ஏன் இந்த சென்னை மோகம் ? விமான போக்குவரத்து,கப்பல் போக்குவரத்து இந்த இரண்டு விஷயங்களினால்தான் இந்த இரண்டு விஷயங்களினாலும் தற்போது வந்திருக்கும் மென்பொருள் துறையினால் மட்டுமே சென்னையின் அத்தனை அசுர வளர்ச்சிக்கும் காரணம் என்று கூறலாம் இது இன்னும் எங்க போய் முடிய போகின்றதோ அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்
பொதுவா ஒரு ஸ்கூல்ல ஒரு வகுப்பில் படிக்கிற 40 மாணவர்களில் ஒருத்தன் நல்லா படிக்கிறான் அவனுக்கு அதுக்கு தகுந்த வசதிகளும் வாய்ப்பும் இருக்கென்று வைத்து கொள்வோம் ஆசிரியரும் அந்த மாணவனை மட்டும் நீ நல்லா படிக்கிறன்னு தட்டி குடுத்துட்டு மற்ற பசங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரென்றால் அந்த வசதியான பையன் மட்டும்தான் நல்ல மார்க் எடுப்பான் மற்றவங்க எல்லாம் ஏதோ பேருக்கு படிச்சோம்ன்னு போய்டுவாங்க அதுமட்டுமில்லாம அந்த ஒரு மாணவரின் மீது மற்ற மாணவர்களுக்கு காழ்ப்புணர்ச்சியும் வரும் அப்பொழுது அந்த ஆசிரியர் என்ன பண்ண வேண்டும் மீதியிருக்கும் மாணவர்களுக்கும் அவர்கள் படிப்பதற்க்கு தகுந்த வசதியும் ஊக்கமும் கொடுக்கும்பொழுது மற்ற மாணவர்களுக்கும் இன்னும் நல்லா படிக்கணும்ன்னு ஆர்வம் வரும் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று அந்த பள்ளிக்கே பெருமை சேர்ப்பார்கள் ஒரே ஒரு மாணவன் மட்டுமே அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும்?
இதே போல்தான் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களில் வசிக்கும் மக்களின் சென்னை வாழ்க்கை ஆசையானது சென்னை மீது ஒரு வித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இல்லைன்னு சும்மா வார்த்தைக்கு வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் நிஜத்தில் நம்மலால சென்னையில் வாழ முடியலைன்னு ஒரு ஏக்கம் இருக்கும் .இந்த அரசும் அரசாங்கமும் அரசியல் வாதிகளுமே சென்னையையே விரும்புகின்றனர் ஆதலால் அவர்களும் இந்த விஷயத்தை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் பத்தோடு பதினொன்றாக ஆட்சி செய்துவிட்டு போய்விடுகின்றனர்..
சென்னை தவிர மற்ற நகரங்களில் வாழும் எங்களுக்கு இப்போ என்ன தேவைன்னு நினைத்து பார்க்க அரசாங்கத்துக்கும் அரசியல்வாதிகளுக்கும் நேரமில்லை ஏன் தமிழ் நாட்டில் இருக்கும் மதுரை திருச்சி கோவை போன்ற நகரங்கள் இன்னும் வளரும் நகரங்களாகவே இருக்கின்றன? இந்நகரங்களிலும் சென்னையில் இருக்கும் பாதி அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களை பகிர்ந்து அந்நகர வளர்ச்சிகளுக்கும் அரசு உதவலாமே ஆனால் முயற்சி செய்ய மாட்டார்கள் அத்தனைக்கும் லஞ்சம் என்ற விஷயத்தையும் தாண்டி சுயநலம் என்ற ஒன்றும் இருக்கின்றது , முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரின் வீடு நிலம் அனைத்தும் சென்னையில்தானே இருக்கின்றது இன்னும் நிறைய அரசியல் தலைவர்களின் பங்குகளும் சென்னையில் இருக்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் மூதலீடாய் இருக்கின்ற பொழுது அவர்கள் எப்படி சென்னையை விட்டு மற்ற நகரங்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வார்கள்?
இப்படி கப்பல் துறைமுகம் இருக்கும் நகரம் மட்டும் தொழிற் புரிய வசதின்னு ஒரு நியாயம் இருக்கிறது ஏனென்றால் உற்பத்தி செய்த பொருள்களின் ஏற்றுமதிகளுக்கும் உதிரி பாகங்களின் இறக்குமதிக்கும் சரியென்று வைத்துகொண்டாலும் மற்ற கணிணி மென்பொருள் துறையும் சென்னையிலேதான் வளர்ச்சி பெறவேண்டுமென்று விதியிருக்கிறதா என்ன? கேட்டால் கணிணி மென் பொருள் துறை வல்லுனர்கள் ஓய்வு நேரங்களை கழிக்க சிறந்த பொழுதுபோக்கு இடங்களும் இங்கே நிறைய இருப்பதால் பெரும்பாலானோர் சென்னையையே விரும்பவதாக கூறலாம் அந்த பொழுதுபோக்கு வசதிகளை தமிழ்நாட்டின் மற்ற நகரங்களிலும் ஏற்படுத்தி அந்த நகரங்களிலும் மென் பொருள் துறை வளர்ச்சியை ஏற்படுத்தலாமே இப்பொழுதும் இநநகரங்களில் மென் பொருள் நிறுவனங்கள் இயங்கினாலும் சென்னை அளவிற்க்கு வளர்ச்சியடையவில்லையென்றே கூறலாம்...
ஏன் சினிமாத்துறை சென்னையில் மட்டும் இயங்குகிறது? சினிமா தயாரிப்பதற்க்கு தேவையான மூல சாதனங்கள், ஸ்டுடியோக்கள், ரெக்கார்டிங் ஸ்டுடியோக்கள் அத்தனையும் சென்னையில் மட்டுமே இருப்பதனால் சினிமா தயாரிப்பவர்களால் சென்னையை விட்டு வெளியே வர விருப்பமில்லை அத்தனை வசதிகளையும் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் ஏற்படுத்தி அங்கேயும் திரைப்படம் எடுக்க முயற்சிக்கலாமே செலவுகளும் குறையும்,ஆனால் இதையும் கண்டுகொள்வார்களா மாட்டார்கள் ஏனென்று அவர்களுக்கும் திரைப்படத்துறையினருக்கு மட்டுமே வெளிச்சம்...
இன்னும் கல்வி,மருத்துவம் அத்தனையிலும் பிரதான நிறுவனங்கள் அனைத்தும் சென்னையில் மட்டும் இயங்குகின்றன இப்படியே போனால் சென்னை தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவெடுக்கும் நிலை வரலாம் அப்படியான சூழ்நிலையில் வளர்ச்சியடையாத நகரங்களை மட்டுமே வைத்துகொண்டு மீதியிருக்கும் நாடு பொருளாதார நிலையில் கடும் வீழ்ச்சிகளை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பது நிச்சயம்..இவற்றை தவிர்க்க தமிழ்நாட்டின் மற்ற நகரங்களையும் கண்டுகொள்ளுமா அரசு?
பதிவர் சந்திப்புகளும் புத்தக வெளியீடுகளும் கூட சென்னையில் மட்டுமே நடைபெறுவதற்க்கும் என்ன காரணம் என்று சென்னை பதிவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கே வெளிச்சம் கேட்டால் சென்னையில் நிறைய பதிவர்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும் இந்த சந்தோஷகரமான புத்தக வெளியீடு பதிவர் சந்திப்பு போன்றவற்றை பார்க்கும் ஏனைய நகரங்களில் இருக்கும் பதிவர்களின் மனவெளிப்பாடு எப்படியிருக்கும்? அவர்களும் இந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள்தானே கன்னியாகுமரியில் இருக்கும் ஒரு பதிவர் சென்னை வந்து கலந்துகொள்ள ஆகும் செலவை நினைத்து பார்த்தால் அம்மாடி இருந்தாலும் புத்தக வெளியீடு சந்திப்புகளுக்கான சூழ்நிலை ஆகியவற்றிற்க்கும் சென்னை வசதியாக இருக்கிறது அதற்கு அவர்களை சொல்லியும் குற்றமில்லை...
(இது முற்றிலும் என்னுடைய கருத்து மட்டுமே)
49 comments:
freeya udu mamae....
freeya udu mamae....
ஒரு மாணவன் மட்டுமே அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும் அனைத்து மாணவர்களும் சேர்ந்து அந்த பள்ளிக்கு பெயர் வாங்கித்தருவது எப்படியிருக்கும்?
நல்ல சிந்தனை வசந்த்..
உண்மைதான்.
உண்மைதான், மற்ற நகரங்கள் கவனிக்கப்பட வில்லை.
யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும். (வரும்னு நம்புவோம்).
// சட்டமன்றம், சினிமாத்துறை,தொழில்துறை,மென்பொருள் துறை என அத்தனை விஷயங்களின் தலைமையிடமாக விளங்குகிறது. //
// இதன் விளைவு இடப்பற்றாக்குறை, நில மற்றும் வீடு ஆகியவற்றின் விலை உயர்வு,வீட்டு வாடகை உயர்வு தண்ணீர் பற்றாக்குறை, etc..
நச் பதிவு..
சென்னை மேல் மோகமா? சென்னைல வசிச்சுப் பாத்திருக்கீங்களா? :))
நீங்க சொல்லியிருந்த துறைகள்ல சென்னைக்கும் மத்த நகரங்களுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கு தான்.. இனிமே இடம் குறைச்சலா ஆக ஆக மத்த இடத்துக்கும் வருவாங்கன்னு தோனுது..
ஆனா இதுகளை தவிர்த்து பார்த்தா மற்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை மோகம் குறைவு தான்..
படித்தேன் வசந்த்.....
உங்கருத்துக்கள் அனைத்தும் சரியாய்தான் இருக்கு மாப்பி...மாறினாலும் மாறிடும்...வாழ்த்துகள்...
சென்னையை போல் மற்ற நகரங்களிலும் போதிய வசதிகள் இருக்குமானால் அவரவர் ஊரிலேயே சுகமாக இருந்துவிடலாம். சென்னை போன்ற மகா நகரத்துக்கு படை எடுத்து அடுக்கு மாடி குடியிருப்பு வாங்கி அல்லது வாடகை வீட்டில் நொண்டி அடித்து வாழ் வேண்டியிருக்காது. பலரும் பலவாறான வாழ்வை தேடி சென்னைக்கு வருகிறார்கள். சென்னை ஒரு அதிசய நகரம்.
நல்ல பதிவு....
ஒரு பலூனை எவ்வளவு தான் ஊத முடியும். ரெம்ப ஊதினா உடைஞ்சிடும். சென்னை மட்டுமல்ல எல்லா பெருநகரங்களும் பலூன் மாதிரி. அரசியல்வாதிகள் இத புரிஞ்சிட்டு நடந்துக்கிறது நல்லது.
சென்னையைத் திட்டிக்கொண்டே அங்கேயே வசித்து வரும் அநேகம் பேரில் நானும் ஒருவன் தான், இப்போது சென்னை வளரும் வேகத்தில் கூடிய விரைவில் அது திருச்சி வரை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை. வீங்கிக் கொண்டே செல்லும் எதுவும், ஒரு நாள் வெடித்தே தீரும்
நண்பா நல்ல சிந்தனை யோசிக்குமா அரசாங்கம் இப்பொழுதெல்லாம் தங்கள் எழுத்தில் முதிர்ச்சியும் சமூக அக்கரையும் தெரிகிறது
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
அண்ணாச்சி நீங்க சென்னையில் வந்து வசித்துப் பார்த்தால் தெரியும்
:)
//பதிவர் சந்திப்புகளும் புத்தக வெளியீடுகளும் கூட சென்னையில் மட்டுமே நடைபெறுவதற்க்கும் என்ன காரணம் என்று சென்னை பதிவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கே வெளிச்சம் கேட்டால் //
இது என்ன புது கதை?? சென்னை,துபாய்,சிங்கை எனப் பல இடங்களில் பதிவர் சந்திப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மதுரை,திருச்சியில் கூட நடந்ததாய் நினைவு. சமீபத்தில் ஈரோட்டில் நடந்த சந்திப்பிற்கு சென்னையில் இருந்து பலரும் சென்றிருந்தோம். ஒரு விஷயம் சென்னை என்பது பார்ப்பதற்கு ஒரு ஊராய்த் தெரிந்தாலும் பல ஊர்களின் தொகுப்பு.உதாரணமாய் பூந்தமல்லி தாண்டி இருக்கும் யாத்ராவோ, மடிப்பாக்கத்தில் இருக்கும் லக்கிலுக்கோ என்னைப் பார்ப்பதற்காக வந்தால் பீக் அவரில் குறைந்தது 2 மணிநேரப் பயணத்தில்தான் என்னை வந்து பார்க்கமுடியும். ஆனால் திருப்பூர்,கோவை,மதுரை போன்ற ஊர்களில் அதிகபட்சம் 20 நிமிடப் பயணத்தில் நகரின் எந்தப் பகுதியில் இருந்தும் எந்தப் பகுதிக்கும் சென்றுவிடலாம். எனவே அந்த ஊர்களில் இருக்கும் பதிவர்கள் தனிப்பட்ட முறையில் அடிக்கடிச் சந்திக்கின்றனர். எங்களுக்கு அந்த வாய்ப்பு கம்மி.எனவே அடிக்கடி பதிவர் சந்திப்புகள் நடத்தி பார்த்துக்கொள்கின்றோம். சென்னைப் பதிவர்கள் சென்னையில்தான் சந்திக்க முடியும், கன்யாகுமரியில் அல்ல :)
அடிக்கடி இப்படி ஏதாவது சொல்லி வயித்துல புளிய கரைச்சு விடுங்கப்பு.
பேசாம திருநெல்வேலி தமிழ்நாட்டின் தலைநகரமா ஆக்கசொல்லி போராடுவோம்...
கடைசியாக நடந்த புத்தக வெளியீட்டு விழாவின் பின் வெளிப்பாடா இது?
பேசாமல் ஒவ்வொரு நகரத்தையும் ஒவ்வொரு வருடம் என்று தலைநகராக ரோடேடஷனில் வைத்து விடலாம்...
அப்துல்லாவை அப்படியே வழி மொழிகிறேன். 20 வருடத்திற்கு முன்பு இருந்த சென்னைக்கும் இன்று இருக்கும் சூழ்நிலைக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் உண்டு.
இக்கரைக்கு அக்கரை பச்சைதான்.
கோவை நகரத்தைப் பற்றியும் நண்பர்கள் மூலம் நிறைய கேள்வி பட்டிருக்கின்றேன் வசந்த், பள்ளி, கல்லூரி, தொழில் வசதிகள் சென்னைக்கு நிகராக அங்கேயும் இருக்காமே?
ஆதங்கம் நியாயமானது. எனக்கும் இதே எண்ணம் தான்.
//பேசாம திருநெல்வேலி தமிழ்நாட்டின் தலைநகரமா ஆக்கசொல்லி போராடுவோம்...//
கன்னா பின்னா ரிப்பீட்டு.
வசந்த்,
சிந்திக்க வெண்டொய விசயந்தான். சிந்திப்போம்!
தெலுங்கானான்னதும் உங்களுக்கு இந்த ஐடியா வந்ததோ. எல்லா துறைகளிலும் சில மாவட்டத் தலைநகரங்கள் சிறந்து விளங்குகிறது.
சினிமா என்றால் கோவையில் பக்ஷிராஜா ஸ்டூடியோ(மலைக்கள்ளன்) சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ்(மந்திரிகுமாரி,,,,,பல படங்கள்) அன்று பிரபலம். தலைநகரை திருச்சிக்கு மாற்ற ஒரு பேச்சு நட்ந்தது.
ஏனோ சென்னையிலேயே புதிய சட்டமன்றம் கட்டுகிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்கள்(ஆட்சி செய்பவர்கள் என சொல்ல தோணலை)கொஞ்சம் எட்டி யோசிக்கணும்.
கண்ணா சொன்ன மாதிரி திருநெல்வேலி மட்டும் வேண்டாம். எங்க ஊர் ஒரு பெரிய கிராமம்.
விடுங்க.., நீங்க இந்தியா வரும் போது சென்னை வந்து தான வருவிங்க
சரியான நெத்தியடி, ஒரு உண்மை வெளிச்சதிற்க்கு வருகிறது. பூணைக்கு யார் மணி கட்டுவது?
சரியாச்சொன்னீங்க நண்பரே...
இதில் நம்மாளுகளையும் கோர்த்து விட்டுட்டிங்களே...........
வசந்து....சமூகச் சிந்தனை.
உங்கள் ஆதங்கம்.நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்.அரசியலவாதிகள் கையில் அல்லவா எங்கள் நாடுகள் பிடிபட்டுக் கிடக்கிறது !
'''''''பேசாம திருநெல்வேலி தமிழ்நாட்டின் தலைநகரமா ஆக்கசொல்லி போராடுவோம்...''''
நல்ல தான் ஆப்பு வைக்கிறேங்க....
கலைஞர் ஜெய்லலிதா எல்லாரும் என்ன பன்னுவாஹா?போயஸ்ஸுயும் கோபாலபுரம் ,SIT காலனி சகிதம் வந்து இறங்குவார் அதை தொடர்ந்து விஜயகாந்த்,ராமதாஸ் .......அரசியல் இத்தியாதி எல்லாம் வந்து திருநெல்வேலி வந்து இறங்குவாஹ உங்களுக்கு அத்த ஒட்டி கான்ரேக்ட் பிஸ்னஸ் நடக்கும் பார்கிரீரோ விட்டுறவமாக்கும் ....
'''இது முற்றிலும் என்னுடைய கருத்து மட்டுமே)'''
இத்த எழுத கண்ணன் சார் ஐடியா கொடுக்கல்ல....
ஏன் கன்யாகுமரி மாவட்டத்தை ஆக்கினால் என்ன?
//malar said...
ஏன் கன்யாகுமரி மாவட்டத்தை ஆக்கினால் என்ன?//
நாங்கதான் முதல்ல துண்டு போட்டு இடம் புடிச்சோம்...அதனால திருநெல்வேலியைதான் ஆக்கணும்..
Unmai.. :)
உண்மை.. சென்னை இல்லாம என்னால வாழ முடியாது. நல்ல அலசல் வசந்த்
நல்ல சிந்தனை வசந்த்!!
நல்ல அலசல் வசந்த்,
இந்த மாதிரி பிரச்சினைகளுக்கான தீர்வாக கொஞ்ச வருடம் முன்பு திருச்சியை தமிழ்நாட்டின் தலை நகராக்க ஆலோசனை நடந்து, பின் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
ஆனா... இந்த நிலைமை ரொம்ப நாளுக்கு நீடிக்காது... மாற்றங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டன.. கோவையும் மாறி விட்டது.. அனால் சென்னையைப் போன்று மற்ற பகுதிகள் ஆகக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன்.. சென்னை மாநகரில் உள்ள கம்பெனிகளை வைத்து சென்னையில் உள்ளவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்வது ஞாயமான தர்க்கம் ஆகாது.. அங்கே சோகங்கள் மட்டுமே மிச்சம். உண்மையான அழகு இந்த முதலாளித்துவம், மற்றும் நகரமயமாக்கல் பாதிக்காத பகுதிகளிலேயே உள்ளது. கனவிலேயே இருக்காதீர்கள்.. விழித்துக் கொள்ளுங்கள்.. நன்றி..
மக்கள் செல்வாக்கு நிறைந்த எம்ஜிஆர் உருவாக்க நிணைத்த நிணைப்பு கூட அதிகாரிகளால் மாற்றப்பட்ட கதைகளும் உண்டு. அரசியல் பணம். இரண்டைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஜெரி சொன்னது தான் சிறப்பு. சிறப்பான அலசல்.
நல்லா யோசிக்கறீங்க!!
தவிர்க்க முடியாதது வசந்த்!
@ சகாதேவன்,
//திருநெல்வேலி மட்டும் வேண்டாம். எங்க ஊர் ஒரு பெரிய கிராமம்.//
சிறு நகரம் என்றுதான் சொல்லுங்களேன்! அமைதி போய் விடுமென்கிற பயமும்தானா:)?
தல சென்னையில் நிறைய பதிவர்கள் இருக்காங்கன்னு சொல்றத விட சென்னையில் வேலைப் பார்க்கும் பல வெளியூர்க் காரங்கப் பதிவர்களா இருக்காங்கன்னுதான் சொல்லனும்...
மெட்ராஸ் பெயர் மட்டுமே சென்னை என்று மாறியது,
மக்கள் மன அழுத்தம் மாறவில்லை என்பது உண்மைதான்.
நியாயமான கேள்விகள்!
பதில் சொல்லவோ, நடவடிக்கை எடுக்கவோ அரசியல்வாதிகளுக்கு நேரமில்லை.
எப்ப இப்படி எல்லாம் ஆச்சி சொல்லவே இல்லை
அப்துல்லா சொன்னதும் புலவன் புலிகேசி சொன்னதும் ரிப்பீட்டேய்ய்ய்!!!
சுனாமி தெரியுமுல......கடற்கரையை தாண்டி வந்த சுனாமி திருவல்லிக்கேணிக்கு வந்து அப்பால எக்மோர தாண்டி அப்புடியே ஆயிரம்விளக்குல ஏறி.....வர எவ்வளவு நேரம் ஆகுமப்பு. நல்ல இருங்க சென்னை மக்கா, மரம் இல்லாம மண்ட காஞ்சு பைத்தியம் தான் புடிக்க போகுதுப்பு
romba naal kazhichu varren.. epdi ipdi ezhudharinga vasanth? romba nalla irukku.
neengal solvadhu sariye, chennai thaan osathi nu ninaipum, apdiye thaan irukka vendum endru ninaipadhum, niraya chennaivasigalidam undu - including me. ipolam oralavu maariten :)
நான் அரசி இயல் வாதி மகள்
இதுபற்றிப் பேசப்படாது அப்பு
சகோ நானும் வந்துட்டுபோயிட்டேன்..
சரியா..
உங்க கருத்து மட்டுமா உ.பி??
நல்ல அலசல்.
கண்ணுக்கு பயிற்சியா தண்டனையா??
கருத்துகளை பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி....
அப்துல்லா சார் உங்கள் கருத்து சரியானதுதான் ஆழ்ந்து படிக்கும் பொழுது அதிலிருக்கும் வன்மமும் தெரிக்கிறது.... ஒகே எது எழுதினாலும் அதிலிருக்கும் எதிர் கருத்துகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் வேண்டும்தானே இப்போ எனக்கு பழகிடுச்சு ஆதலால் உங்கள் கருத்தோடு ஒற்றுப்போகின்றேன்....
Post a Comment