August 29, 2010

நானும் நித்யாவும் காதலும் !


நான் வசந்த் மதுரையில் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் அசிஸ்டெண்ட் என்ஜினியராக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.அன்றும் வழக்கம்போல் மதுரையின் பிரதான ஸ்பின்னிங் மில்லான தியாகராஜர் மில்லின் புதிய யூனிட்டுக்குரிய எலக்ட்ரிக்கல் வரைபடத்தின் ரிவிசன் ஒன்றை அலுவலகத்தில் வைத்து சரிபார்த்து கொண்டிருந்தேன்.மணி பத்து இருக்கும் அலுவலக தொலைபேசி ரிங்கியது.அலுவலகத்தில் ஸ்டெனோவாக இருக்கும் பாமா அக்காதான் போனை எடுத்தாங்க.


போனின் காதை அடைத்தவாறே பாமா அக்கா "உனக்குத்தான் போன்" னு சொன்னாங்க


"யாருக்கா?"


"நித்யா.."


எனக்கு அந்த பேரை கேட்டதும் பேச்சே வரலை "நான் இல்லைன்னு சொல்லிருக்கா"ன்னு சொன்னேன்..


பாமாக்கா என்னை முறைச்சு பார்த்துட்டு போனை காதுக்கு எடுத்துட்டு போனாங்க ஒரு நொடி காதுல வச்சுருந்தவங்க ரீசிவரை கீழே வச்சுட்டாங்க..


"என்னாச்சுக்கா...?"


"அவளே போனை கட் பண்ணிட்டா"


இங்க கொஞ்சம் நித்யா பற்றி சொல்லிவிடுகிறேன் என்னோட ஊர் தேனி அலுவலகம் இருப்பது மதுரையில் தினமும் அலுவலகத்திற்க்கு மூன்று மணி நேர பஸ் பிராயணத்தில் சென்று வருவது இயலாது என்பதால் நான் மதுரையில் இருக்கும் என் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்துதான் அலுவலகத்துக்கு சென்றுவந்தேன்.சித்தப்பா வீடு பழங்கா நத்தத்தில் இருக்கு.என் சித்தப்பாவுக்கு கீதா,ப்ரியான்னு ரெண்டு பொண்ணுங்க. அருண்,சந்தோஷ்ன்னு ரெண்டு பசங்க இருக்காங்க எல்லாருமே படிக்கிறாங்க மூத்தவள் கீதா மதுரை மீனாட்சி பெண்கள் கல்லூரியில் எம்.ஏ. இரண்டாம் வருடம் ஆங்கில இலக்கியம் படிக்கிறாள் இந்த கீதாவோட க்ளாஸ் மேட் தான் நித்யா.


நித்யாவோட அப்பா மதுரையில் ஃபேமஸ் ஜவுளிக்கடையோட ஓனர் பழங்காநத்தத்துலயே பெரிய அரண்மனை மாதிரி பங்களா வீடு அவளோடது,ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரி , வீட்டுல அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வெளியூர் போய்டுவாங்க அப்படி அவங்க ஊர்க்கு போயிருந்த நேரங்களில் வீட்டில் இருந்தால் போரடிக்கிறதென்பதால் அவ்வப்போது சித்தப்பா வீட்டுக்கு வந்து கீதாவோட கொஞ்ச நேரம் பேசிகொண்டு இருப்பாள் நானும் சித்தப்பா பசங்களும் சேர்ந்து கேரம் போர்ட் விளையாடிட்டு இருந்தால் அவளும் எங்களுடன் சேர்ந்து விளையாடுவாள்.கேலி கிண்டல்கள் என்று எங்களுடன் நன்கு பழகினாள். 


நித்யா கலகலன்னு இருப்பாள் எப்பொழுதும் சிரித்தமுகம் , சந்தன கலர் , நிலாவுக்கு ரோஸ் பவுடர் அடிச்ச மாதிரி களையான முகம் அவளோட அந்த அழகான முகத்தின் பாதுகாப்புக்கு என்று வைக்கப்பட்ட மாதிரி வாள் மாதிரி ரெண்டு புருவம் அதுல வெள்ளைப்பளிங்குல செஞ்ச கோலிகுண்டு மாதிரி ரெண்டு கண்ணுன்னு மொத்தத்துல பேரழகி அவள் அவ்வளவு சொத்துக்காரி, பேரழகிக்கு கொஞ்சம் கூட அந்த திமிர் கிடையவே கிடையாது.இப்போ கொஞ்ச நாளாக என்னை காதலிக்கிறாள் அவ என்கிட்ட "ஐ லவ்யூ"ன்னு சொல்லாட்டி கூட என்னால ஓரளவு யூகிக்க முடிஞ்சது பின்ன ஏண்டா அவ்ளோட போனை அட்டெண்ட் செய்யலைன்னு கேட்காதீங்க சொல்றேன் சொல்றேன் ..


"இவ்ளோ அழகானவளை யாருக்குத்தான் பிடிக்காது?" நானும் அவளை விரும்பினேன் ஆனால் எனக்கு அவளப்போல சொத்துபத்து கிடையாது நிறமோ கறுப்புதான் அவளை அவாய்ட் பண்ணுறதுக்கு தாழ்வு மனப்பான்மைதான் ஒரே காரணம்..


அந்த போன் வந்ததுக்கப்புறம் என்னால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை நித்யாவோட நினைவு இம்சை செய்தது உடனே மேனேஜர் ரூமுக்கு போய் தலைவலிக்குதுசார் ஒரு அரை நாள் லீவ் வேணும்ன்னு  கேட்டு வாங்கி வீட்டுக்கு திரும்பினேன் அன்னிக்கு சனிக்கிழமை என்பதால் பசங்க எல்லாரும் வீட்ல இருந்தாங்க சித்தியும் சித்தப்பாவும் கூட வெளியூர் திருமணத்திற்க்கு சென்று இருந்ததால் பசங்க மட்டும் தான் வீட்ல இருந்தாங்க


ரிலாக்ஸா பசங்களோட கேரம் போர்ட் விளையாடலாம்ன்னு வீட்டுக்கு போன எனக்கு பெரிய அதிர்ச்சி ஹாலில் கீதா நித்யா ஒரு டீமாவும் அருண் சந்தோஷ் ஒரு டீமாவும் சேர்ந்து கேரம் போர்ட் விளையாடிட்டு இருந்தாங்க நித்யாவை பார்த்தும் பார்க்காத மாதிரியே நான் என்னோட லஞ்ச் பேக்கை சமையல் ரூம்ல போய் வைத்தேன் அறையில் நுழையும் போதே நித்யா என்னை ஓரக்கண்ணில் பார்ப்பது தெரிந்தது. பாத்ரூம் போய் முகம் கழுவிவிட்டு தலை வாரி கொஞ்சம் ஃப்ரெஷா ரெடியாகி வீட்டை விட்டு வெளியில் வந்து செருப்பை மாட்டிகிட்டே..


"ஹேய் கீதா நான் கொஞ்சம் வெளியில கிளம்பறேன்"னு சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே


"இப்போ ஒருத்தர் வாங்கி கட்டிகிட போறார்"ன்னு வீட்டுக்குள்ள இருந்து சத்தம் வந்தது 


சொன்னது நித்யா அவள் என்னைத்தான் சொல்கிறாள் என்று எனக்கு தெரிந்தாலும் 


"யாருக்கு நித்யா அடி விழப்போவுது..?"ன்னு கேட்டேன்


"எதுவுமே தெரியாம நடிக்கறார் பாரு அவருக்கு"ன்னு சொன்னாள்


"எனக்கு ஒண்ணும் புரியலையே"ன்னு நான் சொல்லி முடிக்கிறதுக்கு முன்னாடியே உள்ளே இருந்து எழுந்து வந்த நித்யா என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தாள் அவள் அடிப்பதை நான் தடுத்தாலும் அவள் என்னை அடிப்பதை மட்டும் நிறுத்தவில்லை பின்னாடியே பதறிப்போய் ஓடிவந்த கீதா தடுத்ததும்தான் நித்யா என்னை அடிக்கிறதை நிறுத்தினாள்..


"இப்போ எதுக்கு என்னை அடிக்கிற?"


செய்றதெல்லாம் செய்துட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காதீங்க பத்திகிட்டு வருது


"அதான் கேட்குறேன் நான் என்ன செஞ்சேன்..?"


"பேசாதிங்க அப்படியே அறைஞ்சே கொன்னுருவேன்"


"ஹேய் நித்யா இங்க என்ன நடக்குது ஏன் எங்கண்ணாவை அடிக்கிறன்னு?" பொறுமையில்லாம கீதா கேட்கவும் நித்யாவோட முகம் அப்படியே மாறிவிட்டது கண் கலங்கியது மூக்கு விசும்பற சத்தம் கேட்டது உதட்டை கடித்துகொண்டு அழுகையை கட்டுப்படுத்தினாள்..!


"இவர் என்ன செய்தார்ன்னு தெரியுமா உனக்கு?"


தொடரும் ...




.

47 comments:

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ம்ம்.. இதென்ன தொடர் கதையா? நடத்துங்க..

அப்புறம் ஒரு சந்தேகம்.. ஹி ஹி.. எல்லாத் தொடர்லயும் வசந்த் இப்படி அடி வாங்குவாரா? :))

ப்ரியமுடன் வசந்த் said...

//அப்புறம் ஒரு சந்தேகம்.. ஹி ஹி.. எல்லாத் தொடர்லயும் வசந்த் இப்படி அடி வாங்குவாரா? :))//

நான் அடிவாங்குறதுல எம்பூட்டு சந்தோஷம் இவிங்களுக்கு இருக்கட்டு இருக்கட்டு...!

நன்றி சந்தனா!

Anonymous said...

காதல் கதையிலும் சஸ்பென்ஸா. சீக்கிரம் அடுத்ததை போடுங்க

a said...

//
"இவர் என்ன செய்தார்ன்னு தெரியுமா உனக்கு?"
//
அந்த புள்ள இப்படி பொங்குறளவுக்கு என்ன நடந்திச்சி...........

சீமான்கனி said...

மாப்பி தொடர்கதையா ???இரு படிச்சுட்டு வாறேன்...

நட்புடன் ஜமால் said...

ஆஹா! அழகான துவக்கம்,

நடத்துங்க நடத்துங்க - வீட்டுக்கே வந்து அடியா :P

-------------------

(நைட்ல பாட்டு கேட்டுட்டே கதை எழுதுற சொகம் இருக்கே யப்பா...அதுவும் சொந்தக்கதைன்னா சொல்லவே வேணாம்... ஃபீல் குட்)

ஹா ஹா ஹா

சீமான்கனி said...

அடேய்... எங்க ஏரியா பொன்னை அப்படி என்னதான் மாப்பி செஞ்ச???அவசரமாய் தொடரவும் இல்லனா!!! கத்தார் கதிகலங்கிடும்...இது மிரட்டல் இல்லை...

ஜெய்லானி said...

//அப்புறம் ஒரு சந்தேகம்.. ஹி ஹி.. எல்லாத் தொடர்லயும் வசந்த் இப்படி அடி வாங்குவாரா? :)) //

அதானே ..நல்லா கேக்குறாய்ங்கப்பா டீட்டெய்லு

ஜெயந்த் கிருஷ்ணா said...

முடிவில்லாமல் தொடரும் காதல் உலகில் மீண்டும் ஒரு காதல் கதையா...

ஆரம்பமே அருமையா இருக்கு..

Unknown said...

//ப்ரியமுடன் வசந்த் said... நான் அடிவாங்குறதுல எம்பூட்டு சந்தோஷம் இவிங்களுக்கு இருக்கட்டு இருக்கட்டு...!//

அப்போ இது கதையல்ல நிஜமா...?

ஸ்ரீராம். said...

தவறான புரிதல்..? இனிமையான காதல் கதையின் தொடக்கமா?

Tharshy said...

நல்லாருக்குண்ணா...:)

சைவகொத்துப்பரோட்டா said...

சட்டுன்னு தொடரும் போட்டுட்டீங்களே.

சத்ரியன் said...

வசந்த்,

என்னென்னமோ நடக்குது, ஒரே ஆர்வமா இருக்குது.... சீக்கிரமா தொடரும் ஓய்.

சத்ரியன் said...

பொண்ணோட போட்டோ பாத்தேன். தெலுங்கு தேச பொண்ண கொண்டாந்து , மதுரக்கார பொண்ணுன்னு .. கண்ண கட்றியே ராசா!

Chitra said...

மறுபடியும் வசந்த்.... தொடருங்க ...தொடருங்க.... வாழ்த்துக்கள்! :-)

நாடோடி said...

ஆஹா.. காத‌ல் தொட‌ர்க‌தையா? .. ந‌ல்லாயிருக்கு வ‌ச‌ந்த் தொட‌ருங்க‌ள்.

R.பூபாலன் said...

அண்ணிகிட்ட அறை வாங்கற அளவுக்கு

வசந்த அண்ணா.அப்படி என்னதான் பண்ணினாரு..,?

சீக்கிரம் சொல்லுங்க.....

இல்லனா நீங்க ஆபிஸ்ல இருந்துட்டே இல்லன்னு

சொல்லச் சொன்னத நான் சொல்லிக் குடுத்துடுவேன். ஆமா.

சாட்சிக்கு பாமா அக்காவும் இருக்காங்களே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த வசந்த் யாருப்பா. புனைவு இல்லியே?

ஜீவன்பென்னி said...

ஆஹா தொடரும் போட்டுட்டீங்களே...

Anonymous said...

வசந்த் இது உங்க சொந்தம் கதையா இல்லே கற்பனை கதையா எதுவா இருந்தாலும் தொடக்கமே சுபேரா இருக்கு மீதி கதைக்கு காத்திட்டு இருப்போம் ..நன்றி

dheva said...

இப்படி கொண்டு வந்து நிறுத்துனா....எப்படி பங்காளி..வெயிட்டிங்க்...ஆம நிஜமா நடந்துச்சா..... இல்லை...கதைதானா?

sakthi said...

இது கதையா இல்ல பிளாஷ்பேக்கா

நல்லா அடி வாங்கறீங்க வசந்த்

சீக்கிரம் அடுத்த அத்தியாயத்தை எழுதுங்க

Mohan said...

கதையோட ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. இது என்ன தொடர்கதை சீசனா? எல்லோரும் தொடர்கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்களே!

சாந்தி மாரியப்பன் said...

நிஜம் மாதிரியான கதையா... நல்லாருக்கு..

அடி ரொம்ப பலமோ :-)))))

அருண் பிரசாத் said...

//"இவர் என்ன செய்தார்ன்னு தெரியுமா உனக்கு?"//

என்ன செஞ்சாரு? :)

ராமலக்ஷ்மி said...

தொடர் கதையா? வாழ்த்துக்கள்.

சஸ்பென்ஸோடு முடித்திருக்கிறீர்கள்.

அடுத்த பாகம் எப்போ?

ஹேமா said...

தொடரும் கதைக்காகக் காத்திருக்கிறோம்.சீக்கிரமா அடுத்த பதிவைப் போடுங்க வசந்த்.

ஒரு மாறுதலான பதிவு.சந்தோஷம்.

இவன் சிவன் said...

நன்றாக இருந்தது ..அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்ஸ்...
பாஸ் தேனிக்காரவைங்கள அடி வாங்க விடுறீங்க...நாங்கெல்லாம் மோசமானவயங்க... :) :)

சுசி said...

அய்யோ.. அப்டி என்னதாம்பா செஞ்சிங்க..

தொடருங்க சீக்கிரம்.

சுசி said...

அய்ய்.. டாம் க்ரூஸ்.. சூப்பரேய்..

எழுத்து ரொம்ப சின்னதா இருக்கு வசந்த்.

சிங்கக்குட்டி said...

அட போப்பா லவ்க்கு கூடவா தொடரும் ....என்ன இது ...?

சிங்கக்குட்டி said...

அட போப்பா லவ்க்கு கூடவா தொடரும் ....என்ன இது ...?

Unknown said...

அன்பிற்கினிய வசந்த்..,

/ /... எப்பொழுதும் சிரித்தமுகம் , சந்தன கலர் , நிலாவுக்கு ரோஸ் பவுடர் அடிச்ச மாதிரி களையான முகம்.../ /

வித்தியாசமான வர்ணனை..சூப்பர்..!

/ /...கறுப்புதான் அவளை அவாய்ட் பண்ணுறதுக்கு தாழ்வு மனப்பான்மைதான் ஒரே காரணம்.../ /

நிஜமாக நம்மை நேசிக்கும் அழகான பெண்களை அவாய்ட் பண்ணுறதுக்கும் இந்த தாழ்வு மனப்பான்மைதான் ஒரே காரணம்

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.

KUTTI said...

நித்யா அறைவது சிறப்பாக இருந்தது.

கதை சூப்பராக தொடங்கியுள்ளது.

அடுத்தது எப்போ.

மனோ

ஜெயந்தி said...

வில் போன்ற புருவம் வாள் போன்ற விழின்னுதானே புலவர்கள் சொல்வார்கள். சரி நாம எதுக்கு அவங்கள காப்பி அடிக்கணும்.

கலா said...

, நிலாவுக்கு ரோஸ் பவுடர் அடிச்ச மாதிரி
களையான முகம் அவளோட அந்த அழகான
முகத்தின் பாதுகாப்புக்கு என்று வைக்கப்பட்ட
மாதிரி வாள் மாதிரி ரெண்டு புருவம் அதுல
வெள்ளைப்பளிங்குல செஞ்ச கோலிகுண்டு
மாதிரி ரெண்டு கண்ணுன்னு மொத்தத்துல
பேரழகி\\\\\\\

அப்பப்பா...இதிலிருந்து தெரிவது
என்னவென்றால்..........????...












அறையில் நுழையும் போதே நித்யா
என்னை ஓரக்கண்ணில் பார்ப்பது தெரிந்தது.\\\
நீங்கள் பார்த்த படியால்தான்
அவர் பார்பது உங்களுக்குத் தெரிந்தது
உள்ளுக்குள் ஆசையை வைத்துக் கொண்டு.........

ஆமா கண்ணைத் திறந்து பார்த்தால்
யாரையுமே காணோம்
அப்பதான் புரிந்தது கனவென்று....
என்று முடிக்கப் போவது தெரியாதாக்கும்!!

vinu said...

sari sari aarambichathu aarambichutteeenga appudiya next posttum konjam seekirama potta sari

VISA said...

blog pakam vanthu rompa naal aachu. irunga padichitu solrean. thodarum............thodar kadhaiyaa??

kavisiva said...

//அப்புறம் ஒரு சந்தேகம்.. ஹி ஹி.. எல்லாத் தொடர்லயும் வசந்த் இப்படி அடி வாங்குவாரா? :)) //

எனக்கும் அதே சந்தேகம்தான். சீக்கிரம் அடுத்த பார்ட்டை எழுதுங்க. இன்னும் யார்கிட்ட எல்லாம் அடி வாங்கியிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கணும்ல :)

R.பூபாலன் said...

ஒரு பெர்சனல்.:(சொல்லலாம்ல.. )

வெளில

யார்கிட்டயும்

சொல்லல...

(உங்க ப்ரொபைல் படம் எனக்கு பிடிக்கல வசந்த்ண்ணா ....)

ப்ரியமுடன் வசந்த் said...

@ அகிலா மேடம் நாளைக்கு எழுதிடலாம் மேடம் நன்றி

@ யோகேஷ் ஹிஹிஹி நன்றி பாஸ்

@ சீமான்கனி அடேய் என்னா என்னான்ற இப்போ உங்கூர் பொண்ணுங்க ஹும்...

@ஜமால் அண்ணா ஆவ் பஸ்ல போட்டத போட்டுக்குடுத்துட்டீங்களேண்ணா அய்யய்யோ நன்றிண்ணா

@ ஜெய்லானி ஸப்பா டீ கேக்காமவிட்டாய்ங்களேன்னு சந்தோசப்படனும் பாஸ் நன்றி

@ ஜெயந்த் நன்றி பாஸ்

@ கலா நேசன் ;)

@ ஸ்ரீராம் யெஸ் அது எப்போ சொன்னது இப்போ கேக்குறீங்க ஆவ்...

@ கொற்றவை நன்றி சகோ

@ சைவகொ.பரோட்டா நன்றி தல

@ சத்ரியன் அண்ணா மதுரக்காரப்பொண்ணு தெலுங்கு பேசக்கூடாதா? நன்றி அண்ணா

@ சித்ரா :)

@ ராதாகிருஷ்ணன் சார் நன்றி

@ ஸ்டீபன் நன்றி பாஸ்

@ பூபாலன் அடேய் அடேய் போட்டுக்குடுக்குறியா இருடி இதோ வர்றேன்...

@ ரமேஷ் மாம்ஸ் புனைவுதான் நன்றி

@ ஜீவன் பென்னி நன்றி தல

@ சந்த்யா கற்பனைதான் நன்றிங்க

@ தேவா பங்காளி கதையேதான் நன்றி பங்கு..

@ சக்தி சகோ கிகிகிகி கத கததான் ம்ம் நன்றி சகோ

@ மோஹன் ம்ம் அப்படித்தான் போல நன்றிங்க

@ சாரல் மேடம் நன்றி

@ அருண் பிரசாத் ;)

@ ராமலக்ஷ்மி மேடம் விரைவில் நன்றி மேடம்

@ ஹேமா சந்தோஷம் எனக்கும் நன்றிப்பா

@ இவன் சிவன் அட நீங்களும் எங்கூருதான நானும் தேனிதான் சாமீய்ய்ய்...நன்றிங்க

@ சுசி அடுத்ததுல பெரிய சைஸ்ல எழுதிடலாம் நன்றி சுசி

@ சிங்க குட்டி நன்றி தல

@ ரமேஷ் கண்டிப்பா அதேதான் பாதி பசங்களோட நிலமை கருத்துக்கு நன்றி ரமேஷ்

@ மனோ அடப்பாவிகளா அறையுறது சிறப்பா ஸப்பா எல்லாருக்கும் அறை வாங்குறதுன்னா பிடிக்குது ம்ம் நன்றி மனோ

@ ஜெயந்தி மேடம் அதேதான் கொஞ்சம் வித்யாசமா இருக்கட்டுமேன்னு நன்றி மேடம்

@ கலா உங்க ரவுசு தாங்க முடியலையே ஆவ்வ்வ்வ் என்னா தெரியுது சே சே அப்டில்லாம் இல்ல தொடர்ந்து வாசிங்க நன்றி

@ வினு ம்ம் போட்ரலாம்

@ விசா சார் நன்றி ;)

@ கவி நன்றிங்க அவ்வளவு சந்தோஷம் நா அடி வாங்குறதுல ம்ம்

@ பூபாலன் :)))))))))))

யாரோ ஒருவர் said...

ரொம்ப நாளாச்சு பதிவுப் பக்கம் வந்து.
அருமையான கற்பனை! தொடருங்கள்.
நிலாவுக்கு ரோஸ் பவுடர் அடிச்ச மாதிரி களையான முகம் அவளோட அந்த அழகான முகத்தின் பாதுகாப்புக்கு என்று வைக்கப்பட்ட மாதிரி வாள் மாதிரி ரெண்டு புருவம் அதுல வெள்ளைப்பளிங்குல செஞ்ச கோலிகுண்டு மாதிரி ரெண்டு கண்ணுன்னு

வருணனை ஸூப்பர்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ திருமதி ஜெயசீலன் சகோ ரொம்ப சந்தோஷம் ரொம்ப நாள் கழிச்சு பார்ப்பதில் மகிழ்ச்சி கருத்துக்கு நன்றி!

செல்வா said...

//இவர் என்ன செய்தார்ன்னு தெரியுமா உனக்கு?"//
செமையா இருக்குது ..!! அடுத்த பதிவு போட்டாச்சு .. இருங்க பாக்குறேன் ..
வலைச்சரத்துல பார்த்துட்டு வந்தேன் ..

இமா க்றிஸ் said...

அடுத்த பார்ட்ல கமண்ட் போட முடியல, அதால இங்க.

கடைசில... அங்க வாசல்ல ரெடியா கட்டி வச்சிருந்த குதிரைல நித்யா கூட ஏறி தப்பியோடீட்டீங்க. சரிதானே வசந்த்!! ;))

ப்ரியமுடன் வசந்த் said...

@ செல்வக்குமார் நன்றிங்க...

@ இமா மேடம் இல்லையே இல்லையே இன்னும் ரெண்டு பார்ட் படிச்சீங்களா? ம்ம் கமெண்ட் போடறதை நிப்பாட்டி வச்சிருக்கேன்...