காலங்காலமா சின்னப்புள்ளையில இருந்து இப்போ வரைக்கும் அரை டவுசர்,முழுடவுசர்,வேஷ்டி இது எல்லாத்துக்கும் மேட்ச்சா எப்பவும் கட்டம்போட்ட சட்டை ,கோடு போட்டசட்டை,டி சர்ட்,இந்த நாலு ஐட்டம் தான் இருக்கு உங்களுக்கு மட்டும் சேலை,தாவணி,பாவாடை சட்டை,ஸ்கர்ட்,மினி ஸ்கர்ட்,ஜீன்ஸ்,டாப்ஸ்,சுடிதார்,இன்னும் வாயில வராத பேரெல்லாம் இருக்குற ட்ரெஸ் வித விதமா போடுறீங்களே இது எங்களை விட எத்தினி பெர்செண்ட் அதிகம்ன்னு தெரியுமா?
காது,மூக்கு,கழுத்து,இடுப்பு,நெற்றி,கால்,கால் விரல் கை,கைவிரல் யப்பாடி இம்புட்டு இடத்துலயும் நகை நட்டுன்னு கலந்து கட்டி வீட்டுக்காரோட பாக்கெட்ட காலி பண்றீங்களே எங்களோட பெர்செண்டேஜ் எம்புட்டுன்னு தெரியுமா?
கையில ப்ரேஸ்லெட்,மோதிரம்,செயின் இததவிர்த்து வேற எந்த நகை போட்டாலும் இந்த உலகம் ஒற்றுக்கொள்ளாது..’
ஒரு விஷயம் கணவன் மனைவிக்கோ இல்லை நண்பர் நண்பிகளுக்குள்ளாகவோ விவாதம்ன்னு வரும்பொழுது எங்களைவிட நீங்க பேசற பேச்சுகளின் பெர்சண்டேஜ் உங்களுக்கே தெரியும்...
ஒரு அழகான பொண்ணு ரோட்ல நடந்து போகும்போது பார்க்கும் கண்களின் எண்ணிக்கைக்கும் அழகான பையன் ரோட்ல நடந்துபோகும்போது பார்க்கும் கண்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் பெர்சண்டேஜ்லயும் உங்களுக்குத்தானேங்க அதிக பெர்செண்டேஜ் வருது ?
பொதுவான இடத்தில எங்களுக்கு ஆபத்து நடந்தா வர்ற கூட்டத்தவிட உங்களுக்கு ஆபத்து வந்தா கூடுற கூட்டம்தானேங்க அதிகம்...
ஆண்கள் பியூட்டி பார்லர் விட பெண்கள் பியூட்டி பார்லர்தானேங்க அதிகம் இருக்கு...
வார மாத இதழ்களின் அட்டை படத்தில கூட உங்க படம் தானேங்க அதிக தடவை வருது...(ஹூம்)
டிவி சீரியல்ல கூட உங்க படைதானேங்க அதிகமா இருக்கு...
அழகுன்றது கூட எங்களை விட உங்களுக்குத்தானேங்க கடவுள் அதிகமா கொடுத்திருக்கான்...
கடவுள்களில் கூட ஆண் கடவுளைவிட பெண்கடவுள் தானேங்க அதிகம் இருக்காங்க...
அன்பு,பாசம்,இதுகூட எங்களைவிடநீங்கதானேங்க அதிகம் வச்சுருக்கீங்க..
இதெல்லாம் விட ஒரு உயிரை படைக்கிற சக்தி கடவுளுக்கு அடுத்து உங்களுக்குத்தானேங்க இருக்கு...
இன்னும் நிறைய துறையில எங்களை விட முன்னேறிகிட்டு இருக்கீங்க சந்தோஷமாவே இருக்கு பின்ன இந்த பாழாய்ப்போன 33% மட்டும் இன்னும் ஏங்க சட்ட சபையிலயும் பாராளுமன்றத்திலயும் மட்டுமே கேட்டுட்டு இருக்கீங்க ? அதை விட்டு வெளியில வாங்க...
57 comments:
அன்பு,பாசம்,இதுகூட எங்களைவிடநீங்கதானேங்க அதிகம் வச்சுருக்கீங்க.]]
அருமை
//
இதெல்லாம் விட ஒரு உயிரை படைக்கிற சக்தி கடவுளுக்கு அடுத்து உங்களுக்குத்தானேங்க இருக்கு..//
ஆமாங்க ஆம்பளைங்க இந்த விஷயத்துல ஹேண்டிகேப்ட்.. நாங்க என்ன மாட்டேன்னா சொன்னோம்..
சரியா சொன்னப்பு...பெண்கள் இல்லாமல் உலகமே இல்லை.
இப்ப 33 சதவீதம் கொடுக்கலாம்னு சொலிறியா? வேணாம்னு சொல்றியா???
அது சரி...
இந்த வஞ்சப்புகழ்ச்சி அணிங்கிறது இதானா???
ரசித்தேன்...
//.. Label: நகைச்சுவை. ..//
:-D))
ஹிஹி...
ரைட்டு.....
வசந்த்!! இன்னும் நிறைய துறையில எங்களை விட முன்னேறிகிட்டு இருக்கீங்க சந்தோஷமாவே இருக்கு பின்ன இந்த பாழாய்ப்போன 33% மட்டும் இன்னும் ஏங்க சட்ட சபையிலயும் பாராளுமன்றத்திலயும் மட்டுமே கேட்டுட்டு இருக்கீங்க ///
இன்னும் கொஞச நாளில் ஆண்களுக்கு 33 கேட்க வேண்டி வரும்!!
well said.
I love this post.
வசந்த்,
ஐய்யோ...ஐய்யோ...!
இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லியே எங்கே அவசியமோ அங்கே தராமப் போறதுதானேங்க உங்க ஸ்பெஷாலிட்டி:)?
//பொதுவான இடத்தில எங்களுக்கு ஆபத்து நடந்தா வர்ற கூட்டத்தவிட உங்களுக்கு ஆபத்து வந்தா கூடுற கூட்டம்தானேங்க அதிகம்...//
ஆபத்தும் பெண்களுக்குத்தான் அதிகம் வருது
இப்போ உங்க பிரச்னைதான் எனன?
வசந்த் மச்சான் இதையும் சேர்த்துக்கங்க....
வசந்தோட ரசிகர் கூட்டத்திலையும் நீங்கதானே அதிகமா இருக்கீங்க...
:)
இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லியே எங்கே அவசியமோ அங்கே தராமப் போறதுதானேங்க உங்க ஸ்பெஷாலிட்டி:)?//
ஆபத்தும் பெண்களுக்குத்தான் அதிகம் வருது //
கன்னாபின்னா ரிப்பீட்டு
Super
VERY NICE TO READ
உடை- :)
நகை- இதை நான் ஒத்துக்க முடியாது.. நாங்க உடம்பு fulla போடுற நகையை தான், ஒரே சங்கிலியா (மாட்டை கூட கட்டலாம்) நீங்க போட்டுக்குறீங்களே..? அப்புறம் என்ன? "நீயா நானா" பார்க்கலையா ?
பேச்சு- ஒரு விவாதம்ன்னு வந்துட்டா விட்டுக் கொடுக்கலாமா? அதான்.. ஹி..ஹி..ஹி..
பார்வை.. எங்கள பார்க்குறது யாரு? நீங்க தானே? நாங்களா "பாருங்க பாருங்கன்னு" சொல்றோம்.. இது என்னடா வம்பா போச்சி?
பிரச்சனை- இதுக்கு உங்களை அதிகமாவே பாராட்டலாம்ங்க.. ஒரு பிரச்சனைன்னு வந்தா அதுவும் பெண்ணா இருந்தா உடனே வந்து உதவிடுவிங்க.. அவ்ளோ நல்லவங்க நீங்க.. பசங்களுக்கு ஏன் உதவ மாட்டேன்றிங்கன்னு இனிமே தான் யோசிக்கணும்..
பார்லர்- எனக்கு போய் பழக்கம் இல்லை.. so no comments.
அட்டை படம்- எது ரொம்ப அழகோ அதைதான் போடுவாங்க..
டிவி சீரியல்- எத்தனை கேள்வி கேட்குறாங்கப்பா.. ஸ்ஸ்ஸஸப்ப்பா முடியல..
அழகு- எல்லாரும் அழகு தான்..
கடவுள்- ஆனா அபிஷேகம் மட்டும் ஆண் கடவுளுக்கு பண்ணதும் தான்.. (இன்னிக்கு கோவிலுக்கு போன பாதிப்பு)
அன்பு- அப்படி எல்லாம் இல்லைங்க.. என்னை விட என் கணவர் என்னை அதிகமா நேசிக்கிறார்.. இதையும் ஒத்துக்க மாட்டேன்..
உயிர்- படைப்பது நாங்கள்.. கொடுப்பது..?
"அதை விட்டு வெளியில வாங்க..." ஓகே.. நாங்க வந்துட்டோம்.. இனி 100% வேணும் எங்களுக்கு..
இந்த comment போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா??...
இப்படி சொல்லி சொல்லியே ...
பெண்கள் மனதை ரணகளமாக்கிறியளே.........
பதிவு அருமை
இந்த ஆதங்கத்தின் பின்னணி என்னவோ :))
சரிங்க 33% கேட்கலை. 100%ம் கொடுத்துடுங்க!
அவ்வளவு சீக்கிரம் 33%கொடுத்துடுவீங்க. இதைச்சொல்லியே எத்தனைக் காலத்துக்கு எங்களை ஏமாத்தப் போறீங்களோ!
{{{{{{நினைவுகளுடன் -நிகே- said... இப்படி சொல்லி சொல்லியே ...
பெண்கள் மனதை ரணகளமாக்கிறியளே.........
}}}}}}}}}}
என்ன நண்பரே நாம் எது சொன்னாலும் நம்பவே மாட்டாங்களோ ????.
பதிவு மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி
திட்டலாம்னு படிச்சிட்டு வந்தேன்.. கடைசில பாத்ததும் சிரிச்சுட்டேன்.. செமையா..
அதான் லேபல்ல "நகைச்சுவை"ன்னு போட்டிருக்கீங்களே உ.பி. அப்புறம் எதுக்கு திட்டணும் :)))
பதிவு அருமை மாப்பி...
ரைட்டு...நீ...எதோ முடிவோடதே திரியுர....பாத்து டீ...மாப்பி....
பயவுள்ள என்னமா யோசிக்குராயா....
பாரத மாதா, மேலும் நதிகளுக்களுக்கெல்லாம் பெண்களின் பெயர்கள்னு முக்கியமான பாய்ண்டடை விட்டுட்டீங்க.
நல்லாயிருக்கு நண்பா
"இப்படி சொல்லி சொல்லியே ...
பெண்கள் மனதை ரணகளமாக்கிறியளே........." ரிப்பீட்டு
இப்படி சொல்லி சொல்லியே ...
பெண்கள் மனதை ரணகளமாக்கிறியளே........." ரிப்பீட்டு
ரிப்பீட்டு ரிப்பீட்டு
//காது,மூக்கு,கழுத்து,இடுப்பு,நெற்றி,கால்,கால் விரல் கை,கைவிரல் யப்பாடி இம்புட்டு இடத்துலயும் நகை நட்டுன்னு கலந்து கட்டி வீட்டுக்காரோட பாக்கெட்ட காலி பண்றீங்களே எங்களோட பெர்செண்டேஜ் எம்புட்டுன்னு தெரியுமா?//
அப்படி நல்லா கேளு வசந்த்
//ஒரு அழகான பொண்ணு ரோட்ல நடந்து போகும்போது பார்க்கும் கண்களின் எண்ணிக்கைக்கும் அழகான பையன் ரோட்ல நடந்துபோகும்போது பார்க்கும் கண்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் பெர்சண்டேஜ்லயும் உங்களுக்குத்தானேங்க அதிக பெர்செண்டேஜ் வருது ?//
குறிச்சிவையுங்க
10, +2 மார்க் விட்டுபோச்சி வசந்த்
//இன்னும் நிறைய துறையில எங்களை விட முன்னேறிகிட்டு இருக்கீங்க சந்தோஷமாவே இருக்கு பின்ன இந்த பாழாய்ப்போன 33% மட்டும் இன்னும் ஏங்க சட்ட சபையிலயும் பாராளுமன்றத்திலயும் மட்டுமே கேட்டுட்டு இருக்கீங்க ? அதை விட்டு வெளியில வாங்க...//
கொலைவெறி ரிப்பீட்டு
ரிப்பீட்டு ரிப்பீட்டு
அசத்தல் ......யாரும் அசைக்க முடியாது போல....
//அழகுன்றது கூட எங்களை விட உங்களுக்குத்தானேங்க கடவுள் அதிகமா கொடுத்திருக்கான்.//
ரசனைக்காரரய்யா அவர். :-)))
//இப்படியெல்லாம் சொல்லிச் சொல்லியே எங்கே அவசியமோ அங்கே தராமப் போறதுதானேங்க உங்க ஸ்பெஷாலிட்டி//
ராமலஷ்மி மேடத்துக்கு ஒரு பெரிய ஓ போடுங்க.
வசந்து, பின்ன்றியேப்பா
நியாயமான கேள்விகள் :))
ஒரே காரணந்தான் வசந்த்.. ஆண்களுக்கு தேக வலிமை அதிகமாயிருக்கு..
:)
.......... :-)
சன் குடும்பம் விருதுகள்னு ஒரு விருது குடுக்குறாங்க. அதுல கூட.பெண்ணுக்கு "சிறந்த நடிகை" விருது. ஆணுக்கு "சிறந்த வில்லன்" விருது. இவங்க எப்பவுமே நம்மை வில்லனாதான் பாக்குறாங்க.
"மங்கையராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று சும்மாவா சொன்னாங்க வசந்த தம்பி.இதெல்லாம் ரைட்டு.இந்த பெண்பதிவர்களின் இடுகைக்கு வரும் பின்னூட்டாங்களை விட ஆண் பதிவர்களுக்கு வரும் பின்னூட்டங்கள் தான் அதிகமா வருதுங்க.இந்த விஷயத்தில் மட்டும்தான் உங்கள் இனத்தை மிஞ்ச முடியலே :-(
பின்னூட்டம் மட்டுமல்ல பின் தொடர்பவர்களும்தான்
ஒருவேளை சட்டசபையில் 33 % வாங்கிவிட்டால் மற்றதையெல்லாம் நமக்கே விட்டு கொடுத்திடுவார்கள் என நினைக்கிறேன்
என்னாப்பா வசந்த்...இப்புடிச் சில்லறை விஷயத்துலே எல்லாம் அதிகப் ப்ர்சென்டேஜ் கொடுத்துட்டு.....தேவைப் படற இடத்துலே டம்மியாக்கலாம்னு டபாய்க்கிறீங்களே!ஞாயமா????
////ஒரு அழகான பொண்ணு ரோட்ல நடந்து போகும்போது பார்க்கும் கண்களின் எண்ணிக்கைக்கும் அழகான பையன் ரோட்ல நடந்துபோகும்போது பார்க்கும் கண்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் பெர்சண்டேஜ்லயும் உங்களுக்குத்தானேங்க அதிக பெர்செண்டேஜ் வருது ?//
சில முறை பெண்கள் கூசிப் போற அளவுக்கு பாக்குறது யாரு ?
//ஒருவேளை சட்டசபையில் 33 % வாங்கிவிட்டால் மற்றதையெல்லாம் நமக்கே விட்டு கொடுத்திடுவார்கள் என நினைக்கிறேன்//
முதல்ல இந்த 33 % எப்போ வருதுன்னு பாக்கலாம் , அப்புறம் விட்டு குடுக்குறது பத்திலாம் யோசிக்கலாம்
//காது,மூக்கு,கழுத்து,இடுப்பு,நெற்றி,கால்,கால் விரல் கை,கைவிரல் யப்பாடி இம்புட்டு இடத்துலயும் நகை நட்டுன்னு கலந்து கட்டி வீட்டுக்காரோட பாக்கெட்ட காலி பண்றீங்களே எங்களோட பெர்செண்டேஜ் எம்புட்டுன்னு தெரியுமா?//
இந்த இடங்களில் நகை இல்லாமல் வந்தால் பெண்களை கல்யாணம் பண்ணுவோர் எத்தனைபேர் ? போட்டு கொண்டு வர சொல்றதே ஆண்கள்தானே .
அதை அவசரத்துக்கு வாங்கி அடகு வைப்பது யார் ?
மனைவியின் நகைகள் ஆண்களின் அசையும் சொத்துதானே?
//அன்பு,பாசம்,இதுகூட எங்களைவிடநீங்கதானேங்க அதிகம் வச்சுருக்கீங்க.//
ரொம்ப அருமை வசந்த்.
//இதெல்லாம் விட ஒரு உயிரை படைக்கிற சக்தி கடவுளுக்கு அடுத்து உங்களுக்குத்தானேங்க இருக்கு//
அதுதான் அவர்களின் சிறப்பு. யார் நினைத்தாலும் அதில் அவர்கள் தான் 100%
அடேங்கப்பா சூப்பர் சர்வே வசந்த் இம்புட்டு சவுகரியத்தோடவா இருக்கோம் தெரியாமப் போச்சே அப்பு
1 வசந்தப்பு! புடவைக்கடை அனைத்துக்கும்{இப்போதுதான்
வெகுசில பெண்கள்} முதலாளியும்,உரிமையாளரும்
ஆண்களே!அதனால்...அதிக விற்பனைக்கு வழி தேடி
எல்லாவற்றையும் எங்கள் தலையில் கட்டிவிட்டுத்
தப்பித்துவிட்டார்கள்.
2 எவ்வளவும் ஏன் போட்டார்கள் {பழக்கப்படுத்தினார்கள்}
பொண்ணோட சேர்த்து பொன்னையும் வாங்கத்தான்!
அது போதாமல்..இத்தனை பவுன் கொடு, ! இத்தனை பவுன்
கொண்டுவா!! என்று பெண்ணின் மதிப்பை ஏலத்தில் விடுவதும்
இந்தத் “தங்கங்கள்தான்” தங்கமே!!
3 அறிவு ஊற்றுக்கள் நாங்கள் அது தானாக
ஊற்றெடுப்பதை யாரும் தடுக்க முடியாது
அந்த அழகு சலசலப்பை நீங்கள்
வாயாடி என்கிறீர்களா!?
4 ஏன்?என்று! இந்தப் பாட்டைக் கேளுங்கள்
மதுரையில் பறந்த மீன் கொடியை
உன் கண்களில் கண்டேனே.....
முழுவதுமாய்க் கேட்டால் ஏனென்று புரியும்
சட்டியில..இருந்தாத்தானே அகப்பையில் வரும்...
5 ஆபத்தா? அதை எற்படுத்துறது நீங்கதானுங்க...
நீங்களே {ஆபத்து} என்று உங்க இனத்தைக்
குற்றம் சொல்லி இருக்கின்றீர்கள்
{விபத்து} என்று வரவில்லையே ஏன்?
6 அழகின், ஆரோக்கியத்தின் இரகசியம் தெரிந்தவர்கள்
பெண்கள் அதைவிட.. இதற்கு பொறுமை மிகமிக அவசியம்
இது உண்டா ஜயா உங்களிடம்?
தன் மனைவியோ,காதலியோ அழகு நிலையங்களுக்குப்
போவதை இன்றும் தடுக்கும் இனம்...உங்கள் இனம்தான்
{அழகை நான் மட்டும் இரசித்தால் போதும்! மற்றவர்கள்
இரசிக்கவா? செய்யப் போகிறாய் என்று கேட்கும் ஆண்கள்
உண்டு இப்படி இருக்கும் போது........!!!???
நாங்க எல்லோரும் அழகாய் இருக்க வேண்டும் என்று
நினைப்பவர்கள். அதனால்...அதிகம்.
7 அதை அடித்துப் பிடித்து நீங்கள் வாங்குவதால்...
{அதிக விற்பனை} க்காக..கையாளப்படும் யுத்தி
{அழகானவரைத்தானே போட முடியும் ஹ...ஹ்ஹஹ...}
நீங்கள் அட்டையைப் பார்த்து புத்தகம் வாங்கிய
அனுபவம் இருக்குமே!?
8 நடிப்புத் திறமை அதிகமுள்ளதாலும்....
அடிமைத் தனத்திலிருந்து மற்றப் பெண்கள்
விடுபடவேண்டும் என்பதற்காகவும்...
இவர்கள் பாடுபடுகிறார்கள்.
9 உங்களை அப்படியாவது....{அழகுக்கு}பணிய வைக்கத்தான்
ஆண்,ஆண் என்ற அகங்காரத்தை..அழகு
கொஞ்சம் குறைக்குமல்லவா!!
10 அன்பு,பாசம்,அரவணைப்பு,தாய்மையென்ற
உணர்வு பொறுமை இவைகள் உங்களைவிட..
அதிகம்.{உ+ம்}உங்கள் அப்பாவைவிட உங்க
அம்மாதானே உங்களிடம் வேளைக்கு சாப்பிடு,தூங்கு
என்று ம்,,..அதைச் செய்யாதே..இதைச்செய்என்றும்
அறிவுரையுடன்..அன்பும் கலந்து சொல்வது
உங்கள் பெற்றோரையே உதாரணமாய்
எடுங்கள்
11 அப்பாடா....கொஞ்சம் ஆஆஆ...காட்டு
சக்கரை போட...
உயிரைப் படைக்கிற சக்தி..தப்புத் தப்பு
12 உயிர் கொடுப்பது நீங்கள் அதைத்
தாங்குவது நாங்கள் ஒன்றில்லாமல்
ஒன்றில்லை....{சிவ சக்தி}
புரிய வைக்கத்தான்!!
ஆண்கள்{சில} இன்னும் புரியமாட்டேன்
என்று அடம் பிடிக்கிறார்களே! என்ன
செய்யலாம்!?
13 சட்டசபையிலும்..பாராளுமன்றத்திலும்..
{அதிகம்}ஆண்கள் ஆட்சி பொறாமை
ஈகோ இன்னும் பல காரணங்கள்
இருக்கலாம்......
this is a post which many people can read and enjoy.. there is nothing to be thought over about it.. i treat this as a just off hand post which is worded well...
on a serious note-
i think caste can be wiped out only by eliminating the caste column in application forms- not by providing reservations..
similarly- equality should be brought out by letting people compete face to face- human against human.. not by providing figures and percentages!
it lies in one's mind.. these percentages and figures..caste and equality..
women s' bill will not ever be passed as long as there would be people who mock at the very idea of such a bill(no offense).. so, sleep sound! this ain't ever gonna happen!
நன்றி ஜமால் அண்ணா :)
சிவாஜி சங்கர் ஹா ஹா ஹா நல்லா கேட்டீங்கய்யா கேள்வி ஆத்தாடி...
பிரதாப்பு 33% அப்பிடின்றதே தேவையில்லாத பேச்சு மாப்பி...
ராஜி ஆஹா இந்த தலைப்பு பதிவுக்கு வசுருக்கலாம் போலயே..
பட்டிக்காட்டான் :)
அகல்விளக்கு :)
தேவா சார் வந்தாலும் வரும்...
ராகவன் அண்ணா நன்றிண்ணா :)
சத்ரியன் அய்யய்யோ :)
ராமலக்ஷ்மி மேடம் அங்கயெல்லாம் அல்ரெடி போயி பிரதமராவோ முதலமைச்சரோ ஆயாச்சுதானே மேடம்... :)
மதார் ஆத்தாடி நானில்லை நானில்லை... :)
ஆபத்து எதனால வருது? உடல் வலிமையும் வளர்த்துக்கங்க தாயி அப்புறம் எவனாலும் கிட்ட வருவானா?
சிவன் மச்சான் ஏன் இந்த கொல வெறி?
புதுகை தென்றல் மேடம் நன்றி :)
டக்கால்டி நன்றிப்பா
மனோ மிக்க நன்றி :)
திவ்யா
எவனோ ஒருத்தன் அது மாதிரி நகை போட்ருக்கலாம் உங்க வீட்டூக்காரர் அப்டி போட்ருக்க மாதிரி தெரிலயே...
பார்லர் போயி பழக்கமில்லியா இல்ல போறதுக்கு அவசியம் இல்லியா?
:)
100 % கொடுத்தா என்னல்லாம் பண்ணுவீங்கன்னு தெரியும் தாயி...
நிகே நன்றிம்மா
சைவகொத்துபரோட்டா :)))
கவி 100% கொடுத்தாச்சுன்னு வச்சுக்கங்க இப்போ இருக்குற விலையேற்றம் குறைஞ்சிடுமா?
சங்கர் நன்றி :)
சுசிக்கா அதானே நீதான்க்கா சரியா புரிஞ்சுட்ட... :)))
சீமான் கனி மாப்பி நன்றிடா
தமிழுதயம் கரெக்ட்டு கரெக்ட்டு மிஸ்ஸிட்டேன்...
யோகா நன்றிப்பா
அண்ணாமலையான் :)
அனு நல்லாயிருக்கீங்களா?
நசரு :)))))
சாந்தினி மேடம் நன்றி
அமைதிச்சாரல் மேடம் செட்டு சேர்ந்துடுவீங்களே...
சுபா நன்றிப்பா
எல் போர்ட் சாந்தினி கரெக்ட்டா சொன்னீங்க 33% கேட்க முன்னாடி உடல் வலிமையும் வளர்த்துக்கங்க....
அகிலா மேடம் வில்லத்தனமான சிரிப்பு மிக்க நன்றி :)
சித்ரா மேடம் டாங்ஸ்
வேல்ஸ் சரி நண்பா பொறுமை ...
ஸாதிகாக்கோவ்வ்.....ஏங்க இப்டி கண்ணு வைக்கிறீங்க :)))
ஜீவன் சிவம் நன்றி
அருணா பிரின்ஸ் போராட்டம் துவக்குங்க.... :)))))
மதார் பீ கூல்.....
நகை போட்ருக்கதுக்கு பதிலா பேங்க்ல போட்டாலாவது வட்டி வரும் அத விட்டு உங்களுக்கு ஏன் வாங்கி கொடுக்கிறோம் இதுக்கு மேல கேள்வி கேட்கறது எல்லாம் சாட்ல கேளுங்க .....
அக்பர் :)))
தேனம்மா :)))
கலா வந்துட்டீங்களா இப்டில்லாம் என்னை திட்றதா இருந்தா தனியா மெயில்ல திட்டுங்க... நான் அழுவேன்...
மாதங்கி r u watch labels?
ஆணாதிக்கம் ஒழிக..:-)))
மகளிர் தினம் பற்றிய என் பதிவை இங்கே பார்க்கவும்
http://ulagamahauthamar.blogspot.com/2010/03/blog-post_07.html
paapi...ingu vanthu paarkkavum...
http://ganifriends.blogspot.com/2010/03/blog-post_08.html
வசந்த் கலக்கிட்டீங்க
நன்றி
ஜேகே
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்
Post a Comment