October 6, 2010

தாயமும் வாழ்க்கையும் ஒண்ணு...!




எத்தனையோ முறை
திட்டச்சொல்லியும்
திட்டவே மாட்டேன்
என்கிறது அதற்குத்தான்
எவ்வளவு நல்லமனசு
மணல்திட்டு

*****************************************

விலா எழும்பு புடைத்து
திரியும் நாய்க்கு இந்த முறையாவது
கறியை தின்று நல்லி எழும்பை
மிச்சம் வைக்கலாம் என்று பார்த்தால்
எலும்புக்கறி வாங்கத்தான்
காசிருக்கிறது

*****************************************

எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?


*****************************************

பின்னோக்கி சுற்றும்
கடிகாரம் வைத்திருப்பவன்
முன்னோக்கி சுற்றும்
கடிகாரம் வைத்திருப்பவன்
இருவரின்ஆரம்பமும் ஒரே ஆரம்ப புள்ளியில்
தொடங்கினாலும் முடிவுறுகையில்
முன்னோக்கி சுற்றும் கடிகாரம்
வைத்திருப்பவன் முற்றுப்புள்ளியாகவும் 
பின்னோக்கி சுற்றும் கடிகாரம்
வைத்திருப்பவன் காற்புள்ளியாகவும்
போவதின் மர்மம் ஞான் அறியேன் பராபரமே

*****************************************

சிறகடித்துப்பறக்கும் என் 
தேவதையின் துப்பட்டா 
சிறகுகளாகிப்போவதினாலே
சில்மிச நேரங்களில்
அதை பிடுங்கியெறிய 
மனசு வருவதேயில்லை...

*****************************************

உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...


*****************************************

உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...


*****************************************

இரவு முழுவதும்
எங்கு தேடியும் 
கிடைக்கவில்லை
நம் ஜோடி நிழல்கள் 
நம்மைப்போலவே

*****************************************























பனித்துளியுடுத்திய
ரோஜாவின் 
ஒற்றை இதழாய்
மலரும் உன் புன்னகை 
பறிக்க வந்த 
காதல் மரம் நான்

*****************************************



நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

*****************************************


தாயமும்
வாழ்க்கையும்
ஒன்றுதான் போல்
தாயம் எனும்
மனைவி வந்த பிறகுதான்
வாழ்க்கையும் ஆரம்பிக்கிறது
செல்லும் வழியெங்கும்
உடன் வருவோரின்
இழப்புகள் ,
நிலையில்லா இருப்பிடம்,
சொல்லி வைத்தாற்போல்
இரண்டிலும் அறுபத்தைந்தில்
முடியும் ஆட்டம்
ஆட்டம் முடிந்ததும்
முடிவில் எடுத்துச்செல்ல
ஒன்றுமில்லை
நேரம் கழிந்ததுதான்
மிச்சம் இரண்டிலும்...



*****************************************


நன்றி நன்றி



60 comments:

நட்புடன் ஜமால் said...

மணல்திட்டு
படிகட்டு

வார்த்தை விளையாட்டு

நிழல் மிக அருமை ...

Chitra said...

எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?

......நியாயமான கேள்வி.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

CLASSIC !!!!!!! vasanth....,keep going on

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்லாயிருக்கு வசந்த்.. கனவு கவித டாப்!!

Sindhu said...

//உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...//....................super vasanth........u r rocking......keep going .....:)))

தமிழ் உதயம் said...

கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

எல்லாமே சூப்பர்.. தாயம் சூப்பரோ சூப்பர்..

VISA said...

தலைவருக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடிச்சுடோய்...

அருண் பிரசாத் said...

மாப்ள... எல்லா கவிதையும் நச்..

எஸ்.கே said...

எல்லாக் கவிதைகளும் சிறப்பாக உள்ளன!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது face book கில் சுட்டது...

சுசி said...

ரொம்ப நல்லா இருக்குப்பா..

வித்தியாசமா எழுதி இருக்கிங்க.

பின்னோக்கி said...

என்னவோ.. என்ன மாயமோ தெரியலை.. வசந்துக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது.. நல்லாயிருக்கு.. வேற எதாவது தகவல் இருக்கா ?

Ramesh said...

அருமையான கவிதைகள்...தனித்தனியாக வெளியிட்டிருந்தால்..இன்னும் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது..

ஹேமா said...

காதல் கவிதையைவிட தத்துவக்கவிதை....
தத்துவக்கவிதையைவிட காதல் கவிதை நல்லாயிருக்க்கு.
மணல்மேடு,கடிகாரம் திரும்பத்திரும்ப சிந்திக்க வைக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதைகள் கலக்கல் ரகம்,இதையே பிரித்து 10 பதிவாக போட்டிருக்கலாம்.

Anonymous said...

//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது//

ரசனைக்குரிய வரிகள்

sakthi said...

நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

vasanth superb ya

sakthi said...

/உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி.

::))))

என்ன சொல்லி பாராட்ட

kavisiva said...

ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வசந்த். எதிர்கவுஜைதான் எழுத முடியல:(

Kala said...

உங்கள் எண்ண ஆவியில் வேகவைத்து
எடுத்துப் போட்டிருந்தால்.....
மிக,மிக அருமையான படை{யல்}ப்பு,

யாராவது சுட்டதை ! சுடவில்லையே!!!

இவ்வளவு அழகாகக் கவிதை வருமாஆஆஆஆஆஆ...
ஒரு சந்தேகம் தான்.........
சும்மா..சும்மா...

Unknown said...

கவிஞர் வசந்த் ...

Anonymous said...

என் கமெண்ட காணோம்..எங்கே போச்சு?

நிலாமகள் said...

முதல் மூன்றும் . படித்து புன்னகைத்தேன் . நான்கும் கடைசியும் சிந்தை கிளர்த்தும் தத்துவம். மீதமான காதல் கவிதைகளில் தேர்ச்சி தெரிகிறது.

செல்வா said...

எல்லாமே கலக்கலா இருக்குங்க .
அதிலும் மணல்திட்டு , படிக்கட்டு அருமை ..
அப்புறம் நிழல் கலக்கல் ..

ராமலக்ஷ்மி said...

அத்தனையும் அருமை வசந்த். நிழல்கள் ரொம்பப் பிடித்தது.

சீமான்கனி said...

ஒரு பதிவில் இத்தனை விருந்துகளா!!!!சிலவை முன்பே படித்தாலும் படிக்க படிக்க ஆசையா இருக்கு...வாழ்த்துகள் நன்றி மாப்பி...

ஜெயந்தி said...

கவிதைகள் நல்லாயிருக்கு.

Unknown said...

கவிதைகள் எல்லாமே சூப்பர்..

//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...//

வரிகள் நல்லாயிருக்கு.

ஸ்ரீராம். said...

உறக்கம் தொலைத்த கனவு ரசிக்க வைத்தது. திட்டாத மணலும் அழகு.

ப்ரியமுடன் வசந்த் said...

நட்புடன் ஜமால் said...
மணல்திட்டு
படிகட்டு

வார்த்தை விளையாட்டு

நிழல் மிக அருமை ...
//

இன்னும் நிறைய வார்த்தைகளை வைத்து விளையாட ஆசைதான் வார்த்தைகள் சிக்க மாட்டேன்னுது மிக்க நன்றிண்ணா ம்ம் :)))

ப்ரியமுடன் வசந்த் said...

//Chitra said...
எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?

......நியாயமான கேள்வி.
//

ம்ம் நன்றி சித்ராம்ம்மா!

ப்ரியமுடன் வசந்த் said...

//பனங்காட்டு நரி said...
CLASSIC !!!!!!! vasanth....,keep going on//

உள் கடி எதுவும் இல்லியே நரி ஹ ஹ ஹா நன்றி ராசா!

ப்ரியமுடன் வசந்த் said...

//எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
நல்லாயிருக்கு வசந்த்.. கனவு கவித டாப்!!//

நன்றி சந்தனா!

ப்ரியமுடன் வசந்த் said...

//priya said...
//உன்னை தேடுவதற்க்கு
நான் அனுப்பிய தென்றல்
உன்னை கண்ட களிப்போ
இல்லை நீ தந்த கதகதப்போ
திரும்பி வந்து என்னில் தகிக்கிறது
திருப்பி அனுப்பச்சொல்லி...//....................super vasanth........u r rocking......keep going .....:)))//

ஓ ப்ரியா ப்ரியா ஆவ்வ்வ் நன்றிங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழ் உதயம் said...
கவிதைகள் எல்லாம் நல்லா இருக்கு.//

நன்றி ரமேஷ் சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//அமைதிச்சாரல் said...
எல்லாமே சூப்பர்.. தாயம் சூப்பரோ சூப்பர்..//

நன்றி சாரல் மேடம் அதாலதான் ஹெட்டிங் அது !

ப்ரியமுடன் வசந்த் said...

// VISA said...
தலைவருக்கு லவ் மூட் ஸ்டார்ட் ஆயிடிச்சுடோய்...//

ஹ ஹா இல்லீங்ணா !

ப்ரியமுடன் வசந்த் said...

//அருண் பிரசாத் said...
மாப்ள... எல்லா கவிதையும் நச்..//

நன்றி மாம்ஸ் ஐ இன்னொரு மாமா ! மாம்ஸ் களோட எண்ணிக்கை ஜாஸ்தியாகிட்டே இருக்கு சாக்கிரத வசந்த் சாக்கிரத வசந்து...

ப்ரியமுடன் வசந்த் said...

//எஸ்.கே said...
எல்லாக் கவிதைகளும் சிறப்பாக உள்ளன!//

மிக்க நன்றி எஸ் கே :)!

ப்ரியமுடன் வசந்த் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
இது face book கில் சுட்டது...//

ங்கொய்யால என்னோட ஃபேஸ்புக்ல நான் போட்டத எடுத்து ப்ளாக்ல நானே போட்டா சுட்டதா?
சூ சூ மாரி...

ப்ரியமுடன் வசந்த் said...

// சுசி said...
ரொம்ப நல்லா இருக்குப்பா..

வித்தியாசமா எழுதி இருக்கிங்க.//

நன்றி சகோ!

ப்ரியமுடன் வசந்த் said...

//பின்னோக்கி said...
என்னவோ.. என்ன மாயமோ தெரியலை.. வசந்துக்கு கவிதை அருவி மாதிரி கொட்டுது.. நல்லாயிருக்கு.. வேற எதாவது தகவல் இருக்கா ?
//

அப்டில்லாம் ஒண்ணும் இல்லை தலைவா அப்டியிருந்தா கண்டிப்பா சொல்லிடுறேன் ம்ம் நன்றி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

//பிரியமுடன் ரமேஷ் said...
அருமையான கவிதைகள்...தனித்தனியாக வெளியிட்டிருந்தால்..இன்னும் ரசித்திருக்கலாம் என்று தோன்றுகிறது..//

தனித்தனியா போட்டிருக்கலாம்தான் ம்ம் நன்றி ரமேஷ்!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹேமா said...
காதல் கவிதையைவிட தத்துவக்கவிதை....
தத்துவக்கவிதையைவிட காதல் கவிதை நல்லாயிருக்க்கு.
மணல்மேடு,கடிகாரம் திரும்பத்திரும்ப சிந்திக்க வைக்கிறது.//

ம்ம் நன்றி கவி தலைவியே!

ப்ரியமுடன் வசந்த் said...

// சி.பி.செந்தில்குமார் said...
கவிதைகள் கலக்கல் ரகம்,இதையே பிரித்து 10 பதிவாக போட்டிருக்கலாம்.//

ஆவ்வ்வ் தலைவா ஹிட்டுக்காக எழுதலையே ... நன்றி

ப்ரியமுடன் வசந்த் said...

//இந்திரா said...
//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது//

ரசனைக்குரிய வரிகள்//

நன்றி இந்திரமீன்!

ப்ரியமுடன் வசந்த் said...

//sakthi said...
நீயும் நானும்
பேசாத பொழுதுகளில்
நம் இதயங்கள்
பேசும் வரம் பெற்ற
ஊமைகளாக...

vasanth superb ya
//

நன்றி சகோ :))

ப்ரியமுடன் வசந்த் said...

//kavisiva said...
ரொம்ப ரொம்ப நல்லாருக்கு வசந்த். எதிர்கவுஜைதான் எழுத முடியல:(//

ஹ ஹ ஹா கவியே இப்டி சொல்லலாமா? நன்றிங்க !

ப்ரியமுடன் வசந்த் said...

//Kala said...
உங்கள் எண்ண ஆவியில் வேகவைத்து
எடுத்துப் போட்டிருந்தால்.....
மிக,மிக அருமையான படை{யல்}ப்பு,

யாராவது சுட்டதை ! சுடவில்லையே!!!

இவ்வளவு அழகாகக் கவிதை வருமாஆஆஆஆஆஆ...
ஒரு சந்தேகம் தான்.........
சும்மா..சும்மா...//

வட சுடற பழக்கம் மட்டும்தான் இருக்குங்கோவ்வ்வ்..... நன்றி கலா

ப்ரியமுடன் வசந்த் said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
கவிஞர் வசந்த் ...//

நன்றி மாம்ஸ்:)

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
என் கமெண்ட காணோம்..எங்கே போச்சு?
// காக்கா தூக்கிட்டு போச்சி :))

ப்ரியமுடன் வசந்த் said...

//நிலா மகள் said...
முதல் மூன்றும் . படித்து புன்னகைத்தேன் . நான்கும் கடைசியும் சிந்தை கிளர்த்தும் தத்துவம். மீதமான காதல் கவிதைகளில் தேர்ச்சி தெரிகிறது.
//

மிக்க மிக்க நன்றி சகோ இப்பத்தான் கவிதைகள் எழுதிப்பழகிட்டு இருக்கேன் ம்ம் :))

ப்ரியமுடன் வசந்த் said...

//ப.செல்வக்குமார் said...
எல்லாமே கலக்கலா இருக்குங்க .
அதிலும் மணல்திட்டு , படிக்கட்டு அருமை ..
அப்புறம் நிழல் கலக்கல் ..//

நன்றி மாப்ஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

//ராமலக்ஷ்மி said...
அத்தனையும் அருமை வசந்த். நிழல்கள் ரொம்பப் பிடித்தது.//

மிக்க நன்றி ராமலஷ்மி மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

//சீமான்கனி said...
ஒரு பதிவில் இத்தனை விருந்துகளா!!!!சிலவை முன்பே படித்தாலும் படிக்க படிக்க ஆசையா இருக்கு...வாழ்த்துகள் நன்றி மாப்பி...
//

நன்றி மாப்ள!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெயந்தி said...
கவிதைகள் நல்லாயிருக்கு.
//

நன்றி ஜெ மேடம் ! :)

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜிஜி said...
கவிதைகள் எல்லாமே சூப்பர்..

//உறக்கம் தொலைந்ததும்
கனவும் தொலைந்தது
மீண்டும் வந்த உறக்கம்
தொலைந்த கனவை தேடி தேடி
தொலைந்தே போனது...//

வரிகள் நல்லாயிருக்கு.
//

நன்றிங்க ஜிஜி!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீராம். said...
உறக்கம் தொலைத்த கனவு ரசிக்க வைத்தது. திட்டாத மணலும் அழகு.
//

மிக்க நன்றி ஸ்ரீராம் ...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//எவ்வளவு நல்லமனசு
மணல்திட்டு//
வாவ்... என்ன ஒரு சிந்தனை? Seriously ....

//எப்பொழுதோ கட்டி
முடிக்கப்பட்ட படியை
படிக்கட்டு என்றழைப்பது
எந்த விதத்தில் நியாயம்?//
அதானே.. இது அநியாயமா இல்ல?