August 14, 2010

ரோபோட்ஸ் -1

ரோபோட்கள் அறிமுகம்

ரோபோட்கள் கி.மு.400லே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றது.முதன்முதலாக கிரீஸ் நாட்டில் ஆர்க்கிமிடிஸ் எனும் கணித மேதை இறகுகளை அசைக்க கூடிய மரத்தால் ஆன புறா ஒன்றை தனது எந்திர தொழில் நுட்பத்தின் மூலமாக சுமார் 200மீட்டர் தூரம் பறக்க கூடிய அளவில் தயாரித்தார். இதுவே இப்பொழுது இருக்கும் ஆகாய ஜெட் விமானங்கள் இயங்குவதற்க்கான மூல விதியாகும்.இந்த மரத்தால் ஆன புறாவே முதல் ரோபோட் எனவும் வரலாறுகள் மூலம் அறியப்படுகிறது.

ரோபோட் பெயர்க்காரணம்

ரோபோட் என்ற பெயர் செக் மொழியிலிருக்கும் ரோபோடோ எனும் வார்த்தையிலிருந்து வந்ததாகும் . இந்த வார்த்தையை செக் எழுத்தாளர் காரல் கபெக் (Karel Capak) பயன்படுத்தினார். இந்த வார்த்தைக்கு முழுமையான அர்த்தம் அடிமைத்தொழிலாளி என்பதாகும்.

ரோபோட்கள் எப்படி இயங்குகின்றது?

மனிதர்கள் நாம் எப்படி உடலளவில் அனைவரும் வேறுபட்டு இருந்தாலும் நாம் இயங்குவது மூளையின் கட்டுப்பாட்டில்தான் என்பது அனைவரும் அறிவீர்கள்.இதே போலவே ரோபோட்கள் வடிவங்கள் , அவை செய்யும் வேலைகள் பொறுத்து வேறுபடினும் அனைத்து ரோபோட்களின் அடிப்படை தொழில்நுட்பம் ஒன்றுதான்.ரோபோட்களின் உடலமைப்பு நகரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.ரோபோட்கள் நகருவதற்க்கு 12க்கும் மேற்பட்ட நகரக்கூடிய பாகங்கள் பயன் படுகின்றன,இந்த நகரும் பாகங்களை இயக்க மின்சார மோட்டாரினால் சுற்றக்கூடிய சக்கரங்கள் பயன்படுகின்றன்.ரோபோட்களின் நகரும் பாகங்கள் பெரும்பாலும் உலோகம், பிளாஸ்டிக் போன்றவற்றால் தயாரிக்கப்பட்டிருக்கும்.





நம் உடலின் கை,கால்களில் இருக்கும் எலும்பு மூட்டுக்கள் போலவே இந்த ரோபோட்டின் நகரும் பகுதிகள் அனைத்தும் மின்சார மோட்டார்களால் இயங்கும் எந்திர மூட்டுக்கள் ,பிஸ்டனின் மூலம் இயக்கப்படுகின்றன.இந்த மின் மோட்டார்களை இயக்குவதற்க்கான மின்சாரம் பேட்டரியிலிருந்து பெறப்படுகிறது.கீழ்கண்ட ரோபோட்டின் அடிப்படை மின்சுற்று(சர்க்யூட்)ல் இருந்து பெறப்படும் கட்டளைக்கு ஏற்ப இயங்கும் மின்சாரத்தின் மூலம் வால்வுகள் செயல்படுத்தப்பட்டு கால்கள் மற்றும் ரோபோட்டின் அசையும் அனைத்து பாகங்களும் உயிரூட்டப்பட்டு முன்னும் பின்னோ அல்லது மேலும் கீழோ இயங்குகின்றன.


.

இந்த சர்க்யூட்ல் இருக்கும் மைக்ரோசிப்ல் ரோபோட்டின் இயக்கங்கள் முன்பே பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.ரோபோட்டின் இயக்கங்களை தேவைப்படும்பொழுது மாற்றியமைத்துகொள்ளவும் இயலும்.இந்த ரோபோட்கள் சென்சார்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.சில ரோபோட்கள் ஒளியை உணரக்கூடிய வகையிலும் சில ரோபோட்கள் சுவையை உணரும் வகையிலும் ,கேட்கும் திறனுடைய வகையிலும் செயல்படும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ரோபோட்டில் இருக்கும் சில சென்ஸரிங் திறனுக்காக ரோபோட்களின் கால்களின் இருக்கும் மூட்டுப்பகுதியில் ஒளியை உமிழும் டையோட்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன(LED). இந்த LED கள் மூட்டுகளின் இயக்கத்தினை கணக்கிட்டு மெமரிசிப்க்கு அனுப்புகிறது. இதுபோல நிறைய நுண்ணிய பாகங்கள் மூலம் அமையப்பெற்ற ரோபோட்கள் நடைமுறை வாழ்வில் மனிதனால் செய்யக்கூடிய அனைத்து வகை வேலைகளையும் செய்கின்றன.
(நான் அறிந்த மட்டிலும் என்னால் முடிந்த அளவு விளக்கம் இது.விரிவாக விளக்க ஒரு புத்தகமே தேவைப்படும் அளவுக்கு விஷயங்கள் இருக்கின்றன)


இயந்திரகை வகை சேர்ந்த ரோபோக்கள்


கார் உற்பத்திக்களின் தேவை அதிகரித்திருப்பதால் காரின் உற்பத்தி வேகத்தை அதிகப்படுத்த சென்னை ஃபோர்ட் கார் கம்பெனி தொழிற்ச்சாலையில் 90 ரோபோட்கள் பயன்படுகின்றன என்பதை அறிவீர்கள்.இந்த வகை ரோபோட்கள் பற்றி பார்ப்போம் . இயந்திரகை ரோபோட்கள் என அறியப்படும் இவ்வகை ரோபோட்கள் உலோகத்தால் ஆன ஏழு பகுதிகளும் ஆறு எந்திரமூட்டுகளும் கொண்டிருக்கும்.இந்த எந்திர மூட்டை இயக்க ஸ்டெப் மோட்டார்கள் பயன்படுகின்றன.நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மோட்டாரைபோன்று இல்லாமல் இந்த ஸ்டெப் மோட்டார்கள் துல்லியமான வேகமும் இயக்கமும் உடையதாகும்.இதனால் இந்த ரோபோட்டை இயக்கும் கணிணி ரோபோட்டை எந்த குளறுபடியும் இல்லாமல் இயக்குகிறது . இந்த ரோபோட்கள் இயக்கம் சென்சார் மூலம் கண்காணிக்கப்படுவதாலும் எந்த இடையூறுமின்றி ரோபோட்கள் இயங்குகின்றன.



இந்த எந்திரக்கை ரோபோட்கள் தோள்பட்டை , முழங்கை,மணிக்கட்டு என்று மனிதன் கைகள் போலவே அமைக்கப்பட்டிருக்கும்.கைகளின் இறுதியில் இருக்கும் எண்ட் எஃப்ஃபெக்ட்டர்தான் இதன் முக்கிய பகுதியாகும் இதன் மூலமே அனைத்து வேலைகளும் செய்யப்படுகின்றன. இதில் தோள்களோடு இணைந்திருக்கும் கைகள் நமது கைகள் போலவே சுமார் 6டிகிரி கோண அளவில் சுழலும் தன்மையுடையவை. இந்த எந்திரக்கரங்கள் ப்ரஸ்ஸர் சென்சார் அமையப்பெற்றிருப்பதால் இது பிடித்திருக்கும் பொருள் எந்த அழுத்தத்தில் பிடித்திருக்கிறது என்பதை அறியவும் , பொருட்களை எண்ட் எஃப்ஃபெக்ட்டர் பிடியிலிருந்து நழுவி விடாமலும் இருக்கவும் உதவுகிறது.

கார் தொழிற்ச்சாலையில் பயன்படும் ரோபோட்கள் வெல்டிங், ட்ரில்லிங், ஸ்பேர்பார்ட்ஸ்கள் பொருத்துதல் மற்றும் மனிதன் செய்யக்கூடிய கடினமான பணிகளையும் எளிதாக விரைவாக செய்கின்றன.போல்ட்கள் பொருத்தும்பொழுது கணிணியிலிருந்து கொடுக்கப்பட்ட ஆணையின் படி சரியான வேகத்திலும் விசையிலும் பொருத்துகின்றன.அதே போலவே ட்ரில்லிங் பண்ணும்பொழுது சரியான அளவில் சரியான இடத்தில் துல்லியமாக ட்ரில் செய்கின்றன.

கார் தொழிற்சாலையில் வெல்டிங்கில் ஈடுபடும் ரோபோட்கள்


கார் உதிரி பாகங்களில் ஈடுபட்டிருக்கும் ரோபோட்கள்


இத்துடன் இந்த அறிமுகப்பகுதி முடிவடைகிறது. மேலும் என் நண்பர்கள் சிலரின் விருப்பத்திற்க்காக நான் அறிந்த ஆரம்பத்திலிருந்து இப்பொழுதுவரை அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து ரோபோட்களின் விபரங்களை உங்களுடன் ஓவ்வொரு சனி, ஞாயிறுகிழமைகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

நன்றி...


.

25 comments:

Unknown said...

பூம் பூம் ரோபோங்க ரோபோங்க....

அரிய தகவல்களின் தொகுப்பு. நன்று.

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு.....ஊ...ஊ...ஊ...ஊ...ஊ...ஊ...ஊ...

சீமான்கனி said...

சில முன்பே படித்தது என்றாலும் அறியாத நிறைய அறிந்து கொண்டேன்...நன்றி மாப்பி...வாழ்த்துகள்...

Unknown said...

மாப்ளைக்கு அறிவு வளர்ந்திருச்சு .. தொழில்நுட்பப பதிவெல்லாம் போடுறாரு ...

மாப்ள நாங்க மொக்கைகளுக்குதான் ரசிகரே ....

KUTTI said...

நல்ல பதிவு.


மனோ

R.பூபாலன் said...

இன்னைக்கு நான்தான பர்ஸ்ட்டூ...........

சுசி said...

நல்ல பதிவு வசந்த்.

தொடருங்க தொடர்ந்து வரோம்.

R.பூபாலன் said...

அடுத்த சனிக்கிழமை வரையிலும் வெயிட் பண்ணனுமா...?
.
.
.
.
பதிவு எழுதற ரோபோட் எதுவும் இருக்குதா வசந்த் அண்ணா...?

S.M.Raj said...

Super....

S.M.Raj said...

super...

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. தொடருங்கள் வசந்த்.

Jey said...

இன்னும் கொஞ்ச விரிவா எழுதி தமிழ் விக்கிப்பீடியாவுல சேத்திரு பங்கு...

நல்லாருக்கு.

பின்னோக்கி said...

ரோபாட் பற்றிய தொகுப்பு, பல செய்திகளை உள்ளடக்கி இருக்கிறது. நல்ல தகவல்கள்.

உங்கள் ப்ளாக்கின் தோற்றம் நன்றாக இருக்கிறது.

நாடோடி said...

ரோபோ அறிமுக‌ம் ந‌ல்லா இருக்கு.. தொட‌ருங்க‌ள்.

நட்புடன் ஜமால் said...

நிறைய தகவல்கள் சொல்லியிருக்கீங்க, டெக்னிகல் அல்லாத விடயங்கள் எளிதில் விளங்குது - நன்றி.

அடிமை தொழிலாளியாஆஆஆஆஆஆ

சனி, ஞாயிறுகளில் மூளைக்கு தீனி

மிக்க நன்றி வசந்த்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st

சிங்கக்குட்டி said...

ரோபோ வரும் நேரத்தில் இப்படி ஒரு தகவலா நன்றி பகிர்வுக்கு.

வடுவூர் குமார் said...

கார் நிறுவன ரோபோக்களை செய்ய/நிர்வகிக்க பல கோடிகளை செலவு செய்திருப்பார்கள் ஆனால் 2 அல்லது 3 மாடி ஏற வயதானவர்களுக்கு ஏற்ற சிறிய ரோபோ எதுசும் இருக்கா? வெளிநாடுகளில் Stair Lift என்ற உபகரணம் இருக்கு ஆனா அது விலை மற்றும் சில கட்டுப்பாடுகள் நம்மூருக்கு தகுந்த மாதிரியில்லை.ஏதேனும் கல்லூரி பிராஜக்ட் மாதிரி செய்ய முன்வந்தால் பொருள் உதவி செய்யலாம்.

ஜெய்லானி said...

:-))

தேவன் மாயம் said...

எழுதுங்க! எழுதுங்க! வசந்த்! வாழ்த்துகள்!

யோ வொய்ஸ் (யோகா) said...

good one sir..

VISA said...

Good essay man...

Geetha6 said...

good and useful
thanks for the informations!

ப்ரியமுடன் வசந்த் said...

@ கலா நேசன் நன்றிங்க

@ சீமான்கனி நன்றி

@ செந்தில் மாம்ஸ் நன்றி

@ மனோ நன்றிப்பா

@ பூபாலன் நன்றி

@ சுசி மிக்க நன்றி

@ எஸ் எம் ராஜ் நன்றிங்க

@ ராமலக்ஷ்மி மேடம் நன்றி

@ ஜெயக்குமார் நன்றி பங்கு :)))

@ பின்னோக்கிசார் மிக்க நன்றி

@ ஸ்டீபன் நன்றி தல

@ ஜமால் அண்ணா ஆமாண்ணா தொடர்கிறேன் மிக்க நன்றிண்ணா :)

@ ரமேஷ் ம்ஹூம் நன்றி

@ சிங்ககுட்டி நன்றிங்க

@ வடுவூர் குமார் கண்டிப்பா தேடி பகிர்கிறேன் பாஸ் மிக்க நன்றி

@ ஜெய்லானி நன்றி தல

@ தேவா சார் நன்றி

@ யோகா நன்றி மாப்ள

@ விசா சார் நன்றி :)

@ கீதா நன்றிங்க மேடம் :)

சாமக்கோடங்கி said...

சமயத்திற்கேற்ற தகவல். வாழ்த்துக்கள்..