June 30, 2010

கற்பனை The Imagination & Creativity...

கற்பனை The Imagination & Creativity...


என்னுடைய பெரும்பாலான போஸ்ட்களில் எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க , ரூம் போட்டு யோசிச்சீங்களா? , ரொம்ப யோசிக்கிறீங்க இப்படியான பின்னூட்டங்களே நிறைய வந்திருக்கின்றன...எப்படி யோசிக்கிறேன் என்பதைப்பற்றி  பார்ப்போமா? 


நான் டிப்ளோமா எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிக்கும்பொழுது என்னுடைய முதல் டெக்னிகல் ட்ராயிங் வகுப்பிலே என்னுடைய டெக்னிகல் ட்ராயிங் ஆசிரியர் சொன்னது ட்ராயிங் வரைவதற்க்கு பேப்பரோ பென்சிலோ ட்ராஃப்டரோ முக்கியம் இல்லை இமேஜினேசன்தான் முக்கியம் எனவும் அது இருந்தால் பேப்பர் பென்சில் ட்ராஃப்டர் இவைகள் இல்லாமலே நம்மால் படம் வரைய முடியும் என்பதுதான்...


இந்த டெக்னிக்கல் ட்ராயிங் படிக்கும்பொழுதுதான் நான் என்னுடைய இமேஜினேசனை வளர்த்து கொண்டேன் என கூறலாம். அதிலும் Orthographic Projection என்னும் 3டி dimension Drawings செம்ம இண்ட்ரெஸ்டிங்கா இருக்கும். இதில் ஒரு Object ன் 3டி view நமக்கு கொடுத்து விட்டு அதன் front view, top view, side view வரையச்சொல்லுவார்கள் அல்லது இந்த மூன்று viewsம் கொடுத்துவிட்டு 3டி view வரைய சொல்லுவார்கள் பார்க்க படம்...




இந்த படத்துக்குபதிலா நீங்க மனிதனோட படத்தை வைத்து பார்ப்பது தவறு..ஆமா சொல்ட்டேன் இப்போ மேட்டருக்கு வருவோம்... 


இதே போலதாங்க நம்ம வாழ்க்கையும் நிறைய பக்கங்கள் நிறைந்து ஒரு முழுமையான வாழ்க்கையா அமைகிறது,சிலர் என்னுடைய இன்னொரு பக்கதை நீ பார்த்ததில்லையே என்று சொல்வதை கேட்டிருப்பீர்கள்,அதேதான் இப்போ நான் சொல்லவருவதும். 


நான் கார்ல(என்னோடதில்ல) கொடைக்கானல் போயிட்டிருக்கேன்னு வச்சுக்கங்க கார் நல்லாத்தாங்க போயிட்டு இருக்கும் ஆனா என்னோட மனசு இருக்குல்ல அது என்னா நினைக்கும் தெரியுமா ? ஒரு வேளை இந்த கார் இப்படியே கவுந்துடுச்சுன்னான்னு ஆரம்பிச்சு நான் மலை அடிவாரத்தில் விழுந்து கிடப்பது மாதிரியும் எனக்கு காயமாகி மயக்கமடைந்து கிடக்கும்பொழுது சிலர் என்னுடைய பணம் நகைகளை எடுத்துகொண்டு ஓடுவது போலவும் இருக்கும் . அந்த நொடி நான் கொஞ்சம் சுதாரித்து கொண்டு நான் பயணம் செய்து கொண்டிருக்கும் கார் டிரைவரை கவனமாக காரை செலுத்துமாறும், என்னுடைய பணத்தை பாக்கெட்டில் தொட்டு பார்த்து கொள்வதுமாகவும், அந்த பணம் போனாலும் ஏடிஎம் கார்ட் இருக்கிறதா என்றும், விபத்து அவசர அழைப்பு எண் என்ன என்பதை மனதில் ஓடவிட்டவாறும் பயணம் செய்வது வழக்கம்.இப்போ இந்த விபரீத கற்பனை எனக்கு ஒரு எச்சரிக்கை உணர்வை தருகிறது...இது ஒரு நெகடிவ்இமேஜினேசனாக இருந்த பொழுதிலும் பெரிய ஆபத்தில் சிக்கினால் என்ன செய்வது என்பதற்க்கு முன்னெச்சரிக்கையாக இருக்கிறது...


இதே போல ஒரு இளைஞன் ஒரு பெண்ணை காதலிக்கிறான் என்று வைத்துகொள்வோம் அந்த இளைஞன் ஒரு சாதியை சேர்ந்தவன் அவனுடைய காதலி வேறொரு சாதியை சேர்ந்தவள் எனவும் கொள்வோம் இப்போ இரண்டு பேரும் திருமணம் செய்வதற்க்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்த பின் அவர்கள் இருவர் குடும்பத்தில் என்ன என்ன பிரச்சினைகள் வரும் அல்லது இரு வீட்டார்களும் அடித்துகொள்வார்களா? அல்லது சிறிது காலம் கழித்து அக்காதலர்களுக்கு குழந்தை பிறந்த பின்னாவது இரு குடும்பமும் ஒன்றாக செர்ந்து கொள்வார்களா? இப்படி பல விதமாக கற்பனை செய்து பார்த்தால் அந்தந்த நிகழ்வுகளுக்கு ஏற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துகொள்வதற்க்கு முக்கிய நிகழ்வாக கற்பனை உதவுகிறது...


சில நேரம் இந்த கற்பனை சக்தி நாம் செய்யும் தொழிலில், அந்த தொழிலை மேம்படுத்த என்ன என்ன செய்யலாம் இப்படி செய்தால் என்ன அப்படி செய்து பார்த்தால் என்ன என்று புதுமைகள் புகுத்துவதன் மூலம் கண்டிப்பாக தொழில் வெற்றி பெற முடியும் இது தொழில்துறையில் வெற்றி பெற்ற பலரின் கூற்று...


நம்ம உலகத்திலே ரொம்பவும் ஃபாஸ்ட்டானது நம்ம கற்பனைதாங்க நம்ம நினைச்ச நேரத்தில் நிலாவுக்கு கூட போய்வரும் சக்தி கற்பனைக்கு இருக்கிறது...இந்தகற்பனைக்கு வானமே எல்லை என்று கூட சொல்லல்லாம்.....


இங்க ஒரு வீடியோ இருக்கு பாருங்க ....




இது ஒரு சின்ன மார்க்கர் விளம்பரம்தான் அதை எப்படி எதோட பொருத்தி பர்த்திருக்கிறார் இந்த விளம்பர இயக்குனர் இதுதாங்க இமேஜினேசன்...இப்போ புரிஞ்சுச்சா? இல்லியா சரி விடுங்க இன்னும் சொல்றேன்...


12B படம் எல்லாரும் பார்த்திருப்பீர்கள் இயக்குனர் ஜீவா அதில் ஷ்யாம் பஸ்ஸை பிடிச்சு ஏறிப்போனா என்ன என்ன எல்லாம் நடக்கும் பஸ்ஸை மிஸ் பண்ணா என்ன என்ன எல்லாம் நடக்கும் என்று சூப்பரா சொல்லியிருப்பார் அருமையான ட்ரெண்ட் செட்டர் திரைக்கதை அது ஆனா யாருமே அதுக்கடுத்து அதை முயற்சி செய்யவே 
இல்லை...அந்தப்படம் இந்த இமேஜினேசனுக்கு சிறந்த ஒரு படமா சொல்லலாம் ...    




இந்த படத்தைப்பாருங்க இது வெறும் கேலிச்சித்திரம் இல்லீங்க அடுத்த நொடி எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நம் உலகத்தில் இன்னும் சில நூறு வருடங்களுக்கு பிறகு ஒரு மனிதனுக்கு தேவையான உடல் பாகங்களை வாங்கி நம் உடலில் பொருத்திக்கொள்ளலாம் என்ற நிலைவரும் பொழுது பல உடல் பாகங்கள் அந்தந்த ப்ராண்ட் பெயர்களின் பிரிண்டோட வரலாம்ன்னு நச்சுன்னு சொல்ற படம்தான் இது . இதுதாங்க கிரியேட்டிவிட்டி....




இப்போ இங்க பார்க்கும் படத்தில் சிகரெட் ஸ்மோக் பண்ணுவது தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்வது போன்ற ஒரு மெச்சேஜ் சூப்பரா சொல்லியிருக்காங்க பாருங்க...
இதுவும் கிரியேட்டிவிட்டி தாங்க...



சாதாரண பஸ்ல சின்னதா ரசிக்கும்படியான கிரியேட்டிவிட்டி மனித வாயிலிருந்து புகை வர்ற மாதிரி இன்னும் இது மாதிரி நிறைய கிரியேட்டிவிட்டி இருக்குங்க...




இப்போ புரிஞ்சுதா இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி ஏதோ எனக்கு தெரிஞ்சளவுக்கு சொல்லியிருக்கேன்...
சரி இமேஜினேசன் கிரியேட்டிவிட்டி பற்றி சொல்லியாச்சு அதை உங்களையும் எப்படி செய்ய வைக்கிறது நிறைய இருக்குங்க நிறைய டாபிக் யோசிச்சி எழுதணும்ன்னு மைண்ட்ல வச்சுருக்கேங்க ஆனா பாருங்க நேரம் கிடைக்குறது கஷ்டமா இருக்கு சரி நம்ம யோசிச்சா இப்படித்தான் இருக்கும்ன்னு எனக்கு தெரியும் அதையே உங்களை யோசிக்க வச்சு எழுத சொன்னா என்ன?


முதல் தலைப்பு


நம்ம கைகள் இரண்டும் இருக்குள்ள அதோட ஆரம்பம் நம்ம தோள்பட்டையில இருக்குன்னு தெரியும் அதே கைகள் நம்ம வயிற்றோட பக்கவாட்டில் முளைத்திருந்தால் நம்ம அன்றாட வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்கள் நடந்திருக்கும்? இந்த டாபிக் எழுதப்போறவர் நம்ம சீமான்கனி மாப்ள கனவுப்பட்டறைன்னு பேர் வச்சுருந்தா போதுமா மாப்ள எழுதுங்க மாட்டுனீங்களா? தலைப்பு மாறிய கைகள்...


இரண்டாவது தலைப்பு


தெருவெல்லாம் போஸ்ட்லைட் பாத்துருப்பீங்க ஒரு நாளைக்கு இதே மனித ஆறறிவோட அந்த போஸ்ட் மரமா நீங்க மாறினா நீங்க என்ன பார்க்குறீங்க? என்ன செய்வீங்க ? இந்த டாபிக் எழுதப்போறவர் சிரிப்பு போலீஸ் ரமேஷ்... தலைப்பு நானொரு தெருவிளக்கு...


மூன்றாவது தலைப்பு 


ஊரெல்லாம் ஆலமரம் அரசமரம்ன்னு பிள்ளையார் இருக்குறது எல்லாருக்கும் தெரியும் இந்த பிள்ளையாருக்கு உயிர் இருந்து எல்லா ஊர்லயும் ஒரு மனுஷ உருவுல பிள்ளையார்கள் உட்கார்ந்திருக்கிக்காங்கன்னு வச்சுக்கங்க(சில சாமியார் அப்படித்தான் இருக்காங்கன்னு சொல்லக்கூடாது ஆமா) அப்போ நடக்குற சம்பவங்கள் பற்றி எழுதப்போறவர் நம்ம நாஞ்சில் பிரதாப் (இந்த டாபிக் இவரத்தவிர காமெடியா யாராலயும் எழுத முடியாதுங்க) தலைப்பு ஆல மரத்து பிள்ளையார்கள்


நாலாவது தலைப்பு


நம்ம குழந்தையா பிறந்து படிச்சு வேலைக்கு போயி கல்யாணம் பண்ணி குழந்த பெற்று அதுங்களுக்கு கல்யாணம் பண்ணிவச்சு கடைசில செத்துடறோம் ரொடேசனா போயிட்டு இருக்கு இதுவே தலைகீழா இறக்கும்போது இருக்குற வயசுல பிறந்து ஒவ்வொரு நாளும் பின்னோக்கி வர்றீங்க கடைசியில இறக்குறது அம்மாவோட மடியிலன்னு வச்சுட்டு இடையில என்ன சம்பவங்கள் நடக்கும்ன்னு எழுதப்போறவர்( கொஞ்சம் கஷ்டம்தான் மாப்ள ஆனாலும் நாமெல்லாம் யாரு எழுதுவோம்ல)  நம்ம கே ஆர் பி செந்தில்... தலைப்பு தலைகீழ் விதிகள்...


ஐந்தாவது தலைப்பு 


இது வெறும் ஈஸிங்க நீங்க ஆறறிவுடைய பட்டாம்பூச்சியா பிறந்துட்டீங்க உங்க ஆசைகள் எப்படியிருக்கும்? இந்த டாபிக் எழுதப்போறவங்க ராமலக்ஷ்மி மேடம்...
தலைப்பு பட்டாம்பூச்சியின் கனவுகள்...


ஆறாவது தலைப்பு 


இந்த உலகம் சுற்றும் திசையில இருந்து ஆப்போசிட் திசையில சுற்றும்போது என்ன என்ன நிகழ்வுகள் நடக்கும் இது பற்றி எழுதப்போறவங்க எங்கள் பிளாக் ...
தலைப்பு மாறுதிசை...


ஏழாவது தலைப்பு


இந்த உலகத்தில் கரண்ட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திட்டு இருக்கும் யாரும் திரும்பவும் கரண்ட் கண்டுபிடிக்காத பட்சத்தில் ... இந்த டாபிக் எழுதப்போறவங்க யாவரும் நலம் சுசி....தலைப்பு வித் அவுட் கரண்ட்...


எட்டாவது தலைப்பு


இந்த உலகத்தில் இப்போ கடலில் வாழும் மீன்போலவே உங்களாலயும் பேசமுடியாதுன்ற மாதிரி ஒரு வாய் பேசமுடியாத பெண்ணின் மன ஆசைகள் எப்படியிருக்கும்... அவள் வாழ்க்கையில்  அதனால் பெறும் இன்ப துன்பங்கள் பற்றி எழுதப்போறவர் அமைதிச்சாரல் மேடம் தலைப்பு.. முள்ளில்லாத மீன்


அவ்ளோதாங்க இன்னும் இருக்கு அதெல்லாம் எனக்கு...


நிபந்தனைகள்


ஒருவர் இருவரை தொடரச்சொல்லி அழையுங்கள் கண்டிப்பாக இருவர் மட்டுமே ரொம்ப கூப்பிட்டீங்கன்னு வச்சுக்கங்க போரடிச்சுடும் ஆமா தலைப்பும் அதன் உட்கருவும் நீங்கதான் அவங்களுக்கு சொல்லணும்...ஆரம்பிங்க உங்க கிரியேட்டிவிட்டிய பட்டைய கிளப்புங்க .. கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் முழுவதும் கிரியேட்டிவ் கிங்கள் ராஜ்யமா அமையட்டும் வாழ்த்துகள் ...


புதியதாக எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.. தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பிளாக்கராக இருந்தாலும் சரி நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் இது தவிர்த்து `இல்லை, நான் எப்பொழுதும் போல்தான் இருப்பேன் என்பீர்களேயானால் எல்லா மட்டத்திலும் பின் தள்ளப்படுவீர்கள் ஒரு சில நேரங்களில் அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு....







கண்டிப்பா இங்கு தொடர்பதிவெழுத அழைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அழைப்பை ஏற்று எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்...

ப்ரியமுடன்...வசந்த்








70 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு......

சீமான்கனி said...

///புரிஞ்சுதா/// புரிஞ்சுது... புரிஞ்சுது... புரிஞ்சுது... புரிஞ்சுது

ஐ!! இது நல்லா இருக்கே (மாட்டிவிட்டுடீயே மக்கு மாப்பி) எழுதிருவோம்...

நசரேயன் said...

//கண்டிப்பா இங்கு தொடர்பதிவெழுத அழைக்கப்பட்டிருக்கும் நண்பர்கள் அழைப்பை ஏற்று எழுதுவீர்கள் //

கண்டிப்பா எழுதுவாங்க

ப.கந்தசாமி said...

Good Post.

Subankan said...

இறுதி வரிகள் நிஜம்.

ஒரே நேரத்தில் எட்டுத் தொடர்பதிவா? ம், கிளப்புங்கள் :)

Chitra said...

Super! செமயாய் இருக்குது, மக்கா!

தொடர் பதிவு எழுதுபவர்கள், நிச்சயம் அசத்துவாங்க..... வாழ்த்துக்கள்!

பெசொவி said...

//நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் இது தவிர்த்து `இல்லை, நான் எப்பொழுதும் போல்தான் இருப்பேன் என்பீர்களேயானால் எல்லா மட்டத்திலும் பின் தள்ளப்படுவீர்கள் ஒரு சில நேரங்களில் அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு....
//

உண்மை, நிதரிசனமான உண்மை

எல்லாரும்தான் தொடர்பதிவு எழுதக் கூப்பிடறாங்க, ஆனா நீங்க எழுதியிருக்கிற பாங்கு உங்க கிரியேட்டிவிட்டியைக் காட்டுகிறது.

உங்களுக்கும் உங்கள் தூண்டுதலால் எழுதப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!

கௌதமன் said...

ஆறாவது தலைப்பை குறித்துக் கொண்டோம். முயற்சிக்கிறோம். எங்கள் ப்ளாக் ல தானே வெளியிடவேண்டும்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு கோர்த்து விட்டுடீங்களே. சரி எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டமா. ஒரு ரெண்டு நாள் டைம் கொடுபீங்களா?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹையா.. எப்படி இப்புடி எல்லாம் யோசிக்கிறீங்கன்னு இப்போ புரிஞ்சு போச்சு.. :D :D

சூப்பரா இருக்குங்க.. தொடர் பதிவு தலைப்பெல்லாம் அசத்தல்..

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!!

சாந்தி மாரியப்பன் said...

செம கலக்கல் தொடர்பதிவு... ஒவ்வொரு தலைப்பும் சவாலாவே இருக்குது. நிச்சயம் தொடருவோமில்ல.கொஞ்சம் டைம் கொடுப்பீங்களா... உங்க அளவுக்கு க்ரியேட்டிவிட்டியா திங்க் பண்ணனும்னா ஓவர்டைம் பாத்தாத்தான் முடியும்.:-))))

Unknown said...

இப்பதான் ஒரு பதிவு எழுதி போஸ்ட் போடலான்னு பாத்தா மாப்ளயோட அழைப்பு..

தலை கீழ் விதிகள் பத்தி நாளைக்கு எழுதிடலாம் மாப்ள.. (படம் தேடுறதுதான் கொஞ்சம் கஷ்டம்)

பதிவுலகம் கொஞ்ச நாளைக்கு தொடர்பதிவு கிறுக்கு புடிச்சு அலையை போவுது..

Prathap Kumar S. said...

யோவ் என்னய்யா எக்குத்ப்பா மாட்டி விடற.... பிள்ளையாயரை பத்தி எழுதி அப்புறம் சாமிக்குத்தம் ஆயிடப்போவுது... அப்புறம் அவரை மாதிரி நானும் கல்யாணம் ஆகாம...அவ்வ்வ்வ்வ்வ்

சரி சரி...பிள்ளையார் மேல பாரத்தை போட்டு எழுதுறேன்... :)) கண்பதி பப்பா மோரியா...

ஜெய் said...

வசந்த்... அருமையா எழுதி இருக்கீங்க... முக்கியமா அந்த நெகடிவ் இமேஜினேஷன்.. இதெல்லாம் நாங்க பண்ணற வேலையில cross check பண்ண கூட உதவியா இருக்கு...

அப்பறம், அந்த 12B மேட்டர்.. அது நல்ல இமேஜினேஷன்தான்.. ஆனா அதுக்கு சொந்தக்காரர் ஜீவா இல்ல.. அது 1998-ல வந்த Sliding Doors படத்தின் தழுவல்..
http://en.wikipedia.org/wiki/Sliding_Doors

ஜெய்லானி said...

//. கொஞ்ச நாளைக்கு பதிவுலகம் முழுவதும் கிரியேட்டிவ் கிங்கள் ராஜ்யமா அமையட்டும் வாழ்த்துகள் ...//

நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்

நாடோடி said...

கிரியேட்டிவிட்டி ப‌ற்றிய‌ உங்க‌ளின் விள‌க்க‌ங்க‌ள் அருமை... ம‌ற்ற‌வ‌ர்க‌ளின் ப‌திவுக்கு வெயிட்டிங்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு உங்க தொடர விளையாட்டு.. இதையுங் கூட நல்லா யோசிச்சிருக்கீங்க வசந்த்.. எனக்கு க்ரியேட்டிவிட்டிய ரசிக்க (மட்டும்) பிடிக்கும்.. உங்க தலைப்புகள், அதுக்கான தீம் எல்லாமே அருமை..

அருண் பிரசாத் said...

நல்லா யோசிச்சி இருக்கீங்க வஸந்த். அனைவரும் கலக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

@ ரமெஷ் - மாட்டினீங்களா!

FYI, 2008-09 ல் வெளி வந்த Vantage Point படமும் 12B போல தான். அமெரிக்க ஜனாதிபதியை கொல்ல முயர்சிக்கும் நிமிடங்கள், பலர் பார்வையில் ஒரே காட்சி வரும். பார்க்கவேண்டிய படம். பார்க்க முயற்சி செய்யுங்கள்

SUFFIX said...

இந்தக் கிரியேட்டிவிட்டி வாழ்க்கையில் ஒரு முக்கியமான ப்ள்ஸ் பாயிண்ட் வசந்த், நல்ல விளக்கம்.

Mahi_Granny said...

so your creativity comes from your tech.drawing teacher. say a big thanks to him as u r able to create the same among ur friends.

ரிஷபன்Meena said...

படங்கள் அருமை ப்டிக்கவும் சுவாரஸ்யமா இருந்தது

பின்னோக்கி said...

எனக்கு இஞ்சினியரிங் டிராயிங் சப்ஜெட்டுல கடைசி வரை புரியாதது இந்த ஃபிரண்ட் டாப் வியூ தான். ஆனா அது தான் உங்களுக்கு ஈஸியா இருந்துச்சுன்னு சொல்றீங்க. பொறாமையா இருக்கு. இந்த பதிவுல கூட என்ன ஒரு கிரியேட்டிவிட்டி.. கலக்குங்க

செ.சரவணக்குமார் said...

அசத்திட்டீங்க வசந்த்..

அருமையான தலைப்புகள் கொடுத்துருக்கீங்க.

எழுதப்போறவங்க எல்லோருக்கும் வாழ்த்துகள்.

சிநேகிதன் அக்பர் said...

அட! எனக்கும் டெக்னிக்கல் டிரையிங்கில் அந்த சப்ஜெக்ட் தான் பிடிக்கும். மூணு வருடமும் தொடராதா என ஏங்கிய சப்ஜெக்ட் அது.

எல்லோருக்கும் ஒரு கான்சப்ட் கொடுத்து தொடரச்சொன்ன உங்க கிரியேட்டிவிட்டியை நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு தல.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அழகான கற்பனை.. கற்பனையில்தான் சாத்னைகளே பிறக்குதுன்னு சொல்லலாம். இது ஒரு அருமையான சிந்தனை.. தொடரட்டும் கிரியேட்டிவிட்டி ராஜாக்கள்..

பிரதாப்க்கு ஏத்தமாதிரி தலைப்புதான் கொடுத்திருக்கீங்க.. ஹா ஹா ஹா...

பிரேமி said...

வசந்த்! உங்களின் புது முயற்சிக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவையே தாங்க முடியல்லை! (அவ்வ்வ்வளவு அருமைதான்) இதில் தொடர் பதிவா!! ஆகட்டும்! கிளப்புங்கள் தோழர்களே!!

தமிழ் உதயம் said...

வி for வசந்த...
வி for வித்தியாசம்...

வல்லிசிம்ஹன் said...

கற்பனைக் குதிரைகளைத் தட்டி விடுங்கள். நாங்களும் பின்பற்றுகிறோம்.

எழுதுவதை அனுபவித்து எழுதப் போகும் எல்லாப் பதிவர்களுக்கும் வாழ்த்துகள்.

ஹுஸைனம்மா said...

கற்பனை அபாரமா இருக்கு வஸந்த்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடிப்போடு, அப்போ இன்னும் கொஞ்ச நாளைக்கு நல்லாப் பொழுதுபோகும்! (ஏந்தம்பி காவல்காரனப் பத்தி ஏடாகூடமா பேசிக்கிராய்ங்களே உண்மையா?)

elamthenral said...

technical a aramichu practical a mudichutinga vasanth sir.. arumai.. vaazhthukkal..

அன்புடன் அருணா said...

ஹை!இது நான் பங்கேற்ற ஒரு வொர்க்ஷாப்பில் சொல்ல வச்சாங்களே!
"What if"அப்படீன்னு தலைப்பு கொடுத்து!

அன்புடன் நான் said...

ரொம்ப நன்றிங்க வசந்த்!

அன்புடன் நான் said...

மேல சொன்ன நன்றி என்னை காப்பாற்றியதற்கு!

அன்புடன் நான் said...

மிக நல்ல பயிற்சி... வெளுத்து கட்டுங்க

vanathy said...

சூப்பர்! எனக்கு இப்படி எல்லாம் தோணவே தோணாது.

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யமா இருக்கே என வாசித்தபடி, அட மாட்டுனாங்களான்னு புன்னகைத்தபடி வந்தால் ஐந்தாவதாய் நானும்! பட்டாம்பூச்சி போல பறக்க விட்டா எதையாவது எழுதுவேன். கட்டம்கட்டி வட்டத்துக்குள் விட்டா, ஹி, ஸோ தொடர் பதிவுகள்னா எஸ்கேப். இருந்தாலும் கற்பனை சிறகை விரிக்க முயற்சி செய்கிறேன்:)! நன்றி வசந்த்.

ஆ.ஞானசேகரன் said...

//இந்தகற்பனைக்கு வானமே எல்லை என்று கூட சொல்லல்லாம்.....///

அட அருமை... நல்லாருக்கு வசந்த்

நிகழ்காலத்தில்... said...

உருப்படியான விசயங்களை தந்ததோடு அல்லாமல் பலரையும் அதில் இணைத்தமைக்கு நன்றி...

தமிழ் மதுரம் said...

இந்த படத்துக்குபதிலா நீங்க மனிதனோட படத்தை வைத்து பார்ப்பது தவறு..ஆமா சொல்ட்டேன் இப்போ மேட்டருக்கு வருவோம்...//


கொஞ்சம் எச்சரிக்கையாகத் தான் இருக்கனும் போல:))

ஏழு பேரை மாட்டி விட்டிருக்கிறீங்க..
பார்ப்போம். இனி அவங்கள் யாரை மாட்டுறாங்கள் என்று?

உங்களை பதிவினை ரசித்தேன். Imagination & கற்பனை வளப் பற்றி அருமையாக விளக்கியுள்ளீர்கள் வசந்த்..


புதிய பதிவர்களுக்கான ஆலோசனையும் அருமை..

க ரா said...

கல்குங்கப்பு. பின்றீங்க.

ஜான் கார்த்திக் ஜெ said...

வசந்த், உங்களின் இந்த முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!! தொடர்பதிவு எழுதும் அணைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!

யோ வொய்ஸ் (யோகா) said...

nalla mutchi, vettri pera vaazthugal

சுசி said...

//
ஏழாவது தலைப்பு


இந்த உலகத்தில் கரண்ட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திட்டு இருக்கும் யாரும் திரும்பவும் கரண்ட் கண்டுபிடிக்காத பட்சத்தில் ... இந்த டாபிக் எழுதப்போறவங்க யாவரும் நலம் சுசி....தலைப்பு வித் அவுட் கரண்ட்...
//

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் தற்போது பதிவுலகத்தில் இல்லை.

சுசி said...

எழுதறேன் வசந்த்.

பாராட்டுக்கள். ரொம்ப வித்யாசமா நிஜமாவே நல்லா இருக்கு.

என்னையும் கூப்டத்துக்கு நன்றிப்பா.

Unknown said...

அசத்திட்டீங்க வசந்த்.
very good creative thinking.
எழுதப்போறவங்க எல்லோருக்கும் வாழ்த்துகள்.

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல படைப்பாக்கத் திறன் வசந்த்.

அப்பாதுரை said...

impressive!

Kala said...

கற்பனைக் கடலே!
கலக்குங்கள்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

http://sirippupolice.blogspot.com/2010/07/blog-post.html

நானொரு தெருவிளக்கு

Thamira said...

சுவாரசியாமான தொடர்பதிவுகளுக்கான தலைப்புகளைத் தந்திருக்கிறீர்கள், பார்க்கலாம் எப்படிப்போகிற்றடு என.. வாழ்த்துகள்.

Thamira said...

அந்த நாலாவது தலைப்பில் 'The curious case of Benjamin Button' என்றொரு படமே இருக்கிறது பாஸ்.

பாலராஜன்கீதா said...

//இந்த உலகத்தில் கரண்ட் கண்டுபிடிக்கப்பட்டிருக்காவிட்டால் என்ன நடந்திட்டு இருக்கும் //
நாங்கள் பிரியமுடன் வசந்த்தை படிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்திருக்குமோ ?
:-)

Anonymous said...

சுசி ஏமாத்திட்டாங்க. கரண்ட் கட்டாயிடுச்சுன்னு . என்னையும் மாட்டிவிட்டுட்டாங்க :)

http://rkguru.blogspot.com/ said...

ஒன்று முதல் எட்டு வரை தலைப்புக்கள் உங்கள் அதீத கற்பனைகள் அருமை...நல்ல எழுத்துவளம் பாராட்டுக்கள்.

பனித்துளி சங்கர் said...

நீண்ட பதிவு அதிக அலசல்கள் . புகைப்படங்கள் அனைத்தும் அருமை .

நீங்க தந்திருக்கும் இந்த விளம்பர குறும்படத்தை நானும் பார்த்து இருக்கிறேன் . எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க . பகிர்வுக்கு நன்றி நண்பரே !

- இரவீ - said...

அருமை வசந்த்..
இந்த முயற்சிக்கும், தொடர்பதிவு எழுதும் நண்பர்களுக்கும்
வாழ்த்துகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

சீமான்கனி இன்னாது மக்கு மாப்பியா அதனாலதான் உன்னை கூப்பிட்டிருக்கேன் போல.. நன்றிடா...கிளப்பு பட்டய...

நசர் அண்ணே நன்றி நன்றி

கந்தசாமி சார் நன்றி

சுபா நன்றி மச்சி...

சித்ராம்மா நன்றி நன்றி

பெ,சொ,வி(வெங்கடேஷ் சார்) நன்றி சார்...

கவுதம் சார் ஆமா எங்கள் பிளாக்லதான் எழுதணும் நன்றி சார்...

ரமேஷ் அதான் சூப்பரா எழுதிட்டீங்கள மாப்பி..

ஆனந்தி மேடம் நன்றி நன்றி

சாரல் மேடம் ரெண்டு நாள் சரி மூணு நாளாயிடுச்சு பரவாயில்ல எழுதுனா போதும்... நன்றி மேடம்...

கே ஆர் பி செந்தில் நன்றி மாப்பி எழுதுனதுக்கு...

பிரதாப்பு நீர்தான்யா பட்டய கிளப்பிட்டீரு...

ஜெய் ஆமாவா இருங்க அந்த படத்தை தேடி கண்டு பிடிச்சு பார்க்குறேன்...

ஜெய்லானி நன்றி

நாடோடி நண்பா மிக்க நன்றி..

ப்ரியமுடன் வசந்த் said...

சந்தனா அடப்போங்கங்க உங்க சரண் கேரக்டரோட கிரியேட்டிவிட்டி செம்ம நன்றிங்க..

அருண் பிரசாத் நன்றி மச்சி...

சஃபி நன்றி நண்பா

மகி ம்ம் ஆமாங்க அவர்தான் என்னோட பூஸ்ட்... கண்டிப்பா எப்பவும் அவரை மறக்கமாட்டேன்...

ரிஷபன் நன்றிங்க...

பின்னோக்கி சார் என்ன சார் இப்டி சொல்றீங்க அதுதான் ரொம்ப ரொம்ப ஈஸியான சப்ஜெக்ட் நன்றி சார் ...

சரவணக்குமார் அண்ணா நன்றி...

அக்பர் ஆமாங்க எனக்கும்தான் நன்றிங்க...

ஸ்டார்ஜன் நன்றி..

சந்தோஷி டீச்சர் அவ்ளோ கொடுமையா பண்றேன் நானூ..?
நன்றி ரீச்சர்...

ரமேஷ் சார் நன்றி நன்றி

வல்லிசிம்ஹன் நன்றி நன்றி எழுதுவதை அனுபவிச்சு எழுதுறவங்க எப்பவும் ரசிக்கப்படுவாங்க நன்றி ..

ஹூசைனம்மா மெய்யாலுமாவா? நன்றிங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

பன்னிக்குட்டி ராம்சாமி நன்றி..

புஷ்பா நன்றிங்க...

பிரின்ஸ் ஆமாவா? நன்றி பிரின்ஸ்

கருணாகரசு சார் நன்றி...

வானதி என்ன இப்டி சொல்லிடீங்க எழுதுவீங்க பாருங்க...

ராமலக்ஷ்மி மேடம் இந்த ஒரு போஸ்ட் கலகலப்பா நகைச்சுவையா எழுதுங்க மேடம் ப்ளீஸ்...

ஞானம் நன்றி நண்பா

நிகழ்காலத்தில் நன்றி நண்பரே..

கமல் நன்றி நன்றி மச்சி..

ராமசாமி கண்ணன் நன்றிங்க

ஜான் கார்த்திக் நன்றிங்க...

யோகா நன்றிப்பா...

ப்ரியமுடன் வசந்த் said...

சுசி நல்லா எழுதியிருக்கீங்க பாராட்டுக்கள்..

கலாநேசன் நன்றிங்க...

குணா மிக்க நன்றிப்பா...

அப்பாத்துரை அட நீங்களா மிக்க நன்றிங்க...

கலா மேடம் நன்றிங்க

ரமேஷ் மீண்டும் நன்றி மச்சி...

ஆதி சார் நீங்க சொன்ன அந்த படம் ட்ரெயிலர் தேடிப்பார்த்தேன் நெசமாவே இப்போதான் சார் பார்க்குறேன் நன்றி சார் இந்த படத்தை தேடிக்கண்டுபிடிச்சு பார்த்திடுறேன் சார் நன்றி...

பாலராஜன் கீதா நன்றிங்க இப்படி நன்றி சொல்லவும் முடிஞ்சுருக்காதுல்ல?

ஜெய்லானி வாங்கிட்டேன் நன்றி..

அகிலா மேடம் ம் நீங்களாவது எழுதப்போறிங்களா இல்லை சுசி மாரியே...

குரு நன்றிங்க..

சங்கர் நன்றிங்க

இரவீ ரொம்ப நாள் கழிச்சு வந்துருக்கீங்க பாஸ் நன்றி...

Anonymous said...

அழகான கற்பனை. சுவாரசியமான பதிவு.

ப்ரியமுடன் வசந்த் said...

மீனாக்ஷி மேடம் மிக்க நன்றி...

HVL said...

வித்தியாசமா இருக்கு. வாழ்த்துகள்.

Thamira said...

http://www.aathi-thamira.com/2010/06/blog-post_14.html

இதைப் பாருங்கள் வசந்த்.

கௌதமன் said...

மாறுதிசை - எங்கள் பதிவில் ஜூலை இரண்டாம் தேதி வெளியிட்டுவிட்டோம். மாதவன், விஜய் இரண்டு பதிவர்களை மாறுதிசை தொடர அழைத்திருக்கிறோம். வசந்த் அவர்களுக்கும், இந்த இனிய வலைப்பூ படிப்பவர்களுக்கும் எங்கள் நன்றி.

TCTV said...

vasanth:) long time :) kathal kaal kilo enna vila :) antha blog ennachu

ப்ரியமுடன் வசந்த் said...

HVL நன்றிங்க...

ஆதிசார் படிச்சேன் சார் இனி இந்தவார வீக் எண்ட் வெள்ளிகிழமை இந்த படம் பார்ப்பதுதான் என்னோட வேலை நன்றி சார்...

கவுதம் சார் எழுதியதற்க்கு நன்றி சார்...

சொர்ணா ரொம்ப நாளைக்கு அப்புறம் என்னாச்சு பத்திரிக்கை வேலை ஜாஸ்தியாயிடுச்சா? குச் குச் ஹோத்தா ஹே... அது தெரியாம பப்ளிஷ் ஆயிடுச்சுத்தா அல் ரெடி போஸ்ட்ல இருக்கு...

Madhavan Srinivasagopalan said...

//புதியதாக எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.. தற்போதைய காலத்தில் பள்ளி மாணவராயிருந்தாலும் சரி வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி குடும்பத்தில் உறுப்பினராக இருந்தாலும் சரி பிளாக்கராக இருந்தாலும் சரி நீங்கள் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமானவராக காண்பிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள் இது தவிர்த்து `இல்லை, நான் யில் கண்டு, உங்களது மேலான கருத்தினை பதித்து, என்னைப் போன்ற வளர நினைக்கும் புதிய பதிவர்களுக்கு ஊக்கம் தரவும். எப்பொழுதும் போல்தான் இருப்பேன் என்பீர்களேயானால் எல்லா மட்டத்திலும் பின் தள்ளப்படுவீர்கள் ஒரு சில நேரங்களில் அடையாளம் தெரியாமல் போகவும் வாய்ப்புண்டு....//

நல்ல அறிவுரை, என்னைப் போன்ற புதிய ( ஏழு-எட்டு மாசமானாலும், அரை சதம் கூட அடிக்கலையே.. அதனால) பதிவர்களுக்கு.

உங்களைத் தொடர்ந்த 'எங்கள்', 'என்னைத்' தொடர அழைத்ததின் விளைவினை http://madhavan73.blogspot.com/2010/07/blog-post.html
யில் கண்டு, உங்களது மேலான கருத்தினை பதித்து, என்னைப் போன்ற வளர நினைக்கும் புதிய பதிவர்களுக்கு ஊக்கம் தரவும்.
நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

பாஸா.. ஃபெயிலான்னு சொல்லுங்க :-))

http://amaithicchaaral.blogspot.com/2010/07/blog-post_06.html