தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய ஆட்சிப்பணியில் சேர்வதற்காக செ.உமாசங்கர், தனது இருப்பிடம், மதம் ஆகியவற்றை மாற்றி ஆதி திராவிட இனத்தைச் சார்ந்தவர் என்று தவறான சாதிச் சான்றிதழ் பெற்றுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையிலும், அவர் படித்த பள்ளி, கல்லூரி, தேர்வு இயக்ககம் மற்றும் தொடர்புடைய அலுவலகங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும், அனைத்திந்திய ஆட்சிப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகள், 1969-ல் மாநில அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும், இதுதொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை மற்றும் உரிய அமைப்பின் மூலம் விசாரணை மேற்கொள்ள இருப்பதாலும் உமா சங்கர், அரசால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
_________________________________________________________________________
புலம்பல்-1
தீண்டாமை ஒரு குற்றம், தீண்டாமை ஒரு பாவம் , தீண்டாமை ஒரு கொடுஞ்செயல் என பள்ளி பாடப்புத்தகத்தின் முதற்பக்கம் போட்டுவிட்டு அதே பாடப்புத்தகத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா அதை தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் பாவம் என்ற மகாகவி பாரதியாரின் பாடலும் வைத்திருப்போம் நாங்கள் அதே நேரம் படிப்புக்கும் அந்த படிப்பை முடித்தபின் வேலைக்கும் ஜாதிச்சான்றிதழும் கேட்போம், இதுதானே எங்கள் நீதி, கொள்கை, தர்மம் , நியாயம், வெங்காயம், சீரகம், கடுகு எல்லாம்...
_________________________________________________________________________
புலம்பல்-2
போலிஜாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் அமர்ந்தார் என்று 27ஆண்டுகள் முன்பே தெரியவில்லையா ? கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து தற்பொழுது போலிச்சான்றிதழ் கொடுத்ததனால் பணி நீக்கம் என்பது பழி வாங்கும் நடவடிக்கை என்பதை தவிர வேறொன்றும் இல்லை. திறமைக்கும்,படிப்புக்கும் மரியாதை அளிக்காமல் ஜாதிப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டாகவே அரசுப்பணிகள் இருப்பதால் திறமையில்லாத வீணர்களின் கையில் அரசு இயந்திரம் சிக்கி கொண்டு முழி பிதுங்கி எண்ணற்ற தவறுகள் நடந்து கொண்டிருக்கிறது.
_________________________________________________________________________
இப்படிப்பட்ட தரங்கெட்ட அரசியல் வாதிகள் இருக்கும் தமிழ் நாட்டிற்க்கு திரு உமா சங்கர் IAS போன்ற நேர்மையான அதிகாரிகள் இருப்பதினால்தான் ஓரளவாது பயத்தோடு ஆட்சி செய்வார்கள் என்பதனாலும் ஒரு நேர்மையான அரசாங்க ஊழியர் தண்டிக்கப்படக்கூடாது என்பதாலும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை திரும்ப பெற்று அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கருத்துக்களுடன் சக பதிவர்களுடன் பகிர்ந்து கொண்டு திரு.தருமி ஐயா அவர்களின் வேண்டு கோளின் படி...
உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை. புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய அரசு அளித்துவரும் "தண்டனை" , அதற்குரிய காரணம் எல்லாமே என் போன்ற ஒரு குடிமகனுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.
அரசு இது போன்ற அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இவ்விடுகை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________________________________________________________________________
இந்த செய்தியை வாசிக்கும் படிக்கும் பதிவர்கள் தாங்களும் தங்களின் எதிர்ப்பை கண்டனங்களை இன்று புதன்கிழமை தங்களின் வலைப்பதிவில் தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...
வரும் நாட்களில் இதுபோல் எந்த ஒரு தனி மனிதரும் அவர்களின் நேர்மைக்காக, பழிவாங்கப் படுவோராயின் இதே உணர்வுடன் ஜாதி, மத , பால் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நமது எதிர்ப்பை தெரிவிப்போமாக...
இது பற்றிய சில இடுகைகள்:
35 comments:
This is OUTRAGEOUS!!!!!!
கொடுமை.
சாதி மயிர் வளர்க்கும் அரசாங்கம்...
//உமாசங்கர் I.A.S. இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர் என்பது வெள்ளிடை மலை.//
இது போதுமே...
கண்டிப்பாய்...நன்றி மாப்பி...
கண்டிப்பா நம் கண்டனங்களை அரசுக்கு தெரிவிக்க இதை பதிவிட வேண்டும்
நானும் பதிவிடுகிறேன்
நல்ல விசயம் வசந்த்... அரசுக்கு என்னுடைய கண்டனங்களும்..
அரசுக்கு என்னுடைய கண்டனங்களும்..
நானும் பதிவிடுகிறேன்
கண்டனம்
பங்காளி நல்லா குமுறியிருக்கே...சூப்பர்.
அரசு அதிகாரி உமாசங்கர் மீது தமிழக அரசால் பழிவாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்கு உரியவை. எனது கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்!
Govt must be reconsider his suspension.I support Umasankar IAS
~TSEKAR
நேர்மையான அதிகாரியின் சொல் நிச்சயம் அம்பலத்தில் ஏறும்
இந்தக் குற்றச்சாட்டையெல்லாம் அவர் கண்டுபிடித்த போதே வெளிப்படையாக மக்களிடம் சொல்லியிருக்க வேண்டியது தானே?!
நேர்மையான அதிகாரியாம். - இந்த உலகம் இன்னுமா நம்பள நம்புது?
தருமியும் அல்லுலுயா, உமாசங்கரும் அல்லுலுயா. அதான் பாசம் பொங்கி வழியுது. இதுக்காக துள்ளி குதிச்சு ஓடியாறிங்களே. உங்களையெல்லாம் பாத்தா பாவமா இருக்குது.
27 வருடம் ஆகி விட்டதால் போலிச் சான்றிதழ் உண்மையாகி விடாது. என்ன சொல்ல வருகிறீர்கள்? அது போலியா இல்லையா என்பது தான் கேள்வி.
எப்போதும் கருணாநிதி தான் இந்த மாதிரி சமயங்களில் சாதியை கையில் தூக்கிப் பிடிப்பார். இப்போது உமாசங்கர். மற்றபடி விடாக்கண்டன் கொடாக்கண்டன் கேஸ் தான் இது.
சென்ற இடமெல்லாம் சிறப்பாக செயல்பட்டார் என்பது வெள்ளிடைமலை என்று தருமி பிதற்றியிருக்கிறாரே. இது வரை இவர் பணிபுரிந்த மாவட்டங்களில் என்ன கிழித்தார் என்று பட்டியலிடச் சொல்லுங்களேன் பார்க்கலாம்.
சம்பந்தி சமுதாயம் என சொல்லும் கூத்தாடியின் வேஷம் இன்னுமா புரியவில்லை ?
உமாசங்கருக்கு என்னுடைய ஆதரவும்....
அரசுக்கு எனது கண்டனங்களும்..
நல்லா எழுதி இருக்கீங்க வசந்த். இதுபோன்ற வெகு சொற்ப நல் அதிகாரிகளை ஆதரிக்க வேண்டும்.ஆதரிப்போம்.
//இவர் தொடர்ந்து பணியில் நீடிப்பது பொதுநலனுக்கு உகந்தது அல்ல என்பதாலும்,
தே.. ப...
நாட்டுக்காக நல்லவங்க போராடுனா, நல்லவங்களுக்காக நாம போராடுவோம். நானும் பதிவு பண்ணிட்டேன்.
நாம் எல்லோரும் சினிமாவில் ஒரு ஹீரோ இதுபோன்று நேர்மையாக இருந்தால் பாராட்டுவோம்....வாய ஆ" னு திறந்துட்டு பார்போம்.
அதே நமக்கு நேரில் நடந்தால் நம்மளால பொறுத்துக்கவே முடியாது...
நமக்குதான் யாரும் நேர்மையா இருந்த பிடிக்காதே...
காச வாங்கிட்டு காரியத்த சீக்கிரமா முடிச்சா பரவால்லன்னு நினைகிரவங்கல்ல நாம.
அப்புறம் எப்டி நாம நேர்மையான அதிகாரிகளை இருக்க விடுவோம்...
திரு.உமாசங்கர் ஐ ஏ எஸ் அவர்களுக்கு ஆதரவாக, எனது எதிர்ப்புகளையும் அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் வசந்த் அண்ணா...
டிஸ்கி:1
எங்க MD பெயரும் உமாசங்கர்தான் ...
டிஸ்கி:2
சின்ன வயசுல எனக்கும்
IAS ஆகணும்னுதான் ஆசை இருந்தது...
ப்ச் முடியல...
இருக்குற நாலு நல்லவங்கலயாவது இருக்க விடுங்கப்பா....
அரசின் பழிவாங்கல் நடவடிக்கைக்கு என் கண்டனங்கள்.
அதே நேரம் சர்ட்டிஃபிகேட்டில் மோசடி செய்திருந்தால் கண்டிப்பாக அவர் தண்டிக்கப்பட வேண்டும். காரணம் உண்மையான பயனாளி நிச்சயம் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார். நியாயம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.
தமிழக அரசின் இத்தகைய கீழ்த்தரமான நடவடிக்கைகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
விஜய் ஒரு படத்துல சொல்லுவாரு...டிரெயின் டிக்கெட் எடுக்காதவனைஎல்லாம் விட்டுடுங்க....பிளாட் பாரம் ல டிக்கெட் எடுகதவனமட்டும் கரெக்டா பிடிங்க...
லஞ்சம வாங்கிற பிச்சைகாரர்கள் மத்தியில் சில நல்லவர்களும் இருப்பதற்கு உதாரணம் இவர்...இவரை போயி...
எல்லோருமே அவருக்கு ஆதரவு வழங்கணும்.
Bravo....
புலம்பல்கள் ஞாயமானவை..
அரசின் காதுகளுக்கு எட்டும்படி உரக்கக் கத்துவோம்..
தர்மத்தை நிலை நாட்டுவோம்..
என்னுடைய பதிவிலும் இதைத் தெரிவித்து விட்டேன்..
அரசின் நடவடிக்கை பழிவாங்கும் செயல்தான்.எதிர்ப்போம்!
நானும் உங்களுடன்..
நல்ல விசயம் வசந்த்... அரசுக்கு என்னுடைய கண்டனங்களும்..
@ அனைவருக்கும் மிக்க நன்றி :)
கருணாநீதி என்பவர் நவீன கலியுக காலத்தில் வாழும் ஒரு அரசியல் குள்ளநரி ... இவர் 87 வயதிலும் லஞ்ச & குடும்ப அரசியல் செயல்கள் அனைத்தையும் அறிவியல் பூர்வமாக யோசித்து செய்கிறார் ... நமது குடும்பத்தில் 70 வயதை தாண்டினாலே நாபக மறதியை கொடுக்கும் கடவுள் இவருக்கு அபார சக்தியை கொடுத்து கலியுகம் நடத்துகிறார் .... கடவுளே ! ஒரு சமூகத்தையே அவருக்கு பலி ஆக்காதே ! ...
Post a Comment