Showing posts with label ரசனை. Show all posts
Showing posts with label ரசனை. Show all posts

April 2, 2012

தாழம்பூ

திருமணம் 

கடந்த மாதம் நடந்த என்னுடைய திருமணம் சொந்தபந்தங்கள் , நண்பர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. பதிவுலகின் எஸ்ரா என்றழைக்கப்படும் நண்பர் கார்த்திகைபாண்டியன் நேரில் வந்திருந்து வாழ்த்தினார். ஏனைய நண்பர்கள் தொலைபேசியிலும் மெயிலிலும் முகப்புத்தகத்திலும் வாழ்த்தினார்கள் . தோழி ரேவதி தன் வலையில் பதிவொன்றிட்டு தன் அன்பினை வெளிப்படுத்தினார். அவருக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

மேலும் தேனி மற்றும் ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர்கள் , தேனி டி எஸ் பி , ஆண்டிபட்டி டி எஸ் பி , கோவில்பட்டி டி எஸ் பி மற்றும் ஏராளமான காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தனர் . மேலும் கவிஞர் ஞானபாரதி அவர்களும் கலந்து கொண்டு திருமணத்தை சிறப்பித்தார்.



மாங்கல்யம் தந்துனானே.... 





என்னுடைய நட்புகள்....


கார்த்திகேய பாண்டியனுடன்..




அப்பா மற்றும் உறவினர்கள் எவ்வளவோ சொல்லியும் திருமணத்திற்க்கு கோட் சூட் அணிந்து கொள்ளவில்லை ..எனக்கு பட்டுவேஷ்டி பட்டுசட்டை அணிந்திருப்பதே பிடித்திருந்தது...


திருமணம் முடிந்து வேறொரு நாள் வைகை அணைக்கு சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படம்..


ஜோவின் கலைத்திறன்...

நான் சொல்லித்தருகிறேன் கவிதை எழுதிப்பழகு என்றேன் ஒருமுறை, இன்னொருமுறை இல்லை இல்லை நீயே என் மீதான காதலில் கவிதை எழுதிவிடுவாய் என்றேன் இரண்டையும் வைத்து கார்ட்டூன் ஒன்று வரைந்திருக்கிறாள்


என்னை மாதிரி வரைந்தாளாம் அவ்வ்...


முதன்முறை அவளைப்பார்க்க அவள் ஊருக்கு சென்றபொழுது கிளியூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற வாசகத்துடன் கூடிய அவளே செய்த பொக்கேவை கொடுத்தாள்.. கிளியூர்ன்னா என்னாவாம்?கிளியூர் படிச்சீங்கன்னா புரியும்..


திருமணத்திற்க்கு பிறகொரு நாள் நான் தூங்கி கொண்டிருந்த பொழுது என் கையில் POOH கார்ட்டூனை வரைந்திருக்கிறாள். உடலிலும் முகத்திலும் ஓவியம் வரையும் கலையும் கற்றிருக்கிறாள்.இந்த கார்ட்டூனை பற்றி தெரியாதவர்கள் இந்த பதிவை படித்திடலாம்... என்ன பார்க்குறீங்க? ஆமா ஆமா பெட் கவர்லயும் அந்த கார்ட்டூன்தான் அவ்வ்வ் ...


திருமணத்திற்க்கு முதல்நாள் ஃபேசியல் பண்ணும்போது எடுத்தது த்ருஷ்டிக்கு ஹிஹிஹி...பயந்துடாதீக...



ப்ரியமுடன் வசந்த்..


April 16, 2011

ரொமான்டிக் ஆண் குரல்கள் !!!

ரொமாண்டிக் குரல்கள் பதிவில் பெண்களின் குரலில் வந்த பாடல்களை பார்த்தோம் இப்பொழுது ஆண்கள் குரலில் மனதை மயக்கும் குரல்கள் இதோ !!

பி பி ஸ்ரீநிவாஸ் அறிமுகமே தேவையில்லாத பிரம்மாண்டமான பாடகர் குரலில் மயக்கமருந்தை கலந்திருப்பார் போலும் முதன் முதலாக அப்பா ஒரு நாள் நான் கவலையா இருக்குறப்போ ஒரு பாட்டு பாடி காமித்தார் அப்பாவோட குரல்லயே அழகா இருந்துச்சு பிறகு ஆடியோ செண்டர் போய் பிபி ஸ்ரீநிவாஸ் ஹிட்ஸ் கேட்டு வாங்கி போட்டு கேட்டுப்பார்த்தேன் மயங்கிவிட்டேன் ஒவ்வொரு பாடலிலும் அசத்தியிருந்தார் ம்ம் சோலாவாக பாடியதில் காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல் மிகப்பிடிக்கும் !!

பாவமன்னிப்பு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில்

"காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை"

இறுதியில் அவள் கவிஞனாக்கினாள் என்னை என்று முடிக்கும்போது இன்னும் இந்தப்பாட்டு தொடராதா என்று ஏங்க வைக்கிறது..இங்கே சென்று கேட்டுப்பாருங்கள் .. திரும்பி வந்தால் மீதியிருக்கும் தொகுப்பையும் ரசியுங்கள் :)

டூயட்டிலும் மனிதர் அழகான பாடல்கள் பாடியிருக்கிறார் பி சுசிலா மேடமோட சேர்ந்து இவர் பாடிய டூயட் போகப்போகத்தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் என்ற பாடல் கேட்கவும் பார்க்கவும் மிகப்பிடிக்கும் முத்துராமன் சாரும் கேஆர் விஜயா மேடமும் ஸ்ரீனிவாஸ் பி சுசிலா அவர்களின் குரலுக்கு உயிர் கொடுத்திருப்பார்கள் Dangerous Pairs .

சர்வர் சுந்தரம் திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 

"போக போகத்தெரியும் 
இந்தப்பூவின் வாசம் புரியும்


கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன
கைககள் அதை மெல்ல மறைப்பதென்ன
பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு
ஆட வாராமல் இருப்பதென்ன "

கேளுங்கள் இங்கே ...

அடுத்ததாக டி எம் சவுந்தர்ராஜன் அவர்கள்

இவர் இல்லையென்றால் எம்ஜிஆரும் சிவாஜியும் இல்லை என்று கூட ஒரு பேச்சிருக்கிறது அவ்வளவு தத்ரூபமாக இருவருக்கும் பொருந்திப்போன குரல் இவருடையது எம்ஜிஆருக்கு இவர் பாடிய சோலோ பாடலில் கண் போன போக்கிலே கால் போகலாமா? என்ற பாடல் பிடிக்கும்

பணம் படைத்தவன் திரைப்படத்தில்
கவிஞர் வாலியின் வரிகளில்’

மெல்லிசை மன்னர்கள் எம் எஸ் விஸ்வநாதன் ராமமூர்த்தி அவர்களின் இசையில் 

"கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?"

எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல் கேட்டுப்பாருங்கள் இங்கே ..

இவர் நடிகர் திலகத்துக்கு டூயட்டாக பாடியதில் பூ மாலையில் ஓர் மல்லிகை என்ற பாடல் ஆரம்பமே ஹ ஹ ஹ ஹ ஆ ன்னு ஆரம்பித்து இனிமையாக இருக்கும் கேட்பதற்கு

ஊட்டி வரை உறவு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளில்
எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் இசையில்

"பூ மாலையில் ஓர் மல்லிகை
இங்கு நான் தான் தேன் என்றது
உந்தன் வீடு தேடி வந்தது
இன்னும் வேண்டுமா என்றது"

கேட்டு நீங்களும் மயங்குங்கள் இங்கே  இருக்கிறது 

A M ராஜா அவர்களின் குரல் கேட்டிருக்கிறீர்களா காதுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும் இவரின் குரலில் வந்த பாடல்கள். அதில் எனக்கு பிடித்த சோலோ பாடல் 

தேன் நிலவு திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளில்

"பாட்டுப்பாடவா பார்த்து பேசவா
பால் நிலாவை போலே வந்த பாவையல்லவா?"

கேளுங்க கேளுங்க இங்கே 

AM ராஜா அவர்கள் சுசிலாம்மாவுடன் பாடிய டூயட் சாங்கில் தென்றல் உறங்கியபோதும் திங்கள் உறங்கியபோதும் என்ற பாடல் என்னை ஏதோ ஒரு இயற்கை அழகு மிகுந்த இடத்தில் சுகமான காற்று தீண்டிச்செல்லுவது போல் இருக்கும் அது எந்த மனநிலையாக இருந்தாலும் சரி ..

பெற்ற மகனை விற்ற அன்னை திரைப்படத்தில்
கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகளில்
மெல்லிசை மன்னர்கள் வ்ஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில்

"தென்றல் உறங்கியபோதும் 
திங்கள் உறங்கியபோதும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா?"

தழுவட்டும் தென்றல் உங்கள் காதுமடல்களை இங்கே

நடிகரும் பாடகருமான டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய பாடல் கேட்டிருக்கிறீர்களா? கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்ந்தது போன்றிருக்கும் இவர் பாடிய சோலோ சாங்கில் இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை மிக மிகப்பிடிக்கும் கோவில்களில் இந்தப்பாடல் கேட்டால் அங்கேயே நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்வேன் ஒரு வித வாயில் வெற்றிலை போட்டபடியே பாடுவது போன்று இருந்தாலும் ரசிக்க முடிகிறது இவரது குரலை..

திருவிளையாடல் திரைப்படத்தில்
கே வி மகாதேவன் அவர்களின் இசையில்

"இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை
நீ இருக்கையிலே எனக்கு பெருஞ்சோதனை"

மனம் பக்தி பரவச நிலையடையட்டும் இங்கே 

டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடிய இன்னொரு மனதை மயக்கும் பாடல் செந்தமிழ் தேன் மொழியாள் கிளாசிக் ஹிட் ரொம்பவே விரும்பி கேட்பதுண்டு இசையோடு ஒன்றிப்போய்விடுவீர்கள் !!!

மாலையிட்ட மங்கை திரைப்படத்தில்
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளில்
எம் எஸ் விஸ்வநாதன் ராம்மூர்த்தி இசையில்

"செந்தமிழ் தேன்மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்
பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலைகுனிவாள்

காற்றினில் பிறந்தவளோ
புதுசாய் கற்பனை வடித்தவளோ
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ ?" ( ப்ச் சான்சே இல்ல கண்ணதாசரே )

சோழவந்தான் காரரின் குரல் கேளுங்க இங்கே 

சி எஸ் ஜெயராமன் எங்கப்பாகிட்ட இருந்து அறிமுகமானவர் பராசக்தி திரைப்படத்தில் கா கா கா என்ற பாடலை பாடியவர்தான் அதே திரைப்படத்தில் தேசம் கல்வி ஞானம் என்று ஆரம்பிக்கும் பாடல் கேட்டுப்பார்துவிடுங்கள் சலனத்தை ஏற்படுத்தும் குரல் உடுமலை நாராயண கவியின் பாடல் வரிகள் உண்மைதான் சொல்கின்றன..

பராசக்தி திரைப்படத்தில்
ஆர் சுதர்சனம் அவர்கள் இசையில்
உடுமலை நாராயண கவியின் பாடல் வரிகளில்

"தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசையெல்லாம்
காசு முன் செல்லாதடி குதம்பாய் 

காட்சியான பணம் கைவிட்டு போனபின்
சாட்சி கோர்ட்டு ஏறாதடி -குதம்பாய்
பை பையாய் பொன் கொண்டோர்
பொய் பொய்யாய் சொன்னாலும் 
மெய் மெய்யாய் போகுமடி - குதம்பாய்"

கேட்டு உணர்ச்சி வசப்படுக இங்கே 

இவரின் இன்னொரு தெவிட்டாத பாடல் 

பாவை விளக்கு திரைப்படத்தில்
வரும் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்ற பாடல் இயல்பான நடிகர்திலகத்தின் நடிப்பில் சி எஸ் ஜெயராமன் அவர்கள் பாடிய எனக்கு மிகப்பிடித்த பாடல் 

"வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி 
என்னருகில் வந்தாள்
அழகை எல்லாம் அவள் முகத்தில் கண்டேன்"

கேட்டு ரசியுங்கள் இங்கே

இன்னும் ஒருவர் ஏ எல் ராகவன் அவர்கள் இவர் நெஞ்சில் ஓர் ஆலயம் திரைப்படத்தில் பாடிய எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடலில் இருக்கும் சோகத்தையும் மீறி அனுபவிக்க முடிகிறது..

"வருவாய் என நான் தனிமையில் நின்றேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரை காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க
வாழ்க வாழ்க!!"

இங்கே சென்று கேட்டுப்பாருங்கள்

தற்கால மற்றும் இடைக்கால பாடகர்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி வணக்கம் :)


December 1, 2010

ரொமான்டிக் குரல்கள்!

பெண்கள் அழகால் மட்டுமல்ல குரலாலும் வசியப்படுத்திவிடுவார்கள் . சில பெண்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் அவர்கள் பேசுவதே புரியாவிட்டாலும் அந்த குரலுக்காகவே சிலமணி நேரங்கள் என்ன வருடங்களையே இழந்தவர்கள் இருக்கலாம்!

எனக்கு பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் முதன் முதலாக பாடல் பற்றிய பதிவு எழுதுகிறேன்.

திரு ஜெயந்த் கிருஷ்ணா எனும் வெறும்பய அவர்களின் தொடர் அழைப்பிற்கிணங்க எனக்கு பிடித்த பெண்குரல்களில் வந்த பாடல்களின் தொகுப்பை நீங்களும் நேரமிருந்தால் கேளுங்கள்...

முதலில் புதிய பறவை என்ற திரைப்படத்தில் திருமதி பி.சுசீலா அவர்கள் பாடிய உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடல் . இந்த பாடல் எனக்கு இசைக்காக மட்டுமல்ல சரோஜாதேவியாரின் முகபாவனைகளுக்காகவே மிகப்பிடிக்கும் யூட்யூபில் இதற்கான வீடியோ லிங் கிடைக்கவில்லை என்றாவது இந்த பாடலின் வீடியோ கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்....

இந்த பாடலில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவர்களின் பியானோ சாக்ஸபோனுக்கு இணையாக சுசீலா அவர்களின் மயக்கும் குரல், அத்தோடு

"நிலவில்லா வானம் நீரில்லா மேகம் 
பேசாத பெண்மை பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப்பாடச் சொன்னால் என்ன பாடத்தோன்றும்?"
என்ற கவி வரிகளிலும் மனம் லயித்துதான் போகிறது,

"காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை" எனும் வரிகள் வரும் இடத்தில் வெட்கப்படுவது இப்படித்தான் என ஒரு வகுப்பே நடத்துகிறார் சரோஜா தேவியார்.. இங்கே சென்றும் கேட்டுப்பாருங்கள்!



தளபதி திரைப்படத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் இசையில் திருமதி எஸ். ஜானகி அவர்கள் தன் கணீர் குரலில் பாடிய சின்னத்தாயவள் என்ற பாடல் இங்கு வந்தபிறகு நிறைய தடவை கேட்டிருக்கிறேன் . அம்மாவை எப்பொழுதும் மறக்கமுடியாதுதான் ஆனால் இந்தப்பாடல் கேட்கும்போது அம்மா அருகில் இருப்பது போன்ற உணர்வு.

"தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர "

வாலியின் இந்த வரிகளுக்கு ஜானகியம்மா உயிர் கொடுத்திருப்பார் இந்தப்பாடலில். சூப்பர்ஸ்டார் தனது தாயைக்கண்டதும் அம்மா என்றழைக்க வாயெடுத்து பின்பு சொல்லமுடியாமல் தவிக்கும் இடத்தில் சிறப்பாக நடித்திருப்பார் ..இங்கு சென்று பாருங்கள்



சாமி திரைப்படத்தில் ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் கே.எஸ்.சித்ரா அவர்கள் பாடிய இதுதானா இவன்தானா என்ற பாடல் கேட்கமட்டுமல்ல பார்க்கவும் மிகப்பிடிக்கும் ஏன் பிடிக்கும் அப்படின்னு எல்லாம் தெரியாது இந்தப்பாடல்தான் என்னோட நிறைய காதல் பதிவுகளுக்கு இம்ப்ரெஸன்..

"ஞாயிறு மதியம் சமையல் உனது 
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கைபார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய் 
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க 
வீட்டினில் நீயொரு குழந்தையாய் சிணுங்க 
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க 
இருவரின் உலகமும் இரு வரி சுருங்க 
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே 
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே" 

இந்த வரிகளில் சித்ரா அவர்களின் ஏற்ற இறக்கத்துடன் வேகத்தை குறைத்தும் அதிகப்படுத்தியும் சிறப்பாக பாடியிருப்பார்

இந்த இடத்தில் புதுமணத்தம்பதிகள் விக்ரம் த்ரிஷா இவர்களின் நடிப்பு ரொமாண்டிக் ரகம்.. பார்க்க..






சத்ரியன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய மாலையில் யாரோ மனதோடு பேச என்னுடைய ஃபேவரைட் பாடல் ஸ்வர்ணலதா அவர்களின் குரல் மயக்கியே வைத்திருக்கிறது என்னை இன்னும்...

"கரைமேல் நானும் 
காற்று வாங்கி விண்ணை பார்க்க 
கடல்மீன் கூட்டம் 
ஓடிவந்து கண்ணைப்பார்க்க 
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக்கூடுமோ? 
அலைகள் வெள்ளி ஆடைபோல உடலின் மீது ஆடுமோ"

என்று இயற்கையை ரசிக்கும் ஒரு பெண்ணின் குரல்...... பார்க்க 


முகவரி திரைப்படத்தில் தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் இசையில் ஹரிணி அவர்கள் பாடிய ஹே ஹே கீச்சுக்கிளியே பாடல் இனிமையான கானம்...

"உயிர்களின் சுவாசம் காற்று 
அந்தகாற்றின் சுவாசம் கானம் 
உலகே இசையே 
எந்திர வாழ்க்கையின் இடையே 
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே 
எல்லாம் இசையே 
காதல் வந்தால் அட அங்கும் இசைதான் 
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான் 
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால் 
அதை தூங்க வைப்பதும் இந்த இசைதான் "


கேட்டுப்பாருங்கள் இசையை




புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையில் பாம்பேஜெயஸ்ரீ அவர்கள் பாடிய மலர்களே மலர்களே பாடல் கிறங்கடிக்கும் உங்களை கேட்டுப்பாருங்கள்..

கவிதாயினி தாமரையின் கவிதை

"ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
 யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டும் மாறும் ஆசை
எல்லோருக்கும் இருக்கிறதே"


ம்ம் இவரின் அனைத்துப்பாடல்களுமே மிகப்பிடிக்கும் இது மிகமிகப்பிடிக்கும் பாடலை பார்க்க...



பொக்கிஷம் திரைப்படத்தில் சபேஷ் முரளியின் இசையில் நிலா நீ வானம் காற்று பாடலின் பிற்பாதியில் சின்மயியின் சில்லென்ற குரலில்...

"அன்புள்ள மன்னா அன்புள்ள கள்வனே
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே

அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட"



அன்பை மழையா பொழியுறாங்க மகரந்த வாய்ஸ் இவங்களோடது செம்மையான லக்...பெரு மூச்சு மட்டும்தான் வருது,,, சோலோவா பாடியதைவிட டூயட் பாடல்கள் இவருக்கு செம்ம ஹிட்டாவுது... பார்க்க





சங்கமம் திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிய சௌக்கியமா கண்ணே சௌக்கியமா கர்னாட்டிக் தாலாட்டு...

கூடவே வைரமுத்து அவர்களின் கவிமழை

"சூரியன் வந்து வாவெனும்போது 
என்ன செய்யும் பனியின் துளி 
கோடி கையில் என்னை கொள்ளையிடு 
தோடி கையில் என்னை அள்ளியெடு "

இந்த வரிகள் வரும் இடத்திலும் பாடலின் கடைசியிலும் தாண்டவமாடியிருக்கிறார் நித்யஸ்ரீ ...


இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன அதையெல்லாம் பிரிதொரு நாளில் பார்ப்போம்...!