February 11, 2010

நானும் நீயும் மழையும் ...!




கண்கள் விரித்து பட படவென்ற இமைகள் துடிக்க துடிக்க நீ என்னுடன் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கையில் தவழும் குழந்தையொன்று கண்களில் தெரியாமல் குத்திவிடுவதுபோல் நாம் பேசிக்கொண்டிருக்கும்பொழுதும் மழையும் வந்து விடுகிறது....




அந்த மழைநாளில் நீ மழையில் நனைந்து கொண்டிருந்த வேளையில் உற்றுக்கவனித்தேன் மழை உன்னை பிடித்திருக்கும் குடையாய் மாறியிருந்தது..அந்த நொடி நான் உன் மீது விழும் மழையாய் போய்விடக்கூடாதா என்று ஏங்க வைத்தாய்....

பொதுவாக நான் உன்னை அணைக்கும் வேளைகளில் சின்ன சின்ன சிணுங்கல்களுடன் கன்னங்கள் ரோஜா நிறத்தில் சிவந்து நீதான் வெட்கப்படுவாய் ஆனால் மழைத்துளியோ உன்னை அணைத்து தட தடவென்ற சிணுங்கல்களுடன் வெட்கம் தாளாமல் மண்ணில் புதைந்து கொள்கின்றன...

ஹூக்கும் நான் அணைக்கவந்தால் சின்ன கோபத்துடன் கைதட்டி விடுகிறாய் மழை அள்ளி அணைக்கும் வேளையில் புன் சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறாய் ஏன் இந்த பாரபட்சம்?

இந்த மழை உன்னை சீண்டும்பொழுதெல்லாம் வானம் வைடு ஜூமில் உன்னை மின்னல் என்னும் ஃப்ளாஷ் அடித்து புகைப்படமாய் சேமித்து கொள்கிறது கேட்டால் கார்மேகம் இதுவரை சேமித்துவைத்திருந்த உன் மீதான காதலின் சாட்சியாம்.... ஹூக்கும் நான் எப்பொழுதும்போல் அவுட் ஆஃப் போகஸில்....

உனக்கு எப்பொழுதும் மழைபிடிக்குமென்கிறாய் உனக்கு பிடித்தது போலவே மழைக்கும் உன்னைபிடித்திருக்கும்போல நீ சொன்னதும் பட பட வென்று வந்து சில்லென்று வீசிப்போகிறது உன்னைப்போலவே....

வந்துவிட்ட மழையில் நனைந்தது போதுமென்று நீ குடை எடுத்து விரிக்கின்றாய் அடுத்த நொடியே நின்றுவிடுகிறது மழை குடையின் மீது கோபம் வந்திருக்கும் போல பாவம் அதற்கெப்படிதெரியும் நீ மழைக்கால குளிர் சூட்டை தணிக்க குடை கொண்டுவராத என்னை உன்னுடன் சேர்த்துகொள்வதற்க்குத்தான் நீ குடைவிரித்ததை....

பிறகு நம் காதல் புரிந்திருக்கும் போல மீண்டும் சோவென்று மழை பெய்கிறது நானும் நீயும் உன்னுடைய குடையில் நனையாமல் இருந்தோமென்றால் நம் காதல் பொத பொதவென்று நனைந்திருந்தது...மழைவிட்டதும் நனைந்திருக்கும் இலைபோல...

இப்பொழுதும் மழை வரும்பொழுதெல்லாம் உன் நினைவுகள் உயிர்பெற எத்தனிக்கின்றன மீட்டெடுக்க இன்னொரு மழையாய் நீ வருவாய் என்ற நம்பிக்கையில் மரணித்த நம் காதல் மூன்றாவது நாளுக்காய் மீள துடித்து கொண்டிருப்பது தெரியாமல் ...


51 comments:

நசரேயன் said...

ஊரிலே மழை இல்லாம இருப்பதற்கு காரணம் இப்பத்தான் புரியுது

கமலேஷ் said...

ஆரம்பிச்ச விதம் மிக அருமை வசந்த்...ரொம்ப நல்லா வந்திருக்கு ...வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

அன்புடன் நான் said...

இதையே... வரிகளை உடைத்து.....
கொஞ்சம் வார்த்தையை சுருக்கி
(கருத்தை சிதைக்காது அப்படியே)

கொஞ்சம் முயன்று எழுதியிருந்தால்.... ஒரு அழகிய கவிதை பிறந்திருக்கும் (உண்மையாக)

இது என் எண்ண்ம்.... வாழ்த்துக்கள் வசந்த்!!!

Anonymous said...

First Class

சாந்தி மாரியப்பன் said...

ரொம்ப நல்லா வந்திருக்கு வசந்த்.படம் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. ஏன்னு தெரியுதா?.

ஹெட்டரிலும்,ப்ரொஃபைலிலும், இதை முயற்சித்து விட்டு கைவராமல்தான் வேறு மாற்றிவிட்டேன்.

ராமலக்ஷ்மி said...

அருமை வசந்த் பதிவும் படமும் காதலும்...!

balavasakan said...

எனக்கும் அதுதான் சத்தமேகம் இது கவிதை இல்லையா போலவே இருக்கிறது அசத்தல் வசந்

சந்தனமுல்லை said...

/நசரேயன் said...

ஊரிலே மழை இல்லாம இருப்பதற்கு காரணம் இப்பத்தான் புரியுது
/

:-)))

அன்புடன் அருணா said...

ஹை!மழையில் நனைந்தது போல
இருக்கு!

Paleo God said...

நினச்சேன் ,,

நல்லா இருக்கு வசந்த்..:)

tt said...

வசன கவிதையா?... நல்லாயிருக்கு வசந்த்..

Anonymous said...

மழையில் நனைந்தது காதலா? மனமா?

அழகிய மழைக்காலம்...ம்ம்ம்ம் இங்க எப்ப மழைவருமுன்னு தெரியலை நனையனும் போல இருக்கு படித்தவுடன்......

Ashok D said...

அட அட.. நல்லாவே பொழியட்டும் மழை :)

தமிழ் உதயம் said...

நீ... நான்... மழை... நாங்கள் எழுத நினைத்த கவிதையை நீங்கள் எழுதி விட்டீர்கள்.

VINCY said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் வசந்த். ஆனால் சிந்தனையில் இன்னும் கொஞ்சம் ஆழம் அவசியம். முயற்சி அருமை.

VISA said...

ஜில்லுன்னு ஒரு மழை!!!!

சைவகொத்துப்பரோட்டா said...

அச்...அச்... சுகமா இருக்குன்னு மழையில ரொம்பவே நனைஞ்சிட்டேன், அருமையான மழை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

மிக அருமை

மாதேவி said...

மழை மனத்தை நனைக்கிறது.

Unknown said...

ரொம்ப நல்லாயிருக்கு..

அண்ணாமலையான் said...

ம்ம் இதுல எத்தன காதலர்கள் ரசிச்சிக்கிட்டு இருக்காங்களோ? சந்தோஷமா இருந்தா சரிதான்

ஹேமா said...

வசந்து...இதுதான் அண்ணைக்குத் தும்மிட்டுக் கிடந்தீங்களோ.
இப்பத்தானே தெரியுது.
நடக்கட்டும் நடக்கட்டும்.

அருமையான படம்.நீங்க அடிக்கடி சொல்லும் உணர்ந்து எழுதுறது இப்பிடித்தானோ.நானும் உணர்ந்தேன்.எனக்கென்னமோ இன்னும் மழையில் நனைஞ்சிருக்கலாமோன்னு இருக்கு.
இன்னும் ஆழமான வரிகள் கிடைச்சிருக்கும் !

Unknown said...

யோவ் வசந்து,, காதல்னா என்னான்னே தெரியாதுன்னு பினாத்திக்கிட்டிருந்த? இன்னிக்கு என்ன காதல் ரசம், சாம்பார், வடை பாயசத்தோட விருந்தே வச்சிருக்க?

Menaga Sathia said...

படம் ரொம்ப அழகா இருக்கு.அருமையா எழுதிருக்கீங்க...

ஆர்வா said...

மழையில நனைஞ்சது ரொம்ப சுகமா இருக்கு..நல்ல ரசனை

சிநேகிதன் அக்பர் said...

நல்லா இருக்கு வசந்த்.

Subankan said...

:))

ஜெயா said...
This comment has been removed by the author.
சீமான்கனி said...

நீ..மழை..காதல்...
வசன கவிதை...அழகாய் வந்திருக்கு மாப்பி...காதல் மழையில் நனைந்த அனுபவம்...

நிலாமதி said...

படமும் காதல் கதையும் அருமையாக் வந்திருக்கு .........என்றும் காதல் மழையில் நனைய வாழ்த்துக்கள்.

சிவப்ரியன் said...

இரண்டாவது பத்தியிலேயே... மனது கற்பனையில் மிதந்து விட்டிருந்தது...

காதலியோடு மழையில் நனைந்த அனுபவம்..

மீண்டும் ஒருமுறை வார்த்தைகளாய்......


(எனக்கல்ல... உங்களுக்கு...)
அருமையான அனுபவம் / கவிதை..?
வாழ்த்துக்கள்.!

Thenammai Lakshmanan said...

மழைவருது மழைவருது குடை கொண்டு வா மானே...ஹாஹாஹா வசந்த் சுப்பர்ப் ...!!!

சுசி said...

எங்களையும் நனைய விட்டிட்டீங்களே உ.பி..

ரசனையான எழுத்து நடையில உங்க ரசனைய சொல்லி இருக்கீங்க.

ரொம்ப நல்லாருக்கு..

சுசி said...

உங்க வலிய கடைசில நாலு வரில சொன்னாலும் கனமா இருக்கு :(((

சுசி said...

உங்க ஃபோட்டோ எடுக்கிர புத்திய காட்டி இருகீங்க.

நல்லா இருக்கு..

பா.ராஜாராம் said...

எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு தம்பு.

ஸ்ரீராம். said...

மழையில் நனைந்து இளமை முழுதும் கரையாமல் சீக்கிரம் கல்யாணம் பண்ணுங்க வசந்த்..

SUFFIX said...

வரிகளில் நன்றாக நனைய வைத்து விட்டீர்கள், நல்ல எழுத்து நடை.

அப்துல்மாலிக் said...

மழையை ஒரு பெண்ணோடு ஒப்பிட்ட விதம் அருமை

ஏண்ணே சினிமாவுக்கு வசனம் எழுதப்போகக்கூடாது

Kala said...

ஹூக்கும் நான் அணைக்கவந்தால்
சின்ன கோபத்துடன் கைதட்டி
விடுகிறாய் மழை அள்ளி
அணைக்கும் வேளையில்
புன் சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறாய்
ஏன் இந்த பாரபட்சம்?\\\\\\\\\\

அது மழை
அணைத்தால் பரவாயில்லை.

இது காளை
அணைத்தால்.....!!!????

Kala said...

வசந்த் படத்தைப் பார்த்தவுடன்
நனையனும் போல் தோன்றுகிறது


நீங்கள் நனைந்த காதலை...
உங்களை நனைத்த காதலை
நான் ,நீ, மழையெனப் பொழிந்து
விட்டீர்கள்.அருமை.

பொழிதலில்... மரணித்த உன் காதல்....
மீண்டும்...உயிர் பெறுவது ...
அசாத்தியமே!!

சுரபி said...

மழை அழகு.. பெண் அழகு.. இருவருடன் காதலும் மிக அழகு.. :)

எட்வின் said...

அருமை ... அருமை...உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/index.asp

கயல் said...

மழை நேரத்தில் காதலர்கள் குடை பிடித்தால் மழை மன்னித்து விடும் வசந்த்! அது சரி! இதெல்லாம் எப்போயிருந்து?

கற்பனையாயிருந்தா அழகான கற்பனை!
உண்மையாயிருந்தா ஆகா இனி நல்ல நல்ல காதல் கவிதைகள் வசந்திடம் எதிர்பார்க்கலாம்!

வாழ்த்துக்கள் நண்பரே!

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி நசரேயன் :)))

நன்றி கமலேஷ்

நன்றி கருணாகரசு ம்ம் அது கவிதையாய் மாறிவிடுமென்பதால் வசன வடிவில் எழுதிப்பழகினேன்...

நன்றி அகிலா :)

நன்றி அமைதிச்சாரல் அட ஆமால்ல உங்க ப்ரோஃபைல் போட்டோவும் ரசனையாவே இருக்கு என்ன செய்ய அனிமேட்டட் படம் ப்ரோஃபைல்ல வச்சுக்க முடியாதே இருந்தாலும் கூகுள்க்கு மெயில் பண்ணி கேட்டி எப்பிடியாவது மழை வர வச்சுடலாம் கவலை விடுங்க...சாரல்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி ராமலக்ஷ்மி மேடம் :)

நன்றி வாசு :)

நன்றி முல்லை மேடம்

நன்றி அருணா பிரின்ஸ்

நன்றி ஷங்கர் :))))

நன்றி தமிழ்

நன்றி தமிழரசி

நன்றி அஷோக் அண்ணா

நன்றி தமிழுதயம் ரமேஷ்

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி வின்சி அப்படியே ஆகட்டும்

நன்றி விசா

நன்றி சைவ கொத்து பரோட்டா

நன்றி டி.வி.ஆர் சார்

நன்றி மாதேவி

நன்றி சிநேகிதி

நன்றி அண்ணாமலையான்

நன்றி ஹேம்ஸ் லொல் :))

ப்ரியமுடன் வசந்த் said...

நன்றி முகிலன் @ தினேஷ் சொன்னதெல்லாமா நம்புவாக இன்னும் சின்ன புள்ளையாவே இருக்கீங்கண்ணே

நன்றி மேனகா மேடம்

நன்றி கவிதை காதலன்

நன்றி அக்பர்

நன்றி சுபா

நன்றி மாப்பி ம்ம்

நன்றி மூன்மூன் அக்கா ஹா ஹா ஹா நிலாமதி = நிலா + நிலா சரியா?

நன்றி சிவபிரியன்

நன்றி தேனம்மா

சுசிக்கா ம்ம் நோ நோ ஃபீலிங்ஸ் சும்மா எழுதினது காதலிச்சாத்தான் கவிதையெழுதணுமா என்ன?

நன்றி பாரா அண்ணா

நன்றி ஸ்ரீராம்

நன்றி சஃபி

நன்றி அபு

நன்றி கலா உங்ககிட்ட நாங்க மாட்டிகிட்டு முழிக்கிறது எங்களுக்குத்தான் தெரியும் அவ்வ்வ்வ்வ்......

நன்றி சுரபி

நன்றி எட்வின்

நன்றி கயலு நெசமாவே கற்பனைதேன் கயலு...

*இயற்கை ராஜி* said...

mm..sari..sari... irukka vendiyathuthan...:-)))


nalla irukku:-)

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

வாவ்.. சூப்பரா வடிச்சிருக்கீங்க.. மழையும் - காதலும் - காதலியும் - குடையும்....

மா.குருபரன் said...

ம்....குளிர் மழை.... நல்லா இருக்குதங்க...