April 16, 2011

ரொமான்டிக் ஆண் குரல்கள் !!!

ரொமாண்டிக் குரல்கள் பதிவில் பெண்களின் குரலில் வந்த பாடல்களை பார்த்தோம் இப்பொழுது ஆண்கள் குரலில் மனதை மயக்கும் குரல்கள் இதோ !!

பி பி ஸ்ரீநிவாஸ் அறிமுகமே தேவையில்லாத பிரம்மாண்டமான பாடகர் குரலில் மயக்கமருந்தை கலந்திருப்பார் போலும் முதன் முதலாக அப்பா ஒரு நாள் நான் கவலையா இருக்குறப்போ ஒரு பாட்டு பாடி காமித்தார் அப்பாவோட குரல்லயே அழகா இருந்துச்சு பிறகு ஆடியோ செண்டர் போய் பிபி ஸ்ரீநிவாஸ் ஹிட்ஸ் கேட்டு வாங்கி போட்டு கேட்டுப்பார்த்தேன் மயங்கிவிட்டேன் ஒவ்வொரு பாடலிலும் அசத்தியிருந்தார் ம்ம் சோலாவாக பாடியதில் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல் மிகப்பிடிக்கும் !!

பாவமன்னிப்பு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில்

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை"

இறுதியில் அவள் கவிஞனாக்கினாள் என்னை என்று முடிக்கும்போது இன்னும் இந்தப்பாட்டு தொடராதா என்று ஏங்க வைக்கிறது..இங்கே சென்று கேட்டுப்பாருங்கள் .. திரும்பி வந்தால் மீதியிருக்கும் தொகுப்பையும் ரசியுங்கள் :)

டூயட்டிலும் மனிதர் அழகான பாடல்கள் பாடியிருக்கிறார் பி சுசிலா மேடமோட சேர்ந்து இவர் பாடிய டூயட் போகப்போகத்தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் மிகப்பிடிக்கும் முத்துராமன் சாரும் கேஆர் விஜயா மேடமும் ஸ்ரீனிவாஸ் பி சுசிலா அவர்களின் குரலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள் Dangerous Pairs .

சர்வர் சுந்தரம் திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 

"போக போகத்தெரியும் 
இந்தப்பூவின் வாசம் புரியும்


கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன "

கேளுங்கள் இங்கே ...

அடுத்ததாக டி எம் சவுந்தர்ராஜன் அவர்கள்

இவர் இல்லையென்றால் எம்ஜிஆரும் சிவாஜியும் இல்லை என்று கூட ஒரு பேச்சிருக்கிறது அவ்வளவு தத்ரூபமாக இருவருக்கும் பொருந்திப்போன குரல் இவருடையது எம்ஜிஆருக்கு இவர் பாடிய சோலோ பாடலில் கண் போன போக்கிலே கால் போகலாமா? என்ற பாடல் பிடிக்கும்

பணம் படைத்தவன் திரைப்படத்தில்
கவிஞர் வாலியின் வரிகளில்’

மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 

"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"

எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல் கேட்டுப்பாருங்கள் இங்கே ..

இவர் நடிகர் திலகத்துக்கு டூயட்டாக பாடியதில் பூ மாலையில் ஓர் மல்லிகை என்ற பாடல் ஆரம்பமே ஹ ஹ ஹ ஹ ஆ ன்னு ஆரம்பித்து இனிமையாக இருக்கும் கேட்பதற்கு

ஊட்டி வரை உறவு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில்

"பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது"

கேட்டு நீங்களும் மயங்குங்கள் இங்கே  இருக்கிறது 

A M ராஜா அவர்களின் குரல் கேட்டிருக்கிறீர்களா காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் இவரின் குரலில் வந்த பாடல்கள். அதில் எனக்கு பிடித்த சோலோ பாடல் 

தேன் நிலவு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்

"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா
பால் நிலாவை போலே வந்த பாவையல்லவா?"

கேளுங்க கேளுங்க இங்கே 

AM ராஜா அவர்கள் சுசிலாம்மாவுடன் பாடிய டூயட் சாங்கில் தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் என்ற பாடல் என்னை ஏதோ ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சுகமான காற்று தீண்டிச்செல்லுவது போல் இருக்கும் அது எந்த மனநிலையாக இருந்தாலும் சரி ..

பெற்ற மகனை விற்ற அன்னை திரைப்படத்தில்
கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் வ்ஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில்

"தென்றல் உறங்கியபோதும் 
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?"

தழுவட்டும் தென்றல் உங்கள் காதுமடல்களை இங்கே

நடிகரும் பாடகருமான டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய பாடல் கேட்டிருக்கிறீர்களா? கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது போன்றிருக்கும் இவர் பாடிய சோலோ சாங்கில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை மிக மிகப்பிடிக்கும் கோவில்களில் இந்தப்பாடல் கேட்டால் அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்வேன் ஒரு வித வாயில் வெற்றிலை போட்டபடியே பாடுவது போன்று இருந்தாலும் ரசிக்க முடிகிறது இவரது குரலை..

திருவிளையாடல் திரைப்படத்தில்
கே வி மகாதேவன் அவர்களின் இசையில்

"இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெருஞ்சோதனை"

மனம் பக்தி பரவச நிலையடையட்டும் இங்கே 

டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய இன்னொரு மனதை மயக்கும் பாடல் செந்தமிழ் தேன் மொழியாள் கிளாசிக் ஹிட் ரொம்பவே விரும்பி கேட்பதுண்டு இசையோடு ஒன்றிப்போய்விடுவீர்கள் !!!

மாலையிட்ட மங்கை திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில்
எம் எஸ் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையில்

"செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதுசாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ ?" ( ப்ச் சான்சே இல்ல கண்ணதாசரே )

சோழவந்தான் காரரின் குரல் கேளுங்க இங்கே 

சி எஸ் ஜெயராமன் எங்கப்பாகிட்ட இருந்து அறிமுகமானவர் பராசக்தி திரைப்படத்தில் கா கா கா என்ற பாடலை பாடியவர்தான் அதே திரைப்படத்தில் தேசம் கல்வி ஞானம் என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்டுப்பார்துவிடுங்கள் சலனத்தை ஏற்படுத்தும் குரல் உடுமலை நாராயண கவியின் பாடல் வரிகள் உண்மைதான் சொல்கின்றன..

பராசக்தி திரைப்படத்தில்
ஆர் சுதர்சனம் அவர்கள் இசையில்
உடுமலை நாராயண கவியின் பாடல் வரிகளில்

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் 

காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி -குதம்பாய்
பை பையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும் 
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்"

கேட்டு உணர்ச்சி வசப்படுக இங்கே 

இவரின் இன்னொரு தெவிட்டாத பாடல் 

பாவை விளக்கு திரைப்படத்தில்
வரும் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்ற பாடல் இயல்பான நடிகர்திலகத்தின் நடிப்பில் சி எஸ் ஜெயராமன் அவர்கள் பாடிய எனக்கு மிகப்பிடித்த பாடல் 

"வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி 
என்னருகில் வந்தாள்
அழகை எல்லாம் அவள் முகத்தில் கண்டேன்"

கேட்டு ரசியுங்கள் இங்கே

இன்னும் ஒருவர் ஏ எல் ராகவன் அவர்கள் இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடலில் இருக்கும் சோகத்தையும் மீறி அனுபவிக்க முடிகிறது..

"வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க வாழ்க!!"

இங்கே சென்று கேட்டுப்பாருங்கள்

தற்கால மற்றும் இடைக்கால பாடகர்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி வணக்கம் :)


20 comments:

rajamelaiyur said...

வடை

rajamelaiyur said...

அருமையான பாடல்கள்

rajamelaiyur said...

எப்ப உள்ள பாட்டை கேட்டால் யாரு பாடுரங்கனு தெரியவில்லை

rajamelaiyur said...

மயக்கமா கலகமா.................... வண்ண தமிழ் பெண் ஒருத்தி என் எதிரே வந்தாள்.......
சித்தாடை கட்டி கிட்டு ....

What a songs.....!!!!!!!

rajamelaiyur said...

ஒட்டு போட்டாச்சு

Nagasubramanian said...

ஆம். நீங்காத நினைவுகள் ஒவ்வொரு பாடல்களும்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்கல் பதிவு..
வாழ்த்துக்கள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல்கள் பகிர்வு. மிக்க நன்றி நண்பரே.

இமா க்றிஸ் said...

நல்ல தொகுப்பு வசந்த். 'வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி' பாடல் எப்பொழுதுமே பிடிக்கும். படமாக்கி இருக்கிற விதம்.. அந்த ஐடியா, அழகு.

பொன் மாலை பொழுது said...

//தற்கால மற்றும் இடைக்கால பாடகர்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.///


அதானே பாத்தேன்!........எங்கடா நம்ம ஆளு S.P. பாலா இல்லாம ரொமாண்டிக் குரலான்னு வெறுத்து போயிட்டேன்.
தப்பிசிடீங்கன்னா:)))

ஹேமா said...

அருமையான தெரிவுகள் வசந்து.பி.பி ஸ்ரீநிவாஸ் அவர்களின் பாடல்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.பெண் ஒன்று கண்டேன்...,எந்தஊர் என்றவளே...,நேற்றுவரை நீ யாரோ...தென்னங்கீற்று ஊஞ்சலிலே....சொல்லிக்கொண்டே போகலாம் !

ஸ்ரீராம். said...

//"சி எஸ் ஜெயராமன் எங்கப்பாகிட்ட இருந்து அறிமுகமானவர்"//

யார் வசந்த்? உங்கள் அப்பா இசையமைப்பாளரா...?

ஸாதிகா said...

//குரலில் மயக்கமருந்தை கலந்திருப்பார் போலும் //அழகான வர்ணனை வசந்த்.நான் கூட அந்த அருமையான குரல் வளம் கண்டு அதிசயித்து இருக்கின்றேன்.இவரது பாடலகளை ஒரு தொகுப்பாகவே எனது வலைப்பூவில் தொகுத்து கொடுத்துள்ளேன்.நேரம் இருக்கும் பொழுது பாடல் தொகுப்பினை பாருங்கள் .

சுசி said...

அடடடடடடா.. அத்தனையும் அழகான பாடல்கள் வசந்த்.

நல்ல முயற்சி.

சாந்தி மாரியப்பன் said...

அழகழகான பாடல்கள்..

Anonymous said...

///// "வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ் வாழ்க!!"
/////////

வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!வாழ்க!!

ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ என்னை பத்தி நினைப்பே ..,மிஸ் பண்ணிடோமேன்னு

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எங்க புடிச்சீங்க இந்தக் கலெக்ஷனை.. படம் பேரு, பாடியவர், இசை, நடிச்சவங்க ன்னு முழுமையாக தொகுத்து தந்திருக்கீங்க.. நேத்து பாதி வரைக்கும் கேட்டேன்.. மீதி நாளை கேட்கணும்.. அந்த இசைத் தமிழ் பாட்டு மட்டும் அவ்வளவா புடிக்கலை :)

ப்ரியமுடன் வசந்த் said...

@ ராஜபாட்டை ராஜா raja the king என்ன ஆனாரூ? ஏன் இந்த கொலவெறி தாக்குதல் என் மேல?

@ நாக சுப்ரமணியன் நன்றி பாஸ் :)

@ சௌந்தர் நன்றிங்க

@ அருள் :(

@ வெங்கட் நாகராஜ் மிக்க நன்றி பாஸ் :)

@ இமா மேடம் ம்ம் சிவாஜி சார் அந்த கவிதையெழுதுற சீன் அந்தம்மா துள்ளி துள்ளி குதிக்கிற மாதிரி நடனம் வார்த்தைகள் இசை எல்லாமே மேட்ச் ஆகியிருக்குற பாட்டாச்சே நன்றி மேடம் :)

@ கக்கு மாணிக்கம் எஸ் பி பி சாருக்கு மட்டும் தனியா பதிவு போடலாமான்னு யோசிச்சுண்டு இருக்கேன் நன்றி

@ ஹேம்ஸ் ம்ம் ஆமாம்

@ ஸ்ரீராம் இல்ல எங்கப்பா கிட்ட இருந்து எனக்கு அறிமுகமானவர் வார்த்தை பிரயோகம் தவறாகிவிட்டதோ?

@ ஸாதிகா அக்கா கேட்டேன் நன்றிக்கா

@ சுசிக்கா நன்றி :)

@ சாரல் மேடம் டாங்ஸ் :)

@ டேய் நர்ரி ஏண்டா டாக்டர் போனா நர்ஸ் பொண்ணு இதுக்கு போய்கிட்டு கண்ண தொடச்சுக்க மச்சி :))

@ சந்தனா எங்கயும் பிடிக்கல பட் பிடிச்சது . இசைத்தமிழ் பாட்டு பிடிக்கலியா? அச்சச்சோ ம்ம் மீதியும் கேளுங்க :)

பால கணேஷ் said...

தங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். சமயமிருப்பின் வந்து பார்த்துக் கருத்திட்டால் மகிழ்வேன். நன்றி!

http://blogintamil.blogspot.in/2012/05/blog-post_05.html

arul said...

nalla pathivu