September 2, 2010

நானும் நித்யாவும் காதலும் ! 3

பார்ட் 1 இங்கே,


பார்ட் 2 இங்கே.


இன்னும் அந்த பார்க்கின் கேட்டை தாண்ட 50 மீட்டர் தூரமே இருந்தது என்னோட வாழ்க்கையில் இது மாதிரி ஓடியதே கிடையாது "என்னுடைய ஓட்டம் என்பது நிறுத்தத்தில் நிற்காத பேருந்தின் படிக்கட்டை எட்டிப்பிடிப்பதோடு சரி" ,வேறு எங்கும் எதற்க்காகவும் ஓடிப்பழக்கமில்லை போதாக்குறைக்கு இதயத்தின் "ஆசுவாசத்திற்க்கு அவ்வப்பொழுது குடிக்கும் சிகரெட்டின் வலிமையும் அன்றுதான் புரிந்தது" எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது.

"நித்யாவோ ஓட்டப்பந்தய வீராங்கனையாய் இருப்பாள் போலும்" என்னைவிட மூன்று அடி தூரம் முன்னமே ஓடிக்கொண்டிருந்தாள் பின்னால் ஓடி வந்த கயவர்கள் 10 மீட்டர் தூரம் இடைவெளியில் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தனர் "ஆபத்தில்லா பயணத்திற்க்கு 10 மீட்டர் தூர இடைவெளி அவசியம்" என்ற விதியையும் மீறி எங்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தனர்

இதோ பார்க்கின் கேட்டை தாண்டிவிட்டோம் இருவரும் அப்படியே சாலையின் இடது புறம் திரும்பி இன்னும் ஓட்டத்தின் வேகத்தை கூட்டி ஓடினோம் ஓடினோம் ஓடிக்கொண்டே இருந்தோம், மணி இரவு பத்தை தாண்டியிருந்தது அவர்களும் எங்களை துரத்துவதை நிறுத்திய மாதிரி தெரியவில்லை எங்கு ஓடுகிறோம் என்றே தெரியாமல் சாலைகளை குறுக்காய் சில நேரம் கோணலாய் கடந்து ஓடி களைத்து சிறிது நின்று திரும்பி பார்த்தால் அவர்களை காணவில்லை இவர்கள் ஓடுகாலிகள் போல் என்று நினைத்திருப்பார்கள் போல் அப்படியே அங்கு சிறிது நேரம் நின்று எங்களை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்த பொழுது சொய்ய்ய்ய்ய்ங் என்று மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று எங்களை கண்டதும் நின்றது.

காரைப்பார்த்ததும் நித்யாவின் முகம் வெளிறியது ஆம் அவள் பயந்தது போலவே காரிலிருந்தது நித்யாவின் அப்பா சீனிவாசன் தான் . காரின் கதவை திறந்து கீழே இறங்கி வந்தவர் ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கிறது என்பதை யூகித்திருப்பார் என்று நினைக்கிறேன்,

என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு நித்யாவை நோக்கி "என்ன நித்யா இந்நேரத்தில் இங்க? யார் இவர்?" என்று கேள்விகளை கேட்டு அவளின் பதிலுக்கு கூட காத்திராமல் அவளை காரின் பின் சீட்டிற்க்குள் இழுத்து போட்டுவிட்டு காரை வேகமாக செலுத்தி விர்ரென்று சென்று விட்டார் நான் இங்கு ஒருத்தன் இருப்பதையே அவர் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை .

அப்படியே அந்த சாலையின் இறுதிவரை சென்று மறையும் வரை காரையே பார்த்து கொண்டிருந்த எனக்கு "கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால்" என்ற பழமொழிதான் ஞாபகத்திற்க்கு வந்தது.

எப்படியோ தட்டுத்தடுமாறி வீட்டை அடைந்த எனக்கு அன்று இரவு தூக்கமே வரவில்லை .  நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்த எனக்கு இன்று நடந்த அத்தனையும் "ஆழ்ந்த தூக்கத்தில் வந்த கனவு தூக்கம் கலைந்ததும் கனவும் கலைந்து திரும்ப தூக்கம் வந்தாலும் எவ்வளவு தேடினாலும் மீண்டும் வரவே வராத தொலைந்த கனவு போலவே போய்விடுமோ" என்ற பயம் அப்பிக்கொண்டது.

பொழுதும் விடிந்துவிட்டது அன்று ஞாயிற்றுக்கிழமை எப்பொழுதும் கீதா , ப்ரியா , அருண், சந்தோஷ் இவர்களோடு நித்யாவும் சேர்ந்து உணவு உண்ணுவது கூட மறந்து கழிந்து விடும்,ஆனால் அன்று நிமிடங்கள் நகருவதே "ஹைவேயில் அரசு பேருந்து நகருவதை போன்ற உணர்வு"!


அன்றிலிருந்து தினமும் நித்யாவிடமிருந்து போன் வராதா அட்லீஸ்ட் ஒரு எஸ் எம் எஸ்ஸாவது வராதா என்று ஏங்கி ஏங்கி தவித்தது தான் மிச்சம் கீதாவிடம் கேட்டேன் நித்யா கல்லூரிக்கே வருவதில்லை என்ற பதில்தான் கிடைத்தது இப்படியே ஒருவாரம் கடந்திருந்தது.

நல்ல வெயில் நாள் ஒன்றில் அந்த வெயிலின் உஷ்ணத்தைப்போலவே To கீதா என்ற கவரில் நித்யா MA (Weds) பிரசன்னா MCA என்று முன் பக்கம் பிரசுரிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் வீட்டிற்க்கு வந்து சேர்ந்தது.

உடம்பின் ஏதோ ஒரு பகுதியை இழந்த ஒரு உணர்வில் பத்திரிக்கையை பார்த்த அதிர்ச்சியில் உட்கார்ந்திருந்த என்னுடைய மொபைலில் "ராஜா கைய வச்சா" என்ற ரிங் டோன் அலறியது..

கைபேசியில் அழைத்தது என்னுடைய தாயாரின் சகோதரர்

"ஹலோ வசந்த்"

"சொல்லுங்க மாமா"

"அப்பாவிற்க்கு உடல் நிலை சரியில்லை மிகவும் கவலைக்கிடமாயிருக்கிறார் உடனே புறப்பட்டு வா வசந்த்" என்ற மாமாவின் குரல் தழுதழுத்ததிலிருந்தே நிலமையை என்னால் உணர முடிந்திருந்தது.

அந்த நொடி யாரோ என்னை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்ட உணர்வு..

உடனே ஊருக்கு கிளம்பினேன்..


தொடரும்...


31 comments:

Chitra said...

கதையில் விறுவிறுப்பு கூட ஆரம்பித்து இருக்கிறது.......

sathishsangkavi.blogspot.com said...

அழகாய் சென்று கொண்டு இருக்கிறது நித்யாவும் உங்க காதலும்... பார்ட் 3 எதிர்பார்க்கிறேன்...

நட்புடன் ஜமால் said...

சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகுது

நித்யாவின் அப்பாவிற்கு உங்களை தெரியாதா ...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அத்தனை அம்சங்களும் அமைந்த அழகான கதை... தொடரட்டும்... காத்திருக்கிறேன்...

சைவகொத்துப்பரோட்டா said...

கதையில், மிக வேகமான திருப்பங்கள் வந்து விட்டதே!!

Unknown said...

நல்ல வேளை.... பத்திரமா வீட்டுக்கு போய்ட்டாங்கன்னு நினைக்கும் போதே அடுத்து இரு திருப்பங்கள். விறு விறு......

KUTTI said...

பார்ட் 4 எப்போ?

மனோ

Anonymous said...

ஊருக்கு போயி மாமா பொன்னே கலியாணம் செஞ்சுக்க போறேன் அப்பிடி தானே ?

கதை நல்லா போகுது சீக்ரமா முடிச்சா ரொம்ப நல்லா இருக்கும் ..இந்த சுச்பன்ஸ் தாங்க முடியலை அதான் .

நன்றி

அன்புடன் அருணா said...

அச்சோ அப்புறம்??

Jey said...

மீதி எழுதி வச்சதையும் பைண்ட் பண்ணி அனுப்பு , சீரியல் எடுக்க ஒரு தயாரிப்பாளரை ரெடி பண்ணிடலாம்....:)

தமிழ் மனம் ஓட்டுபட்டை எங்க பங்காளி??, காக்கா துக்கிட்டு போச்சா?..

நாடோடி said...

இந்த‌ ப‌குதி ரெம்ப‌ வேக‌மா போனாதா தெரியுது..

vinu said...

nallathaan irrukkubaaaaaaaaaa

பின்னோக்கி said...

தொடர் கதையை மொத்தமா படிச்சுத்தான் பழக்கம். முடிச்ச உடனே என்னோட விமர்சனம் :)

kavisiva said...

கதை நல்லா விறுவிறுப்பா இருக்கு.
எனக்கு கதை படிக்கவே புடிக்காது. அதுல தொடர்கதை புடிக்கவே புடிக்காது. இனிமே எல்லா பார்ட்டும் முடிஞ்சப்புறம் மொத்தமா படிச்சுக்கறேன் :)

அருண் பிரசாத் said...

எழுத்து நடை மாறி இருக்கிறது. குட்...

ஹி ஹி ஹி... ஒரு டவுட் நித்தியா பைக் என்னாச்சு?... :)

Sindhu said...

என்னபா....ட்விஸ்ட் ட்விஸ்ட் ஆஅ இருக்குதே........சீக்கிரம் முடிங்கப்பா....... :)))

ஜெயந்தி said...

கதை ஹீரோ பேரும் வசந்தா. சரி சரி.

சுசி said...

போச்சு.. உடனவே கல்யாணமா?? இருந்தாலும் நித்யா அப்பா வசந்துக்கு ஒரு ஆட்டோவாவது அனுப்பி இருக்கலாம்.. :))))

இருங்க.. எவ்ளோ அவசரம்னாலும் ஊருக்கு நாங்களும் வரணும்ல..

சத்ரியன் said...

வசந்த்,

கோடம்பாக்கம் கூப்பிடுது. காதுல விழலையோ?

கதை டாப் கியர்ல போய்க்கிட்டிருக்கு... இந்த பிரேக் போடற வேலைய மறந்துட்டு.... முழுசா எழுதிரு.

VISA said...

//"ஆபத்தில்லா பயணத்திற்க்கு 10 மீட்டர் தூர இடைவெளி அவசியம்" என்ற விதியையும் மீறி எங்களை நோக்கி முன்னேறி வந்து கொண்டிருந்தனர்
//

ennayaa ippadi elaam pinra

பா.ராஜாராம் said...

தொடர்ந்து வாசித்து வருகிறேன் வசந்த், good going...

ராமலக்ஷ்மி said...

அழைப்பிதழ்தானே வந்திருக்கிறது. என்னாகுது பார்க்கலாம்:)!

sakthi said...

அருமை வசந்த்

ரசித்தேன்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஜில்லென்று ஒரு காதல்.. ஜில்லென்று ஒரு காதல்.. :) சோகமா முடிச்சிட மாட்டீங்களே வசந்த்?

கதை நல்ல வேகத்துல போயிட்டு இருக்கு.. இப்பிடியே தொடருங்க..

ப்ரியமுடன் வசந்த் said...

@ சித்ராம்மா நன்றி!

@ சங்கவி இது 3ர்ட் லாஸ்ட்டும் போட்டாச்சுப்பா நன்றி!

@ ஜமால் அண்ணா அவரை எனக்கு தெரியும் அவர் என்னைப்பார்த்ததில்லை! நன்றிண்ணா!

@ வெறும்பய நன்றி ஜெயந்த் :)

@ சைவ கொத்து பரோட்டா நன்றி பாஸ்!

ப்ரியமுடன் வசந்த் said...

@ கலா நேசன் மிக்க நன்றிங்க!

@ மனோ லாஸ்ட் பார்ட் போட்டாச்சு ப்ரதர் நன்றி :)

@ சந்த்யா ரொம்ப சோதிக்க விரும்பலை போட்டாச்சுப்பா தெ எண்ட்! நன்றிங்க!

@ அருணா மேடம் ம்ம் அடுத்த பார்ட்டில் ! நன்றி மேடம்

@ ஜெயக்குமார் நன்றி பங்காளி :))))))

ப்ரியமுடன் வசந்த் said...

@ ஸ்டீபன் அப்படியா? நன்றி நண்பா!

@ பின்னோக்கி சார் அப்படியே ஆகட்டும் நன்றி சார்!

@ கவி சிவா :(

@ அருண் ரொம்ப சந்தோசம் ஓடற அவசரத்துல பைக்க மறந்துட்டாங்க போல நன்றி பாஸ்!

@ ப்ரியா சரிங்க மேடம் லாஸ்ட் தெ எண்ட் கார்ட் போட்டாச்சு!

ப்ரியமுடன் வசந்த் said...

@ நன்றி வினு

@ நன்றி ஜெயந்தி மேடம் ம்ம்

@ சுசி :))))) லாஸ்ட் பார்ட் படிச்சுட்டு ஊருக்கு வர்றதா வேணாமான்னு முடிவு பண்ணிக்கங்க!

@ சத்ரியன் அண்ணா நச்சுன்னு குட்டி சினிமா மாதிரி எழுதாதடான்னு சொல்லியிருக்கலாம் ஹ ஹ ஹா நன்றிண்ணா!

@ விசா சார் உங்கள விடவா? நன்றி சார்

ப்ரியமுடன் வசந்த் said...

@ பாரா அண்ணா சந்தோஷம்

@ ராமலக்ஷ்மி மேடம் அதானே :)) நன்றி மேடம்!

@ சக்தி நன்றி சகோ!

@ சந்தனா சே சே அப்டில்லாம் முடிக்க மாட்டேன் நன்றிங்க!

@ பிரபு நன்றிங்க!

கருடன் said...

பங்காளி ஹும் சொல்லுங்க... பொண்ன நான் தூக்கிட்டு வந்து கட்டி வைக்கிறேன்... ஜெய் தல ஏறுங்க எருமைமாட்டு மேல.... ச்சீ... எடுங்க ஆட்டோவ....

கருடன் said...

அருண் பிரசாத்
//ஹி ஹி ஹி... ஒரு டவுட் நித்தியா பைக் என்னாச்சு?... :)//

பைக் முன்வாசல்ல நிக்குது அவங்க ஓடி வந்தது பின்வாசல். அதும் இல்லாம பைக் ஸ்டண்டு எடுத்து ஸ்டார்ட்பண்ற கேப்ல வில்லன் பிடிச்சிட்டா.. கிட்னி வேனும் மச்சி....