October 14, 2010

மனசெல்லாம் மார்கழி...! தெருவெல்லாம் கார்த்திகை...!

             இருபத்தேழை நானும் இருபத்தைந்தை நீயும் கடந்த பிறகு இதுவரைக்கும் நமக்குள் வராத காதல் எப்படி வந்தது என்று நான் கேட்டதற்க்கு, பல வருடங்களாக குழந்தையில்லாதவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்வது போல  நாம் காதலை தத்தெடுத்திருக்கிறோம் என்கிறாய் நீ...!

            காதலை காட்டியோ, இதயத்தை காட்டியோ நான் கேட்ட எத்தனையோ கேள்விகளுக்கு பெரும்பாலும் மவுனத்தையே பதிலாய் தரும் நீ, பேருந்தில் பயணித்து கொண்டிருக்கும்பொழுது முச்சந்தி பிள்ளையாரையோ, வேப்பமரத்து காளியையோ காட்டி கேள்வி கேட்கும் ஆட்காட்டிவிரலுக்கு மட்டும் முத்தங்கள் தருகிறாய் ஏன்?

            ஒரு மார்கழி மாத அதிகாலையில் அரிசி மாவுக்கோலம் போட்டுக் கொண்டிருந்தபொழுது ஆவென கதறிய உன்னிடம் என்னாச்சு என்றேன் ? மாவுக்கும் காலுக்கும் வித்தியாசம் தெரியாத ஐந்தறிவு ஜந்தான எறும்பு என் காலை கடித்து விட்டது என்ற உனக்கு தெரியாதா எறும்புக்கு இனிப்பறிவு இருப்பது?

            உன் காதல் எப்படியிருக்கும் ? என்றாய் , ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்க்கு கம்பி வழிச்செல்லும் மின்சாரம், அதே கம்பியை உரசி செல்லும் காற்று இவற்றை கேட்டு தெரிந்து கொள் என்றேன் அதெல்லாம் கண்ணுக்கு தெரியாதே பிறகெப்படி கேட்பது என்றாய் அப்படியென்றால் மின்சாரத்தில் இயங்கும் இசைக்கருவி , தலையசைத்து ஆடும் மலர் இவைகளிடம் உணர்ந்துபார் என் காதலை.

            ஒரு நாள் நாம் இருவரும் பாட்டுக்கு பாட்டு போல் ஒருவர் பாடி முடித்த பாடல் வரியின் இறுதி வார்த்தையை அடுத்தவர் அடுத்த பாடலுக்கான ஆரம்ப வரியாய்கொண்டு பாடல் பாட வேண்டும் என்று விதி முறை வைத்து விளையாடினோம் நீ முத்தம் என்ற வார்த்தையுடன் பாடலை முடிக்க நான் அதே வார்த்தையை கொண்டு பாடலை ஆரம்பித்தேன் நீயோ இசைக்க ஆரம்பித்திருந்தாய்...
           
            மற்றொரு நாள் வீட்டு வாசலை தெளித்து கொண்டிருந்தாய் எதற்க்கு வீட்டு வாசலை தெளிக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு தேவதைகள் நம் வீட்டிற்க்குள் வருவதற்க்குத்தான் என்றாய் அப்போ ஏற்கனவே இருக்கும் தேவதையை என்ன செய்ய என்றேன் நான் நீயோ கீழ் உதட்டை கடித்து ராஸ்கல் என்கிறாய்...

            பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே  நான்,  பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய்  என் காதல்.
,

84 comments:

Chitra said...

பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.

.......ஆத்மார்த்தமான காதல் பற்றி ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, வசந்த்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அழகான காதல்! நல்லா இருக்கு வசந்த்..

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தலைப்பே சும்மா ஜில்லுன்னு இருக்கு..

யோ வொய்ஸ் (யோகா) said...

கடைசி பந்தி அருமையா இருக்கு மாப்பு

ஸ்ரீராம். said...

சூப்பர்...

கடைசி வரிகள் டாப்.

VISA said...

என்னய்யா இது பயங்கரமா இருக்கு

பின்னோக்கி said...

க்ளாசிக். கலக்கிட்டீங்க வசந்த். காதல், கல்யாணம், குழந்தைன்னு ஒரு வாழ்க்கையையே படம் பிடித்துவிட்டீர்கள். ரொம்ப நல்லாயிருக்கு.

//வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையா

ரொம்ப நல்லாயிருக்கு. முதல் குழந்தைக்கே இப்படி சொன்னா எப்படி :)

நட்புடன் ஜமால் said...

பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.]]

துணையை காதலிப்பவர்களின் காதல் வரிகள் ...

----------------------------

நீ முத்தம் என்ற வார்த்தையுடன் பாடலை முடிக்க நான் அதே வார்த்தையை கொண்டு பாடலை ஆரம்பித்தேன் நீயோ இசைக்க ஆரம்பித்திருந்தாய்... ]]

ரொமாண்டிக் ...

சைவகொத்துப்பரோட்டா said...

கவிதைக்கதை நல்லா இருக்கு.

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ஜெயந்த் கிருஷ்ணா said...

காதலின் வெளிப்பாடு.. கவித்துவமாய்.. கச்சிதமாக...

ஒரு முறையாவது காதலித்துப்பார்க்க தோன்றுகிறது ...

Anonymous said...

பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.

பெண்களின் அதீத ஆசையும் தேவையும் எதிர்ப்பார்ப்பும் இது தான்

அசத்திட்ட வசந்த் கவிதைகளில் புதிய நடையில் எழிலாய் நடைப் போட்டிருக்கு......

taaru said...

// செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்//

classic machaan....

sathishsangkavi.blogspot.com said...

//வீட்டு வாசலை தெளித்து கொண்டிருந்தாய் எதற்க்கு வீட்டு வாசலை தெளிக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு தேவதைகள் நம் வீட்டிற்க்குள் வருவதற்க்குத்தான் என்றாய் அப்போ ஏற்கனவே இருக்கும் தேவதையை என்ன செய்ய என்றேன் நான் நீயோ கீழ் உதட்டை கடித்து ராஸ்கல் என்கிறாய்...//

ரசித்து ரசித்து படித்தேன் இவ்வரிகளை...

தமிழ் உதயம் said...

ஒரு நெகிழ்ச்சியான அனுபவக்கதை.

சுந்தரா said...

அழகான காதல் கவிதை.

sakthi said...

தபூ சங்கர்
வைரமுத்து
ரேஞ்சுல எழுத ஆரம்பிச்சுட்டே வசந்த்
தொடருங்கள்

thiyaa said...

அழகான காதல்!

சுசி said...

அழகு அழகு..

கவிதையாய் உங்க காதல்.. இல்லை காதலாய் உங்க கவிதை..

பின்றிங்க வசந்த்..

பவள சங்கரி said...

அருமை வசந்த். வெறும் காதல் வசனம் என்று படித்துக் கொண்டு வந்த எனக்கு முத்தாய்ப்பாக பிரசவ வேதனையைப் புரிந்து கொண்ட உங்கள் மனிதாபிமானம் நெகிழச் செய்கிறது......நன்றி.

அருண் பிரசாத் said...

//மின்சாரத்தில் இயங்கும் இசைக்கருவி , தலையசைத்து ஆடும் மலர் இவைகளிடம் உணர்ந்துபார் என் காதலை.//

அருமை வசந்த்

அய்யய்யோ.... உங்க கூட சேர்ந்து நானு சைட் அடிக்கறேனே! கெட்ட பசங்க

மயாதி said...

உனக்கு திடீரென என்ன நடந்தது தல?
நீயம் கேட்டுப் போயிட்டா , நம்மால போட்டி போடா முடியாதுப்பா . நீ நடத்து ....உன் அழகான காதலை .

Anonymous said...

சிறப்பாக இருக்கும் வரிகளை மட்டும் copy பண்ணி paste பண்ண நினைத்து தேடினேன்.
ஆனால் முழு பதிவையும் இங்கு paste பண்ண வேண்டியிருந்தது. அதனால் விட்டு விட்டேன்.

அவ்வளவும் ஆத்மார்த்தமான..
அழகான..
உணர்வுமிக்க.. காதலை பிரதிபலிக்கிறது.
வசந்துக்கு என் பாராட்டுக்கள்.

சிவசங்கர். said...

Vasanthu....
Arumai....

ஜெயந்தி said...

கவிதைபோல் அருமையாக இருக்கிறது.

Kala said...

ஒரு மார்கழி மாத அதிகாலையில் அரிசி மாவுக்கோலம் போட்டுக் கொண்டிருந்தபொழுது ஆவென கதறிய உன்னிடம் என்னாச்சு என்றேன் ? மாவுக்கும் காலுக்கும் வித்தியாசம் தெரியாத ஐந்தறிவு ஜந்தான எறும்பு என் காலை கடித்து விட்டது என்ற உனக்கு தெரியாதா எறும்புக்கு இனிப்பறிவு இருப்பது\\\\\\\\

வசந்த், அவ்வளவு வெல்லக்கட்டியா?
உங்கள் காதலி!
இனிப்பறிவா??
மூளையில் சக்கரைநோய் வரும்
கவனமாகப் பாத்துக் கொள்ளுங்கள்

Kala said...

செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய்
என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும்
ஆணிவேராய் என் காதல்\\\\\\\\\\

வாவ்.... அழகான உவமை
{உண்மையான அன்புக்கு காமத்தை
ஓரங்கட்டிய விதம் அழகுடா}
காதலை இவ்வளவு அழகாகப் புரிந்து
வைத்திருக்கிறீர்கள்
மொத்தத்தில்..ஒரு கதாநாயகன்
பாத்திரம் எடுத்துவிட்டீர்கள்
மனசெல்லாம்..........

எஸ்.கே said...

மிக அருமையாக உள்ளது!

R.பூபாலன் said...

எல்லோர் மனசுலயும் கோலம் போடுறிங்க வசந்த் அண்ணா ...

ரசிச்சு மாளல....

ஹைய்யோ.....

வாவ்..!.

சூப்பர்ப்...!

எவ்ளோ சொன்னாலும் போறாதுடா அம்பி........!

வால்பையன் said...

// பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.
, //

இரண்டாவது குழந்தை பிறந்த பொழுது கூடவே தான் இருந்தேன், என் மனநிலையும் இதே போல் தான் இருந்தது தல!

உங்களுக்கு எத்தனை குழந்தை தல!?

Radhakrishnan said...

அட்டகாசமான அழகிய வசன கவிதை.

சாந்தி மாரியப்பன் said...

செம அட்டகாசம்.. அனுபவிச்சு எழுதியிருக்காப்ல இருக்கு.

Anonymous said...

அழகான காதல்! கடைசி வரி அசத்தல்!

தாராபுரத்தான் said...

இனிக்கிறதுங்க...

ப்ரியமுடன் வசந்த் said...

// Chitra said...
பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.

.......ஆத்மார்த்தமான காதல் பற்றி ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க, வசந்த்!
//

மிக்க நன்றி சித்ரா மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...
தலைப்பே சும்மா ஜில்லுன்னு இருக்கு..
//

நன்றி சந்தனா நீங்க தப்பா நினைக்கலைன்னா தலைப்புக்கான விளக்கம் இந்த வைரமுத்துவின் காலப்பெருவெளியில் என்ற கவிதையை எஸ் பி பி பாடியிருக்கும் பாடலை கேட்டு பாருங்க அதில் வரும் வரிகளில் ஒன்றுதான் மனசெல்லாம் மார்கழி தெருவெல்லாம் கார்த்திகை ...

http://www.hummaa.com/music/song/Kalapperuveliyil/110314#

:(

ப்ரியமுடன் வசந்த் said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
கடைசி பந்தி அருமையா இருக்கு மாப்பு
//

நன்றி மாப்பு :)

ப்ரியமுடன் வசந்த் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
feelings
//

y man? thanks

ப்ரியமுடன் வசந்த் said...

//ஸ்ரீராம். said...
சூப்பர்...

கடைசி வரிகள் டாப்.
//

நன்றி ஸ்ரீராம் :)

ப்ரியமுடன் வசந்த் said...

// VISA said...
என்னய்யா இது பயங்கரமா இருக்கு
//

என்ன சார் செய்றது போட்டி பெருகிடுச்சு :)) நம்மல தக்க வச்சுகிறதுக்கு எவ்ளோ திங் பண்ணவேண்டியிருக்கு பாருங்க :)

ப்ரியமுடன் வசந்த் said...

// பின்னோக்கி said...
க்ளாசிக். கலக்கிட்டீங்க வசந்த். காதல், கல்யாணம், குழந்தைன்னு ஒரு வாழ்க்கையையே படம் பிடித்துவிட்டீர்கள். ரொம்ப நல்லாயிருக்கு.

//வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையா

ரொம்ப நல்லாயிருக்கு. முதல் குழந்தைக்கே இப்படி சொன்னா எப்படி :)
//

இம் இம் கற்பனையிலே இவ்ளோ நல்லா இருக்கே சார் காதல் இன்னும் நிஜத்தில் நடந்தால் எவ்ளோ நல்லாருக்கும்

ரொம்ப நன்றி சார் !

ப்ரியமுடன் வசந்த் said...

//நட்புடன் ஜமால் said...
பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.]]

துணையை காதலிப்பவர்களின் காதல் வரிகள் ...

----------------------------

நீ முத்தம் என்ற வார்த்தையுடன் பாடலை முடிக்க நான் அதே வார்த்தையை கொண்டு பாடலை ஆரம்பித்தேன் நீயோ இசைக்க ஆரம்பித்திருந்தாய்... ]]

ரொமாண்டிக் ...
//

அண்ணா எப்படியோ? :))

நன்றிண்ணா!

ப்ரியமுடன் வசந்த் said...

// சைவகொத்துப்பரோட்டா said...
கவிதைக்கதை நல்லா இருக்கு.//

நன்றி சை.கொ.ப

நிலாமதி said...

மிகவும் அருமையாய் வந்திருக்கிறது . உணர்வுபூர்வமான் காதல்.....வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். .

ப்ரியமுடன் வசந்த் said...

//வெறும்பய said...
காதலின் வெளிப்பாடு.. கவித்துவமாய்.. கச்சிதமாக...

ஒரு முறையாவது காதலித்துப்பார்க்க தோன்றுகிறது ...//

காதலித்து பார்த்துதான் சொல்லுங்களேன் எனக்கும் :)

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழரசி said...
பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.

பெண்களின் அதீத ஆசையும் தேவையும் எதிர்ப்பார்ப்பும் இது தான்

அசத்திட்ட வசந்த் கவிதைகளில் புதிய நடையில் எழிலாய் நடைப் போட்டிருக்கு......
//

எல்லாம் தங்கள் ஆசிர்வாதம்தான்!

ப்ரியமுடன் வசந்த் said...

// taaru said...
// செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்//

classic machaan....
//

நன்றி மச்சான்!

ப்ரியமுடன் வசந்த் said...

//சங்கவி said...
//வீட்டு வாசலை தெளித்து கொண்டிருந்தாய் எதற்க்கு வீட்டு வாசலை தெளிக்கிறார்கள் என்ற என் கேள்விக்கு தேவதைகள் நம் வீட்டிற்க்குள் வருவதற்க்குத்தான் என்றாய் அப்போ ஏற்கனவே இருக்கும் தேவதையை என்ன செய்ய என்றேன் நான் நீயோ கீழ் உதட்டை கடித்து ராஸ்கல் என்கிறாய்...//

ரசித்து ரசித்து படித்தேன் இவ்வரிகளை...
//

நன்றி சங்கவி !

ப்ரியமுடன் வசந்த் said...

தமிழ் உதயம் said...
ஒரு நெகிழ்ச்சியான அனுபவக்கதை.
//

நன்றி ரமேஷ் சார்!

ப்ரியமுடன் வசந்த் said...

சுந்தரா said...
அழகான காதல் கவிதை.
//

நன்றி சுந்தரா மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

sakthi said...
தபூ சங்கர்
வைரமுத்து
ரேஞ்சுல எழுத ஆரம்பிச்சுட்டே வசந்த்
தொடருங்கள்//

அவங்கள விரும்பி படிக்கிறதால சாயல் இருந்திருக்கலாம் சகோ!

ப்ரியமுடன் வசந்த் said...

தியாவின் பேனா said...
அழகான காதல்!//

நன்றி தியா!

ப்ரியமுடன் வசந்த் said...

//சுசி said...
அழகு அழகு..

கவிதையாய் உங்க காதல்.. இல்லை காதலாய் உங்க கவிதை..

பின்றிங்க வசந்த்..
//

சும்மா தானே சொல்றீங்க சுசி!

ப்ரியமுடன் வசந்த் said...

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
அருமை வசந்த். வெறும் காதல் வசனம் என்று படித்துக் கொண்டு வந்த எனக்கு முத்தாய்ப்பாக பிரசவ வேதனையைப் புரிந்து கொண்ட உங்கள் மனிதாபிமானம் நெகிழச் செய்கிறது......நன்றி.
//

மிக்க மகிழ்ச்சிங்க !நன்றிங்க நித்திலம் சிப்பிக்குள் முத்து !

ப்ரியமுடன் வசந்த் said...

//அருண் பிரசாத் said...
//மின்சாரத்தில் இயங்கும் இசைக்கருவி , தலையசைத்து ஆடும் மலர் இவைகளிடம் உணர்ந்துபார் என் காதலை.//

அருமை வசந்த்

அய்யய்யோ.... உங்க கூட சேர்ந்து நானு சைட் அடிக்கறேனே! கெட்ட பசங்க
//

அக்காகிட்ட சொல்லிக்கொடுத்திடுவேன் மாம்ஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

//மயாதி said...
உனக்கு திடீரென என்ன நடந்தது தல?
நீயம் கேட்டுப் போயிட்டா , நம்மால போட்டி போடா முடியாதுப்பா . நீ நடத்து ....உன் அழகான காதலை .
//

என்னா டாக்டரு தல படிப்பெல்லாம் முடிஞ்சு திரும்பவும் கலக்குறீங்க போல!

ப்ரியமுடன் வசந்த் said...

இந்திரா said...
சிறப்பாக இருக்கும் வரிகளை மட்டும் copy பண்ணி paste பண்ண நினைத்து தேடினேன்.
ஆனால் முழு பதிவையும் இங்கு paste பண்ண வேண்டியிருந்தது. அதனால் விட்டு விட்டேன்.

அவ்வளவும் ஆத்மார்த்தமான..
அழகான..
உணர்வுமிக்க.. காதலை பிரதிபலிக்கிறது.
வசந்துக்கு என் பாராட்டுக்கள்.
//

:)) இந்திரா பத்தாயிரம் பணம் அனுப்பினேன் கிடைச்சதா? ஹ ஹ ஹா !

ப்ரியமுடன் வசந்த் said...

//சிவசங்கர். said...
Vasanthu....
Arumai....//

நன்றிங்க சிவ சங்கர்!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஜெயந்தி said...
கவிதைபோல் அருமையாக இருக்கிறது.
//

ம்ம் வசன கவிதை மேடம் நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

// Kala said...
செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய்
என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும்
ஆணிவேராய் என் காதல்\\\\\\\\\\

வாவ்.... அழகான உவமை
{உண்மையான அன்புக்கு காமத்தை
ஓரங்கட்டிய விதம் அழகுடா}
காதலை இவ்வளவு அழகாகப் புரிந்து
வைத்திருக்கிறீர்கள்
மொத்தத்தில்..ஒரு கதாநாயகன்
பாத்திரம் எடுத்துவிட்டீர்கள்
மனசெல்லாம்..........
//

ம்ம் இன்னும் நிறைய பாத்திரம் இருக்குங்க மேடம் நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

//எஸ்.கே said...
மிக அருமையாக உள்ளது!
//

நன்றிங்க எஸ்.கே

ப்ரியமுடன் வசந்த் said...

// R.பூபாலன் said...
எல்லோர் மனசுலயும் கோலம் போடுறிங்க வசந்த் அண்ணா ...

ரசிச்சு மாளல....

ஹைய்யோ.....

வாவ்..!.

சூப்பர்ப்...!

எவ்ளோ சொன்னாலும் போறாதுடா அம்பி........!
//

சர்டா தம்பி :))

ப்ரியமுடன் வசந்த் said...

// வால்பையன் said...
// பிரசவ வலி வந்து உன்னை மருத்துவமனையில் சேர்த்தபிறகு, பிரசவ அறையின் உள்ளே நீ வெளியே நான், பிரசவ நேரத்தில் வெளிப்பட்ட உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.
, //

இரண்டாவது குழந்தை பிறந்த பொழுது கூடவே தான் இருந்தேன், என் மனநிலையும் இதே போல் தான் இருந்தது தல!

உங்களுக்கு எத்தனை குழந்தை தல!?
//

இன்னும் மேரேஜ் ஆவல தல :))

ப்ரியமுடன் வசந்த் said...

// V.Radhakrishnan said...
அட்டகாசமான அழகிய வசன கவிதை.
//

நன்றிங்க ராதாகிருஷ்ணன்!

ப்ரியமுடன் வசந்த் said...

//அமைதிச்சாரல் said...
செம அட்டகாசம்.. அனுபவிச்சு எழுதியிருக்காப்ல இருக்கு.//

ம்ம் எழுத்து வசப்படற வரைக்கும் இப்படித்தான் மேடம் எதாவது கிறுக்கிகிட்டு இருப்பேன் நன்றி மேடம்!

ப்ரியமுடன் வசந்த் said...

// மீனாக்ஷி said...
அழகான காதல்! கடைசி வரி அசத்தல்!
//

நன்றி மீனாட்க்ஷி :))

ப்ரியமுடன் வசந்த் said...

// தாராபுரத்தான் said...
இனிக்கிறதுங்க...//

நன்றிங்கய்யா!

ப்ரியமுடன் வசந்த் said...

// நிலாமதி said...
மிகவும் அருமையாய் வந்திருக்கிறது . உணர்வுபூர்வமான் காதல்.....வெற்றிக்கு என் வாழ்த்துக்கள். .
//

ஹ ஹ ஹா! மிக்க நன்றி சகோ!

Paul said...

//மாவுக்கும் காலுக்கும் வித்தியாசம் தெரியாத ஐந்தறிவு ஜந்தான எறும்பு என் காலை கடித்து விட்டது என்ற உனக்கு தெரியாதா எறும்புக்கு இனிப்பறிவு இருப்பது?//

ரொம்பவே ரசித்தேன் இந்த வரியை.. அழகு!! :)

அதிரை என்.ஷஃபாத் said...

/*மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்*/

அருமை...

இதையும் படிங்க..

www.aaraamnilam.blogspot.com

Mahi_Granny said...

இணையத்தின் தபுசங்கர் அவர்களே , உங்க அம்மா அப்பாவின் முகவரி தர முடியுமா

Aathira mullai said...

// உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.//
காதல்னா இப்படி இருக்கனும் என்று கூறியது அழகு மட்டும் இல்லை.. அகக்கல்வி (காதல் பாடமாக) உள்ளது.

காதலின் நல்லிலக்கணம் என்றும் சொல்லலாம்..

பாரதிதாசனின் குடும்ப விளக்குக் கூறும் காதலாக இனிக்கிறது பிரியமுடன் வசந்தின் காதல் இலக்கணம்.

நிலாமகள் said...

பாட்டன் வால்ட் விட்மன், அப்பன் பாரதி, சித்தப்பன் பாரதிதாசன் கிட்ட செழித்துப் பொங்கிய வசன கவிதை அழகை,எங்க பக்கத்து ஊரு அண்ணன் கண்மணி குணசேகரன் கிட்ட ரசிச்சுப் படிச்ச மிச்சமா உங்க அற்புத அழகா இந்த வசன காவியம்!(கனவுகள்+கற்பனைகள் =காகிதங்கள் படைத்த மீரா கூட நினைவுக்கு வருகிறார்.) கலக்கற தம்பி...! பெரும்ம்ம்மையா இருக்கு.திருஷ்டி கழிய நெட்டி முறிக்கிறேன்... சத்தம் கேட்குதா...?

ப்ரியமுடன் வசந்த் said...

பால் [Paul] said...
//மாவுக்கும் காலுக்கும் வித்தியாசம் தெரியாத ஐந்தறிவு ஜந்தான எறும்பு என் காலை கடித்து விட்டது என்ற உனக்கு தெரியாதா எறும்புக்கு இனிப்பறிவு இருப்பது?//

ரொம்பவே ரசித்தேன் இந்த வரியை.. அழகு!! :)
//

நன்றி பால்! :)

ப்ரியமுடன் வசந்த் said...

//அருட்புதல்வன் said...
/*மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்*/

அருமை...

இதையும் படிங்க..

www.aaraamnilam.blogspot.com
//

படிச்சுடுவோம் வருகைக்கு நன்றி பாஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

//Mahi_Granny said...
இணையத்தின் தபுசங்கர் அவர்களே , உங்க அம்மா அப்பாவின் முகவரி தர முடியுமா//

ஹ ஹ ஹா! ஏன் மஹிம்மா? மீ பாவம்!

நன்றி :))

ப்ரியமுடன் வசந்த் said...

ஆதிரா said...
// உன்னுடைய உச்சகட்ட அலறலை கேட்டதிலிருந்து செழித்த மரத்தில் இருந்து உடைந்த கிளையாய் என் காமம், மண்ணில் இன்னும் நீண்டு செல்லும் ஆணிவேராய் என் காதல்.//
காதல்னா இப்படி இருக்கனும் என்று கூறியது அழகு மட்டும் இல்லை.. அகக்கல்வி (காதல் பாடமாக) உள்ளது.

காதலின் நல்லிலக்கணம் என்றும் சொல்லலாம்..

பாரதிதாசனின் குடும்ப விளக்குக் கூறும் காதலாக இனிக்கிறது பிரியமுடன் வசந்தின் காதல் இலக்கணம்.
//

ஹேய் ஆதிரா எப்படியிருக்கீங்க? மிக்க நன்றி ஆதிரா!

ப்ரியமுடன் வசந்த் said...

நிலா மகள் said...
பாட்டன் வால்ட் விட்மன், அப்பன் பாரதி, சித்தப்பன் பாரதிதாசன் கிட்ட செழித்துப் பொங்கிய வசன கவிதை அழகை,எங்க பக்கத்து ஊரு அண்ணன் கண்மணி குணசேகரன் கிட்ட ரசிச்சுப் படிச்ச மிச்சமா உங்க அற்புத அழகா இந்த வசன காவியம்!(கனவுகள்+கற்பனைகள் =காகிதங்கள் படைத்த மீரா கூட நினைவுக்கு வருகிறார்.) கலக்கற தம்பி...! பெரும்ம்ம்மையா இருக்கு.திருஷ்டி கழிய நெட்டி முறிக்கிறேன்... சத்தம் கேட்குதா...?
//

ஹ ஹ ஹா

சகோ நான் அவ்ளோ வொர்த்தெல்லாம் இல்லை இப்போதான் நடை வண்டி பழகும் குழந்தை மாதிரி காதல் கவிதைகள் எழுதிப்பழகிகிட்டு இருக்கேன் இருந்தாலும் உங்கள் பாராட்டு , பாசம் கண்டு மிக்க மகிழ்ச்சி! நன்றி சகோ கண்களில் ஆனந்த கண்ணீருடன் ...

இந்த இணையம்தான் எவ்ளோ நல்ல மனிதர்களை உறவுகளை அறிமுகப்படுத்துகிறது ம்ம் :)

Jaleela Kamal said...

நல்ல எழுதி இருக்கீங்க

ஹுஸைனம்மா said...

கற்பனைகவிதைகள் நல்லா இருக்கு.

erodethangadurai said...

கவிதை வரிகள் அருமை..!

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

ப்ரியமுடன் வசந்த் said...

//Jaleela Kamal said...
நல்ல எழுதி இருக்கீங்க//

நன்றி சகோ!

ப்ரியமுடன் வசந்த் said...

//ஹுஸைனம்மா said...
கற்பனைகவிதைகள் நல்லா இருக்கு.//

நன்றி ஹுசைனம்மா!

ப்ரியமுடன் வசந்த் said...

//கவிதை வரிகள் அருமை..!

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/
//

நன்றிங்க!