பொய்மன சட்டியால்
காற்றையன் கடவுள்
நுனிசிற்றான் கொய்த
தொட்டார் கொண்டு
சிற்றாரில்லா கூம்பு
சிக்கிய உயிர்நூல் நெய்து
வந்தவழி திரும்பா
வலியில்லாமல் வழிசெய்து
சக்கரப்பரப்பைடைந்து
ஆவியாய் அடங்கிபோய்
சுற்றிவரும் ஓலைப்பாயினின்று
சிற்றுளை வழியெ மூச்சடக்கி
முட்டிமோதி அமிழ்த்து
அதிலும் அடங்கிபோய்
கட்டியவனை தாண்ட
இருப்பில்லாத அளவில்
கோடில்லா துறவால்
துள்ளிப்பாய்ந்து உயிருக்கு உயிராய்
உயிர்கொடுத்த உயிருக்குள்
உயிராய் கசக்கி பிழிந்து
துகளாய் மண்டையாய்
வாயில் தேனாய்...!
40 comments:
me the 1 st ttu....
சத்தியமா நீர் பெரிய புலவரைய்யா, கவிதை புரியவில்லை
//சிக்கிய உயிர்நூல் நெய்து
வந்தவழி திரும்பா
வலியில்லாமல் வழிசெய்து
சக்கரப்பரப்பைடைந்து
ஆவியாய் அடங்கிபோய்//
அடங்காத ஒன்று...
//கட்டியவனை தாண்ட
இருப்பில்லாத அளவில்
கோடில்லா துறவால்
துள்ளிப்பாய்ந்து உயிருக்கு உயிராய்//
பார்ரா... மாப்பி மார்ச்சு போகட்டும் மாப்பி...
நல்ல இருக்கணும்....இருக்கும் அடங்காத ஒன்று...
கலகலப்ரியா கிட்ட பயிற்சி எடுத்தீங்களா ?
நானில்ல
அன்பின் வசந்த்,
//
சிக்கிய உயிர்நூல் நெய்து
வந்தவழி திரும்பா
வலியில்லாமல் வழிசெய்து
சக்கரப்பரப்பைடைந்து
ஆவியாய் அடங்கிபோய்
//
நவீனம் அழகு!
பதின்ம பருவ நிகழ்வுகளை பதியும் தொடர்ப்திவுக்கு தாங்களை அழைக்கிறேன். அழைப்பினை ஏற்று தொடர் பதிவெழுத வேண்டுகிறேன்!
நட்புடன்
கயல்
எங்கே கிடைக்கிறது வார்த்தைகள்? ஆனாலும் மிகவும் தன்னடக்கம் உங்களுக்கு.
எடுக்க சிரமமானாலும் , வாயில் தேன்தான்.
புரியலையே...
ஹூம்..! எங்கேயோ போயிட்டீங்க!
விளக்க உரை ப்ளீஸ்:)!
ஆ.. புரிஞ்சிடுச்சே.. அருமை :))
மிக அருமைங்க... வசந்த். அப்படின்னு...சொல்லத்தான் ஆசை..... எப்படியும் இதுக்கு விளக்கம் சொல்லுவிங்க ... அப்ப திரும்பவும் படிச்சிட்டு கருத்து சொல்லுகிறேன்.... இப்போதைக்கு மண்டை காயுது...!!!!
கலகலப்ரியாவுக்கு விளக்கவுரை எழுதும் முகிலன் எங்கே? கூப்பிடுங்கள் அவரை.. விளக்கவுரை எழுத..
தமிழில் கொஞ்ச நஞ்சம் புரியும்னு வச்சிருந்த நம்பிக்கையெல்லாம் போச்சே!
ஆஹா...அருமை..........
...
.....
.........
(ஒண்ணுமே புரியலையே....... :)) )
சி. கருணாகரசு said...
மிக அருமைங்க... வசந்த். அப்படின்னு...சொல்லத்தான் ஆசை..... எப்படியும் இதுக்கு விளக்கம் சொல்லுவிங்க ... அப்ப திரும்பவும் படிச்சிட்டு கருத்து சொல்லுகிறேன்.... இப்போதைக்கு மண்டை காயுது...!!!!
யானும் இதையே இயம்புகிறேன் தம்பி..
படமெல்லாம் எங்க ராசா புடிக்கிறீங்க...
கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ் கிடைக்குமா.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......
வசந்த் என்னாச்சு... எங்கலயெல்லாம் பெரிய புலவர்கள்ன்னு நினைச்சிட்டியா?? நல்லாயிருக்கு கவிஞரே படிக்கசொல்லோ ...புரியாவிடினும் :)
வசந்த், எங்கள மாதிரி ஆளுங்க நிலையும் நினைச்சி பாருங்க. (சின்ன பசங்க நாங்க)
வசந்துக்கு இசைந்த அழகு தமிழ்ச் சொற்கள்.இதுதானா நேத்து நடந்திச்சு....சரி சரி !
//சிக்கிய உயிர்நூல் நெய்து
வந்தவழி திரும்பா
வலியில்லாமல் வழிசெய்து
சக்கரப்பரப்பைடைந்து
ஆவியாய் அடங்கிபோய்//
இதைப் பாத்தா...மூச்சடைத்த மனித உடம்பாயிருக்குமோ !
ஆமா..அந்த படத்துல உள்ளவரோட மூக்கு எங்கே... ??
திவ்யாஹரி said...
கலகலப்ரியாவுக்கு விளக்கவுரை எழுதும் முகிலன் எங்கே? கூப்பிடுங்கள் அவரை.. விளக்கவுரை எழுத..
திவ்யாஹரியை வழிமொழிகிறேன்
முகிலன் hurry hurry
திவ்யாஹரி சொன்னதையே வழிமொழிகிறேன்.
-------------
வார்த்தை தெரிவுகள் நல்லாயிருக்கு வசந்த் புரியலைன்னாலும்.
சகோ வசந்த் கவிதையில் மட்டுமல்ல படத்திலும் டெரர் காட்டி விட்டீர்கள்...படபடன்னு கவிதை படித்து கிடுகிடுன்னு ஆகிப்போச்சு.
அப்பாடி.. படித்துவிட்டேன்.
வாயில் தேனாய்..
வாலில் விசைகொண்டு
வட்ட உயிர்குடிலுக்குள்
தீராயுயிர்பாசம் நீச்சலிலும்
உன் நேசம்...!
வசந்த்.. எங்கியோ போயிட்டீங்க!!!
அருமையா இருக்கு...
குழந்தை
ஆஹா.. நான் இந்த வருசப் பிறப்புல இருந்து யாருக்கும் கவிதை விளக்கம் எழுதுறதில்லைன்னு நியூ இயர் ரிசல்யூசன் எடுத்திருக்கேனே.. என்னயப் போயி...
(சமாளிச்சிட்டோம்ல)
முகிலன் said...
(சமாளிச்சிட்டோம்ல)
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க..
வசந்த் எனக்கு புரிஞ்சிடுச்சி.. அருமையான கவிதை..
ஆனா கருத்து சொல்ல விருப்பம் இல்லை..
(நாங்களும் யோசிப்போம்ல..)
மரமண்டயரும்,கிறுக்கரும்
சேர்ந்து கிறுக்கியதா??
கிறுக்கலாய்தான் இருக்கின்றது!
என்ன! ஹேமாவின் பக்கம் காணோம்
அழுகைச் சத்தம் எனக்கும் கேட்கிறது
பரவாயில்லை..ஒரு குச்சிமிட்டாய்
கொடுக்கின்றேன் கண்ணைத் துடைத்து
விட்டு வந்து வழி அனுப்பி வையுங்கள்
நான் ஒரு விஷயம் கேட்க வேண்டுமே!!??
மிக அருமை வசந்த்
இது எங்கள் ஊரில் இருக்கும் இயற்கை காட்சி
யார் உருவாக்கினார் என்று கடவுளுக்கு கூட தெரியாத மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் தோன்றும் ஊற்று பெருகி தனக்கென்று ஒரு வழி உருவாக்கி மேலிருந்து கீழாக துள்ளி குதித்து வரும் வழியிலே சில பகுதி செலவழிந்து மீதி நீர் எங்கள் ஊரில் இருக்கும் செங்குளத்தை வந்தடைகிறது குளத்தின் எல்லையில் மடை ஒன்று வைக்கப்பட்டிருக்கும் மடைய்திறந்ததும் வெளியேறும் நீர் குளத்துக்கு அடுத்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருக்கும் அந்த கரும்பிற்க்கு உயிராய் வேரின் வழியே சென்று உடம்பிலும் புகுந்து கொள்கிறது பிற்பாடு கரும்பு அரைக்கப்பட்டு மண்டை வெல்லமாக சர்க்கரையாக வாயில் தேனாஉ இனிப்பதைத்தான் கூறியிருக்கிறேன் வேறு பெரிய விஷயமில்லை...நீரை நாம் நேரடியாக குடிப்பதற்க்கும் ஒரு தாவரத்திற்க்கு உயிராய் இருந்தபின் அதை குடிப்பதற்க்கும் இருக்கும் வித்தியாசம் இனிப்பு...அம்புட்டுத்தேன்...இதுக்கு முகிலன் எல்லாம் கூப்பிட வேண்டாமே அவரு பாட்டுல அவரு வேலைய பாக்கட்டும்...
சீமான்கனி மாப்பி நன்றிடா விளக்கம் போட்டாச்சு நீ சொன்னது சரியான்னு பாத்துக்கடி...
நீச்சல் காரன் தல என்னிக்காவது ஒண்ணு இப்பிடி எழுதுறதும் பொருக்கவில்லையா கவிஞரே உமக்கு? நன்றி
நசர் யார் அவங்க?
அகிலா மேடம் :))))
கயலு எழுதிடுவோம்த்தா...அடுத்த போஸ்ட் படிச்சுட்டு இல்லாட்டி பாத்துட்டு காதுல ரெத்தம் வந்து அழக்கூடாது ஆமா சொல்லிட்டேன்..
சாந்தினி மேடம் நன்றிங்க..
புலிகேசியார் நன்றிங்க
ராமலக்ஷ்மி மேடம் விளக்க உரை போட்டாச்சு
எல் போர்ட் சாந்தினி விளக்கம் புரிஞ்சதுன்னா சந்தோஷம்...நன்றிப்பா
கருணாகரசு இப்போ சொல்லலாமே...
திவ்யா அவருபாட்டுல இருக்காரு அவர எதுக்கு வம்புக்கு இழுக்குறீங்க பாருங்க எப்பிடி தப்பிச்சு ஓடிட்டாருன்னு...
அருணா பிரின்ஸ் :))))
சைவ கொத்து பரோட்டா நன்றிப்பா
தமிழரசி நன்றி
அசோக் அண்ணா உங்களுக்கே ஓவரா தெரில ரொம்பவும் தன்னடக்கம் தான்...நன்றிண்ணா
அக்பர் :))
ஹேமா நன்றிப்பா :)
பாலாசி அந்த போட்டோ என்னை குறிக்குது...
தமிழுதயம் ரமேஷ் நன்றி
ஜமாலண்ணா நன்றிண்ணா :)
ஸாதிகா நன்றி சகோ
மாதேவி மேடம் நன்றி
ஷங்கர் :)))
அமைதிச்சாரல் நன்றி மேடம்
முகிலன் :)))
கலா ஹேமா மெயில் பண்ணுனாளா நாந்தான் தப்பா வேற யாரோ போட்டோ பாத்துட்டு நீங்கதான்னு சொல்லி நீங்க பெந்தான்னு நம்பிக்கை வரவச்சேன் பிற்பாடுதான் தங்களுக்கு மெயில் அனுப்பியிருக்கா சரியா? நானும் ஏப்ரல் 5 ஊருக்கு போறேனே...
என்னகேட்கணும்?
வசந்த் போட்டோ பற்றிக் கேட்கத்தான்
எழுதியிருந்தேன். உங்கள் உதவிக்கு நன்றி
ஹேமா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்
நானும் அனுப்பிவிட்டேன் உங்களுக்கும் ஒன்று
{போவேட்} செய்யச் சொல்லியுள்ளேன்,
அவருக்கு நேரமிருக்குமோ தெரியாது
இன்னும் கொஞ்சநாட்கள் இருக்கின்றது
நீங்கள் ஊர் போக....நன்றி
உங்களூரில் இருப்பவைகளெல்லாம்.....
கவிதை வடித்தால் நாங்கள் மை போட்டுப்
பார்த்துதான் பின்னோட்டம் இடவேண்டும்,
என்ன!! ஹேமாவின் காற்று வீசுகின்றதா?
கோனார் நோட்ஸ் மாதிரி கீழ விளக்கம் தந்த பிறகு கமெண்ட் எழுதறது வேஸ்ட்டோ ...
நீர்.... கவிஞர்.
வசந்த்.. இன்னமுமே கவித புரியல.. ஆனா விளக்கத்தப் படிச்சதும், அதுவே அழகாயிருக்கு.. நல்ல சிந்தனை.. கற்பனை..
Post a Comment