம்ப சந்தோசம் சார்..,.

சஃபி நன்றி நண்பா

பிரதாப்பு ஃப்ளைட் ஏறி வரவேண்டியிருக்கும் பரவாயில்லியா?

ஜீவன் நன்றி :)

ஸாதிகா said...

ஜூனியர் சுஜாதாவா!!!

Unknown said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

சீமான்கனி said...

எல்லாமே நல்லா இருக்கு மாப்பி...கலக்கல்ஸ்....
முன்னாடியே வரமுடியலயேனு ஒரு சின்ன கவலை....

கௌதமன் said...

தலைப்பு : பிரியமுடன் வசந்த்.
கதை: எங்கியோ போயிட்டீங்க!

அன்புடன் மலிக்கா said...

சகோ. நாந்தான் சொன்னேனுல்ல நீங்க கதாசிரியருக்கெல்லாம் கதாசிரியர் வாழ்த்துக்கள்..

சென்ஷி said...

நல்லாருக்குங்க

சத்ரியன் said...

வசந்த்,

நல்ல முயற்சி... இதே மாதிரி இன்னும் நிறைய கதை விடுங்க.

goma said...

தலைப்பு-அசட்டையாய் இருக்கானே
கதை-டெய்லர்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ஸாதிகா

நன்றி ஆனந்த்

நன்றி மாப்பி பரவாயில்லடா

நன்றி கௌதமன் சார்

நன்றி சகோ சந்தோசம்

நன்றி சென்ஷி

நன்றி சத்ரியன் அண்ணா

நன்றி கோமதிமேடம்

Henry J said...

Unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

பின்னோக்கி said...

தலைப்பு: சகலகலா பதிவர்
கதை: பிரியமுடன்...வசந்த்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சுஜாதாவின் படைப்புக்களை ஆழ்ந்து படித்துள்ளீர்கள்.
அதன் தாக்கத்தில் இருவரிக் கதைகள் எழுத ஐடியா
வந்து... நீங்க எழுதினவை அனைத்தும், நன்று!