September 3, 2010

நானும் நித்யாவும் காதலும் ! (கடைசி பாகம்)



Part 1, Part 2, Part 3


பேருந்து பயணம் முழுவதும் நித்யாவின் கல்யாண பத்திரிக்கையும் அப்பாவைப்பற்றிய தொலைபேசி அழைப்பு நினைப்புகளும் மாறி மாறி வந்து பேருந்து சீக்கிரம் ஊருக்கு சென்றுவிடாதா என்ற நினைப்பு ஒரு புறம் வந்தாலும் நித்யாவின் கல்யாண பத்திரிக்கையே மனம் முழுவதும் ஆக்ரமித்திருந்தது.

ஒரு வழியாக ஊருக்கு போய் சேர்ந்தேன் மாமா சொல்லியிருந்த ஆஸ்பத்திரி இருக்கும் இடம் பற்றி ஏற்கனவே தெரியுமென்பதால் சீக்கிரமே என்னால் செல்ல முடிந்தது.ரிசப்சனிஸ்ட்டிடம் அப்பா பெயர் தெரிவித்ததும் "ரூம் நம்பர் 22க்கு போங்க" என்றார்.

"கதவைத்திறந்து உள்ளே சென்றேன் அப்பா அமைதியாக தூங்கி கொண்டிருந்தார்"

அம்மா அப்பாவின் அருகிலேயே உட்கார்ந்து கொண்டிருந்தார்.

"என்னாச்சும்மா...?"

முட்டிக்கொண்ட அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு அம்மா பேச ஆரம்பித்தார் "நல்லாத்தான் இருந்தார்ப்பா என்னாச்சுன்னு தெரியலை தோட்டத்துப்பக்கம் போய்ட்டு வந்து மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு கைகால் கொஞ்சம் அசாத்தியமா இருக்குடி அப்படின்னு சொல்லிகிட்டே மயக்கம் போட்டுட்டார் என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்து மாமாவ கூப்பிட்டு ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தா அப்பாவோட இரண்டு கிட்னியும் ஃபெயிலாயிட்டதாவும் உடனே வேற கிட்னி மாத்துனாத்தான் அவர் உயிர் பிழைக்க முடியும்ன்னு டாக்டர் சொல்லிட்டாருப்பா , என்னோட ப்ளட் குரூப் மாமாவோட ப்ளட் குரூப் அப்பாவோட ப்ளட் குரூப்போட சேராதுன்றதால எங்களால கிட்னி கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டார் அப்போதான் உன்னோட ப்ளட் க்ரூப் அப்பாவோட ப்ளட் குரூப்பும் ஒரேதுன்ற ஞாபகம் வந்து உன்னை உடனே வரச்சொன்னோம் இப்போ டாக்டருக்கு தகவல் சொல்லியிருக்கோம் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவார்" என்றார்.

டாக்டரும் வந்து என்னுடைய ப்ளட் குரூப் அப்போவோட ப்ளட் குரூப் ஒன்று தானா என்று ஒருமுறை செக் செய்துவிட்டு ஆப்பரேசனுக்கு நாள் குறித்து விட்டார் இரண்டு நாட்கள் கழித்து ஆம் நித்யாவின் திருமண நாள் அன்றுதான் அதற்க்குள் ஆப்ரேசனுக்குரிய பணம் 2லட்சம் ஏற்பாடு செய்துகொண்டு வாருங்கள் என்று சொல்லவும் அடுத்த இரண்டு நாட்களும் பணத்தை ஏற்பாடு செய்வது ஆஸ்பிட்டல் என்று நகர்ந்து சுத்தமாக நித்யாவோட திருமணம் பற்றிய விஷயம் மறந்துவிட்டிருந்தது.

ஆப்ரேசன் செய்யும் நாள் வந்தது ஆப்ரேசனும் வெற்றிகரமாக முடிந்தது மயக்கம் தெளிந்து விழித்து பார்த்ததும் "கங்ராட்ஸ் வசந்த் என்றவாறே டாக்டர் என்னுடைய கையை பிடித்து உங்க அப்பாவைப்பற்றி இனி கவலையில்லை பிழைத்து விட்டார் இன்னும் ஒரு வாரம் இருவருமே பெட் ரெஸ்ட்டில் அவசியம் இருக்க வேண்டும் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றும் ஸ்டாஃப் நர்சிடம் "இரண்டு பேரின் உடல் நிலையையும் கண்காணித்து எனக்கு அப்டேட் செய்யுங்கள்" என சொல்லி சென்றுவிட்டார்.

அப்பா பிழைத்துவிட்டார் என்ற சந்தோஷம் நித்யாவின் திருமணம் தந்த சோகத்தை முற்றிலும் மறக்கடித்திருந்தது.முதல் நாள் சித்தப்பாவோட அலுவலக ஆடிட்டிங் பணியென்பதால் வர இயலாததால் மறு நாள் சித்தப்பா தன்னோடு சித்தி கீதா ப்ரியா அருண் சந்தோஷ் அனைவரையும் அப்பாவை பார்க்க அழைத்துவந்திருந்தார்.

"என் அருகில் அமர்ந்து ஒரு வித சோகத்துடன் என்னையே பார்த்து கொண்டு இருந்தாள் கீதா!"

"என்னாச்சு கீதா? ஏன் சோகமா இருக்க? அப்பாக்கு சரியாயிடும் கவலைப்படாதே!"

"அப்பாவுக்கு சரியாயிடும்ன்னு தெரியும்ண்ணா !"

"பின்ன என்ன...?"

"நேற்றைக்கு நித்யாவோட மேரேஜ் போயிருந்தேன் !!"

"நல்லபடியா நடந்ததா...?"

"ம்ம் நடந்துச்சு நித்யா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல சொன்னாள்"

"என்ன சொன்னாள்...?"

அன்னிக்கு அவங்கப்பா உங்க இரண்டு பேரையும் பார்த்ததுல சந்தேகப்பட்டு வீட்டுக்கு போனதும் உங்களைப்பத்தி கேட்டிருக்கார் அவளும் உங்களைப்பத்தியும் உங்க காதலைப்பத்தியும் சொல்லியிருக்கா அவங்கப்பா உங்க காதலை ஒத்துகிடலை உடனே கோயம்புத்தூரில் இருக்கும் அவங்க அத்தை பையனையே நிச்சயம் பண்ணி திருமணத்துக்கு நாள் குறிச்சு பத்திரிக்கையடிச்சுட்டார் அவளும் எவ்வளவோ எடுத்து சொன்னாளாம் அவர் பேச்சை மீறினா உன்னை கொலை செய்துடுவேன்னு சொன்னதால நீ நல்லாருக்கணும்ன்றதுக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டாளாம்ண்ணா இத உன்கிட்ட சொல்லி நீ அவளை மறந்து வேறொரு பொண்ண பார்த்து கல்யாணம் செய்துகிடணும்ன்னு சொல்லச்சொன்னாள்,

"இது நான் எதிர்பார்த்ததுதான் கீதா"

"அண்ணா உங்களுக்கு கவலையே இல்லியா..?"

"இருக்கு இப்போ கவலைப்பட்டு என்ன செய்ய முடியும் அதான் நடக்குறது எல்லாம் நடந்துடுச்சே!"

"சரிண்ணா உடம்ப பார்த்துக்கோங்க உடம்பு சரியானதும் மதுரைக்கு வருவீங்க தான?"

"ம் கண்டிப்பா வருவேன் நித்யா!"

அப்படியே ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் கழிந்தது அப்பாவும் நானும் டிஸ் சார்ஜ் ஆகி வீட்டிற்க்கு வந்து சேர்ந்தோம் மேலும் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்துவிட்டு அப்பாவை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அம்மாவிடமும் மாமாவிடமும் சொல்லிவிட்டு மதுரைக்கு புறப்பட்டேன்.

மதுரைக்கு சென்று பணியில் சேர்ந்தாலும் நித்யாவை மறப்பது கஷ்டமாக இருந்தது,அப்படி இப்படியென்று ஒரு ஆறு மாதம் சென்றுவிட்டது , ஆறு மாதம் கழித்து கோவையிலிருக்கும் ஸ்பின்னிங் மில்லிற்க்குரிய பணிக்காக நான் செல்லவேண்டும் என்றும் கூடவே அந்த மில்லிற்க்கு தேவையான ஸ்பேர் பார்ட்ஸ்களும் எடுத்து செல்ல வேண்டியிருந்ததால் அலுவலக் ஜீப்பை எடுத்துச்செல்லுமாறும் மேலாளர் சொன்னதால் அன்று இரவே கோவை செல்ல ஆயத்தமானேன்.

அடிக்கடி லோக்கல் மில்களுக்கு செல்ல ஜீப்பை எடுத்து பழக்கம் இருந்தது என்பதால் நெடுந்தூர பயணம் செல்ல பயமிருக்கவில்லை எனக்கு.இரவு சுமார் பத்துமணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு கோவை நோக்கி சென்று கொண்டிருந்தேன் நேரம் இரவு இரண்டு இருக்கும் இன்னும் கோவை வந்தடைய ஒரு 50 கிலோ மீட்டர் இருக்கிறது என்ற சாலையோர அறிவிப்பு பலகையை பார்த்து கொண்டே வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று ஜீப்பின் டயர் வெடித்து வண்டி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி நின்றது.வண்டி மோதிய வேகத்தில் நான் அப்படியே மயக்கமடைந்தேன் .

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிவடைந்த ஒரு உணர்வு தண்ணீர்த்தாகம் வேறு கையிலிருந்த அலைபேசியை காணவில்லை அதைத்தேடி தேடி நேரம் போனதுதான் மிச்சம் தேடுவதை விட்டுவிட்டு சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களை நிறுத்தி உதவி கேட்கலாம் என்று கையை மேலும் கீழும் ஆட்டி பார்த்தும் பயனில்லை ஒரு வாகனமும் நிறுத்தவே இல்லை இப்படியே ஒரு அரைமணி நேரம் கழிந்தது சுற்று முற்றும் பார்த்தேன் தூரத்தில் ஒரு பங்களா தன்னந்தனியாக தெரிந்தது.

மெல்ல பங்களா இருக்கும் திசையை நோக்கி நடந்தேன் அது நிச்சயம் ஏதோ ஒரு பெரிய பணக்காரரின் பங்களாவாகத்தான் இருக்கவேண்டும் பங்களாவோட கேட் திறந்தே கிடந்தது வாட்ச்மேன் என்று யாரும் இருக்கவில்லை கேட்டைத்தாண்டி பங்களாவை நோக்கி உள்ளே சென்றேன் உட்புறம் பூட்டியிருந்தது காலிங் பெல்லை அழுத்தினேன் சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட உள்ளே இருந்து வந்தது சாட்சாத் நித்யாவேதான் அதே அழகுச்சிலை என்னைப்பார்த்தது அவளுக்கு நிச்சயம் ஆச்சரியத்தை தந்திருக்கவேண்டும் .

"ஹேய் வசந்த் நீ எங்க இங்க?"

"நானும் உன்கிட்ட அதேதான் கேட்கணும்ன்னு நினைச்சேன்" "நீ இங்க எப்படி நித்யா ?"

"முதல்ல இந்த சோஃபால உட்கார் வசந்த் பேசலாம் !"

நான் அவள் கைகாட்டிய இடத்தில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தேன்!

அவள் தொடர்ந்தாள் "என்னோட (ஹஸ்பெண்ட்) வீடு இதான்ப்பா !! ஆமா நீ எப்படி இங்க வந்தேன்னு சொல்லு...?"

"கோவைல ஒரு மில்லோட வேலைக்காக ஜீப்ல வந்துகிட்டு இருந்தேன் திடீர்ன்னு ஆக்ஸிடெண்ட் ஆயிடுச்சு ரோட்டுல போற வண்டி ஒண்ணும் நிறுத்துற மாதிரி தெரியலை தூரத்துல இந்த பங்களா தெரிஞ்சது சரி அங்க போய் உதவி கேட்கலாம்ன்னு வந்தா நீ என்னால நம்பவே முடியலை!"

"ஆக்ஸிடெண்ட்டா ..? உனக்கு ஒண்ணும் ஆகலையே?"

"இல்லை வண்டிதான் கொஞ்சம் கவுந்திடுச்சு. அது இருக்கட்டும் நீ எப்படி இருக்க நித்யா..?"

கேட்டதுதான் தாமதம் அழ ஆரம்பித்துவிட்டாள் "அன்னிக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியுமா வசந்த்?"

"தெரியும் நித்யா ! கீதா என்கிட்ட எல்லாமே சொன்னாள்!"


அவர் நம்ம காதல் பத்தின விஷயம் தெரிஞ்சுதான் என்னை மேரேஜ் பண்ணிகிட்டார் வசந்த். மேரேஜ்க்கு அப்பறம் நான் அவரோடவே இங்க வந்துட்டேன் இங்க வந்ததுக்கப்புறம் அவரோட நடவடிக்கையே சரியில்லை எப்பவும் என்னை சந்தேகப்பட்டுகிட்டே இருப்பார் குத்தி குத்தி காட்டி பேசிகிட்டே இருந்தார் .அவர் என்னை மேரேஜ் பண்ணுனதுக்கு ஒரே காரணம் என்னோட சொத்துதான் தெரிஞ்சுகிட்டேன்அவரோட அம்மாவும் கூட சேர்ந்துகிட்டாங்க இங்க இருந்து எங்கப்பா கூட பேசவிடலை .இவங்களோட கொடுமை அதிகமாகி என்னைய கொல்ல திட்டம் போட்டாங்க அதுக்கு முன்னாடியே நான் அவங்க எல்லாரையும் கொன்னுட்டேன்! "நானும் தற்கொலை செய்துகிட்டேன்!"

"எனக்கு அப்படியே தூக்கிவாறிப்போட்டது செத்துட்டாளா? "அப்போ என் கூட பேசிக்கிட்டு இருந்தது நித்யா இல்லையா? இவ்வளவு நேரம் பேயோட பேசிக்கிட்டு இருந்தேனா? பயத்தில் வியர்த்து விறு விறுத்தது என்னால் அதுக்கு மேல் அங்கு உட்கார முடியவில்லை அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்...!

"ஹேய் வசந்த் ! ஹேய்! எங்க ஓடற..? நில்லு!" என்று சொல்லியவாறே நித்யா என்ற பேய் என்னை துரத்தியது."என்னதான் காதலின்னாலும் பேய் என்றால் பயம்தான்...!"

நானும் ஓடுவதை நிப்பாட்டவில்லை ஓடி ஓடி நான் வந்த ஜீப் இருக்கும் இடத்தை அடைந்தேன்  "அங்கு ஒரு ஆம்புலன்ஸ்ம் ஹைவே பேட்ரோல் போலீஸ் வண்டியும் நின்றிருந்தது அங்கிருந்த போலீஸார் செய்த செயல் என்னை கதிகலங்க செய்தது அவர்கள் என்னுடைய உடலை ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர் இடையில் ஏதோ பேசிக்கொண்டனர்!!"

"சார் ஜீப் மரத்துல மோதுனதுனாலயும் ஜீப் கவிழ்ந்ததிலயும் இந்த ஆள் ஜீப்போட அடியில் சிக்கி ஸ்பாட்லே அவுட்" என்றார் ஒரு காவலர் இன்ஸ்பெக்டரிடம்.

அப்போ !அப்போ ! "நானும் பேயா? என்னோட உயிர் போயிடுச்சா?" அய்யோன்னு அழ ஆரம்பித்தேன் பின்னாடி ஓடி வந்த நித்யா என்னுடைய தோளை பற்றினாள் .

"நித்யா பார்த்தியா ? நானும் உன்னை மாதிரியே செத்துட்டேன் ?"

"எனக்கு உன்னைப்பார்த்ததும் தெரிஞ்சது வசந்த் விடுப்பா! உடம்புதானே போச்சு? போனா போய்ட்டு போகட்டும் மனசு நம்மகிட்ட தானே இருக்கு ! நீ வா நாம போகலாம் புதுசா வாழ ஆரம்பிக்கலாம் "காதலர்கள் பூமியிலே வாழணும்ன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? சொர்க்கத்திலயும் வாழலாம்!" 



நித்யாவோட வார்த்தை என்னை மகிழ்ச்சியூட்டியது அப்படியே அவளைக்கட்டிக்கொண்டு முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தேன் . பின் இருவரும் கை கோர்த்தபடியே சேர்ந்து நடக்கலானோம் எங்களுக்கு முன்னே புதிய வாழ்க்கை ஒன்று காத்து கிடந்தது.

(முற்றும்)

58 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

இது முதல் தொடர் எப்படியிருந்துச்சுன்னு சொல்லுங்க நல்லா இருந்தது என்ற பதிலைத்தவிர இதன் பயணத்தை பற்றி சில வார்த்தைகள் சொல்லவும் தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும் அது அடுத்த முயற்சிக்கு வழிகாட்டும் இது உனக்கு சரி வரலை நீ தொடரெல்லாம் எழுதாதடான்னும் சொன்னாலும் சரி!

மற்றபடி இதுவரையிலும் நான்கு பாகங்களையும் தொடர்ந்து வாசித்து கருத்துகள் தெரிவித்தவர்களுக்கும் நான்கையும் படித்து கடைசியில்தான் கருத்து தெரிவிப்பேன் என்று இருப்பவர்களுக்கும் நன்றிகள் நன்றிகள்!

Supriyaa said...

bayamaa irundhuchi

Mohan said...

உங்களின் தொடர்கதை நன்றாகவே இருந்தது.போன பாகம்தான் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது.கதையை முடித்த விதம் மிகவும் நன்றாக இருந்தது. அடுத்த தொடர்கதை எப்போ?

அருண் பிரசாத் said...

கமெண்ட் போட்டேன் error வந்துச்சு, save ஆச்சா இல்லையானு தெரியல

அருண் பிரசாத் said...

என்னடா கிட்னி பெயிலியர், காதல் திருமண எதிர்ப்புனு சொதப்பராரேனு பார்த்தேன்... பேய் டிவிஸ்ட் வெச்சி, ஹிரோவையும் சாகடிச்சீங்க பாருங்க... சூப்பர் கிளைமாக்ஸ்


கொஞ்சம் சினிமாதனமாக செல்வதை தவிருங்கள், மற்றபடி கதை சூப்பர்

Jey said...

விறுருப்பா.. எழுதிகிட்டு போயி... சில தமிழ்ப்படக் கிளைமாக்ஸ் மாதிரி... சொதப்பிட்டியோனு...ஒரு ஃபீலிங் பங்காளி...

Bala said...

photo... pair-aaa adhuvum white dress-la.. story-ku romba matching.. keep it up..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு சாரி. ஓட்டு மட்டும்தான் போட்டேன். கதை படிக்கலை. மொத்தமா படிச்சுட்டு மெயில் அனுப்புறேன்...

நட்புடன் ஜமால் said...

கொஞ்ச நேரத்துலையே க்ளைமேக்ஸ் புரிஞ்சிடிச்சி வசந்த்

கடைசி பாகம் இன்னும் மெருகூட்டனும் மாற்றங்களோடு

முதல் 3ம் நல்லா போனிச்சி வசந்த்

Sindhu said...

கடைசியில் இப்படி ஒரு மொக்கையா.....!!!!!!!!!!jus kidding....நன்றாக இருந்தது.....வித்தியாசமான முயற்சி......ஆனா இப்படி வசந்த்த போட்டு தள்ளீட்டீன்களே.....:))))

venki said...

nalla eruku vasanth !!! Keep it up !!!

'பரிவை' சே.குமார் said...

கதை நல்லாயிருந்தது.

இன்னும் கொஞ்சம் சுவராஸ்யம் சேர்த்திருக்கலாம்.

ம்... முதல் தொடர் அதனால் பரவாயில்லை... தொடருங்கள்.

வாழ்த்துக்கள்.

சுசி said...

நல்ல முயற்சி.

இந்த முடிவை // "நானும் தற்கொலை செய்துகிட்டேன்!"// இந்த இடம் வர வரைக்கும் நான் எதிர்பார்க்கலை.

கொஞ்சம் விளையாட்டுத்தனத்த குறைச்சு கவிதைத்துவத்தை கூட்டி எழுதுங்க.

//
"ஹேய் வசந்த் ! ஹேய்! எங்க ஓடற..? நில்லு!" என்று சொல்லியவாறே நித்யா என்ற பேய் என்னை துரத்தியது."என்னதான் காதலின்னாலும் பேய் என்றால் பயம்தான்...!"
//

இதையே கொஞ்சம் மெருகு சேர்த்து உங்களால எழுத கண்டிப்பா முடியும். இங்க எனக்கு விளையாட்டுத்தனம் தான் தெரியுதுப்பா.

ஜெய்லானி said...

உண்மையிலெயே நல்லா இருந்துச்சி....ஆனா அவன் நித்யாவை பார்க்காம இருந்ததுதான் கொஞ்சம் நெருடல் ...

காதலி கல்யாணம் ஆகிட்டா பார்க்க கூடாதுன்னு ஏதாவது தடை இருக்கா..!!

ஜெய்லானி said...

இந்த கமெண்ட் மாடரேஷனை வச்சி என்னதான் சாதிக்க போறீங்களோன்னு தெரியல ...!!! :-))

Chitra said...

அப்போ !அப்போ ! "நானும் பேயா? என்னோட உயிர் போயிடுச்சா?" அய்யோன்னு அழ ஆரம்பித்தேன் பின்னாடி ஓடி வந்த நித்யா என்னுடைய தோளை பற்றினாள் .

"நித்யா பார்த்தியா ? நானும் உன்னை மாதிரியே செத்துட்டேன் ?"

"எனக்கு உன்னைப்பார்த்ததும் தெரிஞ்சது வசந்த் விடுப்பா! உடம்புதானே போச்சு? போனா போய்ட்டு போகட்டும் மனசு நம்மகிட்ட தானே இருக்கு ! நீ வா நாம போகலாம் புதுசா வாழ ஆரம்பிக்கலாம் "காதலர்கள் பூமியிலே வாழணும்ன்னு எதாவது சட்டம் இருக்கா என்ன? சொர்க்கத்திலயும் வாழலாம்!"


......அப்போ, இது சீரியஸ் காதல் கதை இல்லையா? ஓ!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இன்னிக்கி தான் முழு கதையும் படிச்சேன்... இப்படி பேய் பிசாசுன்னு சின்ன புள்ளைகள பயப்படுதரீங்களே வசந்த்... பட் கதை சூப்பர்... (பேய் வர்ற வரைக்கும்...அவ்வவ்வ்வ்வ்). சரி சரி சொர்கத்துலயாச்சும் டூயட் பாடட்டும்... ஹா ஹா ஹா

Writing flow நல்லா இருந்தது... தாராளமா அடுத்த தொடர் கதை ஸ்டார்ட் பண்ணலாம்... படிக்க நான் ரெடி... எழுத நீங்க ரெடியா?

Gayathri said...

கொஞ்சமும் எதிர்பார்க்காத விதமா சுபேரா கதைய தொடங்கிடீன்களே..அருமைய இருக்கு...

a said...

//
நல்லா இருந்தது என்ற பதிலைத்தவிர
//

இருந்தது ரொம்ப நல்லா.... ::))..
----------------------------
வசந்த் : தொடர் நடை உங்களுக்கு நன்றாகவே வசப்படுகிறது.... தொடருங்கள்....

Anonymous said...

super'nga... kalakala irrukku.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எழுதி முடிச்சு விவாதத்துக்கு விட்ட விதம் நல்லாயிருக்கு.. கதை ஒரு போக்கில் போயிட்டு இருந்தது.. முடிவு திடீர்ன்னு தடம் மாறி வேறு விதமா முடிஞ்சிட்டது.. நீங்க இப்படித் தான் எழுதணும்ன்னு நினைச்சிருந்தா ஓகே..

பா.ராஜாராம் said...

வசந்த், நல்ல முதிர்வு எழுத்தில்!! superb!

சின்ன டிப்ஸ் மட்டும்,(அண்ணனா சொல்லனுமா இல்லையா?)

ஒரு புல் ஸ்டாப்பிற்கும் அடுத்த புல் ஸ்டாப்பிற்கும் நீளம் மிகாமல் பார்க்கவும். பாராவை சின்ன சின்னதாக பிரிக்கவும்.இவைகள் வாசிப்பவர்களை டயர்ட் செய்யாது.

congrats! go ahead..

Unknown said...

கொன்னுட்டீங்க.....

ராமலக்ஷ்மி said...

//ஓடி ஓடி நான் வந்த ஜீப் இருக்கும் இடத்தை அடைந்தேன்//

என்ன நடக்குமென ஊகிக்க முடிந்தாலும் சஸ்பென்ஸை அழகாகக் கொண்டு சென்றிருந்தீர்கள். பலரின் விருப்பத்திற்கேற்ப சேர்த்து வைத்து விட்டீர்கள் இருவரையும், ஆனால் மேலுலகில்..!!

தொடர்கள் தொடரலாம்:)!

Unknown said...

முடிவு எனக்கு பிடிக்கவில்லை.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்லாயிருக்கு.... எதிர்பாராத முடிவு... ரொம்ப நல்ல கதை சொல்லியிருக்கீங்க...

அடுத்த தொடர் எப்போ சகோதரா...

சைவகொத்துப்பரோட்டா said...

எதிர்பாராத முடிவு.

ஜெயந்தி said...

உங்களோட எழுதுற ஸ்டைல் நல்லாயிருக்கு. படிக்கவும் விறுவிறுப்பா இருக்கு. நீங்க இயல்பான இலக்கியத்தரமான எழுத்துக்களுக்கும் முயற்சிக்கலாமே.

Mahi_Granny said...

கதை சொன்ன விதத்தை ரசித்து படித்துக் கொண்டே வந்தேன். முடிவு வேறு மாதிரி இருந்திருக்கலாம்

சீமான்கனி said...

தேரியும்டீ..இப்படிதான் நீ...எதோ ட்விஸ்ட்டு வப்பனு...உண்மையாவே அருமையா எழுதி இருக்க மாப்பி...நல்ல ரசனை...கூடவே சுவாரஷ்யமா..பரபரனு எழுதி இருக்க தொடர்ந்து எழுது மாப்லே.....

KUTTI said...

வசந்த் பாஸ்,

நீங்க கேட்பதால் சொல்கிறேன். முதல் மூன்று பகுதிகளில் உள்ள யதார்த்தம் இந்த பதிவில் சுத்தமாக MISSING. ஏதோ அவரச அவரசமாக முடித்தது போல தோன்றுகிறது. முடிவும் ரொம்ப சினிமாதனமாக இருக்கிறது. வார்த்தை பிரயோகங்கள் உங்களுக்கு சிறப்பாக வருகிறது.ஆதலால் கொஞ்சம் தாதமதம் ஆனாலும் பொறுமையாக எழுதுங்கள். இன்னமும் சிறப்பாக வரும். எனக்கு இதை எல்லாம் சொல்லும் தகுதி இருக்கிறாதா என்று தெரியவில்லை. ஆனாலும் நல்ல நன்பன் என்ற முறையில் சொல்ல கடமை பட்டுள்ளேன்.
தவறு இருந்தால் மன்னிக்கவும்.

மனோ

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருந்தது sorry..இதைத்தவிர வேற சொல்லத் தோணலை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மாப்பு படிச்சிட்டேன். ரொம்ப அருமையா இருந்தது. பேய் கதைன்னு சொல்ல வே இல்லை. குழந்தை பையன் நான் பயந்துட்டனே...

சத்ரியன் said...

வசந்த்,

ஏன் சாமீ, நான் உன்னைய கோடம்பாக்கத்துக்கு அனுப்பலாம்னு பாத்தா, விட்டலாச்சார்யா படம் காட்டி பயமுறுத்துறீயே அப்பு.

இனியும் தொடந்து எழுதுங்க. நாங்க தான் கொஞ்சம் தைரியத்தோட படிக்கனும் போல.

வாழ்த்துக்கள்!

சத்ரியன் said...

//"சரிண்ணா உடம்ப பார்த்துக்கோங்க உடம்பு சரியானதும் மதுரைக்கு வருவீங்க தான?"

"ம் கண்டிப்பா வருவேன் நித்யா!"//

இந்த முரண் (கீதா- நித்யா) சதா நித்யாவோட நினைப்புல வந்ததோ...?

சத்ரியன் said...

//இருவரும் கை கோர்த்தபடியே சேர்ந்து நடக்கலானோம் எங்களுக்கு முன்னே புதிய வாழ்க்கை ஒன்று காத்து கிடந்தது.
//

சந்தோஷமா வாழுங்க.வாழ்த்துக்கள்.

(செத்தவனுக்கு வாழ்த்துச் சொல்றது இது தான் முதல்முறை)

கருடன் said...

நல்லாதன போய்ட்டு இருந்தது.... இப்போ என் பட்டுனு கோவபட்டு பொட்டுனு போட்டு தள்ளிட்டிங்க?? இதை எதிர்த்து சிப்பு பொலீஷ் ரமேசு தீ குளிப்பார்....

(நல்ல நடை. ஆனால் எனக்கு தொடர்கதை பிடிக்காது.... அதனால் நீங்கள் கடைசி பாகம் எழுதியதும் வந்து படிப்பேன்.... ஹி ஹி..)

sakthi said...

வசந்த் எதிர்பாராத திருப்பம்

விறுவிறுப்பான கதை

ஆனால் இனி தயவு செய்து வசந்த்ங்கற பேரை இது போல கதைக்கு இனி வைக்காதே என்னமோ சொல்லனும்னு தோனுது சகோ!!!!

பின்னோக்கி said...

4 பதிவுகளையும் முழு மூச்சில் படித்து முடித்தேன். கதை விமர்சனத்திற்கு முன் முதலில் பாராட்டுக்கள். 4 வரி எழுதுவது அதுவும் எளிதாக படிக்கும் நடையில் எழுதுவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் 4 பாகங்களையும் விடாமல் படிக்கவைத்த உங்களின் எழுத்து நடை எனக்குப் பிடித்திருக்கிறது.

விமர்சனம்.
முதல் + இரண்டாம் பாகம் - ரொம்ப நல்லாயிருந்துச்சு. உணர்வுகளை மிகவும் எதார்த்தமாக பிரதிபலித்திருந்தது, நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியது. அடிப்பதை மட்டும் கொஞ்சம் மட்டுப்படுத்தியிருக்கலாம் :). 2ஆம் பாகத்தின் முடிவில் சஸ்பென்ஸ்க்காக துரத்தப்படுவதாக எழுதியது கொஞ்சம் இடித்தது. அதுவும் மூன்றாம் பாகம் படிக்கும் போது, இரண்டுக்கும் கனெக்‌ஷன் இல்லாத ஃபீல்.

மூன்றாம் பாகம் - ரொம்ப சோகம். கிட்னி ஆபரேஷன், நித்யாவை பிரிந்தது என்று. கிட்னி அறுவை சிகிச்சை கொஞ்சம் அதிகமோ ?. என்ன காரணம் அதற்கு. வேறு எதாவது சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கலாமோ ?.

4 ஆம் பாகம். நித்யாவை பிரிந்த சோகத்தை உணர்த்துவதாக இருந்தது. அந்த கடைசி ட்விஸ்ட் பழையதாக இருந்தாலும், நன்றாகவே இருந்தது. காதலர்களை ஆவியாக்கினாலும் பிரியக்கூடாது என்று அவர்களை இணைத்திருக்கிறீர்கள்.

முதல் முயற்சி. நல்லது. தொடருங்கள்.

பின்னோக்கி said...

அலைபேசி என்று ரொம்ப சுத்தத்தமிழில் திடீரென வந்த வார்த்தை சற்றே நெருடல்.

என்னது நானு யாரா? said...

உங்களுக்கும் என் பேரு தானா? ரொம்ப சந்தோஷபட்டேன்! உங்க பேரை கேட்டு! அடடா என் பேரில் இருக்கிறவரு கலக்குறாரேன்னு!!!

உங்க கதையை முழுசா இப்போ தான் படிச்சேன்! ரொம்ப நல்லா இருக்கு! கடைசியில ஆவி ட்விஸ்ட் வெச்சீங்க பாருங்க! அருமை! அருமை! ஆவி பறக்கிற மாதிரி, சூடா ஒரு காதல் கதை சொல்லி இருக்கீங்க!

நான் புதுசா எழுத வ்ந்திருக்கேன் நண்பா! இயற்கை மருத்துவத்தை பத்தி எழுதறேன். படிச்சி பாக்க உங்களையும், மத்த நண்பர்களையும் கூப்பிடறேன். வருவீங்க இல்ல?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

நல்லாதன போய்ட்டு இருந்தது.... இப்போ என் பட்டுனு கோவபட்டு பொட்டுனு போட்டு தள்ளிட்டிங்க?? இதை எதிர்த்து சிப்பு பொலீஷ் ரமேசு தீ குளிப்பார்....

(நல்ல நடை. ஆனால் எனக்கு தொடர்கதை பிடிக்காது.... அதனால் நீங்கள் கடைசி பாகம் எழுதியதும் வந்து படிப்பேன்.... ஹி ஹி..)//


யோவ் டெரர் இதான்யா கடைசி பாகம் ஒழுங்கா படி...

ப்ரியமுடன் வசந்த் said...

@ சுப்ரியா :)) நன்றிங்க!

@ மோஹன் நன்றிங்க அடுத்த தொடரா இன்னும் நாளாகட்டும்!

@ அருண் பிரசாத் நன்றி ஆகட்டும் தல மைண்ட்ல ஏத்திகிட்டேன் !

@ ஜெயக்குமார் பங்காளி சரிங்க நன்றி!

@ பாலா ஹ ஹ ஹா நன்றிங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

@ ரமேஷ் மாம்ஸ் திரும்பவும் படிச்சதுக்கு நன்றி!

@ஜமால் அண்ணா போனிச்சு ஹ ஹ ஹா குழந்தை பாஷையா? ம்ம் அடுத்த முறை நிச்சயம் இன்னும் சிறப்பா எழுத முயற்சிக்கிறேன் நன்றிண்ணா!

@ ப்ரியா :)))) முதல்ல சொன்னதுதான சரி ? நன்றி மேடம்!

@ வெங்கட் நன்றி மச்சி!

@ குமார் நன்றிங்க!

ப்ரியமுடன் வசந்த் said...

@ சுசி :) வெளிப்படையான விமர்சனத்துக்கு மிக்க நன்றி விளையாட்டுத்தனம் கூடவே பொறந்துடுச்சு இன்னா பண்றது? இனி கவனமா இருக்கேனுங்க நன்றி!

@ ஜெய்லானி கல்யாணம் ஆனப்பிறகு எந்த மூன்க்சிய வச்சுகிட்டு போய் காதலிய பார்க்கிறது ஜெய்?
கமெண்ட் மாடரேசன் எப்பவும் வைக்கிறது இல்ல முக்கியமான போஸ்ட்டுக்கு மட்டும் நன்றி ஜெய்லானி!

@ சித்ராம்மா ஹ ஹ ஹா நன்றி!

@ அப்பாவி தங்ஸ் மிக்க நன்றிங்க எழுதறேன்!

@ காயத்ரி நன்றி:)

ப்ரியமுடன் வசந்த் said...

@ யோகேஷ் நன்றி பாஸ் !

@ அனானி :)!

@ சந்தனா முடிவு அப்படித்தான் முன்னாடியே நினைச்சது ம்ம் நன்றி மேடம்!

@ பாரா அண்ணா டிப்ஸ்க்கு மிக்க நன்றிண்ணா கவனித்தில் வச்சுகிடறேன்! மிக்க நன்றிண்ணா ஊக்கத்திற்க்கு!

@ கலா நேசன் ஏன் பிடிக்கல? நன்றிப்பா!

ப்ரியமுடன் வசந்த் said...

@ ராமலக்ஷ்மி மேடம் மிக்க நன்றி மேடம் காதலர்கள் சேர்வதைத்தானே எல்லாரும் விரும்புறாங்க!

@ ஜெயந்த் மிக்க நன்றி பாஸ் நேரம் வாய்க்கும்போது!

@ சைவகொத்து பரோட்டா நன்றிங்க!

@ ஜெயந்தி மேடம் பெரிய வார்த்த்யெல்லாம் சொல்லாதிங்க ஆவ்வ் நான் அ ஆ இப்போத்தான் படிக்கிறேன் எழுத்தில் நன்றி மேடம்!

@ மகிம்மா மிக்க நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

@ சீமான்கனி :))))) என்னை நல்லாவே புரிஞ்சுவச்சிருக்க மாப்ள நன்றிடா ஊக்கத்திற்க்கு!

@ மனோ நானும் அப்படித்தான் நினைச்சேன் சரி முடிவு இதுதான்னு நினைச்சப்பிறகு மாத்த முடியலை ரொம்ப இழுக்குற மாதிரி எனக்கே ஒரு ஃபீல் அதான் இந்த பார்ட்ல முடிச்சடணும்ன்னு எழுதினேன் ஒரு வேளை இடையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து எழுதியிருக்கலாம்ன்னு நினைக்கிறேன் அடுத்தமுறை இன்னும் சிறப்பா எழுத ட்ரை பண்றேன் மனோ தாராளமா விமர்ச்சிக்கிற உரிமை உங்களுக்கு நிறையவே இருக்கு !நன்றி மனோ!

@ டி.வி.ஆர் சார் மிக்க நன்றி சார்!

@ ரமேஷ் மாம்ஸ் யாரு நீங்களா குழந்தை?

@ சத்ரியன் அண்ணா கரிக்ட்டா ரெண்டு இடத்துல மிஸ்டேக் பண்ணியிருந்தேன் ஒண்ணு நீங்க கண்டுபிடிச்சுட்டீங்க இன்னொன்னு பின்னோக்கி சார் கண்டுபிடிச்சுட்டார் இனிமேல் ரொம்ப கவனமாவே எழுதுவேன் அண்ணா இவ்ளோ நுண்ணிப்பா கவனிக்கப்படுறோம்ன்னு நினைக்கும்போது சந்தோஷமாவும் ஒரு பக்கம் பயமாவும் இருக்கு! நன்றிண்ணா!

ப்ரியமுடன் வசந்த் said...

@ டெர்ரர் :)))))))

@ சக்தி சகோ மிக்க நன்றி தங்கள் ப்ரியத்திற்க்கு கண்டிப்பா!

@ பின்னோக்கி சார் பார்ட் பார்ட்டா பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க இரண்டாவது பாகத்துக்கு அப்பறம் இன்னும் ஒருபாகம் ரொமாண்டிக்கா எழுதலாம்ன்னு பார்த்தேன் கூச்சமா இருந்ததால அதை விட்டுட்டு அதே பார்ட்ல சஸ்பென்ஸ் வச்சது மிஸ் ஆயிடுச்சு போல

மூணாவது பார்ட்ல வேற எது வச்சாலும் எங்கயாவது படிச்ச மாதிரி தான் இருக்கும்!

நாலாவது பார்ட் வித்யாசமா இருக்கட்டுமே என்ற எண்ணம்தான்!அல்ரெடி ரியல் லைஃப் மாதிரியே எழுதினால் சீரியல் சினிமா இதெல்லாம் கலந்த ஃபீல் வர்றது நிஜம்தான் அதான் இந்த முடிவு அந்த அலைபேசி சுத்தமா தமிழ் பேசறேன்னு வந்த பழக்கம் இங்கயும் தொத்திடுச்சு செகண்ட் பார்ட்ல மொபைல்ன்னு எழுதிட்டு இங்க அலைபேசின்னு எழுதினது நானே நீங்க சொன்னபிறகுதான் கவனிச்சேன்

மிக்க நன்றி சார் !

ப்ரியமுடன் வசந்த் said...

@ வசந்த் உங்க பெயரும் வசந்தா? மிக்க மகிழ்ச்சி கண்டிப்பா உங்க போஸ்ட் படிக்கிறது மட்டுமில்ல எனக்கு தெரிஞ்சவங்களுக்கு அப்பறம் ரீடர்ல எல்லாம் ரீசேர் செய்துகிட்டுத்தான் இருக்கேன் மிக்க நன்றிப்பா!

@ ரமேஷ் மாம்ஸ் அப்பிடி சொல்லு மாம்ஸ் !

Anonymous said...

நீங்க கதை எழுதினது படிச்சு நானும் எதோ எதோ முடிவு நினைத்தேன் ஆனா உங்க கதை முடிவு ரொம்ப ரொம்ப சூப்பர் ஆ இருந்தது வசந்த் ..ஆனாலும் இந்த சோக முடிவு என்னமோ போல இருக்கு ..ஹூம் ..பகிர்வுக்கு நன்றி

vinu said...

sorry the story is just pass

Anonymous said...

கதை நன்றாக இருக்கிறது.எழுதும் விதத்தை மாத்தி உங்களுக்கென்றே ஒரு பாணியில் எழுதுங்கள்.
முதல் முயற்சி! வாழ்த்துக்கள்.

ப்ரியமுடன் வசந்த் said...

@ நன்றி சந்த்யா கதைதானே ஃப்ரீயாவுடுங்க :)

@ நன்றி வினு!

@ திருமதி ஜெயசீலன் நன்றி சகோ தங்கள் அறிவுரைக்கும் கருத்துக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதையோட போக்கு ரொம்ப அருமையா இருந்துச்சி! முடிவு இயல்பா இல்லை. திடீர்னு முடிக்கனும்னு கட்டாயம் ஏற்பட்டு முடிச்ச மாதிரி இருக்கு. ரொமான்டிக் கதையாவே கொண்டு போயிருக்கலாம். பேய்க்கதையா மாத்துனது சரியா இல்லை. ரொமான்டிக் கதைக்கு பேய்க்கதை முடிவு எதுக்கு? (இல்ல ஆரம்பத்துல இருந்தே பேய்க்கதையா கொண்டு போயிருக்கலாம்). நீங்க இன்னும் கொஞ்ச பாகங்கள் எழுதி மேலும் சில சுவராசிய திருப்பங்கள் வைத்து, எமோசனலாகவோ, சுபமாகவோ, சோகமாவோ முடித்திருக்கலாம். மற்றபடி உங்க எழுத்து நடை இயல்பா இருக்கு. ஆனா தனியா தெரியல. நன்றி!

ப்ரியமுடன் வசந்த் said...

@ பன்னிக்குட்டிராம்சாமி தங்கள் வெளிப்படையான விமர்சனத்துக்கு மிக்கநன்றிங்க !

Anonymous said...

excellent story . sorry I cannot log in my g mail.account.

ஸ்ரீராம். said...

விமர்சனம் நாங்கள் யார் வேணும்னாலும் செய்யலாம். நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள். நல்ல நடை. வண்டி விபத்து என்ற வுடனேயே முடிவு எதிர்பார்க்க முடிந்தது. மாறியிருந்தால் ஆச்சர்யப் பட்டிருப்பேன். சட் டென முடித்தது போலதான் தோன்றியது.