March 20, 2010

பரிசல்காரனுடன் ஒரு நேர்காணல்

பதிவுலக பிரபல பதிவரும் எழுத்தாளருமான பரிசல்காரன் என்ற கே.பி.கிருஷ்ணகுமாரிடம் ப்ரியமுடன் தொலைக்காட்சிக்காக ஒரு ஈ மெயில் நேர் காணல்













1.பதிவுலகத்திற்க்கு வராமல் இருந்திருந்தால் ஓய்வு நேரத்தில் என்ன செய்து கொண்டிருந்திருப்பீர்கள்?

பரிசல் :ஃபோட்டோகிராஃபியில் இன்னும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்திருப்பேன். எழுத்து என்பதை இணையத்தில் இல்லாமல் வேறு வடிவங்களில் எழுதிக் கொண்டிருந்திருக்கக் கூடும். ஆனால் எந்த இதழ்களுக்கும் அனுப்பியிருக்க மாட்டேன்.

2.நீங்கள் பதிவுலகத்தில் நுழைந்த பொழுது பதிவுலகம் இருந்த நிலைக்கும் இன்றைய பதிவுலக நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

பரிசல் :இதற்கு பதில் சொல்லும் அளவுக்கு தற்போதைய வலையுலகை கூர்ந்து கவனிக்க வில்லை என்பதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன்.

3.தங்களின் பதிவுக்கு முக்கியமான ஒருத்தர் இன்றுவரை வந்து பின்னூட்டம் இடவில்லையென்று வருந்தியது உண்டா?

பரிசல் :நிச்சயமாக இல்லை. தொடர்ந்து பின்னூட்டம் போடும் சில நண்பர்கள் பின்னூட்டங்கள் சடாரென நிற்கும் போது அப்படி நினைப்பதுண்டு. அதுவும் கடந்து போகும்.


4.ஒவ்வொரு பதிவுக்குமான கரு தங்களுக்கு எப்பொழுது தோன்றும்?

பரிசல் :அதிகாலை நான்கிலிருந்து நாலேமுக்காலுக்குள் என்று சொல்ல ஆசைதான்! ஆனால் அப்படியெந்த நேரமுமே இல்லை. பிராயணங்களின் போதும், மனதுக்கொத்த நண்பர்களுடன் இருக்கும்போதும் சற்று அதிகமான உற்சாகமாய் எழுத்து மனதிற்குள் ஓடும். ஸ்ரீரங்கம் பற்றிய கட்டுரையை திருச்சியிலிருந்து திரும்பி வந்தபிறகு, கேரளா செல்லும்போது இரயிலில் அப்பர்பெர்த்தில் அமர்ந்தபடியே எழுதினேன்.

5.ஒரு சென்சிட்டிவான பதிவெழுதி பதிவிலிட்டதும் அதற்காக வரும் மற்றவர்களின் எதிர் கருத்துக்காக காம்ப்ரமைஸ் செய்து கொள்வீர்களா? இல்லை கோபம் வருமா? இல்லை கண்டு கொள்ளமாட்டீர்களா?
பரிசல் :மூன்றுமே நிகழ்ந்திருக்கிறது வசந்த். அதிகப்படியாய் காம்ப்ரமைஸ் செய்து கொள்வேன். அதற்கடுத்ததாய் கண்டு கொள்ளாத தருணங்கள். கோவம் வந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டேன். ஒரு சில நண்பர்களின் அழைப்பில் அது அழிந்துவிடும்.

6.பதிவெழுத பிடிக்குமா? பதிவுகளை வாசிக்க பிடிக்குமா?

பரிசல் :நேர்மையாகச் சொல்வதானால் எழுதத்தான் பிடிக்கும். படிப்பதென்றால் புத்தக வடிவில்தான். பெங்களூரில் ஆடிட்டராகப் பணிபுரியும் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது ‘எல்லாரும் சிஸ்டத்துலயே டிக் அடிச்சு அக்கவுண்ட்ஸ் சரி பார்க்கறாங்க. எனக்கு ப்ரிண்ட் அவுட் எடுத்து டேபிள்ல வெச்சு பேனால டிக் அடிச்சுப் பார்க்கறதுதான் பிடிக்குது’ என்றார். நான் அவர் ஜாதி. யாராவது இணையத்தில் வந்த ஒரு குறிப்பிட்ட பதிவை/படைப்பைச் சுட்டி கொடுத்துப் படிக்கச் சொன்னால் மேக்ஸிமம் ப்ரிண்ட் அவுட் எடுத்து வீட்டில் அமைதியாகப் படித்து ரசிப்பேன். யாராவது அவர்கள் படைப்பைப் படித்துக் கருத்துக் கேட்டாலும் அதே.

7.தங்கள் சம கால அளவில் பதிவுலகில் நுழைந்த பல பதிவர்கள் காணாமல் போய்விட்டனரே ஏன்?

பரிசல் :நானே அடிக்கடி காணாமல் போய்விடுகிறேனே... என்னைக் கேட்டால்? பதிவுலகின் ஆரம்ப போதை கடந்து, தொடர்ந்து நீங்கள் கவனிக்கும் விஷயங்களை எழுத தீராத வெறி இருக்க வேண்டும். இல்லாமல் போவதே காரணம் என்று நினைக்கிறேன்.

8.தங்கள் சம கால பதிவர்கள் தவிர்த்து தற்பொழுது இருக்கும் பதிவுலகில் நிறைய புதியவர்கள் எழுதுகின்றனர் அவர்களில் தாங்கள் வியந்த பதிவர்கள் யார்? (எல்லோரும் என்று கூறி தப்பித்து கொள்ளகூடாது) ஏன் பிடிக்கும் அவர்களை?

பரிசல் :முந்தைய பதில்கல்ளை ஒருமுறை படித்துப் பார்த்தேன். அநியாயத்திற்கு தலைக்கனத்தின் உச்சியில் இருப்பவன் சொல்லும் பதில்களாகவே தெரிகிறது. இந்த லட்சணத்தில் இந்தக் கேள்விக்கு அப்படி யாரையும் சட்டெனச் சொல்ல முடியாத என்னை எதால் அடிக்கலாம்? பதிவுலகம் என்று வரும்போது புதியவர்கள் என்று யாருடைய பதிவையும் ரெகுலராக நான் படிக்காததே இதற்குக் காரணம். எப்போதாவது வலை மேயும் போது சிலவற்றைப் படிப்பதும், நண்பர்களின் மின்னஞ்சல் மூலம் சிலவற்றைப் படிப்பதுமாகவே கழிகிறது.

9.ஏண்டா பதிவுலகம் வந்தோம் என்று என்றாவது எண்ணியதுண்டா?

பரிசல் :உண்டு. வீண் சர்ர்சைகளில் வேண்டுமென்றே தாக்குறும்போது. ஆனால் அந்த நினைப்பின் ஆயுள் மிகக் மிகக் கம்மி.

10.பதிவுலகம் ஒரு போதை என்ற பெரும்பான்மையானோரின் கருத்துக்கு தங்களின் பதில் என்ன?
பரிசல் :ஆரம்பத்தில். போகப் போக சரியாக விடும். தவிரவும் போதை என்பது தவறு என்ற பொதுப்புத்தியை நான் மறுக்கிறேன்.

11.கவிதை,நகைச்சுவை,கதை,சமூகம்,விளையாட்டு என்று சுவாரஸ்யமாக பதிவெழுதி வரும் தங்களுக்கு பதிவுலகத்திலே இதுவரை யாரும் எழுதாத ஒரு புது விஷயம் எழுத வேண்டும் என்ற ஆசையுண்டா?அப்படியாயின் அதைப்பற்றி சில வார்த்தைகள்
பரிசல் :இதுவரை எழுதாத புது விஷயம் என்ற ஒன்று இருப்பதாகவே எனக்குத் தோன்றவில்லை. எழுதப் படாத கோணம் என்று வேண்டுமானால் இருக்கலாம். அப்படிச் சொல்வதானால் கனவில் வரும் ஒரு ’எனக்கும்’, எனக்குமான உரையாடல் ஒன்று நெடு நாட்களாக நடந்து கொண்டே இருக்கிறது. அதிகாலை நேரத்தில் அது நிகழ்கிறது. குறிப்பெடுக்க முடியாமல் தவிக்கிறேன். விடிந்ததும் கலைந்து விடுகிறது.

12.பொதுவாக தங்களின் நண்பர்களின் பதிவுக்கு மட்டும் சென்று பின்னூட்டமிடுகிறீர்கள் புதிய பதிவர்களின் பதிவுக்கு சென்று பின்னூட்டம் இடுவதில்லை என்ற தங்களின் மீது இருக்கும் குற்றச்சாட்டிற்க்கு நேரமில்லை என்பதை தவிர்த்து தங்களின் பதில் என்ன?
பரிசல் :நேர்மையாக நான் சொல்ல விரும்பும் ஒரு பதிலை சொல்லாதே என்று தடுப்பது வன்முறையல்லவா வசந்த்?

13.தாங்கள் எழுதிய பதிவு போலவே அதாவது தங்கள் ஸ்டைலில் வேறொருவரும் அதே போன்ற பதிவு எழுதியிருப்பதாக எண்ணியதுண்டா?அப்படியிருந்தால் அந்த பதிவு பற்றி கூறவும்...

பரிசல் :எனக்கு என்று ஒரு ஸ்டைல் இருப்பதாக நம்பும் உங்கள் வெகுளித் தனத்துக்கு என் புன்னகையைப் பரிசாக அளிக்கிறேன்.

14.பதிவுலகம் வந்தபிறகு தங்களுக்கு நடந்த நன்மை தீமைகள் பற்றி சிறு குறிப்பு...

பரிசல் :தீமைகள் ஒன்றும் பெரிய அளவில் இல்லை. நன்மைகளைச் சொன்னால் நேரமும் இடமும் போதாது என்ற க்ளிஷே பதில்தான்.

15.ஃபாலோவர் விட்ஜெட்டும் ஹிட் கவுண்டரும் இல்லாமல் உங்களால் தொடர்ந்து பதிவெழுத முடியுமா? முடியாதென்றால் ஏன் என்று விளக்கவும்...

பரிசல் :முடியும். ஒரு கட்டத்துக்கு மேல் அவை தேவையிருப்பதில்லை.

16.தற்பொழுது இருக்கும் பதிவுலகம் ஆரோக்கியமாக இருக்கிறதா?

பரிசல் :ஆம். தவிரவும் இது மாதிரியான ஒப்புமைகள் தேவையற்றது என்றே நினைக்கிறேன். நான் எழுத வந்த காலகட்டத்தில் (நானெல்லாம் இப்படிப் பேசற அளவுக்கு ஆய்டுச்சு! ஹூம்!) என்னையும், என்னுடம் எழுதும் சில நண்பர்களையும் குறிப்பிட்டு ‘நீங்க வந்தப்பறம்தான் ப்ளாக் சண்டை சச்சரவெல்லாம் இல்லாம செமயா போய்ட்டிருக்கு’ என்று சிலர் குறிப்பிட்டதுண்டு.

17.தாங்கள் எழுதிய முதல் புத்தகத்தின் அச்சில் தங்கள் பெயரை முதல் முதல் பார்த்த பொழுது தங்கள் மனநிலை எப்படியிருந்தது?

பரிசல் :பெரிதாக எந்த உணர்ச்சியும் இருக்க வில்லை. எனது முதல் சிறுகதை ஒரு மாத நாவலில் வெளியான போது பேருந்து நிலையத்தின் நடுவில் ஒரு கடையில் அதைப் பார்த்தபோது அடைந்த மகிழ்ச்சி இன்று வரை திரும்பக் கிடைக்கவில்லை. அதற்காக இதெல்லாம் எனக்கு ஜூஜூபி என்று எண்ண வேண்டாம். என்னவோ... அது அப்படித்தான்.

18.தொடர்ந்து எந்த ஒரு லாப நோக்கும் இல்லாமல் முற்றிலும் பதிவர்களுக்காகவே இயங்கும் தமிழ்மணத்தினை பற்றி சில வார்த்தைகளும் தமிழ்மணத்தை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து சென்று ஒரு இணைய பத்திரிக்கை போல் செயல் படுத்தலாம் என்ற கருத்துக்கு தங்களின் பதில்...

பரிசல் :நல்ல விஷயம். செய்யலாம். தமிழ்மணம் என்ற திரட்டி இல்லையென்றால் என்னைப் போன்றவர்கள் எல்லாரிடமும் சென்று சேர்வது வெகு நாட்களெடுக்கும் என்பதை மறுக்கவியலாது.


19.வாரிசு அரசியல் , வாரிசு சினிமா போன்றே தங்களுக்கு அடுத்து தங்கள் வாரிசுகளை பதிவுலகத்தில் நுழைக்கும் எண்ணம் இருக்கிறதா?

பரிசல் :நுழைக்கும் எண்ணமெல்லாம் இல்லை. எழுத்தில் அவர்களுக்காக ஆர்வமிருந்தால் வர உதவுவேன். மற்றபடி விளம்பரத் துறையில் என் வாரிசுகள் ஜொலிக்க வேண்டும் என்பது என் உள்மன அவா. அதையும் திணிக்கும் எண்ணமில்லை.

20.ரொம்ப நாளாக எழுதவேண்டும் என்று நினைத்து இன்று வரை எழுதாமலே இருக்கும் பதிவு என்று ஒன்று இருக்கிறதா?

பரிசல் :ம்ம்ம்ம்.. அப்படி ஏதும் இல்லை.

21.தங்களுக்கு போட்டி பதிவர் யாரென்று காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் பதிலளிக்கவும்

பரிசல் :சாரு நிவேதிதா.


22.பரிசல்காரன் என்ற பெயர் பதிவுலகில் மட்டுமா இல்லை நடைமுறையிலும் அந்த பெயரே நீடிக்கிறதா?

பரிசல் :பதிவுலக நண்பர்கள் அழைக்கும்போது பரிசல் என்றே அழைக்கின்றனர்.

இவரோட பெயர் காரணம் இதுதான் இவருடைய திருமண நாளுக்கு நான் கிரியேட் செய்தது பெயர் காரணம் சரியா? மேகா ,மீரா என்ற குழந்தைகள் உமா என்ற மனைவியுடன் எவ்வளவுஅழகாக வாழ்க்கையை நடத்தி செல்கிறார்...



23.கணினியில் எழுதப்பழகியபின் காகிதத்தில் எழுதுவது குறைந்துவிட்டதா?

பரிசல் :ஆம். அதுமட்டுமில்லாமல் காகிதத்தில் எழுதும்போது என்னாலேயே படிக்க முடியாத அளவு எழுத்து மோசமானதாக மாறிவிட்டிருக்கிறது..


24.இன்னும் சில ஆண்டுகள் கழித்து பதிவுலகம் எப்படியிருக்கும்?

பரிசல் :‘அப்போதெல்லாம் கணினியைத் திறந்து யோசித்து யோசித்து எழுதி அதைத் திரையில் பார்த்து மகிழ்ந்து அனுப்பி பிரசுரித்து.. இப்போது நான் நினைப்பது நினைத்து முடிக்குமுன் எழுத்தில் வருகிறது. அதிலிருந்த உணர்வு இதிலில்லை’ என்று. மாற்றங்களால் ஆனது உலகு.இன்னும் எத்தனை காலத்திற்குதான் அம்மியில் அரைத்த சுகம் மிக்ஸியில் இல்லை, ஆக்கிப்போடும் சாப்பாட்டுச் சுவை OVEN சமையலில் இல்லை என்றெல்லாம் புலம்பப் போகிறாய்? அவை எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை இனி நீ அவற்றைத் தவிர்க்கவியலாதென்பதும்.அதே கடல் . வேறு அலைகள். அதே நிலா. அதே வானம். வேறு விமானங்கள். அதே பாதை. வேறு வேறு வாகனங்கள். எல்லாவற்றையும் எப்போதும் எல்லாரும் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பா..எல்லாவற்றையும் ஏற்கத்துவங்கு. புன்னகை தானாய் வரும். எல்லாம் மாறும்.இதே போல்தான் பதிவுலகமும் மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாம் மாறும்....

25.புதிதாக எழுத வரும் பதிவர்களுக்கு தங்களின் அறிவுரை என்ன?

பரிசல் :புதியவர்கள் என்னுடைய இந்த பதிவை படிக்கவும்


இதுவரையிலும் நெருக்கடியான நேரமின்மையிலும் பொறுமையாகவும் சுவாரஸ்யமாகவும் பதில்கள் அளித்த பரிசல்காரன் அவர்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொண்டு அடுத்ததாக அய்யனார் கம்மா ஹீரோவிடம் பேட்டி எடுக்க பிரியமுடன் குழுவினர் செல்ல இருப்பதால் பொறுமையாக பேட்டியினை ரசித்த அனைவருக்கும் நன்றியினை கூறி விடை பெற்று கொள்வது உங்கள் வசந்த்




37 comments:

இராகவன் நைஜிரியா said...

மிக அழகான கேள்விகள்... அழகான பதில்கள்.

வசந்த் ஹாட்ஸ் ஆஃப் டு யூ..

Anonymous said...

//எனக்கு என்று ஒரு ஸ்டைல் இருப்பதாக நம்பும் உங்கள் வெகுளித் தனத்துக்கு என் புன்னகையைப் பரிசாக அளிக்கிறேன்//

நிச்சயம் உங்களுக்கு என்று ஒரு பாணி இருக்கிறது பரிசல். நல்ல Matured பதில்கள். ரசித்தேன்

நீச்சல்காரன் said...

நல்ல சந்திப்பு.

பிரியமுடன் தொலைக்காட்சிக்கு ஒரு வேண்டுகோள் முடிந்தால் அடுத்த சந்திப்புக்களில் இந்த கேள்வியையும் சேர்த்துக்கொள்ளவும்.
"பதிவுலக தற்போதைய சுழலில் தவிர்கவேண்டியது எது?"

பா.ராஜாராம் said...

மிக சுவராசியம் வசந்த்,பரிசல்!

Chitra said...

Good interview! :-)

நட்புடன் ஜமால் said...

சுவாரஸ்யமாக இருக்கு வசந்த்.

பரிசலுக்கு திருமண வாழ்த்துகள் (ரொம்ப லேட்டோ ...)

சுசி said...

பதில் சொன்ன பரிசல்காரனுக்கும், சொல்ல வைத்த உ.பி க்கும் வாழ்த்துக்கள் :))))

மேவி... said...

நல்ல கேள்வி. நல்ல பதில்

நான் எஸ்ரா, சாரு, ஜெயமோகன் அவர்களின் பின்னூட்டங்களை தான் ரொம்ப எதிர்பார்ப்பேன்

Kala said...

பேட்டி எடுத்தவர்கும்,கொடுத்தவர்கும்
நன்றி சில,... தகவல்களை அறிய
முடிந்ததற்கும் நன்றி

iniyavan said...

வஸந்த்,

பேட்டி அருமையா இருக்கு. உண்மையிலேயே பரிசலை பேட்டி எடுத்தீங்களா????

iniyavan said...

வஸந்த்,

பேட்டி அருமையா இருக்கு. உண்மையிலேயே பரிசலை பேட்டி எடுத்தீங்களா????

sathishsangkavi.blogspot.com said...

அழகான கேள்விகள்... அழகான பதில்கள்.

Jawahar said...

பரிசலின் பதில்கள் படு சுவாரஸ்யம். பாசாங்கு இல்லாத பதில்கள் என்பது உபரிச் சிறப்பு.

சுவாரஸ்யமான பதில்களை வரவழைக்க சரியான கேள்விகள் கேட்க வேண்டும். அந்தத் திறமை உங்களுக்கு இருக்கிறது.

பாராட்டுக்கள்.

http://kgjawarlal.wordpress.com

cheena (சீனா) said...

அன்பின் வசந்த்

அருமையான கேள்விகளும் பதில்களும் - பரிசல் பொறுமையாகப் பதில் அளித்திருக்கிறார். இருவருக்கும் நல்வாழ்த்துகள்

Cable சங்கர் said...

நல்ல கேள்விகளும் பதிலும். வாழ்த்துக்கள்

Anonymous said...

பதில்கள் பவ்வியமாய்...படங்கள் வசந்துக்கே உரிய பாணியில்...தங்கள்
தொ(ல்)லைக்காட்சியில் இடம் பெறும் வேறு சில நிகழ்ச்சிகள் என்ன வசந்த்?

Subankan said...

சுவாரஸ்யமான பதில்கள். ரசித்தேன் :)))

Unknown said...

கேள்விகள் அருமை..

பதில்களும்..

எறும்பு said...

//21.தங்களுக்கு போட்டி பதிவர் யாரென்று காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் பதிலளிக்கவும்

பரிசல் :சாரு நிவேதிதா.//

சந்தடி சாக்கில் சாருவை பதிவர் லிஸ்டில் சேர்த்த குசும்பை ரசித்தேன்..

:)

அன்புடன் அருணா said...

கொஸ்டியன் பேப்பர் சூப்பர்!

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாயிருந்துச்சுங்க நேர்காணல்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல சந்திப்பு.

கண்ணா.. said...

உங்களை பேட்டி எடுக்க வேண்டும் அப்பாய்ண்மெண்ட் கிடைக்குமா..?

(நிங்களே கேள்வியையும் பதிலையும் எழுதி என் மெயிலுக்கு அனுப்பிடுங்க.. எனக்கு டைப் பண்ணுற வேலை மிச்சம்)


இப்படிக்கு

நோகாமல் நொங்கு தின்போர் சங்கம்
அமீரகம்

ஸ்ரீராம். said...

இந்த புதிய முயற்சி நல்லா இருக்கு வசந்த். ஸ்டீரியோ டைப் கேள்விகள் தவிர்த்து ஒவ்வொருவரிடமும் வித்யாசமாக கேட்கவும்

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))

Menaga Sathia said...

கலக்கல் வசந்த்!! பரிசலுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!!

வினோத் கெளதம் said...

Very Nice..;)

ராமலக்ஷ்மி said...

பேட்டி வெகு அருமை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்லா இருந்தது வசந்த் :)

Prasanna said...

Very interesting Vasanth..

பரிசல்காரன் said...

நன்றி வசந்த். என் திருமண நாளான ஆகஸ்ட் 22 அன்றைக்கு நீங்கள் போட்ட புகைப்படம் அது. இன்றைக்கு என் திருமண நாள் என்று நினைத்துக்கொண்டு வாழ்த்தும் நண்பர்களுக்கும் நன்றி!

வால்பையன் said...

எல்லாம் ஒகே, சாருவுக்கு பரிசலிடம் போட்டி போடும் தகுதி உண்டான்னு தான் தெரியல!

வால்பையன் said...

எல்லாம் ஒகே, சாருவுக்கு பரிசலிடம் போட்டி போடும் தகுதி உண்டான்னு தான் தெரியல!

Thenammai Lakshmanan said...

வசந்த ஒரு நல்ல நிருபர்னு நிரூபிச்சுட்டீங்க ..கேள்வி பதிகள் அருமை

வாழ்த்துக்கள் பரிசல்

Unknown said...

கொஞ்சம் புதுசா நல்லாருக்குங்க..

விக்னேஷ்வரி said...

நேர்த்தியான கேள்விகளும் பதில்களும்.

CS. Mohan Kumar said...

Very good questions; Nice replies. Thanks Vasanth