March 18, 2010

சவால் புதிர் - 1





ஒண்ணுக்கும் போலாம்
ரெண்டுக்கும் போலாம்
மூனுக்கு கூட போகலாம்
சுழியத்துக்கும் மதிப்பிருக்கு
சத்தமா பேச சொன்னாலும்

சத்தமா பேசுவாரு
சன்னமா பேச சொன்னாலும்
சன்னமா பேசுவாரு
சத்தம் போடாதேன்னா
கப்சிப்...


************************************************************************************
வேஷ்டிய


இழுத்து கட்டியிருந்தாலும்
எப்பவுமே மானம்
காத்துல பறக்குறது
ராத்திரி பகல்ன்ற
வித்யாசமே இல்லாம
இத்தனைக்கும்
இருக்குறது
வெளிச்சம் கூட வராத
அறைதான்...



************************************************************************************

அப்பன் தட்டுனாலும்

மகன் தட்டுனாலும்
ஒரே சத்தம்...
ஒரே நேரத்தில
பத்துபேர் அடிச்சாலும்
தாங்கிக்குவார்
ஆனா அழுவார்
பதிலுக்கு ஒரு அடிகூட
திருப்பியடிக்கத்தெரியாம
இவர் அழுற சத்தம்
ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...

************************************************************************************

மூச்சுக்கு

இதமா இருக்கும்
மூச்சுவிடாதவருக்கு
கூட துணைக்கு போற தில்
இவருக்கு இருக்கு
மூச்சுக்கு மூச்சா
மாறப்போறவங்களுக்கு
மூச்சு சத்தம் மட்டுமே
கேட்குற நேரத்திலயும்
விடற மூச்சுக்கு சாட்சி...

************************************************************************************

முன்னாடி

பின்னாடி
ஓடுவார்
திடீர்ன்னு நிப்பார்
நிக்காம
சில நேரம்
சாவடிப்பார்
சத்தம் இல்லாம
வந்து சத்தமா சாகடிக்குறதும்
உண்டு
ஊர் ஊரா போவார்
சொந்த ஊர் கிடையாது
இவர் போகாத ஊர்
கிடையாது
டீக்கடைக்கும் போவார்
சாப்பாட்டுக்கடைக்கும் போவார்
காசிருக்கும்
சாப்பிடமாட்டார்
கூட வர்றவங்கள
நட்ட நடுக்காட்டுல விட்டுட்டு
போற வட்டக்கால்
கட்டண சத்திரக்காரர்.....

*************************************************************************************
டிஸ்கி : படத்துக்கும் புதிருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா என்ன?

38 comments:

Anonymous said...

//சன்னமா பேச சொன்னாலும்
சன்னமா பேசுவாரு
சத்தம் போடாதேன்னா
கப்சிப்...
//

ரேடியோ/செல்போன்

சீமான்கனி said...

அட இது வேறயா ???இரு கண்டுபிடிச்சுட்டு வர்றேன்...

தமிழ் மதுரம் said...

தலை குழப்புறீங்களே??

செந்தில் நாதன் Senthil Nathan said...

1. Min visiri?

சீமான்கனி said...

1 வது டிவி
4 வது பஸ்..

சீமான்கனி said...

1 வது...டிவி
5 வது பஸ்...
4 வது ஊதுபத்தி...

நிஜமா நல்லவன் said...

நல்லவேளை டிஸ்கி போட்டீங்க:)

Subankan said...

சாரிப்பா, நாம புதிரில கொஞ்சம் வீக்கு

நிஜமா நல்லவன் said...

/மூச்சுக்கு
இதமா இருக்கும்
மூச்சுவிடாதவருக்கு
கூட துணைக்கு போற தில்
இவருக்கு இருக்கு
மூச்சுக்கு மூச்சா
மாறப்போறவங்களுக்கு
மூச்சு சத்தம் மட்டுமே
கேட்குற நேரத்திலயும்
விடற மூச்சுக்கு சாட்சி.../

பூ

நிஜமா நல்லவன் said...

/முன்னாடி
பின்னாடி
ஓடுவார்
திடீர்ன்னு நிப்பார்
நிக்காம
சில நேரம்
சாவடிப்பார்
சத்தம் இல்லாம
வந்து சத்தமா சாகடிக்குறதும்
உண்டு
ஊர் ஊரா போவார்
சொந்த ஊர் கிடையாது
இவர் போகாத ஊர்
கிடையாது
டீக்கடைக்கும் போவார்
சாப்பாட்டுக்கடைக்கும் போவார்
காசிருக்கும்
சாப்பிடமாட்டார்
கூட வர்றவங்கள
நட்ட நடுக்காட்டுல விட்டுட்டு
போற வட்டக்கால்
கட்டண சத்திரக்காரர்...../

பஸ்?

சைவகொத்துப்பரோட்டா said...

லைட்டா தல சுத்துது............
அப்பாலிக்கா வரேன்.

ராமலக்ஷ்மி said...

//ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...//

ஆமாமாம்:))!

//சத்தம் போடாதேன்னா
கப்சிப்...
//

:)!

எல்லாப் புதிர்களையும் ரசித்தேன்:)!

VISA said...

சென்ட் புதிர் சூப்பர்...

நட்புடன் ஜமால் said...

வழமை போலவே

யோசிக்க பொருமை இல்லை

Deepan Mahendran said...

//முன்னாடி
பின்னாடி
ஓடுவார்
திடீர்ன்னு நிப்பார்// - ரயில் வண்டி

//சன்னமா பேச சொன்னாலும்
சன்னமா பேசுவாரு// - டி.வி ரிமோட் ?

அப்பன் தட்டுனாலும் - Fire Alarm ?

ரொம்ப குஷ்டம் மச்சான் :)

S Maharajan said...

//சத்தம் போடாதேன்னா
கப்சிப்...//

செல்போன்.

//அப்பன் தட்டுனாலும்
மகன் தட்டுனாலும்
ஒரே சத்தம்...
ஒரே நேரத்தில
பத்துபேர் அடிச்சாலும்
தாங்கிக்குவார்//

மேளம்/மத்தளம்

மத்தது தெரியல

சிவாஜி சங்கர் said...

தெரியும் ஆனா சொல்ல மாட்டேன்.. பிம்பிளிக்கி பிலாக்கி.... மாமா பிஸ்கோத்து.

Ananya Mahadevan said...

லாஸ்ட் ஒன் = பஸ், ஊர்தி, பேருந்து, சிற்றுந்து?

"தாரிஸன் " said...

அப்பன் தட்டுனாலும்
மகன் தட்டுனாலும்
ஒரே சத்தம்...
ஒரே நேரத்தில
பத்துபேர் அடிச்சாலும்
தாங்கிக்குவார்
ஆனா அழுவார்
பதிலுக்கு ஒரு அடிகூட
திருப்பியடிக்கத்தெரியாம
இவர் அழுற சத்தம்
ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...

athu melammugo......... that is thavilllllll

Ananya Mahadevan said...

first one TV pa. or TV Remote

க.பாலாசி said...

//பதிலுக்கு ஒரு அடிகூட
திருப்பியடிக்கத்தெரியாம
இவர் அழுற சத்தம்
ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...//

மேளம்னு நெனைக்கிறேன்... நல்லாருக்குங்க....

Starjan (ஸ்டார்ஜன்) said...

வசந்த் என்ன சொல்றீங்க புரியலியே...

Thenammai Lakshmanan said...

படத்துக்கும் புதிருக்கும் தொடர்பு இருக்க மாதிரித்தான் இருக்கு ஆனா சரியா புரியலையே என்ன வசந்த் இது

சுசி said...

படத்த போட்டு புதிர் போட்டாலே கண்டுபிடிக்க முடியிறதில்ல.. இதில சம்பந்தம் வேற இல்லையா.. வெளங்கும் :)))

வீட்டுக்கு போய் தான் ட்ரை பண்ணணும்.. அதுக்குள்ளே விடைகள மெயிலுக்கு பார்சல் பண்ணிடுங்க உ.பி :)))

Anonymous said...

ஆமாம் புரியறமாதிரி எழுதறதே புரியாது எனக்கு..இதில் புதிருக்கு விடையா நோ சான்ஸ் வரட்டா....

அன்புடன் அருணா said...

பதில் போட்டுப் பதிவு போடுங்க!திரும்பி வர்றேன்!

பனித்துளி சங்கர் said...

அய்யோ என்னை காப்பாற்ற யாருமே இல்லையா ?????????????????


மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

எனக்குத் தெரியும் உங்களுக்கு இதற்கு பதில் தெரியவில்லை அதுதான் எப்படியாவது நான் சொல்லுவேனு இதை எழுதி இருக்கீங்க . நான் சொல்லவே மாட்டேன் போங்க !

பனித்துளி சங்கர் said...

நானே ஒன்று பெருசா இல்லை ஒண்ணு பெருசானு குழப்பத்தில் இருக்கேன் இதுல இதுவேர இந்த மாதிரி சின்ன சின்ன சந்தேகம் எல்லாம் என்கிட்ட கேக்காதீங்க ஆமா ?

மீண்டும் வருவான் பனித்துளி !

விக்னேஷ்வரி said...

முதலாவது டி.வி. ரிமோட்.

மூணாவது காற்று அல்லது இன்ஹெலர் அல்லது சிகரெட்.

கடைசி ரயில்.

அவ்வளவு தான் யூகிக்க முடிஞ்சது.

திவ்யாஹரி said...

//மூச்சுக்கு மூச்சா
மாறப்போறவங்களுக்கு
மூச்சு சத்தம் மட்டுமே
கேட்குற நேரத்திலயும்
விடற மூச்சுக்கு சாட்சி...//

நெருப்பு..

//சுழியத்துக்கும் மதிப்பிருக்கு
சத்தமா பேச சொன்னாலும்
சத்தமா பேசுவாரு
சன்னமா பேச சொன்னாலும்
சன்னமா பேசுவாரு//

செல்போன்

//ஒரே நேரத்தில
பத்துபேர் அடிச்சாலும்
தாங்கிக்குவார்
ஆனா அழுவார்
பதிலுக்கு ஒரு அடிகூட
திருப்பியடிக்கத்தெரியாம
இவர் அழுற சத்தம்
ஊரையே கூட்டி
விருந்து வைக்கும்...//

மேளம்..

Kala said...

ஒண்ணுக்கும் போலாம்
ரெண்டுக்கும் போலாம்


மூனுக்கு கூட போகலாம்\\\

{மூனுக்கு__ நிலவென்று பொருளா?


மூணுக்கு என்று வருமா? 3 என்று
வரவேண்டுமா?

ஜயா தங்கமே! சொந்தத் தயாரிப்பா?

Paleo God said...

.- .. -.-- -.-- --- ... .- .- -- .. -.- .- .- .--. .--. .- .- - .... - .... ..- -. --. .-


வசந்த் மொத்த பதிலும் மேல இருக்கு.

புரியுதா??

:)

Kala said...

1: அதுதானுங்க நம்ம குரல்

2: இலவம் பஞ்சுக்காய்

3: அப்பன் தட்டுனாலும்
மகன் தட்டுனாலும்\\\\\\
ஓஓஓஓ... நாம் சாப்பிடும்
பாத்திரம்{தட்டு}




4: மூச்சுவிடாதவருக்கு\\\\\
{மூச்சுவிடாத உயிரினங்கள்
உண்டா வசந்த்?}
ஒட்சிசன் மாஸ்க் அல்லது
மூக்கு

5: பேருந்து
அல்லது நிலா
அல்லது கொசு

kavisiva said...

ஒண்ணுமே புரியலை. சீக்கிரம் பதிலை சொல்லிடுங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

நண்பர்களே விடை சரியான்னு பாத்துக்கங்க

1.டிவி/ரிமோட்
2.சினிமாத்திரை
3.மேளம்
4.பூ
5.பஸ்

சரியான விடை சொன்ன அனைவருக்கும் வாழ்த்துக்கள் விடையளித்த கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகளும் அன்பும்.....

Atchuthan Srirangan said...

நான் சொல்ல முதல் விடையை கூறிவிட்டேரே வசந்த்


சரியான விடைகள்

1.டிவி/ரிமோட்
2.சினிமாத்திரை
3.மேளம்
4.பூ
5.பஸ்

ஹி...ஹி...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நண்பரே, நல்லாயிருக்குங்க...
இன்னும் வருமா?