பார்ட் 2 இங்கே.
இன்னும் அந்த பார்க்கின் கேட்டை தாண்ட 50 மீட்டர் தூரமே இருந்தது என்னோட வாழ்க்கையில் இது மாதிரி ஓடியதே கிடையாது "என்னுடைய ஓட்டம் என்பது நிறுத்தத்தில் நிற்காத பேருந்தின் படிக்கட்டை எட்டிப்பிடிப்பதோடு சரி" ,வேறு எங்கும் எதற்க்காகவும் ஓடிப்பழக்கமில்லை போதாக்குறைக்கு இதயத்தின் "ஆசுவாசத்திற்க்கு அவ்வப்பொழுது குடிக்கும் சிகரெட்டின் வலிமையும் அன்றுதான் புரிந்தது" எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.
"நித்யாவோ ஓட்டப்பந்தய வீராங்கனையாய் இருப்பாள் போலும்" என்னைவிட மூன்று அடி தூரம் முன்னமே ஓடிக்கொண்டிருந்தாள் பின்னால் ஓடி வந்த கயவர்கள் 10 மீட்டர் தூரம் இடைவெளியில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர் "ஆபத்தில்லா பயணத்திற்க்கு 10 மீட்டர் தூர இடைவெளி அவசியம்" என்ற விதியையும் மீறி எங்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தனர்
இதோ பார்க்கின் கேட்டை தாண்டிவிட்டோம் இருவரும் அப்படியே சாலையின் இடது புறம் திரும்பி இன்னும் ஓட்டத்தின் வேகத்தை கூட்டி ஓடினோம் ஓடினோம் ஓடிக்கொண்டே இருந்தோம், மணி இரவு பத்தை தாண்டியிருந்தது அவர்களும் எங்களை துரத்துவதை நிறுத்திய மாதிரி தெரியவில்லை எங்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் சாலைகளை குறுக்காய் சில நேரம் கோணலாய் கடந்து ஓடி களைத்து சிறிது நின்று திரும்பி பார்த்தால் அவர்களை காணவில்லை இவர்கள் ஓடுகாலிகள் போல் என்று நினைத்திருப்பார்கள் போல் அப்படியே அங்கு சிறிது நேரம் நின்று எங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்த பொழுது சொய்ய்ய்ய்ய்ங் என்று மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று எங்களை கண்டதும் நின்றது.
காரைப்பார்த்ததும் நித்யாவின் முகம் வெளிறியது ஆம் அவள் பயந்தது போலவே காரிலிருந்தது நித்யாவின் அப்பா சீனிவாசன் தான் . காரின் கதவை திறந்து கீழே இறங்கி வந்தவர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை யூகித்திருப்பார் என்று நினைக்கிறேன்,
என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நித்யாவை நோக்கி "என்ன நித்யா இந்நேரத்தில் இங்க? யார் இவர்?" என்று கேள்விகளை கேட்டு அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் அவளை காரின் பின் சீட்டிற்க்குள் இழுத்து போட்டுவிட்டு காரை வேகமாக செலுத்தி விர்ரென்று சென்று விட்டார் நான் இங்கு ஒருத்தன் இருப்பதையே அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை .
அப்படியே அந்த சாலையின் இறுதிவரை சென்று மறையும் வரை காரையே பார்த்து கொண்டிருந்த எனக்கு "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்க்கு வந்தது.
பொழுதும் விடிந்துவிட்டது அன்று ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் கீதா , ப்ரியா , அருண், சந்தோஷ் இவர்களோடு நித்யாவும் சேர்ந்து உணவு உண்ணுவது கூட மறந்து கழிந்து விடும்,ஆனால் அன்று நிமிடங்கள் நகருவதே "ஹைவேயில் அரசு பேருந்து நகருவதை போன்ற உணர்வு"!
அன்றிலிருந்து தினமும் நித்யாவிடமிருந்து போன் வராதா அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ்ஸாவது வராதா என்று ஏங்கி ஏங்கி தவித்தது தான் மிச்சம் கீதாவிடம் கேட்டேன் நித்யா கல்லூரிக்கே வருவதில்லை என்ற பதில்தான் கிடைத்தது இப்படியே ஒருவாரம் கடந்திருந்தது.
நல்ல வெயில் நாள் ஒன்றில் அந்த வெயிலின் உஷ்ணத்தைப்போலவே To கீதா என்ற கவரில் நித்யா MA (Weds) பிரசன்னா MCA என்று முன் பக்கம் பிரசுரிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தது.
உடம்பின் ஏதோ ஒரு பகுதியை இழந்த ஒரு உணர்வில் பத்திரிக்கையை பார்த்த அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்த என்னுடைய மொபைலில் "ராஜா கைய வச்சா" என்ற ரிங் டோன் அலறியது..
கைபேசியில் அழைத்தது என்னுடைய தாயாரின் சகோதரர்
"ஹலோ வசந்த்"
"சொல்லுங்க மாமா"
"அப்பாவிற்க்கு உடல் நிலை சரியில்லை மிகவும் கவலைக்கிடமாயிருக்கிறார் உடனே புறப்பட்டு வா வசந்த்" என்ற மாமாவின் குரல் தழுதழுத்ததிலிருந்தே நிலமையை என்னால் உணர முடிந்திருந்தது.
அந்த நொடி யாரோ என்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்ட உணர்வு..
உடனே ஊருக்கு கிளம்பினேன்..
தொடரும்...