June 13, 2010

தமிழ்த்தாய் வாழ்த்து ... ஒரு பார்வை....

நீர் நிறைந்த கடலெனும் ஆடையுடுத்திய நிலமெனும் பெண்ணுக்கு








அழகு மிளிரும்சிறப்பு நிறைந்த முகமாக திகழ்கிற இந்தியக் கண்டத்தில்





தென்னாடும்,

அதில்சிறந்த திராவிடர்களின் நல்ல திருநாடும்


பொருத்தமான பிறைபோன்ற நெற்றியாகவும்
அதிலிட்ட மணம்வீசும்திலகமாகவும் இருக்கின்றன.

அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல ...




அனைத்துலகமும் இன்பம்பெறும்வகையில்


எல்லாத்திசையிலும் புகழ் மணக்கும்படி இருந்த..இருக்கின்ற




பெருமை மிக்க தமிழ்ப்பெண்ணே! தமிழ்ப்பெண்ணே!
இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து


எங்கள் செயல்களை மறந்து உன்னை



வணங்குவோமே!




வணங்குவோமே!


வணங்குவோமே!
தமிழ்த்தாய் வாழ்த்து



நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! தமிழணங்கே!
உன் சீரிளமை திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!
- மனோண்மணீயம் பெ.சுந்தரனார்

47 comments:

சீமான்கனி said...

me the 1 st...

சீமான்கனி said...

அர்த்தமுடன் படமும் போட்டு கலக்கிடீங்க மாப்பி செம்மொழி மாநாட்டுக்கு தயாராவதுபோல் தெரியுது...வாழ்க தமிழ்...வளர்க நின் தொண்டு...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல கற்பனை .

Mahi_Granny said...

அருமையான பகிர்வு. தங்களின் டமில்/தமிழ் வாசித்து பின் பாராட்ட தவறி விட்டேன் எனவே இரண்டு பங்கு பாரட்டை பெற்று கொள்ளவும்

தாராபுரத்தான் said...

தொடக்கம்மா?

Chitra said...

தமிழுக்கு, தமிழில் படங்களுடன் விளக்கம்...... ஆஹா .... அசத்திட்டீங்க.... :-)

அன்புடன் நான் said...

அசத்தல்.

Unknown said...

கலக்குறீங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வசந்த் தமிழ் புலவரே மிக அருமை. கலக்கல். கிழி கிழி கிழி(குஷ்பூ வசனம்)

Unknown said...

மாப்ள ஒத்துகிறேன் இன்னிலேர்ந்து நீ புலவன்ரத ஒத்துகிறேன்..
கண்ணுல தண்ணி வருதுப்பா...

kavisiva said...

படங்களுடன் கூடிய விளக்கம் அருமை வசந்த். தொடரட்டும் தமிழ்ப் பணி

சௌந்தர் said...

கலக்கல் பதிவு...

நட்புடன் ஜமால் said...

அட!!!

வித்தியாசமான சிந்தனை

அருமை வசந்த் ...

நாடோடி said...

வித்தியாச‌மாக‌ இருக்கிற‌து வ‌ச‌ந்த்.... ப‌ட‌ங்க‌ளுட‌ன் த‌மிழ்தாய் வாழ்த்து அருமை..

dheva said...

Good One Boss ! Vaazthukkal!

ஆரூரன் விசுவநாதன் said...

நண்பா,

இந்த பாடலில் தமிழின் சிறப்பு எங்கே இருக்கின்றது.? முட்டாள்தனமாக நாம் பின்பற்றி வரும் பலவற்றுள் இதுவும் ஒன்று.

பண்டித நேரு அவர்கள், மத்திய பிரதேசம், ஆந்திரா, கேரளா கர்நாடகா, ஒரிசா, உள்ளிட்ட பகுதிகளை தக்கண பிரதேசம் என்று குறிப்பிட்டார். இன்று அப்படி ஒரு பகுதியை நம்மால் சொல்ல முடியாது.அதை நினைவில் கொண்டு தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடம் என்று எழுதிவிட்டார் ஆசிரியர்.

நாம் தான் திராவிடம், திராவிடம் என்று சொல்லுகிறோம். ஆந்திரரோ, மலையாளியோ, கன்னடரோ திராவிடத்தை ஏற்கின்றார்களா? இல்லையே......


தமிழின் சிறப்பைச் சொல்லாத ஒரு வாழ்த்து தமிழுக்கு எதற்கு?

simariba said...

படங்களுடன் தமிழ்த்தாய்க்கு வாழ்த்து! கடைசி இரு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை.. நல்லாயிருக்கு வசந்த்!

Paleo God said...

எப்படியோ தமிழை வணங்கறது ஒரு வெள்ளைக்கார குழந்தைதான்னு சொல்ற உள்குத்து எத்தனைபேருக்கு புரியுமோ?? :))

தமிழ் உதயம் said...

பாடல், படங்கள், உங்கள் கற்பனை அனைத்தும் சிறப்பு.

க.பாலாசி said...

நல்லாயிருக்குங்க வசந்த்...

விஸ்வாமித்திரன் said...

தங்கள் விளக்கம் நன்றாக இருந்தன. By the way தமிழில் ஆயிர கணக்கில் பாடல்கள் இருக்க "சென்சார்" செய்யப்பட இந்த பாடலை ஏன் வாழ்த்தாக வைத்தார்கள் - சத்தியமாக புரிய வில்லை. "ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா நின்" என்ற phrase தான் அவர்களை கவர்ந்து இருக்குமோ?

ஸாதிகா said...

படங்களை அழகாக செலக்ட் செய்து அருமையாக படைத்து இருக்கின்றீர்கள்.தமிழுக்கு தாங்கள் காட்டிய மரியதைக்கு ஒரு சல்யூட்.

ஜெய்லானி said...

டமில் வாள்க

டமிள் வளர்க

ஹி...ஹி... நம்ம குஷ்பாக்கா பாஷை யில கன்னி பேச்சு....

ராமலக்ஷ்மி said...

//அந்த திலகத்தில் இருந்து வரும் வாசனைபோல//

நிஜமாகவே குங்கமம் குவித்துவைக்கப்பட்ட தட்டுகளிலிருந்து வருகிறது வாசனை.

எப்போதும் போல படங்களை தேடிப் பிடித்திருக்கும் சிரத்தை பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் வசந்த்!

எனக்கு ரொம்பப் பிடித்த படம் தமிழ் அன்னையை வணங்கும் இங்கிலீஷ் பாப்பாதான்:)! யாதும் ஊரே யாவரும் கேளிர்!!!

ஹேமா said...

சிந்தனைச் சிறகு அடிச்சுப் பறக்குது.பாராட்டுகள் வசந்த்.

Unknown said...

ungal uzhaippirku thalai vanangukiren.
arumai miga arumai vaazhththukkal.
sukumar

Subankan said...

படங்களை வைத்துக் கதைபேசும் உங்கள் பதிவுகள் அனைத்துமே கலக்கல், இதுமட்டும் விதிவிலக்கா என்ன?

சுசி said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

இது கண்டிப்பா அழுகை கிடையாது வசந்து..

ஆ க..

ஆவ்வ்வ்வவ்வ்வ்வவ்..

Revathyrkrishnan said...

Tamil vaalga... Sorry nga mobile la irunthu ippadi thaan comment poda mudiyuthu

Menaga Sathia said...

excellent vasanth!!

ஸ்ரீராம். said...

தமிழுக்கு மரியாதை...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

அருமை வசந்த் .

Santhini said...

wow !! very good imagination!
seems like you can see what you think.

எட்வின் said...

அசத்துறீங்க தல. தமிழ் வணக்கம் இல்ல சல்யூட் ;)

பனித்துளி சங்கர் said...

பழம்பெரும் மொழியில் புதுமையான முயற்சி புகைப்படங்களும் மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி நண்பரே

Anonymous said...

அருமையான சிந்தனை! தமிழ் மொழிக்கு அழகான முறையில் மரியாதை! அசத்திடீங்க வசந்த்!

பிரேமி said...

செம்மொழி மாநாட்டிற்கு முன் நீங்கள் உங்கள் தமிழை மரியாதை செய்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாவை எங்களுக்கு நினைவு கூர்ந்தீர்கள். நன்றி.

Kala said...

நலமா வசந்த்?
அடேங்கப்பா...கற்பனா சக்தி
எங்கோ போகிறது
எனக்கும் கொஞ்சம் கடன்
கொடுக்கலாமில்ல...


ஊரில் இருக்கும் போது அதிகம்
வல்லாரைக் கீரை சாப்பிட்டீர்களோ!

ப்ரியமுடன் வசந்த் said...

சீமான்கனி நன்றி ஆமா ஃப்ளைட் டிக்கெட் எடுத்துகுடுக்கிறியா மாப்ள?

நண்டு சார் மிக்க நன்றி

மஹி சந்தோஷம் பெற்றுக்கொண்டேன் பாராட்டுகளை..

தாராபுரத்தான் ஐயா வந்தனம்

சித்ராம்மா மிக்க நன்றி

கருணா சார் நன்றி

கலா நேசன் ஆமாவா பாஸ் ம்ம்

ரமேஷ் அடப்ப்பாவி எதை எதோடலாம் லிங்குறாய்ங்க நான் என்னா பாவம் பண்ணுனேன்?

செந்தில் ஹா ஹா ஹா இதுக்கெல்லாம் அழுவுறியா மாப்பி இதுக்கு முன்னாடி நிறையபேரை அழவச்ச பெருமை எனக்கு இருக்கு தெரியாதோ நோக்கு எடுத்துக்காட்டு இந்தாபாரு இவங்க காதல்கதை படிச்சு மாப்ள.. இது படிச்சுட்டும் நீ அழுதா நீ மனுசனே இல்லை..
http://priyamudanvasanth.blogspot.com/2009/11/blog-post_18.html

கவி மிக்க நன்றிங்க

சவுந்தர் டாங்க்ஸ்

ஜமால் அண்ணா எல்லாம் உங்க உற்சாகம்தான் அண்ணா நன்றிங்ண்ணா..

நாடோடி நண்பா ம் மிக்க நன்றி..

தேவா நன்றி பாஸ்

ஆரூரான் உங்களின் கருத்துக்காக அடுத்து ஒரு போஸ்ட் ரெடி பண்ணிட்டு இருக்கேன் கண்டிப்பா அப்போ நம்ம விவாதங்கள் வைத்து கொள்வோம்..

ப்ரியமுடன் வசந்த் said...

simariba என்னங்க நீங்க எல்லாரோட பெயரையும் தமிழ்ல எழுதுற என்னையே குழப்பிடுச்சு உங்க பெயர் ப்ளீஸ் வாட் இஸ் யுவர் நேம்?

ஷங்கர் அண்ணா இப்பிடி காட்டிக்குடுத்துட்டேங்களே?

ரமேஷ் சார் மிக்க நன்றியும் அன்பும்

பாலாசி நன்றிங்க

விஸ்வாமித்ரரே வருக வருக நல்ல வேளையாக சாபம் எதுவும் வழங்கவில்லை அந்தமட்டும் மிக்க சந்தோஷம்..

ஸாதிகா மிக்க நன்றிங்க

ஜெய்லானி மிக்க டாங்ஸ்..

ராமலக்ஷ்மி மேடம் ஆமாங்க கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆகிவிட்டது இந்த இடுகைக்கு படங்கள் சேகரிக்க...

ஹேமா ம்ம் எப்பவும் போலயே...

நன்றி சுகுமார்

ப்ரியமுடன் வசந்த் said...

சுபா அப்படியா நன்றி மச்சி

சுசிக்கா ஒண்ணும் புரியலை...

ரீனா ஆவ்.. மொபைல்ல படிக்கிறீங்களா எப்டி?

மேனகா மேடம் நன்றி மேடம்

ஸ்ரீராம் மிக்க நன்றி

ஜெஸ்ஸம்மா மிக்க சந்தோஷம்

சாந்தினி மேடம் அப்டியா சொல்றீங்க?

எட்வின் நன்றி பாஸ்

சங்கர் நன்றிங்க..

மீனாஷி மேடம் ப்ரோஃபைல் ஸ்டார்ட் பண்ண வச்சாச்சு இனி அடுத்து பிளாக்தான் ரெடி ஸ்டார்ட் மியூஜிக்..

சந்தோஷி ஆ டீச்சர் எங்கே போயிட்டீங்க இவ்ளோ நாளா?

கலா நலமே எப்ட்கீறீங்க பாட்டி?
ம்ம் எப்டி கண்டுபிடிச்சீங்க ஆனா கீரை சாப்ட்டது உண்மைதான்...வல்லாரை இல்ல... :)

பிரேமி said...

அட! என்னை இன்னும் நினைவிருக்கிறதா? நன்றி தோழரே! உங்களின் இனிய பதிவுகளை படித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அலுவலக பணி சுமையே பின்னூட்டம் போட முடியாததற்கான காரணம். மன்னிக்கவும்.

பிரேமி said...

அட! என்னை இன்னும் நினைவிருக்கிறதா? நன்றி தோழரே! உங்களின் இனிய பதிவுகளை படித்து ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அலுவலக பணி சுமையே பின்னூட்டம் போட முடியாததற்கான காரணம். மன்னிக்கவும்.

ப்ரியமுடன் வசந்த் said...

என் எழுத்துக்கள் இடுகைகள் மீது மீது பற்று வைத்தவர்கள் ஒருத்தரையும் மறப்பதில்லை... டீச்சர்...

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வாழ்க வளமுடன்

- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள் வசந்த்

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்டார்ஜன் நன்றிப்பா அதிருக்கட்டும் திடீர்ன்னு போன மாசம் எழுதிய இடுகைக்கு இப்போ வாழ்த்து?y????