தஞ்சாவூர்லயே பொறந்து உருண்டு தவழ்ந்த நம்ம ஹீரோ சென்னைக்கு போகணும்ன்னு ஆசைபடுறாருங்க அவரு ஆசைப்பட்டது மாதிரியே அவர பெத்தவங்க அவர சென்னைக்கு போற ஒரு லாரியில ஏத்தி அனுப்பிவைக்குறாங்க...
இதே கால நேரத்துல காட்டுமன்னார்குடியில பொறந்த ஹீரோயின் ம்ம் இவ ரொம்ப அடக்கமான குடும்பத்தில பொறந்தவ முகத்தை கூட வெளியில காட்டாத உடுப்பு அதாங்க பர்தா போட்ட கவுரவமான குடும்பத்தில பொறந்தவ அவளும் படிப்புக்காக சென்னைக்கு பஸ்ல போறா.சென்னையில அவளுக்கு தெரிஞ்சவங்க வீட்ல இருந்து தங்கிப்படிக்குறா சரியா...
ஹீரோவும் அதே வீட்ல ஒரு மூலையில இருக்குற ரூம்ல வாடகைக்கு தங்கியிருந்து வெட்டியா வேலை தேடிட்டு இருக்காரு..ஹீரோவும் ஹீரோயினும் ஒருத்தர் ஒருத்தர் பார்க்காத வரைக்கும் ரெண்டுபேரு வாழ்க்கையும் நல்லாத்தாங்க போயிட்டு இருந்துச்சு.ஒரு நாள் ஏதேச்சையா நம்ம ஹீரோவை ஹீரோயின் பார்க்குற சந்தர்ப்பம் கிடைக்க ஹீரோவும் இவளைப்பாக்குறார் என்னதான் ஹீரோயின் பர்தா போட்ருந்தாலும் அவளோட கண்ணு ஹீரோவை பதம் பார்த்திடுது.காதலுக்கு கண்ணுதானுங்க முக்கியம்...
இப்பிடியே ஹீரோ ஹீரோயினை பார்க்க ஹீரோயின் ஹீரோவைப்பார்க்கன்னு போயிட்டு இருந்துச்சு ஒரு நாளு ஹீரோயினோட முகத்தை எப்படியாச்சும் பார்த்துடணும்ன்ற வெறியில ஹீரோயின் குளிக்கிற பாத்ரூம்ல போய் ஹீரோ எட்டிப்பார்க்க போக அந்த டைம் பார்த்து ஹீரோவையும் ஹீரோயினையும் அந்த வீட்டு ஓனரு கையும் களவுமா பிடிச்சுட்டாங்க..
இவங்க ரெண்டுபேருக்கும் தண்டனை குடுக்கணும்ன்னு நினைச்ச வீட்டு ஓனரு ரெண்டு பேரு வீட்டுக்கும் போன் பேசுறார் அவங்க அவங்க வீட்டுல ரெண்டுபேரையும் சுட்டுப்பொசுக்கிட சொல்றாங்க அதனால வீட்டு ஓனரு கொஞ்சம் சைக்கோன்றதால ஹீரோவையும் ஹீரோயினையும் தனித்தனியா மாடியில இருக்குற தண்ணி தொட்டியில கட்டிப்போடுறார் அந்த ரெண்டு தொட்டியையும் ஃபுல்லா தண்ணிய ஊத்தி ரெண்டு பேரையும் தண்ணிக்குள்ளாறயே ஒரு ஃபுல் நைட் வச்சுருக்கார் காலையில ரெண்டு பேரையும் தண்ணித்தொட்டியில இருந்து ரிலீஸ் பண்ணி அந்த வீட்டுல இருக்குற ஒரு ரூம்ல ஒண்ணா சேர்த்து தள்ளிவிட்டுறார்...
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் ஒரே குஷி ரெண்டு பேரையும் ஒண்ணா ஒரே ரூம்ல அடைச்சுட்டாங்கன்னு அப்போ தட தடன்னு உலகமே கிறுகிறுன்னு சுத்துறமாதிரி ரெண்டுபேருக்கும் ஒரு ஃபீல் ஒருமணி நேரங்கழிச்சுபார்த்தா ரெண்டுபேரும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிடுறாங்க பிரிக்கவே முடியாத அளவுக்கு இவங்களோட இந்த நிலைய பார்த்த வீட்டு ஓனரு பரிதாபப்பட்டு போனா போயிட்டு போகுது ஒரு நைட் இப்பிடியே இருக்கட்டும்ன்னு விட்டுடறார்...
காலையில ஹீரோவும் ஹீரோயினும் என்ன செய்றாங்கன்னு பார்க்கப்போன வீட்டு ஓனருக்கு அதிர்ச்சி ரெண்டுபேரும் செத்துபோயிடுறாங்க அதுக்கு சாட்சியா ஒரு ஸ்மெல் வேற அடிச்சதா அதுக்கு மேலயும் ரெண்டுபேரையும் வச்சுருக்கமுடியாதுன்னு இவங்களை என்ன செய்யலாமுன்னு பார்த்த ஓனரு ஹீரோ ஹீரோயின் வீட்ல சொன்ன மாதிரியே ரெண்டு பேரையும் அவரு ஆசைப்பட்டமாதிரியே நெய் ஊத்தி தோசையா சுட்டு சாப்ட்றாருங்க...ஒரு ஹீரோ ஹீரோயினோட காதல் கதை இப்படியாக சோகமா முடிஞ்சுடுதுங்க....காதல்னாலே சோகம்தான்றது மனுசருக்கு மட்டுமா அரிசிக்கும் உளுந்துக்கும் கூட அப்டித்தான் போல....இது தோசைக்கு எழுதுன உணவு விமர்சனம்ங்க....
மீண்டும் வேறொரு உணவு விமர்சனத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெற்றுகொள்கிறேன்...
25 comments:
வசந்த் நான் பாதி படிக்கும் போதே
தோசையாய்த் தான் இருக்குமென்று
நினைத்தேன் என் நினைப்பு கடைசியில்
சரியாகி விட்டது.
நீங்கதான் எனக்கு நன்றி சொல்ல
வேண்டும் கண்டுபிடித்ததற்கு!!
உம்உம்ம்மம்ம..நல்ல சிந்தனை
நன்றி
அதுசரி உங்களுக்கு இன்னும்
கண் கண்ணில .....
தோசை மட்டும் சுட்டா எப்படி கொஞ்சம் சட்னி சாம்பார் வேண்டாம்..அதாங்க நம்ம நண்பர் பட்டாளம்
சைக்கோ கத :) நல்ல கற்பனை!!
மாவு அரைச்ச "விதம்" ஜூப்பரு.
//*தஞ்சாவூர்ல பொறந்த ஹீரோவும் சிதம்பரம் காட்டு மன்னார்குடியில பொறந்த ஹீரோயினும்*//
அட போங்க... நான் நெஜ கதைனு நம்பிட்டேன்...
பெரிய அரசியல் வாதியா வருவீங்க வசந்த் :)
ஹஹ்ஹ்ஹா இவ்ளோ மட்டமாவா ஒருத்தன் படம் எடுப்பான்னு நினைச்சி படிச்சேன்....வசந்த் உன்னை திருத்தவே முடியாது....அடுத்த மாசம் இந்த பக்கம் வரல்ல வா சொல்றேன்...
இந்த ஆண்டின் சிறந்த விமர்சனம்
பரிசாக வசந்துக்கு ரெண்டு தோசை பார்சல்.
எப்படி இப்படீ...லாம். முடியல :(
mudiyala vasanth muthalla naan poi thosai saapptu vanthu unkalai kavanichukiren
உங்கள் தமிழ் சேவையை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. இங்க வந்து வாங்கிக்கோங்க
http://kavippakam.blogspot.com/2010/03/blog-post_24.html
வஸந்த்,
இதை ஒரு ஹாபிட்டாவே நீ பாலோ பண்றே! இதெல்லாம் ஒரு பொழப்பா? ஹய்யோ ஹய்யோ!
ahaaaaaaaaaaaaaaaaaa...............
ஆஹா வசந்த்...ஆரம்பத்தில் படிக்கும்போது நிஜகாதல் கதைன்னு நினைச்சு படித்தேன்.பாதி படிக்கும் போது தோசை உணவு விமர்சனம்ன்னு நினைத்தேன்.நல்லாயிருக்கு.உங்களால் மட்டுமே இப்படிலாம் எழுதமுடியும்...
நல்லா சுடுராங்கயா தோசைய.... மாப்பி உன்னால மட்டும்தே இப்டி புதுசு புதுசா மாவோரைக்க முடியும்...நல்ல கலக்கி இருக்க மாப்பி...தொடரட்டும்...
ஸ்ஸ்ஸ்ஸ் ,,,,,,,அப்பாடா முடியல,,,
உணவு விமர்சனம்.. மீண்டும் ஒரு வித்தியாசமான பதிவு வசந்த்.. நல்லா இருக்கு..
இப்படி சுட்டுப் புட்டீங்களே...அநியாயம்தான்.
நல்லாயிருங்குங்க....
:-)
// என்னதான் ஹீரோயின் பர்தா போட்ருந்தாலும் அவளோட கண்ணு ஹீரோவை பதம் பார்த்திடுது.//
இது தான் வசந்த்.
//சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெற்றுகொள்கிறேன்...//
ஒரு எழுத்து டைப்பும்போது மிஸ் ஆயிடுச்சுப்பா..
அங்க ல் வந்திருக்கணும்.
அவ்வ்வ்வ்வ்வ்..
ஏன் இப்டில்லாம் யோசிக்கிறீங்க..
ஆவ்வ்வ்வ்வ்வ்..
ha,ha,ha,ha.....
next idiyaappam recipe?
kala எம்புட்டு அறிவு உங்களுக்கு மிக்க நன்றி பாட்டீய்ய்ய்ய்ய்ய்ய்ய்
பிரின்ஸ் ராஜன் நன்றி பாஸ் சாம்பாரும் சட்னியா? அதுவுங்கூட முன்னாடியே எழுதியாச்சு தல...
சந்தானா நன்றிங்க :)
சைவ கொத்துபரோட்டா நன்றிங்க
ராம் ஹா ஹா ஹா நன்றிங்க
ஜமால் அண்ணா நாடுதாங்காதுண்ணா..
தமிழரசியாரே ம்ம் திருந்தாத கேஸேதான்... நன்றித்தா...
மாஹாராஜன் நன்றிங்க
கவி :)
ரமேஷ் :) நன்றி பாஸ்
அக்பர் நன்றி
கவி வாங்கியாச்சுப்பா நன்றி...
அநன்யா மிக்க சந்தோஷம் வெளிப்படையான விமர்சனம் எப்பவுமே உங்ககிட்ட இருந்து வருத்தம் கொஞ்சம் கூட இல்லை மகிழ்ச்சிதான்...ஒரு படைப்பாளியாக இதுபோன்ற விமர்சனங்கள் செம்மைபடுத்துகின்றன...
லாலி நன்றி தாயி
மேனகா மேடம் நன்றிங்க
சீமான்கனி நன்றிடா மாப்ள
சங்கர் நன்றி
திவ்யா டாங்ஸ்
ஸ்ரீராம் நன்றி பாஸ்
கயலு லொல் லொல் லொல்....
சுசிக்கா சாரிக்கா ம்ம் இனி இதுமாதிரி எழுதமாட்டேன்.....
thanks chitra
ஆரம்பம் முதல் அடி வரை ஒவ்வோர் எழுத்தும் காமெடி.
வசந்த்... தோசை காதல் சூப்பரா இருக்கு..
Post a Comment