எனது நண்பர் அமீரகத்தில் கட்டுமான துறையில் பொறியாளராக பணிபுரிகிறார் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.இரண்டரை வயது ஆண்குழந்தை இருக்கிறது.நண்பர் அமீரகம் வந்து ஒரு வருடம் 7 மாதங்கள் ஆகிறது , நல்ல படியாகவே ஊருக்கு மாத மாதம் பணத்தை மனைவிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் , இதனால் தன் குடும்பம் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது என்ற நினைப்பில் இருந்திருக்கிறார் ஆனால் அங்கு நடந்ததோ வேறு நண்பரின் மனைவி தன் அத்தை மகனுடன் கள்ளத்தனமான உறவு வைத்திருக்கிறார் மாத மாதம் நண்பர் அனுப்பிய பணத்தை கள்ளக்காதலனுடன் செலவளித்து மிகவும் உல்லாசமாக இருந்திருக்கிறார் நண்பரின் பெற்றோர் உயிருடன் இல்லையாதலால் கண்டிக்க ஆள் இல்லையென்பதால் ஊரிலிருக்கும் நண்பரின் வீட்டிலேநண்பரின் மனைவியும் அவரின் அத்தை மகனும் கணவர் மனைவி போலவே வாழ்ந்திருக்கின்றனர்.
தற் சமயம் நண்பரின் தங்கை அந்த ஊரிலே வாழ்ந்து வருகிறார் அவரின் மூலம் தன் மனைவியின் நடத்தை பற்றி தெரிய வருகிறது நண்பர் நம்பவில்லை நண்பர் தொலை பேசும்பொழுதெல்லாம் எப்போ வருவீர்கள் என்றும் நீங்கள் அருகில் இல்லாமல் நன்றாக இல்லை என்றும் கூறி நீலிக்கண்ணீர் வடித்திருக்கிறார் நண்பரும் தன் மனைவியின் மீது நம்பிக்கை வைத்து தங்கை ஏதோ பொறாமையில் பொய் சொல்கிறாள் என்று நினைத்தவர், 18 மாதம் முடிந்ததும் வரும் விடுமுறைக்கு சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்றவருக்கு பலத்த அதிர்ச்சி தன் மனைவியை பற்றி தங்கை கூறிய அனைத்தும் பொய் என்று நினைத்து சென்றவரின் எண்ணம் சுக்கு நூறாக உடைந்தது இவரை விமான நிலையத்தில் வரவேற்க்க கூட வரவில்லை சரி வேறேதாவது உடல் நிலை சரியில்லாமல் போயிருக்கலாம் என்று அலை பேசிக்கு அழைத்திருக்கிறார் அலை பேசி அணைக்கப்பட்டிருக்கின்றது சரி வீட்டிற்க்கு போய் என்னவென்று பார்த்து கொள்ளலாம் என்று வீட்டிற்க்கு சென்றவருக்கு வீடு பூட்டப்பட்டிருந்திருக்கிறது அக்கம் பக்கத்து வீட்டாரிடம் விசாரித்த போது வீட்டு சாவியை தன் கணவர் வந்தால் கொடுத்து விடும்படி சொல்லி சென்றிருக்கிறார் அவர்களும் வேறெதும் கூறவில்லை.
வீட்டை திறந்தது குழந்தை வீறிட்டு அழும் சத்தம் கேட்டிருக்கிறது கொண்டுபோன பொட்டிகளை அப்படியே போட்டுவிட்டு உள்ளே சென்று அவர் பார்த்த காட்சி அய்யகோ அவர் சொல்லும்போது எனக்கே அழுகை வந்து விட்டது அவரின் இரண்டரை வயது குழந்தையின் இரு கைகளிலும் செயின் வைத்து வீட்டின் படுக்கை அறை கட்டிலில் கட்டி போட்டிருக்கின்றார், எப்படியிருந்திருக்கும் அந்த மனுசனுக்கு சே...பக்கத்தில் ஒரு கடிதம் வேறு இருந்திருக்கிறது தனக்கு நண்பரை பிடிக்கவில்லை என்றும் தன் அத்தை மகனுடன் வாழப்போவதாகவும் இதுவரையில் தனக்கு அனுப்பிய பணம் செலவழிந்து விட்டதாகவுமிந்த சனியனை நீங்களே பார்த்துகொள்ளுங்கள் என்று குழந்தையை திட்டி எழுதியிருக்கின்றார் ...பாவம் அந்த குழந்தை இந்த ஒன்றரை வருடங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பா அந்த ராட்சஷி ...நண்பர் உடைந்து போயிருக்கிறார் பிறகு உற்றார் உறவினர்கள் அனைவரும் எல்லாம் உண்மைதானென்றும் கவலைப்பட வேண்டாம் என்றும் ஆறுதல் அளித்திருக்கின்றனர்..நண்பர் தேறுவதாயில்லை விடுமுறை முடிவதற்க்கு முன்பாகவே குழந்தையை தன் தங்கையின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வந்திருக்கிறார் பாவம் வீடு கட்ட வாங்கிய கடன் பணம் நினைவிற்க்கு வந்து வேறு வழியே இல்லாமல் வந்த அவர் சொன்ன கதைதான் இது...இனி நண்பர் காண்ட்ராக்ட் முடியும் வரை மட்டுமே அமீரகம் இருக்க போவதாகவும் பிறகு வெளிநாடு பக்கமே எட்டிப்பார்க்க போகப்போவதில்லை என்றும் கூறினார் என்ன செய்வார் அந்த குழந்தையின் எதிர்காலத்தை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது...
பொதுவாக திருமணம் ஆகாத இளைஞர்கள் அமீரகம் போன்ற வெளிநாட்டில் எப்படியோ இளமை விரகதாபங்களை அடக்கி கொண்டு இருந்துவிடுகிறோம், திருமணமான கணவர்களுக்கு எப்படியிருந்திருக்கும் அதுவும் திருமணம் முடிந்ததும் ஒரு மாதமோ இருமாதமோ கடந்ததும் இங்கு வரும் கணவர்களின் நிலைமை கொடுமையிலும் கொடுமை முதல் இருமாத சம்பள பணத்தை தொலைபேசியே கரைத்துவிடுகிறார்கள் இளமைதீ கொழுந்து விட்டு எரிவதை கண்கூடா பார்க்கலாம் அவர்களும் அப்படியே தங்களுக்குள்ளே அடக்கி கொண்டு வேலை செய்து வருகின்றனர்..இப்படி இங்கு வந்து கஷ்டப்படணும்னு யார் அழுதா என்று யாராவது கேட்கும்பொழுது கட்டிக்கொடுக்காத தங்கச்சி, படிக்கிற தம்பி இவர்களின் நிலமை கேள்விக்குறியாகிவிடகூடாது என்றும் எதிர்கால வாழ்க்கையை நல்ல சுகமாக வாழவேண்டுமென்றே இங்கு வருகின்றோம், நம் வீட்டுக்காரர் வெளி நாடு போய் கஷ்டப்பட்டு சம்பாதிப்பது எல்லாமே நமக்காக நம் குடும்பத்திற்க்காகத்தான் என்று ஏன் அந்த ராட்சஷி ஏன் நினைத்து பார்க்கவில்லை? சே மானங்கெட்ட சென்மங்கள் இப்படியும் சில மனிதர்கள்..
இதற்கெல்லாம் காரணம் சோம்பேறித்தனமாக ஊரை சுற்றிக்கொண்டும் அவள் வீட்டுக்காரன் எப்போ வெளியூர் போவான் அவளை எப்படி கவிழ்க்கலாம் என்று திட்டம் தீட்டும் ரோமியோக்கள் இவர்களைத்தான் முதலில் பொது இடத்தில் வைத்து ஆண்குறியை வெட்டிவிடவேண்டும் சண்டாள படுபாவிகளா ? ஏண்டா இப்படியிருக்கீங்க கொஞ்சம் சிரிச்சு பேசிட்டா போதும் அந்த பெண்ணுக்கு திருமணமாகிவிட்டதா இல்லையா என்று பொருட்படுத்துவதே கிடையாது அவர்களை தனது இச்சைக்கு அடி பணிய வைத்து விடவேண்டும் என்பதே குறியாய் இருக்கிற இவர்களின் குறியை சுட்டால்தான் என்ன? பொண்டாட்டிய எவ்வளவு ஆசை ஆசையா வச்சுகிடணும்ன்றதுக்காக காலையில வேலைக்கு போய்விட்டு மாலையில் வீட்டுக்கு திரும்புறதுக்குள்ள எத்தனை சுரண்டலத்தாண்டா அவங்களும் தாங்குவாங்க? வீட்டில மனைவி தனக்காகவே காத்திட்டு இருப்பாங்கன்னு நம்பிக்கையோட இருக்குற கணவர்களின் நம்பிக்கைக்கு துரோகம் செய்ய எப்படித்தான் மனைவி"மார்"களுக்கு மனசுவருகிறது?
ஒருத்தர் உபயோகித்த சட்டை , இருசக்கரவாகனம்,பேனா ஆகியவற்றை இன்னொருவர் திருடி பயன் படுத்தலாம் ஆனால் ஒருத்தர் தொட்டு தாலி கட்டிய ஒரு பெண்ணை இன்னொருத்தர் தொட்டு....சே சொல்றதுக்கே கேவலமான செயலை செய்ய நினைக்கும் பாதகர்களை நினைக்கும் பொழுது சவுதி நாட்டு தண்டனைதான் ஞாபகத்திற்க்கு வருகிறது உண்மையிலே இப்படி செய்பவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்...
பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
என்னும் குறளில் வள்ளுவர் எவ்வளவு அழகாக பிறர் பொருளாய் இருக்கும் பெண்மையை அடைய நினைப்பது பேதமை என்றும் அறத்தின் பொருள் அறிந்தவர்களிடம் இல்லாத இச்செயல் தர்மத்தின் படி வாழாமல் காமமே குறியாய் வாழும் மாந்தர்களிடம் இருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்.எதுக்கு சொன்னார் தனக்கு பிறகு வரும் சந்ததியினர் இதை பின்பற்ற வேண்டும் என்பதற்க்குதானே...
அதற்க்காக எல்லாரையுமே கெட்டவங்கன்னு சொல்லவில்லை ஒரு சில இதுபோல இருக்கும் இருந்துகொண்டு சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்களுக்குமட்டுமே...நம்ம தமிழ்ப்பண்பாடாகிய ஒருவனுக்கு ஒருத்தின்ற பண்பாட்டை மீறாமல் நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் வாழவிரும்ப வேண்டும் இதுபோன்ற மோசமான எடுத்துக்காட்டிற்க்கு ஆளாகமலிருக்க வேண்டும்...
இதுக்கு மேல என்னால எழுத முடியல இதுமாதிரியான கள்ள உறவுகளுக்கு நரகத்தில் கருட புராணத்தில இருக்கும் அத்தனை தண்டனையும் கொடுக்கப்படுமாம் நினைவில் வைத்துகொள்க...
78 comments:
கெட்டுப்போகணும்னு இருந்தா freezerல வெச்சாலும் கெட்டுப்போகும்.
அதுக்கு இந்த படம் ரொம்ப அவசியமோ??
தோஹால ரெண்டு நாளு குளிரு ஜாஸ்தியா இருக்கல. பாவம் புள்ள கஷ்டப்படுது
நானும் பல முறை இப்படி கெட்டொழிந்து போகிறவர்களைப் பற்றி வேதனைப் பட்டிருக்கிறேன். அதிலும் அமீரகம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பத்துக்குப் பத்து அறையில் நான்கு பேர் ஐந்து பேராக சேர்ந்து கஷ்டப்பட்டு எதற்காக சம்பாதிக்கிறார்கள்? ஊரில் மனைவி பிள்ளைகள், குடும்பத்தார் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே? இதை யோசித்துப் பார்த்தால் எப்படி தப்பு செய்யத் தோன்றும்?
//jothi said...
கெட்டுப்போகணும்னு இருந்தா freezerல வெச்சாலும் கெட்டுப்போகும்.
//
நீங்க சொல்றது சரிதான் ஜோதி. ஆனால், இப்படிப் பட்ட பல இடங்களில் கணவனின் பிரிவைத் தாங்க முடியாத பெண்களின் மனதைக் கரைக்கும் கயவர்களும் அவர்களின் வார்த்தைக்கு மயங்கும் மகளிரும் இருக்கத்தான் செய்கின்றனர்.
நியாயமான அறச்சீற்றம் வசந்த்...
கொடுமையான நிக்ழ்வு.
இப்படியும் கேவலமான மனுஷ ஜென்மங்கள். அவங்களுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா இப்படி பண்ணியிருந்திருக்க மாட்டாங்க. வெட்டிப்போடணும்.
எப்படியோ போகட்டும் , ஒரு குழந்தையை இப்படிக்கட்டிப்போட்டு போன ஜென்மங்களை என்னன்னு சொல்றது.
விவாகரத்து அப்படின்னு ஒரு வசதி இருக்கே அதை பயன்படுத்த வேண்டியதுதானே.
நேர்ல நண்பரோட வேதனைய பாத்த கோவம் எழுத்தில தெரியுது உ.பி..
தவறுக்கு தண்டனை நிச்சயம் எவருக்கும் உண்டு..
அதுவும் அந்த குழந்தை.. வார்த்தைகள் இல்லப்பா..
எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் அவன் அம்மா செஞ்ச தப்புக்காக அனுபவிச்ச கேலி, கிண்டல்களை நேர்ல பாத்திருக்கேன். இப்போ எங்க, எப்டி இருக்கான்னு தெரீல.. ஆனா பேசும்போது அவன் கண்கள்ள தெரியும் வலி.. இப்பவும் மனசில இருக்கு..
குழந்தை கையில் செயின் வரையில் படித்தேன் வசந்த்.மேலே படிக்க மனசு வரலை.முதல் முறையாக உங்கள் இடுகையை முழுதும் படிக்காமல் ஓட்டு போட்டுட்டு போகிறேன்.
:-(
வருத்தப் படவேண்டிய விஷயம்
இதைப்படித்த எனக்கே மனசு சரியில்லை... நண்பர் கூட இருந்த உங்களுக்கு?
இது வழமைதான் வசந்... நூறில ஒண்ணோ இரண்டோ இப்படித்தான் ஆனால் பிறக்கும் குழந்தைகள் தான் பரிதாபம்...
கல்யாணத்துக்கு ஏற்பாடாகும் போதே பொண்ணிடம் தனியே ஒரு வார்த்தைக் கேட்டுவிடுவது நல்லது...
//jothi said...
கெட்டுப்போகணும்னு இருந்தா freezerல வெச்சாலும் கெட்டுப்போகும்.
//
ஆனாலும், உண்மை சுருக்குனு தைக்குது...
வசந்து...நானும் ஒரு பெண்ணாய் இருந்து வெட்கப்படுகிறேனே தவிர எதுவும் விமர்சனம் செய்ய முடியவில்லை.ஆனால் அடுத்தவர்களுக்கு ஒரு பாடமாய் இருப்பாள் எப்பவும்.
நிகழ்வு உண்மையே என்றாலும் எல்லோருக்கும் இது போன்று நடக்காது ஒரு சில காமப் பிசாசுகள் அப்படி நடந்து கொள்வதை பொதுவானது என்று சொல்ல முடியாது, இது போன்ற தகவல்களை வெளி இடுவதன் மூலம் வெளி நாட்டில் வேலை செய்யும் திருமணம் ஆன ஆண்கள் மன உளைச்சல் அடையக் கூடும், தவிர்ப்பது நல்லது.
இது போன்ற நிகழ்வுகள் தகவல் தான், அது உதாரணம் ஆகாது என்பதை படிக்கும் நண்பர்கள் புரிந்து கொள்வது நல்லது.
அந்தப் பெண்ணின் பெற்றோர் என்ன செய்கிறார்கள்?
அந்த குழந்தையின் வாழ்விற்கு என்ன வழி சொல்லப் போகிறார்கள்.
எதிர்காலத்தில் ஓடிப் போன ஜோடிக்கு எதிர்காலத்தில் குழந்தை பிறந்தால் அதை எப்படி வளர்க்கப் போகிறார்கள்?
பெற்றுகொள்ளவே மாட்டார்களா?
================================
கண்டிப்பாக தள்ளிக் கொண்டு போனவன் பாதிவழியில் விலகி விடுவான்.
//கோவி.கண்ணன் said...
நிகழ்வு உண்மையே என்றாலும் எல்லோருக்கும் இது போன்று நடக்காது ஒரு சில காமப் பிசாசுகள் அப்படி நடந்து கொள்வதை பொதுவானது என்று சொல்ல முடியாது, இது போன்ற தகவல்களை வெளி இடுவதன் மூலம் வெளி நாட்டில் வேலை செய்யும் திருமணம் ஆன ஆண்கள் மன உளைச்சல் அடையக் கூடும், தவிர்ப்பது நல்லது.
இது போன்ற நிகழ்வுகள் தகவல் தான், அது உதாரணம் ஆகாது என்பதை படிக்கும் நண்பர்கள் புரிந்து கொள்வது நல்லது.//
நண்பரின் கூற்று மிகச்சரி.மன உளைச்சலோடு மட்டுமல்ல.அனைத்துமகளீரும் இப்படித்தான் என்று திருமணத்தைத்தவிர்ப்பவரும்,மணமானோர் தன் மனைவியை சந்தேகக்கண் கொண்டு பார்த்து புயலைக்கிளப்புவோரும் உண்டு.கனத்த பதிவு.
வருத்தம் தரும் நிகழ்வு.
நீங்களும் நல்லா குறளை பயன்படுத்துகின்றீர்கள் மகிழ்ச்சி .
வாழ்த்துக்கள் .
மனதுக்கு வருத்தமா இருக்கு.
வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும்னு ஆசைப்பட்டு போயி அங்கே கணவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்பம் நடத்துவதை பார்த்து அதிர்ச்சி அடையும் பெண்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன்,
இந்த மாதிரி நிகழ்வுகளும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரவர் வளர்க்கப்பட்ட விதம். குழந்தையை விட்டுவிட்டு போகும் அளவுக்கு ஒரு தாய் கொடூரமானவள் அல்ல. தாயாக மாற முடியாதவர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளவே கூடாது.
நல்லா சொல்லியிருக்கிங்க... வசந்த்.
சூழலை தனக்கு சாதகமாக முயற்சிக்கும் அதுபோன்றவர்களை ”நறுக்கி” விடுவது தவறல்ல என்றே படுகிறது.
மிக நேர்மையான பதிவு...மனப்பூர்வமான வாழ்த்துக்கள்..உன் நண்பன்கிட்ட நான் சொன்னேன்னு சொல்லு..."விடுங்க சார்...இதுவும் கடந்து போகும்..."..முதல் தடவையா என் இதயத்துலேர்ந்து உனக்கு வோட்டு போட்டுட்டு போறேன் மச்சி...மிக அற்புதமான பதிவு...அவரோட வலிய கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் பண்ணிக்காம வார்த்தைல கொண்டு வந்துருக்க...வசந்த் வளர்றான்...வெளியூர்க்காரன் பார்வைல...!!
எதையும் ஆதரிக்கவோ அவதூறு சொல்லவோ விரும்பவில்லை..
சூழ்நிலை ஒன்று உருவாகதவரை எல்லாரும் நல்லவர்களே......
உண்மையான புரிதல் ரெண்டு பேருக்குள்ளேயும் இருந்தால் இப்படி நடக்காது வசந்த்
அந்த குழந்தை???????? அந்த குழந்தை பட்ட வேதனைகளை நினைத்து பார்க்கவே கஷ்டமா இருக்கு. இந்த இளந்தளிர் என்ன பாவம் பண்ணிச்சி?
//கோவி.கண்ணன் said...
நிகழ்வு உண்மையே என்றாலும் எல்லோருக்கும் இது போன்று நடக்காது ஒரு சில காமப் பிசாசுகள் அப்படி நடந்து கொள்வதை பொதுவானது என்று சொல்ல முடியாது, இது போன்ற தகவல்களை வெளி இடுவதன் மூலம் வெளி நாட்டில் வேலை செய்யும் திருமணம் ஆன ஆண்கள் மன உளைச்சல் அடையக் கூடும், தவிர்ப்பது நல்லது.
இது போன்ற நிகழ்வுகள் தகவல் தான், அது உதாரணம் ஆகாது என்பதை படிக்கும் நண்பர்கள் புரிந்து கொள்வது நல்லது//
நண்பரை நானும் வழிமொழிகிறேன் வசந்த்.. மனைவியை வீட்டில் விட்டு விட்டு காமத்துக்காய் அலையும் ஆண்களும் தவறு செய்பவர்கள்தாம்.. பரஸ்பர புரிதல், காமம் ஒன்றே வாழ்க்கை அல்ல, எதற்காய் இந்த பிரிவு என்பதை நன்றாக உணர்ந்த மனிதர்கள் ஒரு போதும் தவறு செய்வதில்லை.
அந்த குழந்தை காயங்கள் ஏதும் படாது வாழ்வில் சிறக்கவும், நண்பர் இதனை புறம் தள்ளி அந்த குழந்தையை நேசித்து அன்பு பாராட்டவும் பிரார்த்தனை செய்கிறேன்.
வஸந்த்,
இன்னிக்கு எங்கம்மா பிறந்தநாள். மனமுருகி அம்மாவிடம் பேசி வாழ்த்திவிட்டு வந்தால் இந்த கோர நிகழ்வு. என்ன சொல்வது அந்த பெண்ணை? அவளும் ஒரு தாயா? எப்படி இவ்வளவு துணிவு? உங்கள் பதிவிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் சுட்டு பொசுக்குகிறது.
இருந்தாலும் நண்பரின் சொந்த விஷயத்தை இப்படி பதிவில் ஏற்றுவது, அவரை காயப்படுத்துவதாகாதா? யார் எந்த சூழ்நிலையில் தப்பு செய்தாலும் அதற்கு தக்க தண்டனை உண்டு என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் நண்பர், குழந்தைக்கான பிரார்த்தனையுடன்,
அநன்யா மஹாதேவன்
எந்த தவறும் செய்யாத அந்த குழந்தைக்காக கடவுளை பிரார்த்திக்கிறேன்.
கோபம் உங்க எழுத்தில தெரியுது வசந்த், அந்தக் குழந்தை என்ன பாவம் பண்ணிச்சு?
ரொம்ப கொடுமையான விஷயம் தான்..
சில இடங்களில் இப்படி நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. 10 மாசம் பெற்ற குழந்தையினை எப்படி தான் கட்டி போட்டு போகமனம் வந்துசோ..
அறிவில்லாமல், பண்பு கெட்டு, குடும்பத்தையும் சிதிலமடைய செய்யும் இவர்களை என்னவென்று சொல்வது. என்ன பண்ணுவது. அந்த பெண் ஒரு நாள் உணரும் தன் தவறைகளை. அப்போது அவள் யாருமற்றவளாக வாழுவாள்.
ஒருத்தர் உபயோகித்த சட்டை , இருசக்கரவாகனம்,பேனா ஆகியவற்றை இன்னொருவர் திருடி பயன் படுத்தலாம் ஆனால் ஒருத்தர் தொட்டு தாலி கட்டிய ஒரு பெண்ணை இன்னொருத்தர் தொட்டு....சே சொல்றதுக்கே கேவலமான செயலை செய்ய நினைக்கும் பாதகர்களை நினைக்கும் பொழுது சவுதி நாட்டு தண்டனைதான் ஞாபகத்திற்க்கு வருகிறது உண்மையிலே இப்படி செய்பவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கூட நடு ரோட்டில் நிற்க வைத்து சுட வேண்டும்.../// good article.
ரொம்ப கொடுமையான விஷயம் தான்..
இப்போது நமது நாட்டின் கலாச்சாரமும்,பண்பாடும் எங்கோயோ போய்கொண்டிறிக்கிறது....
இருந்தாலும் நண்பரின் சொந்த விஷயத்தை இப்படி பதிவில் ஏற்றுவது, அவரை காயப்படுத்துவதாகாதா? யார் எந்த சூழ்நிலையில் தப்பு செய்தாலும் அதற்கு தக்க தண்டனை உண்டு என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் நண்பர், குழந்தைக்கான பிரார்த்தனையுடன்,
அநன்யா மஹாதேவன்
////////////////////
Exactly! வசந்த்..! உங்க கோபம் நியாயமானதா இருந்தாலும் மற்றவர்களின் அந்தரங்கத்தை பொதுவில் கூறுவது அவ்வளவு நல்லா இல்லை. இந்த விஷயமே தெரியாத அவருடைய மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை படித்தால் எவ்வளவு அதிர்ச்சி அடைவார்கள்?. இங்கு வந்து பின்னூட்டமிட்டு ஆறுதல் சொல்லிவிட்டுப் போவதால் உங்கள் நண்பருக்கு என்ன பயன்? நம்முடைய அந்தரங்கத்தைப் பகிர்வது வேறு நம் குடும்பத்தினரின், நண்பர்களின் அந்தரங்கத்தைப் பதிவிடுவது வேறு..இந்த விஷயத்தை அப்பட்டமாக பதிவிடுவதை விட ஒரு சிறுகதையாக சொல்லியிருந்தீர்களானால் சிறப்பாக இருந்திருக்கும்.
எல்லாம் அவங்கவங்க மனசாட்சிய பொறுத்து..
அந்தக் குழந்தை, இப்படியும் ஒரு கேடு கெட்ட தாய் இருப்பாளா?. மனம் கனத்து விட்டது வசந்த்.
//jothi said... கெட்டுப்போகணும்னு இருந்தா freezerல வெச்சாலும் கெட்டுப்போகும்.// :)
supper
supper
supper
supper
////கோவி.கண்ணன் said...
நிகழ்வு உண்மையே என்றாலும் எல்லோருக்கும் இது போன்று நடக்காது ஒரு சில காமப் பிசாசுகள் அப்படி நடந்து கொள்வதை பொதுவானது என்று சொல்ல முடியாது, இது போன்ற தகவல்களை வெளி இடுவதன் மூலம் வெளி நாட்டில் வேலை செய்யும் திருமணம் ஆன ஆண்கள் மன உளைச்சல் அடையக் கூடும், தவிர்ப்பது நல்லது.
இது போன்ற நிகழ்வுகள் தகவல் தான், அது உதாரணம் ஆகாது என்பதை படிக்கும் நண்பர்கள் புரிந்து கொள்வது நல்லது.////
இதுதான் எனது பார்வையும்.
நான் பார்த்தவரையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
உண்மையை சொல்லணும்னா கணவர் உள்நாட்டுல இருந்தாலும் வெளிநாட்டுல இருந்தாலும் கெட்டு போறவங்க கெட்டுபோயிட்டு தான் இருக்காங்க அது அவரவர் மனசு சம்பந்தப்பட்டது.
கொடுமையான விஷ்யம்.., இருந்தாலும் இதை படிக்கும் வெளிநாடுகளில் வாழும் நண்பர்கள் ஒரு விதமான மன உளைச்சளுக்கு ஆளாக நேரலாம் என்பது என்னுடைய கருத்து
சோகமான விசயம் .பொருள் தேட திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்வது சரியானது அல்ல.தனிமையும் வாய்பும் பல மிருக உண்ர்வுகள் தலைதூக்க வழிவகுக்கும்..!
வாய்பும் சூழலும் வசதியாய் கிடைக்கும் வரை யோக்கியனாய் வாழவே மனித மனம் விரும்புகிறது.எது சரி எது தவறு? இதே போல் நமக்கு நடந்தால்...?என யோசித்தால் தவறுகள் குறையும்..?இது என் தனிப்பட்ட கருத்து..!
Ellam Vidhi Padi thaan Nadakirathu Yarayum Kurai Solla Mudiyathu.
வசந்த்,
வருத்தும் செய்தி தான். எனக்குத் தெரிந்த நண்பருக்கும் இப்படியானதொரு அசம்பாவிதம் நிகழ்ந்தது.
அவன் நிலைமை தற்பொழுது .... மிகவும் பரிதாபமானதாக இருக்கிறது.
இந்தப் பதிவைப் படித்ததும்...அவன் ஞாபகமும் மனதை வதைத்தது.
பாவம் புரிந்தவர்களுக்கு தானாகவே “ நறுக்” நிச்சயம்... அப்படியொரு சம்பவத்தையும் நேரில் கண்டிருக்கிறேன்.
மனசு கனக்கிறது, இப்படியும் ஒரு பெண்ணா?
ரெட்டைவால் ' ஸ் said...
இருந்தாலும் நண்பரின் சொந்த விஷயத்தை இப்படி பதிவில் ஏற்றுவது, அவரை காயப்படுத்துவதாகாதா? யார் எந்த சூழ்நிலையில் தப்பு செய்தாலும் அதற்கு தக்க தண்டனை உண்டு என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். உங்கள் நண்பர், குழந்தைக்கான பிரார்த்தனையுடன்,
அநன்யா மஹாதேவன்
////////////////////
Exactly! வசந்த்..! உங்க கோபம் நியாயமானதா இருந்தாலும் மற்றவர்களின் அந்தரங்கத்தை பொதுவில் கூறுவது அவ்வளவு நல்லா இல்லை. இந்த விஷயமே தெரியாத அவருடைய மற்ற நண்பர்கள் உங்கள் பதிவை படித்தால் எவ்வளவு அதிர்ச்சி அடைவார்கள்?. இங்கு வந்து பின்னூட்டமிட்டு ஆறுதல் சொல்லிவிட்டுப் போவதால் உங்கள் நண்பருக்கு என்ன பயன்? நம்முடைய அந்தரங்கத்தைப் பகிர்வது வேறு நம் குடும்பத்தினரின், நண்பர்களின் அந்தரங்கத்தைப் பதிவிடுவது வேறு..இந்த விஷயத்தை அப்பட்டமாக பதிவிடுவதை விட ஒரு சிறுகதையாக சொல்லியிருந்தீர்களானால் சிறப்பாக இருந்திருக்கும்.
இதை படித்தவுடன் எனக்கு தோன்றிய கருத்தும் இது தான் ஒரு ஊருக்கு தெரிந்த விஷயம் இன்று நாடு பரவியது துரதுஷ்டம்...இதை பதிவேற்றியது இந்த நிகழ்வை விட வருந்ததக்கது வலிக்கிறது.....
////////////////////
ஒருத்தர் உபயோகித்த சட்டை , இருசக்கரவாகனம்,பேனா ஆகியவற்றை இன்னொருவர் திருடி பயன் படுத்தலாம்
//////////////////////
இனிமே கோபத்தோட எழுதாதீங்க... ஒரு நல்லெண்ணத்துல சொல்றேன்..உங்களையும் தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு!
எத்தனையோ பெண்ணுங்க எல்லா உணர்வுகளையும் அடக்கி இவனுக்காக காத்துக்கிட்டு இருக்கும்போது இவனும் ஒரு வகையிலே விலைமாதரிடமோ, கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டோ கெட்டுப்போறதும் உண்டு. அப்போ இவனும்தான் தன் மனைவிக்கு துரோகம் இழைக்கிறான்.
அப்போ தான் ஆண் என்னவேனும்னாலும் செய்யலாம் என்று மார்தட்டுவதை பார்த்திருக்கிறேன். அதற்காக நீங்க குறிப்பிட்டவள் செய்தது அநியாயம், அக்கிரமம்.... இழுத்துக்கொண்டு செல்பவன் நிச்ச்யம் பாதிலேயெ விட்டுவிடுவான்.. அப்போதுதான் தன் தவற்றை உணர்வார்கள்
//அவர் சொல்லும்போது எனக்கே அழுகை வந்து விட்டது அவரின் இரண்டரை வயது குழந்தையின் இரு கைகளிலும் செயின் வைத்து வீட்டின் படுக்கை அறை கட்டிலில் கட்டி போட்டிருக்கின்றார்,//
இதுக்கு அந்த தேவடியா முண்டைய கண்டுபிடிச்சு வெட்டி போடனும். என்ன ஒரு கொடூரம் இது.
//பாவம் அந்த குழந்தை இந்த ஒன்றரை வருடங்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தியிருப்பா அந்த ராட்சஷி ...//
அய்யோ அய்யோ, மனசு ரொம்ப நொந்து போச்சுய்யா.
சண்டாளி, சண்டாளி, அப்படி என்ன அரிப்பெடுத்துடிச்சி அவளுக்கு, இவளெல்லாம் ஒரு மனுஷியா. சே.
எனது நண்பர் அமீரகத்தில் கட்டுமான துறையில் பொறியாளராக பணிபுரிகிறார் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.இரண்டரை வயது ஆண்குழந்தை இருக்கிறது.நண்பர் அமீரகம் வந்து ஒரு வருடம் 7 மாதங்கள் ஆகிறது , ..இனி நண்பர் காண்ட்ராக்ட் முடியும் வரை மட்டுமே அமீரகம் இருக்க போவதாகவும் பிறகு வெளிநாடு பக்கமே எட்டிப்பார்க்க போகப்போவதில்லை என்றும் கூறினார்///
@மச்சி அவர் பேர போட விட்டுடியேடா....பேரையும் ஊரையும் போட்டுட்டு அவர் போன் நம்பரையும் குடுத்துரு... மத்த எல்லா ஹின்சும் குடுத்துட்ட அவர் யாருன்னு..உன் கூட இருக்கற எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்..அவர் யாருன்னு.....உன் கோவம் நேர்மையானது...ஆனா நியாயமானது இல்ல...என்ன காலைலேர்ந்து யோசிக்க வெச்சுட்ட மச்சி...உன்ன நம்பி தன்னோட அந்தரங்கத்த பகிர்ந்துகிட்ட ஒருத்தரோட நம்பிக்கைய நடு ரோட்டுக்கு கொண்டு வந்துட்ட...தப்பா நேனைசுக்காத மச்சி..தப்ப இருந்தா மன்னிச்சிடு...படிச்சிட்டு இத டெலிட் பண்ணிடு... !!
இந்த நிகழ்வில் யார் குற்றவாளி? என்னை பொறுத்தவரையில் அந்த பெண்ணை தவிர எல்லோரும் குற்றவாளிங்கதான். இதை என்னால் இங்கே விளக்க முடியாததற்கு வருந்துகிறேன். வசந்த் அவர்களே !, இதற்கான என்னுடைய விளக்கம் வேண்டுமென்றால் , வாங்க தொலைபேசியில் பேசலாம் . ( linear and non-linear சமாச்சாரம் )
நண்பா ஒன்று சொல்ல ஆசை படுகிறேன். உன் நண்பர் விசயத்திலாவது அந்த பெண் ஏக்கத்தில் செய்தல் என்று ஒத்துக்கொள்ளலாம் . ஆனால் தாலி கட்டிய கணவன் அருகில் இருக்கும் பொழுதே மற்ற ஆண்களுடன் உறவு கொள்கிற பெண்களை என்ன செய்வது? இன்றைக்கு இந்தியாவில் இது சர்வ சகஜம் ஆகிவிட்டது
கஷ்டமா போயிருச்சு வசந்த்,
அந்தக்குழந்தையின் நிலைதான் பரிதாபம்.
கொடுமை
சூழ்நிலைகள் காரணாமாகி விடுகின்றன..
உண்மைதான்..சில பேர் அப்பிடியிருக்காங்க.. உண்மையில் அந்த ஆம்பிளையைத்தான் பிழை சொல்லவேணும்.. நீங்க சொன்ன தண்டனை சரிதான்.. தவிச்ச முயல சந்தர்ப்பம் பாத்து அடிக்கிறான்..
ஆனா எல்லாப்பொம்பிளைகளும் அப்படியில்லை.. தங்கடை பிள்ளையள ஓராட்டிட்டே எல்லா உணர்வுகளை அடக்கிட்டு இருக்கிற எத்தனையோ பேரபாத்திருக்கன்..
நல்ல பதிவு வசந்த்..
பொருள் தேட திருமணத்திற்கு பின் வெளிநாடு செல்வது சரியானது அல்ல.தனிமையும் வாய்பும் பல மிருக உண்ர்வுகள் தலைதூக்க வழிவகுக்கும்..
@வெள்ளிநிலா said...
இந்த நிகழ்வில் யார் குற்றவாளி? என்னை பொறுத்தவரையில் அந்த பெண்ணை தவிர எல்லோரும் குற்றவாளிங்கதான். இதை என்னால் இங்கே விளக்க முடியாததற்கு வருந்துகிறேன். வசந்த் அவர்களே !
மிகச்சரியான வார்த்தைகள் ...
என்னுடையதும் இதே கருத்துதான் ...
படிக்கும் போதே கஷ்டமாயிடுச்சு..அந்த குழந்தையை நினைத்தால்தான் வேதனையா இருக்கு.கடவுள் துணையிருப்பார்...
மனைவியின் நடத்தை பற்றி அவரோட தங்கை சொன்னதையே நம்பாமல் மனைவி மேல் நம்பிக்கை வைத்திருந்த கணவனுக்கே துரோகம் செய்ய எப்படித்தான் மனசு வந்ததுஅந்தப் பொண்ணுக்கு.. அது மட்டும் இல்லை அந்தக் குழந்தை பாவம் ... கணவனுக்கு துரோகம் செய்தபெண்களின் கதை நிறைய பார்க்கிறோம் கேட்கிறோம் ஆனால் ஒர் கள்ள காதலுக்காக பெற்ற குழந்தையையே இப்படியா? பெண் இனத்துக்கே அவமானம்...
அந்தக்குழந்தையை இப்படி பண்ண எப்படித்தோணுச்சுன்னுதான் இன்னும் யோசிச்சுட்டு இருக்கேன்... யோசிச்சுப்பார்க்கவே கஷ்டமா இருக்கு...
நீங்க சொன்னாமாதிரி அந்த மைனர்குஞ்சை சுடனும் தல... தண்டனைகள் கூடுனாத்தான் குற்றங்கள் குறையும்....
:-(((((((
:( eppadi thaan ippadiyellaam manasu vaudho....
நெஞ்சு பொறுக்கவில்லை.. இந்த நிலைகெட்ட மாந்தரை ....வலியான பதிவு நெஞ்சு பொறுக்கவில்லை
:-(((((
தண்டனைகள் கூடுனாத்தான் குற்றங்கள் குறையும்....
//
பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்
என்னும் குறளில் வள்ளுவர் எவ்வளவு அழகாக பிறர் பொருளாய் இருக்கும் பெண்மையை அடைய நினைப்பது பேதமை //
நண்பரே தப்பாக நினைக்க வேண்டாம் பெண் என்ன பொருளா???????? வள்ளுவர் சொன்னது போல் பிறர் பொருள் ..........
இப்படி பொருளாய் நினைபதால் தான் கள்ள உறவு வருகிறது . பொருள் அல்ல உயிர் அவள், அப்படி நினைத்தால் கள்ள உறவுகள்
வாராது நண்பா ............
பெண்கள் மதிப்பு என்ன சட்டை போல எழுதி இருக்கிறீர்கள் ..........இதை குறைத்துக்கொண்டாலே பாதி குறையும் நண்பரே ...
//என்னும் குறளில் வள்ளுவர் எவ்வளவு அழகாக பிறர் பொருளாய் இருக்கும் பெண்மையை அடைய நினைப்பது பேதமை என்றும் அறத்தின் பொருள் அறிந்தவர்களிடம் இல்லாத இச்செயல் தர்மத்தின் படி வாழாமல் காமமே குறியாய் வாழும் மாந்தர்களிடம் //
சரி அந்த கணவன் பெனளிடம் அன்பு ஏன் செலுத்தவில்லை .............
செலுத்தி இருக்கலாமே.......அந்த ஆண் மட்டும் காரணமா என்ன???????????
ஏன் பொறுப்பாய் இவர் இருக்கலாமே ............
ஏன் கவர்ச்சி படம் போட்டு இருக்கீர்கள் இதுவே நீங்க நுகர் பொருளாக பார்கிறீர்கள் என்று தானே அர்த்தம் ...ஏன் கவர்ச்சி படம் போட்டால் தான் பார்க்க வருகிறோம் என்றால் நம் மீதே நமக்கு குறை உள்ளது ..........ஒவோவோருவநிடமும் வக்கிரம் இருக்க தான் செய்கிறது ....நான் உட்பட ......................................நாம் ஏன் பெண்களை பொருளாய் பார்க்க வேண்டும் ....இத்தனை பேர் பாராட்டினால் நம் சமூகம் குறையோடு இருக்கிறது ...........ஆழமாய் பாருங்கள் எந்த பெண்ணாவது ஒரு ஆணை பொருளாய் பார்கிராளா என்ன தோழரே ........
ஏன் பணம் பணம் என்று அந்த கணவன் ஓட வேண்டும்
சரியான பதிவு சரியான நேரத்தில். பொதுவாக இது மாதிரியான நிறைய கேவலமான தொடர்புகளை சமீபத்தில் நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அதுவும் சமீப காலத்தில் தஞ்சை, திருவாருர், நாகை போன்ற மாவட்டங்களில் தினம் தினம் நிறைய நடக்கின்றன. நானே பல சம்பவங்களை பார்த்து மிகவும் வருத்தப்பட்டுள்ளேன்.
இதற்கு நாம் பெண்களை மட்டும் குறை கூறுவது சரி அல்ல. உங்கள் நண்பர் நல்ல வேலையில் இருந்திருக்கிறார் பிறகு ஏன் அவர் மனைவி குழந்தையை அழைத்துக் கொள்ளவில்லை.
மேலும் தற்காலத்தில் பெண்கள் தங்கள் கணவன் ஊரில் நல்ல வருமானம் ஈட்டும் போதே, அவர்கள் தங்கள் கணவன் வெளிநாட்டில் இருப்பதை தான் விரும்புகின்றனர். இது எங்கள் சமயத்தில் மிகவும் தீவிரமாக பின்பற்றப்படுகிறது.
இது போல நிறைய கொடிய சம்பவங்கள் இனிவரும் காலங்களில் நிறைய நடைப்பெரும் ஏனென்றால் உலகம் அதன் இறுதி நாளை நோக்கி மிகவும் வேகமாக பயணிக்கிறது. இதெல்லாம் முன்னரே இறைவனால் எழுதப்பட்டது.
You should not have said 'your friend'. At least you could have said somebody known to you.
pls watch your words.
அநான்யா, தமிழரசி,ரெட்டைவால்ஸ்,வெளியூர்க்காரன் அல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன் இந்த போஸ்ட் மாதிரி எனக்கு எழுதிப்பழக்கமில்லை இது முழுவதும் அந்த நண்பர் ஆலோசனையின் பேரில் நிறைய பேரின் வாழ்வில் நடக்காமலிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை போஸ்ட்டில் போட சொல்லியதே அவர்தான்...முழுவதும் டைப்பண்ணி அவருக்கு மெயில் பண்ணி அவர் ஒகே சொன்ன பிறகுதான் பதிவில் ஏற்றப்பட்டது அதனால நீங்க கோபவேண்டாமே... இதைப்படிச்ச ஒருத்தருக்காவது விஷயம் புரிஞ்சா சரி அம்புட்டுத்தேன்...
வசந்த்
பொதுவாக தனி மனித உறவுகளில் நான் கருத்து சொல்வதில்ல்லை, நாடோடிகள் என்ற புகழ்பெற்ற படம் கூட எனக்குப் பிடிக்கவில்லை.
இந்த விசயத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை துரோகத்தை உங்கள் நண்பர் மறந்து மற்றொரு திருமணம் செய்து நன்றாக வாழவேண்டும்.
இந்த மாதிரி தவறுகளின் மொத்த சதவீதமே உலகலவில் 1% குறைவாகவே இருக்கும். ஆனால் பாதிக்கப்பட்டவருக்கு இது ரணம்,ஆனாலும் தூக்கி எறிந்துவிட்டு வேறு விருப்பபட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள்.
குழந்தையை கட்டிப்போட்ட அவர்களை அந்த காரணத்திற்காக சட்டப்படி தண்டிக்கலாம்(விரும்பினா)
\\\\அதற்க்காக எல்லாரையுமே கெட்டவங்கன்னு
சொல்லவில்லை ஒரு சில இதுபோல
இருக்கும் இருந்துகொண்டு சமுதாயத்தில்
ஊடுருவியிருக்கும் நச்சுக்களுக்குமட்டுமே..
.நம்ம தமிழ்ப்பண்பாடாகிய ஒருவனுக்கு
ஒருத்தின்ற பண்பாட்டை மீறாமல்
நமக்கு பின் வரும் சந்ததியினருக்கு
சிறந்த எடுத்துக்காட்டாய் வாழவிரும்ப
வேண்டும் இதுபோன்ற மோசமான
எடுத்துக்காட்டிற்க்கு ஆளாகமலிருக்க
வேண்டும்...\\\\\\\
இடுகையும் இட்டு..இப்படியும் சு{கு}ட்டிவிட்டீர்
நன்றி.
உலகே மாயம்,வாழ்வே மாயம் உடம்புல இந்த
உயிர் இருக்குவரைதான் இந்த ஆட்டமெல்லாம்..
சில...உடல் சுவைக்கும் கழுகுகள் {இருசாராரிலும்}
உண்டு .யார் என்ன சொன்னாலும்..அவர்கள்
அதை ஒழிப்பதுமில்லை!அது ஒழிவதுமில்லை.
மனித இனமே இல்லாமல்..உலகம் அழிந்தால் தவிர..!!!?
நீங்கள் அவருக்கு ஒரு நல்ல நண்பனாய் இருந்தால்....
முயன்று ஒரு புரிந்துணர்வுள்ள பெண்ணைப் {மற்றும் பலருடன்}
பார்த்து திருமணம் நடத்தி வையுங்கள் {அதையும் உங்கள்
இடுகையில்}இட்டால் முதல் மகிழ்ச்சியடைவது நான்தான்.
உலகமே இந்த உடல் பசிக்காய் காமக் களியாட்டம்
ஆடுகிறது...சேரி தொடங்கி......செல்வச் செழிப்புவரை...
சாமி தொடங்கி....பூசாரிவரை..
“கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம்
கடைத் தெருவில் விற்குதடா ஜயோ பாவம்!!”
என்றாகி விட்டது உலகமய்யா..
முடிந்தது முடிந்ததுதான்!
புது முயற்ச்சி வெற்றியடைய உங்கள்
நண்பரை வாழ்த்துகிறேன்.
வருத்தம் தரக்கூடிய நிகழ்வு..
நண்பரை ஆறுதல்படுத்துங்கள்...அவருக்கு இன்னொரு நல்ல வாழ்க்கை அமைய துணையிருங்கள்...
மிகவும் வருத்தம் தரக்கூடிய நிகழ்வு. அதுவும் சின்னஞ்சிறு குழந்தையை! மனிதர்கள் கல்லாகிப் போனார்கள்.
//இது முழுவதும் அந்த நண்பர் ஆலோசனையின் பேரில் நிறைய பேரின் வாழ்வில் நடக்காமலிருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை போஸ்ட்டில் போட சொல்லியதே அவர்தான்...முழுவதும் டைப்பண்ணி அவருக்கு மெயில் பண்ணி அவர் ஒகே சொன்ன பிறகுதான் பதிவில் ஏற்றப்பட்டது//
Hats off வசந்த். இதேதான் பின்னூட்டங்களை படித்ததும் எனக்கு தோன்றியது.எழுதிதான் புரிதலை காட்டிக்கொள்ள வேண்டுமென்று நினைக்காததால், விட்டுவிட்டேன்.
//நிகழ்வு உண்மையே என்றாலும் எல்லோருக்கும் இது போன்று நடக்காது ஒரு சில காமப் பிசாசுகள் அப்படி நடந்து கொள்வதை பொதுவானது என்று சொல்ல முடியாது, இது போன்ற தகவல்களை வெளி இடுவதன் மூலம் வெளி நாட்டில் வேலை செய்யும் திருமணம் ஆன ஆண்கள் மன உளைச்சல் அடையக் கூடும், தவிர்ப்பது நல்லது.
இது போன்ற நிகழ்வுகள் தகவல் தான், அது உதாரணம் ஆகாது என்பதை படிக்கும் நண்பர்கள் புரிந்து கொள்வது நல்லது//
கோவியாரின் வரிகளை வார்த்தைக்கு வார்த்தை வழிமொழிகிறேன்.
கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் எங்கிருந்தால் வைத்துக்கொள்ளலாம். வெளிநாடு தாய்நாடு என்றெல்லாம் தேவையில்லை வசந்த் :)
Post a Comment