September 21, 2010

குடும்ப குறள்கள்

தாலியென்ப நெற்றி பொட்டென்பர் இவையிரண்டும்
கண்ணென்ப குடும்ப பெண்ணுக்கு

(பொட்டு வைக்கிறதுக்கு சில சென்மங்களுக்கு உடம்பு வலிக்குது அதுக்கு மேல தாலியை பாசிபோல் அடிக்கடி கழட்டி வச்சுக்கிறாங்க)

கணவனையும் பெற்ற பிள்ளையையும் பேணியும் 
காத்தலும் வல்ல இல்லத்தரசி

(கணவனையும் குழந்தையும் விட்டுப்போட்டு சீரியலும், வெட்டிப்பேச்சும் கெதியா கெடப்போர்க்கு)

மனைவியுடையார் எல்லா முடையார் மனைவியிலார்
என்னுடைய ரேனும் இலர்

(மனைவியில்லாத வாழ்க்கை வீண்)

உடல் கற்பென்பது கற்பன்று உள்ளத்தால்
அழியா கற்பதே கற்பு

(குஷ்பூ வாழ்க)

விவாகரத்து தீவினை என்றும் அதை
கேட்காமை குடும்பத்திற்க்கு நன்று

(பல்லு வெலக்காததுக்கெல்லாம் விவாகரத்து கேட்குறாங்கப்பா ஆவ்வ் )

சந்தோசம் வித்தாகும் கூட்டுகுடும்பம் தனிக்குடித்தனம்
என்றும் சோர்வைத் தரும்

(கூட்டுக்குடும்பத்தை இந்த காலத்தில் யார் விரும்புறாங்க?)

மாமனாரையும் மாமியாரையும் மதிக்காத மருமகள்
ஒருநாள் தானும் மதிக்கப்படார்

(ப்ச்)

தாய்மை எனப்படுவது யாதெனில் குடும்பத்தார்
யாவரையும் அன்பாய் நடத்தலேயாகும்

(ம்ம்)

சொம்பெடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு பால் ஊற்றப்படும்,....

43 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//
மனைவியுடையார் எல்லா முடையார் மனைவியிலார்
என்னுடைய ரேனும் இலர்

(மனைவியில்லாத வாழ்க்கை வீண்)//

மாப்பு காதல் கதை எழுதுற, இந்த மாதிரி குறள் எழுதுற. இன்னும் கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குதே. (எனக்கும்தான் ஹிஹி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உடல் கற்பென்பது கற்பன்று உள்ளத்தால்
அழியா கற்பதே கற்பு

(குஷ்பூ வாழ்க)//

ரைட்டு. மாப்பு மன்னிப்பு கடிதம் ரெடியா?

Madhavan Srinivasagopalan said...

all are nice.. me the first ?

என்னது நானு யாரா? said...

நம்ப தாத்தாக்கிட்ட இந்த குறள்களை அனுப்பி வைங்க. அவரு இதுங்களுக்கு கூட நல்லா விளக்கம் எழுதி 134-வது அதிகாரமா சேத்திடுவாரு...

Chitra said...

(கணவனையும் குழந்தையும் விட்டுப்போட்டு சீரியலும், வெட்டிப்பேச்சும் கெதியா கெடப்போர்க்கு)

....Your Honour! நான் அவள் இல்லை.... இல்லை.... இல்லவே இல்லை!!! :-)

Anonymous said...

அக்கால வள்ளுவனை காண இயலாத வருத்தம் இக்கால வள்ளுவனே உனை கண்டு வருத்தம் கலைந்தேன்...அசந்துங்க வசந்த்....

சைவகொத்துப்பரோட்டா said...

வாழ்க வள்ளுவரே :))

பின்னோக்கி said...

ஐடியா பெட்டகமே... பரிசல் சொன்ன சிறுகதை போட்டியில் கதை எழுதிடுங்க...:)

taaru said...

சோம்பு தூக்கினா தானே பாலு..நாங்க குண்டாலச்சட்டி கொண்டாந்தா???

அருமை மச்சி... இதே மாதிரி ஒரு குடும்ப குத்து விளக்கு கிடைக்க எல்லாம் வல்ல கருப்பனை வேண்டிக்கொள்கிறேன்...வாழ்க வளமுடன்...

thiyaa said...

வித்தியாசமான பதிவு
நல்லாயிருக்கு

Sindhu said...

hahaha வசந்த்........இப்போ யாருக்குப்பா டியூஷன் எடுக்கறீங்க.......நம்பர் குடுங்க......நான் கொஞ்சம் அவங்க கிட்ட போட்டு தரேன்........:)))

//மனைவியுடையார் எல்லா முடையார் மனைவியிலார்
என்னுடைய ரேனும் இலர்

(மனைவியில்லாத வாழ்க்கை வீண்)//
ரொம்ப நொந்து போய் இருப்பீங்க போல இருக்கு.......அப்புறம் எதுக்கு பீலா ,எனக்கு சம்சாரம் நா அலர்ஜி கிலர்ஜின்னு.......எல்லாம்.......( d cat s out of d bag...hahahaha)....

//
(பல்லு வெலக்காததுக்கெல்லாம் விவாகரத்து கேட்குறாங்கப்பா ஆவ்வ் )//
ஹஹஅஹா சரி அந்த பல்ல தான் விளக்கிடுங்களேன்......எவ்ளோ நாள் தான் அப்பு பொத்தி பொத்தி அந்த நாத்தம் புடிச்ச பல்ல பாதுக்காபீங்க.........:)))

//
சொம்பெடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு பால் ஊற்றப்படும்,....//

ஹஹஅஹா இது ஓவரு......:)))

அருண் பிரசாத் said...

சரி மாப்ளைக்கு பொண்ணு பாத்துட வேண்டியதுதான்

Gayathri said...

hats off...super

நட்புடன் ஜமால் said...

ஆணாதிக்கம் ரொம்ப தெரியு(க்கு)து

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ...

-----------------

பொழுது போகலையேடா அம்பி

------------------

நல்ல முயற்சி வசந்த்

சாந்தி மாரியப்பன் said...

குறள்கள் அத்தனையும் அருமை. டிஸ்கி சிரிப்பு வரவழைத்தது.

Jey said...

ஒரு வாரமா இததான் யோசிச்சி எழுதினியா பங்கு?. எல்லா குறள்களும் சூப்பர்.:)

dheva said...

பங்காளி சிலை வச்சுடுவோமா.. கன்னியாகுமரி பக்கதுல!

Anonymous said...

உடல் கற்பென்பது கற்பன்று உள்ளத்தால்
அழியா கற்பதே கற்பு

(குஷ்பூ வாழ்க

சசிகுமார் said...

நவீன திருக்குறள் அனைத்தும் அருமை நண்பா

Deepa said...

நல்ல வேளை திருவள்ளுவர் எப்பவோ செத்துட்டார்.
சாலமன் பாப்பையா இந்த இடுகையைப் பாக்காம இருக்கணுமே, பாவம்.
:((

//சொம்பெடுத்துக்கொண்டு வருபவர்களுக்கு பால் ஊற்றப்படும்,....// :))) Too much fat is unhealthy.

பருப்பு (a) Phantom Mohan said...

குஷ்பு வாழ்க..! வாழ்க..!

Anonymous said...

ஆடையில்லாதவன் அறைமனிதன் ..........கல்யாணம் செய்யாதவன் கால் மனிதன்.................மனிதன் கல்யாணத்திற்கு பிறகு தான் முழு மனிதன்............கல்யாணத்திற்கு பிறகு தானாகவே மறியாதை, அந்தஸ்து, தன்னடக்கம், புகழ், பணம் எல்லா செல்வங்களும் வரும்.....வரும்

ஹுஸைனம்மா said...

குறளெல்லாம் நல்லாத்தான் இருக்கு; ஆனா பெரும்பாலானவை பெண்ணை (மட்டுமே) குற்றம் சொல்ற மாதிரியே இருக்கே ஏன்?

நாகரீகத்துக்காக இல்லாட்டியும், திருடர்களுக்குப் பயந்தாவது தாலியைக் கழட்டி வச்சுட்டு மெலிதான தங்கச்/கவரிங் செயின் போட்டுக்க வேண்டிய நிலையிலதான் இந்திய நாடு இருக்கும்போது, பெண்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்?

எஸ்.கே said...

இளைய திருவள்ளுவர் வசந்த் வாழ்க!

கலா said...

மதுவும் மாதும் வேண்டுமென்பர் இவையிரண்டும்
கண்ணென்ப குடும்பத் தலைவனுக்கு

(போத்தலை மறக்கிறதுக்கு சில சென்மங்களுக்கு உடம்பு
வலிக்குது அதுக்கு மேல தாலியை மதிக்காமல் தூசிபோல்
மதித்துஅடிக்கடி வேலியைத் தா{தீ}ண்டப் பார்கிறார்கள்}


மனைவியையும் பெற்ற பிள்ளையையும் பேணியும்
காத்தலும் வல்ல இல்லத்தலைவன்

(மனைவியையும்குழந்தையும் விட்டுப்போட்டு
சீட்டுக்கட்டும், வெட்டிப்பேச்சும்சின்னவீடும் கெதியா கெடப்போர்க்கு)

மனைவியுடையார் எல்லா முடையார் மனைவியிலார்
என்னுடைய ரேனும் இலர்

(மனைவியில்லாத வாழ்க்கை வீண்) புரிஞ்சுகிட்டாச் சரி

உடல் கற்பென்பது கற்பன்று உள்ளத்தால்
அழியா கற்பதே கற்பு
உடலில்தான் அந்த உள்ளம்
உள்ளத்துடன்தான் அந்த உடல்

(குஷ்பூ வாழ்க)

விவாகரத்து தீவினை என்றும் அதை
கேட்காமை குடும்பத்திற்க்கு நன்று

(பல்லு வெலக்காததுக்கெல்லாம் விவாகரத்து
கேட்குறாங்கப்பா ஆவ்வ் )
குறட்டைக்குக் கூட முடியும்
இனிமேலாவுதல் உஷாராகட்டும் .....

சந்தோசம் வித்தாகும் கூட்டுகுடும்பம் தனிக்குடித்தனம்
என்றும் சோர்வைத் தரும்

(கூட்டுக்குடும்பத்தை இந்த காலத்தில் யார் விரும்புறாங்க?)
கேள்வியா?ஏன் உங்களுக்குக் கூடவா விருப்பமில்லை?


மாமனாரையும் மாமியாரையும் மதிக்காத மருமகள்
ஒருநாள் தானும் மதிக்கப்படார்

(ப்ச்) மிகவும் சரி

தாய்மை எனப்படுவது யாதெனில் குடும்பத்தார்
யாவரையும் அன்பாய் நடத்தலேயாகும்

(ம்ம்)மிகச்சரி

R.பூபாலன் said...

// சந்தோசம் வித்தாகும் கூட்டுகுடும்பம் தனிக்குடித்தனம்
என்றும் சோர்வைத் தரும் //

மகர இறுதி கெட்டு உயிர் ஈறாய் நிற்கும் சொற்கள் முன்வரும் வல்லினம் மிகல்,,

So

சந்தோசத்திற்கு வித்தாகும் கூட்டுக்குடும்பம் என்பதே சரியென்று

எங்க தமிழ் அய்யா சொல்லிக் குடுத்துருக்காருங்கோவ்வ்வ்வ்..

எங்களைலாம் ஏமாத்த முடியாதே.......

R.பூபாலன் said...

But,

உங்க பீலிங் எனக்கு புரியுதுங்ணா....

எல்லா புதுக் குறள்களும் அருமை.....

இன்னும் இரண்டு குறள்கள் எழுதினால்தான்
அதிகாரம் முழுமை அடையும் என்பதால்
விரைவில் இரண்டு குரல்களை பதிவிட
கேட்டுக் கொள்கிறேன்.....

Anonymous said...

நச்சுனு ஒரு பதிவு

சீமான்கனி said...

ரைட்டு மாப்பி...பார்த்த பொண்ணுகிட்ட இருந்து பதிலு வந்துரும்...பத்திரமா இருடீ....

GSV said...

இந்த போஸ்ட்டுக்கு கமெண்ட் போட்டா அடிவிளாதே !!! :)

ganesh said...

nice &excellant quotes

'பரிவை' சே.குமார் said...

//மாப்பு காதல் கதை எழுதுற, இந்த மாதிரி குறள் எழுதுற. இன்னும் கல்யாணம் பண்றதுக்கு பொண்ணு கிடைக்க மாட்டேங்குதே. //

Athuthan kudumba kurala????

எல்லா குறளும் அருமை...

Thenammai Lakshmanan said...

கணவனையும் குழந்தையும் விட்டுப்போட்டு சீரியலும், வெட்டிப்பேச்சும் கெதியா கெடப்போர்க்கு)//

கல்யாணம் நடக்குமுன்னே இந்த அளப்பறையா.. நடக்கட்டும் நடக்கட்டும்..வசந்த்..:))

சிநேகிதன் அக்பர் said...

//ஆணாதிக்கம் ரொம்ப தெரியு(க்கு)து

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா ...//

விடுங்க ஜமால் அடுத்த பகுதியில ஆண்களுக்கு ஆப்பும் வைப்பார் :)

நல்லாயிருக்கு வசந்த். நல்ல கற்பனை.

sakthi said...

புதிய திருவள்ளுவர் வாழ்க!!!

யப்பா கொல்றே போ!!!

சிங்கக்குட்டி said...

நான் படிக்கும் போது இப்படி நல்ல குறள் எல்லாம் யாருமே சொல்லி தராம போய்டாங்க :-).

ஹேமா said...

வசந்து....எல்லாமே தேவையானவர்களுக்குத் தேவைப்படும் குர(ற)ல்கள்.

ஸ்ரீராம். said...

குறள்கள் அருமை. கலாவின் எதிர்க் குறளும் அருமை.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

:))

kavisiva said...

நவீன வள்ளுவரே குறள்கள் கலக்கல்ஸ்

ப்ரியமுடன் வசந்த் said...

@ ரமேஷ் மாம்ஸ் நிறைய மேட்ரிமோனியல் சைட்ஸ் இருக்கே ட்ரை பண்ணுங்க உங்களுக்குன்னு ஒரு சிரிப்பு போலீஸி கிடைக்காமயா போய்டுவாங்க?
கிகிகிகி.. :)))))))

@ மாதவன் சார் நன்றி

@ வசந்த் தாத்தாவுக்கு இப்போ நேரம் சரியில்லையாமே ஹ ஹ ஹா நன்றி வசந்த்

@ சித்ரா ஹிஹிஹி சே சே உங்களை சொல்லலை பொத்தாம் பொதுவாஆஆஅ சொன்னேன்ன்ன்ன்...
நன்றி சித்ரா :)

@ தமிழரசி ஓவர் புகழ்ச்சி உடம்புக்கு ஆவாதுங்க மேடம் பார்த்து ரெண்டு மூணு நல்ல கெட்டவார்த்தையில திட்டலாமே..

@ சைவ கொத்துபரோட்டஆஆஆஆவ்வ்வ்வ்
:))

@ பின்னோக்கி சார் பரிசல் அவர்கள் சொன்ன சிறுகதைபோட்டியில கலந்துகிடற அளவுக்கு நான் இன்னும் வளரவேயில்லயே சார் அப்பறம் எப்பிடி ???? நன்றி சார்

@ பிரியமுடன் பிரபு நன்றி பாஸ்

@ டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரு டாரு டாரு.. கிகிகிகி குண்டாலசட்டி ஐ எதுனாலும்தான் கிகிகி அதுசரி வாழ்த்துக்களுக்கு நன்றி தலைவா...

@ தியாவின் பேனா நன்றிங்க

@ ப்ரியாஆஆஆஆஆஆஆஅவ்.....
யாருக்கு கண்ணாலம் முடிச்சவுகளுக்குத்தான் வவவவ்வ்வவ்வே...

சே சே நொந்து போற அளவுக்கு இன்னும் வேகவைக்கவேயில்லை :)

ஆனா பல்லு வெலக்காததுக்கெல்லாம் டைவர்ஸ் கேக்குறது கொஞ்சம் ஓவரி இல்லியா?

எப்பூடி ????????

@ அருண் பிரசாத் ம்க்கும் அதொண்ணிதான் குறைச்சல் :)) நன்றி மாமு..

@ காயத்ரி ஆவ் தாய்க்குலமே மற்ற தாய்க்குலங்கள் பொங்கிடப்போறாங்க..

@ ஜமாலண்ணா உண்மையச்சொன்னேன் :) இதெப்பிடி ஆணாதிக்கமாகும் ஆவ்வ்வ்..

பொழுதேயில்லைங்கறப்போ எப்பிடி பொழுது போகும் ஹ ஹ ஹா நன்றிண்ணா

@ சாரல் மேடம் நன்றிங்க

@ ஜெயக்குமார் பங்காளி :)

@ தேவா பங்காளி ரொம்ப சந்தோஷம் அப்பிடியே அதுக்கு முழுச்செலவையும் நீங்களே ஏத்துகிட்டீங்கன்னா உங்களுக்கு புண்ணியமா போகும் வவவவ்வ்வவ்வே...

@ சதீஷ்குமார் நன்றிங்க

@ சசி நன்றி பாஸ்

@ தீபா சாலமன் பாப்பையா இருக்குற தெருப்பக்கம் நான் கொஞ்ச நாள் இருந்ததுனாலதான் இப்பிடின்னு நினைக்கிறேன் :)
Too much fat is unhealthy.// யாருக்கு ??? :)

@ மோகன் நன்றி

@ ஆசான் கனி ரொம்பச்சரி நண்பா

@ ஹுசைனம்மா ஆமா பெந்தான் எல்லாத்துக்கும் முழுமுதற்காரண்ம் இல்லவே இல்லைன்னு சொல்றவங்களுக்கு ஏதோ ஒரு பத்து பெர்செண்ட் நல்லவங்க உங்களை மாதிரி இருக்கலாம் மீதம் 90 பெர்செண்ட் பிரச்சினைகளுக்கு யார் காரணம்? நாகரீகத்துக்குத்தான் பெரும்பாலும் கழட்டி வைக்கிறாங்க தாலியை ம்ம்’

@ எஸ்கே நன்றி தல

@ கலா அதானே சும்மா விடமாட்டீங்களே பதிலுக்கு பதிலா? ஆனாலும் நீங்க ஒத்துகிடவே மாட்டீங்களே உங்க சைட் இருக்கிற பிரச்சினைகளை?

@ பூபாலன் சர்டா தொம்பி.. :))

@ இந்திரா நன்றி தலைவி :)

@ சீமான்கனி ங்கொய்யால இன்னும் பார்க்கவேயில்லையாமா? யார்டா மாப்ள இப்பிடி புரளி கெளப்புறது?

@ சே குமார் ம்ம் நன்றி

@ தேனம்மா நன்றி :)

@ அக்பர் நன்றிண்ணா எழுதிடுவோம்

@ சக்தி நன்றி சகோ :)))

@ சிங்ககுட்டி அதுசரி நன்றி பாஸ் :)

@ ஹேமா நன்றி :)

@ ஸ்ரீராம் நன்றிப்பா :)

@ சந்தனா :)) பொங்கலையா?

@ கவி சிவா எதிர் குறள் எழுதுவீங்கன்னு நினைச்சேன் :((

Unknown said...

வித்தியாசமான பதிவு.
திருக்குறள் அனைத்தும் அருமை.

Jaleela Kamal said...

வித்தியாசமாக உட்கார்ந்து யோசித்தீர்களோ.
(கணவனையும் குழந்தையும் விட்டுப்போட்டு சீரியலும், வெட்டிப்பேச்சும் கெதியா கெடப்போர்க்கு)

நானும் அவளில்லை இல்லை இல்ல்வே இல்லை.