சிவாவை கொலை செய்றதுன்னு முடிவு செய்துவிட்டாள் நித்யா,காரணம் நிறைய எதிர்த்த வீட்டு சுமன் அண்ணாவோட அதிகம் பேசுறேன்னு சந்தேகம், ஆபிஸ்ல இருந்து வீட்டுக்கு ஏன் தாமதமாக வருகிறாய் என்று தினமும் வாக்குவாதம், சரியாக சமைக்கிறதில்லைன்னு குத்தல் இன்னும் நிறைய ஏன் எனக்கு பிடிக்காத இந்த சாரி கட்டியிருக்க? இப்படி நிறைய எல்லாம் பொறுத்து பொறுத்து பார்த்தாகிவிட்டது திருமணமாகி இந்த 6 மாதத்தில்.இறுதியில் ஏன் உங்க அப்பா இங்க அடிக்கடி வர்றான்னு கேட்டு அப்பா மகள் உறவை கொச்சைப்படுத்திய பொழுதுதான் இவனை கொலை செய்தே விடுவது என்று முடிவு செய்துவிட்டாள்...
இப்போ கொலை செய்றதுன்னு முடிவு செய்தபிறகு எப்படி கொலை செய்வது என்று பல குழப்பம் கொலை செய்தால் போலீஸ் பிடித்து சென்றுவிடும் என்ற பயமும் கூடவே கொலை எப்படி செய்றதுன்னு தெரியாமல் நிறைய ஆங்கில பட டிவிடிகளை கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் போட்டு பார்த்தால் ம்ஹ்ஹும் இதுவரைக்கும் ஒரு ஐம்பது படங்கள் பார்த்தும் மனதில் ஒரு யோசனையும் தோன்றவில்லை...
மருந்துக்கடைக்கு போய் பூச்சி மருந்து வாங்கி வந்து சாப்பாட்டில் கலந்து கொன்றுவிடலாம், தூங்கும்போது தலையணையால மூச்சை நிறுத்தி கொன்றுவிடலாம்,கத்தியில ஒரே குத்து குத்தி கொன்றுவிடலாம் இப்படி நிறைய யோசித்தாள் ஆனால் இது மாதிரியெல்லாம் பண்ணும்பொழுது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிந்துவிடும் என்று பயந்து அந்த முயற்சிகள் எல்லாவற்றையும் கைவிட்டாள்...
கொலை செய்றதுன்னு முடிவு பண்ணி ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும் இன்னும் ஒரு உருப்படியான யோசனை கூட கிடைக்கவில்லையென்பதே அவளுக்கு இப்பொழுது பெரிய கவலையாகிவிட்டிருந்தது இப்பொழுது அவள் அவன் கணவனைவிட பெரிய கிரிமினலாக மாறியிருந்ததாக அவளுக்கு பட்டது சே என்ன வாழ்க்கை என்று நினைத்து பார்த்து கொண்டிருக்கும்பொழுதே வாசல் கதவை யாரோ தட்டுவது கேட்க யாரென்று போய் பார்த்தாள்..
வாசலில் அருண் கீழ் மூச்சு மேல்மூச்சு வாங்க நின்றிருந்தான் அருண் சிவாவின் அலுவலகத்தில் சிவாவின் உதவியாளராக பணிபுரிபவன் அரைகிலோ மீட்டர் தூரத்திலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்திருந்தான்.அவன் சொன்ன விஷயம் அவளுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது பிறகு நம்ம செய்ய நினைத்ததை ஆண்டவனும் செய்ய நினைத்திருப்பான் போல அவனிடமும் தப்பிவிட்டான் என்று உள் மனதில் நினைத்து கொண்டு அருண் சொன்ன ஆஸ்பிட்டலின் பெயருக்கு அங்கு அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டிருக்கும் சிவாவை காண மன விருப்பமே இல்லாமல் சென்றாள்...
அந்த ஆஸ்பிட்டலுக்கு சென்றதும் மருத்துவர் சொன்ன செய்தி அவளுக்கு உள்ளூர சந்தோஷமாக இருந்தாலும் தாலி பாசம் அவளை அவன் இருக்கும் ஐசியுக்கு தானாகவே அழைத்து சென்றது.டூவீலரும் லாரியும் மோதியதில் அவனின் கால் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களையும் இழந்திருந்தான்.மருத்துவர்கள் இவருக்கு இனி கால்கள் திரும்ப வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர் இன்னும் ஒர் இரு வாரங்களில் வீட்டிற்க்கு அழைத்து சென்றுவிடலாம் என்றும் கூறிவிட்டனர்..
வீட்டிற்க்கு அவனை அழைத்துவந்து நன்றாகவே கவனித்து கொண்டாள் அவன் இப்பொழுதும் அதே சிவாதான்.பாத்ரூம் போவதிலிருந்து அவனின் ஒவ்வொரு அசைவிற்க்கும் இவளின் உதவி தேவைப்பட்டது இப்பொழுது நித்யா தனக்கு இவனை கொலை செய்வதற்க்கான யோசனை கிடைத்துவிட்டதில் மிகவும் சந்தோஷப்பட்டாள் அவனுக்கு தேவையான அத்தனை உதவிகளும் அவன் கேட்காமலே இவள் செய்யும்பொழுது சிவா உள்ளூர கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்யப்பட்டு கொண்டிருந்தான்...ஆயுதம் எதுவும் இல்லாமல் அன்பு என்னும் மருந்தினால்...
48 comments:
me the first!
நல்லா இருக்கு. ஆனா நித்யாவுக்கு தண்டனை கொடுத்த மாதிரி இருக்கு முடிவு.
மாப்பி...கதை ஆரம்பிச்ச வேகத்தைப்பாரத்து நான் கடைசில ரொம்ப பெருசா எதிர்பார்த்தேன்... இருந்தாலும் ஓகே பாஸாயிட்ட...
நல்லா இருக்கு வஸந்த்.. நல்ல முடிவு.
நல்ல கதை வசந்த்.. இது போல என் தோழி ஒருத்தி கஷ்டப் பட்டுக் கொண்டு இருந்தாள். நல்லா எழுதி இருக்கீங்க வசந்த்..
நல்லாயிக்கு நண்பரே....
இதேபோல் தொடர்ந்து எழுதுங்கள்..
:)
இப்படியும் கொலை செய்யலாமா? நல்ல கரு.
சிலநேரங்களில்.... அன்பே ஆயுதம்!
வசந்து...கதை நல்லாயிருக்கு.ஆனா காலம் முழுக்க நித்யாவுக்கும்தானே தண்டனை !
வாவ், வித்தியாசமான கொலைதான்.
அவனின் ஆத்திரம் ஊட்டும் பேச்சு
புரிந்து,பிரித்தெடுத்து ஊகிக்க முடியாத
சந்தேகக் குணம்
அடக்கு முறையெனப் பல கண்கள்
அவனுக்கு....
இவற்றால் மனமுடைந்து விரக்தியால்
மணவாழ்க்கை கசக்க...
பேதையின் மனம் பேதலித்ததால்....
எடுத்த முடிவும்,
ஆண்மகனின் அணுகு முறையும்...
“அன்பு’ வாழ்க்கைக்கு ஏற்றதல்ல...
எனக் கரு கண்டிக்கிறதல்லவா?
மனித மன மாற்றங்களை!!
நன்றி வசந்த்
கடைசி வரியில நெஞ்ச வருடிட்டீங்களே தல.....
good writing .....All the best.:)
//நல்லா இருக்கு. ஆனா நித்யாவுக்கு தண்டனை கொடுத்த மாதிரி இருக்கு முடிவு.//
Answer this comment.
த்ரில்லர் கதையோ என நினைக்க வைக்குமாறு ஆரம்பித்து நல்ல திருப்பத்துடன் முடித்திருக்கிறீர்கள்.
கதையின் முடிவு எதிர்பாராவிதமாக வித்தியாசமா இருக்கு....
இன்னா செய்தாரை ஒறுத்தல்னு சொல்வாங்க ஆனால் வசந்த கொஞ்சம் பயமாய்தானிருக்கு கதை
வசந்த்,
ஏறக்குறைய இதே போல் ஒரு கதை நான் எழுதி வைத்துள்ளேன்.
இதே கதையை நீங்கள் கொஞ்சம் வசனத்துடனும், ஒரு சில காட்சி விவரிப்புடன் செதுக்கி இருந்தால் இன்னும் அருமையாக வந்திருக்கும்.
வித்தியாசமான முடிவு வசந்த், கலக்கல்!
//ஆயுதம் எதுவும் இல்லாமல் அன்பு என்னும் மருந்தினால்...//
நல்லாயிக்கு வசந்த்....
//சின்ன அம்மிணி said...
நல்லா இருக்கு. ஆனா நித்யாவுக்கு தண்டனை கொடுத்த மாதிரி இருக்கு முடிவு.//
என்னோட ஃபீலிங்கும் அதுதான்...
நல்ல கதை வசந்த்....தொடருங்கள்...
ஏன் திடிர்னு மிரட்டலா எழுதி எல்லோரையும் பயமுறுத்துற ..;)
நல்லா இருக்கு
இன்னா செய்தாரை .... குறள் ஞாபகம் வருது.
அன்பு என்பது மிக பயங்கரமான ஆயுதம்தான்.
அருமையான கதை மாப்பி...நல்லவேளை நித்யா அவசரபடவில்லை...இந்த அறிய வாய்ப்பை தவரவிட்டு இருப்பாள்...
ராஜேஷ்குமார் பாணியை ஞாபகப்படுத்தி உள்ளீர்கள்.
இப்படியும் கொலை செய்யலாமோ
முடிச்சிட்டீங்களே தல..,
கதை ரொம்ப நல்லா இருக்கு தோழரே...வாழ்த்துக்கள்...
தம்பு,
ஒரு தொடர் பதிவு அழைப்பு இருக்கிறது.நேரம் வாய்க்கிற போது தளம் வரவும்.
நல்லா இருக்கு
கொலைக்கான தண்டனை அதை செய்வதிலேயே அனுபவிக்கிறாள் என்றூதான் தோன்றுகிறது...
மொத்தத்தில் கொல்றதுன்னு முடிவு பண்ணியாச்சி உன்னை நான்...எப்படின்னு யோசிச்சி என் அடுத்த பதிவில் போடறேன்....படிச்சிட்டு எஸ்கேப் ஆயிடு வசந்த்,,,,,,
சிவா திருந்திட்டதா நினைக்கறீங்களா? அதான் இல்லை...இன்னும் சந்தேகம் அதிகமானா என்ன பண்ணலாம்...போட்டுத் தள்ளிடலாம் இல்லை!
நல்லாயிருக்குங்க
கதை அருமை வஸந்த.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான். மனசுல நெனச்சதை ஆண்களுக்காக மாத்திக்கிடுவாங்க.
இன்னா செய்தாரை ஒருத்தர் ...
நல்லாயிருக்கு வசந்த்
கதை ரொம்ப நல்லா இருக்கு.. :-)
கதை நல்லாயிருக்கு நண்பரே! நித்யா மாதிரி பல பெண்கள் நிஜவாழ்விலும் இருக்கிறாங்க!
வசந்த்,
பேராயுதம் கொண்டு கொலை செய்யத் தூண்டினாயோ?
நல்லாயிருக்கு.
i liked it!
innum niraiya thiruppangal matrum vasanangal irundhall oru mega serialae edukalam really superb
நல்ல கதை.
கதை அருமை ! வாழ்த்துக்கள்
திவ்யா பிக் தாங்ஸ்.....!
அகிலா மேடம் அந்த புள்ளைக்கு தண்டனையா இருந்தாலும் அவ எடுத்த முடிவுல ஜெயிச்சுட்டாளே...நன்றிங்க
பிரதாப் மாப்பி நன்றி
அநான்யா நன்றிங்க
திவ்யா திரும்பவும் நன்றி இப்போவும் கஷ்டப்படுறாங்களா?
அகல் விளக்குமிக்க சந்தோஷம் நண்பா...
கருணாகரசு நன்றிங்க சகோதரா..
ஹேமா ஆமா இருந்தாலும் வெற்றிதான் நித்யாக்கு...
சைவ கொத்துபரோட்டா நன்றிங்க
கலா பாட்டி எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் மூஞ்சிப்புத்தகத்தில இருக்கிறது நீங்களா?
விசா சார் மிக்க நன்றி...
ராமலக்ஷ்மி மேடம் நன்றி மேடம்..
மேனகா மேடம் நன்றிங்க
தேனம்மா நன்றி
உலகநாதன் சார் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா எழுதிப்பழகிட்டு இருக்கேன் இன்னும் ஒரு ரெண்டு வருஷத்தில எப்பிடியும் நீங்க சந்தோசப்படுற மாதிரி வசனத்தோட சூப்பரா எழுதுவேன்ற நம்பிக்கையிருக்கு சார் நன்றி...
சுபா நன்றிப்பா
சங்கவி நன்றிங்க
பாலாசி வலைப்பூ சிங்கம் நன்றிப்பா
வினோத்து உனக்கே இது ஓவரா தெரியல...நன்றிடா மச்சி
தியா நன்றி
ராகவன் அண்ணா சந்தோஷம்...
சீமான் கனி மாப்ள நன்றிடா
தமிழுதயம் நன்றிங்க ரமேஷ்
நசர் நன்றி...
சுரேஷ் தல ரொம்ப சந்தோஷம்
கமலேஷ் நன்றி
பாரா அண்ணா ரொம்ப சந்தோஷம் என்னையும் மதிச்சி அழைத்தமைக்கு ஆனால் நேரமின்மைன்றதால இப்ப தொடரமுடியாத சூழ்நிலைண்ணா மன்னிப்பீர்களாக...
டி.வி. ஆர் சார் மிக்க நன்றி
புலிகேசி நன்றி வேல்
தமிழ் என்னாச்சு உங்களுக்கு ?
ஸ்ரீராம் :)))))))
அகநாழிகை சார் நன்றி சார்
அக்பர் நன்றி
ஜமாலண்ணா நன்றிங்ண்ணா...
சுரபி நன்றிங்க
கவிசிவா நன்றிங்க
சத்ரியா நன்றி
மாதங்கி நன்றி
பானு ம்ம் நன்றி
இராமசாமி நன்றி
சங்கர் நன்றி
இல்லை வசந்த்.. வேற ஒரு marriage பண்ணி இப்போ தான் சந்தோஷமா இருக்கிறாள்..
Post a Comment