December 1, 2010

ரொமான்டிக் குரல்கள்!

பெண்கள் அழகால் மட்டுமல்ல குரலாலும் வசியப்படுத்திவிடுவார்கள் . சில பெண்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் அவர்கள் பேசுவதே புரியாவிட்டாலும் அந்த குரலுக்காகவே சிலமணி நேரங்கள் என்ன வருடங்களையே இழந்தவர்கள் இருக்கலாம்!

எனக்கு பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் முதன் முதலாக பாடல் பற்றிய பதிவு எழுதுகிறேன்.

திரு ஜெயந்த் கிருஷ்ணா எனும் வெறும்பய அவர்களின் தொடர் அழைப்பிற்கிணங்க எனக்கு பிடித்த பெண்குரல்களில் வந்த பாடல்களின் தொகுப்பை நீங்களும் நேரமிருந்தால் கேளுங்கள்...

முதலில் புதிய பறவை என்ற திரைப்படத்தில் திருமதி பி.சுசீலா அவர்கள் பாடிய உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடல் . இந்த பாடல் எனக்கு இசைக்காக மட்டுமல்ல சரோஜாதேவியாரின் முகபாவனைகளுக்காகவே மிகப்பிடிக்கும் யூட்யூபில் இதற்கான வீடியோ லிங் கிடைக்கவில்லை என்றாவது இந்த பாடலின் வீடியோ கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்....

இந்த பாடலில் மெல்லிசைமன்னர் விஸ்வநாதன் அவர்களின் பியானோ சாக்ஸபோனுக்கு இணையாக சுசீலா அவர்களின் மயக்கும் குரல், அத்தோடு

"நிலவில்லா வானம் நீரில்லா மேகம் 
பேசாத பெண்மை பாடாத உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப்பாடச் சொன்னால் என்ன பாடத்தோன்றும்?"
என்ற கவி வரிகளிலும் மனம் லயித்துதான் போகிறது,

"காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை" எனும் வரிகள் வரும் இடத்தில் வெட்கப்படுவது இப்படித்தான் என ஒரு வகுப்பே நடத்துகிறார் சரோஜா தேவியார்.. இங்கே சென்றும் கேட்டுப்பாருங்கள்!



தளபதி திரைப்படத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா அவர்களின் இசையில் திருமதி எஸ். ஜானகி அவர்கள் தன் கணீர் குரலில் பாடிய சின்னத்தாயவள் என்ற பாடல் இங்கு வந்தபிறகு நிறைய தடவை கேட்டிருக்கிறேன் . அம்மாவை எப்பொழுதும் மறக்கமுடியாதுதான் ஆனால் இந்தப்பாடல் கேட்கும்போது அம்மா அருகில் இருப்பது போன்ற உணர்வு.

"தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர "

வாலியின் இந்த வரிகளுக்கு ஜானகியம்மா உயிர் கொடுத்திருப்பார் இந்தப்பாடலில். சூப்பர்ஸ்டார் தனது தாயைக்கண்டதும் அம்மா என்றழைக்க வாயெடுத்து பின்பு சொல்லமுடியாமல் தவிக்கும் இடத்தில் சிறப்பாக நடித்திருப்பார் ..இங்கு சென்று பாருங்கள்



சாமி திரைப்படத்தில் ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் கே.எஸ்.சித்ரா அவர்கள் பாடிய இதுதானா இவன்தானா என்ற பாடல் கேட்கமட்டுமல்ல பார்க்கவும் மிகப்பிடிக்கும் ஏன் பிடிக்கும் அப்படின்னு எல்லாம் தெரியாது இந்தப்பாடல்தான் என்னோட நிறைய காதல் பதிவுகளுக்கு இம்ப்ரெஸன்..

"ஞாயிறு மதியம் சமையல் உனது 
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கைபார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய் 
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க 
வீட்டினில் நீயொரு குழந்தையாய் சிணுங்க 
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க 
இருவரின் உலகமும் இரு வரி சுருங்க 
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே 
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே" 

இந்த வரிகளில் சித்ரா அவர்களின் ஏற்ற இறக்கத்துடன் வேகத்தை குறைத்தும் அதிகப்படுத்தியும் சிறப்பாக பாடியிருப்பார்

இந்த இடத்தில் புதுமணத்தம்பதிகள் விக்ரம் த்ரிஷா இவர்களின் நடிப்பு ரொமாண்டிக் ரகம்.. பார்க்க..






சத்ரியன் திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் ஸ்வர்ணலதா அவர்கள் பாடிய மாலையில் யாரோ மனதோடு பேச என்னுடைய ஃபேவரைட் பாடல் ஸ்வர்ணலதா அவர்களின் குரல் மயக்கியே வைத்திருக்கிறது என்னை இன்னும்...

"கரைமேல் நானும் 
காற்று வாங்கி விண்ணை பார்க்க 
கடல்மீன் கூட்டம் 
ஓடிவந்து கண்ணைப்பார்க்க 
அடடா நானும் மீனைப் போல கடலில் பாயக்கூடுமோ? 
அலைகள் வெள்ளி ஆடைபோல உடலின் மீது ஆடுமோ"

என்று இயற்கையை ரசிக்கும் ஒரு பெண்ணின் குரல்...... பார்க்க 


முகவரி திரைப்படத்தில் தேனிசைத்தென்றல் தேவா அவர்களின் இசையில் ஹரிணி அவர்கள் பாடிய ஹே ஹே கீச்சுக்கிளியே பாடல் இனிமையான கானம்...

"உயிர்களின் சுவாசம் காற்று 
அந்தகாற்றின் சுவாசம் கானம் 
உலகே இசையே 
எந்திர வாழ்க்கையின் இடையே 
நெஞ்சில் ஈரத்தில் புசிவதும் இசையே 
எல்லாம் இசையே 
காதல் வந்தால் அட அங்கும் இசைதான் 
கண்ணீர் வந்தால் அட அங்கும் இசைதான் 
தொட்டில் குழந்தை ஒன்று அழுதால் 
அதை தூங்க வைப்பதும் இந்த இசைதான் "


கேட்டுப்பாருங்கள் இசையை




புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்திலிருந்து யுவன் ஷங்கர் ராஜா அவர்களின் இசையில் பாம்பேஜெயஸ்ரீ அவர்கள் பாடிய மலர்களே மலர்களே பாடல் கிறங்கடிக்கும் உங்களை கேட்டுப்பாருங்கள்..

கவிதாயினி தாமரையின் கவிதை

"ஆடைகள் சுமைதானே
அதை முழுதும் நீக்கிவிட்டு குளிப்பேன்
 யாவரேனும் பார்ப்பார்கள் என்ற
கவலையேதுமின்றி களிப்பேன்
குழந்தையென மீண்டும் மாறும் ஆசை
எல்லோருக்கும் இருக்கிறதே"


ம்ம் இவரின் அனைத்துப்பாடல்களுமே மிகப்பிடிக்கும் இது மிகமிகப்பிடிக்கும் பாடலை பார்க்க...



பொக்கிஷம் திரைப்படத்தில் சபேஷ் முரளியின் இசையில் நிலா நீ வானம் காற்று பாடலின் பிற்பாதியில் சின்மயியின் சில்லென்ற குரலில்...

"அன்புள்ள மன்னா அன்புள்ள கள்வனே
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே

அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
என்ன தான் சொல்ல சொல் நீயே
பேர் அன்பிலே ஒன்று நான் சேர்ந்திட
வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட"



அன்பை மழையா பொழியுறாங்க மகரந்த வாய்ஸ் இவங்களோடது செம்மையான லக்...பெரு மூச்சு மட்டும்தான் வருது,,, சோலோவா பாடியதைவிட டூயட் பாடல்கள் இவருக்கு செம்ம ஹிட்டாவுது... பார்க்க





சங்கமம் திரைப்படத்தில் ஏ ஆர் ரஹ்மானின் இசையில் நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிய சௌக்கியமா கண்ணே சௌக்கியமா கர்னாட்டிக் தாலாட்டு...

கூடவே வைரமுத்து அவர்களின் கவிமழை

"சூரியன் வந்து வாவெனும்போது 
என்ன செய்யும் பனியின் துளி 
கோடி கையில் என்னை கொள்ளையிடு 
தோடி கையில் என்னை அள்ளியெடு "

இந்த வரிகள் வரும் இடத்திலும் பாடலின் கடைசியிலும் தாண்டவமாடியிருக்கிறார் நித்யஸ்ரீ ...


இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன அதையெல்லாம் பிரிதொரு நாளில் பார்ப்போம்...!

53 comments:

மாணவன் said...

அனைத்து பாடல்களுமே அருமையான் தேர்வு அண்ணே,

சூப்பர் கலக்கீட்டீங்க..

மாணவன் said...

//"தாயழுதாளே நீ வர
நீ அழுதாயே தாய் வர "//

சின்னத்தாயவள் இந்த பாடலை கேட்கும்போது என்னையறிமாலே அழுது விடுவேன் அந்தளவுக்கு உணர்வுகளுடன் நெகிழ்ச்சியும் கலந்து ஜானகி அம்மாவின் குரலில் ராகதேவன் இசையும் நம் மனதை கரைய வைத்து விடும்,

இந்தப் பாடல் தொடங்குவதற்கு முன் தொடக்க இசை யப்பா சான்சே இல்ல...

Anonymous said...

சிறப்பான ரசனை மச்சி!
மலர்களே மலர்களே பாட்டு என்னோட லிஸ்ட்லையும் வரப் போகுது.
//புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்திலிருந்து ஹாரீஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் //
அது யுவன் ஷங்கர் ராஜா பாஸ்!

மாணவன் said...

//"அன்புள்ள மன்னா அன்புள்ள கள்வனே
அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
அன்புள்ள படவா அன்புள்ள திருடா
அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே//

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் யுகபாரதி என்று நினைக்கிறேன்....

சின்மயி குரலில்... என்ன குரல்யா அது... பாடல்களுக்கு ஏற்றார்போல் குரலில் வித்தியாசப்படுத்துவது தனிச்சிறப்பு எனக்கும் மிகவும் பிடித்த பாடல்...

ஹரிஸ் Harish said...

சின்ன தாயவள்..மாலையில் யாரோ..இந்த ரெண்டு பாடல்களும் என்னோட பேவரைட்..

நல்ல தெரிவுகள்..நல்லா எழுதீருக்கீங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//திரு ஜெயந்த் கிருஷ்ணா எனும் வெறும்பய//

என்ன மரியாதை? என்ன மரியாதை?

Philosophy Prabhakaran said...

முதலில் தலைப்பை ரொமாண்டிக் குறள்கள் என்று தவறாக படித்துவிட்டு உங்களிடம் இருந்து வேறு மாதிரியான பதிவு ஒன்றினை எதிர்பார்த்தேன்... உள்ளே வந்து பார்த்தால் தான் குரல்கள் என்று புரிகிறது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

அனைத்து பாடல்களுமே அருமையான் தேர்வு அண்ணே,

சூப்பர் கலக்கீட்டீங்க..//

என்ன கலக்கிட்டாரா? என்னமோ எல்லா பாட்டையும் அவரே எழுதுன மாதிரி. போங்க தம்பி. போய் வேலையைப் பாருங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அவர்கள் பாடிய மலர்களே மலர்களே பாடல் கிறங்கடிக்கும் உங்களை கேட்டுப்பாருங்கள்..

My favorite

ஹேமா said...

வசந்து....என்னோட தெரிவுகள் எல்லாத்தையும் சொல்லிட்டோமோ...காணோமேன்னு யோசிச்சேன்.சரி சரி...ஒன்றைவிட ஒன்று ரசிப்பால் உயர்ந்தது !

நீங்கள் ரசிப்பின் காதலன் !

ராமலக்ஷ்மி said...

அருமையான பாடல்களின் தொகுப்பு.

Unknown said...

நல்ல தொகுப்பு. எனக்கும் பிடித்த பல பாடல்கள் இதில் உள்ளன.

Chitra said...

Good selections. :-)

வைகை said...

நல்ல கலெக்சன் வசந்த்!! எனக்கு ஒரு பாடல், இன்றைக்கு கூட எங்கு பாடினாலும் நின்று கேட்பேன், படம் தெரியாது பாடகி வாணி ஜெயராம் என்று நினைக்கிறேன்! " ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா" இளையராஜாவின் இசை தாண்டவம் இது!!!

மாணவன் said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மாணவன் said...

அனைத்து பாடல்களுமே அருமையான் தேர்வு அண்ணே,

சூப்பர் கலக்கீட்டீங்க..//

என்ன கலக்கிட்டாரா? என்னமோ எல்லா பாட்டையும் அவரே எழுதுன மாதிரி. போங்க தம்பி. போய் வேலையைப் பாருங்க..//

ரமேஷ் அண்ணே, பாடல்கள் தேர்வு செய்ததில் கலக்கலான தேர்வு என்று சொல்ல வந்தேன் அண்ணே,

ஊர்ல எல்லோரும் 10,15,அண்ணன்களோட நல்ல சந்தோஷமா இருக்காங்க,இவர் ஒருத்தர சமாளிக்கிறதுக்கு நான் படற அவஸ்தை அய்ய்ய்ய்யோ.....தாங்க முடியலடா சாமீய்ய்ய்ய்....

வேல்பாண்டி said...

புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்துக்கு இசை யுவன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமையான தேர்வுகள் நண்பரே.. அழைப்பை ஏற்று எழுதியதற்கு மிக்க நன்றி....

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//திரு ஜெயந்த் கிருஷ்ணா எனும் வெறும்பய//

///


காதல் இளவரசன் அப்படீன்னு சொன்னதுக்காக இப்படி ஒரு மரியாதையா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//திரு ஜெயந்த் கிருஷ்ணா எனும் வெறும்பய//

என்ன மரியாதை? என்ன மரியாதை?

//

மரியாதை குடுத்தா பொறுக்காதே.. ஆனாலும் இந்த மரியாதை கொஞ்சம் அதிகம் போல தானிருக்கு..

ஆனந்தி.. said...

உங்களுக்கு நல்ல ரசனை வசந்த்...)))

கருடன் said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//My favorite//

என்ன My favorite? உன் favorite யாரும் கேக்க கூடாதா?? இல்லை யாருக்கும் favorite இல்லையா?? பெரிய சனாதிபதி இதுல இவருக்கு favorite . போ.. போய் வலைச்சரத்துல எல்லர் முன்னடி முட்டி போடு...

கருடன் said...

@வசந்த்

மாப்பு நீ என்னை ஏமாத்திட்டா... தலைப்ப பார்த்து எதோ கால் செண்டரில் வேலை செய்யர நாலு அல்லது ஐந்து புள்ளைங்க வாய்ஸ் ரெக்கர்ட் பண்ணி போட்டு இருப்ப நினைச்சேன்.. காலைலே மூட் அவுட் பண்ணிட்ட... :(

ஆர்வா said...

எல்லாப்பாடல் தேர்வும் அருமை.. எனக்கு மிகப்பிடித்த குரல் ஸ்வர்ண்லதாவுடையது.. அதுவும் எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலை கேட்டால் என் உலகம் அந்த நொடியில் எல்லா இயக்கத்தையும் நிறுத்திவிடும்.. அருமையாக எழுதி இருக்கிறீர்கள் வசந்த்.

Ramesh said...

செம தொகுப்புங்க.. பயங்கர ரசனையான ஆளா இருப்பீங்க போல.. இதுல உன்னை ஒன்று கேட்பேனும்.. புதுக்கோட்டையிலிருந்து சரவணன் பட மலர்களே மலர வேண்டாம் ஓய்வெடுங்கள்.. பாட்டும்.. என்னோட ஃபேவரிட்..

தமிழ் உதயம் said...

சத்ரியன் பாடல் பலராலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Anonymous said...

நல்ல தேர்வு.
பாடல்களனைத்தும் அருமை.

செ.சரவணக்குமார் said...

//பெண்கள் அழகால் மட்டுமல்ல குரலாலும் வசியப்படுத்திவிடுவார்கள் . சில பெண்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் அவர்கள் பேசுவதே புரியாவிட்டாலும் அந்த குரலுக்காகவே சிலமணி நேரங்கள் என்ன வருடங்களையே இழந்தவர்கள் இருக்கலாம்!//

உண்மை வசந்த். அருமையான பகிர்வு. பாடல் தேர்வுகள் அனைத்தும் அருமை.

Madhavan Srinivasagopalan said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@வசந்த்

மாப்பு நீ என்னை ஏமாத்திட்டா... தலைப்ப பார்த்து எதோ கால் செண்டரில் வேலை செய்யர நாலு அல்லது ஐந்து புள்ளைங்க வாய்ஸ் ரெக்கர்ட் பண்ணி போட்டு இருப்ப நினைச்சேன்.. காலைலே மூட் அவுட் பண்ணிட்ட... :(
//

Ha.. Ha..

Call Center girls

-- centera marandhittiyaa, terraru ?

Unknown said...

பாட்டுதான் ... மனசுக்குள்ள நிக்கும் பாட்டுதான் ...

அருண் பிரசாத் said...

மாம்ஸ்... நான் ஏதோ கவிதை எழுதி இருக்கியோனு நினைச்சேன்....


நல்ல வேளை தப்பிச்சேன்...

THOPPITHOPPI said...

///////
பெண்கள் அழகால் மட்டுமல்ல குரலாலும் வசியப்படுத்திவிடுவார்கள் . சில பெண்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் அவர்கள் பேசுவதே புரியாவிட்டாலும் அந்த குரலுக்காகவே சிலமணி நேரங்கள் என்ன வருடங்களையே இழந்தவர்கள் இருக்கலாம்!
/////////

இதனால்தான் தொலைப்பேசியில் வரும் அழைப்புகளுக்கு ஏமார்ந்து விடுகிறார்கள்

sakthi said...

அனைத்து பாடல்களும் எனக்கு மிகப்பிடித்த நான் ரசித்த பாடல்கள் !!!

நன்றி சகோ பகிர்விற்கு

செல்வா said...

//"சூரியன் வந்து வாவெனும்போது
என்ன செய்யும் பனியின் துளி
கோடி கையில் என்னை கொள்ளையிடு
தோடி கையில் என்னை அள்ளியெடு "//

எனக்கும் இந்தப் பாட்டுல இந்த வரிகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அண்ணா ., !!

ஜெயந்தி said...

எல்லாமே சூப்பர் பாட்டுங்க.

சுசி said...

ரொம்ப நல்ல பாடல்கள் வசந்த். தொடருங்க..

நிலாமகள் said...

நல்ல ரசனைக்காரனப்பா நீ!!

Priya said...

அருமையான தேர்வு... அனைத்து பாடல்களுமே இனிமையிலும் இனிமை!

நிலாமதி said...

பாடல்களின் தேர்வும் அதற்கான் விளக்கமும் மிக மிக அருமை. பாராட்டுகள.

Anonymous said...

எல்லாமே அருமையான தேர்வுகள்

ஸ்ரீராம். said...

எல்லாமே நல்ல பாடல்கள். ஐந்து பத்து பாடல்களுக்குள் அடக்க முடியுமா என்ன?

erodethangadurai said...

மிக நல்ல பதிவு... வாழ்த்துக்கள்...!

தயவு செய்து என்னக்கு போன் செய்யாதிங்க .....! ப்ளீஸ் .....
http://erodethangadurai.blogspot.com/

சௌந்தர் said...

பெண்கள் அழகால் மட்டுமல்ல குரலாலும் வசியப்படுத்திவிடுவார்கள் . சில பெண்களின் குரல் கேட்டுக்கொண்டே இருக்கத்தோன்றும் அவர்கள் பேசுவதே புரியாவிட்டாலும் அந்த குரலுக்காகவே சிலமணி நேரங்கள் என்ன வருடங்களையே இழந்தவர்கள் இருக்கலாம்!

நீங்க செய்த அறிமுகம் நல்லா இருக்கே இது கவிதை மாதிரி இருக்கு

வினோ said...

அருமையான தேர்வுகள்...

thenndral said...

@vasanth,
unga blog theevira[vathi illa] visiri, "winner dont do different things, they do the things differently" intha quotes yetha matrhi neenga think seiureenga...All the best for your upcoming posts.

@vaikai
Movie: Ananda Kummi
Music: Illayaraja
Singers: SP Sylaja and S Janaki
Year of release: 1984
nanum ungala matri thaan, enga padinallum ninu ketutu poven,ennaku romba pidicha pattu.

ஆ.ஞானசேகரன் said...

அருமையான பகிர்வு வாழ்த்துகள்

Thenammai Lakshmanan said...

எனக்குப் பிடித்த பானுப்பிரியாவின் பாடலை ஃபேஸ்புக்கில் போட்டு இருக்கேன் உங்க பேரோடு..பாருங்க வசந்த..:))

ஜி.ராஜ்மோகன் said...

சின்னத்தாய் அவள் பாடலை இரவில் கேட்டால் தாலாட்டு மாதரியே இருக்கும். பாடல்கள் தேர்வு அருமை. எனக்கு பிடித்த சில
பாடல்கள் "நான் உன்னை வாழ்த்திபாடுகிறேன் நீ வர வேண்டும்", " நாளை இந்த வேளை பார்த்து ஓடி வாநிலா" , "மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவோ" , " நீ வருவாய் என நான் நினைத்தேன்" .
http://www.grajmohan.blogspot.com

Vijayakrishnan said...

Nice selection mate...

'பரிவை' சே.குமார் said...

அனைத்து பாடல்களுமே அருமையான் தேர்வு.

Unknown said...

மிகவும் பிடித்தமான பாடல்கள்.. அருமையான தேர்வுகள்....

Anonymous said...

ellamey ennaiyum asaithiya urukiya padalgal...nalla thervu un rasanai therigirathu vasanth....

ragasiyam : nanum nalla paduven hehhehehe tharperumai

Anonymous said...

நல்ல தேர்வு.
பாடல்களனைத்தும் அருமை....
அதிலும் மாலையில் யாரோ ....
nice one

Jaleela Kamal said...

அருமையான் தேர்வு,
எல்லோருக்கும்
உன்னை ஒன்று கேட்பேன் தான் ரொம்ப பிடிச்சிருக்கு,

வாஙக் அப்ப்படியே அமுத கானம் என் பக்கமும் வந்து கேட்டு மகிழுங்கள்