அப்பாவின் அறிமுகத்தின் பேரில் பார்த்த திரைப்படம் Cast Away இந்த உலகில் சில மனிதர்களுக்கு தனிமை மிகவும் பிடித்த விஷயமாக இருக்கலாம் பலருக்கு தனிமையில் இருப்பது வெறுமையாகவும் தோன்றும் . தமிழில் தனிமையிலே இனிமை காணமுடியுமா? என்ற பாடல் கூட இருக்கிறது. சிலரால் ஒரு ஐந்து நிமிடம் யாரிடமாவது பேசாவிட்டால் எதையோ இழந்ததைப்போல் இருப்பார்கள் ஐந்து நிமிடத்துக்கே இப்படியென்றால் ஒருவன் மனிதர்கள் இல்லாத தீவில் தன் வாழ்நாளின் நான்கு வருடங்களை கழிக்கிறான். எப்படி அவன் நான்கு வருடங்கள் வெளி உலகத்தோடு எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் அந்தத்தீவில் கழிக்கிறான் என்பதுதான் இத்திரைப்படம்.
ஹாலிவுட் அகாடமி அவார்டான ஆஸ்கார் இரண்டு முறை வென்ற நாயகன் தி கிரேட் Tom Hanks இதில் நடிகராக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொல்வதே சரி. ஒரு நான்கு வழிச்சாலையில்தான் படம் ஆரம்பிக்கிறது. நாயகன் Tom Hanks FedEX கூரியர் நிறுவனத்தில் எக்ஸ்கியூட்டிவாக பணி புரிகிறார். தன்னுடைய அலுவலகத்தில் எல்லாமே குறித்த நேரத்தில் நடைபெறவேண்டும், நேரமும் டைம் மேனேஜ்மெண்டும் முக்கியமானது என்று சொல்பவர். தன் காதல் மனைவியுடன் காதலாக வாழ்க்கை வாழ்பவர். ஒரு முறை தன் அலுவலக கூரியர்களுடன் தானும் விமானத்தில் பயணம் செய்கிறார் பயணத்தின் போது விமானம் விபத்தில் சிக்கி நடுக்கடலில் விழுகிறது விமானத்தில் பயணம் செய்த ஒருவரும் உயிர்தப்பவில்லை Tom Hanksஐ தவிர.விமானத்தில் அவசரகாலத்தில் தப்பிப்பதற்க்காக இருக்கும் மிதவையின் மூலம் ஒரு குட்டித்தீவினை அடைகிறார் Tom Hanks. அந்த தீவின் அந்த விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த சில கூரியர் பார்சல்களும் அவருடன் கரையேறுகின்றன.
அந்த தீவில் Tom Hanksஐ தவிர வேறு மனிதர்களே இல்லை மேலும் அந்தத்தீவொன்றும் கப்பல்கள் பயணப்பாதையிலும் இருக்கவில்லை வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள எந்த ஒரு வசதியும் இல்லை ஆனால் Tom Hanksசிடம் தன்னம்பிக்கை மட்டும் இருந்தது. தான் தப்பித்து வந்து மிதவையின் மூலமே திரும்ப கடலில் பயணிக்க முயற்சிக்கிறார் ஹும் பெரிய பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டத்தில் அந்த மிதவை தொடங்கிய இடத்திற்க்கே மீண்டும் வருகிறது Tom Hanks சோர்வடைகிறார் மீண்டும் மீண்டும் அங்கிருந்து தப்பிப்பதற்க்கு பல முயற்சிகள் எடுத்தும் அத்தனையும் தோல்வியடைகிறது. சுற்றிலும் கடல் நீர் இருந்தாலும் குடிப்பதற்க்கு கடல் நீரையா குடிக்க முடியும் ? அந்த தீவில் கிடைக்கும் தேங்காயை சாப்பிட்டு தேங்காய் நீரை குடித்து நாட்களை நகற்றுகிறார். வயிற்றுப்பசிக்கு கடல் மீன்களை பிடித்து தின்கிறார். இலைகளில் படிந்திருக்கும் மழை நீரை தேங்காய் ஓடிற்க்குள் சேகரித்து குடிக்கிறார் . எப்படியோ அந்த தீவில் அவர் வாழப்பழகிக்கொண்டார் எப்படியும் தான் தன்னிருப்பிடத்திற்க்கு திரும்பிவிடுவோம் தன் காதல் மனைவியை காண்போம் என்ற நம்பிக்கை அவரை விட்டு அகலவில்லை .
தன்னுடன் கொண்டுவந்திருந்த கடிகாரத்தில் இருக்கும் மனைவியின் புகைப்படத்தை பார்த்து சோகம் கொள்கிறார். நெருப்பை உருவாக்க மிகப்பிராயசப்படுகிறார் அப்படி ஒரு முறை முயற்சி செய்யும்பொழுது கையில் சதை கீறி இரத்தம் பீய்ச்சுகிறது வலிதாங்கமுடியாமல் தன்னுடன் கரையேறிய பார்சலில் இருக்கும் வாலிபாலை தூக்கியெறிகிறார். அடுத்தமுறை நெருப்பை உருவாக்கிவிட்டு ஐ மேட் ஃபயர் என்று சொல்லி ஆனந்தப்படுகிறார். அவரின் இரத்தக்கறை பட்டு தூக்கியெறியப்பட்ட வாலிபாலை காண்கிறார் அவருக்கு அது மனித முகத்தை ஞாபகப்படுத்துகிறது . அதை அந்த வாலிபால் தயாரித்த நிறுவனத்தின் பெயரான வில்சன் என்ற பெயராலே அழைக்கிறார் அதனுடன் பேசுகிறார் விவாதம் செய்கிறார் சண்டையில் தூக்கியெறிந்துவிடுகிறார் பிறகு தேடிக்கண்டுபிடித்து தன்னுடன் மீண்டும் வைத்துக்கொள்கிறார் . இப்படி ஆளில்லாத தீவில் அந்த வாலிபால் அவருக்கு சிறந்த நண்பனாக இருக்கிறது.
இப்படியாக நான்கு ஆண்டுகள் கழிந்திருக்கையில் ஏதோ ஒரு விபத்து ஏற்பட்டு அதன் மூலம் அந்தக்கரையை வந்தடைந்த ஒரு பிளாஸ்டிக் கூரையினை பார்க்கிறார் , மரங்களாலான ஒரு படகு தயாரிக்கிறார்.காற்று வீசும் திசை தனக்கு சாதகமான நாட்களுக்காக காத்திருக்கிறார் அப்படி ஒரு நாள் வந்ததும் அந்த தீவை விட்டு தப்பிக்கிறார் தன் நண்பன் வில்சனுடன். அப்படி கடலில் மிதந்து வரும் வழியில் புயல் காற்று காரணமாக வில்சனை பறிகொடுத்துவிட்டு அவர் அழும் காட்சி நம்மையே அழ வைக்கிறது. எப்படியோ Tom Hanks தன்னுடைய இருப்பிடத்திற்க்கு திரும்புகிறார்.
மீண்டு வந்த Tom Hanksற்க்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. தான் இறந்துபோய்விட்டதாக நினைத்து தன் காதல் மனைவி இன்னொரு திருமணம் புரிந்து வேறொரு கணவர் குழந்தையுடன் வாழ்ந்துவருவதை கண்டதும் உடைந்து போகிறார். அந்த சமயத்தில் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் அவருடன் இருக்கிறார்கள் ஆனால் தனிமையில் இருப்பதைப்போல உணர்கிறார். தான் திரும்பி வந்துவிட்டதற்க்காக தரப்பட்ட விருந்துபசரிப்பில் மீந்து போன உணவுகளைப்பார்த்து சிரிக்கிறார் . படத்தை எந்த நான்கு வழிச்சாலையில் ஆரம்பித்தார்களோ அதே நான்கு வழிச்சாலையில் முடித்து முடிவை நம் பார்வைக்கு விட்டுவிடுகிறார்கள். நிஜத்தில் தன்னுடன் நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் இருந்தும் யாருமே இல்லாதது போன்று கைவிடப்பட்ட நிலைதான் இந்த Cast Away.
கண்டிப்பாய் பார்க்கவேண்டிய திரைப்படம்.
படம் வெளிவந்த வருடம் - 2000
பி.கு. வில்சனைப்போலவே இதுவரை என்னுடைய கருத்துக்கள் நினைவுகள் மொக்கைகள் அத்தனையையும் பகிர்ந்து கொண்டதாலும் என் தனிமையை போக்கியதாலும் என்னுடைய பிளாக் டிஸ்க்ரிப்சனை ப்ரியமுடன் வசந்த் aka wilson என்று மாற்றியதோடு மட்டுமில்லாமல் இதுவரை சுணங்கியிருந்த பதிவிடுதலை என் வருங்கால மனைவி கொடுத்த உற்சாகத்தின் பேரில் அவர்களுக்காகவே என் மனதில் தோன்றிய அத்தனை விஷயங்களையும் தினமும் ஒன்றாக முடியாவிடினும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் இனி பதிவுகள் இடப்போகின்றேன் கமெண்ட்ஸ்களுக்காகவோ ஹிட்ஸ்களுக்காகவோ அல்ல அல்ல அல்ல....இதுவரை ரீடரில் தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கும் கமெண்ட்ஸ் இட்ட நண்பர்களுக்கும் நன்றி.
10 comments:
கலக்குங்க மாம்ஸ்
பதிவை எதிர்பாத்து...
நல்ல இருக்கு உங்க விமர்சனம்
நேரம் இருக்கும்போது பார்க்கிறேன்
கலக்குங்க வசந்த்....
என் மனதில் தோன்றிய அத்தனை விஷயங்களையும் தினமும் ஒன்றாக இனி பதிவுகளாக இடப்போகின்றேன் கமெண்ட்ஸ்களுக்காகவோ ஹிட்ஸ்களுக்காகவோ அல்ல அல்ல அல்ல..
வாழ்த்துக்கள் வசந்த் :)
நல்ல விமர்சனம்
அன்புடன் :
ராஜா
.. இன்று
பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்
நன்றி வசந்து.படத்தைத் தேடிப்பார்க்கிறேன் !
CLICK LINK AND READ.
ராமன் பிறந்தது தசரதனுக்கா? குதிரைக்கா? பார்ப்பன குருக்களுக்கா?
.
ப்ரிய வசந்த்,
இந்த படத்தை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு முதலில் நன்றி. படம் பார்த்துவிட்டு, அப்படியே கதையை பகிர்ந்துள்ளீர்கள். அதுமட்டும் போதுமா! அந்த படம் உங்களுக்குள் என்ன உணர்வுகளை தந்தது என்பதை பகிர்ந்துகொள்ளவேண்டும் என கருதுகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
இந்த படம் எனக்கும் பிடித்தது. நானும் எழுதியிருக்கிறேன். படித்துப்பாருங்கள். நன்றி.
http://socratesjr2007.blogspot.com/2009/09/cast-away.html
'ஜோ'ரான விமர்சனம் வசந்த்.. படம் பார்த்திருக்கேன்.. அருமையான படம்.
நல்ல விமர்சனம்.... நானும் படம் பார்த்திருக்கிறேன். மிகவும் ரசித்து பார்த்த படம் அது!
Exceelent review. Simple narration. Would like to see this film soon.
Post a Comment