பதிவுலகம் பற்றிய என்னுடைய கேள்விகளுக்கு பிரபல பதிவர் கவிஞர் எழுத்தோசை தமிழரசியின் சுவையான பதிலகள்... இது ஒரு ஈ மெயில் நேர் காணல்
தமிழரசி : இங்க பதிவில் எழுதுவதை நோட் புக்கில் எழுதிவைப்பேன்...எந்நேரமும் பாட்டு கேட்டுக் கொண்டே இருப்பேன்... நண்பர்களோடு சாட்டிங்...அப்பறம் துடைச்ச பொருளையே துடைப்பது இங்க இருக்கும் பொருளை அங்க வைப்பது அங்க இருப்பதை இங்க வைப்பது என உபயோகமான வேலைகள் தான்.....
2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
தமிழரசி :காலத்தின் தன்மைக்கேற்ப தான் இதுவும் இயங்கிக் கொண்டிருக்கிறது...முன்ன இருந்த ஆர்வம் இப்ப இல்லையோ எனத் தோன்றுகிறது..புதியவர்கள் வருகை இருந்தாலும் பழைய நண்பர்கள் பெரும்பாலோர் எழுதுவதில்லை இருப்பவர்களும் நேரமின்மை சூழ்னிலை காரணமாக கணிசமாய் எழுதுவது குறைந்த மாதிரி உணர்கிறேன்.மற்றபடி இதில் வித்தியாசமாக நான் எதுவும் உணரவில்லை....
3.தங்களின் கவிதைக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?
தமிழரசி : கேள்வி கொஞ்சம் குழப்புகிறது..இன்றுவரை என்றால் அவர் முதல்ல இருந்தே பின்னுட்டம் இடவில்லை என்று தானே அர்த்தம்..அப்படி இருக்கும் பட்சத்தில் அதற்கு வருந்துவது முட்டாள் தனம்..தொடர்ந்து பின்னுட்டம் இட்டவர் இடவில்லை என்றால் வருந்தியிருப்பேன் வருந்தியிருக்கேன் கூட....
4.ஒவ்வொரு கவிதைக்குமான கரு தங்களுக்கு எப்பொழுது தோன்றும்?
தமிழரசி : பெரும்பாலும் என் கவிதைகள் சம்பவங்களே..பொதுவா என்னோடு பேசுவதை கூட நான் கவிதையாக்குவது வழக்கம்..
5.ஒரு சென்சிட்டிவான கவிதைஎழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?
தமிழரசி : இப்படி எனக்கு நேரவில்லை.. நான் நல்லா எழுதுவதில்லை என்றும் ப்லாக் எழுதவேண்டாம் என்றும் அனானி ஒருத்தர் மட்டும் பின்னுட்டம் இட்டு இருந்தார்..இதற்காக கோபப்பட்டு எனக்காக என் நண்பர்கள் ப்ரியமுடன் வசந்த், உங்கள் ரங்கா ஆகியோர் அவரிடம் சண்டை போட்டு பேசி பின் நான் அந்த அனானியோடு சமாதானமாய் போய் பின் அவர் நண்பர் ஆனது மட்டும் நடந்திருக்கு..
6.கவிதை எழுத பிடிக்குமா? கவிதைகளை வாசிக்க பிடிக்குமா?
தமிழரசி : எழுத பிடிக்கும்.....எழுதியதை பின்னுட்டங்கள் பாராட்டிய பிறகு நிஜமாவே அவ்வளவு நல்லா இருக்கா என மீண்டும் ரசித்து படிக்க பிடிக்கும்..கவிதைகளை வாசிக்கவும் பிடிக்கும்...பெரும்பாலோனார் கவிதைகள் கண் கலங்க வைத்தும் உண்டு....
7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?
தமிழரசி : அது அவர்கள் சூழ்னிலை....
8.தங்கள் சம கால பதிவர்கள் தவிர்த்து தற்பொழுது இருக்கும் பதிவுலகில் நிறைய புதியவர்கள் எழுதுகின்றனர் அவர்களில் தாங்கள் வியந்த புதியவர்கள் யார்? (எல்லோரும் என்று கூறி தப்பித்து கொள்ளகூடாது) ஏன் பிடிக்கும் அவர்களை?
தமிழரசி : ஹலோ 12 கேள்வியை எழுப்பியதும் நீங்க தானே அப்பு... நான் படித்தால் தானே?
9.ஏண்டா பதிவுலகம் வந்தோம் என்று என்றாவது எண்ணியதுண்டா?
தமிழரசி : இல்லை....பத்து பேர் அறிந்த என்னை என் எழுத்துக்களை இன்று நூறு ஆயிரம் பேர் என அறியவைத்த இந்த பதிவுலகை நான் அப்படி எண்ணியதில்லை
10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?
தமிழரசி : உண்மை தான்...அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தெளிந்துவிடும் என்பதும் உண்மையே...
11.கவிதை,,மட்டுமே எழுதி வரும் தங்களுக்கு பதிவுலகத்திலே இதுவரை யாரும் எழுதாத ஒரு புது விஷயம் எழுத வேண்டும் என்ற ஆசையுண்டா?அப்படியாயின் அதைப்பற்றி சில வார்த்தைகள்
தமிழரசி : ஆமா இதையே நான் மனசு வருந்தக்கூடாதுன்னு படிக்கிறாங்க இதில் இப்படி வேறயா? போங்கப்பா நல்லா கேக்கறீங்க கேள்வியை?
12.பொதுவாக தங்களின் நண்பர்களின் பதிவுக்கு மட்டும் சென்று பின்னூட்டமிடுகிறீர்கள் புதிய பதிவர்களின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை என்ற தங்களின் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்க்கு நேரமில்லை என்பதை தவிர்த்து தங்களின் பதில் என்ன?
தமிழரசி : உண்மை தாங்க.. நேரமில்லை என்பது சில சமயங்கள் மட்டுமே...சோம்பேறித்தனம்,, பொறுமையின்மை என்பதே உண்மை...ஆமாம் இதுவுமா ஜனநாயக நாட்டில் குற்றச்சாட்டு...
13.தாங்கள் எழுதிய கவிதை போலவே அதாவது தங்கள் ஸ்டைலில் வேறொருவரும் அதே போன்ற கவிதை எழுதியிருப்பதாக எண்ணியதுண்டா?அப்படியிருந்தால் அந்த கவிதை பற்றி கூறவும்...
தமிழரசி : உண்டு...என் தோழியிடம் அவள் அவர் கணவருக்காக எழுதியதும் நான் என்னவனுக்காக எழுதியதும் எதிர்பாரமல் ஒரே நேரம் பதிவிட்ட போது .... இந்த சம்பவம் அவங்க என்னிடம் கோபித்ததும் உண்டு....இருப்பினும் இன்றளவும் நாங்கள் நல்ல தோழிகளாகவே இருப்பது தான்....
14.பதிவுலகம் வந்தபிறகு தங்களுக்கு நடந்த நன்மை தீமைகள் பற்றி சிறு குறிப்பு...
தமிழரசி : நன்மைகள் நிறைய நண்பர்கள் அறிவுருத்தல் அறிவுரைகள் உறவுகள் என் எழுத்துக்களில் முன்னேற்றம் இப்படி முற்றுப்புள்ளி வைக்க இயலாத நன்மைகள்,,,தீமைகள்? நினைவுக்கு வந்ததும் சொல்கிறேன்..
15.கவிதை எழுத கரு எப்படி தோணுகிறது?
தமிழரசி : சம்பவங்கள், தனிமையாக பயணிக்கும் போது கற்பனை, பார்வையில் நனைந்தவை,நண்பர்களோடு உரையாடும் போது இவைகளை எல்லாம் கவிதையாக்கிவிடுவேன்...
16.தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
தமிழரசி : இதைப் பற்றி கருத்து சொல்லும் அளவு இன்னும் நான் தெரிவும் தேர்வும் பெறவில்லை..
17.தாங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பதிவுலக நண்பர்களுடனான நட்பு பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
தமிழரசி : குடும்பத்திலும் கிடைக்காத ஒற்றுமை உறவுகள் இங்கு கிடைத்திருக்கிறது...
18.தொடர்ந்து எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் முற்றிலும் பதிவர்களுக்காகவே இயங்கும் தமிழ்மணத்தினை பற்றி சில வார்த்தைகளும் தமிழ்மணத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்று ஒரு இணைய பத்திரிக்கை போல் செயல் படுத்தலாம் என்ற கருத்துக்கு தங்களின் பதில்...
தமிழரசி : தமிழ் மணத்தில் இணைக்கும் பட்சத்தில் அனைவரும் அனைத்து பதிவுகளை படிக்க வழிவகுக்கிறது...பத்திரிக்கையாய் செயல் படுத்தலாம் என்ற எண்ணம் வரவேற்கதக்கது..மற்றும் தமிழ் மணம் பற்றி அதிகம் அறிந்துக் கொள்ளமுடியவில்லையே என்ற வருத்தம் இந்த கேள்வி உண்டாக்கிவிட்டது..
19.வாரிசு அரசியல் , வாரிசு சினிமா போன்றே தங்களுக்கு அடுத்து தங்கள் வாரிசுகளை பதிவுலகத்தில் நுழைக்கும் எண்ணம் இருக்கிறதா?
தமிழரசி : என்னை ஒழித்துக்கட்ட உள் நாட்டு சதிப்போல உள்வீட்டு சதி நடப்பதால் அப்படி எதுமில்லை யாருக்கும் ஆர்வமில்லை...
20.ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று நினைத்து இன்று வரை எழுதாமலே இருக்கும் கவிதை என்று ஒன்று இருக்கிறதா?
தமிழரசி : எதுவுமில்லை...
21.இதுவரைக்கும் நீங்க வாசிச்சதிலயே பெஸ்ட் கவிதை எதுவென்றும் அது எழுதியவர் பற்றியும் சில வார்த்தைகள்..
தமிழரசி : இப்படி நிறைய இருப்பதால் எதையும் எவரையும் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை
22.கவிதையில் இருக்கும் வெண்பாக்கள் பற்றி எழுதும் ஆசையில்லியா?
தமிழரசி : மன்னிக்கவும் தமிழ் நூல்கள் படிக்கும் வாய்ப்பும் வாய்க்கவில்லை இலக்கணமும் அறியேன்..இப்படி இருக்க வெண்பா என்றால் என்ன? என உங்களையே கேட்கிறேன்....
23.கணினியில் எழுதப்பழகியபின் காகிதத்தில் எழுதுவது குறைந்துவிட்டதா?
தமிழரசி : ஆம்....மிகவும் குறைந்து விட்டது என சொல்லலாம்
24.இன்னும் சில ஆண்டுகள் கழித்து பதிவுலகம் எப்படியிருக்கும்?
தமிழரசி : நாளை? இதை அறியும் பக்குவம் வரவில்லை இப்படி இருக்க இன்னும் சில ஆண்டுகளை எப்படி என்னால் கணிக்கமுடியும்
25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?
தமிழரசி : இதை இன்னும் புதிய பதிவராவே இருக்கும் என்னிடம் கேட்டால்......
இதுவரையிலும் கேட்ட கேள்விகள் அனைத்திற்க்கும் பொறுமையாக பதிலளித்த எழுத்தோசை தமிழரசி அவர்களுக்கு மிக்க நன்றிகள் தெரிவித்து கொண்டு அடுத்தடுத்து பிரபல பதிவர்களின் சுவையான கேள்வி பதில்கள் இடம்பெறும் என்பதை தெரிவித்து விடைபெறுவது உங்கள் வசந்த்....
41 comments:
நல்ல கேள்வி , நல்ல பதில். மிகவும் எளிமையாக,அருமையாக பதில் வந்துள்ளது.
நல்ல கேள்விகள் நல்ல பதில்கள் ::)
ஆனா..! வசந்து ...!நான் சில கேள்விகள் கேக்கணும் ..!
அவங்க கிட்ட...! ;;)
15.கவிதை எழுத கரு எப்படி தோணுகிறது?
கோழி முட்டையிலே இருந்து தான்
nice interview
நல்லாயிருக்குங்க கேள்வியும் பதிலும்....
//இங்க இருக்கும் பொருளை அங்க வைப்பது//
எங்ககிட்ட கொடுங்க ”அடகு” வைக்கிறோம்!
//தங்களின் கவிதைக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?//
மன வலிமை குறைந்தவர்கள் உயிர்பயம் காரணமாக கவிதை பக்கம் வராதிங்கன்னு நாங்க ஏற்கனவே எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம்!
//பெரும்பாலும் என் கவிதைகள் சம்பவங்களே..பொதுவா என்னோடு பேசுவதை கூட நான் கவிதையாக்குவது வழக்கம்..//
பெரும்பாலும்
என் கவிதைகள்
சம்பவங்களே..
பொதுவா
என்னோடு
பேசுவதை
கூட நான்
கவிதையாக்குவது
வழக்கம்..
ஆச்சர்ய குறி!
அம்புட்டு தான் கவிதை, இதுக்கு போய் கேள்வி கேட்டுகிட்டு!
//நான் நல்லா எழுதுவதில்லை என்றும் ப்லாக் எழுதவேண்டாம் என்றும் அனானி ஒருத்தர் மட்டும் பின்னுட்டம் இட்டு இருந்தார்.//
பாவம்! அவரும் எவ்வளவு தான் வலிக்காத மாதிரியே நடிப்பாரு!
//தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?//
கவிதை எழுதிக்கொல்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம்
கவிதை படித்தே சாவார்!
போனவங்க எல்லாம் கவிதை படிச்சவங்க!
//தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?//
இல்லைனா ஆஸ்பத்திரியில சேர்த்து மருந்து வாங்கி தருவிங்களா!?
//.தாங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பதிவுலக நண்பர்களுடனான நட்பு பற்றி எப்படி உணர்கிறீர்கள்?//
கவிதை படிக்க அடிமை சிக்கிருச்சேய்!
நல்ல முயற்சி உ.பி. பாராட்டுக்கள்.
அருமையா பதில் சொன்ன தமிழரசிக்கும் வாழ்த்துக்கள்.
ப்ரியமுடன்TV செய்திகளுக்காக வசந்த்
இவர்களைப் போன்றவர்களை கவுரவிப்பதும் பாராட்டுக்குரியது
நல்ல கேள்விகள் வசந்த்.
பொறுமையாகப் பதில் சொன்ன தமிழுக்கும் வாழ்த்துகள்.
நல்ல பகிர்வு..
வால் பையனின் கமெண்டுகளையும் சேர்த்துத்தான் சொன்னேன்.. :))
2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?
அப்ப எல்லாம் கும்மி கிடையாது, இப்ப கும்மி அதிகமா இருக்கு
3.தங்களின் கவிதைக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?
இல்லை.. அப்படி இன்னும் யாரும் ஆட்டோ அனுப்பலை
5.ஒரு சென்சிட்டிவான கவிதைஎழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?
பதிலா கொலை வெறி கவுஜ எழுதுவேன்..
6.கவிதை எழுத பிடிக்குமா? கவிதைகளை வாசிக்க பிடிக்குமா?
ரெண்டுமே இல்லை .. கும்மி அடிக்கத்தான் பிடிக்கும்
7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?
போனவங்க விலாசம் கொடுத்திட்டு போகலை, கொடுத்து இருந்தா ஆட்டோ விலே போய் கேட்கலாம்
8.தங்கள் சம கால பதிவர்கள் தவிர்த்து தற்பொழுது இருக்கும் பதிவுலகில் நிறைய புதியவர்கள் எழுதுகின்றனர் அவர்களில் தாங்கள் வியந்த புதியவர்கள் யார்? (எல்லோரும் என்று கூறி தப்பித்து கொள்ளகூடாது) ஏன் பிடிக்கும் அவர்களை?
என்னைத்தவிர அனைவரும் (நான் எல்லோரும் என்று சொல்லலை)
9.ஏண்டா பதிவுலகம் வந்தோம் என்று என்றாவது எண்ணியதுண்டா?
கும்மி குறையும் போது
10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?
சரக்கு அதிகமா இருந்தா போதையும் அதிகமாத்தான் இருக்கும்
11.கவிதை,,மட்டுமே எழுதி வரும் தங்களுக்கு பதிவுலகத்திலே இதுவரை யாரும் எழுதாத ஒரு புது விஷயம் எழுத வேண்டும் என்ற ஆசையுண்டா?அப்படியாயின் அதைப்பற்றி சில வார்த்தைகள்
தெலுங்கிலே கவிதை எழுதினா தமிழ் படிப்பவர்களுக்கு புரியாது, இந்த முயற்சி ஒரு அதி நவீன பின்நவீனத்துவம்
12.பொதுவாக தங்களின் நண்பர்களின் பதிவுக்கு மட்டும் சென்று பின்னூட்டமிடுகிறீர்கள் புதிய பதிவர்களின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை என்ற தங்களின் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்க்கு நேரமில்லை என்பதை தவிர்த்து தங்களின் பதில் என்ன?
படிப்பது கல் அளவு ..படிக்காதது உலகளவு
13.தாங்கள் எழுதிய கவிதை போலவே அதாவது தங்கள் ஸ்டைலில் வேறொருவரும் அதே போன்ற கவிதை எழுதியிருப்பதாக எண்ணியதுண்டா?அப்படியிருந்தால் அந்த கவிதை பற்றி கூறவும்..
என்னையே மாதிரி இன்னொருவரும் மொக்கையா எழுதினால் நல்லத்தான், ஆனா ஊருக்கு ஒரு மொக்கை தான் இருக்கணும்
14.பதிவுலகம் வந்தபிறகு தங்களுக்கு நடந்த நன்மை தீமைகள் பற்றி சிறு குறிப்பு...
நெடுந்தொடரா போடணும்
16.தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?
ஆமா.. பால், ஆப்பிள் பழம் எல்லாம் சாப்பிட்டு நல்லாவே இருக்கு, உடம்புக்கு சரியில்லைன்னா சொல்லி அனுப்புறேன்
17.தாங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பதிவுலக நண்பர்களுடனான நட்பு பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
தொலை பேசியிலே இடுகை போட்டு இருக்கேன்னு சொல்லுறாங்க
18.தொடர்ந்து எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் முற்றிலும் பதிவர்களுக்காகவே இயங்கும் தமிழ்மணத்தினை பற்றி சில வார்த்தைகளும் தமிழ்மணத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்று ஒரு இணைய பத்திரிக்கை போல் செயல் படுத்தலாம் என்ற கருத்துக்கு தங்களின் பதில்...
ரெம்ப கஷ்டமான கேள்வி
19.வாரிசு அரசியல் , வாரிசு சினிமா போன்றே தங்களுக்கு அடுத்து தங்கள் வாரிசுகளை பதிவுலகத்தில் நுழைக்கும் எண்ணம் இருக்கிறதா?
நான் வருங்கால முதல்வர் ஆகும் போது கவலை பட வேண்டிய விஷயம்
20.ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று நினைத்து இன்று வரை எழுதாமலே இருக்கும் கவிதை என்று ஒன்று இருக்கிறதா?
ஆமா.. இடுகை எழுதுதாம பின்னூட்டம் வாங்குறது எப்படின்னு
21.இதுவரைக்கும் நீங்க வாசிச்சதிலயே பெஸ்ட் கவிதை எதுவென்றும் அது எழுதியவர் பற்றியும் சில வார்த்தைகள்..
கல்லறை கவிதைகள், கொலை வெறி கவிதைகள், அரிவாள் கவிதைகள், இதயம் விழுங்கும் கவிதை, நீ கொடுக்கலை, நல்லா கொடு அப்படிங்கிற தலைப்பிலே வந்தவைகள், ஆசியரியர் முதலாம் நூற்றாண்டு பெருசு ஒண்ணு.
22.கவிதையில் இருக்கும் வெண்பாக்கள் பற்றி எழுதும் ஆசையில்லியா?
சட்டியிலே இருந்தாதானே ஆப்பையிலே வரும், நான் வச்சி கிட்டா வஞ்சகம் பண்ணுறேன்
23.கணினியில் எழுதப்பழகியபின் காகிதத்தில் எழுதுவது குறைந்துவிட்டதா?
கடிதத்தின் நாகரிக வளர்ச்சியே கணனி
24.இன்னும் சில ஆண்டுகள் கழித்து பதிவுலகம் எப்படியிருக்கும்?
இந்த மாதிரி கேள்வி கேட்காதவரைக்கும் நல்லாவே இருக்கும்.
25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?
நானும் இன்னும் யூத் தான்
நல்ல முயற்சி, அருமையான தொடக்கம் மாப்பி...வாழ்த்துகள்...
தமிழரசி பதில்கள் நல்லா இருக்கு. குறிப்பா பதிவுலம் போதை தெளிஞ்சுடும்னு தெளிவா இருக்காங்க பாருங்க அது .
//25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?
நானும் இன்னும் யூத் தான்//
நசரேயன். உங்க பதில் எல்லாம் ரசித்தேன்.
நல்ல இந்தர்வியூ...
பேட்டி, நல்லா வந்திருக்கு நிருபரே,
தமிழரசி மற்றும் நசரேயன் என்ற பிரபல ப்லாக்கர்களின் நேர்காணல் படித்தேன் இரசித்தேன்.
நல்ல முயற்சி.
/10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?
தமிழரசி : உண்மை தான்...அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தெளிந்துவிடும் என்பதும் உண்மையே.../
நிஜம்..
அத்தனையும் சூப்பர் கேள்விபதில் சகோ...
நல்ல கேள்வி , நல்ல பதில்.
அருமையான பேட்டி. இருவருக்கும் வாழ்த்துக்கள்!
இரட்டை பேட்டி சூப்பரா இருந்தது.
படித்தேன்.. ரசித்தேன்.
கலக்கிட்டீங்க வசந்த்..:))
புதுசு..இது புதுசு.
தமிழரசியின் உள்ளம் பதில்களில் தெரிகிறது!!!
//17.தாங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பதிவுலக நண்பர்களுடனான நட்பு பற்றி எப்படி உணர்கிறீர்கள்?
தமிழரசி : குடும்பத்திலும் கிடைக்காத ஒற்றுமை உறவுகள் இங்கு கிடைத்திருக்கிறது...//
சரியாக கூறியிருக்கிறார் தோழி..
மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவு வசந்த்..
ஏழு தோசையைப் பத்தி எதுவுமே கேட்கலையே!
வசந்த்,
உங்களோட கேள்விகள்...
தமிழுடைய பதில்கள்...
வால்பையனின் பின்னூட்டங்கள்....
கதம்ப மாலை.
பிரபல பதிவரின் நேர்காணல் அருமை
ஒத்துக்கிட்டேன் நீங்களும் ரவுடிதான்....
பத்தவாது கேள்வியும் பதிலும் அருமை...
வால்....வால்தான்.....
இதுவேறயா !! :-)
இது உண்மையிலேயே தமிழரசியின் பதில்தானா? :-)
இது நிஜமான பேட்டியா அல்லது உங்க பேட்டி போன்ற இடுகையா வசந்த்..?
வசந்த்,
தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருந்தால் தொடருங்கள்.
http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html
பிரபல பதிவர்களின் பேட்டி, அதற்கேற்றார் போல நல்லாவே இருக்கு. கிரேட்.....!!
Post a Comment